வவுனியா செட்டிகுளத்தில் புகையிரத்தினை மறித்து மக்கள் போராட்டம் : திரும்பிச் சென்ற புகையிரதம்!!

செட்டிகுளத்தில்..

வவுனியா செட்டிகுளம் பகுதியில் புகையிரத்தினை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் புகையிரதம் திரும்பி மதவாச்சி நோக்கி சென்றது.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த (04.07.2022) அன்று அனுராதபுரத்திலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற புகையிரத கடவையூடாக மோட்டார் சைக்கிலில் பயணித்த காந்திநகர் பகுதியை சேர்ந்த ருக்சன் (33 வயது) புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்களாகி சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைக்கப்பட்டு உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் ஈடுபடுத்துமாறு கோரி செட்டிக்குளம் நகரில் இன்று (07.07.2022) மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் போராட்டகாரர்கள் பேரணியாக விபத்து இடம்பெற்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் சென்று புகையிரத பாதையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அச் சமயத்தில் அனுராதபுரத்திலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரத்தினை வழிமறித்த போராட்டகாரர்கள் தமக்கு உரிய தீர்வினை வழங்கினால் தாம் புகையிரத செல்வதற்கு வழிவிடுவதாக தெரிவித்து புகையிரத்தின் முன்பாக அமந்திருந்தனர்.

அவ்விடத்திற்கு செட்டிக்குளம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய போதிலும் அவர்கள் அதற்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் புகையிரதம் செல்வதற்கு வழிவிடுவதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

சுமார் 3 மணிநேரமாக அவ்விடத்தில் புகையிரதம் நின்றதுடன் பின்னர் பின்நோக்கிய வண்ணமே மதவாச்சி புகையிரத நிலையம் நோக்கி புகையிரதம் பயணித்ததுடன் போராட்டக்காரர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றிருந்தனர்.

வவுனியா மாவட்ட எரிபொருள் நெருக்கடி மற்றும் பங்கீடு தொடர்பில் அவசர ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..

வவுனியா மாவட்ட எரிபொருள் நெருக்கடி மற்றும் பங்கீடு தொடர்பில் மக்களுக்கு இலகுவான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தும் நோக்கில் அவசர ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோரின் இணைத் தலைமையில் குறித்த கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (07.07) காலை இடம்பெற்றது.

இதில் திணைக்கள தலைவர்கள் , சங்கங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்டத்தில் எரிபொருள் நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதற்கு கறுப்பு சந்தை விற்பனையே காரணம் எனவும் இதன் காரணமாக மாவட்டத்திற்கு கிடைக்கும் பெற்றோல் எரிபொருளை சரியான முறையில் பங்கீடு செய்வது தொடாபில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பெற்றோல் பெறுவதற்கு பிரதேச செயலகங்கள் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை ஒன்றினை முதல் கட்டமாக குடும்பத்திற்கு ஒன்று வீதம் வழங்குவதற்குரிய நடவடிக்கை தொடர்பிலும் ஆராயப்பட்டது.

சிறுபோக அறுவடை ஆரம்பமாகியுள்ளமையால் அறுவடைக்கு தேவையான டீசல் எரிபொருளை இ.போ.சபை ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கும், விவசாய அறுவடைக்கு முன்னுரிமை அடிப்படையில் டீசலை வழங்குவதற்கும், கனரக வாகனங்களுக்கான டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த எரிபொருள் அட்டை விநியோகம் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் காணப்படும் நீண்ட வரிசை மற்றும் தேவையற்ற அலைச்சல்களையும், கறுப்பு சந்தை வியாபாரத்தையும் கட்டுப்படுத்த முடியும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இளம் பெண்ணுக்காக 10 வருஷம் சேர்ந்து வாழ்ந்த மனைவியை பிரிந்த கணவர்.. அவரே சொன்ன பரபரப்பு காரணம்!!

பிரித்தானியாவில்..

