பொதுவாக நம்மில் பலர் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று தான் சிறுநீரை அடக்குவது. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.
அதுமட்டுமின்றி இது பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் சிறுநீர் அடக்குவதால் ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். சிறுநீரை அடக்குவதால் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிறுநீரை அடக்குவதால் இடுப்பு மடி தசைகள் பலவீனம் அடையும், அதனால் உடல் எடையை இழக்க நேரிடும். சிறுநீரை அடக்கி வைத்தால் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, கவனச்சிதறல் மேலும் ஒற்றைத் தலைவலி வரை ஏற்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மற்றும் சாந்தி தம்பதியர். இவர்களுக்கு ஜெய்கணேஷ் என்கிற 15 வயது மகன். இவர் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். ஜெய்கணேஷ் கடந்த சில வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு உள்ளதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது
இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் ஜெய்கணேஷ் வீட்டிற்கு அருகே வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
அருகில் இருந்த பொதுமக்கள் ஜெய்கணேசை தூக்கிக்கொண்டு சிங்கபெருமாள்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று இருந்த நிலையில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மறைமலைநகர் போலீசார் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை கொண்ட உறவினர்கள் இறுதி சடங்கிற்காக அவர்களது இல்லத்திற்கு எடுத்து சென்றனர்.
மகன் இறந்த துக்கத்தில் இருந்த ஜெய்கணேஷ் தாய் சாந்தி மகனின் உடலை பார்த்து கதறி அழுத நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். மகன் இறந்த துக்கத்தில் இருந்த தாயும் உயிரிழந்தது, உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் மாணவியை ஏமாற்றியவாலிபரை, போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
புதுச்சேரி உறுவையாரு பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் கர்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் விசாரணை செய்ததில், முருகன் என்ற வாலிபரே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பின்னர் போலிஸார் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் சகோதரியைக் கிண்டல் செய்த வாலிபரை அவரது சகோதரர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் , பெங்களூருவை அடுத்த நகாஷெட்டி ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரஜ்வல். இளைஞரான இவர் அளம் பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இதையடுத்து, இந்த சம்பவத்தை அந்த பெண் தனது சகோதரர்களிடம் கூறியுள்ளார். ,இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே பிரஜ்வலை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது என் சகோதரியை ஏன் கிண்டல் செய்தாய் என கேட்டபோது பிரஜ்வல் மற்றும் அந்த பெண்ணின் சகோதரற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர் அங்கிருந்து கட்யை அடுத்து பிரஜ்வலை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் அந்த நபர்ப பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தசம்வம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமையைவா உள்ள அந்த பெண்ணின் தங்கையை போலிஸார் தனிப்படை அமைத்து தேடிவருக்ன்றனர். சகோதரியை கிண்டல் செய்த வாலிபரை அவரது சகோதரர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ரயில் நிலைய பகுதியில் வசிக்கும் நடராஜன் – உமா தம்பதியின், மகள் நிஷாந்தி. இவர் கடந்தாண்டு 12ஆம் வகுப்பில், 529.5 மதிப்பெண் பெற்று, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வையும் எழுதியுள்ளார்.
கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த அவர், இந்தாண்டு மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், நிஷாந்தி இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நிஷாந்தியின் அறையில் கடிதம் ஒன்றை கைப்பற்றினர் அதில், பாடங்கள் தனக்கு கடினமாக இருந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், தனது தந்தை வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து இங்கேயே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இளம் பெண் ஒருவர், தனது காதலனுக்கு முன்பு, ஒரு செயலை செய்ய வெட்கப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக தற்போது அவர் வீல் சேரில் இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் விக்டோரியா டி ஃபெலிஸ். சுமார் 21 வயதாகும் இவர், சமூக வலைத்தளத்தில் மிக பிரபலமான Influencer-களில் ஒருவர் ஆவார். சுமார், 23 மில்லியன் பேர், விக்டோரியாவை இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பின்பற்றியும் வருகின்றனர்.
