கலெக்டர் ஆக ஆசைப்பட்டவருக்கு காதல் தோல்வியால் வந்த சோதனை!!

கன்னியாகுமரியில்..

எம்பிஏ படித்துவிட்டு, ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி இருந்த நபரின் வாழ்க்கை, திடீரென தடம் புரண்டு, தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ள சம்பவம், பலரையும் நெகிழ வைத்துள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், கன்னியாகுமரி பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், சுற்றித் திரிந்து வந்துள்ளார்.

இவர் கன்னியாகுமரி ரயில் நிலையம் மற்றும் அங்குள்ள நடைபாதை உள்ளிட்ட இடங்களிலும், நீண்ட சடை முடி மற்றும் அழுக்கு உடையுடன் வலம் வந்துள்ளார். அப்பகுதி மக்கள் அளிக்கும் உணவையும் உண்டு காலம் கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, சமீபத்தில் தென்காசி மாவட்டம் தென்மலை என்ற பகுதியில் இருந்து முருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அந்த சமயத்தில் மனநிலம் பாதிக்கப்பட்ட வாலிபரை பார்த்ததும், மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது உறவினராக இருக்க கூடும் என்ற சந்தேகம் முருகனுக்கு எழுந்துள்ளது.

சந்தேகத்தின் பெயரில், அந்த வாலிபரிடம் முருகன் சென்று பேச்சு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.அதன் அடிப்படையில், முருகனின் சந்தேகம் வலுக்கவே, அங்கே நின்ற போலீசாரின் உதவியுடன் அருகில் உள்ள கடைக்கு சென்று, அந்த வாலிபருக்கு முடித்த திருத்தும் செய்து, குளிக்க வைத்து புத்தாடையும் உடுத்தி உள்ளனர். தொடர்ந்து, தென்மலையில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவலும் கொடுத்துள்ளார் முருகன்.

அப்போது தான், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் குறித்து ஏராளமான தகவல் தெரிய வந்தது. B. Com மற்றும் MBA படித்துள்ள அந்த நபரின் பெயர் முத்து ஆகும். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முத்து,

கடந்த 2018 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் தன் தங்கியிருந்த விடுதியில் இருந்து திடீரென காணாமலும் போயுள்ளார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போனது. பல்வேறு முயற்சிகள் செய்தும் முத்துவை கண்டுபிடிக்க முடியாமல் அந்த முயற்சியையே உறவினர்கள் கைவிட்டனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், திடீரென மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரியில் முத்து இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர், உடனடியாக கன்னியாகுமாரிக்கும் அவரது உறவினர்கள் கிளம்பி வந்தனர். தொடர்ந்து, அவர்களை போலீசார் தக்க முறையில் விசாரித்து, முத்துவை அனுப்பி வைத்தனர்.

MBA பட்டதாரியாக இருந்த முத்து, சென்னையில் பணிபுரிந்த போது ஐஏஎஸ் தேர்வுக்கும் தயாராக பயிற்சி பெற்று வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், சென்னையில் இருக்கும் போது, உடன் பயின்ற பெண்ணை காதலித்ததாகவும் அந்த காதல் கை கூடாத காரணத்தினால்,

அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு நடந்தே முத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

காதல் தோல்வி காதல் கை கூடாத காரணத்தினால், மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்தாருடன் இணைந்துள்ள தகவல், பலரையும் நெகிழ வைத்துள்ளது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

‘ஜீன்ஸ் அணியக் கூடாது’ என சொன்ன கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

ஜார்க்கண்ட்டில்..

ஜார்க்கண்ட்டில் ஜீன்ஸ் பேண்ட் அணியத் தடைவிதித்தால் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், ஜோர்பிதா கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. இளம் பெண்ணான இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்ற பிறகுதான் புஷ்பா இக்கிராமத்திற்கு வந்துள்ளார்.

இவர் திருமணத்திற்கு முன்புவரை ஜீன்ஸ் உடைகளை விரும்பி அணிந்துவந்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு பிறகு புஷ்பாவின் கணவன் ஜீன்ஸ் பேண்ட் போன்ற உடைகளை அணிய வேண்டாம் என தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கிராமத்தில் நடந்த விழாவிற்கு புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு சென்றுள்ளார். இதை அறிந்த அவரது கணவர் வீட்டிற்கு வந்த மனைவியிடம் ‘ஏன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்றாய்’ என வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த புஷ்பா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவனை குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்திலிருந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புஷ்பாவின் கணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாணவியின் தற்கொலை கடிதம் : படிக்க படிக்க கண்ணீரில் கலங்கடித்த வரிகள்!!