உக்ரைன் நாட்டிலிருந்து அகதியாக வந்த இளம் பெண்ணுக்காக, மனைவியைக் கைவிட்ட ஒரு பிரித்தானியர். அதுவும் சாதாரணமாக இல்லை. இந்த வேலையை செய்ததாக கூறப்படும் டோனி (Tony Garnett, 29) என்பவர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தம்முடன் வாழ்ந்த தன் மனைவியையும், 2 மகள்களையும் பிரிந்து அந்த பெண்ணுடன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக பிரிட்டனை சேர்ந்தவர்கள், உக்ரைனிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்காக தங்கள் வீடுகளில் இடம் அளிக்க முன்வந்தனர். இந்த ஒரு சூழலில்தான் டோனி (Tony Garnett, 29), லோர்னா (Lorna, 28) என்கிற தம்பதியர் சோபியா (Sofiia Karkadym, 22) என்ற உக்ரைனிய பெண்ணை வீட்டில் சேர்த்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த பெண்ணை டோனி காதலிக்க தொடங்க, அவ்வளவுதான், சுமார் 10 ஆண்டுகள்தான், சேர்ந்து வாழ்ந்த மனைவியையும் தமது இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு, அந்த புதுப் பெண்ணான சோபியாவுடன் வெளியே சென்றுவிட்டார்.

சோபியாவுடன் டோனியும் வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, சோபியா தன் கணவரை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டார் என லோர்னா குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் உண்மையில் தமது குடும்பத்தில் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்சனை இருப்பதாகவும், அதேசமயம் அகதியாக வந்த சோபியாவுக்கு ஏகப்பட்ட அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் கூறிய டோனி, அவரை பாதுகாக்கும் பொருட்டு அவருடன் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் தான் இன்னும் லோர்னாவை திருமணம் செய்துகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் : நேரில் சந்தித்த காதலிக்கு நேர்ந்த கதி!!

வேலூரில்..

 

தமிழக மாவட்டம் வேலூரில் தனது காதலியை கத்தியால் குத்திய இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தா மோட்டூர் நடுத்தெருவுவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரும் அதே தெருவில் வசிக்கும் 18 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தங்கள் வீட்டாருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்டு, அவரவர் வீட்டில் தனி தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருவலம் பேருந்தில் கல்லூரிக்கு செல்ல குறித்த மாணவி காத்திருந்தபோது, சதீஷ்குமார் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்த தப்ப முயன்ற சதீஷ்குமாரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சதீஷ்குமாரை கைது செய்து அவரிடம் விசாரித்தபோது, குறித்த மாணவி தன்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும், வேறு ஒரு மாணவருடன் அடிக்கடி பேசுவது குறித்து கேட்டதால் வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு!!

லீனா மணிமேகலை..

இயக்குனர் லீனா மணிமேகலை செங்கடல், மாடத்தி படங்களை தொடர்ந்து காளி என்கிற ஆவணப் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரை சமீபத்தில் லீனா வெளியிட்டார்.

அதில் ஹிந்துக்கள் வணங்கும் பெண் தெடரமான காளி சிகரெட் பிடிப்பது போன்றும், ஓரினசேர்கையாளர்களின் கொடியை பிடித்திருப்பது போன்றும், சித்தரிக்கப்பட்டிருந்தது. இது ஹிந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. லீனா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹிந்தி மற்றும் பெங்காலி நடிகை நுஸ்ரத் ஜஹானிடம் இதுகுறித்து கேட்டபோது அதற்கு அவர். ‘மத உணர்வுகளை புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை தனிப்பட்ட முறையில் நான் படைப்பாற்றலை எப்போதும் ஆதரிக்கிறேன். அதற்காக மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதிஹாசன் : வைரலாகும் வீடியோ!!

தமிழ் திரையுலகில்..

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.

ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளத்தில் தான் பி.சி.ஓ.எஸ் என்ற ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஸ்ருதிஹாசன் உடல் நிலை குறித்து பல வதந்திகள் வெளியாகியுள்ளன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளத்தில் “மோசமான நிலைமையில் இருப்பதாக பல வதந்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படி இல்லை. நான் நலமாக தான் இருக்கிறேன். எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகை ரஷ்மிரேகா தற்கொலை விவகாரம் : காதலனும் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்!!

புவனேஷ்வரில்..

சின்னத்திரை நடிகை ரஷ்மிரேகா ஓஜாவின் மரணத்தை தொடர்ந்து, அவரது காதலனும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஒடியா தொலைக்காட்சி நடிகை ரஷ்மிரேகா ஓஜா. இவர் சமீபத்தில் புவனேஷ்வரில் உள்ள நயபள்ளியில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இவரது காதலரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகை ரஷ்மிரேகா ஓஜா மரணம் குறித்து, அவரது தந்தை கூறுகையில் தன்னுடைய மகள் மரணத்திற்கு காரணம் அவரது காதலன் சந்தோஷ் பத்ரா என தெரிவித்திருந்தார். எனவே நடிகையின் மரணம் குறித்து, போலீசாரும் அவரது காதலனிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.

ரஷ்மிரேகா ஓஜா மரணத்தை தொடர்ந்து, இன்று ஒரிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள பசந்தி காலனியில் உள்ள தன்னுடைய வீட்டில் அவரின் காதலர் சந்தோஷ் பத்ரா தன்னுடைய காதலியை போலவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.நடிகையின் மரணம் தொடர்பாக காவல் துறையினர் சந்தோஷிடம் விசாரணை நடத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், சந்தோஷினின் தாயார் இது குறித்து கூறுகையில், தன்னுடைய மகன் காதலியின் மரணத்திற்குப் பிறகு ‘மனநலம் பாதித்தவர் போல் காணப்பட்டதாகவும்’, ஏற்கனவே அவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும்,

அப்போது அவருக்கு ஆறுதல் கூறியதாகவும் ஆனால் காவலர்களின் விசாரணைக்கு பின் ரஷ்மிரேகாவின் மரணம் குறித்து அவர் தொடர்ந்து கவலைப்பட்டு கொண்டே, இறுதியில் தன்னுடைய உயிரையே மாய்த்து கொண்டார் என கூறியுள்ளார். காதலியின் மரணத்தை தொடர்ந்து, காதலனும் அவரை போலவே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறில் நபரொருவர் வெட்டிக் கொலை!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார்.
மட்டக்களப்பு – சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே நேற்று(06.07) இரவு இடம்பெற்ற சண்டை காரணமாகவே குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் 17 வயது மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவை சேர்ந்த 38 வயதுடைய கந்தசாமி இளையராஜா என்பவரே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சந்திவெளி வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியிலுள்ள உயிரிழந்தவரின் மனைவியின் தாயார் வீட்டில் நேற்றிரவு 8.30 மணியளவில் கணவன் மனைவி இருவருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடானது சண்டையாக உருவாகியதையடுத்து மனைவியின் உறவினர்கள் குறித்த நபரை கத்தியால் வெட்டியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைத்து விசாரணைகளை நடாத்தியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மது பாட்டிலால் மகனை தாக்கிய தந்தை.. மனைவி செய்த பதறவைக்கும் காரியம் : உறைந்து போன கிராமம்!!

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே அமைந்துள்ளது கொற்கை என்னும் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். 53 வயதாகும் இவரது மனைவியின் பெயர் அமுதா.

இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே, கணவர் மகாதேவன் வேலைக்கு ஒன்றும் ஒழுங்காக செல்லாமல், எப்போதும் குடித்து விட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், தான் தினந்தோறும் குடிப்பதற்கு, மனைவி அமுதாவிடம் பணம் கேட்டு அவரை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

குடித்து விட்டு தகராறு

 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், குடிப்பதற்கு பணம் தர மறுத்த அமுதாவின் கையை மகாதேவன் அடித்து உடைத்திருந்தார். இப்படி கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், இரவில் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு, 500 ரூபாய் வாங்கிக் கொண்ட மகாதேவன், டாஸ்மாக் சென்றதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, மது பாட்டில்களை வீட்டிற்கு வாங்கி வந்த மகாதேவன், மனைவியுடன் வழக்கம் போல தகராறு செய்ய தொடங்கி உள்ளார்.