இந்நிலையில், தனது காதலருடன் இசை நிகழ்ச்சி ஒன்றில் விக்டோரியா கலந்து கொண்டுள்ள போது, திடீரென அவருக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உடலில் வேதனை ஏற்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக நெஞ்சு உள்ளிட்ட உடலின் மற்ற பகுதிகளில் இருந்தும், அதிக வேதனை அவருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல், விக்டோரியா சற்று அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல, வீல் சேர் ஒன்றில் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் இணையத்தில் விக்டோரியா பகிர்ந்திருந்தார். இதனையடுத்து, அந்த பெண்ணிற்கு திடீரென வேதனை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது.
அதாவது, தனது காதலன் முன்பு வைத்து ஆசன வாய் வழியே வாயு வெளியேற்ற, விக்டோரியா தயங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதனை அடக்கிய படி, நிறைய நேரம் தனது வாயுவை கட்டுப்படுத்தவே, அதுவே அவருக்கு விபரீதம் ஆகவும் அமைந்து, பின்னர் உடல் முழுவதும் வேதனை தொடங்கி, மருத்துவமனை வரை சென்று சேர்த்துள்ளது.
பொதுவாக, ஆசன வாய் வழி வாயு என்பது அனைவரது உடலில் இருந்தும் வெளியேறுவது தான். அப்படி வெளியேறுவதை சிலர் சற்று அருவருக்க விஷயமாக கண்டாலும், அதனை வெளியேற்றி அவமானம் கொள்ள வேண்டாம் என கருதும் போது, இது போன்று சில அசம்பாவிதங்கள் கூட நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
புதுச்சேரியில் நண்பர்களுடன் படகில் கடலுக்குள் சென்று குளித்த கல்லூரி மாணவன், கடலில் மூழ்கி உயிரிழிந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. புதுச்சேரி மடுவுபேட் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (19).
புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது கல்லூரி நண்பரான சோலைநகர் பகுதியை சேர்ந்த மாதேஷ் (19) உள்ளிட்ட நண்பர்கள் 12 பேருடன் சேர்ந்து கடந்த வியாழக்கிழமை மாலை கடலுக்குள் சென்று குளிக்க திட்டம்மிட்டனர்.
இதற்காக மாதேசின் தந்தைக்கு சொந்தமான படகை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு, தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கடலுக்குள் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற பின்னர் அவர்கள் கடலுக்குள் படகை நிறுத்திவிட்டு அங்கு மது அருந்தியுள்ளனர். பின்னர் அவர்களில் சிலர் கடலுக்குள் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது விக்கி உள்பட 3 பேர் கடலில் மூழ்க தொடங்கினர். இதனை பார்த்த படகில் இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்க முயற்சி செய்ததில், 2 பேரை பத்திரமாக மீட்டனர். இதில் விக்கி மட்டும் கடலுக்குள் மூழ்கினார்.
இதனை தொடர்ந்து மற்ற கல்லூரி மாணவர்கள் கரைக்கு திரும்பியதும், இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், போலிஸார் வழக்குப்பதிவு செய்து மாணவன் கடலில் மாயமானது குறித்து கடலோர காவல் படையினர் மற்றும் மீனவ கிராமங்களுக்கு தகவல் தெரிவித்து, மாணவனை தேடி வந்த நிலையில், இன்று காலை புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் மாயமான மாணவன் விக்கியின் உடல் கரை ஒதுங்கியது.
இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலிசார் உடற்கூறு ஆய்வுகாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சொந்தமாகப் படம் எடுப்பதற்காகக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வில்லன் நடிகரை போலிஸார் கைது செய்துள்ளனர். சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே உள்ள ஒரு ஜவுளி கடையில் ரூ 5 லட்சம் மற்றொரு கடையில் ரூ. 1.5 லட்சம் என அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், ஆட்டோவில் வந்து இறங்கி மர்ம நபர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து சென்றது பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் குறித்து போலிஸார் விசாரணை துவக்கியுள்ளனர். பின்னர், திருவல்லிக்கேணியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி வந்த ஆனந்த் என்றும் இவர் பெங்களூருவரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்திடமிருந்து மூன்று செல்போன்கள் ,4 லட்சம் ரொக்கம், கார், திருட்டு தொழிலுக்குத் தேவையான இரும்பு உபகரணங்கள், முகமூடி, கையுறை, தொப்பி ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர்
மேலும் கடந்த 10 ஆண்டுகளாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஆனந்த் மீது கர்நாடகாவில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட வழக்குள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சென்னை வந்து கைவரிசை காட்டும்போது ஆனந்த் சிக்கியுள்ளார். திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.
