ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேற காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
போராட்டம் வேறு வகையில் திசை திரும்புவதனை தவிர்க்க வேண்டும் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காலி முகத்திடலில் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் ஊடவியலாளர் சந்திப்பு ஒன்றை சற்று முன்னர் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் இல்லத்தை சுற்றிவளைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள நிலையில் அங்கு சென்ற ஒரு குழுவினரால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இனினும் இவ்வாறு தொடர்ந்தால் நாட்டின் நிலைமை மிகவும் பயங்கரமானதாக மாறிவிடும். எனவே தாங்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது ஒரு சமாதானமான போராட்டமாக காணப்பட வேண்டும். வன்முறை எங்கள் நோக்கமல்ல. எனினும் கோட்டாபய மற்றும் ரணிலை விரட்டும் வரை எங்கள் போராட்டம் முடிவுக்கு வராதென ஆர்ப்பாட்ட ஏற்பட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தென்காசி அருகே காதலிப்பதாக இளைஞரிடம் பழகி திருமணம் செய்து கொண்டதோடு திருமணமான அடுத்த நாளே சுமார் 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளோடு மாயமான இளம்பெண் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களையும், வயதாகியும் திருமணமாகாத இளைஞர்களை குறி வைத்து பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் இளம்பெண்கள் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நகை பணத்துக்காக விவாகரத்தான ஆண்களை கல்யாண புரோக்கர் மூலம் குறிவைத்து, மேக்கப் போட்டு ஏமாற்றிய 54 வயது ஆண்டியை காவல்துறையினர் கைது செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கல்யாணமான அடுத்த நாளே 15 லட்சத்துடன் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் முத்துக்குமார் என்பவர் தான் ஏமாற்றப்பட்டவர். கோட்டைப்பட்டியைச் சேர்ந்த இளம் பெண் பவித்ரா என்பவருக்கும் முத்துக்குமாருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமண நிச்சயிக்கப்பட்டது.
இளம்பெண் பவித்ரா திருமணத்திற்கு நாட்கள் நெருங்க நெருங்க பவித்ராவின் குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர் திருமண செலவுக்கு பணம் இல்லை என்றும் திருமணம் செய்ய வேண்டுமானால் 15 லட்சம் ரூபாய் வரை தங்களுக்கு தர வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது 15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் திருமணம் முடிந்த 15 நாட்களில் திரும்ப தருவதாக கூறியுள்ளனர். 15 லட்சம் மோசடி பெண்ணும் அழகாக இருக்கிறார் என்பதால் மகனுக்கும் நீண்ட நாள் திருமணம் நடக்கவில்லை எனவே பணத்தை தற்போது கொடுத்து விடுவோம் என நினைத்து 15 லட்சம் ரூபாயை பவித்ராவின் குடும்பத்தினரிடம் முத்து குமாரின் குடும்பத்தினர்இரு தவணைகளாக கொடுத்துள்ளனர்.
இதையடுத்து பத்திரிக்கை அடித்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுத்த நிலையில் திருமணமும் முடிந்துள்ளது. அடுத்த நாளே ஓட்டம் இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே முத்துக்குமாருடன் வாழ முடியாது என பவித்ரா வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்காக தான் கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் நகைகள் பணம் உள்ளிட்டவற்றையும் பவித்ரா எடுத்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமாரின் பெற்றோர் பவித்ராவை பலமுறை அழைத்தும் அவர் வீட்டுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலை தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துக்குமார் காவல் நிலையத்தில் மூன்று முறை புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். பின்னர் நடத்திய விசாரணையில் தான் பவித்ரா மது போதைக்கு அடிமையானவர் எனவும் இதே போல பல ஆண்களுடன் பழகி பணம் நகையை மோசடி செய்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் முத்துக்குமார் தாக்கல் செய்த ஆவணங்களை ஆராய்ந்து நீதிபதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளனர் இதை எடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
33 வயதில் 10 ஜெட் விமானங்களை சொந்தமாக்கி இளம் தொழிலதிபராக பெண் ஒருவர் உயர்ந்துள்ளார். பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே வியாபாரத்தில் உச்சம் தொடமுடியும் என்ற நிலை தற்போது இருந்தாலும் சிலர் தங்கள் திறமை மற்றும் விடாமுயற்சி காரணமாக சாமானியர் கூட உச்சம் தொட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள். அவரிகளில் ஒருவர்தான் கனிகா தேக்ரிவால்.
பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பும், முதுகலை வணிக மேலாண்மை படிப்பையும் நிறைவு செய்த இவர், தனது 22 வயதில் ஏவியேஷன் துறையில் ஜெட் செட் கோ (Jet Set Go) என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
அப்போது அவரிடமிருந்த கையிருப்பு வெறும், 5,600 ரூபாய்தான். பெட்டி கடை கூட வைக்கமுடியாத தொகையில்தான் அவர் சிக்கலான ஏவியேஷன் துறையில் கால் பதித்தார்.
இவரின் நிறுவனம் இந்தியாவிலுள்ள பல பிரைவேட் ஜெட்டுகள், சார்டர்ட் பிளேன்கள், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி ஒரு விமான டாக்ஸி அக்ரிகேட்டார் போல செயப்பட்டது.
அதாவது சொந்த ஆட்டோ அல்லது கார் இல்லாமல் வாடகை கார்களை பயன்படுத்தி ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் செயல்படுவதை போலத்தான் இவரது நிறுவனமும் செயல்படுகிறது.
இவர் இந்த தொழிலில் இறங்கியபோது இவர் சிந்தித்த அளவு யாரும் சிந்திக்கவில்லை. அதாவது மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்த தொழிலை நடுத்தர மக்கள் பயன்படுத்தும் விதமாக மாற்றிக்காட்டினார்.
பிற நிறுவனங்கள் அதிக கமிஷன், நேரம் தவறல் போன்றவற்றில் மாட்டி திணறிக்கொண்டிருந்த நிலையில், முறையான கமிஷன், சரியான திட்டமிடல் போன்றவற்றால் வாடிக்கையாளர்களை ஈர்த்தார்.
இதனால் இவரது நிறுவனம் விரைவில் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. மிகப்பெரும் பணக்காரர்கள் முதல், நடுத்தர மக்கள் வரை இவரது நிறுவனத்தில் முன்பதிவு செய்து தனியார் விமான சேவையை பெறுகிறார்கள்.
இந்த நிறுவனம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆன நிலையில் கனிகா தேக்ரிவாலிடம் 10 ஜெட் விமானங்கள் சொந்தமாக இருக்கிறது. அந்த அளவு குறுகிய காலத்தில் தனது தொழிலில் உச்சம் தொட்டுள்ளார். இத்தனைக்கும் இவர் இந்த நிறுவனத்தை தொடங்கிய புதிதில், இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் ஓராண்டுகள் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட இவர், பின் அதிலிருந்து மீண்டு இந்த சரித்திர சாதனையை படைத்துள்ளார். தற்போது கூட இந்த துறையில் புதிய கருவிகளை அறிமுகப்படுத்தும் ஆராய்ச்சியில் இவரது நிறுவனம் இறங்கியுள்ளது. நாங்கள் விமான பயணத்தை ஜனநாயகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என்று கூறியதில் இருந்தே இவரின் வெற்றி சரித்திரத்தை நாம் அறியலாம்
திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் பெண் தூக்கில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, அமைந்தகரை, பி.பி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைவேந்தன் , சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. பிரியதர்ஷினி மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்தார். அந்த தகவலின் பெயரில் போலீசார் இறந்து போன பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
திருமணமான சில மாதங்களில் இருந்தே கணவன் – மனைவிக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பிரியதர்ஷியின் பெற்றோர், மாதர் சங்கத்தினருடன் இணைந்து அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர். டி. ஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகநூலில் பழக்கமான காதலியை பார்க்க நேரில் சென்ற காதலன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கிரண்.
இவருக்கும் ஆழிமலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிறகு அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்ட பெண்ணை சந்திக்க சென்றுள்ளார் கிரண். அந்த பெண்ணின் வீடு அருகே சென்றதாக கூறப்படுகிறது. பெண்னின் சகோதரர் மற்றும் பலர் சேர்ந்து அவரை அடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்கரை பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று உடல் முழுவதும் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இதனை அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் பார்த்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நித்திரவிளை போலீசார் உடலில் முகம் முழுவதும் சிதைந்து இருந்ததால் இறந்தவர் யார் என்று அடையாளம் காண்பதில் சிரமம் அடைந்தனர்.
மேலும் கடலோர காவல்படை படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த கடலோர காவல்படையினர் கரை ஒதுங்கிய ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த நபர் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அந்த உடல் கிரணுடையதாக இருக்குமோ ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணத்தில் நபர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு சில கண்டிஷனுடன் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் மறக்க முடியாத நிகழ்வு
திருமணம் என்பது நம் அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வுகளுள் ஒன்று என்றே சொல்லலாம். அதை நியாபகப்படுத்தும் வகையில் நாம் நிறைய புகைப்படங்கள் எடுப்பது வழக்கம்.
