நடிகைகளை பற்றி அவதூறாக பேசி வருகிறார் என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நா கூசாமல் நட்சத்திரங்களில் அந்தரங்க விசயங்கலை கேவளமான வார்த்தையில் பதிவிட்டு வருவதாக ஏற்கனவே நடிகை ராதிகா சரத்குமார் பளார் விட்டார் என்ற தகவல் வெளியாகியது.
இந்நிலையில், திருவான்மியூர் கடற்கரையில் தினமும் நடைபெயர்ச்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பயில்வான். இன்று காலை, இரவி நிழல் படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கு நடந்து சென்ற பயில்வானை பார்த்து, வழிமறித்து மடக்கி சரமாறியாக கேள்வி கேட்டுள்ளார். அம்மணமா நடிச்சது என் இஸ்டம். உன் பிள்ளையா, பொண்டாட்டியா, செருப்பு பிஞ்சிறும் என்றும் என்ன பேசுறது என்ன ரைட்ஸ் இருக்கு என்று கண்டபடி திட்டியுள்ளார்.
அதற்கு பயில்வான், அவ அம்மணமா நடிச்சதால் தான் பேசுனேன், அப்படி நடிச்சா பேசுவேன் என்று கூறியுள்ளார். மேலும், சித்ரா பற்றி பேசியும் இருப்பதை ரேகா ஊடகத்திற்கு கால் செய்து விளக்கம் அளித்துள்ளார்.
காலி முகத்திடலில் போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸாரும் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஜனாதிபதி செயலகத்தின் திசையிலிருந்து இராணுவப் படையினர் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் பின்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் அதன் நுழைவு வாயிலை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இராணுவ முற்றுகை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிடுகையில், முப்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று அதிகாலை 1.30க்கும் 2.30க்கும் இடையில் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் நுழைந்து ஜனாதிபதி செயலகத்திற்குள் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சகல கூடாரங்களையும் அகற்ற பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் ஆர்ப்பாட்ட பகுதிக்குள் பாதுகாப்பு படையினர் நுழையும் போதே, “இராணுவத்தினருடன் யாரும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம். அவ்வாறு செயற்பட்டால் அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள். போராட்ட களத்திற்கு சென்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுங்கள்” என பொலிஸார் எச்சரிக்கை ஒன்றும் வெளியிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை சத்தப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தான் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என நேற்று ரணில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இராணுவத்தினர் அதற்கான ஏற்பாடுகளை இரவோடு இரவாக செய்து முடிந்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் உயிர் தப்பிய இளைஞரொருவர் சற்றுமுன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில்,கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் அதிரடிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழு போராட்டக்காரர்களும் சற்று முன்னர் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஒரு சிவிலியன் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை போராட்டக்கள பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்க அறிவுறுத்தல்களை மீறி எரிபொருள் விநியோகம் இடம்பெற்றமையால், அங்கு குழப்பம் ஏற்பட்ட நிலையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பதிவை இடைநிறுத்திச் சென்றனர்.
அரசாங்க அறிவுறுத்தல்களை மீறி இன்று (21.07) எரிபொருள் விநியோகம் இடம்பெற்ற போது ஒன்லைன் பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய போதும், அவர்கள் அதனை மீறி செயற்பட்டமையால் தமது கடமையை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.
அத்துடன் அரசாங்கம் இன்றைய தினம் (21.07) 3,4,5 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் குறித்த இலக்கங்களையுடைய வாகனங்கள் காலை முதல் வரிசையில் நின்றன. எனினும் எரிபொருள் வர தாமதமாகியமையால் மாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது குறித்த இலக்கங்கள் தவிர்ந்த 0, 8 இலக்க சொகுசு கார்கள், வேறு இலக்க மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டதுடன், அறிவுறுத்தல் வழஙகப்பட்ட அளவை விட அதிகமாகவும் எரிபொருள் நிரப்பட்டது.
குறிப்பாக மக்கள் வங்கியின் வன்னிப் பிராந்திய முகாமையாளருக்கு சொந்தமான கார் ஒன்றிற்கு 14 ஆயயிரம் ரூபாய்க்கு மேல் எரிபொருள் வழங்கப்பட்டதுடன், பிறிதொரு அரச திணைக்களத்திற்கு சொந்தமான காரும் வரிசையின்றி எரிபொருள் பெற்றுச் சென்றது.
