வவுனியா செய்திகள்

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!!

வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 28.06.2018 நண்பகல் 12 மணிக்கு கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது. நடைபெறவிருக்கும் பழைய மாணவர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகம்...

வவுனியாவில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு!!

வவுனியாவில் புலைமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் ஐந்து மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு இன்று (23.06) குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இவ் இலவச கருத்தரங்கானது மக்கள்...

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவின் பாதுகாப்பு கருதி நகரசபையை பொறுப்பேற்குமாறு வேண்டுகோள்!!

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று முன்தினம் மாலை இளைஞர்கள் சிலர் மதுபோதையில் அங்கு சென்று பணியாற்றிய ஊழியருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறுவர்களை அழைத்துச் செல்வதற்கு அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் நகரசபையின்...

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருட்டு!!

வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் நேற்றைய தினம் (22.06) இரவுவேளை இனம்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து விசாரணைகளை மேற்கொண்டதில் திருடப்பட்ட உண்டியல்...

வவுனியாவில் டெங்கு நுளம்பின் பெருக்கம் தீவிரம்!!

வவுனியாவில் கடந்த இரண்டு வாரமாக நகரை அண்மித்த பகுதியான கற்குழி, தேக்கவத்தை, வெளிவட்ட வீதி போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் அப்பகுதிகளில் டெங்கு நுளம்பு பரிசோதனைகளை அதிகாரிகள் தீவிரமாக...

வவுனியாவில் மொட்டையடித்த விவகாரம் : சிரேஸ்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழையத் தடை!!

வவுனியாவில் பல்கலைக்கழக கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வாங்க இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் வவுனியா வளாகத்திற்குள் நுழைய இன்று (22.06) தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக வவுனியா...

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர்களின் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு!!

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 01.07.2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10மணியளவில் பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அனைத்து பழையமாணவர்களையும் வருகைதருமாறு பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் குறித்து ஆனந்த சங்கரியிடம் எடுத்துரைப்பு!!

தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் இருப்பையும், இன ரீதியான நில விகிதாசார பரம்பலையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்புகள் அக் கட்சியின் செயலாளர்...

வவுனியா விக்ஸ்காட்டுப் பகுதியில் காணி தொடர்பில் குழப்பம்!!

வவுனியா இராசேந்திரன்குளம் விக்ஸ்காட்டு கிராமத்தில் இன்று அரை ஏக்கர் அடிப்படையில் நாற்பத்தேழு காணித்துண்டுகள் பிரிக்கும் நடவடிக்கையினை கிராமசேவையாளர் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டிருந்தனர். இதன் போது இவ் செயற்பாட்டினை செய்வதற்கு...

வவுனியாவில் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்பட்டது!!

சர்வதேச யோகா தினம் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் மைதானத்தில் கல்லூரியின் அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் இன்று (21.06) நடைபெற்றது. இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தூதரகத்தின் அதிகாரி எஸ்.நிரஞ்சன்...

வவுனியா நகரசபையில் சட்டவிரோத கடை விவகாரத்தில் கடும் விவாதம்!!

வவுனியா நகரசபையின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புதிய கடை ஒன்று தொடர்பில் ஏற்பட்ட விவாதம் கடும் தர்க்கங்களுடன் வாக்கெடுப்பு வரை சென்றது. வவுனியா நகரசபையின் மூன்றாவது அமர்வு இன்று நகரசபை மண்டபத்தில் தவிசாளர்...

வவுனியாவில் ராக்கிங் கொடுமைக்கு பயந்து மொட்டையடித்துக்கொண்ட 25 பல்கலைக்கழக மாணவர்கள்!!

யாழ் பல்கலைக்கழக வளாக மாணவர்களுக்கு வவுனியாவில் மொட்டை அடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (21.06) இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழ வவுனியா வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் ராக்கிங்...

வவுனியாவில் இளைஞன் சடலமாக மீட்பு!!

வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியிலிருந்து இன்று மாலை இளைஞன் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவனியா கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த அன்ரன் உதயகுமார்...

வவுனியா பழைய பேருந்து நிலையம் வாகன விற்பனை சந்தையாக மாற்றம்?

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் லீசிங் நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பழைய பேருந்து நிலையமானது கடந்த ஜனவரி முதல் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக...

வவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர் வைத்தியர் இல்லையாம்!!

வவுனியாவில் யுவதி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் பதிவுசெய்யப்பட்ட வைத்தியரல்ல என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுந்தினம் தனது வைத்திய நிலையத்திற்கு ஆய்வு அறிக்கைகளை எடுத்துச் செல்லும் பணியாள யுவதியை...

வவுனியாவில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தியநிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியில் உள்ள வீடு...