மாணவியின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை? திசை மாறும் மாணவியின் வழக்கு!!

திருச்சியில்..

திருச்சி கல்லூரி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மாணவியின் பெற்றோர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கல்லூரி மாணவி வாயில் விஷம் ஊற்றி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்ற கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர்.

திருவரம்பூர் நொச்சி வயல் புதூர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் அவரது மனைவி சாந்தி இவர்களின் மகள் வித்யா லட்சுமி (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மே 13 அன்று உடல்நிலை சரியில்லாததால் மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றபோது, மூன்று பேர் என்னிடம் தகராறு ஈடுபட்டு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து எனது வாயில் ஊற்றிவிட்டனர் என தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மே 23 அன்று மாணவி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இந்நிலையில், மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தனர். அதில், தனது மகளின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி பிரேதத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அப்போது ஆட்சியராக இருந்த சிவராசு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதனால் பிரேதத்தை பெற்று அடக்கம் செய்தோம்.

ஆனால், தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கைது செய்யாமல் உள்ளனர் எனவே திருவரம்பூர் சரக டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டால் நியாயம் நீதி கிடைக்காது என்பதால் எனது மகளின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மாணவியின் இறப்பு வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி கூறியதாக வெளியான தகவல் வேறு மாதிரியாக இருந்தது. அதாவது, மாணவிக்கு வாலிபருடன் காதல் ஏற்பட்டு பின்னர் உண்டான சண்டையினால்,

மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் மாணவியின் உடலில் எலி மருந்து சாப்பிட்டதான அறிகுறிகள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த விசாரணை தற்போது எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியவில்லை.

கிணற்றில் சடலமாக மிதந்த 17 வயது பள்ளி மாணவன் : பின்னணி என்ன?

தமிழகத்தில்..

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூரின் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை தெருவில், பள்ளி மாணவர் ஒருவரது சடலம் மிதப்பதை சிலர் பார்த்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், தீயணைப்பு துறையின் உதவியுடன் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் மாணவரின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குறித்த மாணவரின் பெரிய சூரியப்பிரகாஷ்(17) என்பதும், அவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

மேலும், அரக்கோணம் அருகே உள்ள தணிக்கை போளூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவரின் மகனான சூரியபிரகாஷ், நேற்றைய தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.

மதியம் பள்ளி முடிந்ததும், சக மாணவர்களுடன் விவசாய கிணற்றில் குளிக்க சென்ற அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் மாணவர் சூரியப்பிரகாஷ் நீச்சல் தெரியாமல் கிணற்றில் மூழ்கி இறந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்கிற கோணத்திலும் பொலிசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

காதலுக்காக சத்திர சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் : கடைசியில் காத்திருந்த சோகம்!!

திண்டுக்கலில்..

தான் காதலித்து வந்த பெண்ணிற்காக, ஆணாக பெண் ஒருவர் மாறிய நிலையில் அதன் பின்னர் நடந்த சம்பவம், கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை அடுத்த பழைய வத்தலகுண்டு என்னும் இடத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகள் சவுமியா.

இவருக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகள் நந்தினி தேவி என்பவருக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல சவுமியா மற்றும் நந்தினி தேவி ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், இருவரும் இணைந்து வாழவும் முடிவு செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல், சவுமியாவிற்காக ஒரு ஆணாகவும் தன்னை மாற்றிக் கொள்ள நந்தினி தேவி முடிவு செய்துள்ளார்.

தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தன்னை ஆணாக மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சை ஒன்றையும் நந்தினி தேவி எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் தனது பெயரையும் நந்தினி தேவி என்பதில் இருந்து, யஷ்வந்த் என்றும் மாற்றி உள்ளார்.

இதனையடுத்து, யஷ்வந்த் என்கிற நந்தினி தேவியும், சவுமியாவும் கோவில் ஒன்றில் வைத்து திருமணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவரும் தனியாக வாடகை வீடு ஒன்றையும் எடுத்து வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றி தகவலறிந்த சவுமியாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள், இருவரையும் பிரித்து, சவுமியாவை அழைத்து சென்றுள்ளனர்.