கேள்வி கேட்ட மகன், தந்தை எடுத்த முடிவு..

 

மேலும், அமுதாவை மகாதேவன் அடிக்கவும் தொடங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களின் மூத்த மகன் அம்மாவை ஏன் அடிக்கிறீர்கள் எனக்கூறி தந்தையிடம் சண்டை போட்டுள்ளார்.

மகன் என்றும் பாராமல், போதையில் இருந்த மகாதேவன் பீர் பாட்டிலை உடைத்து, மகனின் உடலை கிழித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இதனைத் தடுக்க வந்த மனைவியையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார் மகாதேவன்.

 

அந்த வேளையில், கணவரின் கையில் இருந்து அரிவாளை வாங்கிய மனைவி அமுதா, கணவரின் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், மகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தனது மகனை அழைத்துக் கொண்டு, காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததைக் கூறி சரண் அடைந்துள்ளார் அமுதா.

தொடர்ந்து, மகாதேவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். மது பழக்கத்தின் பெயரில் நடந்த தகராறில், கணவரை மனைவியே கொன்ற சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கல்யாணமா? கான்ட்ராக்டா? மிரளவைத்த மணமக்கள்.. ஒவ்வொரு கண்டிஷனும் தாறுமாறா இருக்கே!!

திருமண மேடையில்..

இன்றைய காலகட்டத்தில், திருமணம் என்றாலே ட்ரெண்டிங் என்ற ஒரு சூழ்நிலை என்றாகி விட்டது. உதாரணத்திற்கு திருமணத்திற்கு வைக்கப்படும் பேனர்களில் வித்தியாசமாக ஏதாவது புகைப்படங்கள் அல்லது வாசகங்கள் இடம்பெற்றிருப்பது,

திருமணத்திற்காக வித்தியாசமான முறையில் போட்டோஷூட் எடுப்பது, திருமண மேடையில் வைத்து வேடிக்கையாக எதையாவது திட்டம் போடுவது என திருமணம் என்றாலே, ஒரு விஷயம் டிரெண்ட் ஆகும் அளவிற்கு உருவாகி விட்டது.

 

அந்த வகையில், தற்போது ஒரு திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஒரு புதுமண ஜோடி திருமணத்திற்கு பின்னர் Contract போட்டு, அதில் கையெழுத்து போடும் புகைப்படங்கள் தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. மிகப் பெரிய அளவில், இந்த Contract பாண்டு இருக்கும் நிலையில், அதிலுள்ள பாய்ண்ட்களை படித்து விட்டு, அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில், மணமக்கள் கையெழுத்தும் போடுகின்றனர்.

அதே போல, இதற்கு சாட்சியம் அளிக்கும் வகையில், இருவரின் குடும்பத்திலுள்ள பலரும் அங்கே கையெழுத்தும் போட்டுள்ளனர். இவை அனைத்தையும் விட, ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், அதிலுள்ள 8 விதிமுறைகள் தான்.

8 விதிமுறைகள்;

முதல் விதியாக, மாதத்திற்கு ஒரு pizza மட்டும் தான் உண்ண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரண்டாவதாக வீட்டில் இருந்து செய்யப்படும் உணவினை தான் உண்ண வேண்டும் என இருக்கிறது.

அதே போல, மணப்பெண்ணுக்கான விதியாக 3 ஆவது விதி உள்ளது. அதாவது, தினமும் புடவை அணிய வேண்டும் என்பது தான் அது. இரவில் தாமதமாக பார்ட்டிக்கு செல்லலாம். ஆனால், இருவருமாக சேர்ந்து தான் செல்ல வேண்டும் என்ற விதியும் உள்ளது.

