வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!

நாடளாவிய ரீதியில் நடைபெறும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைய வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் கல்லூரியின் முதல்வர் ச.தயாகரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவகத்தின் பிரதி நிதியாக திட்டமிடல் பிரதி கல்வி பணிப்பாளர் ஜெனால்ட் அன்ரனி மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை மாணவர்களின் சிரமதானமும், சூழலைப்பாதுகாப்போம் மற்றும் நாட்டை வளர்ப்போம் எனும் தலைப்பில் வீதி நாடகமும் இடம்பெற்றது.

அத்துடன் மாணவர்களுக்கு சுகாதாரப் பழக்கவழக்கங்களும், உணவுப்பாதுகாப்பும் எனும் தலைப்பில் பிரதேச சுகாதாரப் பரிசோதகரினால் செயலமர்வு இடம்பெற்றதுடன் இலைக்கஞ்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் இடம்பெற்றது.

இச் செயற்றிட்டம் செட்டிகுளம் பிரதேச சபை , செட்டிகுளம் பிரதேச செயலகம், செட்டிகுளம் பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, செட்டிகுளம் பொலிஸ், இராணுவத்தினர், பெற்றோர், பழைய மாணவர் போன்றோர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா முஸ்ஸிம் மகாவித்தியாலயத்தில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!

நாடளாவீய ரீதியில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடசாலை மட்ட வேலைத்திட்டம் வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் இன்று (09.07.2025) காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களினால் பாடசாலையின் சுற்றுப்புறச்சூழல் துப்பரவு செய்யப்பட்டமையுடன் வவுனியா மாநகர சபையின் ஒத்துழைப்புடன் குப்பைகளும் அகற்றப்பட்டன.

இச் செயற்றிட்டத்தில் மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் அதிதியாக கலந்து கொண்டு பாடசாலை வளாகத்தில் ஞாபகார்த்த மரத்தினை நாட்டி வைத்தமையுடன் மாநகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு இச் செயற்றிட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

வவுனியா செட்டிகுளத்தில் நான்கு நாட்களாக உயிருக்கு போராடும் யானை : காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள்!!

வவுனியா செட்டிக்குளம் மயில்முட்டையிட்ட குளப்பகுதியில் நான்கு நாட்களாக உயிருக்கு போராடும் யானையினை காப்பாற்றும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த யானையின் கால் பகுதியில் வெடி பட்ட காயம் ஏற்பட்டுள்ளமையினால் யானையினால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு படுக்கையில் கிடந்தது.

யானை உணவின்றி எழும்பி நடக்க முடியாத நிலையில் அவதியுற்றமையினை அவதானித்த அயலவர்கள் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள் யானையினை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

யானைக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி தற்போது யானையின் நிலமை தேறிவருவதுடன் நாளையதினத்தினுள் யானை எழுந்து நடக்க கூடும் என தாம் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீர்த்தேக்கத்தில் விழுந்த மாணவனின் சடலம் மீட்பு!!

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது மாணவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை சிங்கமலை நீர்த்தேக்கத்தில் புகைப்படம் பிடிக்க சென்ற போதே தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த நாவலப்பிட்டி தொலஸ்பாகை பிரதேசத்தைச் சேர்ந்த பாண்டியன் தமிழ்மாறன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடுதல் பணியினை மேற்கொண்டனர்.

இதேவேளை, இராணுவம் மற்றும் இரங்கன கடற்படை முகாம் சுழியோடிகளின் உதவியுடன் இன்று புதன்கிழமை (09) தேடிய நிலையில் பிற்பகல் சடலம் 2 மணியளவில் சடலமாக மீட்டனர்.

உயிரிழந்த மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் பணி புரிவதுடன் அட்டன் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தக்கியிருந்து கல்விகற்று வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : இருவர் காயம்!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வேன் விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (08.07.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது வேனில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் புதன்கிழமை இன்று (09.07.2025) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராசா வின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார். இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 வருட காதல் இனித்தது கல்யாணம்னா கசக்குதோ எனக்கூறி காதலியை கொலை செய்த காதலன்!!

ஆந்திர மாநிலம், விஜய நகரம், கஜராயுனி வலசாவில் வசித்து வருபவர் சீனிவாஸ். இவர் குடும்பத்தினருடன் ஐதராபாத் புறநகர் பகுதியான ராமச்சந்திராபுரத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகள் 23 வயது ரம்யா .

இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். வேல் துருத்தி மன்னேப் பள்ளியில் வசித்து வருபவர் 25 வயது பிரவீன் குமார்.

பி.டெக் பட்டப்படிப்பு முடித்த இவர் அப்பகுதி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். அப்போது ரம்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டிற்கு சென்ற பிரவீன்குமார் தங்களின் காதல் விவகாரம் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

அதற்கு ரம்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மாப்பிள்ளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ரம்யாவின் வீட்டில் பெற்றோர் இல்லை என்பதை அறிந்த பிரவீன் குமார் அவரது வீட்டுக்கு சென்றார்.

அப்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என வற்புறுத்தியுள்ளார். ரம்யா படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியதும் திருமணம் சம்பந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பிரவீன் குமார் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ரம்யாவின் கழுத்தை அறுத்து தலையை துண்டிதுவிட்டார்.

இதில் ரம்யா ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பிரவீன் குமார் அதே கத்தியால் தனது கழுத்தை கொண்டார்.

