வவுனியாவில் இன்று (07.01.2022)காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவுனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யுவராஜ். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுஜாதா என்ற பெண்ணுடன் இவருக்குத் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து சில நாட்களாக முருகேசன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.அதில், “மன அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுத்துவிட்டேன்.
இதற்கு வேறு காரணம் இல்லை. என் குடும்பத்தாரை அலைக்கழிக்க வேண்டாம். என்னை மன்னிச்சிடுங்க” என எழுதி வைத்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார்.
இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சத்யா தேவி மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் சென்னிமலைபாளையத்தில் இருக்கும்,
விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளார். வழக்கம்போல சத்யா தேவி விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
இவர் சென்னிமலைபாளையம் நடுதோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி சத்யா தேவியின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சத்யாவின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. அதன்பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சத்யாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில், நண்பன் உயிரிழந்த துக்கத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த பாசூரான் மகன் மில்டன். 17 வயது மதிக்கத்தக்க இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடன் 11-ஆம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அரக்கோணம் அருகே புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நண்பன் உதயகுமார்(17).கடந்த மாதம் 5-ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.
இதனால் அன்றைய நாள் முதல் நண்பன் இறந்த வருத்தத்தில் மில்டன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நண்பனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர்கள் மில்டனை சமரசம் செய்து வந்தனர். இந்த நிலையில் நாள்தோறும் அதையே நினைத்து விரக்தியில் இருந்து வந்த மில்டன்,
தனது நண்பன் இறந்து போன 5-ஆம் திகதி அன்றே தானும் இறக்க முடிவு செய்து புதன்கிழமை அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனே மில்டனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவவமனைக்கு கொண்டு சென்று சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரைவுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களில் 220,000 உள்நாட்டு எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவை விரைவில் நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் தினமும் 90,000-100,000 வரை உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு வழங்குவதற்கு நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு குறுகிய காலத்தில் களையப்படும் என குறித்த நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 310 கிலோ கிராம் எடை கொண்ட நீலக்கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர் இந்த கல்லின் பெறுமதியை மதிப்பிட்டுள்ளதாக கல்லின் உரிமையாளர் கூறியுள்ளார்.
ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் டொலர்களுக்கு வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தது. எனினும் இலங்கை அதிகாரிகளும், அந்த கல்லின் உரிமையாளர்களும் இந்த வாய்ப்பை மறுத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே பிரான்ஸில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர் இந்த கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். எனவே தொடர்ந்தும் விலை பேரம் பேசப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித பெரேரா தெரிவித்துள்ளார்.
சேதன பசளை திட்டத்தின் காரணமாக விவசாயிகள் பாரிய நெருக்கடிகயை எதிர்க்கொண்டுள்ளார்கள். பிரதான நெற்செய்கை பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் விவசாய நடடிவக்கையில் இருந்து விலகியுள்ளார்கள்.
இம்முறை பெரும்போக விவசாயத்தில் அதிக விளைச்சலை பெற முடியாது. விவசாயிகள் தங்களின் சுய தேவைக்காக மாத்திரமே விளைச்சலை மேற்கொண்டுள்ளார்கள்.
டொலர் நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு தற்போது வரிசையில் நிற்கிறார்கள். இந் நிலையில் எதிர்வரும் மாதம் முதல் பொது மக்கள் அரிசியை பெற்றுக் கொள்வதற்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
கோவிட் -19 வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து நாடு பாரிய அழிவை நோக்கி செல்லும். இயற்கை காரணிகளினால் அந்த அழிவு ஏற்படாது. அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கை திட்டத்தினால் முழு நாடும் பாரிய அழிவை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் தங்க நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை, அரியாலை பிரதேசத்தில் புதிதாக திருமணம் செய்த தனது மனைவிக்காக தங்க மாலை கொள்ளையடித்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வவுனியா, நெடுங்கேணி பிரதேச வீடு ஒன்றில் பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கொள்ளையர் குடிப்பதற்கு நீர் கோரியுள்ளார். நீர் வழங்கிய சந்தர்ப்பத்தில் பெண்ணின் இரண்டரை பவுண் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடவடிக்கை மேற்கொண்ட வவுனியா பிரிவு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் குறித்த கொள்ளையர்கள் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். நிரந்தர வருமானம் இல்லாமையினால் தனது மனைவியின் அவசியத்தை பூர்த்தி செய்வதற்காக இவ்வாறு தங்க சங்கிலியை கொள்ளையடித்துள்ளார்.
