ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரியில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் நாகராஜின் மகள் கீர்த்தனா. கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இதனிடையே கல்லூரி மாணவி கீர்த்தனாவை அவரது உறவினரான அதே பகுதியை சார்ந்த முகேஷ் என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் காதலுக்கு மாணவி கீர்த்தனா மறுப்பு தெரிவித்ததால் அடிக்கடி கீர்த்தனாவிடம் தகராறு செய்த வந்ததாகவும் தன்னை தவிர்த்து வேறு யாரிடமும் பேசிக்கூடாது என மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை கல்லூரி முடித்த பின்னர் தனியார் பேருந்தில் இருந்து சன்னியாசிக்குப்பம் கடைவீதியில் இறங்கி வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது கத்தியுடன் மறைந்திருந்த முகேஷ் கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை கால் பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீர்த்தனா சரிந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கீர்த்தனாவை மீட்டு மதகடிப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று பரிசோதித்ததில் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருபுவனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய முகேஷை வலை வீசி தேடி வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பியோடி முகேஷ் மீது மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காருக்குள் குடும்பத்துடன் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர் : கிடைத்த நெஞ்சை உலுக்கும் கடிதம்!!

மஹாராஷ்டிராவில்..

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர் நிதி பிரச்சனையால் தனது காரில் குடும்பத்துடன் தீ வைத்துக்கொண்டார். நாக்பூர் நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் தொழிலதிபர் உயிரிழந்தார், ஆனால் காரில் இருந்து இறங்கிய அவரது மனைவியும் மகனும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.

சாலையில் கார் எரிந்து கொண்டிருப்பதைக் காட்டும் பயங்கரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர், ஆனால், தொழிலதிபர் காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி தீயில்கருகி உயிரிழந்தார்.

58 வயதான தொழிலதிபர் ராம்ராஜ் பட், தனது குடும்பத்தினரை ஒரு ஹோட்டலில் மதிய உணவிற்காக வெளியே அழைத்துச் சென்று, பின்னர் தனது காரை வெகுதூரம் ஓட்டிச் சென்றறு ஒரு சாலையில் திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது.

பின்பு, அவர் தன் மீதும், மனைவி மற்றும் மகன் மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் எதிர்வினையாற்றுவதற்கு முன், அவர் அவர்களுடன் சேர்த்து தீவைத்துக்கொண்டார்.

இதில் ராம்ராஜ் பட் உயிரிழந்தார். அவரது மனைவி சங்கீதா பட் (57) மற்றும் மகன் நந்தன் (25) ஆகியோர் எப்படியோ கதவுகளைத் திறந்து காரில் இருந்து குதித்தனர், ஆனால் அவர்களும் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

எரிந்த காரில் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் ஒரு குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது, அதில் வணிகர் தனது நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

வவுனியாவில் சிறுவனை காணவில்லை : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

ஜசோதரன் கிஷால்..

வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, தேக்கவத்தை, ஆலடி சந்தியை சேர்ந்த ஜசோதரன் கிஷால் என்ற பதினைந்து வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று (20.07) காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற குறித்த சிறுவன் இரவாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமுற்ற சிறுவனின் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்து தேடி வருகின்றனர்.

குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தந்தையான ஜசோதரனின் 0775599709 தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் 4 இலட்சம் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது!!

குடும்பஸ்தர் ஒருவர் கைது..

வவுனியாவில் 4 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் 4 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகரால் சிதம்பரபுரம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாடு தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிரோசன் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் கமகே மற்றும் பொலிஸ் கொன்டபிள்களான பண்டார, மதன்ராஜ், ரவிகரன் உள்ளடங்கிய பொலிசார் துரித நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சிதம்பரபுரம் பகுதியில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டது. மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில முற்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்

திடீரென வீதிக்கு வந்து அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!!

ரணில் விக்ரமசிங்க..

