மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகபிரபு – துர்காதேவி தம்பதி. இந்த புதிய தம்பதி, நேற்றைய தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து அறிந்த போலிஸார் அங்கு சென்று இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த தம்பதிகள் தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், லோகபிரபுவும், துர்காதேவியும் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இருவரும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்தான் இவர்கள் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காதல் ஜோடிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பான அறிவிப்பை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு,
காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும், P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை வழிமறித்து ரயர் எரித்து இளைஞர் போராட்டம் மேற்கொண்டதினையடுத்து அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் வருகைதந்துள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் தனியார் பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த,
தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துடன் விபத்துக்குள்ளான பேரூந்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
குறித்த விபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்தவர்களின் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் விபத்து இடம்பெற்ற பகுதியில் இரவு 8.00 மணியளவில்,
டயர்களை எரிந்து போராட்டம் மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் அவ்விடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வருகைதந்து நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவை சேர்ந்த ரேவதி (வயது 34) என்பவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் வைத்து பல் துலக்கி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரேவதி வழுக்கி கீழே விழுந்ததில் வாயின் பல் இடுக்குகளுக்கு இடையே டூத் பிரஷ் வசமாக சிக்கிக் கொண்டது.
இதனால் வாயைத் திறக்க முடியாமலும் மூட முடியாமலும் அலறிய ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அரசு தலைமை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நரேன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர்கள் ஆலோசனை செய்து ரேவதியின் கண்ணத்தின் வழியாக டூத் பிரஷை அகற்றலாம் என முடிவெடுத்தனர்.
அதன்படி ரேவதிக்கு வலி ஏற்படாமல் இருக்க மயக்க மருந்து செலுத்தி வாயின் பல் இடுக்குகளில் வசமாக சிக்கிக் கொண்டிருந்த டூத் பிரஷை முகத்தின் வெளிப்புறத்தின் காதில் கீழே துளையிட்டு கண்ணத்தின் வழியாக வெளியே வந்த டூத் பிரஷின் பாதியை வெட்டி எடுத்தனர்.
அதேபோல் வாயில் பல் இடுக்குகளின் மத்தியில் மிக ஆழமாக சிக்கிக்கொண்டிருந்த டூத் பிரஷின் பாதியை ஆப்ரேஷன் செய்து வாயிலிருந்து அகற்றினர். தற்போது ரேவதி மருத்துவமனையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகிறார்.
முகத்தின் வழியாக டூத் பிரஷை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேபோல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் நரேன் மற்றும் டாக்டர் வெங்கடேசன் ஆகியோர்களுக்கும் பாராட்டுகள் குவிகிறது.
தாய் தொலைபேசியை கொடுக்க மறுத்தமையினால், 19 வயதுடைய யுவதி ஒருவர் அறைக்குள் நஞ்சு அருந்திய நிலையில் தூங்கிக் கிடந்ததாக குறித்த யுவதியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் திருகோணமலை – மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில், வயலுக்கு செல்லும் போது தனக்கு கையடக்கத் தொலைபேசியை தந்துவிட்டு செல்லுமாறு தாயிடம் கூறியபோது தாய் தரமுடியாது,
என சொல்லிவிட்டு, கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வயலுக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பியபோது குறித்த யுவதி அறைக்குள் நஞ்சு அருந்திய நிலையில் தூங்கிக் கிடந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். குறித்த யுவதி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் பதற்றம் உலகளாவிய ரீதியில் பல்வேறு தாக்கங்களை செலுத்தி வருகின்றது. அந்த வகையில் உக்ரைன் நெருக்கடி,
தங்கத்தின் விலை உயர்வுக்கு பிரதான காரணியாக பார்க்கப்படுகின்றது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,970 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 2,000 டொலரை தாண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையிலும் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (06.03.2022) காலை 9 மணியளவில் தனியார் பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துடன் விபத்துக்குள்ளான பேரூந்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினர்.
இவ்விடயம் தொடர்பில் காணொளிகளை பதிவு செய்த வவுனியா மாவட்ட ஊடகவியலாளரின் புகைப்பட கருவியினை அங்கிருந்தவர்களில் ஒருவர் பறித்து சேதப்படுத்தியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்திருந்தார்.
ஊடகவியலாளரின் புகைப்பட கருவிக்கு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரிடம் வாக்குமூலத்தினை பெற்றதுடன் சேதமடைந்த புகைப்பட கருவியினை சான்றுப்படுத்தினர்.