ஜிம்மிற்கு தினமும் செல்ல வேண்டும் என்பதும், ஞாயிற்றுக்கிழமை காலை உணவு இருவரும் மாறி மாறி சமைக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. கடைசி இரண்டு விதிகளாக எந்த பார்ட்டிக்கு சென்றாலும் சிறந்த புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்றும், இறுதியில் ஒவ்வொரு 15 நாட்களுக்கு பிறகும் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி மொத்தம் 8 விதிமுறைகள் உள்ள ஒரு காண்ட்ராக்ட் பேப்பரில் மணமக்கள் சம்மதம் தெரிவித்து கையெழுத்தும் போட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம் : இரவில் கணவன் குடும்பம் சேர்ந்து செய்த அதிர்ச்சி காரியம்!!

மதுரையில்..

மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டி செல்லும் சாலையில், குன்றக்குடி மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. அங்கே கடந்த சில தினங்களுக்கு முன், சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர்.

எரிந்த நிலையில் இளம்பெண்ணின் உடல்

தொடர்ந்து, அப்பகுதியில் கிடைத்த தடயங்களை சேகரித்து, பெண்ணை அடையாளம் காண தொடங்கி உள்ளனர். அதன் அடிப்படையில், இறந்த பெண் திண்டுக்கல் மாவட்டம் பஞ்சயம்பட்டி என்னும் பகுதியைச் சேர்ந்த அர்ச்சுணன் என்பவரின் மனைவி ராசாத்தி என்பது தெரிய வந்தது.

மேலும், இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், 8 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளதாகவும் போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நத்தம் பஞ்சயம்பட்டியைச் சேர்ந்த அர்ச்சுணன், முதலில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில நாட்களில் பிரிந்த நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணையும், பிரிந்து விட்டார். அர்ச்சுணன். இதற்கு அடுத்தபடியாக தான், மூன்றாவதாக ராசாத்தியை அர்ச்சுணன் திருமணம் செய்துள்ளார்.

தொடர்ந்து, சென்னையில் தனது மனைவி ராசாத்தியை அழைத்து வந்து இடியாப்ப கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் அர்ச்சுணன். அப்போது, வேறு சில ஆண்களுடன் ராசாத்தி பழகியதாக கூறி, சந்தேகத்தின் பெயரில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பாக, தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார் அர்ச்சுணன்.தொடர்ந்து, உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி, ராசாத்தி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு பேருந்தில் அர்ச்சுணன் சென்றுள்ளார்.

பின்னர், கொட்டாம்பட்டி பள்ளப்பட்டி அருகே அவர்கள் இறங்கிய போது, அர்ச்சுணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்துள்ளனர். இரவு நேரத்தில் தென்னந்தோப்பு வழியாக நடந்து சென்ற போது, அர்ச்சுணனின் உறவினர்கள் சேர்ந்து ராசாத்தியைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அப்பகுதியில் ராசாத்தி உடலை தீ வைத்து எரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பெண்ணின் உடலை அடையாளம் கண்டு கொண்டதால், அர்ச்சுணனிடம் விசாரணை நடந்த போது, அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இறுதியில் அர்ச்சுணன், அவரது பெற்றோர் உள்ளிட்ட மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில், கணவர் உட்பட குடும்பத்தினர் எரித்துக் கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“அந்த தீவுக்கு மட்டும் போய்டாதீங்க”.. தொடர்ந்து எச்சரிக்கும் அரசு.. மறைக்கப்பட்ட மர்ம தீவில் நடந்த விபரீதங்கள்!!

இத்தாலியில்..

