சிறுமி ஒருவர் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு தலை முடியை சீவ முடியாமல் இருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லைலா டேவிஸ் என்ற சிறுமிக்குத் தலை முடி குறைபாடு இருக்கிறது. இதனால் இந்த சிறுமியின் தலை முடியை சீவ முடியாதாம்.
இந்த அரிய வகை நோயின் பெயர் Uncombable hair syndrome என்ற குறைபாடு எனக்கூறியுள்ளனர். அந்த சிறுமியின் தலைமுடி முடி பொன்னிறமாக ராக் ஸ்டார் போல எழுந்து நிற்கின்றன.
மேலும், உலகின் நூறு குழந்தைகளில் ஒருவருக்கு தான் இந்த குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை இது முடி தண்டுகளின் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள மரபணுக்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய அச்சிறுமியின் தாய், அவளுக்குத் தலை முடி தொடர்பான குறைபாடு இருந்தாலும், மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறாள். நாங்கள் லைலாவை அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்துச் செல்லும் போது, இவளை பார்க்கும் மக்கள் போரிஸ் ஜான்சன் போல் இருப்பதாகக் கூறுவார்கள்.
மேலும், சில நேரங்களில் அவள் தலை முடி ஐன்ஸ்டீன் போல இருக்கும் , லைலாவுக்கும் இந்த தோற்றம் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார். தற்போது இச்சிறுமியின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் சோலப்பூரில் உள்ள சதான்சன் நகரை சேர்ந்த ஓர் திருநங்கை, தன்னை கட்டாயப்படுத்தி திருநங்கையாக மாற்றிவிட்டதாக திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட திருநங்கை கூறுகையில், “எனக்கு 26 வயது ஆகிறது.
நான் கடந்த 6 ஆண்டுகளாக திருநங்கையாக வாழ்ந்து வருகிறேன். நான் நகரப்பகுதிகளில் பிச்சை எடுக்கும் பணம் அனைத்தையும் தினம்தோறும் அடித்துத் துன்புறுத்தி என்னை பாலினமாற்றம் செய்த நபர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள்.
புனேவில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று எனக்கே தெரியாமல், திருநங்கையாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்துவிட்டார்கள். என்னோடு சேர்த்து பல திருநங்கைகள் இப்படி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி பாதிக்கப்படும் காணொலி திருநங்கைகளின் வாட்ஸ்அப் குரூப்பில் வெளியிட்டும் இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை’’ என்றார்.
அதிக எடை கொண்ட வாகனங்களை 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியே ஓட்டி சாதனை படைத்து வருகிறார்.கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த பி.ஜி.அன்சாலன் – பாலக்காடு மாவட்ட கூடுதல் நீதிபதி ஸ்மிதி ஜார்ஜ் தம்பதிக்கு ஆன் மேரி அன்சாலன் என்ற மகள் உள்ளார்.(வயது 21).
எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவர் வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். தனது 15 வயதில் தனது தந்தையின் அதி கணம் கொண்ட ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி, அந்த பகுதியில் வெகுவாக வலம் வந்திருக்கிறார்.
தற்போது 21 வயதுடைய இவர், இருசக்கர, மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று அனைத்து வாகனத்தையும் ஓட்ட வேண்டும் என்று எண்ணியுள்ளார். அந்த வகையில், அண்மையில் பேருந்தை ஓட்டி சந்தித்துள்ளார். இந்த பேருந்தை தனது அண்டைவீட்டு பேருந்து ஓட்டுநர் ஒருவரிடம் கற்றுக்கொண்டிருக்கிறார்.
அவரிடம் கற்றுக்கொண்ட வித்தைகள் வீணாக போகாமல் இருக்க, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை, சம்பளம் எதுவும் பெறாமல், இலவசமாக ஒரு தனியார் பேருந்தை இயக்கி வருகிறார்.
இதற்காக இவரது பெற்றோர்கள், குடும்பத்தினர் இவரை வெகுவாக ஊக்குவிக்கின்றனர். தற்போது பைக், கார், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனத்தை ஓட்டும் இவர், விரைவில் அதிக கணம் கொண்ட வண்டியை ஓட்டுவதற்கு திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதன்படி தனது 22-வது பிறந்தநாளிற்குள் JCB-ஐ ஓட்டும் எண்ணம் கொண்டுள்ளார்.