கனியாமூரில்..

கனியாமூர் மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதியதான கடிதத்தில் உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதியதான கடிதத்தில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ” நா நல்லாத்தான் படிப்பேன்… வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடு (equation) இருக்கு.. என்னால அந்த equation படிக்கவே வரல…அதனால் வேதியியல் டீச்சர் ரொம்ப ப்ரெஷர் பண்றாங்க… நா படிக்க மாற்றேனு கணக்கு டீச்சர் கிட்டயும் சொல்லிட்டாங்க… அவங்களும் என்ன ப்ரெஷர் பண்றாங்க…

”ஹாஸ்டல்ல படிக்காம என்ன பண்றேன்னு கேட்டு ரொம்ப திட்டிட்டாங்க… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நா படிக்க மாற்றேனு இவங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தவங்க எல்லா staff கிட்டயும் சொல்லிருக்காங்க… இன்னக்கி காலைல வகுப்புக்கு வந்த staff என்ன பாத்து நீ படிக்கவே மாற்றியாமே, விளையாட்டு தனமா இருக்கியாமேனு கேக்குறாங்க… கணக்கு டீச்சரும், கெமிஸ்ட்ரி டீச்சரும் என்ன ரொம்ப ப்ரெஷர் பண்றாங்க… என்ன முடியல…”

”கணக்கு டீச்சர் என்ன மட்டுமல்ல இங்க இருக்க எல்லாரையுமே டார்ச்சர் பண்றாங்க… சாந்தி மேடம் நான் உங்ககிட்ட ஒரே ஒரு உதவி கேக்குற.. நான் இந்த வருஷம் கட்டுன ஸ்கூல் பீஸ் எங்க அம்மாகிட்ட திருப்பி கொடுத்துடுங்க…. புக் பீஸ், ஹாஸ்டல் பீஸையும் கொடுத்துடுங்க… ஏன்னா, நான் இனி இருக்கறது கொஞ்ச நாள்தான்… ப்ளீஸ் மேடம்…

சாரி அம்மா.. சாரி அப்பா மற்றும் தம்பியிடம் சாரி” சொல்லி கடிதத்தை மாணவி முடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து பள்ளி மாணவி பேசிய நெஞ்சை உலுக்கும் வீடியோ!!

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியை நினைத்து சிறுமி ஒருவர் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த 17 வயது மாணவியான ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் மேலும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

இதனிடையே, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையில் எந்த ஒளிவுமறையும் இருக்கக்கூடாது, அதுவே இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சிறந்த வழியாக இருக்கும் என கூறி, பெண் ஒருவர் தனது மகளுடன் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த விடீயோவின் இறுதியில், தாயுடன் இருந்த சிறுமி, உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியை நினைத்து தன்னை அறியாமல் கண்ணீர்வீட்டு அழுதார், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

திடீர் திருப்பம் : ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகினார் சஜித் பிரேமதாஸ!!

திடீர் திருப்பம்..

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் இன்று நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும் நான் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அலகபெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவானால், பிரதமர் பதவி சஜித்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

மாணவிகளின் உள்ளாடையை கழற்றச் சொன்ன அதிகாரிகள் : தேர்வு மையத்தில் நடந்த அதிர்ச்சி!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத சென்றனர். அங்கு தேர்வு மைய அதிகாரிகள் மாணவர்களை தனித்தனியே பரிசோதித்துள்ளனர்.

அப்போது Metal Detector கருவியை கொண்டு மாணவிகளை பரிசோதித்த அதிகாரிகள், உள்ளாடையில் உள்ள கொக்கி கருவியை எச்சரிக்கை செய்ததால் அவற்றை அகற்றும்படி வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் செய்வதறியாது விழித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளோ அவற்றை அகற்றாவிட்டால் மையத்திற்கு தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்றும், எதிர்காலம் முக்கியமா அல்லது உள்ளாடை முக்கியமா என்பது போல் பேசியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மாணவிகள் உள்ளாடையை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் குறித்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் தந்தை ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்த விடயம் பெரும் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து, மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாவட்ட பொலிசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

வவுனியாவில் இரு வாரங்களில் 10 க்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் திருட்டு!!

துவிச்சக்கர வண்டிகள் திருட்டு..

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கடந்த சில வாரங்களாக துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு அதிகரித்துள்ளது.

