“அவளுக்காக தான் ஆணா மாறுனேன்..” காதலுக்காக போராடிய பெண் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

திண்டுக்கல்லில்..

தான் காதலித்து வந்த பெண்ணிற்காக, ஆணாக பெண் ஒருவர் மாறிய நிலையில், இது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை அடுத்த பழைய வத்தலகுண்டு என்னும் இடத்தை சேர்ந்தவர் சவுமியா.

இவரும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி தேவி என்பவரும் சமூக வலைத்தளம் மூலம் பழகி, காதலித்து வந்துள்ளனர். அது மட்டுமில்லாமல், சவுமியாவிற்காக ஒரு ஆணாகவும் தன்னை மாற்றிக் கொள்ள நந்தினி தேவி முடிவு செய்துள்ளார்.

தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தன்னை ஆணாக மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சை ஒன்றையும் நந்தினி தேவி எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் தனது பெயரையும் நந்தினி தேவி என்பதில் இருந்து, யஷ்வந்த் என்றும் மாற்றி உள்ளார்.

யஷ்வந்த் என்கிற நந்தினி தேவியும், சவுமியாவும் பின்னர் திருமணமும் செய்து கொண்டு, தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி தகவலறிந்த சவுமியாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள், இருவரையும் பிரித்து, சவுமியாவை அழைத்து சென்றுள்ளனர்.

இதனால், தனது மனைவி சவுமியாவை மீட்டுத் தர வேண்டுமென போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார் யஷ்வந்த் என்கிற நந்தினி தேவி. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சவுமியாவுக்கு யஷ்வந்த்துடன் வர விருப்பம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால், நிச்சயம் சவுமியா அப்படி சொல்லி இருக்க மாட்டார் என்றும், குடும்பத்தின் வற்புறுத்தலால் அவர் அப்படி சொல்லி இருப்பார் என்றும் யஷ்வந்த் குறிப்பிட்டிருந்தார். அதே போல, தன்னுடைய காதலிக்காக ஆணாக மாற அறுவை சிகிச்சை கொண்ட யஷ்வந்த் என்கிற நந்தினி தேவியின் ஆயுட்காலம், 35 முதல் 40 ஆண்டுகளாக குறைந்துள்ளதாகவும், உயிரை பயணம் வைத்து சேர்ந்து வாழ ஆசைப்பட்டதாகவும் யஷ்வந்த் கூறி இருந்தார்.

இந்நிலையில், தனது மனைவி சவுமியாவை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என வழக்கு ஒன்றையும் யஷ்வந்த் என்கிற நந்தினி தேவி வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, யஷ்வந்த் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் மனைவி சவுமியாவுக்கு 21 வயதாகிறது என்றும், எனவே அவர்கள் சொந்த விருப்பப்படி வாழ அனுமதிப்பதாகவும் உத்தரவிட்டனர்.

இதன் பின்னர், காவல்துறை உதவியை யஷ்வந்த் நாடி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தற்போது நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

ஆந்திராவில்..

திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் 30 வயது பெண் ஒருவர், 15 வயது சிறுவனை மூளைச்சலவை செய்து வீட்டை விட்டு கூட்டி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா பகுதியை அடுத்துள்ள குடிவாடா பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா. 30 வயதுடைய இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக இவர் இவரது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் குடும்பத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், ஸ்வப்னா வீட்டிற்கு வந்து டி.வி., பார்ப்பது வழக்கம். தனது ஸ்வப்னா அந்த 15 வயது சிறுவனுக்கு ஆபாச வீடியோக்களை போட்டுக்காட்டியுள்ளார். மேலும் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி பல நாட்களாக இருந்து வந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவனிடம் தனது கணவர் தனது வீட்டிற்கு மீண்டும் வருவதாக கூறிய ஸ்வப்னா, நாம் எங்கேயாவது சென்று விடலாம் என்று கூறியுள்ளார். இதற்கு சிறுவன் முதலில் தயங்க, தான் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்வதாக மூளைச்சலவை செய்துள்ளார்.

எனவே சிறுவனும் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி கடந்த 19-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் ஏதும் அறியாத சிறுவனின் பெற்றோர்கள், சிறுவனை காணவில்லை காவல்துறையில் புகைரளித்தனர். இதையடுத்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், எதிர்வீட்டில் இருந்த ஸ்வப்னாவையும் காணவில்லை என்பதை கேட்டவுடன் சேந்தேகித்தனர்.

இதையடுத்து ஸ்வப்னாவின் செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் தேடியபோது, ஸ்வப்னா ஐதராபாத்தில் ஒரு லாட்ஜில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஐதராபாத் விரைந்த காவல் அதிகாரிகள், ஸ்வப்னா தங்கியிருந்த லாட்ஜூக்கு சென்றபோது அங்கு அந்த சிறுவனும் இருந்துள்ளார்.

