நேற்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று (11.03.2022) முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, அண்மையிலேயே லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை அதிகரித்திருந்த நிலையில் தற்போது மீளவும் விலை அதிகரிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குலசேகரம் அருகே அயக்கோடு ஊரைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவர் அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் லிபின் ராஜா. இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த சூழலில், கடந்த 4-ம் தேதி இரவு கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு லிபின் ராஜா வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் லிபின் ராஜாவின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் லிபின் ராஜாவுக்கும், புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பழவூர் பகுதியில் லிபின் ராஜாவின் சடலம் சாலையோரமாக ஓடையில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அங்கிருந்த லிபின் ராஜாவின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், லிபின் ராஜா கொலை சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எபின் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதனிடையே போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நண்பர்களான எபின், ஸ்டீபன்ராஜ் மற்றும் லிபின் ராஜாவுக்கு இடையே அவ்வப்போது பிரச்னை எழுந்துள்ளது.
இப்படி உள்ள சூழலில், கடந்த 4-ம் தேதி இவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது லிபின் ராஜாவை அடித்து கொலை செய்து இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று சாலையோரம் புதைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. தற்போது பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் வைஷ்ணவி மாமியார் வீட்டில் தங்கி வருகிறார்.
இந் சூழலில் தனது மாமியாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. வைஷ்ணவி வீட்டில் இருக்கும்போதே அந்த நபர் மாமியாரைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மருமகள், இது குறித்து மாமியாரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நபர் மீண்டும் மாமியாரைப் பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த நபரை வாசலில் மறைத்த மருமகள் வைஷ்ணவி, அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வைஷ்ணவியின் முகத்தை பலமாக தாக்கியுள்ளார். இதில் வைஷ்ணவியின் கண் அருகே கடுமையான காயமும் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து உடனடியாக மருமகள் வைஷ்ணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி, கணவர் வேலைக்கு சென்றதும் மாமியார் தன்னை ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவார் என்றும், தண்ணீர் கேட்டால், டாய்லெட் தண்ணீரை குடித்துக்கொள் என கூறி விடுவார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் வைஷ்ணவிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து மாமியார் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் வெளியாகவில்லை. மாமியாரின் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மருமகள் தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மரியா. 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளார். நீட்டில் தேர்ச்சி பெற்று டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த மரியாவுக்கு, 2016-ம் ஆண்டு இடுக்கி மாவட்டம் தொடுபுழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இந்த சூழலில், கல்லூரியில் சேர்ந்த ஆறே மாதத்தில் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து மரியா கால்தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரின் இரண்டு கால்களும் உடைந்து, கழுத்து நரம்பு முறிந்தது. கேரளாவில் பல மருத்துவமனைகளில் சிசிக்சை பெற்றுள்ளார்.
ஆனால் எங்கும் பலனளிக்காத நிலையில், இறுதியாக வேலூர் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு சுயநினைவு திரும்பிய பிறகு, சக்கர நாற்காலிதான் வாழ்க்கை மரியாவுக்கு மாறியுள்ளது.
ஆனாலும் டாக்டராகும் கனவை மரியா கைவிடவில்லை. இவரது தன்னம்பிக்கை கண்டு மறு ஆண்டில் மருத்துவக் கல்வியை தொடர தொடுபுழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளித்தது.
படித்து முடித்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் மாணவியாக அதிக மதிப்பெண் பெற்று மரியா அசத்தினார். இப்போது எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகிறார் மரியா.
அங்கு சக்கரநாற்காலியில், கழுத்தில் ஸ்டெதஸ்கோப், கைகளில் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் என பம்பரமாய் மரியா சுறுசுறுப்பாக சுழன்று வருகிறார்.
இந்த நிலையை எட்டுவதற்கு பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என மரியாக உருக்கமாக தெரிவித்துள்ளார். கால்கள் செயலிழந்த போதிலும் தன்னம்பிக்கையுடன் போராடி டாக்டர் ஆன மரியாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது.
ராணு மோண்டல், கச்சா பதம் பாடகர் என பலர் குறித்த வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி, ஒரே நாளில் அவரை வேற லெவலில் பிரபலம் ஆக்கியிருந்தது. அந்த வகையில், சிலர் கேமராவில் சிக்கி, பிரபலம் ஆவதும் உண்டு.
உதாரணத்திற்கு, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த டீ வியாபாரியாக இருந்த இளைஞர் ஒருவரின் புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி அவரை அதிகம் புகழ் பெறச் செய்திருந்தது.
சமீபத்தில் கூட, கேரளாவைச் சேர்ந்த வயதான கூலித் தொழிலாளி ஒருவரை மொத்தமாக மாற்றி, கோட் சூட்டுடன் ஸ்டைலாக எடுத்த போட்டோஷூட்களும் அதிகம் இணையத்தில் லைக்குகளை அள்ளி இருந்தது. அந்த வகையில், தற்போது இளம்பெண் ஒருவரின் ‘Transformation’, பயங்கரமாக ஹிட்டடித்து வருகிறது.
கேரளாவில் அதிகம் ஆட்கள் கூடும் இடங்களில் இளம்பெண் ஒருவர் பலூன் விற்று வந்துள்ளார். இவரின் புகைப்படத்தினை அர்ஜுன் கிருஷ்ணன் என்ற புகைப்பட கலைஞர், அண்டலூர் காவு திருவிழாவின் போது கேரளாவில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.
மேலும், இந்த புகைப்படத்தினை அந்த இளம்பெண் மற்றும் அவரது தயாரிடமும் அர்ஜுன் காட்டியுள்ளார். இதனைக் கண்ட இருவரும் அதிகம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிஸ்பு என்ற அந்த பெண், ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கேரளாவில் பலூன் வியாபாரியாக இருந்து வருகிறார். இவரின் புகைப்படத்தை, அர்ஜுன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததும், இதற்கான வரவேற்பு, அமோகமாக இருந்தது. அவரது நண்பர் ஷ்ரேயாஸ் என்பவரும், கிஸ்புவை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதற்கும் வரவேற்பு பல மடங்கு அதிகமானதால், கிஸ்புவை வைத்து தனியாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்த திட்டம் போட்டுள்ளனர். அதன்படி, கிஸ்புவின் குடும்பத்தில் பேசி, இதற்கு சம்மதமும் வாங்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரம்யா என்ற ஸ்டைலிஸ்ட் ஒருவருடன் இணைந்து, மொத்தமாக கிஸ்புவை மாடர்னாக மாற்றியுள்ளனர். அது மட்டுமில்லாமல், கேரளா ஸ்டைலில் கசவு புடவை அணிந்து, ஒரு கேரளா பெண்ணாகவும் மாறியுள்ளார் கிஸ்பு.
இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு அவரை ஒரு மலையாளி பெண் போலவே உணர வைக்கிறது. பலூன் வியாபாரியாக இருந்த பெண்ணின் ‘Makeover’ புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள அப்பிள் பழங்களுக்கான இறக்குமதி வரி 200 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திராட்சைச் பழம் மற்றும் மாதுளை பழம் ஆகியவற்றின் 50 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் தோடம் பழம், நாராங்காய், உலர்ந்த திராட்சை மற்றும் பெயாஸ் பழம் உட்பட அனைத்து பழங்களுக்கான இறக்குமதி வரிகளும் அறவிடப்பட்டன.
இந்த வரி அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் அப்பில், திராட்சை பழம், மாதுளை பழம் ஆகியவற்றின் விலைகள் பல மடங்காக அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சில பழங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்கள் என 367 பொருட்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது.
நாட்டில் நாளைய தினமும் மின்துண்டிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேபோல P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச பங்குச்சந்தை மீதான முதலீடு குறைவடைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பும் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 750 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை, 24 கரட் தூய தங்கம் நேற்று பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டது.
கள்ளக்குறிச்சியின் மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26), புகைப்பட கலைஞரான இவர் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
இவருக்கு பேஸ்புக் மூலம் பூமிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, முதலில் இருவரும் நண்பர்களாக பழகினாலும் நாளடைவில் காதல் மலர்ந்தது. எனினும் ஒருதடவை கூட இருவரும் நேரில் சந்தித்தது இல்லை, முகத்தை பார்த்துக்கூட பேசியது இல்லை.
ஆனால் ஒருவர் மீது ஒருவர் ஆழமான காதலை கொண்டிருந்தனர், இந்நிலையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட பூமிகா திடீரென உயிரிழந்தார்.
பூமிகாவிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை என தவித்து வந்த மணிகண்டன், துடிதுடித்து போனார். தொடர்ந்து பூமிகாவின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தும் எந்தவொரு பலனும் இல்லை, இதற்கிடையே ஒருநாள் பூமிகாவின் பாட்டி செல்போனை எடுத்து பேசினார்.
அவரிடம் பூமிகா குறித்து மணிகண்டன் கேட்டார். அப்போது அவர், இதய நோய் பாதிப்பு காரணமாக பூமிகா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டவுடன், அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
இதன்படி விஷத்தை குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருகோணமலை – மூதூர் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (09.03.2022) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மூதூர் பிரதேசத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் முன் பக்க சில்லு பகுதி உடைந்ததால்,
கட்டுபாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் டிப்பர் வாகன சாரதியே பலத்த காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. நாட்டிலுள்ள தனியார் வங்கிகளின் இன்றைய நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாகவும் கொள்வனவு விலை 248.34 ரூபாவாகவும் பதிவு செய்துள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 344.72 ரூபாவாகும் கொள்வனவு விலை 325.48 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 289.93 ரூபாவாகும் கொள்வனவு விலை 272.47 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 283.26 ரூபாவாகவும் கொள்வனவு விலை 260.89 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
இலங்கையில் பணவீக்கம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கையின் பண பரிமாற்றத்தில் பவுண்ட், டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியாக இது உள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் டொலர் ஒன்றின் விற்பனை விலையை 230 ரூபாவாக பேணுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வன்னி இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் வவுனியாவில் மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த கஸ்டத்தில் மத்தியில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு 2 மில்லியன் ரூபாய் செலவில் வீடு நிர்மாணிக்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வெளிமாவட்டத்திலிருந்து வவுனியாவிற்கு இடம்பெயர்ந்து வந்து 15 வருடங்கள் கடந்து சென்றபோதிலும் நிரந்தர காணி மற்றும் வீடு இன்றி தாண்டிக்குளம் பகுதியில் வாடகை வீட்டில் சாமிகண்ணு சாந்தா என்ற பெண் கணவர் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.
கணவர் முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றுவதுடன் சாமிகண்ணு சாந்தா வன்னி பூட்சிட்டியில் பணியாற்றி வருகின்றார். எனினும் இவர்களின் வருமானம் அன்றாட செலவுக்கு மாத்திரமே பொதுமானதாக அமைந்திருந்ததுடன் நிரந்த காணி, வீடு வாங்க முடியவில்லை.
இவரின் வறுமை நிலமையினை அறிந்த வன்னி இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையக மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க உடனடியாக கிராம சேவையாளரின் உதவியுடன் இராசேந்திரகுளம் பகுதியில் காணியினை பெற்று அதனை சுத்தம் செய்து இரானுவத்தினரின் உதவியுடன் 2மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டினை நிர்மானிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளார்.
தற்போது அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதுடன் ஏனைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையுடன் வன்னி இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் வன்னி பிரதேசத்தில் இதுவரையில் 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வீடற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இன்று (10.03.2022) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், பாடசாலை மாணவர்வாகள், வாகன சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
ஏ-9 வீதி, மன்னார் வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அதிக குளிருடன் பனி மூட்டம் ஏற்படும் காலநிலை நுவரெலியாவில் நிலவும் நிலையில் தற்போது வவுனியாவிலும் உணரப்பட்டுள்ளது.
வவுனியாவில் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் குற்றச் செயல்களை தடுத்தல் குறித்து பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டும் விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் இந்நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (09.03) நடைபெற்றது.
இதன்போது உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு சிறுவர் உரிமைகள், தொலைபேசி பாவனையால் ஏற்படும் விபரீதங்கள், சாரதி அனுமதிப் பத்திரமின்றி மோட்டர் சைக்கிள் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள்,
போக்குவரத்து விதிமுறை, போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக விழிப்புணர்வு தொடர்பில் பொலிசாரால் மணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
நிகழ்வில் உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜகத்தாலா பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கீழத் தெருவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடந்தையோடு ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக 1098க்கு அழைப்பு வந்துள்ளது.
அதையடுத்து, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜானகி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால் தாய் பூபதிக்கும், கூனம்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாண்டிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தாயிடம் அச்சிறுமி கூறியுள்ளார். ஆனால் இதுபற்றி யாரிடமும் கூறக் கூடாது என்று அச்சிறுமியை தாய் கண்டித்து, கையால் அடித்து காயப்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் ஜானகி புகார் அளித்தார். அதையடுத்து, போக்சோ வழக்குப் பதிவு செய்து பாண்டி முருகன் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பூபதி ஆகியோரை போலிஸார் நேற்று கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர்கள் சண்முகம்-மாரியம்மாள். இந்த தம்பதியரின் மகள் மாரிச்செல்வி (வயது 19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்த பொன்ராஜ் (வயது 27) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.
பொன்ராஜ் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான நாளிலிருந்து மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து பொன்ராஜ், தனது மனைவியை கடந்த வாரம் அவரது தாயார் மாரியம்மாள் வீட்டில் விட்டுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் மாரியம்மாள், மருமகன் பொன்ராஜிக்கு போன் செய்து மகளை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால், உங்கள் மகளுடன் வாழ பிடிக்கவில்லை என பொன்ராஜ் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றிரவு பொன்ராஜ் தனது நண்பர்கள் இருவருடன் மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மனைவியை சராமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற அவரது மாமியாரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதில் மாரிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாரிசெல்வியின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த தாயார் மாரியம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாரிசெல்விக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் அவரது மரணம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் தலைமறைவாக உள்ள பொன்ராஜ் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.