வவுனியா வீராங்கனை டிலக்சினி சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை!!

டிலக்சினி கந்தசாமி..

பாகிஸ்தானில் நடைபெற்ற மூன்றாவது சவாட் சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்கப் பதக்கம் வென்று வடக்கு மாகாணத்துக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்தப் போட்டியில் இலங்கையிலிருந்து 13 போட்டியாளர்கள் (4ஆண்கள், 9 பெண்கள்) பங்கேற்றனர். இவர்களில் 9 பேர் தங்கப் பதக்கத்தையும், 4 பேர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர்.

போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வவுனியா வீராங்கனை டிலக்சினி கந்தசாமி சிறப்பாகச் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.

சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டிலக்சினி கந்தசாமி பெரும் கஷ்டத்துக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியாலும், தொடர் பயிற்சியாலும் சர்வதேச ரீதியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஏற்கனவே பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பல பதக்கங்களை வென்ற டிலக்சினி, இன்று சர்வதேச ரீதியிலும் தங்கப் பதக்கத்தை வென்று வடக்கு மாகாணத்துக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் சப்ரகமுவ பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை நெறி அலகு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை!!

எரிபொருள் அட்டை..

வவுனியா மாவட்டத்தில் கிராம அலுவலர் ஊடாக எரிபொருள் அட்டை வழங்கி நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

பெருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பெற்றுக் கொளவதில் உள்ள நெருக்கடி நிலை கட்டுப்படுத்தல் தொடர்பில் வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், இராணுவ, பொலிஸ் மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (06.07) பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது எரிபொருள் பெறுவதில் உள்ள நெருக்கடிநிலை மற்றும் அது தேவையானவர்களுக்கு முறையாக பங்கீடு செய்யப்படாமை தொடர்பில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியிருந்தனர். அத்துடன் கறுப்பு சந்தை உருவாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தனர்.

மேலும், சிறுபோக நெற்செய்கை அறுவடைக்கு தேவையான டீசலை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அத்தியாவசிய தேவையின்றி கனரக வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது, மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிலேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், இராணுவ அதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளர் ஆகியோரும் தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

குறித்த கூட்டத்தில் பொதுமக்கள் அமைப்பின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைவாக பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக எரிபொருள் அட்டையினை முதல் கட்டமாக குடும்பத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் விநியோகித்து,

தேவையின் அளவை கொண்டு அவர்களுக்கு தேவையான பெற்றோலை கிராம அலுவலரின் சிபார்சின் அடிப்படையில் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுப் கொள்ள முடிவதுடன், அனைவருக்கும் பங்கீடு செய்யக் கூடிய நிலை உருவாகும்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக வாகனங்கள் நிறுத்தப்படுவதை குறைக்க முடிவதுடன், கறுப்பு சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஆராய்ந்த அதிகாரிகள் உடனடியாக பிரதேச செயலகங்கள் மூலம் கிராம அலுவலர்கள் ஊடாக பொது மக்களுக்கு எரிபொருள் அட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட அரச அதிபர் உறுதியளித்தார்.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள், புகைப்படப் பிடிப்பாளர் சங்க பிரதிநிதிகள், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், ஊடக அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

யாழில் கணவரின் பெற்றோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!

யாழில்..

யாழில் கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்கான மனைவி தலையில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ் வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாட்டில் எரிபொருளுக்கு கட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்து கணவர் 05 லிற்றர் பெற்றோலை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில் மனைவி அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரியை வீட்டிற்கு வரவழைத்து கணவனுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்த பெற்றோலை அந்த அதிகாரிக்கு கொடுத்துள்ளார்.

கணவர் வீட்டில் வந்து பார்க்கையில் 10 நாட்டகளாக சேமித்த வத்திருந்த பெட்ரோலை காணவில்லை என அதிர்ச்சியுற்றார். இது தொடர்பில் மனைவியிடம் விசாரிக்கும்போது மனைவி உண்மையை கூறிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த அயலவர்கள் மனைவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதேவேளை கணவரும் யாழில் உள்ள முக்கிய அலுவலகம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.

ஊர் ஊராக யாசகம் பெற்று பணத்தை இலங்கை தமிழர்களுக்கு கொடுத்த நபர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

திருவண்ணாமலையில்..

இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க முதியவர் ஒருவர் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பால்பாண்டி (72) என்பவர், பிச்சையெடுத்து சேமித்து வைத்த ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களின் நலவாழ்வு நிதிக்கு வழங்குமாறு, டிஆர்ஓ பிரியதர்ஷினியிடம் அளித்தார்.

மேலும், அது தொடர்பான மனுவையும் அளித்தார். பின்னர் பால்பாண்டி கூறுகையில், ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து சேமித்து, மாணவர்களின் படிப்புக்கும், இயலாதவர்களுக்கும் அளித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

பிரபல பாடகரை கொன்றுவிட்டு கையில் துப்பாக்கிகளுடன் கொண்டாட்டம் : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

பஞ்சாப்பில்..

இந்திய மாநிலம் பஞ்சாப்பில் பாடகர் சித்து மூசே வாலாவை கொலை செய்த நபர்கள், கையில் துப்பாக்கிகளுடன் அதனை கொண்டாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மதம் 21ஆம் திகதி பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூசே வாலா சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சொந்த ஊரான மானஸாவில் அவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், கொலை குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான அங்கித் சிர்ஸா, கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பல்வேறு ரக துப்பாக்கிகளை பொலிசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் சித்துவை கொலை செய்த பிறகு, குற்றவாளிகள் நான்கு பேரும் காரில் பயணித்துள்ளனர். அப்போது கையில் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு ஏதோ சாதித்தது போல அவர்கள் கொண்டாடியுள்ளனர்.

இந்த வீடியோ கைது செய்யப்பட்ட ப்ரியாவத், கபில், சச்சின் பிவானி, தீபக் ஆகியோரின் செல்போனில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த வீடியோவை பார்த்த அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. துப்பாக்கி கலாச்சாரம் சர்வ சாதாரணமாக பரவி வருவதாக பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்… அனாதையான கைக்குழந்தை!!

கேரளாவில்..

கேரளாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கோர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே புனலூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கிருஷ்ணன். இவர் மனைவி அஞ்சு. இந்த தம்பதி தங்களது மூன்று மாத குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர்.

கார் கூலக்கடை பகுதியை கடக்கும் போது கொட்டாரக்கரை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் தினேஷ் கிருஷ்ணனின் காரில் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் தினேஷ் கிருஷ்ணனும் மனைவி அஞ்சுவும் சம்பவ இடத்தில் பலியாகினர். 3 மாத குழந்தை காயத்துடன் உயிர் தப்பியது. விபத்துக்குள்ளான மற்றொரு காரில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர்.

காயமடைந்த குழந்தை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மூன்று மாத கை குழந்தையை தவிக்க விட்டுவிட்டு விபத்தில் தாய், தந்தை இருவர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் சம்மதப்படி காதலனை கரம்பிடித்த இளைஞர்.. இனம், மொழி, பாலினம் கடந்த காதல்!!

கொல்கத்தாவில்..

கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலனை பெற்றோரின் சம்மதப்படி திருமணம் செய்திருக்கிறார்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் அபிஷேக் ரே. பேஷன் டிசைனராக இருக்கும் இவர் குர்கோனை சேர்ந்த சைத்தன்யா என்பருடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். இந்த நட்பு விரைவிலேயே காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து இருவரும் தங்களது வீட்டில் இதுகுறித்து பேசி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு பலரும் சமூக வலை தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய காதலை வீட்டில் வெளிப்படுத்தும்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்ததாக கூறுகிறார் சைதன்யா. இதுகுறித்து அவர் பேசுகையில்,”கடந்த 2016 ஆம் ஆண்டு என்னுடைய பாலின விருப்பம் குறித்து எனது குடும்பத்தாரிடம் தெரிவித்தேன்.

இந்த பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஆனால், விரைவிலேயே அவர்கள் என்னுடைய விருப்பத்தை உணர்ந்துகொண்டனர். எங்களுடைய திருமணம் இதுபோல் உள்ள பிறருக்கும் வழிகாட்டியாக அமையும் என நான் நம்புகிறேன்” என்றார்.