இதனால், தனது மனைவி சவுமியாவை மீட்டுத் தர வேண்டுமென போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார் யஷ்வந்த் என்கிற நந்தினி தேவி. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சவுமியாவுக்கு யஷ்வந்த்துடன் வர விருப்பம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால், நிச்சயம் சவுமியா அப்படி சொல்லி இருக்க மாட்டார் என்றும், குடும்பத்தின் வற்புறுத்தலால் அவர் அப்படி சொல்லி இருப்பார் என்றும் யஷ்வந்த் குறிப்பிட்டுள்ளார். அதே போல, தன்னுடைய காதலிக்காக ஆணாக மாற அறுவை சிகிச்சை கொண்ட யஷ்வந்த் என்கிற நந்தினி தேவியின் ஆயுட்காலம், 35 முதல் 40 ஆண்டுகளாக குறைந்துள்ளதாகவும், உயிரை பயணம் வைத்து சேர்ந்து வாழ ஆசைப்பட்டதாகவும் யஷ்வந்த் கூறியுள்ளார்.

அதே போல, தன்னை நேரில் வந்து சந்தித்தால், நிச்சயம் தன்னுடன் சவுமியா வந்து விடுவார் என யஷ்வந்த் தெரிவித்துள்ளார். தாங்கள் ஒன்றாக வாழ உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கணவன் இறப்புச் செய்தி கேட்டு உயிரை விட்ட மனைவி : தம்பதிகள் உடலை ஒன்றாக அடக்கம் செய்த உறவினர்கள்!!

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறையில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழந்ததால் கிராமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழே காலனியைச் சேர்ந்தவர் குணசீலன் (74). இவருடைய மனைவி தமிழரசி ( 68). இந்த தம்பதிக்குத் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது.

இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் குணசீலன் உயிரிழந்தார். இவரின் இந்த இறப்புச் செய்தியைக் கேட்ட மனைவி தமிழரசி சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தம்பதிகள் இருவரது உடலும் ஒன்றாகவே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா விசா நிராகரிக்கப்பட்டதால் கணவர் குடும்பம் துன்புறுத்தல் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

கனடாவில்..

கனடாவுக்குச் சென்ற இந்தியப்பெண் ஒருவரின் கணவருடைய விசா நிராகரிக்கப்பட்டதால் அவரது கணவர் வீட்டார் அவரைத் துன்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

பஞ்சாபிலுள்ள Moga மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்பிரீத் (Jaspreet Kaur, 28) என்ற இளம்பெண்ணை அவரது கணவர் வீட்டார், மாணவர் விசாவில் கனடாவுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். அவர் கனடா சென்றதும் அவரது கணவரான குர்மீத் (Gurmeet Singh) ஐயும் கனடாவுக்கு அழைத்துக்கொள்வது அவர்கள் திட்டம்.

ஆனால், தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக குர்மீத்தின் விசா மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஹஸ்பிரீத்தின் கணவர் வீட்டாருடைய நடவடிக்கைகள் தலைகீழாக மாறியுள்ளன.

 

உடனடியாக இந்தியாவுக்கு வருமாறு ஜஸ்பிரீத்தை வற்புறுத்திய அவர்கள், அவர் தனது பெற்றோரிடமிருந்து 35 இலட்ச ரூபாய் வாங்கிவரவேண்டுமென அவரை வற்புறுத்தியுள்ளார்கள். அந்த பணத்தை வைத்து தம்பதியர் ஸ்பெயினுக்குச் செல்லலாம் என்றும், இலையென்றால் விவாகரத்துக்கு சம்மதிக்குமாறும் அவர்கள் ஜஸ்பிரீத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.

கனடாவின் பிராம்ப்டனில் வாழ்ந்துவந்த ஜஸ்பிரீத், இம்மாதம் 21ஆம் திகதி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஜஸ்பிரீத்தின் கணவர் வீட்டார் துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என குற்றம் சாட்டியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.

ஜஸ்பிரீத்தின் சகோதரரான ரஜ்வீந்தர் (Rajwinder Singh Khai), தன் சகோதரியின் உடல் இந்தியா வருவதற்காக காத்திருப்பதாகவும், அதற்குப் பின் பொலிசாரிடம் இந்த விடயம் தொடர்பாக புகாரளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவி தற்கொலை : அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்!!

விருத்தாசலத்தில் ..

