பாம்பு கடித்து மாணவி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் : 78 வயது முதியவரின் விபரீத செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அவர் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 78 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தார். தாய்-தந்தையை இழந்த அவர் அத்தையுடன் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். இந்நிலையில், கடந்த 24-ம் திகதி அந்த சிறுமி பாம்பு கடித்து இறந்தார்.

பாம்பு கடித்து இறந்த மாணவியிடம், ஏற்கெனவே 3 மாதத்துக்கு முன்னர் முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமியிடம் அத்துமீறிய 78 வயது முதியவர், அதை வீடியோ எடுத்தவர் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டவர் என 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறும்போது, சிறுமியை முதியவர் கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ உள்ளது. இருப்பினும், சிறுமி இறப்புக்கு பாம்பு கடித்ததே காரணம்.

இது தொடர்பில் முதியவர் பாலு மற்றும் விஜயகுமார், சதீஷ், பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறியுள்ளனர்.

சொந்த வீட்டை விற்று சூதாட்டம் : 18 லட்சத்தை இழந்ததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இளைஞர் ஒருவர் ஒன்லைன் விளையாட்டில் 18 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததால் தற்கொலை முடிவை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரபு ஒன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த விளையாட்டிற்கு அடிமையான அவர் 15 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். அதேபோல் கேரளா லொட்டரியிலும் மூன்று லட்சத்திற்கும் மேல் பிரபு பணத்தை இழந்ததால் மிகுந்த விரக்தியில் இருந்துள்ளார்.

தனது சொந்த வீட்டை விற்க முயற்சித்த பிரபு, அதில் கிடைத்த முன்பணத்தை வைத்து இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழக்கும் பலர் இதுபோன்ற விபரீத முடிவை எடுப்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்துக்கு பின் இப்படியொரு முடிவு : முன்னாள் கணவரை பழிவாங்க சமந்தா போட்ட பிளான்!!

சினிமாவின்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்டார். விவாகரத்துக்கு பின் தன் வேலையில் நல்ல கவனம் செலுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.

விவாகரத்துக்கு பின் அதிக மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்ட சமந்தா, மாஜி கணவர் வீட்டில் 250 கோடி ஜீவனாம்சம் கொடுத்தார்களா என்ற ரூமர் செய்தியை கேட்டு ஷாக்காகியதாகவும் வருமான வரித்துறையினருக்கா காத்திருந்ததாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விவாகரத்துக்கு முன் நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் ஹைதராபாத்தில் இருந்த வீட்டினை கோடியில் விற்றுவிட்டு தனித்தனி வீட்டினை வாங்கி வசித்து வந்தனர். நடிகை சமந்தா பாலிவுட் படங்களில் நடிக்கவுள்ளதால் மும்பை வீடு வாங்கவுள்ளார் என்ற செய்திகளும் பரவியது.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் முரளி மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விவாகரத்துக்கு பின் சமந்தா, நாக சைதன்யா அவர்கள் வசித்த வீட்டினை கோடியில் விற்றுவிட்டனர். தற்போது அதே வீட்டினை கூடுதல் பணம் கொடுத்து சமந்தா வாங்கியுள்ளார் என்ற செய்தியை கூறியுள்ளார். கூடிய சீக்கிரமே அங்கு குடியேறுவார் என்றும் கூறியுள்ளார்.

தனுஷுடன் சிவகார்த்திகேயன் மோதலா? ஒரே ட்விட்டில் முற்றுப்புள்ளி!!

சினிமாவில்..

டிவியில் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிகரானவர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை சிவகார்த்திகேயனுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துவிட்டார் என்றாலும், அவரது கேரியரில் ஆரம்பகட்டத்தில் தனுஷ் தந்த ஆதரவு அதிகம் வளர்ச்சிக்கு உதவியது. ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷிடம் இருந்து விலகி வந்தார் சிவகார்த்திகேயன். தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் நடத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே பிரச்சனை இருக்கிறது என்றும், அதனால் தான் அவர்கள் பேசிக்கொள்வது கூட இல்லை என்று நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லி சிவகார்த்திகேயன் ட்விட் செய்திருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் நடுவில் இருந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது போல என பேசி வருகின்றனர். சிவகார்த்திகேயன் சமீபத்தில் தான் அருண் விஜய் உடன் சமரசம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy birthday @dhanushkraja sir
Have a great year 👍😊

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 28, 2022

ஒகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் எரிபொருள் விநியோகத்தில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!!

புதிய திட்டம்..

QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் இது குறித்து அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுபோக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருள் விநியோகிக்கும் அளவு தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகிக்கும் செயன்முறை இம்மாதத்துடன் முடிவுறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வயதான தங்கையை பணம் மற்றும் போதைப் பொருளுக்காக விற்ற அக்கா!!

தங்கையை விற்ற அக்கா..

15 வயதான தங்கையை 15 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஒரு கிராம் ஹெரோயின் போதைப் பொருளுக்காக போதைப் பொருள் விற்பனையாளருக்கு விற்ற அக்காவை கைது செய்துள்ளதாக மினுவங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணம் மற்றும் ஹெரோயினை வழங்கி சிறுமியை பெற்றுக்கொண்ட போதைப் பொருள் வியாபாரியும் 5 ஆயிரத்து 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் 26 வயதானவர் எனவும் அவர் ஒரு பிள்ளையின் தாய் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். 15 வயதான சிறுமியின் தாய், போதைப் பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் அக்கா ஹெரோயின் போதைப் பொருளுக்கு மோசமான அடிமையானவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். தாய் சிறைக்கு சென்ற பின்னர், 15 வயதான சிறுமியை அக்கா தனது பாதுகாப்பில் வைத்திருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்கு நில்பனாகொட பிரதேசத்தில் ஹெரோயின் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 5 ஆயிரத்து 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அப்போது சந்தேக நபரின் வீட்டில் இருந்த சிறுமி பற்றி பொலிஸ் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த சந்தேக நபரின் தாய், சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார். சிறுமியை தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட பொலிஸார், சந்தேக நபரையும் சிறுமியின் அக்காவையும் கைது செய்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் ஆதார வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்களும் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா செட்டிகுளம் ஆதார  வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தமது பணியைத் தொடர்ந்து செய்வதற்கு ஏதுவாக எரிபொருள் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி இன்று27.07.2022 வியாழக்கிழமை வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.

தமது பணியை செய்வதற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான நடைமுறையை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக்கோரி இவ் ஆர்ப்பாட்ட  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த காலங்களில் வைத்தியசாலை பணியாளர்களிற்காக விசேட தினத்தில் தனியொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த செயற்பாடானது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டதுடன், பொதுமக்களின் வரிசையின் ஊடாகவே எரிபொருளினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. இதனால் தமது கடமைக்கு உரிய நேரத்திற்கு செல்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

இலங்கையில் இதுவரை இடம்பெறாத சம்பவம் : வைரலாகும் புகைப்படம்!!

வைரலாகும் புகைப்படம்..

நாடளாவிய ரீதியில் எரிபொருள் பாஸுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது. QR Code அடிப்படையில், வாகன இறுதி இலக்கத்துக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.

எரிபொருள் வரிசை நீண்டு கொண்டே செல்கின்றது. இதனிடையே, எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

யாழ். பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது விரதத்தை வீதியில் முடித்து கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

ஆலய திருவிழாவிற்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பெரும் சோகம்!!

இராசநாயகம் சனுஜன்..

பெரிய நீலாவணை கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லபட்டு காணாமல்போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் நேற்று (26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மூன்று மாணவர்கள் பெரியதம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான அன்று தீர்த்தம் உற்சவத்தில் நீராடச் சென்ற போது கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இரு மாணவர்கள் உயிர் தப்பிய நிலையில் கரை சேர்ந்ததுடன் மற்றுமொரு மாணவன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போனார்.

இவ்வாறு காணாமல்போன பெரியநீலாவணையைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இராசநாயகம் சனுஜன் என்ற மாணவனின் சடலம் நேற்று புதன்கிழமை (27) மாலை கரை ஒதுங்கியது.

இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஷ்ஃரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரூம் சோகத்தை ஏற்படுத்தியது.

நாடு மீண்டும் முடக்கப்படும் அபாயம் : வெளியானது எச்சரிக்கை!!

வெளியான எச்சரிக்கை..

தற்போதுள்ள கோவிட் அபாயம் அதிகரித்தால், எதிர்காலத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டலாம் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்று மீண்டும் ஏற்பட்டால், அது தற்போது பரவி வரும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோவிட் அபாயம் அதிகரித்தால், எதிர்காலத்தில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்று மீண்டும் ஏற்பட்டால், அது தற்போது பரவி வரும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் மற்றும் இயக்கத்தில் கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.

ஆனால் இந்நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். எனவே, முகக்கவசங்களை மீண்டும் அணிவது மிகவும் முக்கியம். தேவையற்ற கூட்டங்களை நிறுத்துங்கள் மற்றும் முடிந்தவரை சமூக இடைவெளியை கடைபிடிக்கவும். இந்தப் பழக்கங்களைப் பேணுவது முக்கியம் எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி : சுகாதார பரிசோதகர்களின் எச்சரிக்கை!!

மற்றுமொரு நெருக்கடி..

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் நாட்டின் அநேக வைத்தியசாலைகளில் தற்போது இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் மரணங்களின் எண்ணிக்கை உயர்வடையும் சாத்தியங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார வழிகாட்டல்களை சரியான முறையில் மக்கள் பின்பற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்டிஜன் பரிசோதனை நடாத்த போதியளவு வசதி இல்லாத காரணத்தினால் அடையாளம் காணப்படும் நோய்த் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கையிலும் ஐந்து மடங்கு அதிகளவில் நோய்த் தொற்றாளர்கள் நாட்டில் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளினால் கோவிட்டை கட்டுப்படுத்தும் பொறுப்புக்களை சுகாதார தரப்பினர் ஏற்றுக்கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதல் மின்சார கார் அறிமுகம்!!