ஆரம்பத்தில் தடைகள் இருந்தபோதிலும் தங்களுடைய காதல் அனைத்தையும் தகர்த்ததாக கூறுகிறார் அபிஷேக். இதுபற்றி அவர் பேசுகையில்,”இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 377 வது பிரிவின்படி, ஒருபால் தம்பதியினர் ஒன்றாக வாழ்வது குற்றம் அல்ல. இருப்பினும் ஒருபால் தம்பதியர் திருமணம் செய்துகொள்வது சிரமமான காரியமாக இருந்துவருகிறது.

இந்நிலையில், எங்களது காதல் இனம், மொழி, பாலினம் ஆகியவற்றை வென்று காட்டியிருக்கிறது. எனக்கு தெரிந்து கொல்கத்தாவில் நடைபெறும் முதல் ஒருபால் திருமணம் இதுவாகத்தான் இருக்கும்.

திருமணம் என்பது இருவர் ஒன்றிணைவது மட்டுமல்ல. மாறாக இரண்டு குடும்பங்கள் ஒன்றிணைவது. எதிர்காலத்தில் ஒருபால் காதலர்கள் திருமணம் செய்ய முன்வருவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

தங்களது திருமணத்துக்கு உறவினர்கள் அளித்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் இந்த தம்பதி தேன் நிலவுக்கு பாரிசுக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதன்பின்னர், குர்கோனை சேர்ந்த சைதன்யா கொல்கத்தாவுக்கு சென்று அபிஷேக்குடன் வசிக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சமூக வலை தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வவுனியாவில் புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்ட 9 பேர் கைது : ஸ்கானர் இயந்திரத்துடன் வானும் மீட்பு!!

9 பேர் கைது..

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் நேற்று (05.07.2022) மாலை 9 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த நடவடிக்கைக்கு பயன்படுத்திய ஸ்கானர் இயந்திரம் மற்றும் வான் ஆகியவற்றினையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பலர் நிற்பதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர்.

அதன் போது புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 9 நபர்களை பொலிஸார் கைது செய்ததுடன் போக்குவரத்திற்கு பயன்படுத்திய வான் மற்றும் புதையல் தேடும் ஸ்கானர் இயந்திரம் ஆகியவற்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நாகர் இலுப்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 26 வயதுடைய நபர், மூன்றுமுறிப்பு பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய நபர், மகர பகுதியினை சேர்ந்த 19, 31, 37, 35, 46, 49, 38 ஆகிய வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் மற்றும் ஸ்கானர் இயந்திரம் , வாகனம் ஆகியவற்றிகையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது!!

இளைஞர்கள் கைது..

வவுனியாவில் இரு இளைஞர்கள் நேற்று (05.07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தேணிக்கல் பகுதியில் கடந்த வாரம் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து பயணித்த இளைஞர்கள் இருவர் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில்,

வவுனியா, தோணிக்கல் மற்றும் சிறிராமபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 25 ஆகிய வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதுடன், பசார் வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் 6 அரைப் பவுண் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

யாழில் கடும் நெருக்கடி நிலையால் உயிரை மாய்த்த இளம் குடும்பஸ்தர்!!

யாழில்..

யாழில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயது பஜிபரன் எனும் இளைஞன் என தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் கொழும்பில் அன்றாட வேலை ஒன்றினை செய்து வந்ததாகவும் தற்போதய சூழ்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தில் பிணக்குகள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மனவேதனையில் புலம்பி திரிந்ததாகவும் பலர் ஆறுதல் சொல்லியும் இன்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு விரையவுள்ள 7 எரிபொருள் கப்பல்கள் : நாடாளுமன்றத்தில் தகவல்!!

எரிபொருள் கப்பல்கள்..

ஏழு எரிபொருள் கப்பல்கள் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் உள்ள கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இவை அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள். 40 ஆயிரம் மொற்றி தொன் டீசல் எதிர்வரும் 8,9 ஆம் திகதிகளில் வரும். கழிவு எண்ணெயை ஏற்றிய கப்பல் 10 ஆம் திகதிக்கும் 11 ஆம் திகதிக்கும் இடையில் வரும். மற்றுமொரு டீசல் கப்பல் 19 ஆம் திகதி வருகிறது.

