இலங்கை செய்திகள்

சிவனொளிபாத மலைப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக அறிவிக்க தீர்மானம்!!

சிவனொளிபாத மலைப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதேசத்தில் சிவனொளிபாத மலை அமைந்துள்ளது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரையில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள்...

இலங்கை யானைக் குட்டியின் விலை 4 கோடி!!

இலங்கைக் காடுகளிலிருந்து யானைக்குட்டிகள் கடத்தப்படுகின்ற பல சம்பவங்கள் அண்மைக் காலங்களில் நடந்துள்ளன. கடந்த காலங்களில் 65 யானைக்குட்டிகள் வரை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தக் கடத்தல்களின் பின்னணியில்...

ஐநா பிரேரணை இலங்கைக்கு எந்த வகையிலும் உதவாது : ஜப்பான்!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான யுத்தக்குற்ற விசாரணைக்கான பிரேரணை இலங்கைக்கு எந்த வகையிலும் உதவாது என ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஜப்பானிய...

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இனந்தெரியாதவர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் இன்று நண்பகல் 11.15...

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பில் இருந்து பளை வரையும், பளையில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. பளையில் இருந்து காங்கேசன்துறை...

கிளிநொச்சியில் ஐவர் கைது!!

கிளிநொச்சி - கல்மடுகுளம் பகுதி காட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டிக்கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களால் வெட்டப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் மரம் வெட்டும் உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன....

யாழ். மானிப்பாயில் 5வது தடவையாக வெசாக் வலயம்!!

யாழ். மானிப்பாய் பிரதேசத்தில் 5வது தடவையாக இம்முறையும் வெசாக் வலயம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. “யாப்பா பட்டுனய் தஹம் அமாவய்” என்னும் தொனிப்பொருளில் மே 14ம் திகதி முதல் 16ம் திகதி வரையில் காட்சிக்கு வைக்கப்படும்...

புகைத்தல் மற்றும் புகையிலை பயன்பாடுகளால் நாளொன்றுக்கு 55 இலங்கையர்கள் உயிரிழப்பு!!

இலங்கையில் புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக மஹரகம புற்று நோய் வைத்தியசாலை வைத்தியர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையின் மொத்த சனத்தொகையில்...

ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை!!

கம்பஹா ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 26 வயதான குறித்த இளைஞர் நேற்று இரவு 9.00 மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவர் யக்கல...

தமிழகத்தில் இலங்கை அகதிகள் கைவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!!

தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் கைவிடப்பட்டிருப்பதாக தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலை கொண்ட காலம் முதல் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து...

ஹட்டனில் 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

ஹட்டன் குயில்வத்த தோட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 07.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர். புஸ்பநாதன் சாரதா என்ற சிறுமியே...

பொல்கஹாவெல பிரதேசத்தில் புகையிரத சாரதி மீது பயணிகள் தாக்குதல்!!

பொல்கஹாவெல பிரதேசத்தில் புகையிரத சாரதி ஒருவர் மீது பயணிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். மஹாவ கொழும்பு 857ம் இலக்க புகையிரத சாரதி மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக இடம்பெற்ற புகையிரத விபத்துக்கள்...

ஏழு வயது சிறுவன் துஷ்பிரயோகம் : பொலிஸாருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!

ஏழு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக, பொலிஸார் முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் அலுத்கம பொலிஸார்...

வரி எய்ப்பு வழக்கில் முன்னாள் துணை ஆணையருக்கு 1198 கோடி அபராதம், 102 ஆண்டுகள் சிறை!!

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் முன்னாள் துணை ஆணையர் ஜி.எஸ் ஜயதிலக்கவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று 102 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வரி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளியாக இனங்காணப்பட்ட பின்னரே...

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை இல்லை : ஜனாதிபதி!!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக இணையத்தளத்தில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி, பேஸ்புக்கில் தனக்கு...

இறந்த குழந்தை 6 நாட்களின் பின் உயிர்பிழைத்த அதிசயம்!!

இறந்துபோனதாக கூறப்பட்ட குழந்தை 6 நாட்களின் பின்னர் உயிர் பிழைத்த சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளது. குருநாகல் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக கடந்த 26 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட சாந்தினி ஜெயதிலக்க என்ற தாய் 26 வாரங்கள்...