இரு பேருந்துகள் மோதி விபத்து : அறுவர் படுகாயம்!!

விபத்து..

நமுனுகுல – பசறை பிரதான வீதியின் பத்தாம் கட்டைப் பகுதியில் இரு பேருந்துகள் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன. விபத்தில் பேருந்து சாரதி உட்பட அறுவர் காயங்களுடன் பசறை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பண்டாரவளையிலிருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்தும்,

பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பாடசாலை சேவை பேருந்தும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம் : பொலிஸார் விசாரணை!!

கைதி தப்பியோட்டம்..

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவர் இன்று அதிகாலை நேரத்தில் சிறைச்சாலையிலிருந்து தப்பித்து சென்றுள்ளதுடன் தப்பிச் சென்ற இக் கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதியால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாவிட்டால் நாட்டை கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்கு செல்லுங்கள் : வவுனியாவில் மகிந்த ஜெயசிங்க!!

ஜனாதிபதி தற்போதைய பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாவிட்டால் இந்த நாட்டை கொடுத்து விட்டு உங்கள் வாழ்விடமான அமெரிக்காவுக்கு செல்லுங்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

வவுனியா, முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (17.03) இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் வடமாகாணத்தில் வந்து நிற்கின்றேன். இங்கும் ஆசிரியர்களுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன. அது தொடர்பில் பல அதிபர், ஆசிரியர்கள் வந்து கலந்துரையாடினார்கள். அவர்களது பிரச்சனைகளுக்காக எமது தொழிற்சங்கம் குரல் கொடுக்கும்.

எரிபொருள் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரே பேசியிருந்தோம். அதற்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு சென்று வருவது தொடர்பில் பல சிரமங்கரைள எதிர்நோக்கியுள்ளனர். இன்று வரை அதற்கான தீர்வு எதுவும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் நகரப் பாடசாலைகளுக்கு மாணளவர்களின் வரவு குறைவாகவுள்ளது. இந்த வருடம் பாடசாலைகளின் வாயில்கள் திறக்கப்பட்டுள்ள போதும் பாடசாலைக்கு செல்வதற்கு பிள்ளைகளுக்கு வழியில்லாமால் உள்ளது.

நாட்டில் டொலரை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. வெளிநாட்டில் கடன் பெற்றுள்ளார்கள். பொருட்கள் பெற்றுள்ளார்கள். அதனால் எமது நாட்டில் டொலர் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

இந்த நாட்டில் தேவையான பல விடயங்களைச் செய்து வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்காது விட்டால் டொலர் பிரச்சனையை தீர்க்க முடியும்.

இந்த அரசாங்கத்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. நாட்டு பிரச்சனைகளை இந்த அரசாங்கத்தால் தீர்க்க முடியாது உள்ளது. அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியால் நாட்டை காப்பாற்ற முடியவில்லை. கொரோனாவால் தான் இந்த நாட்டில் பிரச்சனை என பொய் கூறுகிறார்கள்.

ஆசிய நாடுகளில் பங்களாதேஸ், இந்தியா போன்ற ஆசியா நாடுகள் எல்லாவற்றிலும் கொரோனா பிரச்சனை இருந்தது. அங்கு டொலரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள். எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் இயலாமையால் தான் இந்த நாட்டின் நிலைக்கு கொரானா என சாட்டுகின்றார்.

கொரானாவால் தான் இந்த நிலை என அவர் கூற முடியாது. நேற்று இரவு 11 நிமிடத்தில் அவர் கதைத்த விடயத்தில் இதை தான் சொல்லுகிறார். தற்போதைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண உங்களால் முடியாவிட்டால் இந்த நாட்டை கொடுத்து விட்டு உங்கள் வாழ்விடமான அமெரிக்காவுக்கு செல்லுங்கள. இந்த நாட்டை சிறப்பாக கொண்டு செல்ல ஆட்கள் உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

வித்தியாசமான சீர்வரிசை தட்டை தூக்கிவந்த நண்பர்கள் : நெகிழ்ந்துபோன மாப்பிள்ளை!!

