காயவைத்த துணியை எடுக்கும்போது நடந்த துயரம் : ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி!!

தெலங்கானாவில்..

தெலங்கானாவில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்திற்குட்பட்ட பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அகமது. இவரது மனைவி பர்வீன். இந்த தம்பதிக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் மீதும் என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில் பர்வீன் இவர்களது குடிசை வீட்டில் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார். பின்னர் காய்ந்த துணிகளை பர்வீன் எடுத்தபோது மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து 2 குழந்தைகளும் பெற்றோர்களை கட்டிப்பிடித்தபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் 4 பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முற்றுப்பெறும் எரிபொருள் வரிசைகள் : இலங்கை வரும் மூன்று எரிபொருள் கப்பல்கள்!!

முற்றுப்பெறும் எரிபொருள் வரிசைகள்?

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று (15.07.2022) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அவற்றில் தலா 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவையாளர்களுக்கு இன்று முதல் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் எரிபொருள் விநியோகிப்படவுள்ளது.

இச் செய்தி நீண்டநாட்களாக வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திரைப்பட பாணியில் 11 பெண்களை திருமணம் செய்த இளைஞர் : ஏமாந்த பெண்களின் பரிதாப நிலை!!

இந்தியாவில்..

இந்தியாவில் நான் அவன் இல்லை திரைப்பட பாணியில் 11 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மோசடி நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் மாதம் சம்பாதிப்பதாகவும் தான் பெரிய கோடீஸ்வரர் எனவும் கூறி 11 பெண்களை தனது வலையில் வீழ்த்தி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 11 பெண்கள் ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், குண்டூரைச் சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு.

இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி மேட்ரிமோனியில் பதிவிட்டிருந்தார். குறிப்பாக திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே மேட்ரிமோனி மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு காதல் வலை வீசினார்.

அவர் கூறுவதை உண்மை என நம்பிய நாங்கள் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் எங்களிடமிருந்த விலை உயர்ந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்.

இதே போல் பல பொய்களை சொல்லி 11 பெண்களை அவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர்.

11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை, பணத்தை ஏமாற்றிய சிவசங்கர் பாபு மீது குகட்பல்லி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் பொலிஸ் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் பொலிஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் பொலிசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பெண்களை சிவசங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க : இந்த நன்மைகள் வந்து சேரும்!!

பேரிச்சம் பழத்தில்..

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.

பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கண் பார்வை அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தில் புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இதில் உள்ள புரோட்டீன் தசைகளை வலுவாக்குகிறது. முக்கியமாக பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி எப்போதும் வலுவாக இருக்கும்.

பேரிச்சம் பழத்தில் பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது. பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கண் பார்வை அதிகரிக்கும்.

பேரிச்சம் பழத்தில் புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இதில் உள்ள புரோட்டீன் தசைகளை வலுவாக்குகிறது. முக்கியமாக பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி எப்போதும் வலுவாக இருக்கும்.

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 பேரிச்சம் பழத்தை இரவு தூங்கும் முன் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். மேலும் இது செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட உதவுகிறது. பேரிச்சம் பழத்தை தினமும் தவறாமல் உட்கொண்டு வருவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது வயிற்றுக் கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பிற பண்புகள், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

2 பேரிச்சம் பழத்தை தினமும் இரவு தூங்கும் முன் சாப்பிடுவது தலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது. ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது. இது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பேரிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி சத்தும் உள்ளது. இது சருமத்தை பொலிவாக்குவதோடு, சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

மூட்டு வலியை சந்திப்பவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் இரவு தூங்கும் முன் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் பேரிச்சம் பழத்தில் கால்சியம் உள்ளது. இது உடலில் கால்சியம் பற்றாக்குறைப் போக்கும். அதே வேளையில், தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுவிக்கிறது.

முருங்கை இலையில் இவ்வளவு அற்புத நன்மைகளா?

முருங்கை இலை..

முருங்கை இலைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களில் பலருக்கு தெரியும். ஆனால் முருங்கை இலையில் பல நன்மைகள் உண்டு என்பது இன்னும் பலருக்குத் தெரியாது. எனவே முருங்கை இலையின் மற்ற நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

முருங்கை இலையில் பல அற்புதமான பண்புகள் உள்ளன. இதனை உட்கொள்வதன் மூலம் பல கடுமையான நோய்கள் நீங்கும். இதன் இலைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். முருங்கை இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தமும் குறைகிறது.

முருங்கை இலை கஷாயத்தை காலையில் உட்கொண்டால் அதிக பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதால் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி பற்கள் வலுவடையும். இது தவிர, முருங்கை இலையைப் பயன்படுத்துவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிவோம்.

முருங்கை இலைக் கஷாயத்தைப் பயன்படுத்தலாம்!

முருங்கை இலைகளை எப்படி சாப்பிடுவது என்பது வெகு சிலருக்கே தெரியும். எனவே அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். முருங்கை இலையை கஷாயம் செய்து குடிக்கலாம்.

இதைச் செய்ய, முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரைச் சூடாக்கவும். பிறகு தண்ணீர் கொதித்ததும் அதனுடன் முருங்கை இலையைச் சேர்க்கவும். விருப்பப்பட்டால் முருங்கை இலைகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தண்ணீரை பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும். அதன் பிறகு வடிகட்டி குடிக்கலாம்.

முருங்கை இலையில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே, இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த சுத்திகரிப்புக்கும் முருங்கை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதேபோல் முருங்கை இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கும் இதய நோயாளிகளுக்கும் பெரும் வரப்பிரசாதம்.

கோட்டாபய ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார் : சற்றுமுன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர்!!

கோட்டாபய..

கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன சற்றுமுன் அறிவித்துள்ளார்.

ஜுலை 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உத்தியோகபூர்வமான அவர் பதவி விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றம் நாளைய தினம் கூடுவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை ஜனாதிபதியின் அதிகாரங்கள், பொறுப்புக்கள் மற்றும் அரசியலமைப்பினால் பொறுப்பாக்கப்பட்டுள்ள விடயங்களை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

யாழில் இன்று இடம்பெற்ற சம்பவம் : பரிதாபமாக உயிரிழந்த நபர்!!

யாழில்..

யாழ்.கந்தர்மடம் பகுதியில் புகைரத கடவைக்குள் நுழைந்த முதியவர் மீது புகைரதம் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடத்துள்ளனர்.

இலங்கையில் ஆயுதப் படையினருக்கு வழங்கப்பட்டது அதிகாரம் : ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

எச்சரிக்கை..

இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப்படையினருக்கு, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்த, தனது மக்களையும், பொதுச் சொத்துக்களையும், நாட்டையும் பாதுகாக்கும் வகையில் அதனைப் பராமரிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இராணுவ ஊடகம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் உடனடியாக விலகிக்கொள்ளுமாறும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு குறிப்பிட்டுள்ளது.

மேலும், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகவும் இராணுவம் தங்களது பலத்தை பிரயோகிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“நாடு அமைதி நிலை பேணப்பட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டுள்ளமையாலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாலும் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயற்படுவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லையெனில் அமைதியை நிலைநாட்டுவதற்காகப் பாதுகாப்புப் படையினர் முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியேற்படும்” என்று இலங்கை இராணுவம் மேலும் அறிவித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் வீதிகளில் இன்றைய தினம் இராணுவ நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் அதிகளவு கண்காணிக்கப்பட்ட கோட்டாபய பயணித்த விமானம்!!

கோட்டாபய பயணித்த விமானம்..

மாலைதீவில் இருந்து இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் சென்ற சவுதி அரேபிய விமான உலகில் அதிகமாக கண்காணிக்கப்பட்ட விமானம் எனவும்,

இது இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் விவகாரங்கள் தொடர்பில் உலகளவிலான ஆர்வத்தை கோடிட்டு காட்டியுள்ளது எனவும் புளும்பேர்க் என்ற சர்வதேச ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

Flightradar24.com என்ற இணையத்தள தரவுகளின்படி சவுதி அரேபியாவில் விமானம் மாலைதீவு தலைநகர் மாலேவில் இருந்து ஜி.எம்.டி நேரடிப்படி இன்று காலை 7.43 அளவில் புறப்பட்டுள்ளது.

புறப்பட்டத்தில் இருந்து 5 ஆயிரம் இணைய பயனர்களாக விமானம் கண்காணிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பா வானில் பறக்கும் பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை கண்காணிக்கும் நபர்களை விட மூன்று மடங்கு அதிகம்.

கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் சவுதி விமானம் சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்து சவுதி திரும்பிச் செல்ல உள்ளதாகவும் பெயரை வெளியிட விரும்பாத மாலைதீவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளம் தந்தை தொடர்பில் வெளியான தகவல்!!

டி.எம்.ஜாலிய திஸாநாயக்க…

பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் நேற்று கையகப்படுத்த முற்பட்ட போது இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்கு மத்தியில் இருந்த போராட்டக்காரர் ஒருவர் புகை ஒவ்வாமை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மஹவ, தலதாகம பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான டி.எம்.ஜாலிய திஸாநாயக்க என்ற 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். அவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவராகும்.

அவர் கண்ணீர்ப்புகைக் காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  உயிரிழந்தவரின் தந்தை மஹவ உள்ளூராட்சி சபையின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை நண்பர்கள் குழுவுடன் போராட்டத்திற்கு வந்து பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

கீழே கிடந்த ஒரு டாலர் நோட்டை எடுத்த பெண்: பின்னர் நடந்த பயங்கர நிகழ்வுகள்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் கீழே கிடந்த ஒரு டொலர் நோட்டை எடுத்த பெண் ஒருவருக்கு மரண பயத்தைக் காட்டியது அந்த நோட்டு.

கென்டக்கியைச் சேர்ந்த Renee Parsons என்ற பெண் தன் குடும்பத்துடன் டெக்சாசை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும்போது, உணவருந்துவதற்காக வழியில் டென்னஸ்ஸியிலுள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் வண்டியை நிறுத்தியிருக்கிறார்.

உணவகத்தினுள் தரையில் ஒரு டொலர் நோட்டு ஒன்று கிடப்பதைக் கவனித்த Renee, குனிந்து அதை எடுத்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் நிலைகுலைந்து தரையில் விழுந்த Renee சுயநினைவிழந்திருக்கிறார். உடல் எரிவது போல் தோன்றி பிறகு உடல் முழுவதும் மரத்துப்போனதாக பின்னர் தெரிவித்துள்ளார் அவர்.

கீழே விழும்போது, தன் கணவரான Justinஉடைய கையைப் பிடித்திருக்கிறார் அவர். உடனே, Justinஉடைய கையில் சிவப்புப்புள்ளிகள் தோன்றியதுடன், அவரது உதடுகள் மரத்துப்போயிருக்கின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியிருக்கிறார்கள் தம்பதியர். அந்த ஒரு டொலர் நோட்டில் பயங்கரமான போதைப்பொருள் ஒன்று தடவப்பட்டிருந்திருக்கலாம் என தம்பதியர் கருதுகிறார்கள்.

இனி, ஒரு டொலர் இல்லை, 100 டொலர் நோட்டு கீழே கிடந்தால் கூட தொடமாட்டேன், நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும் என்கிறார் Renee.

காதலியை பார்க்கச் சென்ற விஜய்.. அடித்துக் கொன்ற அஜித் : அதிர்ச்சி சம்பவம்!!

திண்டுக்கல் அருகே..

திண்டுக்கல் அருகே காதலியை பார்க்க சென்ற காதலனை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் அணை அருகே முட்புதரில் மர்ம சாக்குப்பை ஒன்று கிடந்தது.

மர்மமான அந்த சாக்குப்பையில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த இடத்துக்கு வந்த போலீசார் பையை திறந்து பார்த்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் உடல் இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் செம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் அழகுவிஜய் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.

இவரும் அதே ஊரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அஜித்குமார் என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். அஜித்குமாரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு அழகுவிஜய் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது அவருக்கும், அஜித்குமாரின் 18 வயது தங்கைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களிடையே நாளடைவில் காதலாக மலர்ந்தது. ஒரு கட்டத்தில் தங்கையின் காதலை அறிந்த அஜித்குமார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனது செல்போனில் தனது காதலன் அழகு விஜய்க்கு தொடர்பு கொண்டு பேசினார். தான் தனியாக இருப்பதாகவும், வீட்டிற்கு சந்திக்க வருமாறும் கூறியுள்ளார். இதையடுத்து அழகுவிஜய், தனது காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு 2 பேரும் தனியாக பேசி கொண்டிருந்தனர்.

இதற்கிடையே அஜித்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது அஜித்குமார் தனது தங்கையை வீட்டின் ஒரு அறையில் தனியாக அடைத்து வைத்து, விஜயை கட்டையால் தாக்க சம்பவ இடத்தில் இறந்தார் விஜய்.

பிறகு விஜயின் உடலை கிராமத்துக்கு வெளியே உள்ள புதரில் வீசியுள்ளனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசையாய் ஹோட்டலில் சாப்பிட்ட தம்பதியினர் : மனைவிக்கு காத்திருந்த ஆபத்து!!

விழுப்புரத்தில்..

விழுப்புரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்தவர் விஜய குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீபா எனும் இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து விஜய குமாரின் காதலுக்கு பிரதீபா சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இருவரது வீட்டினருமே இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 13 ஆம் தேதி பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி விஜய குமார் மற்றும் பிரதீபா திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், நேற்று நண்பர்களுடன் இந்த தம்பதி சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அப்போது, திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்றிருக்கிறார்கள்.

பிரதீபா அங்கே ஒயிட் பாஸ்தா சாப்பிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து வீடு திரும்பிய தம்பதி உறங்கச் சென்றிருக்கிறார்கள்.ஆனால், நள்ளிரவு நேரத்தில் பிரதீபா வாந்தி எடுக்கவே கலக்கமடைந்த விஜய குமார் அவரை அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

ப்ரதீபாவிற்கு ஏற்கனவே இருதய பிரச்சனைகள் இருந்ததாகவும் அதற்காக அவர் மாத்திரை உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீபாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனால் அவரது கணவர் விஜய குமார் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்.

இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த கஞ்சனூர் காவல்நிலைய அதிகாரிகள் பிரதீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் கறுப்புச் சந்தையில் 1200 ரூபாய்க்கு டீசலை பெற்று நெல்லை அறுவடை செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள்!!

வவுனியாவில் டீசல் எரிபொருள் பங்கீடு சீராக நடைபெறாமையால் கறுப்புச் சந்தையில் 1200 ரூபாய்கு டீசலை பெற்று சிறுபோக நெல்லை அறுவடை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 238 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சிறுபோகத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ளது. யூலை முதல் கிழமையில் இருந்து ஓகஸ்ட் கடைசிக் கிழமை வரை இந்த அறுவடை இடம்பெறும்.

இதற்காக கிட்டத்தட்ட 3 இலட்சத்திற்கு மேலதிகமான லீட்டர் டீசல் எரிபொருள் தேவைப்படுகிறது. இதனை வாராந்தம் பகிர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலகத்தால் தெரிவிக்கப்பட்ட போதும், அறுவடைக்கு தேவையான போதியளவிலான டீசல் வழங்கப்படவில்லை.

இதுவரை 27,000 லீற்றர் டீசல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய வேண்டிய நெல்லை 1200 ரூபாய்க்கு டீசலை பெற்றே அறுவடை செய்ய வேண்டியுள்ளது.

யூரியா உரத்தை 42000 ரூபாய்கும், அதிகரித்த விலையில் கிருமி மற்றும் களை நாசினிகளையும் பெற்று சிறுபோகத்தை மேற்கொண்ட விவசாயிகள் மாவட்ட செயலகத்தின் சரியான பங்கீடு முறைமை இல்லாமையால் கறுப்பு சந்தையில் 1200 ரூபாய்கு டீசலை பெற்று அறுவடை செய்ய வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாவட்ட விவசாய சம்மேளனத் தலைவரை கேட்டபோது, மாவட்டத்தில் தற்போது எரிபொருள் நெருக்கடி உள்ளது.

சிறுபோக அறுவடை சீராக நடைபெறாவிட்டால் சோற்றுக்கும் பஞ்சம் ஏற்படும். எனவே கனரக மற்றும் டிப்பர் வாகன சாரதிகள் சிறுபோக அறுவடைக்காக விவசாயிகள் டீசலை பெற விட்டுக் கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் டீசல் எரிபொருள் விநியோகிக்கும் போது கனரக மற்றும் டிப்பர் வாகனங்கள் அதிகமாக டீசலை பெற்றுக் கொள்வதனால் விவசாய தேவைக்கு டீசலை பெற முடியாது உள்ளது.

தற்போது கட்டுமாண பணிகள், குவாரி பணிகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் கனரக மற்றும் டீப்பர் வாகனங்களுக்கு ஏன் அதிக டீசல்? அவ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமாறு வவுனியா மாவட்ட செயலகத்திடம் கோரிய போதும் அவர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய!!

கோட்டாபய..

கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தினை அடுத்து கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து நேற்று பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர் பதவி விலகாது ராணுவ ஜெட் விமானத்தில் மாலைத்தீவு சென்றடைந்தார்.

பின்னர் அங்கிருந்து SQ437 என்ற விமானத்தில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு நிலைமை காரணமாக பயணம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ச தனி விமானத்தில் மாலைதீவிலிருந்து சவூதி அரேபிய விமான சேவையின் எஸ்.வீ. 788 விமானத்தில் இன்று சிங்கப்பூர் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இந்த விமானத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகையிலிருந்து வெளியேற போராட்டக்காரர்கள் முடிவு!!

போராட்டத்தில் திடீர் திருப்பம்..

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேற காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

போராட்டம் வேறு வகையில் திசை திரும்புவதனை தவிர்க்க வேண்டும் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காலி முகத்திடலில் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் ஊடவியலாளர் சந்திப்பு ஒன்றை சற்று முன்னர் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் இல்லத்தை சுற்றிவளைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள நிலையில் அங்கு சென்ற ஒரு குழுவினரால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இனினும் இவ்வாறு தொடர்ந்தால் நாட்டின் நிலைமை மிகவும் பயங்கரமானதாக மாறிவிடும். எனவே தாங்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது ஒரு சமாதானமான போராட்டமாக காணப்பட வேண்டும். வன்முறை எங்கள் நோக்கமல்ல. எனினும் கோட்டாபய மற்றும் ரணிலை விரட்டும் வரை எங்கள் போராட்டம் முடிவுக்கு வராதென ஆர்ப்பாட்ட ஏற்பட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.