கோட்டா – ரணில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் வுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (09.07) இடம்பெற்றது.
வவுனியா, பூந்தோட்டம் சந்தியில் இருந்து கறுப்பு கொடிகளுடன் கோட்டா – ரணில் அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு துவிச்சக்கர வண்டியில் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பழைய பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாகவும், கொழும்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் மடுகந்தை மற்றும் ஈரப்பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக வருகை தந்த மக்கள் குறித்த போராட்டக்காரருடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக கோசம் எழுப்பினர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை முன் வை, அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு வா, நிறுத்து நிறுத்து விலையுயர்வை நிறுத்து,
உழைக்கும் மக்களை பட்டினி போடாதே, கடனுக்குள் தள்ளியோர் உல்லாச வாழ்வு நாட்டு மக்கள் பட்டினச் சாவு, விவசாயிகளை வாழவிடு, கோட்டா – ரணில் வீட்டுக்கு போ’ என கோசங்களை எழுப்பியிருந்தனர்.
பிரதமர் இல்லத்தின் மதில் சுவரின் ஊடாக உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரையில் 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பொது மக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய சம்பவங்களில் காயமடைந்த 33 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் போராட்டகாரர்கள் பின்வாங்காத நிலையில், தற்போது பொலிஸ் தடைகளை மீறி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலை ஆர்ப்பாட்டகாரர்கள் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் மனைவியை கொலை செய்து விட்டு, வீட்டின் உள்ளே பிளாஸ்டிக் பையினால் சடலத்தை சுற்றி வைத்து வீட்டை பூட்டி விட்டு, தனது தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆந்திரமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளார் கணவர்.
லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் மீனாட்சி நகரில் உள்ள ஏஜேபி அப்துல்கலாம் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வாடகைக்கு குடியேறி உள்ளனர் நரசிம்மராஜ் (37) – சிவரஞ்சனி (26) தம்பதியினர். இவர்களுக்கு 10 மற்றும் 9 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நரசிம்மராஜ் பூர்வீகம் ஆந்திர மாநிலம்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருச்சி சமயபுரம் பகுதியில் குடியேறிய நரசிம்மராஜ், திருச்சி திருவாணைக்காவல் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகள் சிவரஞ்சனி யை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். நரசிம்மராஜ் சமயபுரம் பகுதியில் விற்பனை செய்யும் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளுக்கு ஏஜென்டாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமயபுரம் சக்திநகரில் புதிதாக வீடு கட்டிய அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த வீட்டினை ரூ. 28 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இந்த வீட்டினை விற்பனை செய்த பிறகு, தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய் நகரில் நரசிம்மராஜ் அவரது தாய், மற்றும் நரசிம்மராஜ் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என 5 பேரும் வாடகைக்கு குடியிருந்துள்ளனர். வீட்டை விற்று கிடைத்த ரூ. 28 லட்சத்தினை நரசிம்மராஜ் அவரது தடை செய்யப்பட்ட லாட்டரியில் முதலீடு செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு அவரது மனைவி சிவரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டை நடந்துள்ளது. இது தொடர்பாக சிவரஞ்சனி பெற்றோர் இருவரையும் சமாதனப்படுத்தி தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம், வீட்டு மனைகளை வாங்கி முதலீடு செய்ய இருவரையும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த நரசிம்மராஜ், மனைவியை அடித்து கத்தியால் குத்தி கொலை செய்து உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி மறைத்து வைத்துள்ளார்.
அதிகாலை தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளிடம் மனைவி சிவரஞ்சனிக்கு கொரேனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளேன், நாம் அனைவரும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் அக்கா வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார். அதன் படி, நரசிம்மராஜ் தாய், மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரும் கடந்த திங்கள் கிழமை வீட்டினை பூட்டி விட்டு ஆந்திரா சென்றுள்ளனர்.
சிவரஞ்சனி பெற்றோர் சிவரஞ்சனிக்கும், அவரது மருமகன் நரசிம்மராஜுக்கும் வழக்கம் போல போன் செய்துள்ளனர். இருவரின் தொலைபேசி என்னும் சுவிட் ஆப் இல் இருந்துள்ளது. இதனால் சந்தேக மடைந்த பெற்றோர் தாளக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டிய நிலையில் இருந்ததால், அவர்கள் ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் பகுதியில் உள்ள நரசிம்மராவ் அக்காவிற்கு போன் செய்து கேட்டுள்ளார்.