விருதுநகர்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது எதிர்கோட்டை கிராமம். இங்கு வசித்துவரும் சுப்புராஜ் – முத்துலெட்சுமி தம்பதியின் மகனான நவநீதன் என்பவரின் திருமணத்தில் தான் இந்த வினோத சீர்வரிசை வைக்கப்பட்டிருக்கிறது.

தெர்மல் என்ஜீனியரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நவநீதன் என்பவருக்கும் இனாம் மீனாட்சிபுரத்தை சேர்த்த அனிதா என்பவருக்கும் நேற்று எதிர்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது, நவநீதனின் நண்பர்கள் கையில் சீர்வரிசை தட்டுகளுடன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்திருக்கின்றனர். இதனை அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்க, சீர்வரிசையாக எடுத்துவரப்பட்ட புத்தகங்களை மணமகனுக்கு வழங்கி இருக்கின்றனர் நண்பர்கள்.

நவநீதன் – அனிதா திருமணத்தன்று மணமகனின் நண்பர்கள் சுமார் 25,000 மதிப்புள்ள 200 க்கும் மேற்பட்ட புத்தகங்களை பரிசாக வழங்கி இருக்கிறார்கள். இதற்காக சீர்வரிசை தட்டில் புத்தகங்களை ஏந்தியப்படி ஊர்வலமாக நவநீதனின் நண்பர்கள் வந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக, இந்திய மரபுப்படி மணமகள் வீட்டார் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை மணமகனுக்கு சீர்வரிசையாக கொடுப்பார்கள். ஆனால், எதிர்கோட்டையில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை சீர்வரிசையாக கொடுத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நம்முடைய மனதையும் எண்ணத்தையும் மாற்றியமைக்கக்கூடிய வல்லமை வாய்ந்த புத்தகங்களை பரிசுப் பொருளாக வழங்குவதன் மூலம் கற்ற, மேம்பட்ட சமுதாயத்தினை படைத்திட முடியும் என்கின்றனர் நவநீதன் – அனிதா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்.

திருமணத்திற்கு புத்தகங்களை பரிசாக அளிக்கும் வழக்கம் சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவருகிறது. இவை பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை என்பதே பலரது கருத்தாகவும் இருக்கிறது.

தாய், மகள்கள், கட்டி வைத்த நாயும் கோர மரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கோவை..

கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்துவருபவர் விஜயலட்சுமி இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர்.

இவரது கணவர் ஜோதி லிங்கம். கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தியணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து கதவை உடைத்து தீயை அனைத்தனர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் விஜயலட்சுமி மற்றும் அவரது மகள்கள் மயங்கி இறந்து கிடந்துள்ளனர்.

இது குறித்து தீயணைப்புத்துறையினர் தெரிவிக்கையில், ஹாலில் இருந்த யூபிஎஸ் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதை அனைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்துள்ளனர்.

ஆனால் அதற்குள் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு சமையல் அறையில் இருந்த அஞ்சலி மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என இவ்வாறு கூறினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசிதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து தடய அறிவியல் துறையினரை வரவழைத்து ஆய்வு செய்துவருகின்றனர். இந்தவிபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திற்னல் ஏற்பட்டு பலியாகியுள்ளது. தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யூபிஎஸ் உட்பட அனைத்து ஈய-அமில பேட்டரிகளும் சார்ஜ் செய்யப்படும்போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை உருவாக்கும் என்கின்றனர் அறிவியல் அறிந்தவர்கள். பேட்டரிகள் மிக வேகமாக சார்ஜ் செய்யப்படும்போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களின் உற்பத்தி விகிதம் அதிகரித்துவிடும்.