பின்னர் இருவரையும் குடிவாடா பகுதிக்கு அழைத்து வந்த காவல்துறையினர், ஸ்வப்னா மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் 30 வயது பெண் ஒருவர், 15 வயது சிறுவனை மூளைச்சலவை செய்து வீட்டை விட்டு கூட்டி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் புது மாப்பிள்ளை வெட்டிக் கொலை : உடலைப் பார்த்து கதறிய மனைவி!!

புதுச்சேரியில்..

தமிழகத்தின் புதுச்சேரியில் பட்டப்பகலில் புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரி ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ், இவரது மகன் சாலமன்(வயது 24).

இவருக்கும், திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று மாலை சாலமன் நாவற்குளம் பகுதியில் உள்ள கடையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் சாலமனை நோக்கி அரிவாள், கத்தியுடன் சென்றனர். இவர்களை பார்த்ததும் சாலமன் ஓட்டம்பிடித்தார், அவரை விரட்டிபிடித்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலிஸ் அதிகாரிகள் சாலமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சாலமனுக்கும், நாவற்குளத்தை சேர்ந்த ரகு என்பவருக்கும் தகராறு இருந்து வந்ததும், கடந்த சில நாட்களாக மோதல் நீடித்து வந்ததும் தெரியவந்தது.

இதன் காரணமாகவே சாலமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர், மேலும் ரகு உட்பட 7 பேர் கொண்ட கும்பலையும் தேடி வருகின்றனர்.

அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம் : கேக் வெட்டி கொண்டாடி மொத்த குடும்பமும் தற்கொலை!!

இந்தியாவில்..

இந்தியாவில் மொத்த குடும்பமும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியபடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் ஷைலேந்திரகுமார். இவர் மனைவி கீதா. தம்பதியின் மகள் பெயர் பிரச்சி.

இந்த நிலையில் ஷைலேந்திரகுமாருக்கு இரு தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் ஆகும். அன்றைய தினம் குடும்பத்துடன் கேக் வெட்டிய ஷைலேந்திரகுமார், கேக் சாப்பிட்ட பின்னர் அவர்களிடம் இனி அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம் என கூறினார்.

கேக் சாப்பிட்ட சிறித்து நேரத்தில் மூவரும் உயிரிழந்தனர், ஏனெனில் கேக்கில் விஷம் கலக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணையில் கடன் பிரச்சனையால் தவித்து வந்த ஷைலேந்திரகுமார் தொடர்ந்து சிலரால் மிரட்டப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வந்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.

இதையடுத்தே இம்முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த மரணங்கள் தொடர்பாக பொலிசார் நால்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் தற்கொலைகள் : கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வரும் சூழலில், திருவேற்காடு பகுதியில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

திருவேற்காடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, மேல் தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில கல்லூரியும் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர், இங்கே ஈரோட்டை சேர்ந்த 19 வயதான சுமதி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார்.

நேற்று காலை வகுப்பிற்கு சென்றுவிட்டு, மதியம் தோழிகளுடன் சேர்ந்து சாப்பிட சென்றுள்ளார், அனைவரும் வகுப்புக்கு கிளம்பிய பின்னர், சிறிது நேரம் கழித்து வருவதாக கூறியுள்ளார். நீண்டநேரம் ஆகியும் சுமதி வராததால், தோழிகள் சென்று பார்த்துள்ளனர், அப்போது அறையின் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலிசாருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சுமதியின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே சுமதியின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் ஈடுபட முயன்றனர், இதையறிந்த போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? சக மாணவிகளுடன் தகராறு ஏற்பட்டதா? அல்லது கல்லூரி நிர்வாகத்தில் ஏதாவது தகராறு ஏற்பட்டதா? என பல்வேறு கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

9 வயது மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் : வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!!

மத்தியப் பிரதேசத்தில்..

எண்களை சரியாக கூறாத 9 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஆசிரியர் ஜினேந்திர மோக்ரா என்பவர் 3ம் வகுப்பு மாணவி (9 வயது) ஒருவரை அழைத்து எண்களை தொடர்ந்து கூறுமாறு கூறியுள்ளார்.

அந்த சிறுமியும் ஆசிரியர் கூறியதுபோல 34-வது எண் வரை சரியாக சொல்லிய அந்த மாணவி பின்னர், 35-வது எண்ணை சொல்வதில் தடுமாறியுள்ளார். இதனால் கோவம் அடைந்த அந்த ஆசிரியர் அந்த மாணவியை தாக்கியுள்ளார்.

