குளிர்பானம் அருந்திய இளைஞர் மூச்சுத்திணறி பலி : எச்சரிக்கை செய்தி!!

சென்னை..

விளையாடிவிட்டு நொறுக்குத் தீனியுடன், குளிர்பானம் அருந்தியதால் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (25). இவர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரி அருகே நண்பர்களுடன் இறகு பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது சோர்வடைந்து, அருகில் உள்ள கடையில் நொறுக்குத் தீனியுடன் குளிர்பானம் ஒன்றைக் குடித்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் பனையூரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றபோது மூச்சுத்திணறல் அதிகமானதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால், மூச்சுவிட மிகுந்த சிரமமடைந்ததால் அங்கிருந்து பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சதீஷ் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பரிசோதனை செய்தில் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக கானத்தூர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த சதீஷின் உடலைக் கைப்பற்றி போலிஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

குளிர்பானமே இளைஞரின் உயிரிப்பிற்குக் காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணத்தைக் கூற முடியும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமீபமாக, பிரபல குளிர்பான நிறுவனங்களின் ஸ்டிக்கர்களைப்போல் போலியாக அச்சிடப்பட்ட பாட்டில்களில் உள்ள குளிர்பானங்களை வாங்கிக் குடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

திருணமான மூன்றே மாதத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கள்ளக்குறிச்சி..

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜிக்கும், மேனகாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன், காதல் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இன்று விஜயராஜ்.

தனது காதல் மனைவி மேனாகா மீது சந்தேகப்பட்டு, தொலைபேசியில் யாரிடம் அதிக நேரம் பேசுகிறாய் என்று கூறி, வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பைப்பால் அடித்துள்ளார். இதில், மேனகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மணலூர்பேட்டை காவல் நிலையப் போலீசார் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயராஜியை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயராஜிக்கு ஏற்கனவே 2 மனைவி உள்ளனர்.

இவருடைய தொல்லை தாங்க முடியாமல், அவர்கள் இருவரும் பிரிந்து சென்று விட்டனர். இந்நிலையில், மேனகாவை மூன்றாவதாக திருமணம் செய்தார் விஜயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயராஜிக்கு ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் மனைவி திருமணம் நடைபெற்றது அவர் வேறு உடைய நபருடன் ஓடிவிட்டார். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.

அந்தப் பெண்ணை அடிக்கடி குடிபோதையில் பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்தப் பெண் இவருடைய வாழாமல் பிரிந்து சென்றார் அதன் பிறகு மூன்றாவது மனைவி மேகனா என்ற பெண் மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.

மேகனா மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு தொலைபேசியில் நீ யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டவு அந்தப் பெண்ணிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு குடிபோதையில் அந்தப் பெண்ணை அடித்து கொலை செய்தார் மனைவி உள்ளனர்.

திருமணமான 3வது நாளில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 3வது நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை ஆவடியை சேர்ந்தவர் உதயா (24). இவருக்கும் அனிதா (26) என்ற பெண்ணிற்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் அனிதாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால் உதயா மற்றும் அனிதா கடந்த 6-ந் திகதி சென்னை ராயபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் ஆவடியில் உள்ள உதயாவின் வீட்டில் மேல் தளத்தில் இருவரும் தனியாக குடிசை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே அனிதாவின் பெற்றோர் அவரை தங்களது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதற்கு உதயாவின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அனிதா குடிசை வீட்டுக் கூரையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து ஆவடி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 3 நாட்களில் புதுப்பெண் அனிதா தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் அச்சுவேலியில் எரிபொருளுக்காக காத்திருந்த பாரவூர்தியுடன் விபத்துக்கு உள்ளாகி முதியவர் உயிரிழப்பு!!

யாழ்..

யாழ்.அச்சுவேலி பகுதியில் எரிபொருளுக்காகக் காத்திருந்த பாரவூர்தியுடன் விபத்துக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரட்ணம் (வயது-72) என்ற முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்றையதினம் நண்பகல் அச்சுவேலி – தெல்லிப்பழை வீதியில் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காகச் சென்ற பாரவூர்தி வரிசையில் நின்று செல்லும் போது, முன்னால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரை மோதித்தள்ளியது.