அப்போது, ஹைட்ரஜன் வாயுக்களின் செறிவு 4 சதவீதம் வெடிக்கும் வரம்பிற்கு மேல் இருக்கும் பட்சத்தில் அருகில் ஏதாவது தீ பற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தால் பேட்டரிகள் வெடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கும் என்கின்றனர்.

பேட்டரிகள் வெடித்த பின்னர் அதில் இருந்து கசியும் ஹைட்ரஜன் கேஸ் மூச்சு திணறலை ஏற்படுத்தி மரண அபாயமும் உள்ளது. இதனால், பேட்டரிகளை அதி வேகமாகவோ ஹை ஓல்டேஜில் சார்ஜ் செய்வதையோ தவிர்க்கலாம் என்றும் தீ பற்றக்கூடிய இடத்திற்கு அருகாமையில் பேட்டரிகளை வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர்.

எனது மனைவி பெண்ணே அல்ல : நியாயம் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடிய கணவர்!!

இந்தியா..

தனது மனைவி பெண்ணே அல்ல என அவரது கணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. இந்த தம்பதிக்கு 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

பின்னர் சில நாட்கள் கழித்து மாதவிடாய் எனக் கூறி அவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால், மனைவியை இவர் நெருக்கும்போது எல்லாம் அவர் தவிர்த்தே வந்துள்ளார். இதனால் அவர் மீது கணவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது, அவருக்கு இம்பர்ஃபோரேட் ஹைமென்’ எனப்படும் மருத்துவ பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது யோனிப் பகுதியில் ஆண்குறி போன்று ஒரு சிறிய கட்டி இருந்துள்ளது.

இதை அறுவை சிகிச்சை செய்து செயற்கை பிறப்புறுப்பை உருவாக்கினாலும், அவர் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மனைவியை தாய் வீட்டிலேயே ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில்தான், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துள்ளாதாக கூறி அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரது மனைவிக்கு, நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

இவர் ஏற்கனவே மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா ஆபத்திலிருந்து தப்பிக்க இலங்கையில் தயாரிக்கப்பட்ட விசேட தொப்பி!!

விசேட தொப்பி..

இலங்கையில் கோவிட் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தி வைரஸைக் கொல்லக்கூடிய விசேட தொப்பி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விசேட இரசாயனங்கள் பயன்படுத்தி இந்த தொப்பி தயாரிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சனத் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இரசாயன எதிர்ப்புத் தொப்பியைப் பயன்படுத்தினால், தலை, கழுத்து மற்றும் நெற்றியில் தொற்று ஏற்படுவது தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் காற்றுப்பாதையில் நுழையும் அபாயத்தை இந்த தொப்பி குறைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியு்ளளார். கோவிட் மாத்திரமின்றி ஆபத்தை ஏற்படும் எந்த வகையான வைரஸாக இருந்தாலும் அதனை இந்த தொப்பி கட்டுப்படுத்திவிடும் என அவர் கூறியுள்ளார்.

இதனை அணிந்து அலுவலகத்திற்கு சென்று மேசை மீது வைத்து விட்டாலும் வைரஸ் நெருங்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இதனை சந்தைக்கு விநியோகிக்க மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் சனத் ஹெட்டிகே மேலும் தெரிவித்துள்ளார்.

சகோதர, சகோதரிகள் பசியாற பலாக்காய் பறிக்கும் சிறுவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

இரத்தினபுரி..

இரத்தினபுரி காவத்தை ஹெந்தகான பிரதேசத்தில் தனது ஆறு சகோதர, சகோதரிகளுக்காக தினமும் பலா மரத்தில் எறி பலாக்காய் பறிக்கும் 9 வயதான சகோதரன் பற்றி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த 9 வயது சிறுவன் பலா மரத்தில் ஏறி, பலாக்காயை பறித்து வந்து கொடுத்த பின்னர், அதில் தாய் உப்பிட்டு சமைத்து மூன்று வேளையும் பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுத்து வருகிறார்.