இது குறித்து மாணவி கூறும்போது, பேருந்தை தான் இயக்கும்போதெல்லாம் ஒரு பெண் தங்களை முந்தி செல்வதாக எண்ணி, பல ஓட்டுநர்கள் தன்னிடம் சண்டை போட்டுள்ளதாகவும், இருப்பினும் தான் அசரவில்லை என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
21 வயது இளம்பெண் ஒருவர், அதிக எடை கொண்ட வாகனத்தை தனியே ஓட்டி சாதனை படைத்தது வருவது அவரது பெற்றோர்களுக்கும், அந்த ஊர் மக்களுக்கும் பெருமை சேர்க்கிறது. மேலும் ஆன் மேரியை அந்த ஊர் மக்கள் அனைவரும் ஊக்குவிக்கும் வகையில் பாராட்டி வருகின்றனர்.
சென்னையில் நாளை நடக்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைமாத கர்ப்பிணியான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற ஹரிகா கலந்துகொள்ளவிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடந்தாலும், செஸ் போட்டியின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த போட்டியில், உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடியில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை நடக்கவிருக்கும் செஸ் போட்டியில், இந்தியா சார்பில் 6 அணிகள் களமிறங்குகின்றன. அதில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்/வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர்.
இந்த போட்டியில் பெண்கள் சீனியர் பிரிவில் இருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் துரோணவள்ளி ஹரிகா (வயது31) தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள மிகவும் ஆர்வத்துடன் களத்தில் இறங்கியுள்ளார்.
தற்போது உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ஹரிகா, தனது 9 மற்றும் 10 வயதிலே தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டங்களை வென்றார். கடந்த 2008 ஆம் ஆண்டு இவரது சாதனையை கெளரவிக்கும் விதமாக ஒன்றிய அரசு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கெளரவித்தது.
இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த செஸ் போட்டியில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் பெற்றதோடு, 2012, 2015, 2017-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹரிகா மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இவரது இந்த தொடர் சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
இந்த நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஹரிகா, சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள மிகவும் முனைப்போடு அதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். எனவே ஹரிகாவுக்கு தேவையான சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த போட்டியில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடும் நிலை உள்ளதால், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஹரிகா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் இவர் வெற்றிபெற பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக காணப்படுகிறது.
இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ள நிலையில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற, தென்னிந்தியாவை சேர்ந்த ஹரிகா இந்த தொடரில் இந்தியாவுகு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் தேசிய பூங்கா ஒன்றிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர் மாயமான நிலையில், தற்போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை, சச்சின் (Sachin Kadam, 42) தனது நண்பர்களுடன் Elk Island தேசிய பூங்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவரும் மற்றொரு நண்பருமாக நின்றபடி துடுப்புப் போடும் paddle boarding என்ற விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
அப்போது நண்பர் பார்க்க முடியாத தொலைவுக்குச் சென்றுவிட்டிருக்கிறார் சச்சின். அதற்குப் பிறகு சச்சினை யாரும் பார்க்கவில்லை. சச்சின் தன் மனைவி மற்றும் மகளுடன் 2014ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடா வந்துள்ளார்.
கடின உழைப்பாளியான சச்சின், தன் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையும் நண்பர்கள் மீது ஆழ்ந்த நட்பும் கொண்டவராம். சச்சினுடைய இழப்பு, அவரது மனைவி, இளவயது மகள் மற்றும் நண்பர்களை கடும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கடலூரில் அண்ணனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த தம்பி உட்பட 6 பேர் அதிரடியாக கைது. கடலூரில் அண்ணனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த தம்பி உட்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை பிடாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பு என்கிற கண்ணன் (26). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ். வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணனை சுத்துபோட்டு சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த அவரது நண்பர்களுக்கும் வெட்டு விழுந்தது.
இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த கொலை குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகளை அமைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்தத சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், கண்ணனின் நண்பர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கண்ணனை கொலை செய்தது எம்.புதூர் புதுநகர் பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அச்சிறுவனின் அண்ணன் காமராஜை கண்ணன் கடந்த 2020-ம் ஆண்டு கொலை செய்ததாகவும்,
அதற்கு பழிவாங்கும் நோக்கில் தனது அக்கா கணவர் உட்பட 4 பேருடன் சேர்ந்து கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பழக்க வழக்கங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில் நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளரும் மருத்துவ உதவிகள் தொடர்பிலான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நேற்று (செவ்வாய்கிழமை) 119 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்ததுடன், கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்குப் பிறகு கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் மக்களிடம் கோரியுள்ளனர்.