மேலும் அவர் தானே தயாரித்த ஒரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பொருளாதார பிரச்சனையால் அந்த படம் பாதியிலேயே நின்றுள்ளது. இதனால் இந்த படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக போலிஸாரிடம் ஆனந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் பாலின நிலைப்பாடுகளை தனது சொந்த வழியில் உடைத்து வருகிறார் திருமணமான பெண்! ஆம்! மீசையை பேணி வளர்க்கும் சைஜா என்ற இளம்பெண்ணின் முயற்சிக்கு கேலி பேசிய ஆண்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
கேரளா மாநிலம் கண்ணூர் சோலையாடு பகுதியில் வசிப்பவர் ஷைஜா (34). இவர் சிறுவயதாக இருக்கும் போது இவருடைய முகத்தில் அதிக அளவு முடிகள் வளர்ந்து வந்தது. அப்போது இவரை சுற்றியுள்ளவர்கள் மிகவும் கேவலமாகவும், அவமானப்படுத்தியும் உள்ளார்கள். அப்போது இவர் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார். பின்பு இவருக்கு அதுவே பழக்கம் ஆகிவிட்டதால் அதை நம்மளுக்கு பிளஸ் பாயிண்டாக மாற்றி எடுக்க வேண்டும் என வைராக்கியம் வந்துள்ளது.
அதை ஒட்டி பெண்களோ ஆண்களோ மீசை வளர்வதை குறித்து கேலியாக பேசுவதை அவர் எந்தவிதமான கவலையும் அடையவில்லை. இந்த நிலையில் இவருக்கு பாலக்காடு சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கணவரும் நீ மீசை வளர்ப்பது எனக்கு சந்தோசம் தான், நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன் என கூறி உள்ளார். லட்சுமணன் பாலக்காட்டு பகுதியில் வயரிங் தொழில் செய்து வருகிறார்.
தற்போது இந்த பகுதியில் உள்ள பெண்கள் கூட ஷைஜா வளர்க்கும் மீசையை கண்டு புகழ்ந்து வருகிறார்கள். மீசை வளர்ப்பதற்கு ஆதரவும் அளித்து வருகிறார்கள். கேலி பேசிய ஆண்களும் இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். மேலும் ஷைஜா திருப்பூர் நகரில் உள்ள பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்தும் பணம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரை இப்போது இந்த பகுதியில் ’மீசைக்காரி ஷைஜா’ என கூறி அழைத்து வருகிறார்கள்.
ஷைஜா – லட்சுமணன் தம்பதிக்கு அஷ்விகா என்ற மகள் உள்ளார். மொத்த குடும்பமும் ஷைஜாவின் மீசை முடிவுக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளனர்.
இளைஞர் ஒருவர் கட்டிபிடித்தலை தொழிலாக செய்ய, ஒரு மணி நேரம் கட்டிப்பிடிக்க இந்திய மதிப்பில் ரூ. 7000 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வரும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகில் அனைத்து விதமான மனிதனின் தேவையான விஷயங்களுக்கு கூட இயந்திரம் வந்துவிட்டது. மனிதனை உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து வேலையையும் செய்யும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது.
அந்த வகையில், மக்களின் தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கு, தொழில் வாய்ப்புகளுக்கு அடித்தளமாக அமைகிறது. சமீபகாலமாக மக்கள் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால், அவற்றிற்கான சாதாரண தீர்வுகளைக்கூட தொழிலாக மாற்ற ஆரம்பித்து விட்டனர் சிலர்.
அப்படி தான் கனடாவை சேர்ந்த 30 வயதான ட்ரெவர் ஹூடன் என்பவர் தான் கட்டிப்பிடி சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், கட்டிப்புடி சிகிச்சை, இணைப்புப் பயிற்சி மற்றும் மசாஜ்கள் வழங்கப்படுகிறது.