இந்த குடும்பத்தின் தந்தை இரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளைகள் தமது பாடசாலை கல்வியை இடையில் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது பற்றி கூறியுள்ள சசின் தினேஷ் என்ற அந்த சிறுவன்,

“சகோதர்களும், சகோதரிகளும் பசி என்று கூறும் போது நான் பலா மரத்தில் ஏறி பலாக்காயை பறித்து அம்மாவிடம் கொடுப்பேன், அம்மா அதனை அவித்து கொடுப்பார். அதையே நாங்கள் சாப்பிடுவோம்.

இறைச்சி, மீன் போன்றவற்றை உண்பதில்லை. எமக்கு அவற்றை சாப்பிட ஆசை, ஆனால், கொண்டு வந்து கொடுப்பதற்கு எவரும் இல்லை. நாங்கள் கிடைக்கும் பலாக்காயை சாப்பிட்டு விட்டு இருப்போம்”என தெரிவித்துள்ளார்.

மிகவும் வறிய நிலைமையில் வாழ்ந்து வரும் இந்த குடும்பத்திற்கு ஒரு வேளை உணவை தேடிக்கொள்வதிலும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றது.

இதன் காரணமாக இந்த சிறுவன் பலாக்காயை பறிந்து தமது சகோதர, சகோதரிகளின் பசியை போக்கி வருகிறார். மழைக் காலங்களில் வீட்டின் கூரையில் தண்ணீர் ஒழுகும் என்பதால், பலாக்காயை சமைப்பதும் சிரமமான காரியம்.

இந்த பிள்ளைகள் உணவை சாப்பிடும் நேரங்களை விட பட்டினியில் அதிகமான நேரம் இருக்கின்றனர். இந்த குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் மூன்று பெண் பிள்ளைகளும், மூன்று ஆண் பிள்ளைகளும் இருக்கின்றனர்.

இவர்களுக்கு வசிப்பதற்கு நிரந்தர வீடு இல்லை. தற்போது குடியிருக்கும் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை. இருக்க இடம் இல்லை என்பதால், ஒரு இடத்தில் வீடு ஒன்றை கட்டிக்கொண்டு வசித்து வருவதாக தாய் கூறியுள்ளார்.

இந்த இடத்திற்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெரும் பொருளாதார கஷ்டத்தை எதிர்நோக்கி வரும் இந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கு பாடசாலைக்கு செல்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தங்க நகைக்காக நடந்த பயங்கரம் : அடுத்தடுத்து நடந்த கொலைகள்!!

கொழும்பில்..

கொழும்பில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாஹேன பிரதேசத்திலுள்ளில் வீட்டில் மனைவியை கட்டி வைத்த கொள்ளையர்கள், கணவனை கொலை செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் 80 வயதுடையவராகும். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை கைது செய்வதற்காக மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று (16) காலை சீதுவ, முகலங்கமுவ பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் இரண்டு சிறுமிகளை காணவில்லை : பொலிஸார் தீவிர விசாரணை!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் நேற்று (16) மாலை கல்வி கற்பதற்காக சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுமாத்தளன் பகுதியினை சேர்ந்த 14 மற்றும் 15 அகவையுடைய இரு பாடசாலை சிறுமிகள் நேற்று மாலை வீட்டில் இருந்து அம்பலவன் பொக்கணைப்பகுதியில் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார்கள்.

ஆனால் குறித்த இரு சிறுமிகளும் மாலைநேர கல்விக்கும் செல்லவில்லை என தெரியவந்துள்ளதை தொடர்ந்து பெற்றோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அத்துடன், காணாமல் போன சிறுமிகள் தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்காத நிலையில் கிராமத்தவர்களும் சிறுமிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற மகளிர் தின விழாவும் புத்தக வெளியீடும்!!