வவுனியா மாவட்ட சுகாதார பணியாளர்களுக்கென விசேட தினத்தில் தனியொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சுகாதார பணியாளர்களினால் இன்று (27.07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வைத்தியசாலை பணியாளர்களிற்காக விசேட தினத்தில் தனியொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த செயற்பாடானது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டதுடன், பொதுமக்களின் வரிசையின் ஊடாகவே எரிபொருளினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. இதனால் தமது கடமைக்கு உரிய நேரத்திற்கு செல்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் இந்நிலை மாற்றப்பட்டு தமக்கென தனியான ஒரு தினத்தில் எரிபொருள் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவதுடன் இந்நிலை தொடருமாயின் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விநியோக நடவடிக்கையை ஒழுங்குபடுத்தும் முகமாக முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யுமாறு வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடாளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருளினை குறிப்பிட்ட சில எரிபொருள் நிலையங்கள் ஊடாக வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில், குறித்த எரிபொருள் விநியோக செயன்முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் வவுனியா பொலிசாரால் அனைத்து முச்சக்கர வண்டிகளையும் தம்மிடம் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் குறித்த அறிவித்தலை வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் பொலிசார் அறிவித்து வருகின்றனர்.
தென்னிலங்கையில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடம் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் தகாத முறையில் தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பயணி தொல்லை கொடுத்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் பயணி தொடர்பில் நடத்துனரிடம் பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டதுடன், தன்னிடம் காளொளி இருப்பதாகவும் பேருந்தை பொலிஸ் நிலையத்திற்கு விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நடத்துனரிடம் கெஞ்சிய காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. நடத்துனரிடம் அப்பெண் கோரிக்கைவிடுத்தபோதும் , பொலிஸ் நிலையம் செல்லாது தொல்லை கொடுத்த பயணியை நடுவழியில் இறக்கிவிட்டதாகவும் தெரியவருக்கின்றது.
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 621,081 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று166,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது 20 வருடங்களுக்கு மேல் சினிமாத்துறையில் இருந்து வருகிறார். காதல் தோல்வி, நிச்சயம் வரை நின்ற திருமணம் என்று சில பிரச்சனைகளை சந்தித்து மார்க்கெட்டையும் இழந்தார்.
மீண்டும் தன்னுடைய இடத்தினை பிடிக்க 96 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதன்பின் அவர் நடித்த சில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றது. தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வம் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தன்னுடைய மார்க்கெட் போக தனுஷுடன் நடித்த கொடி படம் தான் என்றும் அந்த படத்தில் வில்லியாக நடித்ததால் தான் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவிலை என தெரிவித்துள்ளார்.
மேலும் 2வது கதாநாயகியாக நடிக்க கூட வாய்ப்பு வருகிறது என்று ஆதங்கப்பட்டு கூறியுள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை வைத்து தான் தன்னுடைய மார்க்கெட் இருக்கிறது என்று நம்பிக்கையோடு இருக்கிறார் நடிகை திரிஷா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் வீடியோ கவரேஜை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியது. அதற்காக திருமணத்தில் வந்திருந்த விருந்தினர்கள் போன் உபயோகிக்க தடை விதித்து பாதுக்காப்பான திருமணத்தை நடத்தினர்.
கல்யாணத்தை வைத்தும் காசு சம்பாதிக்க நினைத்த நயன்தாரா பிளானின் மண்ணை அள்ளிப்போடும் வண்ணம் விக்னேஷ் சிவன் திருமணத்தன்றே சில புகைப்படங்களை வெளியிட்டு அதன் எதிர்ப்பார்ப்பை குறைத்துள்ளார்.
இதனால் 25 கோடி ஒப்பந்தத்தில் இருந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் விலகியதாகவும் இதனால் நயன் – விக்கி குழப்பத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. இந்த வதந்திகளை நிறுத்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை வெளியிட்டு கூடி சீக்கிரம் வீடியோவாக வெளியாகும் என்று கூறியிருந்தது.
தற்போது யார் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவுக்காக காத்திருக்கிறீர்கள் என்று கேட்டு ஒரு பதிவினை பகிர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த 25 கோடிக்கு நல்ல படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கலாமே என்று கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
hewing gum சாப்பிட்டு பபுள் விடுவதன் மூலமாக மாதம் 67,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார் இளம்பெண் ஒருவர். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
இணையவசதி பெருகிவிட்டதன் பலனாக செல்போன்களின் பயன்படும் மக்களிடையே கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. இதுவே சமூக வலை தளங்களின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மக்கள் உலக நடப்புகளை, நம்மை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான தகவல்களை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள முடிகிறது.