13 ஆம் 15 ஆம் திகதிகளுக்கு இடையில் பெட்ரோல் கப்பல் ஒன்று வருகிறது. 15 ஆம் திகதி கச்சாய் எண்ணெய் கப்பல் வருகிறது. அதே தினத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் டீசல் கப்பல் ஒன்றும் வருகிறது.

22 ஆம் திகதியும் எரிபொருள் கப்பல் வருகிறது. இந்த பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டங்களை செய்து விடுவார்கள் என்று தற்போது எதிர்க்கட்சியினர் குழம்பி போயுள்ளனர்.

இதனை செய்த, அவர்களில் கதை முடிந்து விடும் என்பதே இதற்கு காரணம். நாங்கள் எப்படியாவது இதனை செய்து முடிப்போம். இந்த சந்தர்ப்பத்தில் கொள்ளையடிப்பவன் எவனாவது இருந்தால், அவன் மீது மழையில்லாத இடி விழ வேண்டும்.

போராட்டத்திற்குள் நெருக்கடியை கொண்டு சென்று ஆத்திரத்தை தூண்டுகின்றனர். அப்படி செய்வர்கள் உருப்பட மாட்டார்கள். அரசாங்கத்தை வீழ்த்தி எவருக்கும் எதனையும் சாதிக்க முடியாது.

இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இல்லையென்றால், இந்த நாட்டை மீட்க முடியாது எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பேரூந்தில் சனநெரிசல் ஏற்பட்டதால் பேரூந்தை நிறுத்து விட்டு இறங்கிச் சென்ற சாரதி!!

செட்டிகுளம் பேரூந்தில்..

வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் ஊடாக செட்டிகுளம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்தில் அதிக சனநெரிசல் ஏற்பட்டு பேரூந்தில் பலர் தொங்கிக் கொண்டு பயணித்தமையால் பேரூந்தை இடைநடுவே நிறுத்து விட்டு சாரதி இறங்கிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை 6.00 மணியளவில் வவுனியாவில் இருந்து புறப்பட்ட பேரூந்து மாலை 6.40 மணியளவில் பட்டானிச்சூர் பகுதியை அடைந்த போதே சாரதி வாகனத்தை செலுத்த முடியாது எனத் தெரிவித்து பேரூந்தில் இருந்து இறங்கிச் சென்றதுடன், அது குறித்து இ.போ.சபை முகாமையாளருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

வவுனியாவில் இருந்து பூவசரன்குளம் ஊடாக பயணித்த இன்றைய இறுதிப் பேரூந்தில் வவுனியா நகரில் கற்றல் செயற்பாடுகளுக்கு வந்தோர், வேலைக்கு வந்தோர், தேவை கருதி வந்தோர் என பலரும் செட்டிகுளம் திரும்பிச் செல்ல பேரூந்துக்கு காத்திருந்தனர்.

வவுனியா பேரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.சபை பேரூந்து இலுப்பையடியை அடைந்த போது பேரூந்துக்குள் நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து பேரூந்து மன்னார் வீதி, குருமன்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பேரூந்து தரிப்பிடங்களில் நிறுத்தி பயணிக்களை ஏற்றிய போது பேரூந்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதுடன், இளைஞர்கள் பலரும் இடம் இன்மையால் பேரூந்தின் பின்புறத்திலும் வாயில் பகுதியிலும் தொங்கியபடி பயணித்தனர்.

தொடர்ந்து சென்ற பேரூந்து பட்டானிச்சூர் பகுதியை அடைந்த போது அங்கும் மக்கள் நின்றமையால் ஏற்ற முடியாது எனத் தெரிவித்தும், பேரூந்தில் பாதுகாப்பற்ற வகையில் பயணிகளை கொண்டு செல்ல முடியாது எனத் தெரிவித்தும் பேரூந்தில் இருந்து இறங்கி சென்றிருந்தார். இது குறித்து சாலை முகாமையாளருக்கும் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.

இதனால் பேரூந்தில் பயணித்த பலரும் வீடு செல்ல முடியாது இரவு வேளையில் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிசார் இணைந்து இது குறித்து சாலை முகாமையாளருக்கு தெரியபர்படுத்தியதையடுத்து,

இ.போ.சபையின் வவுனியா சாலையில் இருந்து பிறிதொரு பேரூந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் இரண்டு இ.போ.சபை பேரூந்துகளிலும் மக்கள் ஏறி புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

இந்த பழங்களை ஒன்றாக சாப்பிடுவது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்… ஜாக்கிரதையாக இருங்க!!

