3 மணிக்கு படுக்கையை பகிர கூப்பிட்ட பிரபல நடிகர் : உண்மையை உடைத்த கமல் பட நடிகை!!

மல்லியாக ஷெராவத்..

பாலிவுட் சினிமாவில் மர்டர் என்ற படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை மல்லியாக ஷெராவத் நடிகை ஜாக்கி சானின் தி மித் படத்தில் மூலம் சீன – ஹாலிவுட் படங்களில் அறிமிகமாகினார். இதன்பின் அனைவரது கவனத்தையு கவர க்ளாமர் ரோலில் எல்லைமீறி நடிக்கும் அளவிற்கு முன்னேறினார்.

தமிழில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தசவதாரம் படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதேபோல், நடிப்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்ட போட்டிருப்பார். மேலும் பாலிவுட் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மல்லிகாவிற்கு தற்போது 45 வயதாகியும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

2000 ஆம் ஆண்டு கரன் சிங் கில் என்பவரை திருமணம் செய்து கொண்டு அடுத்த ஆண்டே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் மல்லிகா க்ளாமர் மற்றும் நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனக்கு நடந்து அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை பற்றி வெளிப்படையாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Rk/RKay என்ற படம் அவர் நடிப்பில் உருவாகியுள்ள நிலையில் அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளார்.

முன்னணி நடிகர்களுடன் படுக்கையை பகிர மறுத்ததால் எனக்கு படவாய்ப்புகள் தரவில்லை என்றும் நடிகைகளை பொறுத்தவரை நில் உட்காரு என்று சொன்னால் அதை அப்படியே செய்ய வேண்டும், அப்படி என்னால் இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் நள்ளிரவு 3 மணியலவில் எனக்கு ஒரு முன்னணி நடிகர் வீட்டுக்கு வா என்று அழைத்தால் செல்லவேண்டும். ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவே அவருடன் நடித்த படத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள்.

இப்படி படுக்கையை பகிர மறுத்ததால் பல வாய்ப்புகள் எனக்கு வராமல் போனது என்று வெளிப்படையாக கூறியது பாலிவுட் சினிமாவையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திடீரென வந்த நிர்வாண வீடியோ அழைப்பு : இரண்டு முதியவர்களை மிரட்டி 3.64 லட்சம் பறித்த மர்மப் பெண்!!

மும்பையில்..

மும்பையில் இளம்பெண் ஒருவர் இரண்டு முதியவர்களுக்கு ஆபாசமாக போன் செய்து பேசிவிட்டு, அதை அப்படியே வீடியோ எடுத்து, மிரட்டி ரூ.3 லட்சம் பெற்றிருக்கிறார். மும்பை அந்தேரியைச் சேர்ந்த 86 வயது முதியவருக்குக் கடந்த மாதம் 28-ம் தேதி மர்ம நம்பரிலிருந்து வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது.

வீடியோ காலை எடுத்தபோது காலில் பெண் ஒருவர் நிர்வாணமாகக் காட்சியளித்தபடி பேசினார். உடனே முதியவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் வீடியோ கால் பதிவை அந்தப் பெண் பதிவு செய்துகொண்டார். இதையடுத்து அந்த்ப் பெண் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டினார்.

அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டுமானால் 3 லட்சம் தர வேண்டும் என்று கூறி அந்தப் பெண் மிரட்டினார். முதியவரும் வேறு வழியில்லாமல் தனது இரண்டு வங்கிக் கணக்கிலிருந்து 2.99 லட்சத்தை அந்தப் பெண் சொன்ன வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைத்தார். அதன் பிறகு இது குறித்து முதியவர் அம்போலி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இதே போன்று மும்பையைச் சேர்ந்த மற்றொரு முதியவருக்கும் இதே முறையில் மர்மப் பெண்ணிடமிருந்து நிர்வாண வீடியோ கால் வந்தது. முதியவர் போனை எடுத்துப் பேசியபோது அதைப் பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டினார். முதியவரும் அந்தப் பெண்ணுக்கு ரூ.64 ஆயிரம் ஆன்லைன் மூலம் அனுப்பிவைத்தார். இது குறித்து அவரும் போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

இரண்டு முதியவர்களிடமும் மோசடி செய்தது ஒரே பெண்தானா என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். இது போன்ற மோசடிகள் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றன. இதையடுத்து போலீஸார் தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். இருவரும் பணத்தை அனுப்பிய வங்கிக் கணக்கு யாருக்குச் சொந்தம் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.

ஆசை காட்டி 30 லட்சம் பணத்தை சுருட்டிய நடிகை : வெளியான மோசடி!!

திண்டுக்கலலில்..

திண்டுக்கல் அருகே இரு குழந்தைகள் இருப்பதை மறைத்து யூடியூப் சேனல் நடத்தி வருபவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.30 லட்சம் , 10 சவரன் நகை மோசடி செய்ததாக துணை நடிகை மீது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் பகலவன் ராஜா . இவர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ, வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.

இதில் நடிப்பதற்காக துணைநடிகர் ஏஜென்ட் கணேஷ் மூலம் திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்புவை சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். திருமணத்தடை, புத்திரபாக்கிய தடை நீக்கும் நாக பஞ்சமி,கருடபஞ்சமி விரதம் துணை நடிகை திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராக நடித்து வந்துள்ளார்.

இவரை வைத்து கவிதை தொகுப்பினை வீடியோவாக எடுத்து பகலவன் ராஜா வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திவ்யபாரதி பகலவன் ராஜா அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர்.

இரண்டு பெண் குழந்தைகள் திவ்ய பாரதி இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் ஓடி விட்டதால் தான் வளர்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இதனையறிந்த பகலவன் ராஜாவின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவே திவ்யபாரதிக்கும் பகலவன் ராஜாவிற்கும் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து திவ்யபாரதி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

பணம், நகை தனியாக வீடு எடுத்து தங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல்லில் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து திவ்யபாரதி தங்கியுள்ளார். வீட்டுச் செலவுக்கு என மாதம் மாதம் ₹ 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கொடுத்து வந்துள்ளார். மேலும் திவ்யபாரதி உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவிற்காக பணம் வேண்டும் என ஒன்பது லட்சம் கேட்டு வாங்கியுள்ளார்.

பகலவன் ராஜாவிடம் ஆசை வார்த்தை கூறி 10 பவுன் தங்க நகைகள் வாங்கியுள்ளார். பலே மோசடி இதனைத் தொடர்ந்து பகலவன் ராஜா திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறும் பொழுதெல்லாம் அவருடன் சண்டையிட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார் . இதனால் சந்தேகம் அடைந்த பகலவன் ராஜா திவ்யபாரதியை பற்றி விசாரித்துள்ளார்.

அப்பொழுது தான் திவ்யபாரதி நடத்தை சரியில்லை என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதும் ,அவருக்கு பிறந்தது தான் அந்த இரண்டு பெண் குழந்தைகள் என தெரிய வந்தது. தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பகலவன் ராஜா தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் திவ்யபாரதி மீது புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடமும் பகலவன் ராஜா புகார் அளித்தார். தற்போது வேறு மூன்று ஆண்களுடன் சேர்ந்து உல்லாசமாக சுற்றித் திரிவதாகவும் பணமுள்ள ஆண்களை குறி வைத்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார் பகலவன் ராஜா. தற்பொழுது இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி இறப்புக்கு இதுதான் காரணம் : வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

சென்னையில்..

சென்னை, திருவேற்காடு மாதிராவேடு சாலையில் பெண்களுக்கான தனியார் நர்சிங் கல்லூரி , விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதில், மாணவிகள் ஏராளமானோர் படிக்கின்றனர். இந்த கல்லூரி கட்டிடத்தின் , மேல் தளத்தில், கல்லூரியும், கீழ் தளத்தில், விடுதியும் உள்ளது. இந்த கல்லூரியில், ஈரோட்டை சேர்ந்த சுமதி (19) என்ற மாணவி , விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த மாணவி, கடந்த 30 ஆம் தேதி விடுதியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு விசாரணை அதிகாரி பகிர்ந்துள்ள தகவல் மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை விவரித்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட மாணவி சுமதி 5 மாதமாக விடுதி கட்டணத்தை கட்டவில்லை என சொல்லபடுகிறது. அதை கட்டசொல்லி விடுதி நிர்வாகம் மாணவிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் மாணவி தனது அப்பாவுக்கு போன் செய்து, விடுதி கட்டணம் செலுத்த பணம் அனுப்பி வையுங்கள் என கேட்டுள்ளார்.

அப்போது, இனி நீ விடுதியில் தங்க வேண்டாம், வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வா என கூறியுள்ளனர். ஆனால், பாக்கி கட்டணததை செலுத்தாமல், விடுதியில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாக இருந்துள்ளது.

இதனால் மாணவி மேலும் மன உளைச்சல் அடைந்துள்ளார். அதன் பின்னர் மாணவியின் அப்பா மகளின் கூகுல் பே எண்ணிற்கு 8 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதை வைத்து மாணவி கல்வி கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

ஆனால், விடுதி கட்டணம் பாக்கி இருந்ததால், அதையும் கட்டசொல்லி நிர்வாகம் அழுத்தம் கொடுத்துள்ளது. பின்னர் மீண்டும் மகளின் எண்ணிற்கு 30 ஆம் தேதி அன்று 4 ரூபாய் அனுப்பியுள்ளார்.

அதை கட்டியதும் மாலை வீட்டிற்கு வந்துவிடுவேன் என மாணவி தந்தையிடம் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.அதன் பின்னர் சுமதி வீட்டிற்கு செல்லவில்லை. சந்தேகமடைந்த தந்தை சுமதிக்கு போன் போட்டுள்ளார். ஆனால், மாணவி போனை எடுக்கவில்லை.

பின்னர் மாணவியின் தோழிக்கு போன் செய்த பிறகுதான் மகள் தற்கொலை செய்துகொண்டது தெரிந்துள்ளது.  இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த தோழிகளிடமும் சிபிசிஐடி குழு விசாரணை நடத்தி வருகிறது.

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட தம்பி : தம்பிக்காக ரூ.46 கோடி திரட்டிய அக்கா உயிரிழப்பு!!

கேரளாவில்..

நோயால் பாதிக்கப்பட்டிருந்த தம்பிக்கு உதவி கேட்டு அண்மையில் வீடியோ வெளியிட்ட கேரள சிறுமி, அதே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வந்தவர் சிறுமி அப்ரா. வெறும் 16 வயதாகும் இவருக்கு ஒரு சகோதரனும் உள்ளார். இந்த சிறுமிக்கு SMA என்று சொல்லப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் உள்ளவர்கள் தாங்களாகவே எழுந்து எந்த வேலையையும் செய்யமுடியாது.

பாதிக்கப்பட்ட சிறுமி அதற்கு தேவையான சிகிச்சை எடுத்து வந்தபோது, அவரது தம்பிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது, பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் இருப்பதாக கூறினர். மேலும் அவரை குணப்படுத்த வேண்டுமானால் அதற்கு மருத்துவ செலவு மிகவும் அதிகமாகும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து தனது தம்பியை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று சமூக வலைதளங்கள் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோவில், தானும் அந்த நோயால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும், இருப்பினும் தனது தம்பி உயிருடன் நீண்ட நாள் வாழ வேண்டுமெனவும் அதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுமியின் இந்த வீடியோ வைரலானதையடுத்து உதவும் கரங்கள் பல முன்வந்தன. அப்படி சுமார் ரூ.46 கோடி வரை அந்த சிறுமி திரட்டினார். சிறுவனுக்கு ஒரு டோஸ் மருந்துக்கு மட்டும் ரூ.18 கோடி வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், ரூ.46 கோடி வரை சிறுமி திரட்டியுள்ளார். இதையடுத்து கிடைத்த அந்த பணத்தை வைத்து அப்ரா மற்றும் அவரது தம்பிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அப்ரா நேற்று காலை உயிரிழந்தார். தனது உயிரை கூட பெரிதாக நினைக்காமல், தனது சகோதரனுக்காக குரல் கொடுத்த அந்த 16 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டு இளம்பெண்கள் செய்த மோசமான செயல்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில், இரட்டையர்களான இளம்பெண்கள் இருவர் பெட்ரோல் நிலையம் ஒன்றின் அருகில் நின்றுகொண்டு தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொள்வதாக மிரட்டல் விடுத்தார்கள்.

இங்கிலாந்திலுள்ள Canterbury என்ற இடத்தில் வாழும் இரட்டையர்களான Brittany மற்றும் Bethany Lee (23) ஆகிய இருவரும் பொலிசாரை தொலைபேசியில் அழைத்து, தாங்கள் பெட்ரோல் ஊற்றி தங்களையும் பெட்ரோல் நிலையத்தையும் கொளுத்திக்கொள்ள இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

உடனடியாக பொலிசார் Canterburyயிலுள்ள அந்த பெட்ரோல் நிலையத்துக்கு விரைய, அங்கே தங்கள் மீது ஈரம் சொட்டச்சொட்ட பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நின்றிருந்திருக்கிறார்கள் இருவரும்.

Bethanyயின் கையில் லைட்டர் ஒன்று இருக்க, பொலிசார் தங்களை நெருங்கினால் தீவைத்துக்கொள்வதாக மிரட்டியிருக்கிறார் அவர். அவர் லைட்டரை இயக்க, அதிர்ஷ்டவசமாக அந்த லைட்டர் இயங்காமல் போக, பொலிசார் பாய்ந்து சென்று அவரைப் பிடித்துள்ளார்கள்.

அப்போது சகோதரிகள் இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. தங்கள் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, பெட்ரோல் நிலையத்தைக் கொளுத்திவிடுவதாக திகிலை ஏற்படுத்திய சகோதரிகள் இருவருக்கும் மூன்று ஆண்டுகள், ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சொந்த அண்ணனை அடித்தே கொன்ற தம்பி சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

கேரள மாநிலத்தில்..

கேரள மாநிலத்தில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்ட அண்ணனை, சொந்த தம்பியே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள முளையன் காவு பகுதியைச் சேர்ந்தவர் சர்வர் பாபு(24).

இவர் தனது தம்பி சக்கீர் (18) இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது, செல்போனில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் சக்கீரின் தூக்கம் பாதிக்கவே, அண்ணனிடம் சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனாலும், பாபு தொடர்ந்து சத்தமாக பாட்டு கேட்டுள்ளார். இது சாக்கீருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எழுந்து வந்த அவர், மரக்கட்டை ஒன்றை எடுத்து சொந்த அண்ணன் என்றும் பாராமல் தலையில் பலமுறை ஓங்கி அடித்துள்ளார். படுகாயமடைந்த பாபு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து மயக்கமானார். உடனே அதிர்ச்சியடைந்த தம்பி சக்கீர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சர்வர் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், தப்பியோடிய சக்கீரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து கேட்டறிந்த பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வீட்டு வேலைக்காரரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கோடீஸ்வர பெண் : ஆச்சரியமான காரணம்!!

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானில் வசதி படைத்த பணக்கார பெண்ணொருவர் தனது வீட்டில் வேலை செய்யும் நபரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவர்களின் சுவாரசியமான காதல் கதை குறித்து தெரியவந்துள்ளது.

இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் நசியா. பணக்கார பெண்ணான இவருக்கு உறவினர்கள் என யாரும் இல்லை. இதையடுத்து பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டு வேலைகளை செய்ய உதவியாளரை நியமிக்க முடிவு செய்த நிலையில் சிலர் சுபியான் என்ற நபர் குறித்து நசியாவிடம் சொன்னார்கள். இதையடுத்து சுபியானை மாதம் ரூ.18000 சம்பளத்திற்கு வீட்டு வேலையாளாக பணியில் சேர்த்தார் நசியா.

ஆனால் அப்போது நசியாவிற்கு தெரியவில்லை, சுபியான் தான் தனது வருகால காதல் கணவர் என்று! இந்த நிலையில் சுபியானை சமீபத்தில் நசியா திருமணம் செய்து கொண்டுள்ளார். பெரிய செல்வந்தரான அவர் சுபியானை திருமணம் செய்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நசியா கூறுகையில், சுபியானின் நல்ல நடத்தை, எளிமை, குணம் ஆகியவை எனக்கு அவர் மீது காதலை வரவழைத்தது. எனது பணம் மற்றும் அந்தஸ்தை கருத்தில் கொண்டு பல ஆண்கள் என்னை திருமணம் செய்ய அணுகினார்கள்.

ஆனால் சுபியானின் இயல்பு எனக்கு அவர் மீது ஈர்ப்பை கொடுத்தது. காதல் அந்தஸ்தையோ, நிறத்தையோ, செல்வத்தையோ, ஜாதியையோ பார்ப்பதில்லை. நான் என் காதலை சுபியானிடம் வெளிப்படுத்திய போது அவரால் அதை நம்ப முடியவில்லை.

உண்மையை சொன்னால், அதிர்ச்சியில் மயங்கியே விழுந்துவிட்ட்டார். பின்னர் மயக்கம் தெளிந்தபின்னர் என் காதலை ஏற்று கொண்டார். என் கணவருடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனக்கு சிறிது உடல்நிலை சரியில்லை என்றாலும் என்னை மிக அக்கறையோடு அவர் கவனித்து கொள்கிறார் என கூறியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாய் : YOUTUBE மூலம் கண்டுபிடித்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

மும்பையில்..

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாயை ஒரு youtube மூலம் மகள் கண்டுபிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் ஹமிதா பானு. தனது குடும்ப வறுமை காரணமாக துபாயில் வீட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.

அதன்படி கடந்த 2002 ஆம் ஆண்டு ஒரு ஏஜென்ட் மூலம் துபாய்க்கு செல்ல தயாரானார். ஆனால் அந்த ஏஜென்ட்டோ, ஹமிதாவை துபாய்க்கு அனுப்பி வைக்காமல், மாறாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்துள்ளார். பாகிஸ்தானில் நிர்கதியாக நின்ற ஹமிதா, தனது குடும்பத்தாரை கூட தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்தார்.

பின்னர் பாகிஸ்தான் சிந்து மகாணத்தில் உள்ள ஐதாராபத் பகுதியில் வசிக்க தொடங்கிய அவர், தனது காலத்தை கழிக்க முடிவு செய்து கிடைத்த வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். இதையடுத்து, அந்த பகுதியில் வசிக்கும் ஒரு நபரை முறைப்படி திருமணமும் செய்துகொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்தார். இதனால் தனிமையை உணர்ந்த ஹமிதா, தனது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் காட்டியுள்ளார். அதன்படி, அந்த பகுதியை சேர்ந்த வாலியுல்லா மரூப் என்பவரிடம் இவரது கதையை கூறியுள்ளார். மேலும் தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது 70 வயதாகும் ஹமிதாவின் ஏக்கத்தை புரிந்து கொண்ட வாலியுல்லா, அவரை அவரது குடும்பத்துடன் எப்படி சேர்த்து வைப்பது என்று யோசித்து Youtube சேனல் ஒன்றை தொடங்கினார். பின்னர் அதில், ஹமிதா பானுவை குறித்த பதிவுகளை பதிவிட்டிருக்கிறார். அதோடு, மும்பையில் உள்ள சமூக ஆர்வலர்கள் யாரேனும் இந்த வீடியோவை பார்த்தால் ஹமிதா பானுவுக்கு உதவுமாறும் கேட்டு கொண்டார்.

இதை தொடர்ந்து இது குறித்த வீடியோவை மும்பையை சேர்ந்த காப்லான் சேக் என்பவர் பார்க்க, அதனை தான் இருக்கும் அனைத்து குழுவிற்கும் பகிர்ந்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோ பதிவு குறித்து தகவல் பரவ, ஹமிதாவின் மகள் யாஸ்மின் பஷிர் சேக் என்பவர் மும்பையில் இருக்கும் ஒரு பகுதியில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது மகளை தொடர்புகொண்டு தாய் இருக்கும் இடத்தை அந்த குழுவினர் தெரிவித்தனர். பின்னர், தனது தாயை தொடர்புகொண்ட யாஸ்மின், 20 ஆண்டுகளுக்கு பிறகு தாயை வீடியோ கால் மூலம் பார்த்து பேசி மகிழ்ந்துள்ளார்.

இதுகுறித்து ஹமிதாவின் மகள் யாஸ்மின் கூறும்போது, தனது தாய் ஏஜென்ட் செய்த தவறால் வேறு பகுதிக்கு சென்றதாகவும், அவரை தாங்கள் தேடும்பனியில் ஈடுபட்டு அது தோல்வியில் முடிந்ததாகவும், ஆனால் தற்போது தனது தாய் பத்திரமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது தனது தாய் ஹமிதா பானுவை மீண்டும் மும்பைக்கு அழைத்து வர இந்திய அரசிடம் உதவி கேட்கவுள்ளதாகவும் யாஸ்மின் கூறினார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன தாயை ஒரு youtube மூலம் மகள் கண்டுபிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவர்ச்சியை மறுக்கும் சாய்பல்லவி : காரணம் இதுதான்!!

சாய்பல்லவி..

சிலர் சாய்பல்லவியை அணுகி இதுபோன்ற கனமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும். எனவே கதைகளை மாற்றுங்கள். கவர்ச்சியாகவும், காதல் காட்சிகளில் நெருக்கமாகவும் நடிக்க சம்மதியுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர்.

அவர்களிடம் சாய்பல்லவி “அப்படியெல்லாம் நடிக்க முடியாது. சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை என்றால் டாக்டர் வேலையை பார்ப்பேன் அல்லது ஷாப் வைத்து சம்பாதிப்பேன். இல்லையென்றால் ஏதாவது வேலைக்கு போவேன்.

எனது மதிப்பை குறைத்துக்கொண்டு விருப்பமில்லாத கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்” என்று சாய் பல்லவி கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட இருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

நெளுக்குளத்தில்..

வவுனியா – நெளுக்குளத்தில் 2011 ஆம் ஆண்டில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் இருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் குற்றவாளிகளுக்கு தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் தலா 05 இலட்சம் ரூபா நட்டஈடும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நட்டஈட்டை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலும் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு குற்றவாளிகளுக்கும் 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெளுக்குளத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பெண் ஒருவரை ஏற்றிச்சென்ற இருவர் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு நியாயமான காரணிகளை அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் முன்னிலைப்படுத்தி, குற்றச்சாட்டை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளார். அதற்கமைய, இரண்டு பிரதிவாதிகளையும் குற்றவாளிகள் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உறுதி செய்தார்.

இரண்டு குற்றவாளிகளில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகியிருந்ததுடன், அவருக்கான தண்டனை நேற்று முதல் அமுல்படுத்தப்படுகிறது.

மற்றைய குற்றவாளி இந்தியாவில் தலைமறைவாகியுள்ளதால், அவரை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு!!

கோதுமை மா..

நாட்டில் கடுமையான கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கோதுமை மா பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது.

எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் தொடருந்தில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது தொடருந்தில் கோதுமை மா கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை வம்சாவளி தமிழ் யுவதிக்கு டி.இமான் வழங்கிய சந்தர்ப்பம்!!

அஷ்னா சசிகரன்..

லண்டன் வாழ் இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழ் யுவதிக்கு டி.இமான் தனது திரைப்படத்தில் பாடல் பாட வழங்கிய சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவருமான அஷ்னா சசிகரன் என்ற பாடகியையே இவ்வாறு டி.இமான் அறிமுகம் செய்துள்ளார்.

அதன்படி பிரபல நடிகரான பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை படத்தில் அஷ்னா சசிகரன், “ வழி இதுதானா..” என்ற பாடலைப் டி.இமான் பாடவைத்துள்ளார்.

அதேவேளை வளர்ந்துவரும் இளம் கலைஞர்கள் பலருக்கு டி. இமான் சந்தர்ப்பம் வழங்கி வரும் நிலையில் தற்போது இலங்கை பின்னனியை கொண்ட அஷ்னா சசிகரனையும் அறிமுகப்படுத்தியுள்ளமை புலம்பெயர் தமிழ்ர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் – மானிப்பாயில் உள்ள தனியார் பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாட்டினால் கற்பதற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த பாடசாலையில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகல் விண்ணப்பம் தனக்கு உரிய முறையில் தரவில்லை என்று நேற்று(01.08) முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் பின் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாணவி மற்றும் தாய் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மாணவியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாவது,

“குறித்த தனியார் பாடசாலையில் தனது பிள்ளை மனரீதியாக பாதிக்கும் வகையில் பல செயற்பாடுகள் இடம்பெற்றதை எனது பிள்ளை என்னிடம் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக குறித்த பாடசாலையில் கல்வி கற்பதில் எனது பிள்ளைக்கு விருப்பமில்லாத காரணத்தினால் இடைவிலகல் படிவத்தை தருமாறு பாடசாலை அதிபரிடம் கோரிக்கை விடுத்தேன்.

எனது பிள்ளை கொழும்பில் கல்வியை தொடர போவதாக தெரிவித்த நிலையில் அவர்கள் இடைவிலகல் விண்ணப்பத்தை தருவதற்கு இழுத்தடித்தார்கள்.

இதன்போது பாடசாலை நிர்வாகம் இடைவிலகல் விண்ணப்பத்தை தராது பிறிதொரு படிவத்தில் எனது பிள்ளையின் ஒழுக்கம் தொடர்பில் ஆரோக்கியமான வார்த்தையை பதிவிடப்படாதது எனக்கு மன வேதனையை தந்தது.

எனது பிள்ளை, குறித்த தனியார் பாடசாலையை விட்டு விலகி பிறிதொரு பாடசாலையில் சேரக்கூடாதென பழிவாங்கும் நோக்கில் ஒழுக்கவீனம் தொடர்பில் கருத்தை பதிவிட்டுள்ளனர்.

எனது பிள்ளையின் ஒழுக்கம் சரியில்லாமல் இருந்தால் ஏன் இவ்வளவு காலம் எனது பிள்ளையை பாடசாலையில் அனுமதித்திருந்தீர்கள் அல்லது ஒழுக்கம் தொடர்பில் ஏன் எமக்கு கூறவில்லை என கேள்வி எழுப்பினேன் அதற்கு அவர்கள் ஒன்றும் பேசவில்லை.

ஆகவே திட்டமிட்ட முறையில் எனது பிள்ளையை குறித்த தனியார் பாடசாலை பழி வாங்குவதாக நினைக்கிறேன்” என தாய் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த மாணவி கருத்து தெரிவிக்கும் போது, “பாடசாலையில் இடம் பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் தான் மனரீதியாக பாதிப்படைந்த நிலையில் அக்கல்லூரியில் இருந்து விலக முற்பட்டதாக” தெரிவித்துள்ளார்.

“கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் காணப்படும் நிலையில் விரும்பிய பாடசாலையில் எனது பிள்ளை கல்வியை தொடர்வதற்கு வழி ஏற்படுத்தி தர இடைநிலைக் விண்ணப்பத்தை உரிய முறையில் பெற்றுத்தர வேண்டும் என்பதோடு,

எனது பிள்ளையின் ஒழுக்கம் தொடர்பில் பதிவிட்ட காரணத்திற்கான சான்றையும் கூற வேண்டும் எனக்கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்” என தாய் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய் விக் எங்கடா : சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பிரியங்கா!!

விஜய் டிவியில்..

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் முக்கிய நபராக இருக்கிறார்.

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போது, அவருடைய படத்தின் ஹீரோக்களின் கதாபாத்திரங்களின் விஜய் டிவியின் நகைச்சுவையாளர்கள் வேடமிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.

அப்போது தலைவா படத்தில் வரும் விஜய் போல யோகி வேடமிட்டு வந்தார். அவர் விஜய் கேட்பிற்கு ரஜினிகாந்தின் விக் அணிந்திருந்ததை பார்த்த பிரியங்கா, விஜய் சார் விக் எங்கடா, நீ அணிந்திருப்பது ரஜினி சார் விக் என கிண்டலாக கூறியுள்ளார். இதை தற்போது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

காதலியுடன் ஆற்றங்கரையில் காதலன் செய்த செயல் : கருத்துக்களை அள்ளி வீசும் நெட்டிசன்கள்!!

ஆற்றங்கரையில்..

ஆற்றங்கரையில் காதலியுடன் அமர்ந்திருந்த காதலன் செய்த செயல் காணொளியாக வெளியாகியதோடு பயங்கர வைரலாகி வருகின்றது. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோக்கள் ஒன்று வைரலாகி வருகின்றது.

குறித்த காட்சி வெளியான சில மணி நேரத்தில் மில்லியன் பார்வையாளர்கள் பார்த்ததுடன், 1.61 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ஆரம்பத்தில் குறித்த காட்சியினை அவதானிக்கும் போது தவறாக தெரிந்தாலும், பின்பு வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது.

ஆம் ஆற்றங்கரையில் காதலியுடன் அமர்ந்திருந்த இளைஞர் ஆர்வமாக அவர் தலையில் பேன் எடுத்துக் கொடுக்கும் காட்சிதான் இதுவாகும். இதனை வேற்று நபர் மறைந்திருந்து காணொளியாக எடுத்துள்ளார்.