விருத்தாசலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட ஆயியார் மடம் தெருவில் வசிக்கும் கோபி என்பவரது 17 வயது மகள் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வீட்டிற்கு வந்த மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்காமல் இறுதி சடங்கை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சரியாகப் படிக்கமுடியவில்லை என்பதாலும் அதனால் பெற்றோர் சரிவர தன்னிடம் பேசாமல் இருப்பதாலும்மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாக கடிதத்தில் மாணவி எழுதி வைத்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், மாணவி மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில் போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் கள்ளக்குறிச்சியிலும், திருவள்ளூரிலும் தற்போது விருதாச்சலத்திலும் அடுத்தடுத்து பள்ளி மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் மிகுந்த சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்து 25 நாளில் புதுமண தம்பதிக்கு நடந்த பரிதாபம் : தந்தையின் கொடூர செயல்!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடியில்  காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி  வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50).  இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியின் மகள் ரேஸ்மா (19). இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

அதேஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (28). வெளிநாட்டில் வேலை பார்த்த மாணிக்கராஜ் ஊருக்கு திரும்பி கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

முத்துக்குட்டி, மாணிக்கராஜ்-க்கு மாமா முறை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணிக்கராஜ்-க்கும், ரேஸ்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மாணிக்கராஜ் உறவுக்காரர் என்றாலும் மது பழக்கத்தால் வேலைக்கு சரிவர செல்லாமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

மாணிக்கராஜ்,ரேஷ்மாவிற்கு இடையே வயது வித்தியாசம் இருந்துள்ளது. மேலும் மாணிக்கராஜ் படிக்கவில்லை என்பதால் ரேஷ்மா தந்தை முத்துக்குட்டி இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மகள் பிடிவாதமாக இருந்ததால்  முத்துக்குட்டி வேறொரு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்கவும் முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த மாதம் 28ஆம் தேதி ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேறினார்.  மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் மதுரை திருமங்கலத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில் தனது மகளை காணவில்லை என்று கூறி எட்டயபுரம் காவல் நிலையத்தில் முத்துக்குட்டி புகார் அளித்துள்ளார். போலீசார் தங்களை தேடுவதை தெரிந்து கொண்ட தம்பதியினர், திருமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி தாங்கள் திருணம் செய்து கொண்டதை தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் எட்டயபுரம் காவல் நிலையம் போலீசார் மூலம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க நினைத்திருந்த நிலையில் இப்படி திருமணம் செய்து விட்டதாக ரேஷ்மாவின் பெற்றோர் வேதனைபட்டு கூறியது மட்டுமின்றி, எந்த காலத்திலும் தனது மகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியதாக தெரிகிறது.

ரேஷ்மாவின் பெற்றோரின் கோபம் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தெரிய வர போலீசார் மாணிக்கராஜ் – ரேஷ்மா தம்பதியை தொடர்பு கொண்டு தற்பொழுது ஊருக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் மாணிக்கராஜ்விற்கு அங்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஊருக்கு திரும்புவோம், நான் என்னுடைய பெற்றோர்களிடம் பேசி சமதானம் செய்து விடுவேன் என்று ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

இதையெடுத்து தான் அந்த தம்பதில் ஊருக்கு திரும்பியுள்ளனர். சில உறவினர்கள் மூலமாக ரேஷ்மா தனது பெற்றோருடன் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் விவசாயம் மற்றும் 100 நாள் வேலைக்கு சென்று விட மாணிக்கராஜ் – ரேஷ்மா இருவரும் தனியாக இருந்த போது, ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி அவர்களை இருவரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியதாகவும், அதற்கு முன்பாகவே அவரது மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தம்பதியின் உடல்களை மீட்டு, உடற்கூறாய்வுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் தம்பதியை கொலை செய்த வழக்கில் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, தாய் மகாலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

யாழில் வயோதிப பெண்ணை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 15 வயதுச் சிறுவன்!!

யாழில்..

வயோதிப பெண்ணொருவரை 15 வயது சிறுவன் கடத்தி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டு பகுதிக்குள்,

63 வயதுடைய வயோதிப பெண்ணொருவரை 15 வயது சிறுவன் கடத்தி சென்று வன்புணர முயன்றுள்ளான். இதன்போது குறித்த வயோதிப பெண் தப்பித்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் இன்றையதினம் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் பலவந்தமாக இறக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞன்!!

தனிஸ் அலி..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து குடிவரவு அதிகாரிகளால் கீழ் இறக்கப்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற தனிஸ் அலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் துபாய் செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலைங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!!

பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு..

சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க மற்றும் வெறுப்புணர்ச்சியுடன் Comment செய்தால் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் ஊடாக வெறுக்கத்தக்க மற்றும் வெறுப்புணர்ச்சியுடன் பதிவுகள் மற்றும் கருத்துக்களை பரப்பியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

23ஆம் திகதியன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பில் வெளியிடப்பட்ட விளம்பரம் தொடர்பில் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி,

பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்ட நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மாகாண கணினி குற்றப் புலனாய்வு உப பிரிவினரால் விசாரிக்கப்பட்டு நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

காலி மாவட்டம், கோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனது பேஸ்புக் கணக்கில் மற்றுமொருவர் வெளியிட்ட விளம்பரத்திற்கு தீங்கிழைத்த மற்றும் வெறுப்புணர்ச்சியுடன் Comment செய்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஜூலை 18ஆம் திகதி அறிவிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளுக்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இலங்கையில் சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

இலங்கையில் சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளன.