எரிபொருள் வரிசை, வைத்தியசாலைப் பகுதி, நகரப் பகுதி என்பவற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துவிச்சக்கர வண்டிகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இந்நிலையில், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டு வவுனியா பொலிசார் விசாரணைகளை முனனெடுத்துள்ளனர். இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு வாரங்களில் 9 துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளுக்காக கொள்கலன்களில் 1000 லீற்றர் பெற்றோல் வழங்கி வைப்பு!!

பெற்றோல்..

வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆயிரம் லீற்றர் பெற்றோல் மாவட்ட செயலகத்தின் சிபார்சில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (18.07) பெற்றோல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

இதன்போது, வவுனியா மாவட்ட செயலகத்தின் சிபார்சில் 4 பிரதேச சபைகள் மற்றும் ஒரு நகரசபை உள்ளடங்கிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு 400 லீறறர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 400 லீற்றர் பெற்றோல், கமலநல சேவைகள் திணைக்களத்திற்கு 200 லீற்றர் பெற்றோல் என 1000 லீற்றர் பெற்றோல் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் சனிக்கிழமை உள்ளுராட்சி மன்றங்களுக்கு 400 லீற்றரும், வங்கிகளுக்கு 250 லீற்றர், சிறைச்சாலை திணைக்களத்திற்கு 250 லீற்றர் என 900 லீற்றர் பெற்றோல் வழஙகி வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த மூன்று தினங்களில் 1900 லீற்றர் அத்தியாவசிய தேவை நிறுவனங்களுக்கு என மாவட்ட செயலகத்தால் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சிபார்சு தவிர்ந்த மேலும் பலர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலனில் பெற்றோல் பெற்றுச் சென்றதையும் அவதானிக்க முடிந்தததாகவும், இதன் காரணமாக தாம் எரிபொருள் பெற முடியாது தொடர்ந்து வீதியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பைக்குக்கு பெற்றோல் இல்லை திடீரேன கரண்ட் இல்லை சோக கதை தெரியுமா

 

ஒரு மூடை நெல் கொடுத்து பெட்ரோல் வாங்கி பிறந்த நாளுக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவி!!

யாழில்..

யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழக கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்ததினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை மாணவியின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் எவ்வாறு கிடைத்தது என கேட்டுள்ளார்கள்.

அப்போதே மாணவி மிகவும் சர்வசாதாரணமாக நெல்லுக்கு கொடுத்து பெற்றோல் வாங்கிய கதையைக் கூறியுள்ளார். அத்துடன் யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் ஒருவரிடமிருந்தே குறித்த பெற்றோலை தான் பெற்றதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தனது நண்பிக்கும் பேர்த்டே பரிசாக 2 லீற்றர் பெற்றோலும் கொடுத்து அசத்தியுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் பண்டமாற்று முறை என்பது இதுதானா என குறித்த மாணவியின் நண்பர்கள் தங்களது பேஸ்புக் பதிவுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனராம்.

பைக்குக்கு பெற்றோல் இல்லை திடீரேன கரண்ட் இல்லை சோக கதை தெரியுமா

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுரு மீது பொலிஸ் தாக்குதல் : வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுரு ஒருவரை பொலிஸ் தாக்கியதாக தெரிவித்து மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்த போது பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினால் மதகுரு ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அங்கு நின்ற மக்கள் வவுனியா மன்னார் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாக்கப்பட்ட மதகுருவிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

பைக்குக்கு பெற்றோல் இல்லை திடீரேன கரண்ட் இல்லை சோக கதை தெரியுமா

இதனால் அங்கு பதற்றமான நிலைமை காணப்பட்டதோடு நீண்ட நேரமாக வவுனியா, மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கப்பட்ட மதகுருவிடம் மன்னிப்பு கேட்டதற்கு இனங்க ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

சுற்றுலா வந்த இடத்தில் இளம் பெண்ணுக்கு நடந்த துயரம்..!

ஆந்திராவில்..

ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த இளம் பெண் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி (26). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் வினிதா தன்னுடன் பணியாற்றும் 9 நண்பர்களுடன் சேர்ந்து உதகைக்குச் சுற்றுலா வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை இவர்களைச் சட்டவிரோதமாக கல்லட்டி ஆற்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பைக்குக்கு பெற்றோல் இல்லை திடீரேன கரண்ட் இல்லை சோக கதை தெரியுமா

அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது காட்டாற்று வெள்ளத்தில் வினிதா அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதைப்பார்த்த அரவது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று முழுவதும் மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில் அவரது உடலை போலிஸார் இன்று மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டபடி திட்டி அவமானப்படுத்திய இயக்குனர் பாலா : சினிமாவே வேண்டாம் என்று சீரியல் பக்கம் போன நடிகை!!