இதனால் அங்கு நீண்ட வரிசையில் நின்ற மக்கள் நீதியாக செயற்படும்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தினருடன் முரண்பட்டமையால் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.
இதேவேளை, வவுனியா மக்கள் வங்கியினர் நேற்றைய தினம் (21.07) வவுனியா ஐஓசி எரிபொருள் நிலையம் ஒன்றிலும் கலன்களில் பெற்றோல் பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்துள்ளனர்.
400 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சந்தேகநபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் எனவும் அவர்கள் 33, 27 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் 071-8592727 – 011-2343333/4 அல்லது 071 – 8591881 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கமநல சேவை திணைக்களத்தினருக்கு கிடைக்க பெற்ற 49.5 மெட்ரிக்தொன் உரத்தினை விவசாயிகளுக்கு பங்கிட்டு வழங்கும் நடவடிக்கை கமநல சேவை திணைக்கள அலுவலக உதவியாளர் எம்.கிருஸ்குமார் தலமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
50 நாட்களுக்கு குறைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 கிலாே யூரியாவும் 50 நாட்களுக்கு மேற்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 20 கிலோ யூரியாவும் ஒரு கிலோ யூரியா 200 ரூபாய் வீதம் 20 கிலோ என்ற விகித்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்தினால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரமே விவசாயிகளுக்கு இவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த உரம் வழங்கும் முதற்கட்ட நடவடிக்கை செட்டிக்குளம், அருவித்தோட்டம், நேரியகுளம், பெரியநொச்சிக்குளம் ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தனியார் கடைகளில் 50 கிலோ யூரியா 38 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையில் விற்பனையாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற ஏனைய வங்கிகளுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.அதன்படி தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் கோவிட் 19 தொற்று நோய் காரணமாக வருமானம் அல்லது வியாபாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு 6 மாத காலத்திற்கு உரிய நிவாரணம் வழங்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளிடம் மத்திய வங்கி கோரியுள்ளது.
வங்கித் துறையின் ஸ்திரத்தன்மைக்கு தேவையற்ற அழுத்தம் இல்லை.எதிர்காலக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தனிநபரின் திறன் மற்றும் வணிகம்/திட்டங்களின் நம்பகத்தன்மை மற்றும் சலுகைகளின் முக்கிய அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா, போக்குவரத்து, உற்பத்தி, சேவைகள், விவசாயம், கட்டுமானம், ஆடை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய தளவாட சேவைகளில் ஈடுபட்டுள்ள பிற வணிகங்கள் உட்பட தனிநபர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட கடன் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட தடைக்காலத்தின் கடைசிக் கட்டம் 31.12.2021 அன்று முடிவடைந்தது.
அதே நேரத்தில் சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட தடைக்காலத்தின் கடைசிக் கட்டம் 30.06.2022 அன்று முடிவடைந்தது.
யாழ்.தொல்புரம் பகுதியில் பெண்ணொருவருக்கு இன்று பிரசவ வ லி ஏற்பட்ட நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸார் தமது பொலிஸ் வாகனத்தை கொடுத்து உதவியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணிற்கு பிரசவ வ லி ஏற்பட்ட வேளை அவர் முச்சக்கர வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது திடீரென முச்சக்கர வண்டியில் பெட்ரோல் தீர்ந்துள்ளது.
இதனை அவதானித்த வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன் முச்சக்கர வண்டிக்கு பெட்ரோல் வழங்கிய நிலையில், முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இயங்க மறுத்துள்ளது.
இதனை அவதானித்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக பொலிஸாருக்கு சொந்தமான வாகனத்தினை வழங்கி குறித்த கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு உதவியுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸாரின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இலங்கையிடம் தற்போது தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இப்போது இருக்கும் திட்டத்திற்கு அமைய, எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும்.
அதுவரை கடினமாக காலமாகவே அமையும். எவ்வாறாயினும், ஒளியை காணக்கூடிய சுரங்கத்தின் விளிம்பினை நாம் அடைந்துள்ளோம். எனவே, மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.