அப்போது, குழந்தைகள் இரண்டும் இங்கு தான் உள்ளதாகவும், தனது அண்ணன் நரசிம்மராஜ், தனது தாய் ஆகிய இருவரும் கொரோனா பரிசோதனை எடுக்க செல்வதாக கூறி விட்டு சென்றனர், அனால் இதுவரை இருவரும் வீடு திரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
உடனே சிவரஞ்சியின் பெற்றோர், தாளக்குடியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் வாஷின் மெசின் அருகில் சந்து பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றியநிலையில் இருந்த சடலத்தை பிரித்து பார்த்த போது சிவரஞ்சனி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து சமயபுரம் கொள்ளிடம் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீரங்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள நரசிம்மராஜை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் காவல் துறையினர்.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
சமீப காலமாகவே, திருமண மேடையில் வைத்து நிகழும் ஏராளமான நிகழ்வுகளை நாம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக அதிகம் பார்த்து வருகிறோம்.
திருமணம் நடக்க இருந்த நேரத்தில், மாப்பிள்ளையை அறைந்து விட்டு மணப்பெண் மேடையில் இருந்து வெளியேறிய நிகழ்வும், திருமண மேடைக்கு மாப்பிள்ளை நண்பர்களுடன் குடித்து விட்டு வந்ததால் பரபரப்பான திருமண மண்டபம் என சமீபத்திய காலத்தில் திருமண மேடையிலேயே நிறைய எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது திருமண மேடை ஒன்றில் நடைபெற்ற சம்பவம் ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், எட்டாவா என்னும் பகுதியில் வைத்து நீட்டா மற்றும் ரவி ஆகியோருக்கு திருமணம் நடைபெறுவதாக பெற்றோர்கள் நிச்சயத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருமண தினத்தில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இதன் பின்னர் திருமண சடங்குகள் தொடங்கிய சமயத்தில் தான், பிரச்சனை தொடங்கி உள்ளது. திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்த போது, மணமக்களான இருவரும் மேடையை சுற்றி வந்துள்ளனர்.
அப்போது தான், திடீரென மணப்பெண் ட்விஸ்ட் வைத்துள்ளார். இரண்டு முறை மேடையை சுற்றி வந்ததும், திருமணம் வேண்டாம் என மணப்பெண் முடிவு செய்துள்ளார். திருமணத்திற்கு முன்னர் காட்டிய மணமகனும், தற்போது நிற்கும் மணமகனும் வேறு ஒருவர் என்றும், இவர் அதிகம் கருப்பாக இருப்பதாக திருமணம் வேண்டாம் எனக்கூறி, மண்டபத்தில் இருந்தே அவர் வெளியேறி சென்றுள்ளார்.
மணப்பெண்ணின் குடும்பத்தினர் எவ்வளவோ வற்புறுத்தியும் பெண் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதற்காக, சுமார் ஆறு மணி நேரத்தை அவர்கள் எடுத்து கொண்டு, பெண்ணை கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லவும் அவர்கள் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த பெண் சம்மதம் சொல்லவில்லை.
இது தொடர்பாக, மணமகனின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தாங்கள் கொடுத்த நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை திருப்பி தர வேண்டி, புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
அதே போல, மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால், தான் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் மணமகன் ரவி தெரிவித்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர் தன்னை பல முறை பார்த்த பிறகும், தற்போது ஏன் இப்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பது தனக்கு புரியவில்லை என்றும், இந்த சம்பவம் தன்னை அதிர்ச்சிக்குள் ஆக்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
உலகளவில் பிரபலமாக இருக்கும் ஒரு தமிழர் தான் சுந்தர் பிச்சை. உலகின் மிகப்பெரிய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்களில் ஒன்றான கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ.
மதுரையில் பெரிய அளவிலான பணம், வசதிகள் இல்லாத குடும்பத்தில் பிறந்து வெறும் கல்வியை மட்டுமே நம்பிய சுந்தர் பிச்சை இன்று உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனத்தின் சிஇஓ-வாக உள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு $600 மில்லியன் ஆகும். எளிமையான மனிதராக அறியப்படும் சுந்தர் பிச்சைக்கு ஒரு சுவாரசியமான காதல் கதை உள்ளது. சுந்தர் பிச்சையின் காதல் மனைவியின் பெயர் அஞ்சலி.
இந்த தம்பதிக்கு காவியா பிச்சை மற்றும் கிரன் பிச்சை என இரு பிள்ளைகள் உள்ளனர். கல்லூரியில் படிக்கும் போது தான் அஞ்சலியை சுந்தர் பிச்சை முதன் முதலில் பார்த்துள்ளார்.
இருவருக்கும் பார்த்த உடனே காதல் மலரவில்லை, நீண்ட கால நட்பு தான் அழகான காதலாக பின்னாளில் மாறியது. ஐஐடி காரக்பூர் கல்லூரியில் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை அமெரிக்காவிற்கு மேற்படிப்புப் படிக்கப் பறந்தார். சுந்தர் பிச்சை நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தால் அமெரிக்காவுக்குச் சென்ற சுந்தர் பிச்சை போனில் கூட அஞ்சலி பிச்சை உடன் பேச முடியாத நிலை இருந்தது.
அமெரிக்காவிற்குச் சென்ற சுந்தர் பிச்சை, அஞ்சலி பிச்சை-யிடம் 6 மாதம் பேச முடியாமல் தவித்தார். இந்த 6 மாதத்தில் இருவருக்கும் மத்தியிலான காதல் அதிகரித்தது, அதன் பின்பு கடல் விட்டு கடல் தாண்டி அமெரிக்காவிற்குப் பறந்து சென்று சுந்தரின் மனதில் மேலும் ஒட்டி கொண்டார் அஞ்சலி பிச்சை.
இது கிட்டத்தட்ட வாரணம் ஆயிரம் திரைப்பட ஸ்டைல் தான்..! சுந்தர் பிச்சை அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்த உடனே வேலையைப் பெற்ற கையோடு அஞ்சலி பிச்சையை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
உடனே இருவரும் தங்கள் வீட்டில் பேசி கல்லூரி படிப்பை முடித்த சில வருடங்களிலேயே திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
புதுச்சேரியில் வீட்டில் தூங்கிகொண்டிருந் போது ஆட்டோ ஓட்டுநரின் மனைவி மற்றும் மகள் மீது தீப்பிடித்து எரிந்ததில், சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியநாதன் (53). இவரது மனைவி மரிய லூர்தியா (52). இவர்களது மகன் பிரான்கோ (28), மகள் லூர்துமேரி (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இதற்கிடையே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியோர் உடலில் திடீரென தீப்பற்றி எரிந்து அலறித்துடித்தனர். அப்போது வீட்டில் மற்றொரு அறையில் இருந்த ஆரோக்கியநாதன், பிரான்கோ ஆகியோர் ஓடிவந்து அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டனர்.
அவர்களை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியார் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையே லூர்துமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மரியலூர்தியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் கொசுபத்தி கொளுத்தியபோது ஏற்பட்ட தீயில் உயிரிழந்ததாக தெரிகிறது.
இருந்தபோதிலும் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆரோக்கியநாதன், மனைவியை கொலை செய்யும் நோக்கில் செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
நாமக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் பாஜக நிர்வாகி மனைவியுடன் விஷமருந்தி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பொத்தனூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயசூர்யா (26). இவருக்கு திருமணமாகி மோகனபிரியா என்ற மனைவி உள்ளார். ஜெயசூர்யா பரமத்திவேலூரில் இருச்சக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார்.
மேலும் ஜெயசூர்யா பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். இவர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் பிறந்த ஆண் குழந்தை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டது.
இந்நிலையில் இவர் இன்று தனது மனைவியுடன் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்றுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பரமத்திவேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கந்துவட்டி கொடுமையால் தான் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவர்கள் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் தற்கொலை முயற்சிக்கு முன்னதாக ஜெயசூர்யா ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு விஷமருந்தியது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் மருத்துவ செலவிற்காக ஜெயசூர்யா – மோகன் பிரியா தம்பதியினர் தெற்குநல்லியம்பாளையத்தை சேர்ந்த கவிதா, சரஸ்வதி, அப்துல், சங்கர் உள்ளிட்டோரிடமும் மைக்ரோ பைனான்ஸ்கள் (அரைஸ் லோன், கிராமின் கூட்டா, கிராமவிடியல்) ஆகியோரிடமும் பல லட்சங்கள் கடன் வாங்கி மருத்துவ செலவு செய்துள்ளார்.
இதில் கடன் வாங்கிய சிலர் அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் கந்துவட்டி தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் புகார் அளித்த அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தங்களின் குடும்பத்தாரை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் இதற்கு ஒரு நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை ஒரு அடிமட்ட தொண்டனாக கேட்டுக்கொள்கிறேன் எனவும் உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
15 வயது பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இதில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருபாலரும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி கடந்த 22-05-2022 அன்று அதே பள்ளியில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது பிறந்தநாள் நிகழ்ச்சியில் சில மாணவர்களும் கலந்து கொண்டனர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அந்த மாணவனுடன் மாணவி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிறந்தநாள் கொண்டாடிய மாணவன் தன் சக நண்பர்களிடம் பகிர்ந்துள்ளான்.
இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி பள்ளி மதிய உனவு இடைவெளியின் போது அந்த மாணவியை சக மாணவன் (வயது 15) உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது. என்னுடன் வா என்று அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது வீட்டிற்கு உள்ளே மாணவி சென்றவுடன் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போட்டுள்ளான். அப்போது அந்த வீட்டின் உள்ளே மேலும் தன்னுடன் படிக்கும் மாணவன் இருவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மூன்று பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.
அதனை அந்த வீடியோவை முன்னாள் மாணவனான நண்பனுக்கும் (வயது 17) அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் மாணவி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று தாயிடம் கூறியுள்ளார். அதற்கு அவருடைய தாய் காரணம் கேட்டதற்கு நடந்த சம்பவத்தை தாயிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது தாய் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் நேரில் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தி மூன்று பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புகைப்படத்தை அனுப்பிய முன்னால் மாணவனையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இரண்டு பேரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டமானது இன்று காலை 8 மணி முதல் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கானது இன்று (08.07.2022) இரவு ஒன்பது மணி முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
வவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசல் எரிபொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். இன்று (08.07) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிசார் வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்தமையை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிசார் அவரது வீட்டிலும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக மாவட்ட அரச அதிபர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆகியோரின் பணிப்பில் வவுனியாவில எரிபொருள் கறுப்பு சந்தையை கட்டுப்படுத்த பொலிசாரும், இராணுவத்தினரும் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று (08.07) மற்றும் நாளை (09.07) விநியோகிப்பதற்கான எரிபொருளை இடைநிறுத்துவதற்கு லங்கா ஐ.ஓ.சி (IOC) தீர்மானித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு லங்கா IOC தொடர்ந்து எரிபொருளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும், நாளையும் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே குறித்த விடயத்தை லங்கா ஐஓசி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றும், நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதால் முக்கிய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதுடன், லங்கா ஐ.ஓ.சி தற்போது பொது மக்களுக்கும் எரிபொருளை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் 9 பேர் பலியான நிலையில், ஒரு சிறுமி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.
உத்தரகாண்ட்டின் ராம்நகரில் உள்ள தேலா ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பஞ்சாபை சேர்ந்த குடும்பத்தார் 10 பேர் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் தேலா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் இருந்தவர்களில் 9 பேர் இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு, காரில் இருந்த சிறுமியை உயிருடன் மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்றில் கவிழ்ந்த கார் கிரேன் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்கள் என்றும், 3 பேர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். எரிபொருள் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பெற்றுக்கொள்கின்றனர்.
இந்நிலையில் கர்ப்பிணி தாயாரை ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டியொன்று எரிபொருளின்றி நிறுவிட்டது.
அப்போது அங்கு வந்த பொலிஸ் அதிகாரி அவரது இருசக்கர வாகனத்திலிருந்து,
போத்தலின் மூலம் எரிபொருளை பெற்று முச்சக்கர வண்டியின் சாரதியிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த அதிகாரியின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
யாழில் தண்ணீர் பவுசரின் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தண்ணீர் பவுசரின் கீழ் விழுந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது யாழ்.நாரந்தனை பகுதியில் கடந்த திங்கள் (04) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுமி அப்பகுதியைச்சேர்ந்த யசோதரன் ஜாக்சனா (வயது7) என்ற சிறுமி என பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் வந்த தண்ணீர் பவுசரின் மீது ஏறி சிறுவர்கள் விளையாடிய நிலையில் குறித்த சிறுமி எதிர்ப்பாராத விதமாக தண்ணீர் பவுசரின் அடியில் விழுந்து சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.