சினிமாவில்..

தமிழ் சினிமாவில் தத்ரூபமாக இயக்கும் படங்கள் ஒருசில இயக்குனர்களிடமே இருக்கிறது. அதை சிறப்பாக செய்து முடிப்பவர் தான் இயக்குனர் பாலா. நடிகர் நடிகைகளிடன் இதுதான் நடிப்பு என்று கூறி கஷ்டங்களை கொடுத்து நடிக்க வைத்து தேசிய விருது வாங்கும் அளவிற்கு படத்தினை அதட்டி உருட்டி எடுத்துக்காட்டுவார்.

அப்படி நடிக்கும் கலைஞர்களை அடிக்கவும் செய்திருக்கிறார் பாலா. அந்தவகையில், விக்ரம் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப்படமக அமைந்தது சேது. இப்படத்தில் நடிகை அபிதா ஹீரோயினாக நடித்திருப்பார். இப்படத்திற்கு பிறகு எந்த வாய்ப்பும் இல்லாத விரக்தியில் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்றுவிட்டார்.

அதற்கான காரணத்தை தற்போது பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். சேது படத்தின் போது நடன காட்சிகள் இருந்ததால் என்னால் நடனம் தெரியாமல் கஷ்டப்பட்டேன். எனக்கு ஆடத்தெரியாது.

இதனால் கோபத்தில் இயக்குனர் பாலா செட்டிலேயே அனைவர் முன்னிலையிலும் என்னை கண்டபடி திட்டிவிட்டார் எனக்கு கோபம் வந்து படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினேன். என் அம்மா சமாதானம் செய்த பிறகு தான் மீண்டும் பாலாவிடம் மன்னிப்பு கேட்டு நடிக்க ஆரம்பித்தேன்.

உன் நல்லதுக்கு தான் சொல்கிறேன் என்று கூறி நடிக்க வைத்தார் பாலா. இதன்பின் இப்படத்திற்கு பின் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் சின்னத்திரை பக்கம் சென்று திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

அதில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதேபோல் பாலா சமீபத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்திலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தோழிகளுடன் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட வீடியோவை வெளியிட்ட நடிகை அமலா பால்!!

அமலா பால்..

சிந்து சமவெளி படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் லக்கில் பிரபு சாலமன் படமான மைனா வாய்ப்பு கிடைத்தது. படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி பிரபலமாகினார் அமலாபால்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து பிஸி நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தார். ஏஎல் விஜய்யை காதலித்து திரும்ணம் செய்து கொண்ட அமலா பால் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

விவாகரத்துக்கு பின் மார்க்கெட் இழந்து வாய்ப்பில்லாமல் ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம், மோசமான போட்டோஷூட், மது, புகை என ஜாலியாக இருந்து வந்தார். இதனைதொடர்ந்து ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்தும் பயனில்லாமல் போனார். பின் வெப் தொடர்கள் பக்கம் சென்று நெருக்கமான காட்சிகளில் நடித்தும் வருகிறார்.

தற்போது தோழியின் பிறந்த நாளில் மது அருந்தி தோழிகளுடன் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர் : மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

மயிலாடுதுறையில்..

கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மயிலக்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மகள் இலக்கியா (வயது 28). இலக்கியாவுக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்புதாசன் என்பவரின் மகன் பாண்டியராஜனுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்தத் தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. திருமணமானதிலிருந்து கணவன்-மனைவியிடையே வரதட்சணைப் பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாண்டியராஜன் வெளிநாடு சென்றுவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் கள்ளக்குறிச்சியிலுள்ள அவரின் சொந்த வீட்டுக்குத் திரும்பினார். இருவருக்குமிடையே மீண்டும் வரதட்சணை தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில், “கிரகக் கோளாறு.

அதனால்தான் பிரச்னை வருது. சிலநாள்கள் உங்க வீட்டில் இரு. எல்லாம் சரியாகிடும். நான் வந்து அழைச்சுக்கிறேன்” என்று இலக்கியாவின் கணவர் அவரிடம் கூறினாராம்.அதனால், இலக்கியா மயிலக்கோயில் கிராமத்திலுள்ள தன் தாய் வீட்டுக்கு குழந்தையுடன் கடந்த 10-ம் தேதி வந்தார்.