இத்தாலி நாட்டில் உள்ள தீவு ஒன்றிற்கு செல்லும் மக்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறது அந்நாட்டு அரசு. அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற விபரீதங்கள் தான் காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

மர்ம தீவு

போவெக்லியா என்ற தனிமையான தீவு வெனிஸ் மற்றும் லிடோ இடையே அமைந்துள்ளது. பிரம்மாண்ட கட்டிடங்கள், இயற்கை எழில் சூழ்ந்த நிலப்பரப்பு, கண்ணை கவரும் கடற்கரை என பல பிரத்தியேக அம்சங்கள் இருந்தாலும் இந்த தீவில் மக்கள் யாரும் வசிப்பதில்லை.

சொல்லப்போனால், இந்த தீவுக்கு செல்ல அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் அனுமதியும் பெற்றுவிட முடியாது. வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே இங்கே செல்ல முடியும். கலையும் நாகரிகமும் செழித்து வளர்ந்த இத்தாலியில் இப்படி ஒரு தீவு உருவாக்கப்பட்டது ஏன்? பின்னர் எதற்காக இது கைவிடப்பட்டது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

அதிர்ச்சி

பிளேக் நோய் உலக அளவில் மிகப்பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய பெரும் தொற்றாகும். 1920 களில் ஐரோப்பாவில் பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தீவில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டனர்.

இதன்மூலம் இந்த தீவில் ஏற்கனவே வசித்துவந்தவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர். அதனை தொடர்ந்து, இந்த தீவு நோயாளிகளை இறக்கிவிடும் இடமாகவே இருந்திருக்கிறது.

அப்படி இந்த தீவுக்கு வந்தவர்கள் அனைவரும் அங்கேயே மரணமடையவே, பிரம்மாண்ட குழிகளில் அவர்களது உடல் ஆங்காங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கொடும் தொற்று நோயான பிளேக் உலகம் முழுவதும் முடிவுக்கு வந்ததற்கு பிறகும் இந்த தீவுகளுக்கு மக்களை அனுப்பியது ஐரோப்பிய நாடுகள்.

விபரீதம்

பிளேக் நோய்த் தொற்று முடிவுக்கு வந்ததும், இந்த தீவில் மனநல மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அப்போது ஐரோப்பாவில் சிறிய உடல் நலக்குறைபாடோடு யார் இருந்தாலும் அவர்களை உடனடியாக இந்த தீவுக்கு அனுப்பிவிட முடிவெடுத்திருக்கின்றன பல நாடுகள்.இப்படி தீவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மீது பல விபரீதமான பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இன்றைய தேதியில் இந்த தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. இத்தாலி சுற்றுலாத்துறை இந்த தீவுக்கு மக்களை அனுப்ப தயக்கம் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த தீவுக்கு செல்ல அனுமதி கிடைக்கிறது.

பொதுமக்கள் யாராவது இந்த தீவுக்கு செல்ல நினைத்தால் அதற்கு பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். அதுமட்டுல்லாமல் இங்கு செல்ல கட்டணமும் கணிசமான அளவில் வசூலிக்கப்படுகிறது.

கடன் தொல்லையால் தாய், மகள் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கடன் பிரச்சினையால்..

வருசநாடு அருகே கடன் பிரச்சினையால் தாய், மகள் தற்கொலை செய்த வழக்கில், வட்டிக்கு பணம் கொடுத்தவர் கந்து வட்டி தடை சட்டத்தில் கைது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள பூசிணியூத்து கிராமத்தை சேர்ந்த நல்லுச்சாமி என்பவரின் மனைவி ஆண்டிச்சி (வயது35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

பூசணியூத்து கிராமத்தில் ஆண்டிச்சி மட்டும் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். விவசாயம் மற்றும் மாடுகள் வளர்த்து வந்தார். மகள் காவியா பிளஸ்2 படித்து வந்தார். மகன் கிருஷ்ணகுமார் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

 

ஆண்டிச்சிம்மாள் பால் பண்ணை நடத்துவதற்காக அதே ஊரை சேர்ந்த அடைக்கலம் என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். அதிகமான வட்டி காரணமாக வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் தவித்தார்.

மேலும் தான் குடியிருந்த வீட்டையும் அடைக்கலத்திற்கு ஈடாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கொடுத்த பணத்தை கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்ததால், மனமுடைந்த ஆண்டிச்சி தனது மகள் காவியா, மகன் கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேரும் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் விஷமாத்திரையை தின்றதில், ஆண்டிச்சி மற்றும் மகள் காவியா இறந்துவிட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்பிழைத்தார். இந்நிலையில் கடன் கொடுத்த அடைக்கலம், ஆண்டிச்சியின் அப்பா மொக்கராஜிடம் மகள் வாங்கிய கடனை தரும்படி கூறி மிரட்டியதாக தெரிகிறது.

இதனையடுத்து மொக்கராஜ், அடைக்கலம் மீது வருசநாடு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் இருவர் தற்கொலைக்கு தூண்டியதாகவும், கந்து வட்டி தடை சட்டத்திலும் அடைக்கலத்தை போலீசார் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக இந்தியாவிற்குச் செல்ல முயன்ற 7 பேர் கைது!!

7 பேர் கைது..

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்களாக 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் வைத்து இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண், சிறுவன், சிறுமி உள்ளடங்களாக 7 பேரும் மன்னாரைச் சேர்ந்த 2 படகோட்டிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் 7 நாட்களுக்குள் இருவரை கரம்பிடித்த 29 வயது ஆசிரியை!!

ஆசிரியை..

 

இலங்கையில் ஆசிரியை ஒருவர் தனது முதலாவது திருமணம் முடிவடைந்து, ஏழு நாட்களுக்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியையும், அவரது புதிய மணமகனையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

முதல் கணவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்து, கம்பளை பொலிஸார் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த பதிவாளரிடம், தகவலை தெரிவித்து , திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

29 வயதான இந்த ஆசிரியை 8 வருடங்களாக காதலித்து வந்த நபரை கடந்த ஜூன் 23 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதன்பின்னர் பெற்றோரின் விருப்பத்தின்படி , மாவனெல்லயைச் சேர்ந்த மணமகனுடன் இரண்டு வருடங்கள் பழகிய பின்னர் ஜூன் 30 ஆம் திகதி கம்பளையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் இரண்டாவது திருமணத்தை நிறுத்தி, மணமக்களையும் உறவினர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, விசாரணை செய்தபோது மணப்பெண் முதல் கணவனை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அஞ்சி மணப்பெண் அப்படி கூறிய போதும் முதலாவது கணவர் திருமண படங்களையும் திருமணப் பதிவு சான்றிதழையும் காட்டி தான் கூறியதை உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து இரண்டாவது கணவர் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

பிறந்த குழந்தையுடன் பஸ் தரிப்பு நிலையத்தில் தாய்.. கண்கலங்க வைத்த காட்சி!!

கண்கலங்க வைத்த காட்சி..

நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் புதிதாய் பிறந்த ஒரு குழந்தையுடன் தாய் குருநாகல் பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு கையாலாகாத ராஜபக்ச குடும் ஆட்சியே காரணம். அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எரிபொருள் முதல் உணவுப்பண்டம் வரை விண்ணைமுட்டும் அளவுக்கு விலைவாசி எகிறியுள்ளது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது நடுததர மக்களும் வறுமைகோட்டிற்கு உள்லே வாழும் மக்களுமே.

எ ரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போக்குவரத்துக்கள் முடங்கியுள்ளதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்வதற்கு கூட கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

முச்சக்கரவண்டிகளின் கட்டணமும் பாரிய அளவில் அதிகரித்துள்ளதால் மக்கள் பயணங்களை மேற்கொள்ள பேருந்துகளையே நம்பியிருக்கின்றனர். இந்நிலையில் எரிபொருள் நெருக்கடியால் சேவையில் ஈடுபடும் பேருந்துக்களில் பெரும்பாலானவை தமது சேவையை நிறுத்தியுள்ளன.

இதன் காரணமாக புதிதாய் பிறந்த ஒரு பிஞ்சுக் குழந்தையுடன் தாய் குருநாகல் பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.