மாணவனின் வாழ்க்கையை மாற்றிய உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு!!

பரீட்சை பெறுபேறு மீளாய்வு..

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வின் பின்னர் அண்மையில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன இதன் போது கணித பாடத்தில் C சித்தி பெற்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவரின் பெறுபேறு A சித்தியாக மாற்றம் பெற்றுள்ளது.

கண்டி தர்மராஜ கல்லூரியைச் சேர்ந்த ருசிர திசங்க அபேவர்தன என்ற மாணவனின் பெறுபேறே இவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது. கணித பிரிவில் குறித்த மாணவன் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். குறித்த மாணவன் இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடங்களில் A சித்திகளை பெற்றிருந்தார். எனினும் கணித பாடத்தில் இவருக்கு C சித்தியே கிடைக்கப்பெற்றிருந்தது.

இதன்படி குறித்த மாணவனின் இசட் புள்ளி 2.0084 ஆகவும், மாவட்ட நிலை 68 ஆகவும், தேசிய ரீதியில் 966ம் இடமாகவும் காணப்பட்டது. பரீட்சை பெறுபேறு மீளாய்வு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கணித பாட பெறுபேறு C யிலிருந்து A ஆக மாற்றம் பெற்றது.

இதன்படி, மாணவரின் இசட் புள்ளி 2.5538 ஆகவும், மாவட்ட நிலை 12 ஆகவும், அகில இலங்கை நிலை 124 ஆகவும் மாற்றம் பெற்றுள்ளது. இந்த பரீட்சை பெறுபேறு சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக சுமார் 48000 மாணவ மாணவியர் விண்ணப்பம் செய்தனர் எனவும் இதில் 329 மாணவ மாணவியரின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேகன தெரிவித்துள்ளார்.

நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் பருத்தித்துறை பெண்ணின் சடலம் மீட்பு‼️

அவிசாவளை..

அவிசாவளை புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த மூன்று பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர்கள் வீட்டுக்கு சென்ற இவர்கள் கடந்த வியாழக்கிழமை உறவினர்களுடன் எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றுள்ளனர்.

தீடிரென பெய்த கடும் மழையினால் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது இதன் காரணமாக நீராடிக் கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடிச்துச் செல்லப்பட்ட நிலையில் மூன்று நபர்களை பிரதேச மக்கள் காப்பாற்றியுள்ளனர்.

ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர் உயிரிழந்த சிறுமி 16 வயதுடைய எட்மன் ஜேவதாஸ் உஷாரா என்பவராவர் மேலும் காணாமல் போன இருவரும் நேற்று முன்தினம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறையைச் சேர்ந்த எட்மன் ஜேவதாஸ் மிதுர்ஷா வயது 14 மற்றும் வேவனி ஜேசுதாஸ் வயது 29 ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் கிடைக்கவுள்ள வாய்ப்பு!!

எரிகல் வீழ்ச்சி..

வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று கிடைக்கவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.

மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆதர் சி க்ளார்க் மையத்தின் சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய தெரிவித்தார்.

நாளை அதிகாலை 2 மணிக்கு அதனை மேலும் தெளிவாக அவதானிக்க முடியும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெளிவாக பார்வையிட முடியும் என்பதுடன், தெளிவான வானிலை நிலவும் பகுதிகளிலும் எரிகற்கள் வீழ்ச்சியினை காண முடியும் என சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய தெரிவித்தார்.

வவுனியாவில் மற்றுமொரு எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்!!

எரிவாயு அடுப்பு வெடிப்பு..

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதி, மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது இன்று (03.01) மதியம் திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளார். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற தடவியல் பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்!!

சிறிபிரகாஸ் செல்வராசா..

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான சிறிபிரகாஸ் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Geelong கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுப் பலியாகியுள்ளார். அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்திருக்கிறார்கள்.

வெகுநேரம் தேடிய பின்னர், அன்று மாலையளவில் சிறிபிரகாஸின் சடலம் Geelong கடற்கரையில் தென்மேற்கு கரையிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. விக்டோரியாவின் மிக ஆபத்தான கடற்பகுதியாக Geelong அறிவிக்கப்பட்டுவருகிறது. தொடர்ச்சியாக மாறுகின்ற காலநிலையால் கொந்தளிப்பது மாத்திரமன்றி,

இந்தக் கடலில் சுறா தாக்குதல்களும் பரவலாக இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பகுதியில் இந்தவருடம் இடம்பெற்றுள்ள ஆறாவது உயிர்ப்பலி இதுவாகும்.