பைக்குக்கு பெற்றோல் இல்லை திடீரேன கரண்ட் இல்லை சோக கதை தெரியுமா

மாமியார் கொடுமையால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருச்சூரில்..

திருச்சூர் அடுத்த புன்னயூர்குளம் பகுதியில் மாமியார் கொடுமை காரணமாக அத்துபுரம் செட்டிசேரி குன்ஹிப்பாவின் மகள் பைரூஸ் (26) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், இது தொடர்பாக அவரது மாமியார் மற்றும் நாத்தனார் கைது செய்யப்பட்டனர்.

பைரூஸின் கணவர் ஜாபர் சித்திக்கின் தாயார் சங்கரம்குளம் பிடவண்ணூர் ரசியா (50), அவரது மகள் சம்வ்ருதா (31) ஆகியோரை குருவாயூர் ஏசிபி கே.ஜி. சுரேஷின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கேடகாடு போலீசார் அவரை கைது செய்தனர்.

அவர்கள் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்ததால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி குன்னம்குளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் ஜாபர் சித்திக் (32) என்பவர் முதல் குற்றவாளி. வளைகுடா நாட்டில் உள்ள அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பாத நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஒருவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி, பைரூஸ் தனது நான்கு மாத பெண் குழந்தையையும் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

பைக்குக்கு பெற்றோல் இல்லை திடீரேன கரண்ட் இல்லை சோக கதை தெரியுமா

கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம் : ஒரு மோதிரத்தில் இத்தன ஆயிரம் வைரமா? பிரமிப்பில் ஆழ்ந்த மக்கள்!!

கேரளாவில்..

உலகின் பல இடங்களில், நாளுக்கு நாள் ஏதாவது ஒரு மூலையில், பல்வேறு உலக சாதனைகள் நடந்து மக்கள் மத்தியிலும் கவனம் உருவாக்கப்பட்டு தான் வருகிறது. அதே போல, கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை செய்த கின்னஸ் உலக சாதனை ஒன்று, பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது. பொதுவாக, பலருக்கும் செயின், மோதிரம் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.

கின்னஸ் சாதனை படைத்த வைர மோதிரம்

அந்த வகையில், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள SWA டைமண்ட்ஸ், உலக அளவில் அசாத்திய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஒரு மோதிரம் என்றால், அதில் சில வைரங்களை கொண்டு வடிவமைக்கபட்டதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், SWA டைமண்ட்ஸ் தற்போது உருவாக்கி உள்ள மோதிரம் ஒன்றில், சுமார் 24,679 வைரங்களை கொண்டு ஒரு மோதிரத்தை உருவாக்கி உள்ளனர்.

அதுவும் இந்த மோதிரம், காளான் போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மோதிரத்திற்கு ‘அமி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத சொல்லான இந்த வார்த்தை, ‘அழியாத தன்மை’ மற்றும் ‘நீண்ட ஆயுள்’ என்பதைக் குறிக்கின்றது.

பிராமிக்க வைக்கும் காளான் மோதிரம்

இதற்கு முன்பு, மீரட் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர், சுமார் 12,638 வைரங்களைக் கொண்டு உருவாக்கி இருந்த மோதிரம் தான் கின்னஸ் சாதனையை படைத்திருந்தது. அதனை SWA டைமண்ட்ஸ் தற்போது முந்தி சாதனை படைத்துள்ளது. தங்களின் நிறுவனத்தின் மீது மக்களின் கவனத்தை திரும்புவதற்கான முயற்சிக்காக இந்த சாதனை மோதிரம் வடிவமைக்கப்பட்டதாகவும், அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனை வடிவமைத்து முடிக்க, சுமார் 3 மாதங்கள் வரை அவர்கள் எடுத்துக் கொண்டனர். முதலில் 3டி பிரின்டிங் மூலம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து மோதிரத்தின் இதழ்களின் ஒவ்வொரு பக்கத்திலும் கைகளைக் கொண்டே, வைரங்களை தனித்தனியாக வைத்துள்ளதாக வைரக்கடை நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, கின்னஸ் அதிகாரிகள், மைக்ரோஸ்கோப் மூலம் வைரத்தின் எண்ணிக்கை, எடை, கேரட் உள்ளிட்டவற்றை பரிசோதித்து பார்த்துள்ளனர். இந்த காளான் மோதிரத்தின் வீடியோ ஒன்றையும் கின்னஸ் உலக சாதனையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பைக்குக்கு பெற்றோல் இல்லை திடீரேன கரண்ட் இல்லை சோக கதை தெரியுமா