தங்கு இடமின்றி பிரதேசங்களின் பல இடங்களில் வாடனைக்கு தங்கிருந்து இந்த நபர் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவராகும். அவர் போதை பொருளுக்கு அடிமையானவர் எனவும் அவரை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் முன் அறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படும். அதனால் நாட்டு மக்கள் இருளில் இருப்பதற்கு தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதி நெருக்கடியின் காரணமாக மின் உற்பத்திக்கும், மின் விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையம் இரண்டாவது தடவையாகவும் மூடப்பட்டுள்ளது. நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கவில்லை.
தொழிற்சங்கத்தினரது ஆலோசனைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவை தற்போது எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தின் அலுவலகம் இன்று (06.01.2022) மாலை வவுனியா வைரவப்புளியங்குளத்தில் ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி.ரெட்னகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திரவும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் ஆகியோரும்,
கெளரவ விருந்தினர்களாக தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சி.ரவீந்திரன், வவுனியா பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே .இராஜேஸ்வரன்,
வர்த்தகர் சங்கச் செயலாளர் ஆ.அம்பிகைபாகன், வர்த்தகர் க.செல்வராசா, மாவட்ட செயலக தகவல் உத்தியோகத்தர் உபுல் பாலசூரியவும் கலந்து கொண்டனர்.
வவுனியா ஊடக அமையத்திற்கான நிதி உதவி மற்றும் அலுவலக தளபாடங்கள் உட்பட பல்வேறு உதவிகளை அப்ரியல் அமைப்பினர் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யுவராஜ். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுஜாதா என்ற பெண்ணுடன் இவருக்குத் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து சில நாட்களாக முருகேசன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.அதில், “மன அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுத்துவிட்டேன்.
இதற்கு வேறு காரணம் இல்லை. என் குடும்பத்தாரை அலைக்கழிக்க வேண்டாம். என்னை மன்னிச்சிடுங்க” என எழுதி வைத்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரவோடு இரவாக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரது விடுதி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் செயற்பட்டு வந்த பீ.பீ.மானவடுவவிற்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேவை கருதிய அவசர இடமாற்றமாக குறித்த இடமாற்றம் இரவோடு இரவாக வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கொஸ்வத்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது விடுதி முன்பாக இரவு இனந்தெரியாத நபர்களால் பட்டாசுகள் கொழுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து அவரது விடுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (05.01.2022) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குருமன்காடு – திருநாவற்குளம் பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த போது, புகையிரத பாதை ஊடாக புகையிரதம் சென்றுள்ளது.
இதன்போது புகையிரதப் பாதைப் பகுதியை அண்மித்து மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடுகள் புகையிரத சத்தம் காரணமாக சிதறி ஓடிய போது வீதியால் சென்ற குறித்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் வவுனியா வைத்தியசாலைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டம் மேலப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் – திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் துரத்திச் சென்றனர்.சிறிது துாரத்தில் ஒரு சிறிய பாலத்தருகே அவரை வழிமறித்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்திலின் மார்பு கழுத்து முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் வாகனத்துடன் பாலத்துக் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து விழுந்து செந்தில் உயிரிழந்தார்.
அதிக போக்குவரத்து உள்ள அந்த சாலையில் பட்டப்பகலில் இந்தப் படுகொலையை நிகழ்த்திய இளைஞரும் இளம்பெண்ணும் வாகனத்தில் ஏறித் தப்ப முயன்றபோது பொதுமக்கள் பிடித்துக் கொண்டனர்.
கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
சென்னைப் புறநகரில் உள்ள தனியார் கல்லூரியில் அந்த இளம்பெண் தனது படிப்பை முடித்த போது அவருக்கும் செந்திலுக்கும் காதல் ஏற்பட்டது. இளம்பெண் வேறொரு கல்லூரியில் தனது ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்த போது, செந்திலுக்குத் திருமணமாகி விட்டது.
அதனால் இளம்பெண் செந்திலிடம் இருந்து விலகி இன்னொரு இளைஞரைக் காதலிக்கத் தொடங்கினார். இதையறிந்த செந்தில், தான் பணியாற்றிய கல்லூரியில் இருந்து விலகி இளம்பெண் படித்து வந்த கல்லூரியில் பணிக்கு சேர்ந்தார்.
அதன்பின், தன்னைத் திருமணம் செய்ய வேண்டும் என இளம்பெண்ணுக்கு தொடர் தொந்தரவுகள் கொடுத்து வந்தார். இளம்பெண் மறுத்தும் செந்திலின் தொந்தரவுகள் தொடர்ந்ததால் காதலன் மூலம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார்.
இளம்பெண், அதன் அடிப்படையில் வியாழக்கிழமை செந்திலிடம் பேசுவது என்றும் அவர் விலகி விட்டால் விட்டு விடலாம் என்றும் அடம்பிடித்தால் கொலை செய்து விடுவது என்றும்,
திட்டமிட்டு இருவரும் கத்தியுடன் சென்றதாகப் போலீசார் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாகத் தான் செந்தில் கொலை செய்யப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இளம்பெண்ணையும், அவரது காதலனையும் கொலை வழக்கில் திருப்போரூர் போலீசார் கைது செய்தனர்
சென்னை அருகே ராமாபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகன் அர்ஜூன் (வயது 23). பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் அர்ஜூன் தனியாக வசித்து வந்தார்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் தனது வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அர்ஜூனை பார்க்க வந்த அவரது நண்பர் நீண்ட நேரம் கதவு தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். அப்போது அர்ஜூன் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து இராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் சடலமாக தொங்கிய அர்ஜூனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.
கடிதத்தில், “எனக்கு வாழ பிடிக்கல எல்லோரும் இருந்து நான் தனியா தான் ஃபீல் பண்றேன்.என்னால வாழ முடியல. என் வாழ்க்கை இப்படியே இருக்கு. அதனால தான் நான் சாக போறேன்.
என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இப்படிக்கு நான்” எனவும் மேலும் என்னுடைய கடைசி ஆசை என் உடலை போஸ்ட்மார்டம் செய்ய வேண்டாம் உடலை பெற்றோரிடம் ஒப்படையுங்கள் என எழுதி வைத்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது .
தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், “ அர்ஜூனுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாதது தெரியவந்துள்ளது.
அர்ஜூன் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அர்ஜூனின் காதலி நேற்று மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அதன்பின்னரே இவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அர்ஜூனின் செல்போனை கைப்பற்றிய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேட்டை சேர்ந்த 7 ஆம் வகுப்பு வரை படித்த சிறுவன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருநங்கையாக மாறியுள்ளார். 16 வயதான இந்த திருநங்கை சில வருடங்களாக தனது குடும்பத்தை விட்டு விட்டு ராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த ஆண்ட்ரியா என்ற திருநங்கையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்த திருநங்கை தனது புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு வந்துள்ளார். இதனை பார்த்த ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் பெண் என நினைத்து அவருடன் நண்பராக பழகி பின் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் காதல் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் திருநங்கை தனது நிலையை மஞ்சுநாத்திடம் சொல்லவே மஞ்சுநாத் உன்னை திருமணம் செய்து கொள்ள எனது குடும்பத்தில் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
எனவே நான் விலகிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த ஆண்ட்ரியா திருநங்கை தற்கொலை செய்து கொண்ட கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் அங்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.