தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற மகன்கள் : கண்கலங்க வைக்கும் காட்சி!!

மத்தியப் பிரதேசத்தில்..

மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த தாயின் சடலத்தை கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் தராததால் மகன்கள் இருசக்கர வாகனத்தில் தூக்கி சென்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் அனுப்பூர் மாவட்டம் குடாரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்மந்திரி யாதவ். இவருக்கு திடீரென கடந்த வியாழக்கிழமை நெஞ்சு வலி ஏற்பட்டது.

அங்குள்ள உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கோரியுள்ளனர். இதனால் தாயினை அழைத்துக் கொண்டு அவரின் மகன்கள் சிகிச்சைக்காக ஷாதோல் மாவட்டத்தில் உள்ள ஷாதோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை சரியாக அளிக்கப்படாததால் ஜெய்மந்திரி பரிதாபமாக உயிரிழந்தார். தாயின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டதற்கு இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் இரண்டு மகன்களும் தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து 80 கி.மீற்றர் தூரத்தில் இருக்கும் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த பெண்ணின் மகன் சுந்தர் யாதவ் கூறுகையில் “ எங்களின் தாய்க்கு மருத்துவமனை நிர்வாகம் முறையான சிகிச்சை அளிக்கவில்லை, செவிலியர்கள் கவனக்குறைவுடன் நடந்ததால் தான் உயிரிழந்தார்.

அவர் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்டதற்கும் அதையும் வழங்கவில்லை. எங்களால் தனியார் வாகனத்துக்கு செலவு செய்ய ரூ.5ஆயிரம் பணம் இல்லை. இதனால் ரூ.100க்கு இரு மரக்கட்டைகளை வாங்கி எங்கள் தாயின் சடலத்தை வைத்துக் கட்டி கொண்டு சென்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நூற்றுகணக்கான முறை பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

பீகாரில்..

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் ஒருவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது 15 வயதில் சமூக ஊடகம் மூலம் அறிமுகமான ராகுல் என்ற வாலிபரை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் ராகுல் சிறுமியை ரூ.15 லட்சத்துக்கு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

பின்னர் சிறுமி பீகாரில் கமல் என்பருக்கு விற்கப்பட்டார். அவரோ உத்தரபிரதேசத்தை சேர்ந்த சித்ரா என்வரிடம் சிறுமியை விற்றுள்ளார். சித்ரா, சிறுமியை தனது 45 வயது சகோதரனுக்கு வலுக்கட்டாயமாக ‘திருமணம்’ செய்து வைத்தார்.

இந்த நேரத்தில்சிறுமி தனது தாயாரை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் போலீசார் ராகுலை கைது செய்தனர். இதனால் பயந்த சித்ரா சிறுமியை கமலிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து சித்ராவும் கைது செய்யப்பட்டார்.

இதை அறிந்த கமலும் அவரது உதவியாளரும் ஆத்திரத்தில் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்து, காசிபூர் ரெயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அங்கிருந்து போலீசார் சிறுமியை மீட்டபோது அவரால் பேச முடியவில்லை.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி தற்போது கல்லூரியில் படிக்கிறார். ஜனவரி 2015இல் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மே 2015இல் மீட்கப்பட்ட போது நூற்றுகணக்கான முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தார்.

இது குறித்த வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மேலும் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

அம்மா வேலையிலிருந்து ஓய்வு பெற்றதற்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா? மகனின் பிரம்மாண்ட பிளான்!!

இணையத்தில்..

அவ்வப்போது இணையத்தில், ஏதாவது மனதை நெகிழ வைக்கக் கூடிய அளவில் வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அப்படி அவர்கள் அன்பை செலுத்தும் போது, இது தொடர்பான வீடியோ அல்லது செய்திகளை பார்க்கும் போது, பார்ப்போர் மனதுக்கு கூட, ஒரு விதமான உருக்கம் தோன்றும்.

அப்படி ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் வெளியாகி, பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா சவுகான். இவர் கடந்த 33 ஆண்டுகளாக, கேசர்புரா பகுதியில் அமைந்துள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து, தனது பணிக்காலம் முடிந்து, சமீபத்தில் பணி ஓய்வு பெற்றுள்ளார்.