மாணவியின் கன்னத்தில் அடுத்தடுத்து தாக்கிய அவர், பின் மாணவியின் பின்தலையிலும் அடித்துள்ளார். தொடர்ந்து மாணவி தனது இடத்துக்கு சென்ற போதும் பின்வந்து அவரை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இரு இளைஞர்களுக்கு நடு வீதியில் நடந்த பரிதாபம்!!

படப்பையில்..

படப்பையில் கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்.

இவர் தனது நண்பர்களான சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (17), பனையூரை சேர்ந்த விக்னேஷ் (18) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் வண்டலூர்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

படப்பை பகுதியை இவர்கள் வந்தடைந்த போது சாலையை கடக்க முயன்ற கார் மீது இவர்களது இருசக்கர வாகனம் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட உதயகுமார், லோகேஷ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் உடன் வந்த விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து இது குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல்துறை மற்றும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதனை தொடர்ந்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிந்து விபத்து குறித்து தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் நேர்ந்த கொடுமை : தாயை தேடி 200 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்ற சிறுவன்!!

முல்லைத்தீவில்..

நெடுங்கேணியில் இருந்து வாழைச்சேனை வரை 200 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு சிறுவன் ஒருவர் சைக்கிளில் சென்றதாக கெபத்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சித்தியின் துன்புறுத்தல் தாங்க முடியாத 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு சென்றுள்ளார். முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனை பொலிஸ் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

வவுனியா கெபத்திகொல்லாவ பிரதான வீதியின் புளியங்குளம் காட்டுப் பகுதியில் சிறுவன் ஒருவர் சைக்கிளில் செல்வதை பிரதேசவாசிகள் கண்டதுடன் பிரதேசவாசிகளின் சந்தேகத்தின் அடிப்படையில் கெபத்திகொல்லாவ தலைமை பொலிஸ் பரிசோதகர் சமில ரத்நாயக்கவிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இந்த சிறுவனை பாதுகாப்பாக தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். சிறுவனுக்கு உணவு, பானங்கள் வழங்கியதுடன், பராமரிப்பையும் வழங்க நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில்,

நெடுங்கேணி பிரதேசத்தில் வசிக்கும் சித்தியின் அன்றாட துன்புறுத்தல் மற்றும் தொல்லை தாங்க முடியாமல் வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சைக்கிளில் பயணிக்க தீர்மானித்துள்ளதாக சிறுவன் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியினர் அதிரடியாக கைது!!

விமான நிலையத்தில்..

கொழும்பு – கல்கிசை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தம்பதிகள் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது நேற்று(30) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி கல்கிசையில் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் துபாய்க்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக கிடைத்த தகவலையடுத்து கல்கிசை பொலிஸார் விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதன்படி, விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் சந்தேக நபர்களுக்கு எதிராக தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட்திருந்தது.

இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-653 விமானத்தில் துபாய்க்கு புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு வந்த வேளையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு உதவிய கடற்படையினர்!!

கதிர்காமத்திற்கு..

யாழ்ப்பாணத்தில் இருந்து பாதயாத்திரையாக கதிர்காமத்திற்கு செல்லும் முருக பக்தர்களுக்கு குமண தேசிய வனத்தின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையான வழிப்பாதையை கடந்து செல்ல தேவையான வசதிகளை கடற்படையினர் வழங்கியுள்ளனர்.

கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் உத்தரவின் பேரில் தென்கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கட்டளை தளபதி ரியர் அத்மிரல் பிரசாத் காரியபெருமவின் கண்காணிப்பின் கீழ் முருக பக்தர்களுக்கான வசதிகளை கடற்படையினர் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், உயிர் காப்பு சேவை உள்ளிட்ட வசதிகளை கடற்படையினர் வழங்கியுள்ளனர். பக்தர்கள் கும்புக்கன் ஓயா ஆற்றை கடந்து செல்ல ஆற்றுக்கு குறுக்காக இரண்டு கயிறுகளை கட்டி அவர்களை பாதுகாப்பாக கரையேர கடற்படையினர் உதவியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வடக்கு, கிழக்கில் இருந்து முருக பக்தர்கள் யாத்திரையாக கதிர்காமம் சென்று தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

வவுனியா ஆச்சிபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சுட்டும் வெட்டியும் படுகொலை!!

ஆச்சிபுரம் பகுதியில்..

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒரு கட்டுத் துவக்கால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (31.07) மாலை அந்தப் பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கட்டுத்துவக்கினால் அவர் மீது சுடப்பட்டுள்ளதாகவும் அதன் பின் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இளம் குடும்பஸ்தரது உடலில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுவதுடன், ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்டு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சா என அழைக்கப்பட்ட யோன்சன் என்ற 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.