மின்சார கார்..

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் ‘மொக்சா’ இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முதன்முதலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனம் ஆகும்.

தற்போதைய தொழில்நுட்ப நிலைமாற்றத்தில் மின்சார வாகனம் ஒரு நடைமுறை தீர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலையான கார்பன் தொழில்நுட்பத்தை நோக்கிய எதிர்காலத்துக்கு இது முன்மாதிரியாக அமையும் எனவும் எதிா்பார்க்கப்படுகிறது.

ஒரு குப்பை வண்டியின் கண்ணீர் கதை!!

தூய்மை..

நாட்டைத் தூய்மையாக்கி, மக்களின் சுகாதாரத்தைக் காக்கும் மாபெரும் பணியை தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் செய்து கொண்டு வருகின்றார்கள். இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் மட்டுமில்லாமல், அன்றாட வாழ்வில் துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல் நமது வாழ்வு இல்லை என்றே சொல்லாம்.

நாடும் வீடும் தூய்மையாக இருக்க மற்றவர்களின் கழிவுகளையும் குப்பைகளையும் அப்புறப்படுத்தினாலும் நாள்தோறும் அவர்கள் தங்களின் உடல், உடைகளில் அசுத்தங்களைச் சுமக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை ஆகும்.

ஆனால் பலருக்கும் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதே தெரியாது. உண்மையில் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை நாமும் இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்வோம்.

காதலுக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண் கொலை : இளைஞரின் மரணதண்டனை நேரலையில்?

எகிப்தில்..

எகிப்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்த கொடூர இளைஞரின் மரண தண்டனையை நாடு முழுக்க நேரலை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எகிப்தில் தனது காதலை ஏற்க மறுத்த வகுப்பு தோழியை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தது நிரூபிக்கப்பட்ட நிலையில் 21 வயதான முகமது அதெல் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுபோன்ற கொடூரம் இனி நாட்டில் ஏற்படுவதை தடுக்க, முகமது அதெலின் தூக்கு தண்டனையை நேரலை செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் நாடாளுமன்றத்தை நாடியுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றம் அளித்த கடிதத்தில், தூக்கு தண்டனைக்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதி மட்டுமே நேரலை செய்யப்படும் எனவும், இதனால் சமூகத்தில் சிறிதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும், தண்டனை உறுதி செய்யப்பட்டதை நேரலை செய்வதால் ஏற்படுத்தாத மாறுதலை இது ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு எகிப்தில் உள்ள மன்சௌரா பல்கலைக்கழகத்திற்கு வெளியே பேருந்திலிருந்து இறங்கியபோது 21 வயதான நைரா அஷ்ரப் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

ஜூன் 20 அன்று நடந்த இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், சம்பவப்பகுதியில் இருந்து தப்ப முயன்ற சக மாணவரான முகமது அதெலை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இந்த வழக்கில் அதெல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தம்மை ஏற்க மறுத்த ஒருவர் மீது கருணை காட்டாத ஒருவருக்கு எந்த வகையிலும் கருணை காட்ட முடியாது என்று நீதிமன்றம் அறிவிப்பதாக தண்டனை தீர்ப்பின் போது நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

காதல் தம்பதியை கொலை செய்த கொடூரம் : பெண்ணின் பெற்றோர் அதிரடியாக கைது!!

தூத்துக்குடியில்..

கைது செய்யப்பட்ட முத்துக்குட்டி, மகாலட்சுமி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜா (28).லாரி ஓட்டுநரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டியின் (43) மகள் ரேஷ்மா (20) என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீட்டில் இருந்து வெளியேறிய மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் திருமணம் செய்து கொண்டு, கடந்த மாதம் 29-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

போலீஸார் அவர்களை பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர். மேலும், அவர்கள் இருவரையும் வீரப்பட்டி கிராமத்துக்கு வர வேண்டாம் என எட்டயபுரம் போலீஸாரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், கடந்த வாரம் மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் வீரப் பட்டிக்கு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தம்பதி இருவரும்வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து, எட்டயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து முத்துகுட்டி, ரேஷ்மாவின் தாய் மகாலட்சுமி(39)ஆகியோரை கைது செய்தனர்.

மகளுடன் நெருங்கிப் பழகிய நபரை எச்சரித்த தாய்க்கு நடந்த பரிதாபம்!!

பழனியில்..

பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (55). இவர், பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் விடுமுறை நாளில் வீட்டை விட்டு வெளியே சென்று அன்னம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். இருதினங்களுக்கு பிறகு பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு அருகில் அன்னம்மாள் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து கிராமத்தினர் பழனி தாலுக்கா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

மேலும் உடல் அழுகி நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனைக்காக அன்னம்மாளின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் உடனடியாக போலீசார் கொலையாளியை நெருங்க முடியவில்லை.