பழங்கள்..

பொதுவாக ஒரு சில பழங்களை உணவுகளுடன் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது. ஏனெனில் பழங்களுடன் சில பொருத்தமற்ற உணவுகளை கலந்து சாப்பிடுவது நச்சுத்தன்மையுடையதாக மாறும் மற்றும் தீங்கு உடலுக்கு விளைவிக்கும்.

அந்தவகையில் தற்போது பழங்களை ஒன்றாக சாப்பிட கூடாத உணவு என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

பப்பாளி சாலட்டில் எலுமிச்சைப் பழத்தை சேர்ப்பது நச்சுத்தன்மையுடையதாக மாறும். பப்பாளியுடன் எலுமிச்சை கலந்து ஹீமோகுளோபின் அளவைக் குறைக்கலாம் மற்றும் இரத்த சமநிலையின்மை ஏற்படலாம், இது தீங்கு விளைவிக்கும்.

கொய்யா மற்றும் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது குமட்டல், வீக்கம், தலைவலி மற்றும் அமில வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

அன்னாசி மற்றும் பால் இந்த கலவையானது சிலருக்கு குமட்டல், வயிற்று வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற கலவை உள்ளது, இது பாலுடன் வினைபுரிந்து, உணர்திறன் உள்ளவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

தர்பூசணி பழத்துடன் ஏதேனும் உணவு அல்லது தண்ணீரைக் கூட இணைப்பது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை குறைக்கும், செரிமான செயல்முறையை மெதுவாக்கும், வீக்கம் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

பால் மற்றும் ஆரஞ்சு கலவையை உட்கொள்வது செரிமானத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும், இது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

தினமும் ஒரு கிளாஸ் பெருங்காயத் தண்ணீர் : இந்த நன்மைகள் உங்களை தேடி வருமாம்!!

பெருங்காயத்தில்..

பெருங்காயத்திற்கு என்று சமையலில் தனிப்பட்ட இடம் எப்போதும் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது பெருங்காயம்.

பெருங்காயம் கார நெடியுடன் கூடிய கார்ப்பு சுவை கொண்டதாகும். சுவையும் மணமும் மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இது ஆங்கிலத்தில ‘அசப்போட்டிடா’ என்று அழைக்கபடுகிறது.

பெருங்காயம் என்பது மருத்துவம் முதல் செரிமானம் வரை பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட ஒரு தூள் ஆகும், இது ஆயுர்வேத மருத்துவம் முதல் சித்த மருத்துவம் பல நோய்களை தீர்க்க உதவுகின்றது.

அதிலும் தினமும் ஒரு கிளாஸ் பெருங்காய தண்ணீர் குடிப்பது இன்னும் பல பயன்களை தருகி்னறது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

​பெருங்காய தண்ணீர் எப்படி செய்வது?

பெருங்காய தண்ணீர் செய்ய முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ½ தேக்கரண்டி பெருங்காயத் தூளை சேர்க்கவும். அதிகபட்ச நன்மைகளைப் பெற விரும்புபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்கலாம். தினமும் பெருங்காய தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

நன்மைகள்

அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்து, செரிமான அமைப்பை ஒழுங்குபடுத்தப் பெருங்காயத்தூள் உதவுகிறது. மேலும் இது வயிற்றின் பி.ஹெச் நிலையை சரி செய்ய உதவுகிறது.

பெருங்காய தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் குறைப்பதற்கு வெகுவாக உதவுகிறது. நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், இதய ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க முயல்பவர்கள் தினமும் காலையில் பெருங்காய தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்.

குளிர்காலத்தில் நாம் பெருங்காய தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது அது சளி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

தலைவலி வரும்போது அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு பெருங்காய தண்ணீரைக் குடிக்கலாம்.

மாதவிடாய் பிரச்சனையில் உள்ளவர்களுக்குப் பெருங்காய தண்ணீர் சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்களுடைய உணவுகளில் பெருங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. அது மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவற்றை சேர்த்து தீர்க்கும்.