நாடாளுமன்ற அமர்வு நிறைவடைந்து வெளியேறும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திடீரென தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையினர் அருகில் ஜனாதிபதி சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் ரணில் விசேட அதிரடிப்படையினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காகவே இறங்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடமே இவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விசேட வாக்கெடுப்பின் போது 134 வாக்குகளை பெற்று இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

ஐரோப்பா மக்களை வாட்டி எடுக்கும் வெப்பம் : 1000ஐ கடந்த பலி எண்ணிக்கை!!

வாட்டி எடுக்கும் வெப்பம்..

ஐரோப்பா நாடுகளில் வெப்ப அலை பரவி வரும் நிலையில் போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் வெப்ப அலையால் பலி எண்ணிக்கை 1000 கடந்துள்ளது.

கடந்த வாரம் போர்த்துக்கல்லில் மட்டும் 659 கும் கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர் என அந் நாட்டு பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வியாழக்கிழமை 116.6 டிகிரி பேரன் ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதோடு இது 2003 ஆம் ஆண்டு பதிவான உச்ச வெப்ப நிலையை விட சற்று குறைவாகும்.

இந்த தீவிர வெப்ப நிலை ஸ்பெயின், அண்டோரா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலும் பரவி பெருமளவிலான காட்டு தீயும் ஏற்பட்டுள்ளது. இதில் வியாழக்கிழமை மட்டுமே 440 பேர் உயிரிழந்துள்ளதோடு அடுத்த சில நாட்கள் இவ் எண்ணிக்கை உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் அண்டை நாடான ஸ்பெயினில் வெப்ப நிலையினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 368 ஆக உயர்ந்ததோடு இந் இரு நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 1027 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 60 வயதுடைய துப்பரவு பணியாளர் ஒருவர் மாட்ரிட் நகரில் பணியில் இருந்த போது வெப்பம் பொறுக்காமல் உயிரிழந்துள்ளார்.

அவசர கால ஊழியர்கள் உடனடியாக வந்து உடலை பார்த்த போது வெப்பநிலை 106.9 டிகிரி பேரன் ஹீட் ஆகா இருந்தது.  பிரான்ஸின் மேற்கு பகுதியில் 112.2 டிகிரி பேரன் ஹீட் வெப்பம் நேற்று பதிவான நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சில பகுதிகளில் வெப்பம் 104.2 டிகிரி பேரன் ஹீட்டை விட உயர்ந்து பதிவாகும் என அந் நாடு வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது பிரித்தானியாவில் இது வரை இல்லாத வெப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

தன்னை விட 28 வயது குறைவான பெண்ணை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இந்திய அணியில்..

பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் அருண்லால் தன்னை விட வயதில் மிக குறைவான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில் தனது தேனிலவு திட்டம், கிரிக்கெட் தொடர்பிலான திட்டங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்திய அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் அருண் லால் (66). இவர் தனது நீண்ட நாள் நண்பரான புல் புல் சாஹா என்ற 38 வயதான பெண்ணை கடந்த மே 2 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

அருண் லால் மேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக இருந்த நிலையில் சமீபத்தில் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மனைவி மற்றும் குடும்பத்தாருடன் நேரம் செலவிடவே இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.

அருண்லால் கூறுகையில், நான் சோர்வாக உணர்கிறேன். ஏனெனில் கடந்த 9 மாதங்களாக நான் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே எப்போதும் சிந்திக்க வேண்டியிருந்தது. ஒரு நிமிடம் கூட என்னால் விளையாட்டைத் தாண்டி எதையும் சிந்திக்க முடியவில்லை.

இப்போது எனது குடும்பத்தினருக்கு நேரம் கொடுக்க விரும்புகிறேன், அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் என் மனைவியுடன் துருக்கிக்கு தேனிலவுக்கு பயணம் செய்ய விரும்புகிறேன். திருமணத்திற்குப் பிறகு நான்

மனைவிக்கு தெரியாமல் சொந்த நிறுவனத்தில் 4 கோடி திருடிய கணவர் : நடந்த விபரீதம்!!