அங்கிருந்தவர்கள் பிரவீன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மாணவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வருட காதல் இனித்தது. கல்யாணம் என்று வரும்போது கசந்ததா எனக் கூறி காதலன் இதுபோன்ற ஒரு கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீசார் முதல் கட்ட தகவலில் தெரிவித்துள்ளனர்.

இறந்து 20 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை!!

நடிகை ஹுமைரா அஸ்கர் அலி உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகையான ஹுமைரா அஸ்கர் அலி (Humaira Asghar Ali) பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார்.

கராச்சியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவரது நடமாட்டம் இல்லாததோடு, அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனையடுத்து, ஜூன் 8 ஆம் திகதி அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மாலை 3 மணியளவில், வீட்டிற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை தட்டியும் திறக்காத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

வீட்டின் உள்ளே முற்றிலும் அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது. அவர் இறந்து 20 நாட்கள் இருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பிரதே பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர், இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹுமைரா அஸ்கர் அலியின் மரணம், பாகிஸ்தான் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கார் – லொறி மோதி விபத்து : இரண்டு பேர் காயம்!!

பாதெனிய – அநுராதபுரம் வீதியில் கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (08.06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்து கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!!

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துஇந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ரத்னகார் மாவட்டத்தில் உள்ள பனுடா கிராமத்தில் போர் விமானம் விழுந்துள்ளது. விமானம் வழக்கமான பயிற்சியின் போது விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த ஆண்டு இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளான மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில், குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமானப்படை நிலையம் அருகே வழக்கமான பயிற்சியின போது போர் விமானம் விபத்துக்குள்ளானது.

அதில் இரண்டு விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார். மார்ச் மாதம் 7 ஆம் திகதி ஹரியானாவில் மற் றுமொரு போர் விமானம்விபத்துக்குள்ளானது, ஆனால் அந்த விபத்தில் விமானி உயிர் தப்பினார்.

அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம் : உயிர் தப்பிய 175 பயணிகள்!!

இந்திய நாட்டின் பீஹார் மாநிலம், பாட்னாவிலிருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

பாட்னாவிலிருந்து 175 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், விமானத்தின் மீது பறவை மோதியதையடுத்து, விமானத்தை விமானி பத்திரமாகத் தரையிறக்கியுள்ளார்.

இந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சரிசெய்ய முயற்சிகள் நடந்து வருவதாக பாட்னா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11 பேர் பலியானமைக்கு விராட் கோலியின் அவசரமும் காரணம்: விசாரணையில் வெளியான தகவல்!!

இந்திய பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவத்துடன் ஆர்சிபியின் வீரர் விராட் கோலியின் லண்டன் பயணமும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணமாக அவசரமாக இந்த நிகழ்வை நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி வழங்கவில்லை.

எனினும் விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும் என்பதன் காரணமாகவே, அவசர அவசரமாக வெற்றி நிகழ்வை நடத்த, கர்நாடக மாநில கிரிக்கெட் நிர்வாகத்துக்கு, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல்.,கிண்ணத்தை ரோய்ல் செலஞ்சர்ஸ் பெங்களூரு எனப்படும், ஆர்.சி.பி., அணி வென்றதை கொண்டாடும் வகையில், 2025 ஜூன் 4ம் திகதியன்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடத்தப்பட்டபோதே நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

 

யாழில் பாடசாலை வளாகத்தில் விசமிகளின் நாசகார வேலை!!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இனந்தெரியாத விசமிகளால் பாடசாலை வளாகத்தில் இருந்த திருநாவுக்கரசர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாயனார் குருபூஜை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றிருந்த நிலையில் இரவு மேற்படி சிலை உடைக்கப்பட்டிருப்பதாக பாடசாலை சமூகத்தினரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதே சிலை இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டு பாடசாலை நிர்வாகத்தினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவு, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் சென்று கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீடு மற்றும் சொத்துக்களைத் தாக்கி சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் இன்று மை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த வியடம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் வீடு மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்துள்ளதுடன் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கோடைக்கால சுற்றுலா சுற்றுலா பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!!

2025 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் பயணம் மேற்கொள்வதற்கு அதிகளவில் விரும்பப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

எமிரேட்ஸ் விமான நிறுவனம், தமது விமான பயணச்சீட்டு பதிவு தரவுகளைக் கொண்டு நடத்திய ஆய்வொன்றுக்கமைய இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த தரவுகளுக்கமைய, ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இலங்கை மீதான பயண ஆர்வம் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் வியட்நாம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதனைத் தொடர்ந்தே இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கையின் பசுமையான தேயிலைத் தோட்டங்கள், பாரம்பரிய தளங்கள் மற்றும் சாகச அனுபவங்கள் உலகளாவிய பயணிகளை ஈர்ப்பதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை நாயால் உயிர் பிழைத்த கிராமம் : நெகிழ்ச்சியில் கொண்டாடும் ஊர் மக்கள்!!

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 20ஆம் திகதி முதல் ஜூலை 6ஆம் திகதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது.

இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலும் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவு மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நிலச்சரிவிற்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்துள்ளது. நாயின் சத்தைதை கேட்டு கண் விழித்த வீட்டின் உரிமையாளர் வீட்டு சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார்.

உடனடியாக அவர் அந்த நள்ளிரவில் அக்கிராமத்தில் உள்ளவர்களை எழுப்பி எச்சரித்துள்ளார்.

இதனால் கிராமத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.

நாயின் சத்தத்தால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.