மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தில் 103 பேர் காயம் : 55 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில்!!

தன்னெழுச்சிப் போராட்டத்தில்..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மை சம்பவங்களால் 103 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் 55 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்து நேற்றைய தினம் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

அதிகரிக்கப்படும் லிட்ரோ எரிவாயுவின் விலை!!

எரிவாயுவின் விலை..

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கொல்களன் ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனினும், மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி 50 ரூபாவால் மட்டுமே விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் எரிவாயு கொல்களன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற இளைஞன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

ஜனாதிபதி மாளிகைக்குள்..

நுழைவு கதவில் ஏறி ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் குதித்த தபாரே என்ற இளைஞன் தனது அனுபவத்தை விபரித்துள்ளார். ஜனாதிபதி மாளிகைக்குள் சென்ற போது அங்கிருந்த படையினர் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் துப்பாக்கியால் சுடுவார்கள் என்று தெரிந்தும் அச்சமின்றி உள்ளே குதித்ததாகவும் தபாரே கூறியுள்ளார்.

இளைஞன் என்ற வகையில் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்டு வருகின்றேன். கோட்டாபயவை வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருந்தோம்.

ஆறு தடைகளை உடைத்துக்கொண்டே நாங்கள் உள்ளே வந்தோம். இது யுத்தம் போன்றது. ஜகத் என்ற சகோதருடன் நுழைவு கதவுக்கு மேல ஏறி உள்ளே குதித்தோம். அப்போதுதான் என்னை நாய்களை தாக்குவது போல் தாக்கினர். மரணப் பயம் இருந்திருந்தால், நாங்கள் உள்ளே குதித்து இருக்க மாட்டோம்.

துப்பாக்கி சூடு நடத்துவார்கள் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் அச்சமின்றி ஏனையோரையும் வருமாறு கூறினோம்.நானே முதலில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஆசனத்திலும் அமர்ந்தேன்.

கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.நாங்கள் 13 யோசனைகளை முன்வைத்துள்ளோம். அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தாபரே தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்!!

அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்..

வவுனியா மாவட்டத்தில் டீசலின்றி 1990 சுவசெரிய சுகப்படுத்தும் அன்பியூலன்ஸ் சேவை வாகனங்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்றன.

வருடத்தின் 365 நாட்களும் இரவு பகல் பாராது எவ்வித கட்டணமும் அறவிடாது இலவசமாக சேவையினை வழங்குகின்ற 1990 சுவசெரிய சேவையானது தற்போது அன்பியூலன்ஸ்க்கான டீசல் இன்மையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளமையுடன் வவுனியா நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்ளுவதற்காக 1.5 கிலோமீற்றர் தூரத்தில் எரிபொருள் வரிசையில் அன்புலன்ஸ் வாகனம் மூன்று நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சேவைக்கான டீசல் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையூடாக வழங்கப்பட்ட போதிலும் திங்கள் – வெள்ளி வரை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை மாத்திரமே வழங்கப்படுவதுடன் வார இறுதி நாட்களில் எரிபொருள் இல்லாமல் குறித்த சேவைகள் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் கடந்த வாரங்களில் இ. போ.சவினாரால் மேற்கொள்ளப்பட்ட பணிபகிஸ்கரிப்பு காரணமாக எரிபொருள் பெறமுடியாத நிலையும் ஏற்பட்டதுடன் ஐ.ஒ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் அவசர சேவைக்கான எரிபொருட்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ளப்படாத நிலைமையும் உள்ளது.

மேலும் தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியால் பொதுமக்களின் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு திடீர் நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் இறப்புக்கள் பதிவாகக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

சேலையால் இறுக்கி கொலை செய்த பெண் : அதிர்ச்சி பின்னணி!!

நாமக்கல்லில்..