கோவையில்..

பெண் கணக்காளருடன் சேர்ந்துகொண்டு மனைவிக்கு தெரியாமல் சொந்த நிறுவனத்தில் இருந்து ரூ.4 கோடிக்கும் அதிகமான பணத்தை ரஞ்சித்குமார் கையாடல் செய்தது தெரியவந்தது.

கோவையில் சொந்த நிறுவனத்தில் இருந்து மனைவிக்கு தெரியாமல் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திருடிய தொழிலதிபர் ரஞ்சித்குமார் என்பவரை கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த நிறுவனத்தின் பெண் கணக்காளர் கலைச்செல்வி என்பவரையும் குற்றபிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி ஜிஷா. வெளிநாட்டில் வசிக்கும் ஜிஷாவின் பெற்றோர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 2011 ம் ஆண்டு Space Makers Roofing Systems Pvt.ltd என்ற தனியார் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதன் பொதுமேலாளராக ரஞ்சித்குமாரையும், ஜிஷாவை உதவி பொது மேலளாராக நியமித்தனர். இந்த நிறுவனத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

ரஞ்சித்குமார் நிறுவனத்திற்கு முறையாக வராமல் ஊதாரிதனமாக சுற்றி திரிந்துள்ளார். நிறுவனத்தின் பணிகளை ஜிஷா பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் 2013 ம் ஆண்டு கணக்காளராக பணிக்கு சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுடன் சேர்ந்து கொண்டு நிறுவனத்தின் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரஞ்சித்குமார் திருடியுள்ளார்.

வருமானவரி மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றை செலுத்தாமல் அந்த தொகையினை தனது கணக்கிற்கு மாற்றிக்கொண்டு, இவற்றை செலுத்தியாக போலி பில்கள், ஆவணங்களை இருவரும் சேர்ந்து தயாரித்து நிறுவனத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரித்துறையில் இருந்து Space Makers Roofing Systems Pvt.ltd நிறுவனத்திற்கு நோட்டீஸ் வந்துள்ளது. இது குறித்து ஜிஷா அந்த அலுவலகங்களுக்கு நேரில் சென்று விசாரித்த போது வருமான வரி, ஜி.எஸ்.டி போன்றவை செலுத்தப்பட வில்லை என்பதும், போலியான பில்களை வைத்து ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து தனது கணவர் ரஞ்சித்குமாரிடம் கேட்ட நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். நீண்ட நாட்களாக ரஞ்சித்குமார் திரும்பி வராத நிலையில் அவரது மனைவியும், நிறுவனத்தின் உதவி பொது மேலாளருமான ஜிஷா கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசில் இந்த மோசடி குறித்து புகார் அளித்தார்.

ரஞ்சித்குமார் மீதும், கலைச்செல்வி மீதும் ஜிஷா புகார் அளித்த நிலையில் மாவட்ட குற்றபிரிவு போலீசார் இது குறித்த விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுமார் 4 கோடிக்கும் அதிகமாக நிறுவனத்தின் பணத்தை இருவரும் சேர்ந்து திருடி இருப்பதும் அதில் தனியாக ஒரு வீடு, இடங்கள் போன்றவை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

மேலும் கலைச்செல்வியும் தனியாக ஒரு வீடு கட்டி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ரஞ்சித்குமார் மற்றும் கலைச்செல்வி ஆகிய இருவரையும் மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் ரஞ்சித் பெயரில் உள்ள வீடு,நிலம் ஆகிய சொத்துகளை வழக்கில் சேர்த்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

காதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய் : நடந்த விபரீதம்!!

தேனியில்..

சிறுமிக்கு காபியில் மயக்க மாத்திரையை கொடுத்து பாலியல் வன்பணர்வு செய்த தாயின் கள்ளகாதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்துக்கு தாயே உடந்தை என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் வசித்து வருபவர்கள் ஜெயராம் – முத்துச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை ஜெயராம் கேரளாவிற்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்த நிலையில் தாய் முத்துச்செல்வி கென்னடி என்ற திரைப்பட இயக்குனருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார்.