அதன் போது, முதியவர் பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தி சாரதியைக் கைது செய்துள்ள அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அதேவேளை கடந்த வாரம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பயணி ஒருவர் பேருந்தின் கீழ் இறங்கி இருந்த வேளை, பேருந்தினை சாரதி வரிசையில் முன் நகர்த்திய போது, அதன் சக்கரத்தினுள் சிக்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவிற்கு எதிராக சூனியம் வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

கோட்டாபயவிற்கு எதிராக..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் கொழும்பு – காலி முகத்திடலில் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட அரசுக்கெதிரான போராட்டம் தற்போது வரை முடிவின்றி தொடர்ந்துவருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கோட்டாபய அரசு பதவி விலகவேண்டும் என கோரி சூனியம் வைக்கும் விதமாக சில செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!!

அகதிகளாக..

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரிலிருந்து இன்றும் படகுகள் மூலம் 19 பேர் தமிழகம் சென்றடைந்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 10 பேர் இரண்டு கை குழந்தைகளுடன் மன்னாரிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார்இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் மன்னாரிலிருந்து நேற்று இரவு யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சேர்ந்த 9 பேர் ஒரு படகில் மன்னாரிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்து இறங்கி பின்னர் அரசு பேருந்து மூலம் தானாக மண்டபம் அகதிகள் முகாமிற்குச் சென்றனர். இது குறித்துத் தகவலறிந்த மண்டபம் மெரைன் பொலிஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் 19 இலங்கைத் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதையடுத்து 39 இலங்கையர்கள் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர். கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கடல் வழியாகத் தனுஷ்கோடிக்குச் சென்று தஞ்சமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எரிபொருள் வாங்க வரிசையில் நின்ற மேலும் இருவர் உயிரிழந்தனர்!!

மேலும் இருவர் உயிரிழந்தனர்..

தங்கொடுவ மற்றும் வென்னபுவ ஆகிய பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற 47 மற்றும் 51 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பொது மகன் ஒருவர் விழுந்த நிலையில் தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார். இறந்தவர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநராவார்.

இதேவேளை, வென்னபுவ பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற 51 வயதுடைய மற்றொருவரும் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே இதற்கு முன்னதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இந்திய வம்சாவளி பெண் : விசாரணையில் வெளியான தகவல்!!

லண்டனிலுள்ள வீடு ஒன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இளம் பெண் ஒருவரும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இவர்களின் மரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இந்திய வம்சாவளியினர் என்றும் பெயர் ஷிவாங்கி (Shiwangi Bagoan (25) என்றும், குழந்தை அவரது மகள் என்றும், சிறுமியின் பெயர் Ziana Bagoan (2) என்றும் தெரியவந்தது.

மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அந்தப் பெண்ணும் அவரது மகளும் தங்கியிருந்த நிலையில், ஷிவாங்கியின் தாயாகிய Jassumatu,

தன் மகளிடமிருந்து பல நாட்களாக அழைப்பு எதுவும் வராததால் அவரைத் தேடிச் சென்ற நிலையில்,அவரது மகளும்,குழந்தையும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதன்போது, அவர்களது கைகளில் குளூக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஊசி பொருத்தப்பட்டிருந்திருக்கிறது. அவர்களுக்கு அருகில் ஷிவாங்கி தன் தாய்க்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில், அன்புள்ள அம்மா, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு நிறைய கஷ்டம் கொடுத்துவிட்டேன், என் மகளையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்,

அவளை சுயநலமாக உங்களுடன் விட்டுவிட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை.எங்களுக்கு நீங்கள் நிறைய உதவிகள் செய்திருக்கிறீர்கள், பதிலுக்கு நான் உங்களுக்கு மன அழுத்தத்தைத்தான் கொடுத்திருக்கிறேன் என எழுதப்பட்டிருந்தது.

அந்த மரணங்கள் குறித்து நீதிமன்ற அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில்,நேற்று விசாரணை அதிகாரி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில், ஷிவாங்கி செவிலியராக மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணர் ஒருவரின் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அதில், ஷிவாங்கி பணியில் செய்த தவறு காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், பின்னர் மீண்டும் 2020 ஜூலையில் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 11ஆம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்ற ஷிவாங்கி, மீண்டும் 4.20க்கு வீடு திரும்பியுள்ளார். அந்த காட்சிகள் சி.சி.ரி.வி கமெராவில் பதிவாகியுள்ளன.