மேலும் சந்தேகநபர் தொடர்பில் ஊடகவியலாளர் வழங்கிய தகவலுக்கினங்க அவரை கைது செய்வதற்குறிய நடவடிக்கையினை தாம் முன்னெடுத்து வருவதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்படாது அல்லது குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொதுமக்கள் மின்சாரத்தை தொடர்ந்தும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (06.03.2022) காலை 9.00 மணியளவில் பேரூந்து – மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கில் ஏற முற்பட்டுள்ளது. இதன் போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பேரூந்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டு மோட்டார் சைக்கிலில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிழந்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதில் பதட்ட நிலமை நிலவியதுடன் பூவரசங்குளம் பொலிஸார் நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இவ் விபத்தில் 35வயதுடைய தந்தை மற்றும் 17வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (06.03.2022) காலை பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேரூந்தின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து அப்பகுதியில் பதட்டநிலை நிலவிவருவதுடன் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக தகவலுக்கு எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள். விரைவில் முழுமையான தகவல் இணைக்கப்படும்.
நேற்று இரவு சுமார் 9 மணியளவில், வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளன. அப்போது சிவப்பு சிக்னல் விழவே, வாகனங்கள் நின்றது. அப்போது, வேகமாக வந்த கார் ஒன்றும் வந்து நின்றது.
அந்த காரில் இருந்து, அபயக்குரல் கேட்க ஆரம்பித்ததால், அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில், காரில் இருந்து இளம் காதல் ஜோடி ஒன்று வெளியே இறங்க முயற்சி செய்துள்ளது.
தொடர்ந்து, காரை சுற்றி மற்ற வாகன ஓட்டிகள் வந்து விட்டனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய இளம் ஜோடி, வேகமாக சிறிது தூரம் ஓடியதாக கூறப்படுகிறது.
மேலும், சிக்னல் அருகேயுள்ள ரோடில், ஓரமாக நின்ற படி, எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்றும் அவர்கள் கூச்சல் போட்டுள்ளனர்.
இதனால், மற்ற வாகனங்களில் வந்த சிலரும், அந்த இளம் ஜோடி அருகே சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் நாங்கள் இணை பிரியாத காதலர்கள் என்றும், எங்களை பெற்றோர்கள் பிரிக்க நினைக்கிறார்கள் என்றும் இளம் காதல் ஜோடி தெரிவித்தது.
எங்களை மிரட்டுகிறார்கள், எங்களுக்கு உதவுங்கள் என்றும் அவர்கள் சாலையோரம் இருந்து கொண்டு கதறி அழுதனர். கொஞ்ச நேரத்தில் அந்த இடமே பரபரப்பாக மாற ஆரம்பித்த நிலையில்,
அருகே இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், அங்கு வரவே அவரின் காலில் விழுந்து காதல் ஜோடி எங்களை காப்பாற்றுங்கள் என கெஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், இந்த சம்பவம் குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்து. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காதல் ஜோடியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த இளைஞர் கோவை மணியகாரம்பாளையம் பகுதியையும், இளம்பெண் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் இருவரின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், அதனை மீறி திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்களை சேர்த்து வைப்பதாக கூறி,
பெண்ணின் தந்தை காரில் அழைத்து சென்றதாகவும், ஆனால் கார் சென்று கொண்டிருந்த போது, தங்களை தேனிக்கு கடத்திச் செல்ல முயன்றதாகவும் காதலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தங்களை பிரித்து ஏதாவது செய்து விடுவார்கள் என்பதால் சுதாரித்துக் கொண்ட ஜோடி, பயத்தில், சிக்னலில் கார் நின்ற போது, தப்பிக்க முயன்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து, அவர்களின் பெற்றோர்களையும் காவல் நிலையம் அழைத்து, சமரச பேச்சு வார்த்தை நடத்த போலீசார் முற்பட்டதாக கூறப்படுகிறது.
வாகன நெரிசல் உள்ள பகுதியில், இளம் காதல் ஜோடிகள் காதலை சேர்த்து வைக்க வேண்டி, கதறி அழுத சம்பவம், பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை குனியமுத்துாரை சேர்ந்த 51 வயது நபர், ரியல் ஸ்டேட், ஆட்டோ கன்சல்டன்சி போன்ற வேலைகளை செய்கிறார். இவருக்கு, ‘பேஸ்புக்’கில் நண்பராகும்படி பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அந்த அழைப்பை தரகரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். ‘சன்ஷைன்’ என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணிடம், ‘வாட்ஸ்அப்’ மூலம் அடிக்கடி நட்பை வளர்த்தார் தரகர். இந்நிலையில் பிரிட்டன் பெண்மணி, ‘நம் நட்புக்கு அடையாளமாக உனக்கு 60 ஆயிரம் பவுண்ட் பிரிட்டிஷ் கரன்சியை பார்சலில் அனுப்பி வைக்கிறேன்’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.
’60 ஆயிரம் பவுண்ட் என்றால் எவ்வளவு’ என்று கூகுளில் தேடிப்பார்த்த தரகர், ‘இந்திய மதிப்பில் 61 லட்சம் ரூபாய்’ என்று தெரிந்ததும், மகிழ்ச்சியில் துள்ளினார்.
ஒரு சில நாட்களிலேயே டில்லி விமான நிலையத்தில் இருந்து, அதிகாரி பேசுவதாக கூறி, போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் பார்சல் பிரிவில் இருந்து பேசுகிறேன். உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது.
அதற்கான கட்டணம், வரித்தொகை, பிரிட்டீஷ் கரன்சியை இந்திய கரன்சியாக மாற்ற, பரிமாற்றச் செலவுத்தொகை தர வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அதன்படி அவர் கூறிய வங்கி கணக்கில், இந்தாண்டு ஜன. ,6ம் தேதி முதல் 25ம் தேதி வரை வெவ்வேறு தவணைகளில், 14 லட்சம் ரூபாயை செலுத்தியிருக்கிறார். அப்படியும் அவருக்கு பணம் கிடைப்பதாக இல்லை.
இதற்குள் பணம் வாங்கிய நபரோ, ‘கரன்சி பரிமாற்றத்துக்கு இன்னும் செலவு ஆகும். பணம் செலுத்த தயாராக இருங்கள்’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து உஷாரான அவர், விமான நிலைய அதிகாரியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
உடனே எதிர்தரப்பு நபர் ‘ஸ்விட்ச் ஆப்’ செய்து விட்டார். பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்து பேசிய பிரிட்டன் பெண்மணியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தரகர், கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ரஷ்ய – உக்ரைன் தாக்குதலில் உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ரஷ்ய படைகளால் தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 என்ற விமானம், உக்ரைனில் தயாரிக்கப்பட்டது. உக்ரைன் ஹொஸ்டமெல் விமான நிலையத்திலேயே இந்த விமானம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் ’அண்டனோவ் 225 மிரியா’ கடந்த 28 ஆம் திகதி ரஷ்ய படைகளின் தாக்குதலில் தகர்க்கப்பட்டது.
6 எஞ்சின்கள், 314 டன் எடைகொண்ட இந்த சரக்கு விமானம் கோவிட் பரவல் காலத்தில் உலகம் முழுவதும் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல பெருதவி செய்ததுடன், சரக்கு விமானம் ரஷ்ய தாக்குதலில் தற்போது பெருமளவு தகர்க்கப்பட்டுள்ளது.
விமானத்தை சீரமைக்க 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு செலவு ஏற்படலாம் என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் (07) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் நேற்றுமுன்தினம் இளம் குடும்பப்பெண் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தோணிக்கல் பகுதியில் திருமணமாகி இரண்டு மாதம் நிறைந்த கைக்குழந்தையுடன் வசித்து வந்த பெண்ணொருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவதினத்தன்று இரவு வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற பிறந்த தின மதுவிருந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தனது கணவருக்கு, குறித்த பெண் பல தடவைகள் அழைப்பை ஏற்படுத்தி வீட்டிற்கு வருமாறு அழைத்தபோதும் கணவன் வீட்டிற்கு வரவில்லை என தெரியவருகிறது.
மதுபோதைக்கு அடிமையாகிய கணவனின் நடவடிக்கையால் மனமுடைந்து குறித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
வவுனியா பறண்நட்டல் கிராமத்தில் பாரம்பரிய மற்றும் கிராம கைத்தொழில் கிராமங்கள் ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பனைசார் கைப்பணிப்பொருட்கள் நிலையம் திறந்து இன்று (05.03.2022) காலை 9.30 மணியளவில் வைக்கப்பட்டது.
தேசிய அருங்கலைகள் பேரவையின் நிதியுதவியில் புரனமைக்கப்பட்ட இவ் கட்டிடத்தின் பெயர்ப்பலகை மற்றும் கட்டிடத்தின் நாடாவினை பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட ஒருங்கினைப்பு குழு தலைவரின் இணைப்பு செயலாளர் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்தனர்.
அப்பகுதி கிராம அலுவலகர் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவரின் இணைப்பு செயலாளர் டினேஸ் , மாவட்ட பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம சேவையாளர், பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.