இலங்கையில் இன்று கொவிட்-19 வைரஸினால் பீடிக்கப்பட்ட 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 664,647 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 651 பேர் இன்னும் மருத்துவமனையிலும், வீட்டில் மருத்துவ மேற்பார்வையின் கீழும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது வரை மொத்தமாக கொவிட்-19 தொற்றிலிருந்து 647,463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையில், மேலும் 2 கொரோனா மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16,533 ஆக அதிகரித்துள்ளது.
மனைவியிடம் அதிகளவில் பணம் கேட்டு வந்த கணவரிடம் இருந்து அவருக்கு விவாகரத்து வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மனைவி என்பவர் பணம் கொடுக்கும் ஏடிஎம் அல்லது பணம் வழங்கும் பசு இல்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
கர்நாடகத்தை சேர்ந்தவர் 53 வயது ஆண். இவரது மனைவிக்கு 42 வயது ஆகிறது. இவர்கள் 2 பேரும் 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2001ல் பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே கணவருக்கு கடன் பிரச்சனை இருந்தது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
மேலும் கணவரால் தான் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் நிதி நிலைமை மோசமானது. இதையடுத்து அவரது மனைவி வேலைக்கு செல்ல திட்டமிட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற மனைவி வங்கி ஒன்றில் பணிக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். மேலும் தனது கணவரின் கடனையும் செலுத்தி வந்தார். அதோடு வருமானம் மூலம் தனது மற்றும் மகளின் எதிர்காலத்தை கொண்டு சொத்துக்கள் வாங்க துவங்கினார்.
சலூன் கடை வைத்து நஷ்டம் மேலும் தனது கணவர் கேட்ட கொண்டதன் அடிப்படையில் அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்சில் சலூன் கடை வைத்து கொடுத்தார். இதனையும் அவரது கணவர் சரியாக நிர்வகிக்கவில்லை. இதனால் அவருக்கு மீண்டும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்து அவர் தாய்நாட்டுக்கு வந்தார்.
ஏடிஎம் கார்டு போல் மனைவி மேலும் மனைவியிடம் அவரது கணவர், குடும்பத்தினர் தொடர்ந்து பணம்கேட்டு வந்தனர். இதனால் அவர் மனம் உடைந்தார். மேலும் தன்னை கணவரின் குடும்பத்தினர் ஏடிஎம் கார்டு போன்று பணத்துக்காக மட்டுமே பயன்படுத்துவதை அவர் உணர்ந்தார். இதனால் கணவரிடம் இருந்து விவாகரத்து கோர விரும்பினார்.
விவாகரத்து கோரி வழக்கு இதையடுத்து அவர் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது கணவருக்காக ரூ.60 லட்சம் செலவழித்ததாகவும், தொடர்ந்து தன்னிடம் பணம் கேட்பதால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக கூறி விவாகரத்து பெற விரும்புவதாக 2017ல் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் கேட்டார்.
இதனை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்துக்கான காரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து விவாகரத்து வழங்க மறுத்தது. விவாகரத்து வழங்கிய உயர்நீதிமன்றம் இதனை எதிர்த்து அவர் பெங்களூரில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி ஜேஎம் காசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த அமர்வு குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து கணவரிடம் இருந்து மனுதாரரான மனைவிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் கூறியது என்ன? மேலும் மனைவியின் கூற்றுப்படி அவரது கணவர் அவரை பணம் கொடுக்கும் பசுவாக பயன்படுத்தியதும், பணம் கேட்கும் மனப்பான்மையுடன் அவருடன் வாழ்க்கையை நடத்துகிறார் என்பது தெளிவாகிறது.
அதோடு மனைவியடன் பிற உணர்ச்சிப்பூர்வமான உறவை கணவரும், அவரது கணவரும் கொண்டிருக்கவில்லை என்பதை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடுகிறது. மனைவி என்பவர் பணம் வழங்கும் ஏடிஎம்மோ அல்லது பணம் வழங்கும் பசுவோ கிடையாது. இதுபோன்ற காரணங்கள் மனைவிக்கு மன வேதனையை அளிக்க போதுமான காரணமாகும். இதனால் இந்திய விவாகரத்து சட்டம் 1869ன் அடிப்படையில் பிரிவு 10(எக்ஸ்) கீழ் விவாகரத்து வழங்கப்படுகிறது என உயர்நீதிமன்றம் கூறி உத்தரவு பிறப்பித்தது.
ஒரு லீற்றர் சூரியகாந்தி எண்ணெய் வழங்கினால் ஒரு லீற்றர் பியரை பெற்றுக்கொள்ளலாம் என ஜேர்மனியிலுள்ள பிரபல உணவகம் ஒன்று பண்டமாற்று முறை திரும்பியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரின் தா க்கம் உலகம் முழுவதும் பல பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய் 80சதவீதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இதனால் ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பற்றாக்குறையால் தத்தளிக்கின்றது. இந்தநிலையில் சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்க, ஜேர்மனியில் உள்ள உணவகம் ஒன்று வித்தியாசமான பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது.
அதன்படி பியர் பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் பணம் செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதிலாக அதற்கேற்ற அளவில் சூரியகாந்தி எண்ணெய் வழங்கினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆலப்புழாவில் ஓடும் அரசு பேருந்து மக்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ளது. இதற்கு காரணம் அந்த பேருந்தின் ஓட்டுனர், நடத்துனராக ஒரு தம்பதி பணியாற்றுவது தான்.
கிரி கோபிநாத் மற்றும் தாரா ஆகிய இருவரும் தான் ஓட்டுனர், நடத்துனராக பணியாற்றுகின்றனர். இந்த பேருந்தில், பயணிகள் பாதுகாப்பிற்காக 6 சி.சி.டி.வி. கேமிராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்களை கேட்கும் வசதி, குழந்தைகளை கவர பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் ஆகியவை கொண்டுள்ளன.
பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் எல்.இ.டி. போர்டு வசதியும் பேருந்தில் உள்ளது. பேருந்து அழகாக தோற்றமளிக்க, இந்த தம்பதி தங்களது சொந்த நிதியையே செலவிட்டு உள்ளனர். இவர்களுக்கு ரசிக பெருமக்களும் உள்ளனர்.
இந்த பேருந்தில் வழக்கமாக பயணிப்பவர்கள் தங்களுக்குள் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கி உள்ளனர். இதுபற்றி தாரா புன்னகையுடன் கூறும்போது, ஒவ்வொரு நாளும் நாங்கள் அதிகாலை 1.15 மணிக்கு எழுந்திருக்கிறோம்.
2 மணிக்கு பேருந்து டெப்போவுக்கு செல்வோம். அதன்பின்னர், பேருந்தில் கிரி தூய்மை பணியை மேற்கொள்வார். பின்பு எங்களுடைய பணி காலை 5.50 மணிக்கு தொடங்கும் என கூறுகிறார்.
இவர்களது கதை இதனுடன் நின்று விடவில்லை. கடந்த 2020ல் திருமணம் செய்து கொண்ட இவர்களது காதல் 20 ஆண்டுகள் பழமையானது. கிரிக்கு 26 வயது இருக்கும்போது, தாராவுக்கு வயது 24. இருவரும் சந்தித்த பின்னர் காதல் வயப்பட்டு உள்ளனர்.
ஆனால் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதையடுத்து இருவரும் நீண்ட பொறுமை காத்து வந்து பின்னர் மணந்து கொண்டனர். தம்பதியின் காதல் கதை மற்றும் பேருந்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ராணிப்பேட்டையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் அவரை கணவரே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் தியாகி மாணிக்கம் தெருவில் வசிபவர் சுலைமான். 40 வயதான இவர் தனியார் கேஸ் ஏஜென்சி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், சுலைமான் தனது மனைவி மீது சந்தேகம் கொண்டு அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வேலை முடித்து வீடு திரும்பிய சுலைமான், தனது மனைவியுடன் சந்தேகத்தின் பேரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. கொஞ்ச நேரத்தில் வாக்குவாதம் எல்லை மீறியிருக்கிறது. இதனிடையே கோபமடைந்த சுலைமான் தனது மனைவியை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் வீட்டுக்கு உள்ளேயே மயங்கி விழுந்த சுலைமானின் மனைவி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மனைவி மரணமடைந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த சுலைமான், அங்கு இருந்தால் காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்வோம் என அஞ்சி, அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்திருக்கிறார்.
இதனிடையே, இது குறித்து ராணிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சுலைமானை மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்ததுடன், உயிரிழந்த அவரது மனைவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தனது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட சுலைமானிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டையில் திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்து, மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கணவரே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக ஊட்டி விளங்கி வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல், மற்ற மாநிலங்களில் இருந்தும் பலரும் இங்கே வந்து சுற்றித் திரிந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து உதகைக்கு வந்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம், பலரையும் பீதி அடைய செய்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வினிதா சவுத்ரி என்ற பெண் ஐடி ஊழியர் ஒருவர், தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
தொடர்ந்து, ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்து விட்டு, அவர்கள் அனைவரும் கல்லட்டி மலைப் பகுதியில் தனியாக அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றிலும் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் ரிசார்ட் அருகே அமைந்துள்ள ஆற்றின் கரையோரம், மாலை நேரத்தில் நின்று கொண்டு அவர்கள் அனைவரும் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் திடீரென வினிதா நிலைத் தடுமாறி கீழே விழ, வேகமாக வந்த காட்டாற்று வெள்ளம், அவரை இழுத்துச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ந்து போக செய்யவே, உடனடியாக மீட்புப் படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், வினிதாவுடன் வேறு சிலரும் சிக்கிக் கொள்ள அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இரவு வரை வினிதாவை மீட்புக் குழு மற்றும் அதிகாரிகள் தேடி வந்தனர். ஆனால், இரவு நேரம் ஆகியும் கிடைக்காததால், மீண்டும் அதிகாலை ஐந்து மணியில் இருந்து வினிதாவை தேடும் பணியை மீண்டும் தொடங்கி உள்ளனர். அப்போது ஒரு மரத்தில், கடினமான சூழலில் சிக்கியிருந்த வினிதாவின் உடலை மீட்புக் குழு மிகவும் பத்திரமாக மீட்டது.
மேற்கொண்டதில்,வினிதா உள்ளிட்ட அனைவரும் தங்கி இருந்த ரிசார்ட், அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததும்.தெரிந்துள்ளது. மேலும், இதுபற்றி விசாரித்து உடனடியாக அந்த ரிசார்ட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சுற்றுலாவுக்கு வருபவர்கள் இது போன்ற ஆபத்தான இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும், இனிவரும் காலங்களில் செல்ஃபி மோகத்தினால், இது போன்ற ஆபத்துகள் நேரக்கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஊட்டியைச் சுற்றி பார்க்க வந்த ஐடி ஊழியருக்கு நேர்ந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதே வேளையில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ரிசார்ட் தொடர்பான தகவலும் பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மது போதையில் இருந்த கணவணை பனியன் துணியால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் வசித்து வருகின்றனர் சரவணன் – முத்துலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதிக்கு திவ்வியபாரதி, தனலட்சுமி, சூர்யா என 3 பிள்ளைகள் உள்ளனர்.
ராயபுரத்தில் உள்ள எம்.சி ரோட்டில் சாலையோரம் துணி வியாபாரம் செய்துவரும் சரவணன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை குடிபோதையில் இருந்த சரவணன் மனைவி முத்துலட்சுமியிடம் தஞ்சாவூரில் உள்ள உனது சொத்தை பிரித்து பணத்தை பெற்றுக்கொண்டு வா என்று கூறி மனைவியை அடித்து துன்புறுத்தி ஆடைகளை கழற்றி அடித்து, வீட்டை விட்டு வெளியே போய் விடு என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி போதையில் இருந்த கணவன் சரவணனை பனியன் துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பிறகு என்ன செய்வதென்று தெரியாத முத்துலட்சுமி சரவணன் தம்பி சாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சாமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துலட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது என் கணவர் தஞ்சாவூரில் உள்ள என் சொத்தை விற்று பணத்தை கொண்டு வா என்று கூறினார்.
இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை கொடுமைப்படுத்தி வந்தார். நேற்று அத்துமீறி எனது ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கி வீட்டை விட்டு வெளியே போ என்று கூறியதால் ஆத்திரமடைந்த நான் பனியனால் அவர் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.