திருமணத்திற்கு ஜாதகம், பொருத்தம் என பார்த்து பல சடங்குகளை செய்வதையும் நாம் அவதானித்திருப்போம். ஆனால் இங்கு மாப்பிள்ளை மணப்பெண்ணிற்கு சில கண்டிஷனை போட்டு திருமணம் செய்துள்ளார்.
கண்டிஷன் என்னென்ன?
குறித்த ஒப்பந்தத்தில் மனைவி தினமும் சேலை மட்டுமே கட்ட வேண்டும், கணவர் இல்லாமல் இரவு நேரங்களில் பார்ட்டிக்கு செல்ல கூடாது. ஞாயிறு அன்று காலை உணவுகளை கணவர் மட்டுமே சமைக்க வேண்டும், வீட்டு உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உணவகங்களில் உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது, மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் பீட்சா போன்ற உணவுகளை சாப்பிடுவது.
15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ஷாப்பிங் செல்வது, தினமும் காலையில் ஜிம் செல்வது மற்றும் பார்ட்டிகளுக்கு செல்லும்போது நிறைய புகைப்படங்கள் எடுப்பது போன்ற பல நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தது.
இந்த திருமண நிகழ்வின் முடிவில் மணமகன் மணப்பெண்ணின் பாதங்களைத் தொட்டு வணங்கியுள்ளாராம். மணப்பெண்ணுக்கு அன்றாட வாழ்வில் கடைபிடிக்க சிரமமான பல கட்டுப்பாடுகளை விதித்து விட்டு ஒரே ஒரு நாள் காலில் விழுந்து வணங்குவதால் எல்லாம் சரி என்று ஆகி விடுமா என பெண்ணியம் பேசும் சிலர் கொந்தளித்து வருகின்றனர்.
எரிச்சலடைந்த பார்வையாளர்கள்
இஸ்லாமியர் ஒருவர் தனது பதிவில், இது திருமணம் அல்ல, ஒப்பந்தம். இதற்கு அவர்கள் உடுத்தியுள்ள ஷெர்வானி அடையாளமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மற்றொருவர் எழுதிய கமெண்டில், எல்லா நிபந்தனைகளும் சரி, ஆனால் தினசரி புடவை அணிவது என்பது கொஞ்சம் அதிகமாக உள்ளது, தற்போது சுடிதார், ஜீன்ஸ் என பெண்களின் ஆடைகள் பெருகி வரும் நிலையில் இப்படியான நிபந்தனை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு செயலாக அமையக்கூடும் என கூறியுள்ளார்.
வேறொருவர் கூறியுள்ள கருத்து என்னவென்றால், இந்தியாவில் அனைவரும் சமம் என்ற நிலை அழிந்து தற்போது சமத்துவமின்மை காணப்படுவதாகவும், இது தமக்கு மிகுந்த வருதத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
1900 கிலோ மீட்டர் பயணம் செய்து 8 ஆண்டுக்கு பின் செல்ல நாயுடன் இளம்பெண் இணைந்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த பெட்சி டிஹான் என்ற பெண் காணாமல் போன நாயுடன் மீண்டும் இணைவதற்காக 1900 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார்.
கடந்த 2013ம் ஆண்டில் ஃப்ளோரிடாவில் வசித்து வந்த பெட்ஸி பிட் புல் நாய் ஒன்றை தத்தெடுத்து வளர்த்தி வந்துள்ளார். அதற்கு ஹார்லி என்று பெயரிட்டார். இதனையடுத்து, பெட்ஸி 2014ம் ஆண்டு அதனைத் தவறவிட்டார். அதன் பின் போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரம் கொடுப்பது வரை பல வகைகளில் அதனைத் தேடிப்பார்த்திருக்கிறார்.
8 வருடத்திற்கு முன் தொலைந்த நாய்
ஆனால் அந்த நாய் கிடைக்கவில்லை. இதனால் நம்பிக்கை இழந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக இழந்த மிசூரி மாகாணத்துக்குக் குடி பெயர்ந்தார். அதன் பிறகு பெட்ஸி வேறு எந்த நாயும் வளர்க்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஜூலை 2ம் தேதி பெட்ஸிக்கு Lee County Domestic Animal Services-ல் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. பல நாட்கள் வெட்டப்படாத அதிக நீளமான நகங்களைக் கொண்ட பிட் புல் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர்.