மகளிர் தின விழாவும் புத்தக வெளியீடும்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் மகளிர் தின விழாவும் புத்தக வெளியீடும் மாவட்ட செயலக வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மாவட்டத்தில் தன்னப்பிக்கையால் தொழிலும் மக்கள் சேவைகளிலும் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் பல விடயங்களை வெளிக்கொணரும் ‘சாதனைக்காரிகைகள்’ புத்தக வெளியீட்டினை அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர வெளியீடு செய்ததுடன், விருந்தினர் உரை, அதிதிகள் உரை என்பனவற்றுடன் நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன், 2022 ஆம் ஆண்டிற்கான வர்த்தக கண்காட்சியும் சிறப்புற இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் ஊடாகவும் உள்ளூர் உற்பத்திகளையும் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கும் முகமாக குறித்த கண்காட்சி இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ. சரத்சந்திர தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உதவி அரசாங்க அதிபர் மகிந்தன் சபர்ஜா, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் லதா உதயமூர்த்தி,

தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர்களான எச்.எம்.மகிஸ் மற்றும் அசார்த் மற்றும் அரச, அரசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கண்காட்சியில் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றனர்.

வவுனியாவில் மின் இணைப்பு தொடர்பான 100 முறைப்பாடுகளுக்கு தீர்வு!!

மின் இணைப்பு 100 முறைப்பாடுகளுக்கு தீர்வு..

வவுனியாவில் மின் இணைப்பு தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்ற 100 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகார பணிப்பாளர் யசந்த ரதுவிதான தெரிவித்துள்ளார்.

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சேவையுடன் இணைந்து வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடமாடும் சேவையை மூன்று தினங்களுக்கு முன்னெடுத்திருந்தது. இது தொடர்பில் இன்று (17.03) கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் புதிய மின் இணைப்பு பெறுதல், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்தல், மின்மானி மாற்றுதல், மின் இணைப்பை இடமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவினால் பிரதேச செயலகங்கள் ஊடாக முறைப்பாடுகள் பெறப்பட்டிருந்தன.

இவை தொடர்பில் வவுனியா மாவட்டத்தில் இருந்து இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்கு தீர்வு காணும் முகமாக மின்சார சபையுடன் இணைந்து நடமாடும் சேவை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது காணி ஆவணம் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மின் இணைப்பு தொடர்பில் பிரச்சனைகளை எதிர்கொண்ட மக்களுக்கு மின்சார சபையின் ஊடாக தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறித்த நடமாடும் சேவையில் பலரும் கலந்து கொண்டு மின்சார சபையிடம் இருந்து தமக்கான தீர்வுகளையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகார பணிப்பாளர் யசந்த ரதுவிதான, பொதுச் சேவை ஆணைக்குழு உத்தியோகத்தர் ரஹான், வவுனியா மாவட்ட பிரதம மின் பொறியிலாளர் மைதிலி தயாபரன், மற்றும் மின்சார சபை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பரிதாபமாக பலி : பதறவைக்கும் சம்பவம்!!

மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம், வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம். இவர் தனது வீட்டில் நேற்று புதிதாக மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஹேமா அவரை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர் தாயைத் தொட்ட இரண்டு வயது குழந்தை மீதும் மின்சாரம் பாய்யந்ததால் இந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்துபார்த்தபோது மூன்று பேரும் கீழே விழுந்து அசைவற்று கிடந்துள்ளனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த போலிஸார் மூன்று பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. பிறகு அவர்களது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் ஆத்திரத்தால் நேர்ந்த விபரீதம் : மனைவி வைத்தியசாலையில் அனுமதி!!

ஆத்திரத்தால் நேர்ந்த விபரீதம்…

வவுனியாவில் ஆத்திரமடைந்த கணவரொருவர் மனைவியைத் தாக்கியதில் காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் தேநீர்க்கடை நடத்தி வரும் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கிப்பழகி வருவதாக மனைவிக்குக் கிடைத்த தகவலால் கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்திற்குள் முரண்பாடுகள் நிலவி வந்துள்ளது.