அதன்படி இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதன் காரணமாக தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என வங்கிகள் அறிவித்துள்ளன.

குறிப்பாக இணையவழி மூலமாக வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வோருக்கு இந்த எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இணையவழி பரிவர்த்தனையாளர்கள்,

1. குறுஞ்செய்தி ஊடான வங்கி நடவடிக்கைகளை செயற்படுத்திக் கொள்ளல்.

2. இணையவழி பரிவர்த்தனை வசதிகளை உபயோகிப்போர் Two-Factor Authentication முறையை செயல்படுத்தல்.

3. அடிக்கடி கடவுச்சொல்லை மாற்றுதல்.

4. இணையவழி வங்கி முறைமை பாவனையின் போது பாதுகாப்பான இணையத்தளத்தை பாவித்தல்.

5. VPN ஊடாக இணையவழி வங்கி முறைமையை பயன்படுத்துவதை தவிர்த்தல்.

6. அங்கீகரிக்கப்படாத இணையத்தளங்கள் ஊடாக இணையவழி வங்கி முறைமையை உபயோகிப்பதை தவிர்த்தல்.

7. தனிப்பட்ட Username, கடவுச்சொல் மற்றும் OTP Number போன்றவற்றை யாருடனும் பகிராதிருத்தல்.

8. தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்தால், உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு அறிவித்தல்.

கடனட்டை (Credit Card) மற்றும் டெபிட் கார்டுகள் (Debit Card) பயன்படுத்துபவர்கள்,

1. கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் PIN எண்களை யாரிடமும் யாருடனும் பகிராதிருத்தல்.

2. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறுஞ்செய்தி பெற்றுக்கொள்ளும் நடைமுறையை செயற்படுத்தல்.

3. பணம் மீறப்பெறல் அல்லது அட்டை பாவனையின் பொது தெரியாத நபர்களிடம் உதவிகள் பெறுவதை தவிர்த்தல்.

4. வர்த்தக தளங்களில் அட்டைகள் தொடர்பான விபரங்கள் பதிவு செய்வதை தவிர்த்தல்.

5. VPN ஊடாக இணையவழி மூலமாக குறித்த அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதை தவிர்த்தல்.

குடிபோதையில் ஆட்டம் போட்ட பிரபல நடிகரின் மகள் : ரசிகர்கள் விளாசல்!!

சினிமா..

பொதுவாக சினிமா நடகர் எது செய்தாலும் உடனே அது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகிவிடும். அதுவும் நடிகர்களின் வாரிசுகள் எதாவது செய்தால் அதை விட மிகபெரிய சர்ச்சை தான்.

அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், கஜோல் ஆகியோரின் மகள் நைசா தேவ்கன் தற்ப்போது குடிபோதையில் வீடியோ ஒன்றைவெடடவேளியிட்டி இருக்கிறார்.

வெளிநாட்டில் நண்பர்கள் உடன் பார்டிக்கு சென்ற அவர் இப்படி செய்திருப்பதை நெட்டிசன்கள் பார்த்து விளாசி தள்ளி வருகின்றனர். குடிபோதையில் ஆடும் அவரை கமெண்டில் நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

எங்ககிட்ட அவ்வளவு காசு இல்ல சார்… 12 வருஷமா வேதனையுடன் தவித்த சிறுமி : நடந்த அதிசயம்!!

சிறுமிக்கு..

12 வருடங்களாக கழுத்து வலியுடன் போராடிவந்த பாகிஸ்தான் சிறுமிக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியிருக்கிறார் இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர். இது உலகம் முழுவதும் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் அஃப்ஷீன் குல். இவர் 10 மாத குழந்தையாக இருந்தபோது துரதிஷ்ட வசமாக ஏற்பட்ட விபத்தில் இவருடைய கழுத்து 90 டிகிரிக்கு திரும்பிவிட்டது.

