இலங்கையில் தினசரி 10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

மின்வெட்டு..

மழை பெய்தால் மாத்திரமே மின்வெட்டை தவிர்க்க முடியமெனவும், அவ்வாறு இல்லையெனில் மார்ச் மாதம் முதல் தினசரி 10 மணிநேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுமெனவும் இலங்கை மின்சார சபையினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நேற்று முதல் 5 மணித்தியாலங்களுக்கு மேலான மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் இந்த நிலைமை மோசமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 200 ரூபாயை தாண்டிய பெற்றோலின் விலை : திடீரென எரிபொருள் விலைகள் உயர்வு!!

எரிபொருள் விலைகள்..

நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல் லீட்டர் ஒன்றுக்கு 15 ரூபாவும், பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 20 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோல் 92-ஒக்டேனின் புதிய விலை 204 ரூபாவாக இருக்கும், டீசலின் புதிய விலை 139 ரூபாவாக இருக்கும்.

ஐஓசி நிறுவனம் இந்த மாதத்துக்குள் மேற்கொள்ளும் இரண்டாவது எரிபொருள் விலை திருத்தம் இதுவாகும். எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை தமது எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருக்கலைப்புக்கு மாத்திரை சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கள்ளக்குறிச்சி..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெங்களூரில் கூலி வேலை செய்துவரும் சின்னதம்பி அடிக்கடி சொந்த கிராமத்திற்க்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் செல்வி மூன்றாவது முறையாக கருவுற்றார்.

5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சூளாங்குறிச்சி மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை செய்தபோது குழந்தைக்கு இருதய குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு கருக்கலைப்பு செய்ய சென்றுள்ளனர். ஆனால், எங்குமே கருக்கலைப்பு செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சொந்த ஊரான கீழ்ப்பாடி கிராமத்தில் உள்ள நியு ரோஷிதா மெடிக்கல் நடத்தி வந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி செல்வி சாப்பிட்டு வந்துள்ளார். இதில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார்.

பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே செல்வியின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்புக்காக மெடிக்கலில் இருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்த 5 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதல் திருமணம் செய்த ஜோடி விரக்தியில் எடுத்த பரிதாப முடிவு!!

கர்நாடகா..

கர்நாடகாவில் காபிஹால் திருமணம் செய்த ஜோடி ஒன்று பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் இருக்கும் சிங்கமாரனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் 21 வயதான ராகேஷ். இவர் அதே கிராமத்தை சேர்ந்த 18 வயது அர்ச்சனா என்பவரை கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ராகேஷ் மற்றும் அர்ச்சனா இருவரின் காதல் விவகாரம் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இருவரையும் நேரில் அழைத்து எச்சரித்தும் இருக்கின்றனர்.

அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி தங்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என நினைத்து ராகேஷ் மற்றும் அர்ச்சனா கடந்த வருடம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

திரைப்படத்தில் வருவது போலவே ஒரு வருடம் கழித்து வீட்டுக்கு திரும்பினால் அவர்களை ஏற்று கொள்வார்கள் என நினைத்துள்ளனர். ஆனால் இது சினிமா இல்லையே. ஆகையால், ராகேஷ் மற்றும் அர்ச்சனா சொந்த கிராமத்திற்கு வந்த நிலையில் இருதரப்பு பெற்றோரும் காதல் ஜோடியை வீட்டுக்குள் சேர்க்கவில்லை.

இதனால் மனமுடைந்த காதல் ஜோடி சில நாட்கள் சோகத்துடனே காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் அர்ச்சனா மற்றும் ராகேஷ் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வு அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிளிகெரே காவல் துறையினர், காதல் ஜோடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு வாகனங்கள் மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து..