நீச்சல்காரர்களுக்கு உதவியாக கரையில் பணியமர்த்தப்படுகின்றன உயிர்காக்கும் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக உயிர்காக்கும் படைப்பிரிவின் விக்டோரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

யாழில் டிப்பர்-மோட்டார் சைக்கிள் கோர விபத்து!!

விபத்து..

யாழ்.வளைவுக்கு அருகில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமைஇடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள், யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது,

யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் சென்றவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2 மாதமாகியும் கர்ப்பமாகாததால் ஆத்திரமடைந்த கணவன் இளம் மனைவிக்கு செய்த கொடூரம்!!

மதுரை..

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் நாகவேல். பெயிண்டராக வேலைப்பார்த்து வந்த இவருக்கும் அலங்காநல்லூர் அய்யங்கோட்டையைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் 24ம் தேதிதான் திருமணமாகியிருக்கிறது.

திருமணத்துக்கு பின் தாய் மற்றும் சகோதரருடன் அதே வீட்டிலேயே நாகவேல் வசித்து வந்திருக்கிறார். ஆனால் தனிக்குடித்தனம் போக வேண்டும் என சுதா வலியுறுத்தியிருக்கிறார். இதனால் நாகவேல் சுதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டுக்கு வந்த நாகவேலிடம் மீண்டும் சுதா தனியாகச் செல்வது குறித்த பேச்சை எடுத்திருக்கிறார். அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் நாகவேல் சுதாவின் கழுத்தை நெரித்திருக்கிறார்.

இதனால் நிகழ்விடத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுதா உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் நடந்ததைக் கூறி நாகவேல் சரணடைந்திருக்கிறார்.

அப்போது போலிஸிடம் திருமணத்துக்கு பிறகுதான் என்னைவிட சுதாவுக்கு வயது அதிகம் என தெரியவந்தது. இந்த அதிர்ச்சியோடு இருந்தபோதுதான் தனிக்குடித்தனத்துக்குச் செல்லவேண்டும் எனக் கூறியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இதேபோலவே நேற்றும் பிரச்னை நடந்தது. அப்போது ஆத்திரத்தில் கழுத்தை நெரித்தேன். ஆனால் இறக்கும் அளவுக்கு ஆகும் என எதிர்ப்பார்க்கவில்லை என கூறியிருக்கிறார்.

நாகவேலின் வாக்குமூலத்தை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற மதுரை மாநகர தெற்கு துணை கமிஷ்னர், திடீர் நகர் உதவி கமிஷ்னர் இருவரும் சுதாவின் உடலை பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இதற்கிடையே திருமணமாகி இரண்டு மாதமாகியும் சுதா கர்ப்பமாகதாலும், தன்னைவிட வயது அதிகம் கொண்டதாலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் இவ்வாறு நடந்திருக்கும் என சந்தேகம் கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளுடன் சேர்த்து வேறு 5 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்த தந்தை : நகைகளை அள்ளிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்துவதை தவிர்த்ததன் மூலம் மேலும் 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

கேரளாவில் தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கன்னூரில் சலீம் – ரூபினா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் ரமீசாவுடன் சேர்ந்து மேலும் 5 பெண்களுக்கு சலீம் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதன்படி வரதட்சணை எதுவும் கேட்காத மாப்பிள்ளை தான் தனது பெண்ணுக்கு கணவனாக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சலீம் அந்த மாப்பிள்ளையை தேடி கண்டுபிடித்திருக்கிறார்.

மேலும் மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தாமல் தான் சேமித்து வைத்த பணத்தில் மேலும் ஐந்து பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார் சலீம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த 5 பெண்களை தேர்வு செய்து இத்திருமணத்தை சலீம் நடத்தி வைத்துள்ளார். 6 பேரில் இரண்டு பெண்கள் இந்து பெண்கள் மற்றும் நால்வர் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.