இதனை அறிந்து கொண்டு, அமெரிக்காவில் வசித்து வரும் அவரின் மகனான யோகேஷ் சவுகான் என்பவர், தாய் சுசீலா ஓய்வு பெறுவதற்கு சில தினங்கள் முன்பாக, சொந்த ஊரான அஜ்மீருக்கும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது தாய்க்கு ஏதாவது வித்தியாசமாக ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என்றும் யோகேஷ் திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி, ஓய்வு பெற்ற தனது தாயை அங்கிருந்து அழைத்து வருவதை கொண்டாடும் விதமாக, ஹெலிகாப்டர் பயணம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் மகன் யோகேஷ். தனது தாய் மற்றும் தந்தையுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய யோகேஷை, அக்கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். பொது மக்களின் வரவேற்பை சற்றும் எதிர்பாராத யோகேஷ், தனது தாயின் மகிழ்ச்சியையும் கண்டு பூரித்து போனார்.

இது தொடர்பாக பேசும் யோகேஷ், ஓய்வு பெற்று வரும் தனது தாய்க்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணியதாகவும், அதனை மறக்க முடியாத தருணமாக மாற்ற ஹெலிகாப்டர் பயணத்தை தேர்வு செய்ததாகவும் யோகேஷ் தெரிவித்துள்ளார்.

அதே போல, இத்தனை கூட்டத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் மகன் தாய்க்கு கொடுத்த வரவேற்பை பாராட்டி வருகின்றனர்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகை & அமைச்சர் ரோஜா : இப்படி கூட சாதனை செய்யலாமா?

தொண்ணூறுகளில்..

தொண்ணூறுகளில் பிரபல நடிகையாக தென் இந்திய சினிமாக்களில் வலம் வந்தவர் நடிகை ரோஜா. இதன் பின்னர், இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்த ரோஜா, அவ்வப்போது சினிமாக்களில் தலை காட்டி வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தீவிர அரசியல் பணிகளிலும் ரோஜா ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா, அதில் வெற்றியும் பெற்றிருந்த நிலையில், ஆந்திரா மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அமைச்சர் ரோஜா தற்போது அசத்தலான ஒரு உலக சாதனையையும் படைத்துள்ளார். ரோஜா வெளியே எங்கு சென்றாலும் அவர் தொடர்பான செய்திகள் அதிக அளவில் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சிக்காக ரோஜா கலந்து கொண்டார். தொடர்ந்து, அந்த மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றிலும் ரோஜா தோன்றினார்.

அப்போது, அமைச்சர் ரோஜாவை சுற்றி, சுமார் 3000 போட்டோகிராபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். ஒன் க்ளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தின் படி, ஒரே நேரத்தில் 3 ஆயிரம் புகைப்பட கலைஞர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர்.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் உள்ள போட்டோ டெக் மற்றும் போட்டோ மற்றும் வீடியோகிராபர் நல சங்கம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டார். அப்போது தான், அவரை 3000 புகைப்பட கலைஞர்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்தனர். இதன் மூலம், வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கின்னஸ் புத்தகத்திலும் ரோஜா இடம் பிடித்துள்ளார். அதே போல, மேடையில் நின்ற நடிகை ரோஜா, புகைப்பட கலைஞர்களுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.

ஒரே நேரத்தில் நிறைய பேர் புகைப்படம் எடுத்த பெண் அமைச்சர் என ரோஜாவின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐடி வேலையை விட்டுவிட்டு கழுதை வளர்த்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞன்!!

கர்நாடக மாநிலத்தில்..

கர்நாடக மாநிலத்தில் ஐடி வேலையை விட்டுவிட்டு கழுதை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நபர் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டிவருகிறார். இது பலரையும் வியப்படைய செய்திருக்கிறது. கல்வியை முடித்தபிறகு சமூகம் தரும் அழுத்தங்களால் வேலைகளுக்கு செல்பவர்களுக்கு மத்தியில், காத்திருந்து தங்களுடைய கனவுகளுக்காக போராடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதுவும், தற்போது பார்க்கும் வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்க செல்லும் நபர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், துவங்க இருக்கும் தொழிலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் இப்படியான முயற்சிகளை மேற்கொள்வது ஆபத்தானது என தொடர்ந்து நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர், படிப்படியாக கழுதை வளர்ப்பு குறித்து அறிந்த பின்னர் தைரியமாக தனது ஐடி வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்கியுள்ளார். கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் கவுடா. BA பட்டதாரியான கவுடா, 2020 ஆம் ஆண்டில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியிலிருந்து விலகிய பிறகு ஐரா கிராமத்தில் 2.3 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம், கால்நடை பராமரிப்பு, கால்நடை சேவைகள், பயிற்சி மற்றும் தீவன மேம்பாட்டு மையமான ஐசிரி பண்ணையை தொடங்கினார்.

