அம்பாறையில் சிறிய இயந்திர தூண்டிலில் 25 கிலோ கிராம் பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிக்கியுள்ளதால் இளைஞர்கள் பாரிய மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும் முகத்துவாரத்து கடற்கரையில் நேற்று (03.08) இரு இளைஞர்கள் கடலில் தூண்டில் மூலம் குறித்த மீனை பிடித்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
சுமார் 18 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய இந்த மீன் தூண்டிலில் சிக்குண்டு கடலில் அட்டகாசம் காட்டியதுடன் இளைஞர்கள் அந்த மீனை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வருவதற்கு பெரும் சிரமங்களை மேற்கொண்டிருந்துள்ளனர்.
அத்துடன் அம்பாறை மாவட்ட கடற்கரையில் பருவ மாற்றம் காரணமாக அதிகளவில் மழை பெய்து வருவதுடன் சில முகத்துவாரங்களும் வெட்டப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பொழுதுபோக்கிற்காக சிலர் தூண்டில் மூலம் அப்பகுதியில் மீன்களை பிடித்து வருவதனை காண முடிகின்றது.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைத் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நாய் ஒன்றை கைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் நாயின் 4 கால்களை வெட்டிய பின்னர், அதனை இழுத்துச் சென்று, கை கோடாரியால் நாயின் முகத்தை முற்றாக வெட்டி சிதைத்து, தூஷண வார்த்தைகள் பேசும் வீடியோ ஒன்று எடுத்துள்ளார்கள்.
மேலும் நாயை வெட்டிக் கொல்லும் போது, குறித்த நபர்கள் தாமே அதை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களான பாலகிஸ்ணன், பாலசுதர்சன் ஆகியோரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் அத்தியவாசிய பொருட்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. பருப்பு, சீனி , கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய 600 ரூபாவாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாவாகவும், 330 ரூபாவாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாவாகவும், 215 ரூபாவாக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த விலை 150 ரூவாகாவும் குறைக்கப்பட்டுள்ளது.
600 ரூபாவாக இருந்த வெங்காயத்தின் மொத்த விலை 420 ரூபாவாகவும், 1900 ரூபாவாக இருந்த மிளகாய் விலை 1300 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும் வங்கிகள் டொலர்களை வழங்குவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இலங்கை படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்குமா என்பது தொடர்பிலும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் ஆசிரியர் சங்கத்தின் தலைவரான ஜோசப் ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து வவுனியா ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டங்களானது வவுனியா, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளின் முன்பாக ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இதன்போது அவர்கள் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குமார் (28) அவரது மனைவி மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வி (24) ஆகிய இருவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.
ஏற்றுக்கொள்ளாததால் தற்பொழுது குமார் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். குமார் புதுப்பாளையத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையில் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். போதிய அளவில் வருமானம் இல்லாததால், குமார் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் வாடகை வீட்டில் மிகவும் வறுமையில் வாடி வந்தனர்.
இந்நிலையில் குமாரின் மனைவி தமிழ்ச்செல்வி தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். இவர்களது வறுமையை பற்றி ஒரு சிலர் அன்னை தெரசா என்ற ஒரு வாட்ஸப் குழுவில் பதிவிட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் குழுவில் கண்ட அனைவரும் உதவி தர முன்வந்த பின்னர் நிதி திரட்டி இன்று ஆரணி அருகே சந்தவாசல் பகுதியில் ஃபீனிக்ஸ் சிறப்பு பள்ளியில், குமாரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு அன்னை தெரசா வாட்ஸ்அப் குழுவை சேர்ந்தவர்கள் சிறப்பாக வளைகாப்பு நடத்தி வைத்தனர்.
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அந்த வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் சீர்வரிசை வைத்து வளைகாப்புக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து பிரபல யூட்யூபரை திருமணம் செய்வதாக ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள துணை நடிகை திவ்ய பாரதி மீது ஏற்கனவே இரு புகார்கள் இருப்பதாகவும் பல ஆண்களை அவர் ஏமாற்றி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார்.
முதல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த பகலவன் ராஜா சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதில் நடிப்பதற்காக ஆட்களை தேடியபோது திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்புவை சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.
திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். பலே மோசடி இவரை வைத்து கவிதை தொகுப்பினை வீடியோவாக எடுத்து பகலவன் ராஜா வெளியிட, இருவருக்குமான நெருக்கம் அதிகமாகியுள்ளது.
திவ்யபாரதி பகலவன் ராஜாவிடம் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர்.
அப்போது திவ்ய பாரதி தன்னுடன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார். யூட்யூபர் அவர்கள் தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் ஓடி விட்டதால் தான் வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு திருமணம் ஆகவில்லை என்று திவ்யபாரதி கூறிய நிலையில், பகலவன் ராஜா அவரை காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த பகலவன் ராஜா தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
ஆனால் திவ்யபாரதி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். ஒவ்வொரு முறை திருமண பேச்சு எடுக்கும்போதும் ஏதாவது காரணம்கூறி தடுத்துள்ளார். 2 குழந்தைகள் திண்டுக்கல்லில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திவ்யபாரதி தங்கியுள்ளார்.
வீட்டுச் செலவுக்கு என மாதம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் பகலவன் ராஜா கொடுத்து வந்துள்ளார். மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவிற்காக பணம் வேண்டும் எனவும் ஒன்பது லட்சம் கேட்டு வாங்கியுள்ளார்.
அதோடு பகலவன் ராஜாவிடம் ஆசை வார்த்தை கூறி எட்டு பவுன் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பகலவன் ராஜா திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறும் பொழுதெல்லாம் அவருடன் சண்டையிட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார் திவ்யபாரதி.
30 லட்சம் மோசடி இதனால் சந்தேகம் அடைந்த பகலவன் ராஜா திவ்யபாரதியை பற்றி விசாரிக்க, அவரின் முழு விவரங்கள் அதன் பிறகே தெரியவந்துள்ளன.
அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதும் அவருக்கு பிறந்தது தான் அந்த இரண்டு பெண் குழந்தைகள் என்பதும் அதன் பிறகே தெரிய வந்தது. தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பகலவன் ராஜா தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் திவ்யபாரதி மீது புகார் அளித்தார். இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திவ்யபாரதி குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல புகார்கள் அதாவது உள்ளூர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய போதே திவ்யபாரதி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை ஏமாற்றி அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைப் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
இத்தொடர்பாக திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஏற்கனவே இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த புகார்கள் நிலுவையில் உள்ளது. தற்போது பகலவன் ராஜா அளித்துள்ள புகார் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் துணை நடிகை திவ்ய பாரதியார் பாதிக்கப்பட்ட மேலும் பலர் அடுத்தடுத்து புகார்கள் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய உலகில் இணையத்தில் வெளிவரும் காணொளிகள் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. அந்த வகையில், ஜீன்ஸ் அணிந்த சிம்பன்சி ஒன்று பெண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பன்சிகள் என்னும் மனித குரங்குகள் என்றுமே மனிதர்களை போலவே நடந்து கொள்பவை. குறித்த காட்சியில் சிம்பன்ஸி ஒன்று சௌமியா என்ற பெண்ணிடம் மிகவும் ரொமான்ஸாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் முத்தமழையையும் பொழிந்து வருகின்றது. குறித்த காட்சியானது தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்டுக்கு சென்று சௌமியா சந்திரசேகரன் என்ற பெண் எடுத்ததாகும்.
குறித்த பெண் இக்காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் ரசித்துள்ளதுடன், லட்சக்கணக்கான லைக்ஸும் குவிந்து வருகின்றது.
தமிழில் குட்டி நட்சத்திரமாக இருந்து சீரியல், நிகழ்ச்சி தொகுப்பாளினி, படங்கள் என்று பணியாற்றி பிரபலமானவர் தான் விஜே கல்யாணி. பிரபுதேவா நடித்த அள்ளித்தந்த வானம், ரமணா போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாகவும், ஜெயம் படத்தில் கதாநாயகிக்கு தங்கையாக நடித்து பிரபலமானார்.
அதன்பின் அண்ணாமலை, சின்னப்பாப்பா பெரியப்பாப்பா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வந்தார். பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்த கல்யாணி திருமணத்திற்கு அடையாளம் தெரியாமல் காணாமல் போனார். தற்போது பிரபல தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சிறு வயதில் இருக்கும் போதே தன்னுடைய அம்மா தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகவும் கூறியுள்ளார். அவர் நினைவான தன் கையில் டேட்டூ குத்தியுள்ளதையும் காட்டியுள்ளார் கல்யாணி. மேலும் 7, 8 வயது இருக்கும் போது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.
அப்போது மேடையில் எனக்கு சுச்சு(சிறுநீர்) வந்தததாக இயக்குனரிடம் சைகையில் கூறினேன். 2 நிமிஷம் என்று சொல்லி ஒரு மணி நேரமாக நிற்கவைத்துவிட்டார். என்னால் பொருக்கமுடியாமல் மேடையிலேயே சுச்சு போய் விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அறியாத வயதில் இப்படி செய்ததை வெளிப்படையாகவும் கூறியுள்ளார். மேலும் என் பொண்ணு Gay- வாக இருந்தாலும் நான் சப்போர்ட் செய்வேன் என்றும் கூறியுள்ளார் கல்யாணி ரோஷித்.
கழிவறைக்கு சென்ற சிறுமியை நாய் கடித்ததால் தற்போது பார்வை இழப்பு ஏற்பட்டு கஷ்டப்படும் காட்சி கண்கலங்க வைத்துள்ளது. மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த பழனி, மாற்று திறனாளியான அவர் இரண்டு கால்கள் செயலிழந்து வீட்டிலேயே உள்ள நிலையில் இவருடைய மனைவி கூலிவேலை சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகே உள்ள அரசு மகளிர் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி 8ம் வகுப்பு படிக்கும் ஆசினி பள்ளியில் கழிவறைக்கு சென்ற நிலையில், அங்கு வெறிநாய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். மாணவியின் உடலில் பல இடங்களில் கடித்த நிலையில், கண் பகுதியிலும் பலமாக கடித்துள்ளது.
இதனால் கண்ணில் வீக்கம் ஏற்பட்ட நிலையில், படுகாயமடைந்த மாணவி போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஆசினிக்கு வெறிநாய் கடித்ததில் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என பெற்றோரிடம் கூறியுள்ளார்.
சென்னையில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், எந்தவொரு முன்னேற்றம் இல்லாமல் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் காணொளி இணையத்தில் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது.
காதலை நிரூபிக்க மார்பில் பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ். இவரை அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக காதலை வளர்க்க, பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் ஜோடியாக செல்பி புகைப்படமும் எடுத்துள்ளனர். இந்நிலையில், எங்கே நாம் காதலி நம்மைவிட்டு சென்றுவிடுவார் என்ற பயத்தில் என்று காதலன் அபினேஷ் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.
அதன்படி, தனது பெயரை நெஞ்சில் பச்சை குத்த வேண்டும், அப்போது தான் நீ உண்மையாக காதலிக்கிறாய் என நம்புவேன் என்று அந்த மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பச்சை குத்த மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ், ஒருகட்டத்தில் செல்போனில் நாம் பேசிய வாய்ஸ் ரெக்கார்ட், ஜோடியாக எடுத்த செல்பி புகைப்படங்கள் அனைத்தையும் உன் பெற்றோர் மற்றும் அனைவருக்கும் காண்பித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால், அவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அபினேஷ் மாணவியின் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து, மாணவியின் தந்தை இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் காதலன் அபினேஷை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் ரெக்கார்ட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மாவட்டம் நாமக்கல்லில் ஒன்லைன் ரம்மி விளையாட்டில், 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். ஒன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர், வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை வைத்து விளையாடியுள்ளார்.
அதில் பணத்தை இழந்த சுரேஷ், இழந்ததை மீட்க வேண்டும் என்று எண்ணி நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளார். அதனை வைத்து தொடர்ந்து விளையாடிய அவர் மேலும் நஷ்டமடைந்ததால் விரக்தி அடைந்துள்ளார். 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த சுரேஷ் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
கடிதம் ஒன்றை எழுதிய சுரேஷ் அதில், வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம், நண்பர்களிடம் பணம் வாங்கி முழுமையாக ரம்மியில் இழந்து விட்டேன்.
மேலும், ஒன்லைன் ரம்மியில் இருந்து மீள முடியவில்லை, Bye Bye Miss U ரம்மி என குறிப்பிட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழப்பதால் பலர் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சாகச பயணம் மேற்கொண்டவர் அந்த இலக்கை அடையும் தருணத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு புல்லம்பாறை பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ் (வயது 31). ஹாலிவுட் படங்களில் வரும் ஹீரோக்கள் ஸ்கேட்டிங் போர்டில் செல்வதை போல சிறுவயது முதல் எப்போதும் ஸ்கேட்டிங் போர்டிலே எங்கும் சுற்றிவந்துள்ளார்.
மேலும் பல ஸ்கேட்டிங் போர்டு போட்டிகளிலும் இவர் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து இவருக்கு ன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டில் சென்று சாதனை படைக்க முடிவு செய்துள்ளார்.
இவரின் இந்த முடிவை பெற்றோர்கள், நண்பர்கள் ஆகியோரும் ஊக்கப்படுத்தியுள்ளனர். இது வரை இது போன்ற சாதனையை யாரும் செய்யாததால் இந்த அவர் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்.
அதன்படி கடந்த மே மாதம் 29ம் தேதி உறவினர்கள், நண்பர்கள் சூழ கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ஸ்கேட்டிங் போர்டு பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, போன்ற மாநிலங்களை ஸ்கேட்டிங் போர்டு மூலம் கடந்து சில நாட்களுக்கு முன்னர் ஹரியானாவை அடைந்துள்ளார்.
பின்னர் அங்குள்ள அம்பலா என்ற இடத்தில் இருந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “64வது நாளான இன்று ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளேன். இன்னும் 10 அல்லது 15 நாட்களில் காஷ்மீரை அடைந்து விடுவேன். அனைவரும் எனக்காக பிரார்த்திக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அங்கு இருந்து மீண்டும் தனது பயணத்தை தொடங்கியவர் ஹரியானா மாநிலம் பஞ்சகுலா அருகே சென்றபோது லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இந்த தகவல் அவரது பெற்றோர், மற்றும் உறவினர்களுக்கு தெரியவர அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாகச பயணம் மேற்கொண்டவர் அந்த இலக்கை அடையும் தருணத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் கோபிநாத் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் கலைசெல்வி(20) என்பவரை 4 வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கலைச்செல்வியின் தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஜூலை 2ஆம் தேதி பெரியதச்சூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை செய்து கலைச்செல்வியை அவரது விருப்பத்தின் பேரில் கணவர் கோபிநாத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கலைச்செல்வி தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது. தாய் வீட்டுக்குச் சென்ற பெண்ணை காணவில்லை என கோபிநாத் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கும் காணவில்லை. இதனால் தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடுகன்னாவ, ரத்மிவல பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ரத்மிவல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்ட ஆண் ஒருவரே அவரை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (03.08) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரஞ்சா என் அழைக்கப்படும் ஜோன்சன் என்ற 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த நபரின் கை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டு பிறிதொரு இடத்தில் வீசப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசாருடன் இணைந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த விசாரணைகளையடுத்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இடியன் துப்பாக்கி சிதம்பரபுரம் பொலிசாரால் மீட்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 4 வாள்கள், இரத்தம் தோய்ந்த ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 7 பேரில் ஒருவர் காயம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய 6 பேரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்டிருந்த நீண்டநாள் பகையும், அதன் காரணமாக அவ்வப்போது இடம்பெற்ற மோதல்களின் தொடர்ச்சியாகவே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர்கள் 2 பேர் தங்களது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தம்பி வீட்டின் மாடியில் ஏறி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அண்ணன் கீழ்தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென மாடியில் இருந்து தம்பி தவறி விழுந்தார். உடனே அவரது அண்ணன் அவரை லாவகமாக பிடித்து காப்பாற்றி காப்பாத்தினார். இதில் தம்பியின் எடை தாங்காமல் அண்ணனும் கீழே விழுந்தார். இந்த விபத்தில் இருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.
இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வில் பதிவாகி இருந்தது. நொடிப்பொழுதில் தம்பியை காப்பாற்றிய அண்ணனின் இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.