குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தந்தை!!

திருவாரூரில்..

திருவாரூரில் குழந்தையோடு சேர்ந்து விஷமருந்திய நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அழகிய குடும்பம்: திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கோபால்-வீரம்மாள் தம்பதி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அதேப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கூலித் தொழிலாளியான கோபால் தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் வழக்கம் போல குடித்துவிட்டு வீடு திரும்பிய கோபால், மனைவி வீரம்மாளை அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனைக்கண்ட அப்பகுதியினர் வீரம்மாளை மீட்டுள்ளனர்.

பின்னர் வீரம்மாள் இதுகுறித்து முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்த மகளிர் போலீசார் இருவரையும் சமரசம் செய்து வைத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனாலும் திருந்தாத கோபால் நேற்றிரவு மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து “காவல் நிலையத்தில் நீ ஏன் புகார் செய்தாய்” என்று கூறி மனைவியை அடித்துள்ளார்.

அடி தாங்க முடியாத வீரம்மாள் வீட்டிலிருந்து வெளியேறி இரவு பள்ளிக்கூடத்தில் தங்கியுள்ளார். காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, கணவர் கோபால் விஷமருந்தி இருந்ததையும், குழந்தைக்கும் விஷம் கொடுத்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 6-வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பனை ஓலையால் மலைபோல் உயர்ந்த சாதனைப்பெண் : ஓர் நெகிழ்ச்சியான பேட்டி!!

பனையில்..

பனை மரத்தில் உள்ள அனைத்துப்பொருட்களும் ஏதாவது ஒரு வகையில் மனிதர்களுக்கு பயனளித்து வருகிறது. பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, என அனைத்துமே மக்களுக்கு பயனளிக்க கூடியவை.

ஆனால் சமீபகாலமாக பனை மரம் ஏறும் தொழில் அழிந்து வருவதாகவும், இந்த தொழிலில் உள்ள குடும்பத்தினரே வேறு வேலைக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அப்படி கொரோனா காலகட்டத்தில் பனை ஓலைத்தொழிலை தொடங்கிய பெண் ஒருவர், பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். ஆனால் தற்போதே தன்னுடைய வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வியாபாரம் நன்றாக நடப்பதாகவும் நெகிழ்கிறார்.

இதன் முழுமையான பேட்டி உங்களுக்காக,

பாடசாலை மாணவன் விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் காரணம்!!

தருமபுரியில்..

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பிளஸ் 1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாநூலஅள்ளியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் பிரகாஷ் (17).

இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். மாணவனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் வயிற்றுவலி காரணமாக அப்பண்டிஸ் ஆப்ரேசன் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி காரணமாக வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தபோது இவருடைய பெற்றோர் உனக்கு ஏன் அடிக்கடி வயிற்று வலி வருகிறது என திட்டியுள்ளனர்.

இதனால் மன வேதனையடைந்த பிரகாஷ் வீட்டிற்கு உள்ளே சென்று மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக தகவல் தெரிந்து அதியமான் கோட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக மரணம் : கணவரின் உருக்கமான போஸ்ட்!!

பென்னாகரத்தில்..

பென்னாகரம் அருகே ஏரியூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததற்கு, செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவர்களின் கவனக்குறைவும், மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததும் காரணம் என உயிரிழந்த பெண்ணின் கணவர் உருக்கமாக போஸ்ட் போட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரகாஷ். இவர் பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (21). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகப்படியான ரத்தப்போக்கு இருந்த நிலையில் ஏரியூர், பென்னாகரம், தருமபுரி என பல்வேறு மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டதன் விளைவாக பரமேஸ்வரி தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவர்களில் அலட்சியத்தால் பெண் உயிரிழந்ததாக இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட கணவர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்ததோடு இன்று ஏரியூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டும் சாலையில் அமர்ந்து மறியலில் செய்தும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், பரமேஸ்வரியின் கணவர் சத்யபிரகாஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”ஏரியூர் அரசு மருத்துவமனையில் என் மனைவிக்கு பிரசவம் பார்த்த செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக என் மனைவி குழந்தை பிறந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு வசதியின்றி இறந்து விட்டார். ஏரியூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் எந்த தவறும் செய்யாததுபோல தங்களை (மருத்துவமனை நிர்வாகத்தை ) காத்து வருகின்றனர்.

”எனவே என் மனைவிக்கு நடந்த துயரமான சம்பவம் வேறு எந்த பெண்ணுக்கும் நிகழாதவாறு தடுக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒன்று பிரசவத்திற்கு அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மருத்துவமனையாக ஏரியூர் மருத்துவமனையை மாற்ற வேண்டும் அல்லது அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்க அனுப்ப வேண்டும்” என இவ்வாறு கோரிக்கையாக வைத்துள்ளார்.

கடற்கரையில் தொலைந்த மனைவி : ஒரு கோடி செலவில் தேடுதல் : கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

இந்தியாவின்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மனைவி காணாமல் போனதாக கணவர் புகார் அளித்த நிலையில், ஹெலிகாப்டரில் தேடுதலுக்கு பின் வேறொரு நபருடன் மனைவி சென்றது தெரிய வந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ரவி என்ற நபர், ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது திருமண நாளை கொண்டாட மனைவி சாய்பிரியாவுடன்(22) விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு கணவன் – மனைவி இருவரும் கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் கரைக்கு திரும்பிய சாய்பிரியா கணவரிடம் பசிக்கிறது என்று கூறியுள்ளார். ரவியும் அவருக்கு சாப்பிட உணவு வாங்க சென்று திரும்பியுள்ளார். ஆனால், சாய்பிரியாவை அங்கு காணவில்லை.

இதனால் பதறிப் போன ரவி கடற்கரை முழுவதும் தேடியுள்ளார். எங்கும் தேடியும் மனைவி கிடைக்காததால் பொலிசாரின் உதவியை நாடிய ரவி, தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து தேடியுள்ளார். படகுகளைக் கொண்டு தேடிய முயற்சி பலனளிக்காததால், ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடலிலும், கடற்கரையிலும் இரவு முழுவதும் ஹெலிகாப்டரில் தேடுதல் பணி நடந்துள்ளது. ஆனால் இறுதிவரை சாய்பிரியாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சாய்பிரியாவின் பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் குரல்பதிவு தகவல் வந்துள்ளது.

அதில், நெல்லூரை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும், ரவியுடன் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் அவருடன் வாழ பிடிக்கவில்லை என்றும் சாய்பிரியா பேசியிருக்கிறார். மேலும் காதலருடன் பெங்களூருக்கு வந்துவிட்டதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்ட சாய்பிரியாவின் பெற்றோர் மற்றும் கணவர் ரவி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அதன் பின்னரும் பேரதிர்ச்சி செய்தி ஒன்று அவர்களுக்கு வந்தது. சாய்பிரியாவை தேட கடலுக்குள் படகுகள், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதால் ஒரு கோடி வரை செலவானதாகவும், பொய் புகார் அளித்ததற்கும் சேர்ந்து நஷ்டஈடாக அந்த தொகையை தரவேண்டும் என்றும் அதிகாரிகள் பெண்ணின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளானர்.

மருமகன் தான் புகார் அளித்தார் என்றும், மகள் வேறொருவருடன் சென்றது தங்களுக்கு தெரியாது என்றும் சாய்பிரியாவின் பெற்றோர் வாதிடவே இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து வருகிறது. இச்சம்பவம் விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென கதறி துடித்து தரையில் உருண்ட பள்ளி மாணவிகள் : நெஞ்சை பதறவைத்த சம்பவம்!!

உத்தரகாண்ட் மாநிலத்தில்..

உத்தரகாண்ட் மாநிலத்தில் மாஸ் ஹிஸ்டீரியா என்னும் மன நோயால் பாதிக்கப்பட்டு கத்தி கூச்சலிடும் அரசு பள்ளி மாணவிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் பாகேஷ்வரில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் மாணவிகள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வகுப்பை விட்டு வெளியேறி கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

பின்னர், அனைவரும் புலம்பியவாறு தங்களது தலை முடியை கலைத்துக்கொண்டு தரையில் உருண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியைகள் மாணவிகளை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளனர்.

ஆனால், மாணவிகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பின்னர் பள்ளிக்கு வந்த மருத்துவ குழு மாணவிகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு “மாஸ் ஹிஸ்டீரியா” என்ற மன அழுத்த பிரச்சினை இருப்பது தெரிய வந்தது.

மாணவிகளுக்கு எதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்று மருத்துவ குழு ஆராய்ந்ததில், சாமோலி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு அப்பள்ளியின் மாணவி உயிழந்ததாகவும், அந்த துக்கத்திலிருந்து மாணவிகளால் மீள முடியவில்லை என்பதும் தெரியவந்தது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும், பார்வைக் குறைபாடு உடையவர்களாகவும், மிகவும் பதட்டமாக இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

உத்தர்காண்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதிரியான சம்பவம் நடந்ததாகவும் அரசு பள்ளி மாணவிகள் “மாஸ் ஹிஸ்டீரியா” பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இதே அறிகுறிகளுடன் நடந்துகொண்டதாவும் கூறப்படுகிறது.

தற்போது இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளி வளாகத்திற்குள் பூஜை செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் பள்ளிக்கு அழிவு ஏற்படும் என்று நம்புகின்றனராம்.

இதுகுறித்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை முகுல் சதி கூறுகையில், சக்ரதா மற்றும் உத்தர்காஷியில் உள்ள சில பள்ளிகளிலும் ”மாஸ் ஹிஸ்டீரியா” வழக்குகள் பதிவாகியுள்ளன.

மாணவர்களிடையே உள்ள அச்சத்தைப் போக்குவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று பரிசோதனை நடத்த சிறப்பு மருத்துவக் குழுவை உருவாக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ”மாஸ் ஹிஸ்டீரியா” பிரச்சினையால் கத்தி கூச்சலிடும் மாணவிகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கனடாவில் நடிகையாக பிரபலமாகிவரும் இலங்கை தமிழ்ப்பெண் : அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மைத்ரேயி ராமகிருஷ்ணன்..

கனடாவில் நடிகையாக பிரபலமாகிவரும் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான மைத்ரேயி ராமகிருஷ்ணன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மைத்ரேயி ராமகிருஷ்ணன் கனடாவைச் சேர்ந்த நடிகை ஆவார், இவர் நெட்ஃபிக்ஸ் தொடரில் ‘தேவி’ கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். “நெவர் ஹேவ் ஐ எவர்” தொடரில் தேவியாக நடித்ததன் மூலம் அவர் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார்.

20 வயதிலேயே, இந்த தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு கனடாவில் பெயர்பெற்ற நட்சத்திரமாகிவிட்டார். மைத்ரேயி ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட வாழ்க்கை.

மைத்ரேயி ராமகிருஷ்ணன் 30 டிசம்பர் 2001 அன்று கனடாவின் ஒன்ராறியோவில் பிறந்தார். அவர் இலங்கை-தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும், இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது அவரது பெற்றோர் இலங்கையிலிருந்து கனடாவுக்குக் குடிபெயர்ந்தனர்.

தொழிலதிபர் ராம் செல்வராஜா மற்றும் கிருத்திஹா குலேந்திரன் ஆகியோர் மைத்ரேயியின் பெற்றோர். அவளுக்கு விஷ்வா என்ற அண்ணன் இருக்கிறார்.

ராமகிருஷ்ணனுக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகம். உயர்நிலைப் பள்ளியின் போது பள்ளி நாடகங்களில் பங்கேற்பது வழக்கம். 20 வயதான நடிகை நெட்ஃபிக்ஸ் தொடரின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையில் அறிமுகமானார்.

மேலும் அவரது முதல் தொடர் நிறைய புகழையும் பிரபலத்தையும் கொண்டு வந்தது. “நெவர் ஹேவ் ஐ எவர்” படைப்பாளி மிண்டி கலிங், ஆடிஷனில் பங்கேற்ற 15,000 பெண்களில் மைத்ரேயியைத் தேர்ந்தெடுத்தார்.

மைத்ரேயி நெட்ஃபிக்ஸின் Never Have I Ever தொடர் முதல் சீசன் வெளியான பிறகு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.

இத்தொடரில் மைத்ரேயி நடித்த தேவி விஸ்வகுமாரி என்ற கதாப்பாத்திரத்தின் காதல் வாழ்க்கையையும் சமூக அந்தஸ்தையும் மேம்படுத்த முயற்சிக்கும் இளம்பெண்ணாக அவரைச் சுற்றியே கதை சுழல்கிறது. இருப்பினும், அவளுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவளை கொஞ்சம் கடினமாக்குகிறார்கள்.

இத்தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, உலகை சிறப்பாக மாற்றும் பெண்களின் பதினெட்டு “கிரவுண்ட் பிரேக்கர்ஸ்” பட்டியல்களில் ஒருவராக மைத்ரேயி ராமகிருஷ்ணன் பெயரிடப்பட்டுள்ளார்.

மைத்ரேயி ராமகிருஷ்ணனின் நிகர மதிப்பு மற்றும் சம்பளம்
மைத்ரேயி ராமகிருஷ்ணனின் நிகர மதிப்பு 2022 ஆம் ஆண்டில் தோராயமாக $500,000 (இலங்கை ரூபாயில் 17.9 கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் $20,000 (இலங்கை ரூபாயில் 71.7 லட்சம்) பெறுகிறார். இதனால் அவரது நிகர மதிப்பு $500,000 ஆகும்.

ஆகஸ்ட் 2022-ல் வெளியாகவிருக்கும் “நெவர் ஹேவ் ஐ எவர்” சீசன் 3 மூலம் அவர் தனது சொத்து மதிப்பை அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலைகளுக்கு விடுமுறை கிடையாது : கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு!!

பாடசாலை விடுமுறை…

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலைகள் தொடரும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாரத்திற்கு 3 நாட்கள் மாத்திரம் பாடசாலைகளை நடத்தும் நடைமுறை விரைவில் நீக்கப்படும் எனவும் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புடன் 24 பிரதான பாடங்களுக்கான உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சி அமர்வுகளை பல்கலைக்கழக அமைப்பு நடாத்தி வருகின்றதுடன், கோவிட் நிலைமை காரணமாக சரியாகக் கல்வி கற்க முடியாத சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை பொதுவான பின்னணியில் செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து வகுப்பறைகளில் கேள்வி பதில்களுடன் கூடுதல் கற்பித்தல் மூலம் மாணவர்களை தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்படுத்த முடியும்.

மேலும், 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் ஆரம்பக் கல்வியை இழந்து தரம் 3 இல் நுழையும் குழந்தைகளின் தற்போதைய செயல்திறன் நிலைகளை அடையாளம் காண விஞ்ஞான முறைகள் மூலம் ஏற்கனவே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும்,

அந்த அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறித்தும் அமைச்சர் கூறினார்.

வெள்ளவத்தையில் சகோதரிகளுக்கு நேர்ந்த கோர சம்பவம் : ஒருவர் பலி!!

வெள்ளவத்தையில்..

வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த இரண்டு யுவதிகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு யுவதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 20 வயதுடைய யுவதி என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த யுவதி கிரேசியன் தொகுதி, உடபுசல்லாவ பிரதேசத்தில் வசிப்பவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த யுவதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் யுவதியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என தெரியவந்துள்ளது.

மனைவி கடலுக்குள் விழுந்ததாக பதறிய கணவன் : மனைவி செய்த மோசமான செயல்!!

ஆந்திராவில்..

மனைவியை கடலில் விழுந்ததாக கணவன் போலீசாரிடம் புகார் அளிக்க இறுதியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது.

இதனிடையே, இரண்டாவது திருமண நாளை கொண்டாட கணவனை கோவிலுக்கு அழைத்திருக்கிறார் மனைவி. அதன்படி, விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாசலம் கோவிலுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார் அவர்.

அப்போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பின் அந்த இளம்பெண் திடீரென காணாமல் போக கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால், காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார்.

இதன் தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர்கள் . இதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள், படகுகள் ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளது. ஆனாலும், எந்த பலனும் கிடைக்காததால், உண்மையாகவே அந்த இளம்பெண் கடலில் தான் விழுந்தாரா? என சந்தேகித்து விசாரணையில் இறங்கினர்.

அப்போது தான் காவல்துறைக்கும் கணவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. கடலில் விழுந்ததாக சொல்லப்பட்ட பெண்ணை நெல்லூர் காவல்துறை அதிகாரிகள் உயிருடன் பிடித்திருக்கின்றனர்.

கூடவே அவரது காதலரும் இருந்திருக்கிறார். 21 வயதுடைய அந்த இளம்பெண் கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க இப்படி நாடகம் ஆடியிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் கணவரை மட்டுமின்றி அப்பகுதி முழுவதும் பரபரப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.

கோமாவில் இருந்த திடீரென்று கண் விழித்த பெண் : அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!

கோமாவில்..

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண் ஒருவர், நினைவுக்கு திரும்பியதும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைவரையும் மிரள வைத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாண்டா என்ற 55 வயது பெண்மணி தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாண்டாவை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.

அப்போது வாண்டா பால்மர் கோமாவுக்கு தள்ளப்பட்டுள்ளதால், அவரிடம் இருந்து எந்த விவரங்களும் சேகரிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்டு வந்த போலீசாருக்கும், ஆதாரங்கள் குறைவாக இருந்ததால், வாண்டாவின் நிலைக்கு காரணம் யார் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், சுமார் இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த வாண்டா சமீபத்தில் சுயநினைவுக்கு திரும்பிய நிலையில் தன்னை கொலை செய்ய முயன்ற நபர் யார் என்பது பற்றி போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.

தனது உடன் பிறந்த சகோதரனா டேவிட் பால்மர் பெயரை சொல்லி, தன்னை கொலை செய்ய முயன்று, இந்த நிலைக்கு ஆளாக்கியதாக வாண்டா பால்மர் தெரிவித்துள்ளார்.

வாண்டாவின் சகோதரரான டேவிட் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். சகோதரர் கைது செய்யப்பட்ட பிறகு வாண்டா உயிரிழந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண் ஒருவர், சுயநினைவுக்கு திரும்பிய பிறகு, தனது சகோதரர் தான் இதற்கெல்லாம் காரணம் எனக் கூறிய நிலையில், அவர் கைது செய்யப்பட்ட சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான செய்தி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இளம் பெண்ணின் விபரீத முடிவு : கணவர் அதிரடியாக கைது!!

தஞ்சை..

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆடுதுறை நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு – இந்துமதி தம்பதி். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்களாகிறது.

இந்நிலையில் கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்ததால், மனமுடைந்த இந்துமதி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, ராஜகுரு கடந்த 2 நாட்களுக்கு முன் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதனிடையே இந்துமதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் ராஜகுரு மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தற்கொலைக்கு தூண்டிய கணவர் ராஜகுருவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

விழுப்புரத்தில்..

விழுப்புரம் அருகே திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தை சார்ந்த நல்லேந்தரன் என்பவரது மகள் வினோதினி.

இந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டுமென பெற்றோர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்டு கல்லூரி படிப்பினை தொடர வேண்டும் என்று கூறி திருமணம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவி வினோதினி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் அவரது பெற்றோர்களுடன் மீண்டும் சண்டையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மகளை காணவில்லை என்பதால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் சந்தேகத்தின் அடிப்படையில் மாணவியின் பெற்றோருக்கு சொந்தமான கிணற்றில் உள்ள நீரை இறைத்து தேடியுள்ளனர். அப்போது மாணவியை கிணற்றிலிருந்து சடலமாக உடலை மீட்டுள்ளனர்.

மாணவி இறப்பு குறித்த தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியில் சேருவதற்காக திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊசி போட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்த பெண் : என்ன நடந்தது?

புதுச்சேரியில்..

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே ஊசி போட்ட சிறிது நேரத்தில் திடீரென்று மயங்கி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான தேவநாதன் என்பவரது மனைவி கவிதா. இவருக்கு வயது 45. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு கவிதாவிற்கு, புல் நறுக்கும் இயந்திரத்தில் புல் நறுக்கிக்கொண்டு இருக்கும் போது, எதிர்பாராதவிதமாக கை மடக்கி, எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது வலது கை மணிக்கட்டு அருகில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்து எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒரு வருடம் கழித்து தான் கையில் பொருத்தப்பட்டிருக்கும் பிளேட்டை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே இந்தாண்டு மார்ச் மாதம் ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 22-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கையில் இருந்த பிளேட் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 24-ந் தேதி கவிதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கையில் அதிகமாக வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜிப்மர் மருத்துவமனை மருந்து விற்பனையகத்தில் வலிக்காக மருத்துவர் எழுதிக் கொடுத்த ஊசி மற்றும் மருந்துகளை வாங்கி வந்து, தனியார் கிளினிக்கில் காண்பித்து, அங்கு ஊசி போட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் ஊசி போட்ட சிறிது நேரத்தில் கவிதா அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறுவுறுத்தியுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கவிதா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் கவிதாவுக்கு போட்டுக்கொண்ட மருந்து, அறுவை சிகிச்சைக்கு முன் செலுத்தவேண்டியது எனவும் இது வலிக்கான ஊசி அல்ல எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து வழக்குபதிவு செய்த தவளக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான ஊசி போட்டதன் காரணமாக பெண் இறந்தாரா? தனியார் கிளின்க் மருத்துவர் பரிசோதிக்காமல் எப்படி ஊசி போட்டார்..? ஜிப்மர் மருத்துவமனையில் இந்த மருந்தை எதற்காக கொடுத்தனர்..? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.

காட்டுக்குள்ள விறகு பொறுக்க போன பெண்க்கு கிடைத்த அதிஷ்டம்; ஒரே நாளில் லட்சாதிபதியான சுவாரஸ்யம்..!

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேச மாநிலத்தில் காட்டுக்குள் விறகு பொறுக்கப்போன பெண்ணுக்கு வைரக்கல் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஒரேநாளில் அவரது வாழ்க்கை மாறியிருக்கிறது. மத்திய பிரதேசத்தின் உள்ள பன்னா மாவட்டத்தில் பல வைர சுரங்கங்கள் இருக்கின்றன. இங்கு உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சுரங்கங்களில் வைரம் தேடுவது வழக்கம்.

அப்படி, சாதாரண மக்கள் இந்த சுரங்கங்களில் வைரத்தினை கண்டுபிடித்தால், அதனை அதிகாரிகளிடத்தில் .ஒப்படைக்க வேண்டும். அரசு அந்த வைரத்தினை ஏலத்தில் விட்டு, அந்த தொகையை வைர கல்லை கண்டுபிடித்தவருக்கு வழங்கும். அதே நேரத்தில் ஏல தொகையில் இருந்து குறிப்பிட்ட சதவீத பணத்தை வரியாகவும், ராயல்டியாகவும் அரசுக்கு செலுத்த வேண்டும்.

மத்திய பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ளது புருஷோத்தம்பூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஜெண்டா பாய் என்பவர் உள்ளூரிலேயே விறகு கடை நடத்தி வருகிறார். இதற்காக அருகில் உள்ள கட்டுக்குள் சென்று விறகு பொறுக்குவது இவரது வாடிக்கை. அந்த வகையில் புதன்கிழமை காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்றிருக்கிறார் பாய்.

அப்போது மண்ணுக்கடியில் பளபளப்பாக ஒரு பொருள் இருப்பதை பார்த்த அவர் உடனடியாக அதனை கையில் எடுத்து பார்த்திருக்கிறார். அது வைரம் தான். உடனடியாக உள்ளூரில் இருக்கும் வைர கற்களை ஆராயும் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் பாய் வைத்திருந்த வைரக்கல்லை ஆய்வு செய்தபோது அது 4.39 கேரட் இருந்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய வைர ஆய்வாளர் அனுபம் சிங்,”அவர் கொண்டுவந்திருந்த வைரம் 4.39 கேரட் இருந்தது. அது தற்போது டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. அரசு விதிமுறைகளின் அடிப்படையில் இந்த வைரம் ஏலத்தில் விடப்படும். அதிகபட்சமாக இந்த வைரம் 20 லட்சத்துக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ஜெண்டா பாய் உள்ளூரிலேயே வீட்டு வேலைகளையும் செய்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதுபற்றி அவர் பேசுகையில்,”என்னுடைய மகன்கள் மற்றும் மகள்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடிய வயதில் இருக்கிறார்கள். இந்த பணத்தை கொண்டு எங்களுக்காக ஒரு வீடு கட்ட வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

 

பன்னா மாவட்டத்தில் 12 லட்சம் கேரட் வைரம் வெட்டியிடுக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மக்களுக்கும் இந்த சுரங்களில் பணிபுரிய அதிக ஆர்வம் இருந்துவருகிறது. இந்நிலையில் ஜெண்டா பாய் என்னும் பெண்ணுக்கு அங்குள்ள காட்டில் இருந்து வைரக்கல் கிடைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகள் : மர்மம் விலகாமல் திணறும் அதிகாரிகள்!!

சிட்னியில்..

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகள் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு பொலிசார் உதவி கோரியுள்ளனர்.

சவுதி அரேபியாவை சேர்ந்த 24 வயது அஸ்ரா அப்துல்லா அல்செஹ்லி மற்றும் அமல் அப்துல்லா அல்செஹ்லி(23) ஆகிய சகோதரிகள் இருவர் ஜூன் 7ம் திகதி சிட்னியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாக, அவர்களின் மரணம் தொடர்பில் அதிகாரிகளுக்கு துப்புத்துலங்காமல் மர்மம் நீடித்து வருகிறது. இதனையடுத்து, அவர்களின் பெயர் மற்றும் தகவல்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சகோதரிகள் இருவரும் தங்கியிருந்த குடியிருப்பில், அவர்களுக்கான அஞ்சல் பெட்டியில் கடிதங்கள் குவிந்திருப்பதை அறிந்த குடியிருப்பு மேலாளர் சந்தேகத்தின் பேரில் பொலிசாருக்கு தகவல் அளித்த நிலையிலேயே சகோதரிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, சகோதரிகள் இருவரும் நான்கு வாரங்களாக தங்களது குடியிருப்பில் வாடகை செலுத்தத் தவறிவிட்டதும், அவர்கள் தொடர்பில் விசாரிக்க பொலிசாரை தூண்டியுள்ளது. இருவரது சடலமும் அழுகிய நிலையில் காணப்பட்டதால், இருவரும் இறந்து சில வாரங்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

மேலும், அவர்களது குடியிருப்புக்குள் அத்துமீறி எவரும் நுழைந்த அடையாளங்களும் காணப்படவில்லை, அவர்கள் உடலில் காயங்களும் இல்லை என்பதால், இந்த வழக்கு அதிகாரிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

2017ல் அவுஸ்திரேலியாவுக்கு வந்த இரு சகோதரிகளும் அகதிகள் சேவை மூலமாக அகதி அந்தஸ்து கேட்டு முறையிட்டு வந்துள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.