ஒரு மணிநேர வருமானம்
மேலும், ஒரு மணி நேர கட்டிப்பிடி பணிக்கு 75 பவுண்ட் கட்டணம் வசூலிக்கிறார். இந்திய மதிப்பில் இது ரூ. 7000 ஆகும். கட்டிப்பிடிப்பதற்கு இவ்வளவு கட்டணமா என ஆச்சர்யப்பட்டு கேட்வர்களிடம், இந்தக் கட்டிப்புடி சிகிச்சை மூலம் பல வகையில் மக்களின் மன வாழ்வு மேம்படுத்துவதாகக் கூறுகிறார் ட்ரெவர்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், முதலில் மக்களுக்கு, முன்பின் தெரியாத ஒருவர் தன்னைக் கட்டிப்பிடிப்பதில் உடன்பாடு இருக்காது. அதனால் கூச்சப்படுவார்கள். இதற்கு அவர்கள் தாங்களாகவே அன்பு காட்ட, அக்கறை காட்ட அரவணைக்க ஒரு மணி நேரம் இருக்கிறதா? என்னை சந்திக்கும் முன் கேட்டுக்கொண்டால் சரியாகிவிடும் என தெரிவிக்கிறார்.
மேலும், இந்த அரவணைப்பு தெரபி பற்றி இன்னமும் மக்களிடம் விழிப்புணர்வு தேவை, பலர் இதனை பாலியல் தொழில் என தவறாகப் புரிந்து கொள்கின்றனர் எனக் கூறுகிறார்.
சின்ன சேலம் அருகே பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதான அறிகுறிகள் இல்லை எனவும் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் தகவல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி இறந்து விட்டதாக கடந்த 13ஆம் தேதி காலை பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாணவி 12 ஆம் தேதி இரவு பத்து மணியளவில் இறந்துள்ளார். மாணவி தற்கொலையே செய்துகொண்டிருந்தாலும் அப்போதே பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் மறுநாள் காலை வரை ஏன் தாமதிக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுக்கிறது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் கழுத்தில் உள்ள காயங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
3வது மாடியிலிருந்து மாணவி குதித்ததாக காட்டப்பட்ட இடத்தில், குதித்ததற்காக எந்த தடயங்களும் இல்லை எனவும் சம்பவ இடத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, மாணவி கைப்பட எழுதியதான கடிதம் சிக்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, மாணவியின் தாய் பேசும்போது, என் மகள் எழுதாத கடிதத்தை எழுதியதாக பள்ளி நிர்வாகம் காட்டுகிறது. இதை ஒரு தற்கொலை வழக்காக முடிக்க பள்ளி நிர்வாகம் முயல்கிறது என அவர் கதறினார்.
உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் இரண்டாவது நாளாக மறுத்து வரும் நிலையில், தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர். குரோம்பேட்டை பச்சை மலை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் கிஷோர் (21). இவர் ஒரு பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது. இவர் காதலித்த பெண்ணிற்கு 16 வயதே நிரம்பியுள்ள நிலையில் பள்ளியில் படித்து வரும் அவரை திருமணம் செய்து வைக்க கோரி தனது தாயாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் பள்ளி படித்து வருவதால் சில ஆண்டு காலம் தனது மகனை காத்திருக்க சொல்லியுள்ளார்.
மேலும், தான் காதலித்து வரும் 16வயதே நிரம்பிய பள்ளி மாணவியை திருமணம் செய்து வைக்க முடியாது என தனது தாய் கூறியதில் ஆத்திரமடைந்த கிஷோர் குரோம்பேட்டை பச்சை மலை அருகே உள்ள உயர் மின்னழுத்த மின் கம்பியின் உச்சியில் ஏறி நின்றுக் கொண்டு, காதலித்த பெண், மற்றும் தனது தாயை வர வைக்க வேண்டும் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி கிஷோரை பத்திரமாக கீழே இறக்கி மீட்டனர்.
மேலும், தற்கொலை மிரட்டல் விடுத்த கிஷோரிடம் குரோம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க கோரி இளைஞர் ஒருவர் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியில் தமிழக அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி படுகாயம். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு தமிழக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை பகுதியை கடக்கும்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பூவார் பகுதியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி அஜிதாவின் வாகனத்தில் பேருந்து மோதியது.
பேருந்து மோதிய வேகத்தில் அஜிதா தனது வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பேருந்து சக்கரத்தின் அருகே அஜிதா விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த அஜிதாவை அப்பகுதி மக்கள் நெய்ய்யாற்றின் கரை அரசு தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பேருந்து மோதி கீழே விழுந்து அஜிதா நூல் இழையில் உயிர் தப்பிய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் அமித். இவர் அங்குள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அமித் தன்னுடைய வீட்டில், பிட் புல் வகை நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார்.