கணவன் குறித்த பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது இருவரையும் கையும் மெய்யுமாகப் பிடித்த மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் மேற்கொண்டுள்ளார்.

இதனால் கணவன் வீட்டிலிருந்து வெளியேறி தேநீர்க்கடையில் தஞ்சமடைந்துள்ளதுடன், வீட்டிற்குச் செல்வது இல்லை என தெரியவருகிறது. இந்த நிலையில் மனைவி, மூன்று பிள்ளைகளுடன் வசதியற்ற நிலையில் பொருளாதார ரீதியில் நலிவடைந்து கணவனின் உதவியின்றி வசித்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை சம்பவதினத்தன்று கணவன் குறித்த பெண்ணை இரகசிய இடத்தில் சந்தித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென்று வந்த மனைவி இங்கு எதற்காகச் சென்றீர்கள் எனக் கேட்டு தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கணவன் ஆத்திரமடைந்து வீட்டிற்குச் சென்று மனைவியுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

எனினும் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாத கணவன் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் மனைவியைத் தாக்கியதுடன் அங்கிருந்த விறகுக்கட்டை ஒன்றினால் தாக்கி மேலும் காயப்படுத்தியுள்ளார்.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவி அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  12 தையல் தலையில் போடப்பட்டு இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபோதும் பொலிஸார் இத்தாக்குதலை மேற்கொண்ட கணவனைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை எனவும்,

பொலிஸார் கணவனுக்குச் சார்பாக நடந்துகொள்வதாகவும், கணவனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இளம் தாய் : கைப்பட எழுதிய உருக்கமான கடிதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் எதிர்காலத்தை சந்திக்கும் தைரியம் இல்லை என கடிதம் எழுதிவிட்டு இளம்பெண்ணொருவர் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மேலநாங்கூர் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் கார்த்திக் (27). மராட்டிய மாநிலம் புனேயில் லொறி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவரும் பாரதி (21) என்ற பிஎஸ்சி பட்டதாரி பெண்ணும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது மகன் கவுசிக் (3), மகள் பவதாரணி (1). இவர்கள், கடந்த மூன்று மாதங்களாக சீர்காழி தென்பாதி என்எஸ்பி நகரில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கார்த்திக் சென்னை, புனே உள்ளிட்ட இடங்களுக்கு டிரைவர் வேலைக்கு சென்று விடுவதால் பாரதி குழந்தைகளோடு தனியாக வசித்து வந்தார்.

கார்த்திக் அதிக அளவில் கடன் வாங்கி இருப்பதாகவும், இதனால் அவருக்கும், பாரதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக பாரதி கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பாரதி தனது தாய் சித்ராவுக்கு போன் செய்து தானும், குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இதனால் பதறிப்போன சித்ரா, பாரதியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் பாரதி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் பேரக்குழந்தைகளை தேடிப்பார்த்தபோது வீட்டுக்குள் குழந்தைகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர். தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 சடலங்களையும் மீட்டனர்.

பாரதி தற்கொலைக்கு முன் எழுதியிருந்த கடிதத்தில், எங்க சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. எங்க அப்பா, அம்மாவை விட்டு வந்து ரொம்ப தப்பு பண்ணிட்டேன்.

என் புருஷனுக்கு கடன் வாங்கி, கடன் கொடுக்கத்தான் தெரியும். எங்களுக்கு இடம் வாங்கி வீடு கட்ட தெரியாது. எங்க எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரியல. அதனால எதையும் சந்திக்கும் தைரியம் இல்லை என எழுதியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் விவகாரம் : பிரபல பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்!!

மாத்தளையில்..

மாத்தளையில் பிரபல பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்கள் இருவர் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காதல் தொடர்பு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் குத்தியதாக கூறப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் இருவரது கழுத்து மற்றும் தலை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியுடனான காதல் தொடர்பு காரணமாக இந்த கத்திக்குத்து இடம்பெற்றுதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரான மாணவர் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.