அவர் மருத்துவமனைக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் மருந்து ஒன்றை எடுத்து வந்ததாக கருதப்படுகிறது. வீடு திரும்பிய ஷிவாங்கி, தான் மருத்துவமனையிலிருந்து எடுத்து வந்த அந்த மருந்தை தன் மகளுக்குச் செலுத்திவிட்டு, தானும் அதே மருந்தைச் செலுத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

எனவே, ஷிவாங்கி மருத்துவமனையிலிருந்து அலுவலர்களுக்குத் தெரியாமல் மருந்து ஒன்றை எடுத்து வந்து, அதை ஊசி மூலம் செலுத்தி தன் மகளை சட்ட விரோதமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக நீதிமன்ற விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஷிவாங்கி 2017ஆம் ஆண்டு மருந்து ஒன்றை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தற்போது அவர் தன்னையும் தன் மகளையும் கொல்ல பயன்படுத்திய அதே மருந்தை அப்போது திருடியதற்காகத்தான் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கனடாவில் இந்திய மாணவரொருவர் சுட்டுக்கொலை!!

கனடாவில்..

கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மேலாண்மைத்துறை பயின்று வந்த குறித்த மாணவர் கடந்த வியாழக்கிழமை ஷெர்போர்ன் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கனடாவிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொலைக்கான காரணம் தெரியவில்லை எனவும் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது உயிரிழந்த மாணவனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

போராட்டக் களத்தில் நோன்பு துறந்த முஸ்லிம் சகோதரர்கள்!!

போராட்டக் களத்தில்..

நாட்டில் தற்போது நெருக்கடி நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்றையதினம் கொழும்பு காலி முகத்திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த பாரிய போராட்டத்தின் போது, போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் சகோதரர்கள் போராட்டக்களத்தில் நோன்பு துறந்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

 

“எங்கள் வீட்டு இளவரசி” செல்ல மகளை ஹெலிகொப்டரில் அழைத்து வந்த தந்தை!!

பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக, மகாராஷ்டிராவில் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் (Shelgaon) பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் விஷால் ஜரேகரின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, Bhosari பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், தங்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே இல்லை என்றும், முதன்முறையாக பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து குழந்தையை போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு விஷால் ஜரேகர் அழைத்து வந்தார்.

இதுதொடர்பாக குழந்தையின் தந்தை விஷால் ஜரேகர் கூறும்போது, எங்கள் மொத்த குடும்பத்திலும் ஒரு பெண் குழந்தை கூட கிடையாது. அதனால், எங்கள் மகளை வீட்டிற்கு சிறப்பாக வரவேற்று வர வேண்டும் என நினைத்தோம்.

அதற்காக, ரூ.1 லட்சத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அதில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தோம் என்று அவர் கூறினார். ஹெலிகாப்டரில் தாய், தந்தையுடன் வந்து இறங்கிய குழந்தை ராஜலட்சுமியைக் காண கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

இந்தியாவில் இன்னமும் பல மாநிலங்களில் பெண் குழந்தையை சுமையாக நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வழக்கறிஞர் இவ்வாறு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

போராட்டக் களத்தில் பொலிஸாருக்கு ரோஜாப் பூ கொடுத்த இளம் யுவதி : கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார்!!

போராட்டக் களத்தில்..

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இளம் பெண் ஒருவர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு ரோஜா பூவொன்றைக் கொண்டு சென்று கொடுத்துள்ளார்.

மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி இன்று பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியொன்று இன்று பிற்பகல் களனியிலிருந்து நாடாளுமன்ற வளாகத்தைச் சென்றடைந்தது.

எனினும் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது இளம் பெண் ஒருவர் கையில் ரோஜாவுடன் பொலிஸாரை நோக்கி நடந்து சென்றார்.

அவர் குறித்த ரோஜாவை ஒரு பொலிஸ் அதிகாரியிடம் கொடுத்த நிலையில் பொலிஸ் அதிகாரி அதனை பெற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், அதன் பின்னர் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தனர்.