சடலம் சட்டவைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முகக்கவசம் அணியாமல் சென்றால் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை!!

முகக்கவசம்..

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருவோருக்கு நாளை (01.08) முதல் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் விற்பளையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவிக்கப்படும் என அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது சுகாதாரப் பழக்கவழக்கங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, QR முறையின் கீழ் எவரும் நாளை முதல் ஒரு வாரத்துக்குள் ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்வெட்டு நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கப்படலாம் : இலங்கை மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்!!

மின்வெட்டு..

வருட இறுதியில் அரை நாள் (12 மணி நேரம்) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிடின், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஐந்து இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி உள்ளதாகவும், செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் வரை 25 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையெனவும், தற்போது உலக சந்தையில் நிலக்கரியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் இருந்து 900 மெகாவோட் மின்சக்தி தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளை முதல் எரிபொருள் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள்!!

எரிபொருள் விநியோகத்தில்..

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக,

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் பொதுமக்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற QR முறைமைக்கு இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைக்காக, இதுவரையில் 46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், சகல முச்சக்கரவண்டிகளையும் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து,

அவற்றுக்காக அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஒதுக்கி கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் முதல் QR முறை மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்-டாக்கில் பதிவிட்ட மனைவியை 14000 கிமீ பயணம் செய்து கொலை செய்த கணவன்!!

டிக்-டாக்கில்..

தனது விவாகரத்து குறித்து டிக்-டாக்கில் பதிவிட்ட முன்னாள் மனைவியை சுமார் 1400 கிமீ பயணம் செய்து கொலை செய்த பாகிஸ்தானை சேர்ந்த ரஹீல் அகமது என்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் சிகாகோவிற்கு இடம்பெயர்ந்த பாகிஸ்தானி அமெரிக்க புகைப்பட கலைஞர் சானியா கான் Sania Khan(29) தனது கொடுமையான கடந்த கால திருமண வாழ்க்கை குறித்தும் அவற்றில் தான் பெற்ற கஷ்டங்களை விளக்கி டிக்-டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதனை இணையத்தில் பார்த்த அவரது முன்னாள் பாகிஸ்தானி கணவர் ரஹீல் அகமது Raheel Ahmad (39) மிகுந்த கோவமடைந்ததுடன், ஜார்ஜியா முதல் சிகாகோ வரை சுமார் 1400 கிமீ தொலைவிற்கு பயணம் செய்து தனது முன்னாள் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுத் தொடர்பாக சிகாகோ உள்ளுர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ரஹீல் அகமது கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும் அவரது முன்னாள் மனைவியை சந்திக்க சென்று இருக்கலாம் என்றும் பொலிசாரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சானியா கானின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், ரஹீல் அகமது மற்றும் சானியா கான் இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

சானியா கான் சம்பவ இடத்திலேயே இறந்தாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரஹீல் அகமது மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.

விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை மீண்டும் போதையில் காதலனுடன் காரில் தாறுமாறாக ஓட்டி விபத்து!!

சினிமாவில்..

மலையாள சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நடிகை அஸ்வதி பாபு. அதுமட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் அவரது வீட்டில் போதை பொருள் இருப்பதாக திற்காக்கரை போலிசார் சென்றதில் எம்டிஎம்டி என்ற போதை பொருள் கடத்தி வைத்துள்ளதை பரிமுதல் செய்திருந்தனர்.

இப்படி இரு வழக்கில் சிறைக்கு சென்ற நடிகை அஸ்வதி பாபு, காதலித்து வரும் நவுபலுடன் நேற்று கொச்சி பகுதியில் காரில் சென்றுள்ளார்.குடி போதையில் இருந்த அஸ்வதி சாலையில் இருந்த கார், பைக், தடுப்பு போன்றவற்றில் உரசியபடி அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார்.

இதனை அறிந்த அங்கிருந்த மக்கள் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை பின் தொடர்ந்து மடக்கியுள்ளனர். அதை மீறியும் காரை செலுத்தி தப்பிக்க முயன்றுள்ளார். கார் டயர் கற்களில் ஏறியதால் வெடித்ததால் காரைவிட்டு இறங்கி தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.

போதையில் இருந்த அவர்களை மடக்கி பிடித்து அவரிடம் வாக்குவாதத்தில் அங்கிருந்த மக்கள் ஈடுபட்டனர். கடைக்கு செல்வதாக கூறி அங்கிருந்து எஸ்கேப்பாகிவிட்டனர். பின் அவர்களை கைது செய்து போலிசார் விசாரித்து வருகிறார்கள்.