பெருங்காயத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கலவைகள் உள்ளன. மேலும் இவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, இதன் மூலம் இரத்த ஓட்டத்தின் ஆரோக்கியத்திற்கும் இவை உதவுகின்றன.

மாணவன் முகத்தில் காணப்பட்ட பரு : ஆசிரியை எடுத்த முயற்சி : பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

திருவண்ணாமலை..

மாணவன் முகத்தில் இருந்த பருவை ஊசியால் ஆசிரியை குத்திய நிலையில், மாணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்மியம்பட்டு கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த செவத்தான் என்பவரது மகன் சிவகாசி(15). அருகில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

சில தினங்களுக்கு முன்பு குறித்த மாணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று பெற்றோருக்கு போன் வந்துள்ளது. மகனை பார்ப்பதற்கு பெற்றோர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

மாணவனை அவதானித்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆம் மாணவனின் முகம் வீங்கி இருந்துள்ளது. நடந்தது குறித்து மாணவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, முகப்பருவை அகற்றுவதற்காக ஆசிரியை மகாலட்சுமி ஊசியால் குத்தியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மாணவனுக்கு, நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவனின் மரணத்திற்கு காரணமான ஆசிரியை மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்த நிலையி்ல், தற்போது ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பெண்ணின் ஒரு நாள் பாக்கெட் மணி 40 லட்சம் : ஆடிப்போன இணையவாசிகள் : அப்படி என்ன செய்கிறார் தெரியுமா?

நியூயோர்க்கில் ..

பெற்றோர்கள் சம்பாரிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு இளம்பெண் செலவு செய்து வீடியோவாக டிக்டாக்கில் வெளியிட்டு பலரையும் வாயடைக்க வைத்திருக்கிறார்.

ஒருவருக்கு வாழ்நாள் கனவு என்று சொன்னால், நாம் சம்பாரிக்கும் பணத்தை சேமித்து பிடித்ததை செய்யவேண்டும் எனவும், சுற்றுலா செல்லவேண்டும் என பல ஐடியா இருக்கும்.

ஆனால், இங்கு ஒரு பெண் செய்திருக்கும் சம்பவம் பலரையும் என்னடா இப்படியும்மா? என ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

பாக்கெட் மணி 40 லட்சம்

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியை சேர்ந்த அந்த இளம் பெண், அன்றாடம் அவர் செய்யும் செயல் தான் தற்போது மிகப்பெரிய பேச்சு. அப்படி என்ன செய்தார் என்றால், டிக் டாக் மூலம் பிரபலமான அந்த பெண் பெயர் ரோமா அப்டெசிலம் (Roma Abdesselam).

இவர், ஒரு நாளுக்கு சுமார் 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம்) வரை செலவு செய்கிறார். அதாவது தனது பெற்றோர்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து, சுமார் 40 லட்சம் ரூபாயை பெரும்பாலான நாட்களில், தனது Pocket Money ஆகவும் ரோமா செலவு செய்து வருகிறார்.

டிக்டாக்கில் பிரபலம்
இதுகுறித்து பல வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி “Stay at home daughter” என்ற பெயரை வைத்து, பெற்றோர்களின் பணத்தை தினமும் செலவு செய்வது தான், தனது முழு நேர வேலை என்றும் ரோமா குறிப்பிட்டுள்ளார்.

அன்றாடம் பல லட்சம் செலவு செய்யும் இவர், உடற்பயிற்சி செல்வது, தோழிகளுடன் ஊர் சுற்றுவது, பார், ரெஸ்டாரண்ட், அழகு நிலையங்கள் செல்வது, உடைகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை வாங்குவது தான் இவரது பழக்கமாம்.

ஒரு நாள் அணிந்த உடையை மறுமுறை பயன்படுத்தும் பழக்கம் இல்லாத ரோமா, தனது பெற்றோர்கள் செய்யும் வேலை என்ன என்பது பற்றி இதுவரை குறிப்பிடவில்லை.

நெட்டிசன்கள் விமர்சனம்
ஆனாலும், ஆடம்பர செலவு ஒரு பக்கம் இருக்க, மற்ற நாடுகளிலுள்ள கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு பணம் நன்கொடை செய்தும் வருகிறார்.

இப்படியே ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்வதையே கொண்டுள்ள இப்பெண்ணுக்கு நெட்டிசன்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.