ஏற்கனவே முயல்கள் மற்றும் கடக்நாத் கோழிகளை வளர்க்கும் அந்த பண்ணையில் கழுதைகளையும் வளர்க்க திட்டமிட்டிருக்கிறார் கவுடா. அதன்படி 20 கழுதைகளை அவர் வாங்கி வளர்க்க துவங்கியுள்ளார். இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் கழுதை பால் வியாபாரம் செய்ய நினைத்த இவருக்கு நல்ல நல்ல லாபமும் கிடைத்திருக்கிறது.

சந்தையில் 30 மிலி கழுதை பால் 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனை கவனித்த கவுடா, தன்னுடைய கழுதை பால் வியாபாரத்தை பெரிதுபடுத்தியுள்ளார். தற்போது 17 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ஆர்டர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக பெருமையுடன் கூறுகிறார் கவுடா.

இதுபற்றி பேசிய அவர்,”கழுதை பால் ஆரோக்கியம் நிறைந்தது. மருத்துவ குணம் உள்ளது. தொடக்கத்தில், கழுதை வளர்ப்பு தொழிலுக்கு ஆதரவு கிடைக்காமல் இருந்தது. ஆனால், இப்போது நல்ல நிலையில் இருக்கிறது. இதுபோல பண்ணை துவங்க சிலர் ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கும் நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்” என்றார். கழுதை வளர்ப்பு குறித்து பலநாட்கள் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே, கவுடா இந்த தொழிலில் இறங்கியுள்ளார். அதனாலேயே அவருக்கு வெற்றி வசப்பட்டிருக்கிறது.

ஏ.சி வெடித்து தீயில் கருகிய இளைஞர் : திருமணமாகி 6 மாதத்தில் நடந்த சோகம்!!

சென்னையில்..

திருமணம் ஆகி வெறும் ஆறே மாதங்கள் ஆன நிலையில் புது மாப்பிள்ளை ஏ.சி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் ஷ்யாம். அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வரும் இவருக்கும், சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

இந்த நிலையில், இது ஆடி மாதம் என்பதால், இவரது மனைவி தனது தாயார் வெற்றிக்கு செல்ல, இவர் அவரது பெற்றோர்களுடன் வீட்டில் இருந்துள்ளார். சம்பவம் நடந்த நாளன்று, வேலை முடித்து விட்டு வந்த ஷியாம் வீட்டில் உள்ள தனது அறையில் ஏ.சி காற்றில் நன்றாக உறங்கி கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அவரது அறையில் இருந்த ஏ.சி திடீரென வெடித்து தீப்பிடித்துள்ளது. மேலும் இந்த ஏ.சி அவர் படுக்கைக்கு அருகே இருந்ததால், இது வெடித்து அவர் மீது சிதறி தீப்பற்றியுள்ளது. இதில் அலறித்துடித்த ஷ்யாம், சம்பவ இடத்திலே கருகியுள்ளார்.

ஷ்யாமின் அலறல் சத்தம் கேட்டு அவரது அறைக்கு தந்தை ஓடி வந்து பார்க்கும்போது, ஷ்யாம் உடல் கருகி இறந்து கிடந்துள்ளார். இதனைக்கண்ட அவரது தந்தை கதறி அழுதுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் அதிகாரிகள், ஷ்யாமின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரகின்றனர். திருமணம் ஆகி வெறும் ஆறே மாதங்கள் ஆன நிலையில் புது மாப்பிள்ளை ஏ.சி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 பெண்களை தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட கல்யாணராமன் : அம்பலமான மோசடி!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாணராமனின் மோசடியை நான்காவது மனைவி அம்பலப்படுத்தியுள்ளார். புதுச்சேரியில் ஐந்து பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக, நான்காவது மனைவி பொலிசில் புகார் செய்ய வந்தது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் உள்ள பதிவில், நான், கடலுார் மாவட்டம் மேலக்குப்பத்தை சேர்ந்த காயத்ரி. எனக்கும், அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு (எ) தெய்வநாயகம் (42) என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2020, ஜூலை மாதம் புதுச்சேரி பிருந்தாவனம், பிள்ளையார் கோவிலில் திருமணம் நடந்தது.

எனக்கு சீர் வரிசையாக 6 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை எனது பெற்றோர் வழங்கினர்.இருவரும் மூன்று மாதம் ஒன்றாக வாழ்ந்தோம். அதில் நான் கர்ப்பமடைந்தேன். அதன்பிறகு எனது கணவர் வரதட்சணையாக பணம், நகை கேட்டு துன்புறுத்தினார்.அதனை அறிந்த எனது தாய், என்னை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.

அதன்பிறகு, எனது கணவர் என்னிடம் பேசவில்லை. அதுகுறித்து கேட்டபோது, நீ என் மனைவியே இல்லை என்றார்.வெளியில் விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் இருப்பதும், அதனை மறைத்து என்னை நான்காவதாக திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

நான் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எனது கணவர் 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கேட்டால், ஆட்களை அனுப்பி, என்னையும், எனது தாயாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்.

தற்போது, பெண் குழந்தையை வைத்துக்கொண்டு சிரமப்படுகிறேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4-வது மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்ததன் மூலம் இவரின் திருமண லீலைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காதல் மனைவியை காட்டுக்கு அழைத்து சென்று கணவர் செய்த கொடூரம் : CCTVயால் சிக்கிய பரிதாபம்!!

சென்னை..

காதல் மனைவியை காட்டுக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலிஸார் கைது செய்துள்ளனர். சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த மதன் (வயது 19) என்பவரும், புழல் அருகே கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி( வயது 19) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி தமிழ்ச்செல்வி மாயமானார். அவர் குறித்து தமிழ்ச்செல்வியின் பெற்றோர் மதனிடம் விசாரித்தபோது பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் கடந்த ஜூன் 30ம் தேதி செங்குன்றம் காவல் நிலையத்தில் மகள் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலிஸார் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றதை அறிந்து கொண்டனர். இதனால் மதன்தான் தமிழ்ச்செல்வியை கொலை செய்திருப்பார் என அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

பின்னர் கோனே அருவிக்கு சென்ற போலிஸார் அங்கு அருவிக்கு செல்லும் பாதையில் வனத்துறையினர் வைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மதனும் தமிழ்செல்வியும் வனத்துக்குள் செல்வது தெரியவந்தது. அதேநேரம் மதன் மட்டும் திரும்பி வந்ததும் பதிவாகியிருந்தது.

பின்னர் மதனை பிடித்து போலிஸார் விசாரணை நடத்தியபோது, அருவயில் வைத்து தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு மதன் தப்பி வந்தது தெரியவந்தது. பின்னர் போலிஸார் அங்கு சென்று தேடியபோது தமிழ்செல்வியின் சடலத்தை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் : இருவர் மரணம்: பலர் பாதிப்பு!!

சீரற்ற காலநிலை..

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (31) இரவு தொடக்கம் பெய்து வரும் கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தொடருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கினிகத்தேனை, பொல்பிட்டிய, ஹிட்டிகேகம, பொகரவெவில பிரதேசத்திலிருந்து பாயும் களனி கங்கையின் கிளை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாட்டியும் (60) மற்றும் பேத்தியும் (05) சிக்குண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்பள்ளிக்குச் சென்ற பேத்தியுடன் வீடு திரும்பிய போது இருவரும் கால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாட்டியின் சடலம் அப்பகுதியில் உள்ள கால்வாய்க்கு அடியில் கண்டெடுக்கப்பட்டதுடன், பிரதேசவாசிகளும் பொல்பிட்டிய பொலிஸாரும் இணைந்து காணாமல் போன பேத்தியின் சடலத்தை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பாட்டியின் சடலம் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கினிகத்தேனை விதுலிபுர டெப்லோ கிராமபகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் இரண்டு வீட்டில் இருந்த ஆறு பேரில் 38 வயதான ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீதிகளில் விழுந்தமையால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

ஹட்டன் – கொழும்பு வீதியில் கினிகத்தேன தியகல பகுதியிலும் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் வட்டவளை பிரதேசத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

கொட்டகலை – கொமர்ஷல் பகுதியிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்தமை காரணமாக, சுமார் 50 வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் குறித்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பொகவந்தலாவை பிரசேத்தில் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளமையால், பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கினிகத்தேனை – பிட்டவல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்தமையால், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அத்துடன், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் தொடக்கம் கித்துல்கல வரையான பல பகுதிகளில் மரங்கள் வீதிகளில் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்துள்ளன.

இதேவேளை, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் எற்பட்டுள்ளன. தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளது. குறிப்பாக தொடருந்து பாதையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளது.

கொட்டகலை – தலவாக்கலை, கிரேட்வெஸ்டன், ரொசல்ல – வட்டவளை, வட்டவளை – கலபொட, இங்குருஓயா ஆகிய தொடருந்து நிலையங்களுக்கிடையில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த தொடருந்து, நாவலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த தொடருந்து, ஹட்டன் தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கவிருந்த இரண்டு தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன. இதனால் கெனியன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ, லக்ஷபான, நவ லக்ஷபான ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டீசலின் விலை குறைப்பு : இரவு பத்து மணி முதல் நடைமுறை!!

டீசலின் விலை குறைப்பு..

லங்கா ஐஓசி நிறுவனமும் டீசலின் விலையை பத்து ரூபாவினால் குறைத்துள்ளது. டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இன்று (01.08.2022) இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் புதிய 430 ரூபாவாகும்.
எவ்வாறாயினும், பெட்ரோலின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

லிட்ரோ எரிவாயு..

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுவதாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

அதன்படி ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள சில்வா எரிபொருள் நிரப்பு நிலையம் தேசிய ரீதியில் முதலிடம்!!

சில்வா எரிபொருள் நிரப்பு நிலையம்..

தேசிய எரிபொருள் அட்டையை பயன்படுத்தி (கியூ ஆர் கோட்) எரிபொருள் விநியோக நடவடிக்கையில் தேசிய ரீதியில் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முதலாமிடம் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முகமாக தேசிய எரிபொருள் அட்டையை (கியூ ஆர் கோட்) எரிசக்தி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் 31 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேசிய எரிபொருள் அட்டையை (கியூஆர் கோட்) பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை எரிசக்தி அமைச்சு வரிசைப்படுத்தி உள்ளது.

அதன்படி, தேசிய எரிபொருள் அட்டையை சிறப்பாக பயன்படுத்திய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஜி.எச்.ஏ.டீ. சில்வா எரிபொருள் நிரப்பு நிலையம் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தை அனுராதபுரத்தில் உள்ள டபிள்யூ.எம்.டீ.கே.உயன்வத்தை எரிபொருள் நிரப்பு நிலையமும், மூன்றாம் இடத்தை யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள ஜெயபிரணவன் எரிபொருள் நிரப்பு நிலையமும் பெற்றுள்ளன.

கணவரை விவாகரத்து செய்தாரா விஜே பிரியங்கா? கண்ணில் காட்டாமல் ஒளித்து வைக்க காரணம் என்ன!!

விஜே பிரியங்கா

டிடி, சிவகார்த்திகேயன், கோபிநாத், பாவனா, ரம்யா, தியா உள்ளிட்ட பலருடன் பணியாற்றியும் இருக்கிறார் மாகாபா. அப்படி விஜே பிரியங்காவை நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் மாகாபா தானாம்.

தற்போது வரையில் இருவரும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றும் இருந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியின் சிறந்த தொகுப்பாளினி விருதினை கைப்பற்றியதுடன் போட்டோஷூட் பக்கம் முழுவதுமாக திரும்பியுள்ளார்.

இதுவரை பார்க்காத அளவிற்கு பிரியங்காவின் விவாகரத்து வதந்தியா பிரியங்கா கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே தொலைக்காட்சியில் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொணடனர்.

திருமணத்திற்கு பின் ஒருசில இடங்களில் மட்டும் அடையாளப்படுத்தினார் பிரியங்கா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்தவொரு அறிவிப்பு கணவர் பிரிவீன் பற்றிய கருத்துக்கள் இடம் பெறாமல் இருந்து வந்தது, இதற்கு காரணம் முற்றிலுமாக பிரியங்கா கணவரை பிரிந்து விட்டார் என்பது தான்.

அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக மறைத்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் தன் கணவரை பற்றி எங்கும் பயன்படுத்தி பேசவில்லை. அதேபோல் நிகழ்ச்சி முடிந்தும் கூட கணவரை சந்திக்காமல் இருந்து வருகிறார்.

தன் உலகமே என்னுடைய அம்மா, தம்பி தான் என்று சமீபத்தில் ஒரு பதிவினையும் பகிர்ந்துள்ளார். இதற்கு இணையத்தில் சிலர் கணவர் பற்றிய கேள்விகளை கேட்டு வருகிறார்கள். உண்மையில் உங்களுக்கும் பிரவீன் குமாருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டு வருகிறார்கள்.

இரவு பார்ட்டியில் இரு நபர்களுடன் நடிகை சமந்தா செய்த செயல்!!

சினிமாவில்..

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிசியான நடிகையாக மாறியுள்ளார். இவர் தற்போது மூன்று பாலிவுட் படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், கரண் ஜோகர் தொகுத்து வழங்கி காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கூட சமந்தா பங்கேற்றிருந்தார். நடிகை சமந்தா அடிக்கடி இரவு பார்ட்டியில் கலந்துகொள்வார். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது தமன்னா, சமந்தா மற்றும் காஜல் மூவரும் இணைந்து இரவு பார்ட்டியில் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கடற்கரையில் வாக்கிங் போன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி : இப்படி ஓர் உயிரினமா?

ஆஸ்திரேலியாவில்..

ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கடலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கிறது. அந்த உயிரினத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆதிகாலம் தொட்டே மனிதர்களுக்கு பல்வேறு விதத்தில் ஆச்சர்யமாக விளங்கிவருகிறது கடல்.

உலகத்தின் பல நாடுகளும் கடல்வழி பயணத்தின் மூலமாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் கடல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் கடலே இருந்தாலும் அதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஒவ்வொரு நாளும் கடல் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளிவந்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் வித்தியாசமான உயிரினம் ஒன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அந்த கடற்கரைக்கு எப்போதும் விக்கி ஹேன்சன் வாக்கிங் செல்வது வாடிக்கை.

அப்படி கடந்த வார சனிக்கிழமை தனது செல்ல நாயுடன் பீச்சுக்கு சென்றிருக்கிறார் அவர். அப்போது தூரத்தில் நீளமாக ஏதோவொன்று கிடப்பதை பார்த்த அவர் ஆர்வத்துடன் அதன் அருகே சென்றுள்ளார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதுபற்றி பேசிய அவர்,”மணலில் நீளமாக கிடந்த அந்த உயிரினத்தின் மீது பல வண்ண கலவைகளால் ஆன, இறக்கைகள் போன்ற அமைப்பு இருந்தது. அவை அசைந்து கொண்டிருந்தன. அந்த உயிரினத்தின் இன்னொரு பாதி கடலிலேயே துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என எண்ணினேன். நான் இதுபோன்ற ஒன்றை பார்த்ததில்லை. யாரும் இப்படி ஒரு விநோதத்தை பார்த்திருப்பார்களா என்றும் தெரியவில்லை” என்றார்.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் அதே பகுதிக்கு விக்கி சென்றிருக்கிறார். அப்போது எந்த அசைவுகளும் இன்றி அந்த உயிரினம் கிடந்திருக்கிறது. ஆகவே அது உயிரிழந்திருக்கலாம் என கருதியதாக கூறியுள்ளார் விக்கி. இதனிடையே இந்த வினோத உயிரினத்தின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவி பல்வேறு வகையான விவாதங்களை எழுப்பியுள்ளது.

மனைவியை தவறாக பார்த்தததால் முதியவரை அடித்துக் கொன்ற கணவர்!!

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் கிளியனுார் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (65). . இவருக்கும் கிளியனூர் இருளர் குடியிருப்பை சேர்ந்த பாலு என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் பாலுவின் மனைவியை ராமலிங்கம் தவறாக பார்த்ததாகவும் அவரை பாலு திட்டியதாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடி போதையில் பாலு ராமலிங்கத்தை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராமலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுவை கைது செய்தனர்.