மேலும், அதன் தோலிலிருந்த மைக்ரோசிப் மூலம் அதன் உரிமையாளர்களைக் கண்டறிந்து பெட்ஸிக்கு அழைத்ததாக அவர்கள் கூறியதும், உற்சாகமடைந்த பெட்ஸி உடனடியாக மிசூரியில் இருந்து ஃப்ளோரிடாவுக்கு காரில் பயணம் செய்துள்ளார்.
சுமார் 1900 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ஹார்லியுடன் மீண்டும் இணைந்தார் பெட்ஸி. 8 வருடங்கள் கழித்து மீண்டும் தனது செல்ல நாயுடன் இணைந்த பெட்ஸி அது மெலிந்திருப்பதைப் பார்த்து வருந்தியிருக்கிறார்.
கிடைத்தது எப்படி?
மேலும், ஹார்லி மீண்டும் சேர உதவியாக இருந்த மைக்ரோ சிப் ஒரு அரிசி அளவு இருக்கும் கருவியாகும். இதனை நாயின் தோலில் பொருத்திவிட்டால் வாழ்நாள் முழுவதும் நாயின் உடலில் இருக்கும். இதில் உரிமையாளரின் விவரங்கள் இருக்கும். நாயைக் காண்பவர்கள் மீண்டும் உரிமையாளரிடம் கொண்டு சேர்க்க இதைப் பயன்படுத்துகிறார்கள்.
கணவன் மனைவி திருமணத்திற்கு பின் பல சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதற்கு காரணமே இருவருக்கான புரிதல் பின்னர் குறைந்துவிடுவது தான். திருமணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருக்குமே அடிக்கடி சண்டை ஏற்படும். ஏன் திருமணம் செய்தோம் என தோன்றும்.
இதற்கு காதல் திருமணம் செய்தவர்களும் அதிகம். காரணம் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நம் துணையின் மைனஸ்களை மட்டுமே பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம்.
முதலில் அதை நிறுத்த வேண்டும். அடிப்படையாக அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மதிப்பளிக்க வேண்டும். மேலும், ஒருவரைத் திருமணம் செய்வதற்கு முன்பு அவரது பொருளாதார நிலைமை எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தால், அதை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி இருவரும் கலந்தாலோசித்து செயல்படலாம்.
இருவருக்கும் உள்ள தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், அவற்றில் நன்மை தருபவை. இருவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துபவை, எதிர்மறையான பழக்கங்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் என அனைத்தையும் பேசி முடிவு செய்ய வேண்டும்.
தம்பதிக்குள் இருக்கும் நெருக்கம் தனிப்பட்டது. இதில் பிறரின் தலையீடு எப்போதும் இருக்கக்கூடாது. கணவன்-மனைவி இருவருக்குமான தனிப்பட்ட விஷயங்களில் வேறு எந்த நபரையும் நுழைய விடாமல் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.
கணவன்-மனைவி உறவுக்குள் இருக்கக் கூடாதது தயக்கம். இருவரும் தங்கள் தேவை என்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதை, எவ்வித தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் தங்கள் துணையிடம் சொல்ல வேண்டும்.
கணவன், மனைவி இருவருமே, அவ்வப்போது ஏதாவது திடீர் பரிசு கொடுத்து அசத்தலாம். அது பணம் செலவழித்து வாங்கும் பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்ற நிலை அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் வீதித்தடைகளை அகற்றுவதற்காக போராட்டக்காரர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து வீதித்தடைகளை அகற்ற முற்பட்ட போது அந்த முயற்சி பாதுகாப்பு தரப்பினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அப்பகுதியில் மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி முற்றாக இருளில் மூழ்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் அப்பகுதியில் பொலிஸாரால் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன், தொடர் துப்பாக்கிப்பிரயோக சம்பவங்களும் பதிவாகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு வீதித்தடைகளை தகர்த்துக் கொண்டு நாடாளுமன்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்.
இன்னும் இரு வீதித்தடைகளே நாடாளுமன்றத்தை அடைய இருக்கின்ற போதிலும், அந்த வீதித்தடைகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு – பிளவர் வீதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கண்ணீர்ப்புகை தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் இந்த சம்பவத்தில் குருநாகல், தலதாகம பிரதேசத்தை சேர்ந்த ஜாலிய திசாநாயக்க (26 வயது) என்ற ஒரு குழந்தையின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளின் பெயரில் கலனில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதால் 5 நாட்களாக வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டியிருந்ததாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று (12.07) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5 நகாட்களுக்கு பின்னர் நேற்று காலை பெற்றோல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.
இதன்போது பெற்றோல் எரிபொருளை பெறுவதற்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் என்பன நீண்ட வரிசையில் காத்திருந்தன.
எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அத்தியாவசிய தேவைக்கு என்னும் பெயரில் அரசாங்க அதிபரின் சிபாரிசுக் கடிதத்துடன் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்று கலன்களில் எரிபொருளை பெற்றுச் சென்றிருந்தது. இதேபோன்று, வேறு பலருக்கும் கொள்கலன்களில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றிருந்தது.
கலன்களில் எரிபொருள் விநியோகம் இடையிடையே இடம்பெற்றதுடன், தனியார் நிதி நிறுவனங்களின் கார்கள் உட்பட பல கார்கள் முறையான வரிசையின்றி செல்வாக்கு அடிப்படையில் எரிபொருளை பெற்றிருந்தன.
இதன்காரணமாக, கடந்த 5 நாட்களாக பெற்றோல் பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த முச்சக்கர வண்டியை வாழ்வாதாரமாக கொண்ட முச்சக்சக்கர வண்டிகள் உட்பட பலரும் எரிபொருளை பெற முடியாது வீடு திரும்பியிருந்ததுடன், மீண்டும் 6 வது நாளாக பெற்றோல் வரும் என்ற நம்பிக்கையுடன் வீதியில் காத்திருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினரின் அனுமதியுடன் காப்புறுதி நிறுவனத்தினர் பெற்றோல் எரிபொருள் கோரிக்கையை முன்வைத்தனர். இதன்போது அவசர விபத்து சேவை காப்புறுதிப் பிரிவின் மாவட்டத்திற்கான ஒரு வாகனத்திற்கு பெற்றோல் வழங்க அனுமதி வழங்கியிருந்தேன்.
வேறு எந்த வாகனத்திற்கோ அல்லது கலன்களில் பெற்றோல் நிரப்புவதற்கோ குறித்த தனியார் நிதி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அத்துடன், கலன்களில் பெற்றோல் எடுப்பதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் அலுவலகம் முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் கடும் பதற்றமான சூழல் கொழும்பில் நிலவி வருகின்றது.
காயமடைந்தவர்கள் அனைவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய படையினருக்கு இலங்கையின் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி ஊரடங்கு சட்டமும், அவசர காலச் சட்டமும் நடைமுறையிலுள்ள தற்போதைய சந்தர்ப்பத்தில்,
நிலைமைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு ஆயுதம் தாங்கிய படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் அமைதியை பேணுமாறு பொதுமக்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி இன்று பதவி விலகியதும் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்க கட்சித் தலைவர்கள் ஏற்கனவே இணங்கியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக நாடாளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக, ஒரு சிட்டிகை உப்பு சாப்பிட்டால், உங்களுக்கு அதிக பலனை கொடுக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உப்பு சாப்பிட்டால்.. உடற்பயிற்சி செய்யும் போது அதிக எனர்ஜி கிடைக்கிறது. அந்தவகையில் தற்போது உடற்பயிற்சிக்கு முன்னர் உப்பு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
உப்பு தண்ணீரைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே உப்பை உட்கொண்டு கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது அதிகளவு நீரிழப்பு ஏற்படாது. இதனால் அதிக நேரம் நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம்.
உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கு உப்பு உதவுகிறது. எனவே நீங்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதற்கு முன்னதாக உப்பு சாப்பிட்டால் இதய துடிப்பை சீராக்குகிறது.
உடற்பயிற்சி செய்வதற்கு பின்னதாக தசைப்பிடிப்பு மற்றும் மூட்டு வலிகள் அதிகளவில் ஏற்படுவதை நாம் உணர்வோம். எனவே ஜிம்மிற்கு செல்வதற்கு முன்னதாக உப்பு சாப்பிட்டால் இப்பிரச்சனைகள் ஏற்படுவதை நாம் தடுக்கலாம்.
உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக உப்பு சாப்பிடுவதால் நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடனுன் இருக்கும்
சினிமா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல, தங்களின் ஹேர் ஸ்டைல் மற்றும் அணியும் உடைகள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கருதுவார்கள். ஆனால், இவற்றை எல்லாம் விட சிலர் தங்கள் பின்பற்றும் பிரபலங்களைப் போல அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என நினைத்து, இதற்காக ஏராளமான சிகிச்சை மற்றும் பணத்தினையும் செலவு செய்து வருவதையும் நாம் பார்த்திருப்போம்.
அப்படி இளம் பெண் ஒருவர், பிரபல மாடலான கிம் கர்தாஷியனை போல தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து, பின்னர் அந்த பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. உலக அளவில் பிரபலமான மாடல் கிம் கர்தாஷியனை இன்ஸ்டாவில் பின் தொடர்வோர் மட்டும் சுமார் 32 கோடிக்கும் அதிகம் ஆகும். இவரது உடை மற்றும் உடலமைப்பு உள்ளிட்ட பலவற்றை ரசிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடலான ஜெனிபர் என்பவர், கிம் கர்தாஷியனை போல, மொத்தமாக மாற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இதற்காக, தனது 17 வயதில் முதல் அறுவை சிகிச்சை செய்து வந்த ஜெனிபர், அடுத்த 12 வருடங்களில், சுமார் 40 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்காக, மொத்தம் ஆறு லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளார். இந்நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி மாறிக் கொண்டிருப்பது தனக்கு சரி ஆகாது என்று முடிவு செய்த ஜெனிபர், மீண்டும் தன்னுடைய பழைய உருவத்திற்கே வர வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பேசும் ஜெனிஃபர், “பலரும் என்னை கிம் கர்தாஷியன் என்றே அழைத்து வந்தது, எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சல் ஊட்டத் தொடங்கியது. நான் மாடலாக இருந்து, தற்போது பிசினஸ் செய்து வருகிறேன். இப்படி என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நிறைய விஷயங்களை சாதித்து விட்டேன்.
ஆனாலும், நான் கர்தாஷியனை போல இருப்பதால் தான், பலரும் எனக்கான அங்கீகாரத்தை தருகிறார்கள். நான் உண்மையில் யார் என்பதே காணாமல் போய்விட்டது. அறுவை சிகிச்சை செய்து செய்து, அதற்கு நான் அடிமையாகி விட்டேன் என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன். இதனால் மீண்டும் என்னுடைய பழைய உடலையும் தோற்றத்தையும் பெற வேண்டும் என நான் நினைத்தேன்” என தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், ஜெனிஃபருக்கு தன்னுடைய உடல் தோற்றத்தை நினைத்து ஒருவித எரிச்சல் ஏற்படும் நோய் ஒன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், தனது பழைய தோற்றத்திற்கு மாறுவதற்காக, மருத்துவர் ஒருவரை தேடிப் பிடித்துள்ள ஜெனிஃபர், இதற்காக தற்போது சுமார் 95 லட்சம் ரூபாய் செலவு செய்து தன்னுடைய பல உருவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறார். நான் நானாக இருப்பது தான் அழகு என தெரிவிக்கும் ஜெனிபர், அழகுக்கு அடிமையாவது குறித்த ஆவண படத்தையும் எடுத்து இயக்கி வருகிறார்.
இந்தியாவில் சிறுமி உயிரோடு தனது தாயாரால் புதைக்கப்பட்ட நிலையில் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள மயானம் அருகே சில பெண்கள் விறகுகளை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது மயானத்தில் இருந்து பெண் அழும் குரல் கேட்டது.
இதையடுத்து பேய் தான் அழுகிறது என பயந்து பதறிய பெண்கள் அங்கிருந்து ஓடி சென்றனர். பின்னர் ஊர் மக்கள் பலர் சேர்ந்து சுடுகாட்டுக்குள் சத்தம் வந்த திசையை சென்று பார்த்துள்ளனர். அப்போது களிமண்ணில் இருந்து சத்தம் கேட்கவும், பதறி போய் தோண்டவும் ஆரம்பித்தனர்.
அங்கு சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுமியின் வாயில் களிமண்ணை அடைத்து வைத்திருந்ததும் தெரிந்தது. மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை தரப்பட்டது.
பின்னர் சிறுமி மருத்துவர்கள், பொலிசார் முன்னிலையில் பேசுகையில், என்னுடைய பெயர் லாலி. என் பெற்றோரின் பெயர் ராஜு சர்மா – ரேகா ஷர்மா. என் கிராமத்தின் பெயர் தெரியவில்லை.
என் அம்மாவும், பாட்டியும் என்னை கல்லறைக்கு அழைத்து வந்தனர். நான் அழுது கொண்டே இருந்தேன்.. அதனால், என் வாயில் களிமண்ணை திணித்தனர். பிறகு குழிதோண்டி என்னை புதைத்தனர் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார். இதையடுத்து லாலியின் பெற்றோர் மற்றும் கிராமத்தை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.