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு (24) கந்தளாய் நகரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் கந்தளாய் பேராற்றுவெளி பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 35 வயதுடைய இருவரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குருணாகல் பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு திருகோணமலைக்கு சென்ற லொறியொன்றே முச்சக்கரவண்டியொன்றை மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், லொறியின் சாரதியை தடுத்து வைத்து கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் பெண் ஒருவரின் கணக்கு இலக்கத்திற்கு வந்த 35 லட்சம் பணம் : தாயும் மகனும் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

நெகிழ்ச்சியான செயல்..

இலங்கையில் பெண் ஒருவரின் நேர்மையான செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக 35 லட்சம் ரூபாய் பணம் வைப்பில் இடப்பட்டுள்ளது. எனினும் அதனை உரிய தரப்பிடம் குறித்த பெண் கையளித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாத்தறை வங்கி கிளையில் இருந்து பெண் ஒருவரின் வங்கி கணக்கில் 35 லட்சத்து 91ஆயிரம் ரூபாயம் பணம் தவறாக வைப்பிடப்பட்டுள்ளது. பணம் வந்தவுடன் குறுந்தகவல் ஒன்று அந்த பெண்ணுக்கு கிடைத்துள்ளது. மாலை நேரத்தில் அந்த குறுந்தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த நாள் காலை தனது மகனுடன் உரிய வங்கிக்கு சென்று அந்த பணத்தை மீள எடுத்து தவறாக வைப்பிட்ட நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பான தகவலை ஆதாரத்துடன் மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பணம் எங்களுக்கு தேவையில்லை. மற்றவர்களின் பணத்தில் மகிழ்ச்சியாக வாழ நினைப்பது மிகப்பெரிய தவறாகும். இந்த பணத்தால் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மக்களுக்கும் சிக்கல் ஏற்படும்.

இதனால் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்பாட்டுக்கு தாய் மற்றும் மகனுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்ய மோதலில் எதிரொலி : எரிபொருள், தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

எரிபொருள், தங்கத்தின் விலை..

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உலக சந்தையில் பாரிய மாற்றங்கள் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பல நாடுகளில் பங்கு பரிவர்த்தனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன், தங்கம் மற்றும் எரிபொருளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை தற்போது 105.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் WTI எண்ணெய் ஒரு பீப்பாய் 100.54 டொலராக உயர்ந்துள்ளது.

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகிலேயே இதுவே அதிகபட்ச எண்ணெய் விலையாகும். இதற்கிடையில், ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 131,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 19,800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை மூன்றாம் யுத்தத்திற்கான ஆரம்பம் என வர்ணிக்கப்படும் ரஷ்ய – உக்ரேன் மோதலை அடுத்து உலக பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் என உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன எச்சரித்துள்ளன.

வார இறுதி நாட்களில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வெளியானது!!

மின்வெட்டு..

வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பகல் நேர மின்வெட்டு 3 மணி நேரமாக சனிக்கிழமை 26 ஆம் திகதி அமையும் எனவும் அது குழுக்கள் A, B, C ஆகியவற்றின் கீழ் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகல் நேர மின்வெட்டு 2 1/2 மணி நேரமாக சனிக்கிழமை 26 ஆம் திகதி இருக்கும் எனவும் மற்ற அனைத்து குழுக்களும் இதில் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை (27) பகலில் 2 1/2 மணிநேரம் A,B,C குழுக்களைத் தவிர வேறு எந்த மின் தடையும் இருக்காது எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வார இறுதியில் மின்தடை தொடர்பாக வெளியான அறிவித்தல்!!

மின்தடை..

இவ்வார இறுதியில், இரவு வேளைகளில் மின்வெட்டை தவிர்க்குமாறு அல்லது குறைந்தபட்ச மின்வெட்டையேனும் விதிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் அண்மைய மின்வெட்டுகளின் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இதன்காரணமாக,

இவ்வார இறுதியில் மின்வெட்டை தவிர்க்குமாறு  மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), NVQ 4, NVQ 3 உட்பட அனைத்து கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கற்கை நெறிக்கான முடிவுத் திகதி எதிர்வரும் 28 ஆம் திகதி என்பதனால் ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும்,

தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கற்கை நெறியின் போது மாணவர்களுக்கு இலவசக் கற்கைநெறி, மாணவர் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, போக்குவரத்துப் பயணச்சீட்டு, தொழில்வழிகாட்டல் சேவை கற்கைநெறியின் பின்னர் மாணவர்களுக்கு 06 மாத கால தொழிற்பயிற்சி,

உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, கடன் பெற்றுக் கொள்ளும் வசதி என்பனவும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

6 மாதம் அல்லது 01 வருட பயிற்சிநெறிகள்
வயதெல்லை 17 தொடக்கம் 29 வரை. கீழுள்ள பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பொருத்தமான மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளுங்கள். mis.dtet.gov.lk எனும் இணைய வழி ஊடாகவும் விண்ணப்பிக்கலாம்

மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.

போலீஸ் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு : போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

உத்தரபிரதேசம்..

உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சரோஜ். இவரது கணவன் தர்மேந்தர். இவர் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ளார்.

இந்த சூழலில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மகன் நேற்றிரவு டியூசன் சென்றிருந்தபோது தர்மேந்தர்-சரோஜ் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில்,

வீட்டில் இருந்த கட்டையால் மனைவி சரோஜை தர்மேந்தர் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து தர்மேந்தரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். டியூசன் சென்ற மகன் வீட்டின் கதவை தட்டியபோதும் பெற்றோர் திறக்காததால் அருகில் உள்ள உறவினர் வீட்டில் இரவு தங்கியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை வீட்டிற்கு சென்று மீண்டும் கதவை தட்டியுள்ளான். அப்போதும் கதவை பெற்றோர் திறக்காததால் வீட்டுக்கு வெளியே நின்று அழுதுள்ளான்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சரோஜ் ரத்த வெள்ளத்திலும், தர்மேந்தரன் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆபாசப் படம் பார்த்து 14 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன்!!

14 வயது சிறுமியை ஏழு மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நவகமுவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த மாணவிக்கு இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் இருந்து இணையத்தில் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, முல்லேரியா வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்று முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும், இதற்கு காரணமான மாணவனும் ஒரே பாடசாலையில் 10ஆம் மற்றும் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும், நவகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.

சந்தேகத்திற்குரிய மாணவனின் பெற்றோர்கள் சில மாதங்களுக்கு முன் மாணவனின் கல்வி நடவடிக்கைகளுக்காக 27,000 கொடுத்து கையடக்க தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய மாணவனிடம் நடத்திய விசாரணையில், அந்த தொலைபேசியில் இருந்து தான் இணையத்தை பிரவேசித்து ஆபாச காணொளிகளை பார்வையிட்டதாகவும்,

குறித்த மாணவியிடம் அவ்வாறான முறையில் நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இருவருக்குமே தாங்கள் செய்த செயலின் தீவிரம் தெரியவில்லை என்பது விசாரணைகளின் போது தெரியவந்ததாக சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமியும் மாணவனும் இவ்வாறு நடந்து கொண்ட போதிலும், இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக தெரியவரவில்லை என விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் உள்ள குழந்தை நன்றாக உள்ளது எனமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயது மாணவன் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வாய் பேச முடியாத இருவர் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

தெலுங்கானா..

தெலுங்கானாவில் உள்ள ஜகிதியா மாவட்டத்தின் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்த அத்ரம் லதா என்கிற ஜோதி. ஆந்திரப்பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண்.

இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி பழகி வந்துள்ளனர். இதனை அடுத்து இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருந்ததால் அது காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

வாய்பேச முடியாத இரு மாற்றுத்திறனாளிகளிடையே உருவான அன்பிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தது. இதனை அடுத்து அத்ரம் லதா-அருண் திருமணத்தை நடத்த ஜாகிடியவைச் சேர்ந்த முகமது பாபுஜான், ரியாஸ் மற்றும் கசரபு ரமேஷ் ஆகிய சமூக சேவகர்கள் முன்வந்தனர்.

திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தனர். பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும் இளம் தம்பதி புதிதாக மண வாழ்க்கையை ஆரம்பிக்க தேவையான பொருட்களையும் வழங்கினர்.

ஆகியோரது இதுகுறித்து தெரிவித்த சமூக சேவைக்குழு, ‘கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு நாங்கள் உதவிகள் செய்தோம். இப்படியொரு ஜோடிக்கு உதவியதை நாங்கள் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறோம்.

ஒருவரையொருவர் உளமார காதலிக்கும் இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்து, அவர்கள் குடும்பம் நடத்த தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கியுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் சிறப்பாகத் தொடர்புகொள்வதற்காக, டெல்லியில் உள்ள இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2018-ல் 3000 ISL சொற்களைக் கொண்ட ISL அகராதியின் முதல் பதிப்பை உருவாக்கியது. 2019-ல் 6000 சொற்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வடமாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நடமாடும் சேவை!!

நடமாடும் சேவை..

வட மாகாண ஆளுனரின் திட்டமிடலுக்கு அமைய வடமாகாண நடமாடும் சேவை ஒன்று வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களுக்காக இடம்பெற்றது.

வவுனியா காமினி மாகாவித்தியாலயத்தில் குறித்த நடமாடும் சேவை இன்று (24.02) இடம்பெற்றது. இதில் வடமாகாணத்திற்குட்பட்ட காணித் திணைக்களம், போக்குவரத்து திணைக்களம்,

விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு, ஆட்பதிவு திணைக்களம், விவசாய அமைச்சு, சுகாதார திணைக்களம், உள்ளூராட்சி அமைச்சு, நீர்ப்பாசன திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம்,

பிறப்பு – இறப்பு – விவாகப் பதிவு திணைக்களம், கால்நடை உற்பத்தி, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உள்ளிட்ட பல திணைக்களுங்களும், அமைச்சுக்களும் இந்த நடமாடும் சேவையில் பங்கேற்றன.

வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா அவர்களின் வழிப்படுத்தலில் நடைபெற்ற இவ் நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் பலரும் கலந்து கொண்டு நீண்டகாலமாக தீர்க்கப்படாது இருந்த பல பிரச்சனைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்காக குரல் கொடுத்த பெண் : வைரலாகும் வீடியோ பதிவு!!

குறிப்பாக 27 –33 வயது நிரம்பிய இளைஞர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் புலம்புவது இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதே.

“சரிப்பா நல்லா படிச்ச நல்ல வேலைக்குப் போன, ஆனா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கியே தம்பி, சீக்கிரம் ஒரு நல்ல சேதி சொல்லு” என்று ஊரில் உள்ள பெரிவர் முதல் சிறுவர்கள் வரை ஒரு இளைஞரின் மனதை துளைக்கும் கேள்வி.

இன்றும் நம்ம ஊரு பக்கம் போனா போதும் “எப்ப கல்யாண பண்ணி கறிச்சோறு போடப்போற, உன் அம்மா, அப்பா பாவம் இல்லையா” ஆறுதலாக அட்வைஸ் செய்வது வழக்கமாகிவிட்டது.

சமீப காலமாக singles, மொரட்டு singles என்ற அடைமொழிகள் கொண்டு கல்யாணம் ஆகாத இளைஞர்கள் விளையாட்டாகப் பதிவிடும் பதிவுகள் மிக அதிகமாகவே பார்க்க முடிகிறது.

இந்த இளைஞர்கள் அவர்களது வாழ்க்கையை வெற்றியாக வாழத்தெரியாத தோல்வியாளர்களைப் போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

எத்தனை கல்யாணமாலை நிகழ்ச்சிகள் வந்தாலும், எத்தனை இணையதளப் பதிவேடுகள் வந்தாலும் இன்றளவும் திருமணம் என்பது போட்டியாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு இளைஞன் எங்கே தவறான வழியில் சென்றுவிடுவானோ என்ற அஞ்சி, கால் கட்டு போட்டால் சரி ஆகிவிடும் என்று திருமணம் செய்து வைத்தார்கள்.

ஆனால் இன்றைய நிலை ஆண்களுக்கு மிக மோசமான சூழலாக அமைந்துள்ளது. இப்போது, மாப்பிள்ளை வீட்டார் என்ற கர்வமெல்லாம் மலையேறிவிட்டது. பெண் வீட்டாரின் டிமாண்ட் அதிக எதிர்பார்ப்பா இருக்கு.

நல்ல பையனா என்ற ஒற்றைக் கேள்வியைத் தாண்டி இன்று பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். வெளிநாடு செல்வாரா, தனிக்குடித்தனமா, கூட்டு குடும்பமா,

வீடு கட்டிட்டாரா, சம்பளம் எவ்வளவு, எங்கே வேலை, நல்ல கம்பெனியா என்றெல்லாம் பல்வேறு கேள்விகள். பரீட்சையைவிட இதற்கு விடை காண்பது இக்கால ஆண் பிள்ளைகளுக்கு ஒரு சவால்தான்.

அதுவும் வீட்டிற்கு தலப்பிள்ளையாக பிறந்து தங்கைகளை கரைசேர்த்த பின்பு வீடு கட்டி முடித்து அவன் ஒரு பெண்ணை பார்க்க சென்றால் அவனுக்கு 30 வயதை கடந்திருக்கும்.

30 வயதில் பல கேள்விகள் மாப்பிள்ளை சொட்டை, முடி நரைச்சிருக்கு, சம்பளம் கட்டுப்படி ஆகாது இப்படி பல வீட்டில் இருக்கும் ஏழ்மையை மாற்ற போராடும் ஒவ்வொரு இளைஞருக்கும் கல்யாணம் என்பது கனவாகத்தான் இருக்கிறது. ஆண்கள் கல்யாணம் ஆகாமால் வெட்டியாக சுத்துவதற்கு காரணத்தை தேடுகின்றனர்.

ஆண்களுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. இப்போது வீட்டில் ஒரு பெண் இருப்பார்கள். சாதிக்குள்ளே திருமணம், காதல் திருமணத்திற்கு தடை, ஜாதகம் பார்த்து திருமணம் என்ற தடைகளை தாண்டி ஒரு ஆணும், பெண்ணும் திருமண வாழ்க்கையை தொடங்க வேண்டியுள்ளது.

அதில் பெற்றோருக்கும் பிடித்திருக்க வேண்டும். காதலுக்கு பெற்றோர் சம்மதம் கிடைப்பது அரிது தான். இந்த தடைகல் உடைபடும் வரை ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் பிடிித்த வாழ்க்கையை வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில், யார் என்று தெரியாத பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் ஆண்களுக்கு ஏன் கல்யாணம் ஆகலை, ஆண்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், இந்த வீடியோ வந்து கல்யாண வயதில் இருப்பாங்கல்ல பொண்ணுங்க அவங்களுக்கு, பெண் பாக்க வந்தா பையன் சொட்டை, அங்கிள் மாதிரி இருக்கான், தயவு செய்து இப்படி மட்டும் சொல்லாதீங்க” என்று கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாளை ஐந்து மணி நேர மின்தடை : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!!

மின்தடை..

நாட்டில் நாளைய தினமும் சுழற்சி முறையிலான மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

நாளையதினம் A,B,C ஆகிய பிரிவுகளில் 4.40 மணிநேர மின்வெட்டும், ஏனைய பிரிவுகளுக்கு 5.15 மணிநேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

இலங்கை முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக 4 மணிநேரத்திக்கும் அதிகமான மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றநிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.