நாமக்கல்லில் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்த கள்ளகாதலனை கொலை செய்த கள்ளக்காதலி.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திடுமல் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (50). இவர் இரண்டு ஆம்னி வேன் வைத்து வாடகை விட்டு வருகிறார். இந்நிலையில் தாளக்கரை பகுதியில் சுதா (45) என்பவர் வீட்டில் செல்வராஜ் மர்மமான முறையில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செல்வராஜூன் மனைவி கலாமணி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து நல்லூர் காவல்துறையினர் அங்கு வந்து செல்வராஜூன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நல்லூர் போலீசார் சுதாவை கைது செய்து விசாரணை தொடங்கினர். விசாரணையில் செல்வராஜூக்கும், மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் சுதாவிற்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில், கள்ளக்காதலி சுதாவுக்கும் வேறு ஆண் நபர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதை அறிந்த செல்வராஜ் இதுகுறித்து சுதாவிடம் அந்த ஆண் நண்பரின் தொடர்பு வைத்திருப்பதை நிறுத்திக்கொள்ளுமாறும், அவனுடன் பழக கூடாது, பேசக்கூடாது என்று வாக்குவாதத்தில் செல்வராஜ் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த சுதா செல்வராஜுக்கு அதிக மதுவை ஊத்தி கொடுத்து போதை மயக்கத்தில் இருந்த செல்வராஜை தான் கட்டியிருந்த சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் சுதா மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

மெயில் மூலம் நடக்கும் ஒன்லைன் மோசடி: சிக்காமல் இருக்க இப்படி செய்யுங்கள்!!

மின்னஞ்சலில்..

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். எந்தளவுக்கு தொழில்நுட்பத்தால் நல்லது நடக்கிறதோ அதே அளவில் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

குறிப்பாக குறிப்பாக மின்னஞ்சல் மூலமாக நடந்தப்படும் ஓன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. எடுத்துக்காட்டுக்கு அதிகம் நடக்கும் ஒரு மோசடியை காண்போம்.

ஒரு குறிப்பிட்ட யூஸருக்கு அவரது Gmail, Yahoo, Outlook ஆகிய ஏதாவது ஒரு தளத்தில் இருந்து மெயில் ஒன்று அனுப்பப்படும், அதில் DHL மூலமாக உங்களுக்கு ஒரு டெலிவரி வந்துள்ளதாகவும், அதனை உறுதி செய்ய ஒரு சிறிய தொகையை செலுத்தும் படியும் கோரிக்கை வைக்கப்படும்.

இது உண்மையானது தானா என்பதை கண்டுபிடிப்பது சற்றே கடினமானது என்பதால், ஆன்லைன் குறித்து அதிகம் அறிந்திருக்காத நபர்கள் எளிதில் பணத்தை அனுப்பிவிடுவார்கள். இந்த மோசடியை கண்டறிவது கடினமானது.

இப்படிப்பட்ட மெயில் மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? உங்களுக்கு டெலிவரி சம்பந்தமாக ஏதாவது மின்னஞ்சல் வந்தால், அதன் இணைப்பு URL ஐ சரிபார்க்கவும், அதில் DHL க்கு பதிலாக BHL என்றிருக்கும்.

நீங்கள் இணையதளத்திற்குச் சென்றவுடன் அதே எழுத்துப்பிழையையும் காணலாம். மேலும் DHL நிறுவனத்தின் போட்டி நிறுவனமான UPS நிறுவனத்தின் லோகோ உள்ளே இருப்பதைக் கண்டால் நிச்சயம் அது போலி மின்னஞ்சல் என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
எந்தவொரு டெலிவரி சேவையும் வாடிக்கையாளரை நிர்வாகக் கட்டணத்தைச் செலுத்தும்படி வலியுறுத்துவது இல்லை, எனவே உங்களிடம் ஏதேனும் கட்டணம் கேட்கப்பட்டால், இது நிச்சயமாக ஒரு மோசடி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மேலும் பணம் செலுத்துவதையும் தவிர்த்துவிடுங்கள்.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

மாறிய புகைப்படம்… மாலை மாற்றும்போது திருமணத்தை நிறுத்திய மணமகள்!!

உத்தர பிரதேசத்தில்..

மாலை மாற்றும் நிகழ்வின்போது வேறு மணமகன் இருந்ததால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பர்தானா என்ற நகரில் கடந்த புதன்கிழமை திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. திருமண சடங்குகளில் ஒன்றான மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மணமக்கள் முதல்முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர்.

அப்போது மணமகனை நேரில் பார்த்த மணமகள் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே தனக்கு நிச்சயம் செய்த நபர் இவர் இல்லை என்றும், இவர் கருப்பாக இருக்கிறார், என்னை ஏமாற்றிவிட்டார்கள், நான் இவரை திருமணம் செய்யமாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனால் அந்த திருமணம் பாதியில் நின்றுள்ளது.

தொடர்ந்து இரு வீட்டாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் புகைப்படத்தில் காட்டிய மாப்பிள்ளை வேறு, இவர் வேறு, புகைப்படத்தை மாற்றி காட்டி ஏமாற்றிவிட்டனர் என்று பெண் வீட்டார் குற்றம் சாட்டினர்.

இதற்கு மணமகன் வீட்டார், தங்களது மகனை திருமணம் செய்துக்கொள்வதாக பெண் வீட்டார், தங்களிடம் இருந்து பரிசுப்பொருட்கள் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டு தற்போது ஏமாற்றுவதாக கூறினர். இதன் காரணமாக இந்த வாக்குவாதம் முடிவடையாமல் இருந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மணமகன் வீட்டார் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தியதில், தாங்கள் மணமகன் வீட்டாரிடமிருந்து எந்த நகையும் வாங்கவில்லை என்றும், வாங்கிய பரிசுப்பொருள்களை திரும்ப கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மணமகள் வீட்டார், பரிசுபொருள்களை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைத்தனர். இதனால் காவல்நிலையத்தில் வழக்கு ஏதும் பதியப்படவில்லை. எனினும் திருமணம் பாதியில் நின்றுபோனதால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

அம்மி மிதித்து அருந்ததி பார்த்த நியூசிலாந்தை சேர்ந்த இளம்பெண்.. தமிழருடன் நடந்த திருமணம்!!

நியூசிலாந்தில்..

நியூசிலாந்தை சேர்ந்த இளம்பெண் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தமிழ் பாரம்பரிய முறையில் தமிழரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர் லோகேஷ். இவர் நியூசிலாந்தில் படித்த நிலையில் அங்கேயே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அப்போது நியூசிலாந்தில் செவிலியராக பணிபுரிந்து வரும் விக்டோரியா ஹேமில்டன் என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து லோகேஷ், விக்டோரியா ஹேமில்டன் திருமணம் சென்னை வானகரத்தில் உள்ள முருகன் கோவிலில் தமிழ் கலாச்சாரத்தின் படி அம்மி மிதித்து, தாலி கட்டி, உறவினர்களின் ஆசிர்வாதத்துடன் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் தம்பதியின் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

“தாயின் கடைசி ஆசை” உடலை தானமாக வழங்கிய மகள்கள் : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!

சென்னையில்..

தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும்வகையில், அவர் இறந்த பின்பு அவரது உடலை முழுவதுமாக தானமாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவொற்றியூரில் உள்ள ஒத்தவாடை என்ற பகுதியில் வசித்து வந்தவர் முருகானந்தம் – மீனா தம்பதியினர். இவர்களுக்கு காயத்ரி மற்றும் சுவாதி என்ற 2 மகள்கள் உள்ள நிலையில், மீனாவின் கணவர் முருகானந்தம் சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்தார்.

இதையடுத்து அச்சகத்தொழில் செய்து வந்த மீனா, தனது இரு மகள்களுக்கும் திருமணம் முடித்து வைத்த நிலையில், தனியாக அச்சகத்தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மீனாவுக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டதால், மருத்துவமனையை அணுகியுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், பிழைப்பது கடினம் என்றும் தெரிவித்தனர். எனவே மீனா தனது மகள்களை அழைத்து, தான் இறந்த பிறகு, தன்னுடைய உடலை புதைக்கவோ, எரிக்கவோ வேண்டாம். மாறாக அதனை தானம் செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மீனாவின் உடல்நிலை மோசமாக ஆனதால், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தான் இறக்கப்போவதை அறிந்த மீனா, தனது மகள்களை மீண்டும் அழைத்து, தனது உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சூழலில், சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார்.

எனவே அவரது உடலை முழுதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரது இறந்த உடலை மருத்துவமனைக்கு அப்படியே தனமாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் டீசலின்றி எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் 1990 அவசர அன்புலன்ஸ் சேவை வாகனங்கள்

டாட்டூவால் பார்வையை பறிபோன பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!

ஆஸ்திரேலியாவில்..

கண்கள் நீல நிறமாக மாறவேண்டுமென்று 27 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது கண்களில் மை ஊற்றியதால் பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் 27 வயதுடைய இளம்பெண் ஆம்பர் லூக். இவருக்கு பச்சை குத்துவதால் மிகுந்த ஆர்வம் உள்ளதால், தனது உடல் முழுவதும் பச்சை குத்திகொண்டுள்ளார். தனது 16 வயதில் முதன்முறையாக டாட்டூ போட்டுக்கொண்ட இவர், இதுவரை தனது உடம்பில் 600 டாட்டூக்கள் குத்திகொண்டுள்ளார்.

இந்த டாட்டுக்களுடன் இவரை பார்க்கும்போது ‘டிராகன்’ போன்று காட்சியளிக்கிறார். எனவே இவர் ‘டிராகன் கேர்ள்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இப்படி பச்சை குத்துவதால் கொண்ட ஆர்வ மிகுதியால், கண்களிலும் பச்சை குத்த வேண்டும் என்று எண்ணியுள்ளார் ஆம்பர். எனவே தனது கண்ணை நீல நிறத்தில் தோற்றமளிக்க வேண்டுமென்று, கண்களில் மையை ஊற்றியுள்ளார். இதனால் ஆம்பர் தனது கண்களின் பார்வைகளை இழந்துள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறுகையில், தான் டாட்டூ மீது கொண்ட ஆர்வத்தால், கண்களிலும் மையை ஊற்றிக் கொண்டதாகவும், இதனால் தனது பார்வை 3 வாரங்களுக்கு இழந்ததாகவும், தீவிர சிகிச்சைக்கு பின்னரே தனக்கு மீண்டும் பார்வை கிடைத்ததாகவும் கூறினார்.

மேலும், இதற்காக தான் வருத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.

கோர விபத்தில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

விருதுநகரில்..

விருதுநகரில் சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் உயிரிழந்துள்ளனர்.சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (30). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்திஷா (27). இந்த தம்பதிக்கு ஜெனிஷா ஸ்ரீ ( 9), பிரணவ் ஆதித்யா (8) என சிறுவர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மனோஜ் தனது குடும்பத்தாருடன் காரில் நெல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து கோவில்பட்டியிலிருந்து விருதுநகர் நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது தனியார் பேருந்து மோதியுள்ளது.

இதில் காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் மனோஜ் அவரது மனைவி நித்திஷா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சிறுவர்கள் ஜெனிஷா ஸ்ரீ, பிரணவ் ஆதித்யா இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இவர்களை மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முறையற்ற காதலால் நாசமான குடும்பம் : சைக்கோ கணவனின் கொடூர செயல்!!

கர்நாடகாவில்..

கர்நாடகாவில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை பிள்ளைகள் கண்முன்னே இழுத்து சென்று கொலை செய்த கணவனின் செயல் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கெண்டகோசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி கவுடா (35). இவருக்கும் பெங்களூரூவைச் சேர்ந்த யோகிதா (27) என்ற பெண்ணுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர். இந்த அழகான குடும்பத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு குண்டு விழுந்ததை போல ஒரு சம்பவம் உருவாகியது.

ரவி கவுடாவுக்கு அழகான மனைவி இருக்கும் நிலையில் அவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி நெருங்கி பழகி வந்துள்ளனர். இதை ஒருநாள் யோகிதா பார்த்துவிட்டார். ஆத்திரம் அடைந்த யோகிதா கணவன் ரவி கவுடாவிடம் சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து ஊர் பஞ்சாயத்து நடத்தி ரவி கவுடாவை எச்சரித்து யோகிதாவை சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின்னரும் ரவி கவுடா தனது கள்ளகாதலியுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதனால் தினமும் வீட்டில் சண்டை இருந்து வந்துள்ளது . இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவு ரவி கவுடா தனது இரு குழந்தைகளுக்கும் பானிபூரி வாங்கி வந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிடக்கூடாது என யோகிதா பிள்ளைகளை கூறியுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு ரவி கவுடா யோகிதாவின் தலை முடியை பிடித்து அறைக்குள் இழுத்து சென்றுள்ளார்.

பின்னர் யோகிதாவின் கழுத்தை மின்சார ஒயரால் இறுக்கி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். அறையை விட்டு வெளியே வந்த ரவி கவுடா பசங்களிடம், இதை வெளியே சொல்ல கூடாது எனக்கூறிவிட்டு தப்பியோடியுள்ளார். இதனை அடுத்து ரவியின் மூத்த மகள் எதிர்வீட்டில் இருப்பவர்களிடம் தகவலை கூறவே அவர்கள் உடனே யோகிதாவின் வீட்டுக்கு விஷயத்தை சொல்லி வரவழைத்தனர்.

இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அரக்கெரே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை பிள்ளைகள் கண்முன்னே இழுத்து சென்று கொலை செய்த கணவனின் செயல் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்தவரை கைவிட்டு இன்னொருவரை கரம் பிடித்த இளம்பெண் : ஆத்திரத்தில் காதலன் செய்த விபரீதம்!!

மதுரையில்..

மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் பாண்டி மகள் அபர்ணா (19). பிளஸ் 2 படித்துள்ளார். இவர் நேற்று மாலை தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அபர்ணாவின் கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.

காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதால் ஆத்திரத்தில் இருந்த காதலன் காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் பாண்டி மகள் அபர்ணா (19). பிளஸ் 2 படித்துள்ளார். இவர் நேற்று மாலை தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அபர்ணாவின் கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அபர்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அபர்ணாவின் தந்தை பாண்டி அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். அபர்ணாவின் பாட்டி வீடு விராட்டிபத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி சென்றபோது வீட்டருகே உள்ள ஹரிஹரனை அபர்ணாவை சந்தித்து பேசியுள்ளார்.

இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அபர்ணா வீட்டிற்கு ஹரிஹரன் பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால், பெண் தர மறுத்து விட்டனர். இதனைத்தொடர்ந்து அபர்ணாவை உறவுக்கார பையனுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்து இதற்கான நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் இருவரின் திருமணம் நடைபெற இருந்தது.

இதையடுத்து அபர்ணாவை கடத்தி செல்ல ஹரிஹரன் முயன்றதாகவும், இதற்கு அவர் ஒத்துழைக்கவில்லையென தெரிகிறது. ஆத்திரமடைந்த ஹரிஹரன் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தலைமறை வான ஹரிஹரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதவி விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய : கொழும்பு அரசியலில் ஏற்படும் திருப்புமுனை!!

பதவி விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய..

எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஜூலை 13ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. மே மாதம் 9ம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் காரணமாக அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.

இதனை தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருந்தார். எனினும், நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை.

இந்நிலையிலேயே, இன்றைய தினம் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டகாரர்களினால் முற்றுகையிடப்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. போராட்டம் தீவிரமடைந்திருந்த நிலையில், இன்று மாலை அவசர கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் என கோரியிருந்த நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தான் தோல்வியடைந்த ஜனாதிபதாக பதவி விலக போவதில்லை என அண்மையில் அறிவித்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைப்பு!!

தீ வைப்பு..

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், இல்லத்திற்கு தீ வைத்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு : கொழும்பு 7இல் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் அமைந்துள்ள பகுதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.

முதலாம் இணைப்பு : பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு 7ல் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

பிரதமர் இல்லத்தின் மதில் சுவரின் ஊடாக உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

வவுனியா நகரில் கோட்டாபாய பதவி விலகுவதாக தெரிவித்து பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்!!

பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்..

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பதவி விலகுவதாக வெளியான தகவலையடுத்து வவுனியா நகரில் இன்று (09.07.2022) மாலை இளைஞர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு மற்றும் நாட்டின் பல பாகங்களில் போராட்டங்கள் இடம்பெறுவதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்றன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பதவி விலகுவதாக வெளியான தகவலையடுத்து வவுனியா நகரில் இன்று மாலை இளைஞர் வெடி கொழுத்தி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பிரதமர் இல்லத்தின் மதில் சுவரின் ஊடாக உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்