உடனடியாக மருத்துவர்களிடம் தனது மகளை அழைத்துச்சென்றுள்ளனர் சிறுமியின் பெற்றோர். ஆனால், நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது. சிகிச்சைக்கு பணம் இல்லாததால் பெற்றோர்கள் தவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமிக்கு பெருமூளை வாதமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கல்விகற்க முடியாத சூழ்நிலைக்கு சிறுமி தள்ளப்படவே பெற்றோர்கள் கலங்கிப்போயினர். 12 வருடங்களாக இந்த சிரமங்களுடன் சிறுமி போராடி வந்த நிலையில், ஆன்லைன் மூலமாக சிகிச்சைக்கு பணம் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நல்ல மனம் கொண்டோர் அஃப்ஷீனின் நிலையை கண்டு பணம் அளிக்கவே, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமி மற்றும் அவரது சகோதரர் யாக்கூப் ஆகியோர் இந்தியா வந்திருக்கின்றனர்.

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர் ராஜகோபாலன் கிருஷ்ணன் கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர் 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்படவேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் சிறுமிக்கு முக்கிய அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது.

6 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது. இதனால் சிறுமி அஃப்ஷீன் தற்போது பேச துவங்கியுள்ளதாக ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார் யாக்கூப்.

இதுபற்றி அவர் பேசுகையில்,”அறுவை சிகிச்சையின்போது சிறுமியின் இதயம் அல்லது நுரையீரல் நின்றுபோகலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், நல்லபடியாக சிகிச்சை முடிவடைந்தது. அஃப்ஷீன் எங்களுடைய தேவதை. தற்போது அவளால் சிரிக்கவும் பேசவும் முடிகிறது. மருத்துவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நாங்கள் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.

சிறுமிக்கு இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் மருத்துவர் ராஜகோபாலன் கிருஷ்ணன். மேலும், ஒவ்வொரு வாரமும் ஸ்கைப் மூலமாக சிறுமி அஃப்ஷீனின் உடல்நிலை குறித்து அவர் விசாரித்துவருகிறார். இதனிடையே பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

நடிகை கத்ரீனா கைஃப் – விக்கி கெளஷல் ஜோடிக்குக் கொலை மிரட்டல்!!

நடிகை..

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், அவர் கணவர் விக்கி கெளஷல் ஆகியோருக்குக் கடந்த சில தினங்களாக மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தார்.

அதோடு கத்ரீனா கைஃப்பை பின் தொடர்ந்து, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விக்கி கெளஷல் சாந்தாகுரூஸ் போலீஸில் புகார் செய்தார்.

அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சாந்தாகுரூஸ் போலீஸ் அதிகாரிகள், “கடந்த சில நாள்களாக சமூக வலைதளம் மூலம் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாக நடிகர் விக்கி கெளஷல் தெரிவித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்ததோடு, கத்ரீனா கைஃப்பை பின் தொடர்ந்து சென்றும் மிரட்டல் விடுத்ததாக தன்னுடைய புகாரில் தெரிவித்திருக்கிறார்.

அதனடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். ஆனால், கைதுசெய்யப்பட்ட நபர் யார் என்ற விவரத்தை போலீஸார் இன்னும் வெளியிடவில்லை.

அவரிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கத்ரீனா கைஃப், விக்கி ஜோடி சமீபத்தில் மாலத்தீவுக்கு பிக்னிக் சென்றனர். அங்கிருந்தபோது மிரட்டல் வந்ததா என்று தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அதோடு நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு கடந்த மாதம் கொலை மிரட்டல் கடிதம் வந்தது. மும்பை அந்தேரி ஜுவில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அது குறித்து ஸ்வரா போலீஸில் புகார் செய்தார். நடிகை கங்கனா ரனாவத்துக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எருமை மீதான காதலால் இளம்பெண்ணின் விபரீத முடிவு!!

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள குரோனா கிராமத்தைச் சேர்ந்த பைனி கெவாட் 3 எருமை மாடுகளை வளர்த்து வந்தார். இவரது மகள் ரஜினி எருமை மாடுகளுக்கு தீவனம் கொடுப்பது முதல் தண்ணீர் ஊற்றுவது வரையிலான வேலையை செய்து வந்தார்.

எருமை மாடுகள் மீது அதிக பாசம் கொண்ட ரஜினி, பெரும்பாலான நேரத்தை அவற்றுடன் கழித்தார். ஜூலை 8 ஆம் தேதி எருமை மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அது திரும்பி வரவில்லை என்றும் தந்தை கூறினார்.

எருமை மாட்டை இழந்ததால் சோகமான ரஜினி கடந்த ஜூலை 20ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும்போது உயிரிழந்த இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் ராஜாபூர் தாலுகா திர்மலாபூர் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(25) என்பவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரது கணவர் பிரசாந்த், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த மருத்துவமனையில் ஜெயஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை ஜெயஸ்ரீ தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார்,

சம்பவயிடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட தகவலில் இந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது