19 வயது கர்ப்பிணிப் பெண்னுக்கு நடந்த கொடூரம் : கணவர் வீட்டார் செய்த கொடுமை!!

கேரளாவில் ..

19 வயது கர்ப்பிணிப் பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் கணவர் வீட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலத்தூரைச் சேர்ந்த அனந்து என்பவரின் மனைவி பாக்யா (19) என்பவரே உயிரிழந்துள்ளார். இருவரும் காதலித்து, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பாக்யாவின் தாயார், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இலத்தூர் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாக்யாவை கடத்திய புகாரின் பேரில் ஆனந்து மீது போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சட்டப்பூர்வ திருமண வயதை எட்டியதும், அனந்துவை திருமணம் செய்து கொள்வதன் மூலம் வழக்கை சமரசம் செய்தனர். பாக்யாவை அனந்துவின் தாய் சித்திரவதை செய்து வந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

5 வருடமாக பழிவாங்க துடிக்கும் தெருநாய் : ஓர் சுவாரஸ்ய சம்பவம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் பெரும்பிலாவு பகுதியில் சுற்றித்திருந்த தெருநாய் மீது 5 வருடங்களுக்கு முன்பு அவ்வழியாகச் சென்ற கார் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நாய் தீவிர சிகிச்சை பெற்று சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அப்பகுதிக்கே வந்துள்ளது.

இதையடுத்து அந்த வழியாகச் செல்லும் கார்களை நாய் பின்தொடர்ந்து மோப்பம் பிடித்து வருகிறது. முதலில் நாய் ஏன் இப்படி செய்கிறது என்று குழப்பத்தில் இருந்த மக்களுக்கு பின்னர்தான்,

இந்த நாய் தன்மீது மோதிய காரை தேடுகிறது என தெரியவந்துள்ளது. நாயின் இந்த பழிவாங்கும் போராட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணமகன் இல்லாமல் தனியாக திருமணம் செய்த பெண்ணின் அடுத்த அதிரடி திட்டம்!!

குஜராத்தில்..

குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்ற இளம்பெண், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றிருந்த நிலையில், மிகப்பெரிய அளவில் இந்த விஷயம் வைரலாக பேசப்பட்டிருந்தது.

குஜராத்தின் வதோதரா பகுதியில் வசித்து வரும் ஷாமா பிந்து என்ற பெண், ஜூன் 11ஆம் தேதி, தனியாக திருமணம் செய்திருந்தார். இதற்கு சோலோகேமி என்று பெயர்.

இது குறித்து பேசி இருந்த ஷாமா பிந்து, நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும் ஆனால் மணமகளாக விரும்பியதால் நானே என்னை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன் என்றும் கூறியிருந்தார்.

அதே போல, நான் என்னை நேசிக்கிறேன் என்றும், இந்த திருமணத்தை நான் விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தியாவில், முதல் முறையாக சுயதிருமணம் செய்து கொண்டதும் ஷாமா பிந்து தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தன்னைத் தானே ஒரு இளம் பெண் திருமணம் செய்து கொண்ட விஷயம் பற்றி பலரும் ஏராளமான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். தனக்கு தானே இவர் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஷாமா பிந்து தொடர்பான செய்தி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருக்குறது. திருமணத்திற்கு பின்னர், தேனிலவுக்காக கோவா செல்வதாகவும் ஷாமா பிந்து முன்பு குறிப்பிட்டிருந்தார்.

திருமணம் ஆகி சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், அதன் அடுத்த கட்டமாக தன்னுடைய ஹனிமூனுக்காக, வரும் ஆகஸ்ட் 7 அம் தேதி கோவா செல்லவும் ஷாமா பிந்து முடிவெடுத்துள்ளார்.

கோவாவில் உள்ள Arambol என்னும் கடற்கரை தன்னுடைய ஃபேவரைட் இடம் என்றும் அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, தான் ஹனிமூனில் இருக்கும் போது, பலரும் என்னிடம் உங்கள் கணவர் எங்கே என்று கேட்பார்கள்.

அப்படி கேட்கும் போது அவர்களிடம் சோலோகேமி குறித்து விளக்கி, என்னையே நான் திருமணம் செய்து கொண்டேன் என்றும், அதற்கான காரணத்தையும் அவர்களிடம் தெரிவிக்க ஒரு வாய்ப்பு உருவாகும் எனவும் ஷாமா பிந்து குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பின்பான தனது வாழ்க்கை பற்றி பேசிய ஷாமா, மற்ற புதிதாக திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கையை போல, தானும் சிறப்பாக அதனை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மனைவிக்காக 3 வருடமாக திட்டமிட்டு கணவன் கொடுத்த பரிசு : ஆனந்தக் கண்ணீரில் மனைவி!!

சர்ப்ரைஸ்..

மிகவும் நெருக்கமான ஒருவருக்கு வித்தியாசமாக, மனதில் நிற்கக் கூடிய சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுப்பதை நாம் நிறைய கேள்விப்பட்டு இருப்போம். அதிலும் குறிப்பாக, காதல் ஜோடிகள் அல்லது தம்பதிகள், தங்களின் பார்ட்னருக்கு கொடுக்கும் சர்ப்ரைஸ் என்பது, மிக மிக ஸ்பெஷலான ஒன்றாகும்.

அப்படி உருக வைக்கக் கூடிய நிறைய வகை வகையான சர்ப்ரைஸ்களை நாம் பார்த்திருக்கலாம். ஆனால், அவை அனைத்தையும் விட ஒரு படி மேலே உள்ளது, தனது மனைவிக்காக 12 ஆவது திருமண நாளில் ஒரு கணவர் கொடுத்து அதிரடி சர்ப்ரைஸ்.

கென் என்பவர், 12 வது திருமண நாளின் போது, தனது மனைவிக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அப்படி கொடுத்த சர்ப்ரைஸ் தொடர்பான வீடியோ ஒன்றை அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் கென் வரவே, மனைவியின் கண்களை குழந்தைகள் பொத்தி வைத்துக் கொண்டபடி வருகின்றனர்.

தொடர்ந்து, ஒரு இடத்தில் வாகனம் நிற்கவே, கணவர் கென் மனைவியின் கண்ணை பொத்திக் கொண்டு, காரிலிருந்து வெளியே இறக்குகிறார். பின்னர் கணவர் கை எடுத்ததும் கண் திறந்த மனைவி, கணவரின் சர்ப்ரைஸால் ஒரு நிமிடம் ஆடி போய், ஆனந்த கண்ணீர் வடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, மனைவிக்கே தெரியாமல் வீடு ஒன்றைக் கட்டி வந்த கென், அதனை தனது 12 வது திருமண நாளில், பரிசாகவும் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கென், தனது கேப்ஷனில், “இது ஓனருக்கான திருமண நாள் கிஃப்ட். கிட்டத்தட்ட மூன்று வருடமாக உருவான சென்னை வீடு. காதலை கொண்டாடுவோம். எல்லா கசப்பையும் காதலால் வெல்வோம். இனிய 12 வது திருமண நாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

வீடு கட்டியதுடன் நிறுத்தி விடாமல், மொத்தமாக ஃபர்னிச்சர் பொருட்களையும் வாங்கி போட்டுள்ள கென், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பல இடங்களில் போட்டு வைத்துள்ளார். அது மட்டுமில்லாமல், இந்த வீட்டில் லிப்ட் இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, ரெஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்த போது, மனைவிக்கு மாற்று ஆடை வாங்கி கொடுக்க கூட பணம் இல்லாமல் இருந்ததாகவும், திருமணத்தின் ஒரு புகைப்படம் கூட எங்களிடம் இல்லை என்றும் உருக்கத்துடன் கென் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் கலங்கிப் போன நிலையில், மிகச் சிறந்த சர்ப்ரைஸ் என்றால் இது தான் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

காதல் மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்ற கணவன்… பின்னர் நடந்த விபரீதம்!!

ஆந்திராவில்..

ஆந்திரா மாநிலம், கோனே அருவிக்கு அழைத்து சென்று, காதல் மனைவியை கத்தியால் குத்தி வீசிவிட்டு வந்த கணவனின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவரது மனைவி பால்கிஸ்(39).

இவர்களின் மகள் தமிழ் செல்வி (21). பாடிய நல்லூர், ஜோதி நகரை சேர்ந்தவர் மதன் (25), இவர், மெக்கானிக், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழ் செல்வியும், மதனும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்த நிலையில், மதன் வீட்டில் இருந்த தமிழ் செல்வி காணவில்லை என்பதை தெரிந்துகொண்ட பெற்றோர், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அந்த விசாரணையில், கடந்த ஜூன் 26ம் தேதி அன்று, மதன், தமிழ்செல்வி இருவரும் ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகேயுள்ள கோனே அருவிக்கு சென்றது தெரியவந்தது. அங்கு ஏற்பட்ட தகராறில், தமிழ்செல்வியை, மதன் கத்தியால் குத்திவிட்டு அங்கேயே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

அங்குள்ள, சிசிடிவி கேமராக்களில், மதன், தமிழ் செல்வியுடன் பைக்கில் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. ஆனால், அம்மாநில போலீசார் உதவியுடன், செங்குன்றம் போலீசார், வனப்பகுதிக்கு சென்று தேடியும், தமிழ் செல்வியின் உடல் கிடைக்கவில்லை.

தொடர்ந்து போலீசார், மதன், அவரின் நண்பர்கள் பாண்டு, சந்தோஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த ஒரு மாதமாகியும், தன் மகளின் நிலைமை இன்னும் தெரியவில்லை என தமிழ் செல்வியை கண்டுபிடித்து தருமாறு, உயர் நீதிமன்றத்தில், பெற்றோர், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்னர், தமிழ் செல்வி, போன் போட்டு, தாயிடம் பணம் கேட்டார், அப்போது, மதன், தமிழ் செல்வியின் செல்போனை பிடுங்கி சண்டை போட்டார்.

பணத்திற்காக, தமிழ் செல்வியை மதம் கத்தியால் குத்தியிருக்கலாம் என போலீசார் விசாரிக்கின்றனர். கத்தி குத்தப்பட்ட தமிழ் செல்வி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா எனதுகூட தெரியாமல் பெண்ணின் பெற்றோர் பரிதவித்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களுக்கு திருமணம் : தடபுடலாக விருந்து வைத்த குடும்பம்!!

இந்தியாவில்..

இந்திய மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோத நிகழ்வு நடந்துள்ளது. சிறிய வயதிலோ அல்லது இளமை காலத்திலோ, திருமணம் செய்யாமல் யாராவது இறந்துவிட்டாலோ அவர்களின் ஆன்மாக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு இந்தியாவின் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மாக்கள் மோட்சம் அடையும் என்று நம்பப்படுகிறது. பிரேத திருமணம் எனப்படும் இந்த சடங்கு கர்நாடக மாநிலம் தட்சினா கன்னடா மாவட்டத்தில் நடந்துள்ளது.

உண்மையாக நடக்கும் திருமணத்தை போல பல சடங்குகள் இதில் கடைபிடிக்கப்பட்டன. இரு இருக்கைகள் அமைக்கப்பட்டு, அதில் மணமகன் மற்றும் மணமகளின் ஆடைகள் வைக்கப்பட்டன.

அதன் பின்னர் சில கலாச்சார சடங்குகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்த ஆடைகளுடன் மணமகன், மணமகள் சார்பில் இருதரப்பு உறவினர்கள் ஏழு முறை சுற்றி வந்தனர்.

இந்த திருமண நிகழ்வில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அதில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் வறுவல், இட்லி ஆகியவை இடம்பெற்றன. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர், திருமண சடங்குகள் குறித்த வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து, தானும் இதில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

நூடுல்ஸ் சாப்பிட்ட பெண் துடிதுடித்து பலியான சோகம் : நடந்த விபரீதம்!!

மும்பையில்..

விஷம் கலந்த தக்காளியை நூடுல்சில் கலந்துசாப்பிட்ட மும்பை பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை, மலாடில் உள்ள பாஸ்கல் வாடியில் வசித்து வருகிறார் ரேகா நிஷாத். தனது கணவருடன் வசித்து வரும் ரேகா கூலி வேலை செய்து வந்தார்.

அவர்கள் வீட்டில் அதிகமாக எலி தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் எலிகளுக்கு தக்காளியில் விஷம் வைத்திருக்கிறார். ஒருநாள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த உடன் நூடுல்ஸ் தயார் செய்திருக்கிறார்.அதில் எலிக்கு வைத்திருந்த விஷம் கலந்த தக்காளியை தெரியாமல் பயன்படுத்தி உள்ளார்.

அந்த நூடுல்ஸ்சினை சாப்பிட்டு, சிறிது நேரத்துக்குள் அந்த பெண்ணின் உடல்நிலை சரியாகாமல் போக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் இந்த செய்தி வெளியானது. புதன்கிழமை அன்று உயிரிழந்தார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 100,000 பேருக்கு 32.6 என்ற தேசிய சராசரியை விட அதிகமான விபத்து இறப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3,74,397 தற்செயலான இறப்புகள் ஏற்பட்டுள்ளன, இதில் 35% க்கும் அதிகமான இறப்புகள் வாகன விபத்துக்களால் ஏற்படுகின்றன.

இது போன்ற நிகழ்வுகள், ஒரு நபர் அறியாமல் அலட்சியம் காரணமாக சுயமாக விளைவித்து தானே மரணம் அடையும் நிகழ்வுகள் மிகவும் அரிதானவை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநம்பியுடன் ரகசிய காதல் வாழ்க்கை : நீதிமன்றம் கொடுத்த முக்கிய உத்தரவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருநம்பியுடன் ரகசிய காதல் வாழ்க்கை நடத்திய பெண்ணை அவருடனே செல்ல நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் நடந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் திருநம்பி ஒருவரும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் நண்பர்களாகியுள்ளனர்.

இந்த நட்பு காதலாக மாறவே, கடந்த 7ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த அப்பெண்ணின் பெற்றோர், அவரை தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து திருநம்பி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், இருதரப்பினரும் சமரசத் தீர்வு மையம் மூலம் முடிவு எட்டுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனால், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கிடையே நேற்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் முன்பு மனுதாரர், அந்தப்பெண், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

நீதிபதிகள் அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்த போது, காதலனுடன் செல்ல விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணுக்கு 21 வயது பூர்த்தியானதால், அவர் விரும்பியபடி மனுதாரருடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

இறுக்கமாக்கப்பட்ட தேசிய எரிபொருள் விநியோகம் : அனைத்து வாகன சாரதிகளுக்குமான முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு…

கியூ.ஆர் அட்டை முறை தொடர்பான முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் ஒன்று எரிசக்தி அமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக் கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அத்துடன், எரிசக்தி அமைச்சகத்தினால், வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவ் அறிப்புகள் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

1. தேசிய எரிபொருள் கியூ.ஆர் அட்டை ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும். கடைசி இலக்க எண் தகடு அமைப்பு, டோக்கன்கள் மற்றும் நடைமுறையில் இருந்த பிற ஏற்பாடுகள் அனைத்தும் நிராக்கப்படும். கியூ.ஆர் அட்டை மற்றும் கோட்டா அடிப்படையில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.

2. கியூ.ஆர் அட்டை முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எரிபொருள் நிலையங்களில் கியூ.ஆர் அட்டை ஐப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கண்காணிக்கப்படும்.

3. வாகன (Chassis Number) எண்ணுடன் பதிவு செய்ய முடியாத வாகனங்களைப் பயன்படுத்துவோர் நாளை முதல் வருவாய் உரிம எண்ணுடன் (Revenue License number) பதிவு செய்யலாம்.

4. அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் அந்தந்த பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பொலிஸ் நிலையத்தின் ஊடாக அவர்களுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

5. ஜெனரேட்டர்கள், தோட்டக் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள், தேவையான எரிபொருள் வகை, வாரத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தேர்வு ஆகியவற்றை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

6. பல வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் அனைத்து வாகனங்களையும் தங்கள் வணிகப் பதிவு எண்ணுடன் பதிவு செய்ய முடியும்.

7. பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இலங்கை அரச போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு டிப்போக்களில் ஊடாக வழங்கப்படும். அவை வழித்தட அனுமதி மற்றும் சேவையில் உள்ள கி.மீ.களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டைக் கொண்டு ஒதுக்கப்படும்.

8. பாடசாலை சேவை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து வாகனங்கள், தொழில்கள், சுற்றுலாத் துறை, நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் டீசல் எரிபொருள் தேவைகளையும் இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் ஊடாக முன்னெடுக்கப்படும்.

9. அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அவர்கள் கோரும் அளவு எரிபொருளை வழங்க வேண்டும்.

10. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பொலிஸ் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்.

11. பொதுமக்கள் 0742123123 என்ற எண்ணுக்கு சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு அல்லது விற்பனை நடவடிக்கைகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோ ஆதாரங்களை WhatsApp இல் அனுப்ப முடியும். அவர்களின் கியூ.ஆர் அட்டை அணுகல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

12. திங்கட்கிழமையன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட்டத்தை கூட்ட வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

தினசரி மின்வெட்டு 14 மணிநேரமாக அதிகரிக்கப்படலாம் : வெளியான அறிவிப்பு!!

மின்வெட்டு..

தினசரி மின்வெட்டு நேரம் 14 மணி நேரமாக அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்த மின்வெட்டை 14 மணிநேரமாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை, திறைசேரிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு 320 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்களை திறக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு அறிவித்ததாக அவர் அங்கு குறிப்பிட்டார். எனினும் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்திற்குள் உரிய நிலக்கரி இருப்புக்களை கொள்வனவு செய்ய முடியாவிட்டாலும், நாளாந்த மின்வெட்டை 14 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு அறிவித்துள்ளது.

-தமிழ்வின்-

3 மாதத்தில் கசந்த மணவாழ்க்கை : வீடு புகுந்து மனைவியை கடத்திய கணவரால் பரபரப்பு!!

மட்டக்களப்பு..

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பிரதேசத்தில் மனைவியை வீடு புகுந்து கணவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து கோரி நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துவிட்டு பெற்றோருடன் வாழ்ந்து வரும் தனது மனைவியையே கணவர் இவ்வாறு கடத்த முற்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் முடித்துள்ளார். எனினும் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவனைவிட்டு பிரிந்து சென்று தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்ற அவர் கணவனிடம் இருந்து விவாகரத்து கோரி அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (29.07) காலையில் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்த கணவர் அவரது பெற்றோர் உட்பட 3 பேர் பெண்ணின் தாயார் மற்றும் அவரது இரு சகோதரிகளை தாக்கிவிட்டு பெண்ணை கடத்தி கொண்டு சென்று தனது வீட்டின் அறையில் பூட்டி வைத்துள்ளனர்.

தாக்குதலில் பெண்ணின் தாயார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டு தலைமையக பொலிசார் பெண்ணை கடத்திச் சென்றவர்களின் வீட்டை முற்றுகையிட்டு பெண்ணை மீட்டனர்.

அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் கணவர் அவரது பெற்றோர் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியாவில் “தமிழ் இனப் படுகொலையாளிகளை சர்வதேசமே கைது செய்” என போராட்டம்!!

போராட்டம்..

தமிழ் இனப் படுகொலையாளிகளை சர்வதேசமே உடன் கைது செய் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30.07) இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘சர்வதேசமே வீதியில் கண்ணீருடன் நாம், தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட சிறிலங்கா, தமிழ் இனப்படுகொலையாளிகளான கோத்தாவையும்- மகிந்தாவையும் சர்வதேசமே கைது செய்,

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை முற்றாக நிறுத்த வேண்டும்’ என எழுத்ப்பட்ட சுலோக அட்டைகளையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்ததுடன், காணமல் ஆக்க்பட்டோருக்கு நீதி கோரி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

தனுஷை வெறுப்பேற்ற இப்படியா? ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விளாசும் ரசிகர்கள்!!

தனுஷ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். திருமணமாகி 18 ஆண்டுகளாகி யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் வளர்ந்த பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து செய்ய பிரிந்து வாழ்வதாக அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர்.

அதன்பின் இருவரும் இரு துருவங்களாக தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனுஷ் பல படங்களில் நடித்தும் ஐஸ்வர்யா இயக்கம், உடற்பயற்சி, சைக்கிளிங் என்று பிஸியாக இருந்து வருகிறார்கள். நடிகர் தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் படம் தி கிரே மேன் சமீபத்தில் வெளியாகி தனுஷின் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படம் வெளியானதை தொடர்ந்து பாலிவுட் இயக்குனர் ரித்தேன் தி கிரேன் மேன் இயக்குனர்கள் ரூஸ்ஸோ பிரதர்ஸ்களுக்கு பார்ட்டி கொடுத்தார். சில பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டதில் நடிகர் தனுஷும் சென்றுள்ளார்.

அவருடன் அட்ராங்கிரே படத்தில் ஜோடியாக நடித்த சாரா அலிகானும் கலந்து கொண்டுள்ளார். அப்போது இருவரும் கைக்கோர்த்தபடி போட்டோஷூட் எடுத்தும் இருந்தனர். இதுகுறித்து பலர் புகைப்படங்களை வைரலாக்கி தனுஷை விமர்சித்தும் வந்தனர்.

இதனை அடுத்து ஐஸ்வர்யாவும் போனி கபூரை பார்த்து புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பகிர்ந்து கொண்டார். இதனை நெட்டிசன்கள் பழி வாங்க இருவரும் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று கண்டபடி திட்டியும் வருகிறார்கள். தனுஷ் பிறந்த நாளுக்கு கூட ஒரு பதிவினை போட்டு வாழ்த்து கூறவில்லை என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி : வைரலாகும் வீடியோ!!

இன்ப அதிர்ச்சி.

ஆண் தோழனிடம் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய பெண்ணுக்கு, பதிலுக்கு அவர் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. பொதுவாக ஒரு ஆணோ பெண்ணோ ஒரு முழங்காலில் மண்டியிட்டு ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா?’என மோதிரத்துடன் ப்ரொபோஸ் செய்வார்கள்.

ஆனால், இப்போது இணையத்தில் வேகமாக பரவிவரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் தனது ஆண் நண்பரிடம் எதிர்பாராத விதமாக, ஒற்றைக்காலில் மண்டியிட்டு மோதிரத்துடன் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக ப்ரொபோஸ் செய்துள்ளார்.

அப்போது, அந்த ஆண் அதனை ஏற்பார் அல்லது நிராகரிப்பார் அல்லது எப்படி எதிர்வினையாற்றுவார் என்ற ஆவல் எழும் நிலையில், பதிலுக்காக காத்திருந்த அப்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சியாக, அவரும் அதே நேரத்தில் மோதிரத்தை நீட்டி மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் ப்ரொபோஸ் செய்யும் இந்த அழகான வீடியோ தற்போது வேகமாக பரவிவருகிறது. வைரலான அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ViralHog பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் முடிவில் இருவரும் முத்தங்களை பகிர்ந்துகொண்டனர்.

கனடாவிற்கு ஆசை ஆசையாய் படிக்க சென்ற பெண்ணுக்கு நடந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

கனடாவில்..

கனடாவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் குராளியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவர் மகள் ஸ்வேதா. பள்ளிப்படிப்பை முடித்த ஸ்வேதா கனடாவுக்கு மேற்படிப்பு படிக்க சென்றார். அங்குள்ள சரே நகரில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் அங்கு கார் ஒன்று வேகமாக வந்து ஸ்வேதா மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சஞ்சீவ்குமார் கூறுகையில், படிப்பில் கெட்டிக்காரியாக ஸ்வேதா திகிழந்தார். வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பியதால் பல சிரமங்களுக்கு இடையே அவளை அனுப்பி வைத்தேன், அவள் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு வந்தது.

என் மகள் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

திருமண நேரத்தில் மணப்பெண்ணை வேண்டாம் எனக்கூறிய மாப்பிள்ளை : காரணத்தைக் கேட்டு அதிந்து போன மணப்பெண்!!

துனிசியா..

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கவும், அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவும் செய்யப்படுகிறது. அப்படியுள்ள திருமண நிகழ்ச்சியை மிகவும் அமர்க்களமாக குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடத்துவார்கள்.

அந்த வகையில், திருமண மேடை வரை சென்ற பிறகு திடீரென நடந்த சம்பவம் ஒன்று பலரையும் அதிர வைத்துள்ளது. துனிசியா நாட்டை சேர்ந்த இளைஞர், ஒரு பெண்ணை விரும்பி அவரையே திருமணம் செய்ய ஆசைப்பட்டு அந்த பெண்ணின் புகைப்படத்தை தனது தாயாருக்கு காண்பித்துள்ளார்.

இதன் பின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் மிக மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. அப்படி ஒரு நிலையில், திருமண நாளும் வரவே, புகைப்படத்தில் பார்த்த தனது மருமகளை முதன் முறையாக அன்று தான் நேரில் பார்த்துள்ளார் மணமகனின் தாயார்.

மருமகளை நேரில் பார்த்து விட்டு மாமியார் கூறிய கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, திருமண நாளில் தனது மகனை அழைத்த தாயார், நீ பார்த்த பெண் கவர்ச்சியாக இல்லை என்றும் அவர் மிக குள்ளமாக இருக்கிறார்.

இதனால் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார். தாய் இப்படி கூறியதால் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உடனே மாப்பிள்ளையும் திருமணத்தை கைவிட்டுள்ளார்.

மேலும், மேடை வரை வந்து திருமணம் நின்று போனதால், தன்னை காண்பவர்கள் பலரும் தன்னை பற்றி ரகசியமாக புறம் பேசுவதாகவும், இதன் காரணமாக தான் அவமானமாக உணர்வதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு என யாரும் இல்லை. அனாதையாக நான் திருமணத்துக்கான பண செலவை தனி ஆளாக சேர்த்து, பார்த்து பார்த்து செலவு செய்ததாகவும், திருமணம் நின்றதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் வைரலான நிலையில் பலரும் அந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்க, ஏமாற்றிய மாப்பிள்ளையை கண்டமேனிக்கு நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.