நேர்மையாக இருந்ததால் உயிரைவிட்ட திருமணமாகாத பெண்!!

இந்தியாவில்..

இந்தியாவில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்த காரணத்திற்காக மரணத்தை தழுவி கொண்டுள்ளார் ஒரு பெண். கேரளாவின் வயநாட்டில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சிந்து (42) என்ற பெண் கடந்த 9 ஆண்டுகளாக சீனியர் கிளர்க்காக வேலை பார்த்தார்.

மாற்றுத்திறனாளியான இவர் நேர்மையாக தனது கடமையை செய்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த சிந்து லஞ்சம் வாங்கவும் மறுத்துள்ளார்.

இதனால் சக ஊழியர்களுக்கு சிந்துவை பிடிக்காமல் போனது, மனதளவில் அவருக்கு டார்ச்சர் கொடுத்து அலுவலகத்தில் அவரை தனிமை படுத்தியுள்ளனர்.

இதையடுத்து தனது வேலை பறிபோய்விடுமோ என உறவினர்களிடம் சிந்து புலம்பி வந்தார். இந்நிலையில் தனது சகோதரர் வீட்டில் சிந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரின் இந்த முடிவுக்கு சக ஊழியர்கள் தான் காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் சிந்துவுக்கு அலுவலகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் வேறு காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் ஆர்.டி.ஓ கூறியுள்ளார். மேலும் இது குறித்து சிந்துவின் உறவினர்கள் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட 21 வயது இளம்பெண்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தனபால் – இந்திரா தம்பதிக்கு தேவா (25) என்ற மகனும், தேவதர்ஷினி (21) என்ற மகளும் இருந்தனர்.

பட்டதாரியான தேவதர்ஷினிக்கும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை மணப்பெண் வீட்டில் பரிசம் போடுவதற்கான நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பணிகளில் மணப்பெண் தேவதர்ஷினியின் வீட்டார் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் தேவதர்ஷினியின் தாய் இந்திரா அரிசி எடுப்பதற்காக வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். அப்போது தேவதர்ஷினி அங்கு தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து கத்தி கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேவதர்ஷினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தேவதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் தேவதர்ஷினி உடலை கைப்பற்றிவிட்டு அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமான 20 நாளில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை மனைவியின் பரிதாப நிலை!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதி செல்பி எடுக்கும் போது ஏரியில் மூழ்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த ரெகிலால் என்ற இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 14ஆம் திகதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் நேற்று கோழிக்கோட்டின் குட்டியடி பகுதி அருகே உள்ள ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஏரிக்கு முன்னால் நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்த போது திடீரென தண்ணீருக்குள் தவறி விழுந்தனர்.

மிக ஆழமான நீர் நிலை இருவரும் மூழ்கினர், அவர்களின் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக புதுமாப்பிள்ளை ரெகிலாலை காப்பாற்ற முடியவில்லை.

அவரின் மனைவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ரெகிலாலின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், திருமணத்திற்குப் பிந்தைய போட்டோ ஷூட் நிகழ்ச்சியின் போது இந்த துயர சம்பவம் நடந்ததா என்பதை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதை ஆய்வு செய்த பிறகே தீர்மானிக்க முடியும். புதுப்பெண் ஏரியில் இருந்து மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என கூறியுள்ளார்.

யாழில் படுகொலை செய்யப்பட்டு மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலம் மீட்பு!!

யாழில்..

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா வயது 42 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி காணாமல் போயுள்ளார் என உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், பொலிஸாருக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அரியாலை மணியந்தோட்டம் 11ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த வீடொன்றினை சுற்றி வளைத்து பொலிஸார் தேடுதல் நடத்தி இருந்தனர்.

அதன் போது , வீட்டு வளவினுள் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட இடத்தினை அகழ்ந்து சோதனை நடத்த நீதிமன்ற அனுமதியினை பெறுவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டனர்.

அத்துடன் வீட்டில் குடியிருந்த கணவன் , மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்களது உறவினர் முறையான இளைஞன் ஒருவர் என மூவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன் முன்னிலையில் அகழ்வு பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சுமார் 6 அடி ஆழமுள்ள கிடங்கில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலமும் மற்றுமொரு கிடங்கில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.இக் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.