மற்ற நாய்களை விட சற்று ஆபத்து நிறைந்த இந்த பிட் புல் நாயை வீட்டில் வளர்க்க வேண்டாம் என அக்கம்பத்தினர், அமித்தை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கூறியது எதையும் கேட்காமல், பிட்புல் நாயை அமித் வளர்த்து வந்துள்ளார். மேலும் தனது நாய்க்கான உணவு உள்ளிட்டவற்றை கொடுத்து, அதனை சிறந்த முறையில் அமித் பராமரித்தும் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், வழக்கம் போல காலையில் தனது ஜிம்முக்கும் அமித் சென்றுள்ளார். அந்த சமயத்தில், அமித்தின் தாயாரான சுசீலா திரிபாதி (வயது 82), மொட்டை மாடியில் காய போட்ட துணிகளை எடுப்பதற்காக அங்கே சென்றுள்ளதாக தெரிகிறது.
அந்த சமயத்தில், அவர் சற்றும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் அங்கே நிகழ்ந்துள்ளது. தனது மகன் ஆசை ஆசையாக வளர்த்து வந்த பிட்புல் நாய், திடீரென சுசீலா மீது பாய்ந்து அவரது முகம், கழுத்து உள்ளிட்ட உடலின் பல பகுதியில் கடித்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதன் பெயரில், வலி தாங்க முடியாமலும் சுசீலா அலறி துடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக அவரது வீட்டின் அருகே உள்ள வீடுகளில் யாரும் இல்லாததால், உதவிக்கு கூட உடனே யாரும் வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், பிற்பகல் 11 மணிக்கு மேல் வீடு திரும்பியுள்ளார் அமித். அப்போது வீட்டில் இல்லாத தனது தாய் சுசீலாவை தேடி, மொட்டை மாடிக்கு சென்ற அமித்திற்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ரத்த வெள்ளத்தில் ஒரு பக்கம் தாய் கிடக்க, மறுபக்கம் பிட்புல் நாய் அமர்ந்திருப்பதையும் அவர் பார்த்து கதறி துடித்துள்ளார்.
உடனடியாக, தனது தாய் சுசீலாவை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார் அமித். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். தான் செல்லமாக வளர்த்து வந்த நாயே தனது தாயாரின் உயிர் போக காரணமாக இருந்ததால், கதறி அழுதார் அமித். பின்னர், தனது தாயின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு, தனது நாயையும் மாநகராட்சி வேனில் ஏற்றி விட்டார்.
பம்பாய்’ படத்தின் “ஹம்மா ஹம்மா” பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சோனாலி பிந்த்ரே’காதலர் தினம்’ படத்தில் ரோஜாவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமடைந்த இவர், அண்மையில் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்று, தான் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் அந்த பதிவில், “4 ஆண்டுகளுக்குப் பிறகு.. இதே நாற்காலி, இதே பார்வை, இதே இடம்.. முழுமையான பயத்திலிருந்து தொடர்ந்த நம்பிக்கை வரை, பல மாறிவிட்டது, சில இன்னும் மாறாமல் அப்படியே இருக்கின்றன..
தான் இதே இடத்திற்கு மீண்டும் வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை” என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித இதனைத் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கம் முன்வைத்துள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படாது
உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை நாளொன்றுக்கு முன்னர் நூற்று நாற்பத்தைந்து டொலர்களாக இருந்த நிலையில் இன்று அதன் விலை 104 டொலர்களாக குறைந்துள்ளதாகவும் இதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வரிகளையும் வசூலித்ததன் பின்னர், 92 ஒக்டேன் பெற்றோலின் விலையை தற்போதுள்ள விலையில் இருந்து 110 ரூபாவால் குறைக்க முடியும் எனவும், 95 லீற்றர் பெற்றோல் 120 ரூபா அல்லது அதற்கும் குறைவாக வழங்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 120 ரூபாவினாலும் குறைக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த குறைப்புக்கள் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டத்தையும் ஏற்படுத்தாது என ஆனந்த பாலித மேலும் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.