இதையே களமாக கொண்டு பலரும் தங்களது திறமைகளை இணையம் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் பலனாக திறமைசாலிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு தக்க வருவாயும் கிடைத்துவருகிறது. அந்த வகையில் இளம்பெண் ஒருவர் chewing gum சாப்பிட்டு, பபுள் விடுவதன் மூலமாக சம்பாதித்து வருகிறார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்தவர் ஜூலியா ஃபோராட். 30 வயதாகும் இவர் ஒரே நேரத்தில் 30 சூயிங் கம்களை வாயில் போட்டு மென்று பபுள் விடுகிறார். இதற்காக ஒரு மாதத்திற்கு தோராயமாக 5 யூரோக்களை செலவிடுகிறார். ஆனால், இதன்மூலம் அவருக்கு ஒரு மாதத்திற்கு 700 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 67,000 ரூபாய்) கிடைக்கிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக இதனை ஆரம்பித்ததாகவும் தற்போது நல்ல பகுதி நேர வேலையாக இது இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜூலியா.
இதுகுறித்து அவர் பேசுகையில்,”உங்கள் சூயிங்கம் கிளிப்களை விற்கலாம் என்று என் நண்பர் ஒரு நாள் நகைச்சுவையாக என்னிடம் கூறினார். இது கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால் நான் சில தேடல்களை மேற்கொண்டேன். அதற்காகவே இயங்கிவரும் ஆன்லைன் குழுக்களை கண்டறிந்த பிறகு அது உண்மையானது என்பதை உணர்ந்தேன்” என்கிறார்.
மார்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்துவரும் ஜூலியா கொஞ்ச நாளிலேயே இந்த சூயிங்கம் தொழிலை பார்ட்-டைம் வேலையாக செய்யத் துவங்கினார். விரைவிலேயே ஜூலியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவியத் துவங்கியுள்ளனர். இவர்கள் தங்களது விருப்பப்படி பபுளை ஊதுமாறு ஜூலியாவிடம் கோரிக்கை வைக்கின்றனர். இதனை ஜூலியா நிறைவேற்றியும் வருகிறாராம்.
இதன்மூலம் கிடைக்கும் பணம் பற்றி பேசிய அவர்,”இது எனக்கு முழு நேர வேலை இல்லை. நான் கட்டிடக்கலை, சிவில் இன்ஜினியரிங் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பட்டம் பெற்றுள்ளேன். இதிலிருந்து நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பது ஒவ்வொரு மாதமும் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் அது ஒரு மாதத்திற்கு 700 யூரோக்களுக்கு மேல் இருக்கும்” என்றார்.
பிபில யல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியை ஒருவரிடம் 23 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் பெற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 32 வயதான குறித்த ஆசிரியை பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் அதிகாரியுடன் காதல் தொடர்பைக் கொண்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கார் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கூறி பல சந்தர்ப்பங்களில் 23 இலட்சத்து 3, 600 ரூபாவை அந்தப் பெண்ணிடமிருந்து பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாது ஆசிரியையின் கடன் அட்டையை பயன்படுத்தியும் பல சந்தர்ப்பங்களில் பணத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தான் காதலிக்கும் நபர் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதை அறிந்த ஆசிரியை சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு சென்துள்ளார். இதனையடுத்தே சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
CBSE தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர். சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் நாடுமுழுவதும் நடைபெற்று வந்த வேளையில் கடந்த 22 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
14,35,366 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாகும். 98.83% தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் பிராந்தியம் முதல் இடத்தையும், 98.16% விகிதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தையும், 97.79 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான முடிவும் அதே நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கேரளாவை சேர்ந்த ஹன்னா ஆலிஸ் சைமன் என்னும் மாணவி முதலிடம் பிடித்திருக்கிறார். இவர் 500க்கு 496 மதிப்பெண்களை பெற்று அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஹன்னா தனது பெற்றோர் தான் தனது இந்த வெற்றிக்கு காரணம் என கூறியிருக்கிறார். “Microphthalmia” என்னும் குறைப்பாட்டினால் பார்வையை இழந்த ஹன்னாவுடன் சேர்த்து சைமன் மேத்யூஸ் – லிஜோ தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். பார்வை இல்லாத குறை தனது மகளுக்கு வரக்கூடாது என்பதற்காக வழக்கமான பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருக்கின்றனர் ஹன்னாவின் பெற்றோர்.
இதுகுறித்து பேசிய ஹன்னா,”என்னுடைய பெற்றோர் என்னை சகஜமாகவே நடத்தினர். என்னை எப்போதும் தனியாக அவர்கள் கருதியதில்லை. தாழ்வு மனப்பான்மை எனக்கு வராமல் இருக்க இதனை என் பெற்றோர் செய்தனர். என்னுடைய சின்ன சின்ன வெற்றியையும் அவர்கள் கொண்டாட தவறியதில்லை.
என்னுடைய நண்பர்களும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். இந்த மதிப்பெண்கள் என்னை மேலும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. முயன்றால் எதுவும் சாத்தியம் தான் என்பதை நான் இப்போது உணர்ந்துவிட்டேன்” என்றார். இதனிடையே, ஹன்னாவிற்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.