தஞ்சாவூரை சேர்ந்த திரைப்பட இயக்குனர் கென்னடி குழந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்வதற்காக ராக்கம்மாள் என்ற ஏஜென்ட் மூலம் சிறுமியின் தாய் முத்துச்செல்வி அறிமுகமாகி நாளடைவில் இருவரும் தகாத உறவும் வைத்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் சிறுமிக்கு தெரிந்துவிட்டது. இதை அறிந்துகொண்ட முத்துச்செல்வி, இதை உன் தந்தையிடமோ அல்லது யாரிடமோ சொன்னால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என மகளை மிரட்டி வந்துள்ளார்.

நாளடைவில் இந்த இருவரின் தகாத உறவுக்கு சிறுமியும் பலிக்கடாவானர். கள்ளக்காதலன் கென்னடிக்கு சிறுமியின் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்ற தாயிடம் அவன் கூறியுள்ளான். இதில், உச்சகட்ட கொடுமை என்னவென்றால், சிறுமிக்கு காபியில் தூக்க மாத்திரை கலந்து தாய் முத்துசெல்வியின் உதவியுடன் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக கள்ளக்காதலின் ஆசைக்காக தனது பெற்ற மகளை பலமுறை இயக்குனரின் மோகத்துக்கு இறையாக வழங்கியுள்ளார் முத்துச்செல்வி. இந்நிலையில், கோடை விடுமுறையில் சிறுமி சென்னையில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்றபோது தனக்கு நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.

சிறுமியின் சித்தி சங்கீதா சிறுமியை தேனிக்கு அழைத்து வந்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றி சிறுமி மூலமாகவே புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தாயை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் இயக்குனர் கென்னடியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

காதல் விவகாரத்தால் மாணவி தற்கொலை முயற்சி : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

சேலத்தில்..

காதல் விவகாரத்தில் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்கு சென்று பள்ளியின் மேல் மாடியில் இருந்து குதித்து உள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் கூச்சலிட்டதால் அருகில் இருந்த ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

பள்ளி மாணவி தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இது குறித்து விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு தந்தை இல்லாத நிலையில் தாயின் அரவணைப்பில் தான் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கும் அதே பதில் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மாணவி இன்று காலை பள்ளிக்கு சென்று பள்ளியின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி விடுதி கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் கலவரமாக மாறி உள்ள நிலையில் இன்று மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது, பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் முதல் கட்ட விசாரணை பள்ளியிலோ ஆசிரியர்கள் மூலமாகவோ எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் குடும்ப பிரச்சனை காரணமாக இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும் மாணவிக்கு உயர்ந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

வீடியோ பார்த்ததால் ஆத்திரம் : இளைஞர்க்கு நடந்த சோகம்!!

பீகாரில்..

நுபுர் சர்மா முகமது நபியை அவதூறாகப் பேசிய வீடியோவை பார்த்ததால் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

மேலும் நுபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் மூண்டது. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பல இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டது.

அதேவேளையில் நுபுர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் டெலி என்பவர் 2 நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி பகுதியை சேர்ந்தவர் உமேஷ் கோல்ஹே என்பவர் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்குக்கும் நுபுர் சர்மாவின் ட்வீட் காரணம் என தகவல் வெளியானது.

இதனிடையே, நுபுர் சர்மாவின் வழக்கு விசாரித்த உச்சநீதிமன்றம் “அவரின் தேவையில்லாத உளறல்களால் நாடு இப்போது தீக்கிரையாகியுள்ளது.இது அவமானகரமானது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என கருத்து தெரிவித்தது.

தம் மீதான இந்த விமர்சனங்களை நீதிபதிகள் திரும்பப் பெற வேண்டும் என்றும், தம் மீதான வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் நுபுர் சர்மா முறையிட்டார். நுபுர் சர்மாவின் மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 10-ந் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் வரை இவ்வழக்கில் அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில், நுபுர் சர்மா முகமது நபியை அவதூறாகப் பேசிய வீடியோவை பார்த்ததால் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சீதாமர்கி மாவட்டத்தைச் சேர்ந்த அன்கித் ஜா (23) என்ற இளைஞர் பொது இடத்தில் அமர்ந்து தனது செல்போனில் நுபுர் சர்மாவின் வீடியோவை பார்த்ததாக கூறப்படுகிறது.

அப்போது இதைப்பார்த்த 4 பேர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் தங்களிடமிருந்த கத்தியால் அன்கித் ஜாவை குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அன்கித் ஜாவை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த செய்தி வெளியாகி பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு நுபுர் சர்மா காரணமில்லை என்றும், முன்பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்றும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

மகனை அடித்துக் கொன்ற தந்தை… கதறும் தாய் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

பண்ருட்டி அருகே..

பண்ருட்டி அருகே தூங்கி கொண்டு இருந்த 14 வயதுடைய மகன் மீது தந்தை குழவிகல்லை தூக்கி போட்டு கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கு மனைவி ஒருமகன் இரண்டு மகள் உள்ளனர்.

இவர் அதே பகுதி சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மகன் அர்ஜுன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு மது போதையில் இருந்த முருகன் மீண்டும் மது அருந்த பணம் கேட்டு மனைவி சுமதியை அடித்ததாகவும் அதன் பின்பு வீட்டில் வைத்திருந்த 300 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இரவு சென்ற முருகன் மீண்டும் நள்ளிரவுவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி என்று நினைத்து 14 வயதுடைய மகன் அர்ஜுன் தலையில் குழவிகல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு தாய் சுமதி மற்றும் சகோதரிகள் எழுந்து பார்க்கும் போது அர்ஜுன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

உடனடியாக சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உயிரிழந்த சிறுவன் அர்ஜுனை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பித்துள்ளனர். மேலும் பெற்ற மகனை மது போதையில் கொலை செய்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார் ரணில் : இறுதி நேரத்தில் மாறிய முடிவு!!

புதிய ஜனாதிபதியாக ரணில்..

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். எனினும், நேற்றைய தினம் வேட்பாளர்கள் தங்களது மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே அதிக வாக்குகளை ரணில் பெற்றிருக்கிறார்.

இலங்கை அரசியல் வரலாற்றில், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி, பிரதமராக நியமிக்கப்பட்டு பதில் ஜனாதிபதியாக பதவியேற்று தற்போது இடைக்கால ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்கள் வாக்குகள்
டலஸ் அழகப்பெரும 82
ரணில் விக்ரமசிங்க 135
அநுர குமார திசாநாயக்க 3
செல்லுபடியற்ற வாக்குகள் – 4
வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் – 2

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

சின்ன பையன் இல்லைனா காலில் விழுந்திருப்பேன் : கதறி அழுத காமெடி நடிகர் தம்பி ராமையா!!

தம்பி ராமையா..

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த காமெடி நடிகர் வரிசையில் இருப்பவர் தம்பி ராமையா. வைகைபுயல் வடிவேலு அந்தகாலத்தில் இருந்தே நடிக்கும் போது சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி அவருக்கு இணையாக கவுண்டர் அடித்து காமெடி வழங்கி வந்தார்.

தற்போது முன்னணி நட்சத்திரங்களாக விஜய், அஜித், நயன்தாரா, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ் போன்றவர்களுடன் நடித்தும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதிபது, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்த மாமனிதன் படத்தினை பார்த்துள்ளார்.

இப்படத்தினை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தம்பி ராமையா பொறுமை இழந்து கதறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். என்னை விட சீனுராமசாமி சின்ன பையன் இல்லை என்றால் காலில் விழுந்திருப்பேன் என்று கூறியது நெகிழவைத்துள்ளது.

“சீனுராமசாமி என்னை விட சின்ன பையன்.. இல்லைனா காலில் விழுந்திருப்பேன்” – மாமனிதன் படம் பார்த்த பிறகு தேம்பி அழுத தம்பி ராமையா.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

பெண்ணுக்கு நடந்த கொடுமை : தோழி, தோழியின் கணவர் செய்த காரியம்!!

திருவொற்றியூரில்..

கருமுட்டையை விற்குமாறு ஸ்ருதியை ஜெனிஷ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கேட்டு கொடுமைப்படுத்தியதோடு அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சென்னை திருவொற்றியூரில் கரூ முட்டையை விற்க வலியுறுத்திய பெண்ணின் தோழி மற்றும் அவரது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எர்ணாவூர் பகுதியில் வசித்து வரும் ஸ்ருதி (வயது 22) என்பவருக்கும் அவரது கணவர் விஜய் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு குழந்தைஉள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு ஸ்ருதி தனது கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது ஸ்ருதியின் தோழியான ஐஸ்வர்யா என்பவர் அவருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஒடைக்குப்பத்தில் வசிக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணா ஸ்ருதியை வீட்டில் வேலைக்காரி போல் நடத்தியுள்ளனர். மேலும், ஸ்ருதியிடம் கருமுட்டையை விற்குமாறு கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். ஜெனிஸ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா சுருதியை அடித்து தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

தலைமறைவான கணவன் : கர்ப்பிணி பெண் திடீரென எடுத்த துணிச்சல் முடிவு!!

குஜராத்தில்..

தன்னை விட்டு பிரிந்துசென்ற கணவரை மீட்டுத்தர கோரி கர்ப்பிணி பெண் ஒருவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்திருப்பது பலரையும் கலங்க செய்திருக்கிறது.

குஜராத் மாநிலம் சபர்மதி காளிகாம் பகுதியை சேர்ந்த ராஜாபாய் – சரோஜ் தம்பதியின் மகள் சரிதா. இவருடைய கணவர் திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே மரணமடைந்திருக்கிறார். இந்நிலையில், வேலைக்காக குஜராத் வந்திருந்த தஞ்சாவூர் ஒரத்தநாட்டை சேர்ந்த விஜயகுமார் என்னும் இளைஞருடன் சரிதா நட்பாக பழகிவந்திருக்கிறார். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி விஜயகுமார் கூறவே, சரிதாவும் சம்மதித்திருக்கிறார்.

இந்நிலையில், திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதி தஞ்சாவூர் வந்தபோது தான், விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருப்பது சரிதாவுக்கு தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, சரிதாவை தனி வீட்டில் தங்க வைத்திருக்கிறார் விஜயகுமார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக விஜயகுமார் தலைமறைவாகிவிட்டதாக கூறுகிறார் சரிதா.

இதனை தொடர்ந்து காணாமல் போன தனது கணவரை மீட்டுத்தரும்படியும், கணவரின் குடும்பத்தாரிடமிருந்து தனக்கு பாதுகாப்பு வழங்கிடவேண்டும் எனவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் சரிதா. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சரிதா கலெக்டரிடம் தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இதனால் அங்கிருந்தவர்கள் கவலையடைந்தனர். மேலும், தங்க இடம் இல்லாமல் சாலை ஓரங்களில் வசித்துவருவதாக சரிதா கூற, அனைவரும் கலங்கிப்போயிருக்கிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சரிதா,”எனக்கு சிறுவயதிலேயே திருமணம் நடைபெற்ற சில ஆண்டுகளில் என்னுடைய கணவர் இறந்துவிட்டார். அப்போது குஜராத்துக்கு வேலைக்கு வந்த தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு தஞ்சாவூர் திரும்பிய பிறகுதான் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. நான் இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்” என்றார்.

மேலும், தனது கணவரின் வீட்டார் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், தங்க இடம் இல்லாததால் சாலை ஓரத்தில் வசித்து வருவதாகவும் கூறும் சரிதா காவல்துறையினர் விரைந்து தனது கணவரை கண்டுபிடித்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு