எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் மோதல் : ஒருவர் பரிதாபமாக பலி!!

காலி..

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி – மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (07.07) இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலில் ஹபராதுவ – ஸ்வாலுவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனையவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு எரிபொருள் வரிசையில் வந்த படாதுவவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நண்பரின் கடைக்கு முன்னால் உள்ள இடத்தில் இருந்து தனது காருக்குள் நுழைய முற்பட்ட போது, ​​வரிசையில் பின்னால் இருந்த சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது அவருடன் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் இதுகுறித்து தனது நண்பர்கள் சிலரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. காரின் சாரதியை துன்புறுத்தியவர்களை அவ்வழியாக வந்த சிலர் தாக்கத் தொடங்கினர்.

இதில் வரிசையில் நின்ற மூவரும் தாக்க வந்த குழுவில் ஒருவரும் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். அவர்களில் ஒருவர் இறந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை..

திருகோணமலையை சேர்ந்த யுவதியொருவர் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பிற்காக சென்றபோது வெளிநாட்டில் திருமணம் முடித்து விட்டு தன்னிடமிருந்த சொத்துக்களை ஏமாற்றிச்சென்ற இளைஞரொருவரிடம் தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரி இளைஞனின் வீட்டுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் திருகோணமலை – ரொட்டவெவயை சேர்ந்த ரபீக் நிம்சாத் என்பவருடைய வீட்டுக்கு முன்னாலேயே இன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் மேலும் தெரியவருவதாவது,

தந்தையின்றி வளர்ந்து வந்த இந்த யுவதி கஷ்டம் காரணமாக குவைத் நாட்டிற்கு சென்றதாகவும், அங்கு வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞர் தன்னை திருமணம் செய்து இரண்டு வருடங்களாக வாழ்ந்து வந்ததாகவும் தான் உழைத்த அனைத்து சொத்துக்களையும் இவருக்கே கொடுத்ததாகவும் அத்தனை சொத்துக்களையும் பெற்றுக்கொண்டு தன்னை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட யுவதி தெரிவித்தார்.

தன்னை திருமணம் செய்து தன்னிடம் இருந்த சொத்துக்களை இளைஞனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கணவனுடன் இணைந்து பெற்றுக் கொண்டதாகவும், தன்னிடம் வாங்கிய சொத்துக்களை பெற்றுத் தருமாறும்,

குறித்த பெண்ணின் தேவையற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதாகவும், இவ்வாறான செயற்பாட்டிற்கு தனக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததுடன், தனக்கு நடந்த சம்பவத்திற்கு நீதியை ஊடகங்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு தெரியப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கின்ற புகைப்படம் மற்றும் காணொளிகளை நிறுத்தி தருமாறும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

மேடையில் கண்கலங்கிய மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி!!

ஐஸ்வர்ய லட்சுமி..

மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி தமிழில் ஆக் ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதுதவிர தெலுங்கு, மலையாளத்திலும் நடிக்கிறார். கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய்பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‘கார்கி’ இந்த படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.

இப்பட விழா சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஐஸ்வர்ய லட்சுமி, இந்த படம் நாமதம் ஆனது பற்றி கூறியபோது மேடையில் கண்கலங்கினார். அவரை , கவுதம் ஆகியோர் சமாதானம் செய்தனர்.

சாய்பல்லவி பேசும்போது இந்த படம் 3 ஆண்டுகளாக உருவானது. இந்த கதை உருவாக்கத்தில் இருந்தே இந்த படத்துடன் பயணிக்கிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதனால் தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார் என்றார்.

மேலும் இயக்குனர் கூட கூறுகையில் இந்த படத்திற்கு நிறைய நண்பர்கள் உதவி செய்தனர். அதில் முதல் நபர் ஐஸ்வரிய லட்சுமி தான் இந்த படத்திற்காக தான் சம்பாதித்த பணத்தை கொடுத்தார் என்றார்.

தொடர்ந்து பேசிய ஐஸ்வர்ய லட்சுமி கார்கி படம் சாய்பல்லவி இல்லாமல் சாத்தியமில்லை. இந்த படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் நன்றி என்றார்.

சாதாரண வீட்டு பெண்ணை மணந்த கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி : ரோட்டு கடையில் மலர்ந்த காதல்!!

முகேஷ் அம்பானி..

உலகமே பிரம்மித்து பார்க்கும் உச்சத்தில் இருப்பவர் தான் முகேஷ் அம்பானி! இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் முதன்மை வரிசையில் இருப்பவர்.

இவருக்கு கடந்த 1985ஆம் ஆண்டு நீடா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சாதாரண வீட்டில் பிறந்த நீடா மிகச்சிறந்த நாட்டியக் கலைஞர். மும்பையில் ஒரு நவராத்திரி விழாவின்போது நீடாவின் நடனத்தைக் கண்டு பிரமித்துப் போனார் முகேஷின் தந்தை திருபாய் அம்பானி.

தன் மூத்த மகனுக்குப் பொருத்தமாக இருப்பார் என்று நீடா குறித்து மனதுக்குள் எண்ணிக்கொண்டார். நீடாவை அழைத்த திருபாய், நாளை என்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க முடியுமா என்றார்.

எவ்வளவு பெரிய ஆள், நம்மை அலுவலகத்துக்குக் கூப்பிடுகிறாரே என்று பயந்து போனார் நீடா. எனினும், அடுத்த நாள் திருபாயை அலுவலகத்தில் சென்று சந்தித்தார். முதலில், நீடாவின் பொழுதுபோக்கு, அவருக்குப் பிடித்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்து கொண்ட திருபாய் அம்பானி, நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ‘என் மூத்த மகன் குறித்து உங்களுடன் பேச வேண்டும். அவனை சந்திக்க உங்களுக்கு விருப்பமா என்று கேட்டார்.

நீடா பயமறியாத பெண். ‘அதிலென்ன இருக்கிறது!’ என்று முகேஷை அவரின் வீட்டில் போய் சந்தித்தார். தொடர்ந்து பலமுறை சந்திப்பு நடந்தது. முகேஷ் அம்பானியின் சொகுசு வாழ்க்கையை சோதனைக்குட்படுத்தியுள்ளார் நீடா.

அதற்காக அவரை மும்பை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். ரோட்டு கடைகளில் உணவருந்த வைத்திருக்கிறார். அங்கெல்லாம் தான் இருவருக்குமான பிணைப்பு அதிகரித்துள்ளது.

ஒருநாள் காரில் செல்லும்போது திருமணம் செய்து கொள்ளலாமா என முகேஷ் அம்பானி கேட்டார். நீடா எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கவே, பதில் சொன்னால் தான் வண்டியை எடுப்பேன் என்று கூறினார். பின்னர் நீடா ஒப்புக்கொள்ள, கடந்த 1985-ம் ஆண்டு நீடா இந்தியாவின் பணக்கார வீட்டுக்கு மருமகள் ஆனார்.

கழிவறையில் 10 நிமிடங்களுக்கு அதிகமாக உட்கார்ந்திருந்தால் இவ்வளவு பிரச்சினையா?

கழிவறையில்..

கழிவறையில் உட்கார்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என கூறினால் அது மிகையாகாது!

இப்படி கழிவறையில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துவதால் உடலில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும்?

கழிப்பறையில் அதிகபட்சம் 10ல் இருந்து15 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கலாம். அதை விட அதிக நேரம் செலவிடுவது உங்கள் மலக்குடலில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதோடு மூல நோய் பிரச்சனைக்கும் வழிவகுக்கும். அதைத் தொடர்ந்து மலக்குடல் சரிவு ஏற்படுகிறது.

கெட்ட கழிவுகளை வெளியேற்றும் இடம்:

கழிவறை என்பது நம்முடைய உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றும் இடமாக இருக்கிறது. கழிவறையில் பொதுவாக அதிக அளவிலான பாக்டீரியாக்களும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகளும் இருக்கும்.

அங்கு செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் போது, அவை செல்போன் ஸ்கிரீனில் படிந்து விடும். பிறகு நீங்கள் வெளியே வரும்போது சோப்பு போட்டு கைகளைக் கழுவினாலும், போனில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கழிவறையில் அதிக நேரம் அழுத்தமாக அமர்ந்திருக்கும்போது இரைப்பை மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இப்படி அதிக நேரம் கழிவறையில் உட்கார்ந்திருப்பதுவே கூட நிம்மதியாக மலம் கழிக்க முடியாமல் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

தொடர்ச்சியாக கழிவறைக்குள் செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாானோர் இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள். காரணம், நம்முடைய இடுப்பு உயரத்துக்கும் தரைக்கும் இடைபட்ட உயரத்தில் கழிவறை இருக்கை இருக்கும்.

இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் : கைக்குழந்தையுடன் திருமணம் செய்துகொண்ட வினோதம்!!

புதுக்கோட்டையில்..

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாரத்தை கூறி உறவுக்கார இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர், நீதிமன்ற வளாகத்திலேயே அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பாலுவின் மகன் அஜித் (23). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான சத்யா என்ற இளம் பெண்ணுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்துள்ளார்.

மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவுடன் பாலியல் உறவிலும் ஈடுபட்டுள்ளார். இதில் சத்யா கர்ப்பமாகி கடந்த மே மாதம் கபிலன் என்ற ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போதே அஜித் சத்யாவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இது குறித்து சத்தியா கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அஜித்தை கைது செய்த காவல்துறையினர் அஜித்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக சிறையில் இருக்கும் அஜித் தனக்கு ஜாமீன் வேண்டி புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இரண்டு முறை இவரது ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிபதி, இன்று மீண்டும் ஜாமீனுக்கு அவர் மனு தாக்கல் செய்தபோது ஏமாற்றிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு கைக்குழந்தையையும் ஏற்றுக் கொண்டால் ஜாமீன் தருவதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் நீதிபதி அனுப்பி வைத்த வழக்கறிஞர்கள் மற்றும் சத்யாவின் குடும்பத்தினர் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு மாதம் கைக்குழந்தையுடன் இருந்த சத்யாவை அஜித் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

53 வயதில் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற தாய் : ஆசிரியராக இருந்த 12ம் வகுப்பு மாணவிகள்!!

10ம் வகுப்புத் தேர்வில்..

திரிபுராவைச் சேர்ந்த தாய் ஒருவர் 10ம் வகுப்புத் தேர்விலும் அவரது மகள்கள் 12ம் வகுப்புத் தேர்விலும் தேர்ச்சி பெற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

திரிபுராவை சேர்ந்தவர் ஷீலா ராணி (53). இவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றதால் இவரின் கல்வி பாதியிலேயே தடைப் பட்டது. பின்னர் முழுநேர குடும்பத் தலைவியாக இருந்து வீட்டைக் கவனித்து வந்தார்.

இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவரும் உயிரிழந்துவிட்டார். இதனால் தங்களது இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக வளர்த்துப் படிக்கவைத்துள்ளார்.

இந்நிலையில் 12ம் வகுப்பு படிக்கும் அவர்கள் தங்களது தாயின் கல்வி படிப்பை மீண்டும் தொடரும் படி வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஷீலா ராணி மகளின் விருப்பத்திற்காகவும், தனது கனவுக்காகவும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து பிள்ளைகள் தங்கள் தேர்வுடன் சேர்த்து தாய்க்கு 10ம் வகுப்புத் தேர்வு எழுதவும் தாயர்படித்தி வந்துள்ளனர். பின்னர் தங்கள் பிள்ளைகள் உதவியுடன் ஷீலாவும் படித்து 10ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளார். அதேபோல் அவரின் பெண் பிள்ளைகளும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 10ம் வகுப்பில் தாயும், 12ம் வகுப்பில் 2 மகள்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஷீலாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து பேசிய ஷீலாவின் மகள்கள், “நாங்கள் இருவரும் சேர்ந்து தாயைத் தேர்வு எழுத ஊக்குவித்தோம். தற்போது அவரும் 10ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவரது மேற்படிப்பிற்கும் உதவி செய்வோம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மகளுக்கு பாலியல் தொல்லை, தனக்கு அடி உதை : மாமனார் மீது துணை நடிகை பரபரப்பு புகார்!!

துணை நடிகை..

மாங்காடு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தன்னை அடித்து துன்புறுத்தியதாக மாமனார், மாமியார் மீது துணை நடிகை பரபரப்பு புகார்.

சென்னை போரூர் பகுதியில் வசித்து வரும் துணை நடிகை மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மாமனார் சரவணன்வேல் (73), மாமியார் ஆகியோர் அடித்து துன்புறுத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வரும் நிலையில் துணை நடிகை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ”தனது கணவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை மறைத்து தனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தனது மாமனார் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், மாமியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்” என்றும் தெரிவித்தார்.

”தான் சினிமாவில் நடிப்பதை பிடிக்காமல் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று தற்போது புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

தன்னை தாக்கியதாக மாமனார், மாமியார் மீது துணை நடிகை அளித்த புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் துணை நடிகையின் 15 வயது மகள் அளித்த புகாரின் பேரில் துணை நடிகையின் மாமனார் சரவணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தலைமறைவாக இருக்கும் சரவணவேலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தன்னை தாக்கியதாக மாமனார் மாமியார் மீது துணை நடிகை அளித்த புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மனைவியை கத்தியால் குத்திய கணவன் : இறந்துவிட்டதாக நினைத்து எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவன், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர் பூபாலன். இவரது மனைவி ஷாலினி. கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பூபாலன், தனது மனைவி ஷாலினியின் முதுகில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் ஷாலினி மயங்கி விழுந்துள்ளார்.

அவர் இறந்துவிட்டதாக நினைந்த பூபாலன், பக்கத்து அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஷாலினி, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரீட்சையில் தோல்வி… மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

திருவேற்காட்டில்..

திருவேற்காட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவேற்காடு பகுதியில், 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்டார். தமிழ்-கணிதம் ஆகிய பாடங்களில் தோல்வி அடைந்ததால், இந்த விபரீத முடிவை எடுத்தது தெரிய வந்துள்ளது.

சென்னை, திருவேற்காடு, வி.ஜி.எஸ் நகரை சேர்ந்தவர் வினோத். இவரின் மகன் திவாகர் (18). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து, அதற்கான பொதுத்தேர்வு எழுதினார்.

சமீபத்தில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், திவாகர், தமிழ், கணிதம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், அவர் மன உளைச்சலில் காணப்பட்டார்.

இந்நிலையில், நேற்று, அவரின் பெற்றோர் வெளியில் சென்றனர். திவாகர் மட்டும் வீட்டில் இருந்தார். இரவு, அவரின் பெற்றோர் வீடு திரும்பினர். அங்கு ஒரு அறையில், திவாகர் தூக்கில் பிணமாக கிடந்தார்.

இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து மகனின் சடலத்தை பார்த்து கதறி துடித்தனர். பின்னர் புகாரின் பேரில், திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து, மாணவன் உடலை கைப்பற்றி, அவர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிஞ்சுக் குழந்தையுடன் தீக்குளித்த பெண்… இறப்பில் மர்மம்!!

தேனியில்..

போடி அருகே தனது எட்டு வயது மகளுடன் தாய் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையம், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்டது மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி. இங்கு தெற்கு ராஜ வீதியில் கூலி தொழிலாளி நல்லுசாமி என்பவர் வசித்து வருகிறார்.

திருமணம் ஆகி இவருக்கு முத்துலட்சுமி (26) என்ற மனைவியும், 8 வயதில் பெண் குழந்தையும் இருந்தனர். நல்லுசாமி மனைவி, குழந்தையுடன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரரும் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார்.

நல்லுசாமி இந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணியளவில் நல்லுச்சாமியின் மனைவி முத்துலட்சுமி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு அருகில் இருந்த தனது எட்டு வயது பெண் குழந்தையையும் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

இதனால் இருவரும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்த போது இருவரும் முற்றிலும் எரிந்து உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இருவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் மரணத்தில் மர்மம் உள்ளதாக முத்துலட்சுமியின் வீட்டார் புகார் கொடுத்துள்ள நிலையில், காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மனைவி, 2 குழந்தைகள் கொலை.. தந்தை எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரியில், மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொலை செய்து விட்டு ஆட்டோ ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் தியாகராஜன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பச்சைவாழி என்ற மனைவியும், 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தது.

இந்நிலையில், தியாகராஜன் இன்று காலை உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள் என கவலையுடன் பேசியுள்ளார்.

இதையடுத்து அவரது பேச்சில் சந்தேகம் இருந்ததால் உறவினர்கள் தியாகராஜன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது தியாகராஜன் மற்றும் அவரது மனைவி பச்சைவாழி, இந்த தம்பதியின் 2 குழந்தைகளும் சடலமாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து உடனே போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த போலிஸார் 4 பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில்  காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் இருவரைக் கொலை செய்துவிட்டு, தியாகராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொலை செய்து விட்டு ஆட்டோ ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்!!

ரட்ணசிங்கம் பரமேஸ்வரன்..

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாழ்ந்து வந்த ரட்ணசிங்கம் பரமேஸ்வரன் என்ற இலங்கையின் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணமானார் என்று அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் பேச்சாளரான அரன் மயில்வாகனம் 48 வயதான குறித்த நபரான இன்று காலை தூக்கத்திலேயே மரணமடைந்தாக தெரிவித்துள்ளார்.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அவரின் மேன்முறையீட்டு வாய்ப்புகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டு விட்டதாக அரன் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார். ரட்ணசிங்கம் பரமேஸ்வரனின் 25 வயது மகனும், மனைவியும் இலங்கையில் வசிக்கின்றனர்.

இதேவேளை நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை, மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் காரணமாக அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் மரணமடைந்தனர் என்றும் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சைக்கிள்களுடன் தரையிரங்கிய சுற்றுலாப் பயணிகள்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை உலக நாடுகளுக்கு மத்தியில் இலங்கையை பேசுபொருளாக மாற்றியுள்ளது.

நாட்டில், ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, உணவு நெருக்கடி, மின்சாரம் இன்மை, பொது போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் என வெகுவிரைவில் நாடு முற்றிலும் ஸ்தம்பிதமடையும் அபாய நிலையை எதிர்கொண்டுள்ளது.

இலங்கைக்கு அன்னியசெலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறையான சுற்றுலாத்துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. மேலும், இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு, பிரித்தானியா – நியூஸிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், இலங்கைக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள் தம்மோடு சேர்த்து சைக்கிள் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இன்றைய தினம் இது தொடர்பான காட்சிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவாகியுள்ளது.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து பலரும் சைக்கிள் கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக சைக்கிள்களின் விலை பாரியளவில் அதிகரித்து காணப்படுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் இருந்த வருகைத்தந்த சிலர் தம்முடன் சைக்கிளையும் சேர்ந்து கொண்டு வந்துள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது.

யாழில் கூட்ட நெரிசலால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்று (06.07) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த பேருந்தில் பயணம் செய்திருந்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை முதலாம் கட்டை சந்தி நிறுத்தத்தில் இறங்கியதும் மயக்கி சரிந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டிருந்தது. அங்கு பரிசோதிக்கப்பட்ட போது இளைஞர் உயிரிழந்தமை தெரியவந்தது.

அதன் பின்னர் இளைஞனின் உடலம் பிரதேப்பரிசோதனை மேற்கொள்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பேருந்தில் அதிக பயணிகள் பயணம் மேற்கொண்டதனால் கூட்ட நெரிசல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பெரும் சோகம் : பாஸ்போர்ட் வரிசையில் இன்று காலை பிறந்த குழந்தை உயிரிழப்பு!!

இலங்கையில் பெரும் சோகம்..

கொழும்பு பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை பிரசவிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த எடை காரணமாக பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தாயார் தற்போது நலமுடன் இருப்பதாக கொழும்பு காசல் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் லனரோல் தெரிவித்துள்ளார்.

ஹட்டனைச் சேர்ந்த குறித்த பெண் இன்று காலை பாஸ்போர்ட் வரிசையில் நின்று கொண்டிருந்த போது பிரசவ வலியால் துடித்துள்ளார். கர்ப்பிணி வலியால் துடிப்பதைக் கண்ட இராணுவ வீரர்கள் அவரை காசல் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

எனினும் அதற்குள் குறித்த கர்ப்பிணி குழந்தை பிரசவித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.