அதன்படி இரண்டு திருமணங்கள் இந்து முறைப்படியும் மூன்று திருமணங்கள் இஸ்லாமிய முறைப்படியும் நடந்தன. இதனை தொடர்ந்து தன் மகள் உட்பட 6 மணப்பெண்களுக்கும் தலா 10 சவரன் நகையை சலீம் வழங்கினார். 6 பேருமே ஒரே மாதிரியான புடவையை அணிந்திருந்தனர். சலீமின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

 

இலங்கையில் கட்டிப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை!!

கட்டிப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை..

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் நாளைய தினம் பணிகளுக்காக செல்லவுள்ளவர்களுக்கு சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளைய தினம் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில்,

யாரையும் கட்டிபிடிக்க வேண்டாம் என சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் பரவல் மிகவும் வேகமாக பரவும் என்பதனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலுவலக பணிக்காக செல்லும் போது வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டிபிடிப்பது கைகுலுக்குவது போன்ற விடயங்கள் மேற்கொள்ளும் போது வைரஸ் மிகவும் வேகமாக பரவும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை..

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டமை அடுத்து இவ்வாறு இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் ஒரு பவுன் தங்கம் 5,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 22 கரட் தங்கத்தின் வலை 1,12,500ஆக காணப்படுகின்ற அதேவேளை,

24 கரட் தங்கத்தின் விலை 121,500 ஆக காணப்படுகின்றது. மேலும், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,818 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை நிலைநாட்டிய இலங்கை சிறுவன் : குவியும் பாராட்டுக்கள்!!

லவ்னீஷ்..

இலங்கையின் நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். மிக இளவயதில் உலக வரைபடத்தில் நாடுகளை அடையாளம் காணும் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார்.

மிக இளவயதில் மிக வேகமாக உலக நாடுகளை அடையாளம் காணுவதில் இந்த சாதனை நிலைநாட்டியுள்ளார். உலக வரைபடத்தின் அனைத்து நாடுகளையும் துல்லியமாக அடையாளம் காட்டி அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

எவ்வித அடையாளங்களோ அல்லது எந்தவிதமான எழுத்துக்களோ இல்லாத நிறங்களில் நாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட உலக வரைபடத்தில் லவ்னீஷ் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவ்வாறு உலக நாடுகளை அடையாளம் காட்டுவதற்காக லவ்னீஷ், 3 நிமிடங்கள் மற்றும் 16 செகன்ட்களை மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை ஓர் கணனி போதனாசிரியர் என்பதுடன், தாய் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கொட்டகலை பிரதேசத்தில் வசித்து வரும் லவ்னீஸ் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார்.

5 வயது 7 மாதங்கள் 27 நாட்களில் அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட போதிலும், உலக புத்தகத்தில் நேற்றைய தினமே இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டது.

மீண்டும் இருளில் மூழ்குமா இலங்கை?

மின்சார நெருக்கடி..

அடுத்து வரும் வாரங்களில் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்தாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடியை தவிர்ப்பதற்காக மின் பொறியியலாளர்களால் முன்வைக்கப்பட்ட குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா மக்களை வாய்பிளக்க வைக்கும் பச்சை மிளகாய் : ஒரு கிலோவின் விலை எவ்வளவு தெரியுமா?

பச்சை மிளகாய்..

நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பொது மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இன்றையதினம் வவுனியா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1500 ரூபா விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், கறிமிளகாய் ஒரு கிலோ 1000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மரக்கறிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாகவும், தமக்கு ஏற்றவாறு தன்னிச்சையாக மரக்கறிகளுக்கான விலைகயை வியாபாரிகள் நிர்ணயிக்க முயற்சிப்பதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வரிசையில் நிற்க விடுமுறைக்கு விண்ணப்பித்த அரச ஊழியர் : இலங்கையில் நடந்த வினோதம்!!

இலங்கையில் முழுவதும் சமையல் எரிவாயு, பால் மா மற்றும் மண் எண்ணெய் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலைமை காணப்படுகிறது.

இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் மணிக்கணக்கில் வரிசைகளில் நிற்பதை பெரும்பாலும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

வரிசையில் நிற்கும் மக்களில் சிலர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு ரீதியான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்ய வரிசையில் நிற்கும் நபர்கள் மத்தியில் அரச மற்றும் தனியார் துறையினர் என்ற வித்தியாசத்தையும் காணமுடியவில்லை.

இந்த நிலையில் அண்மையில் ஒரு நாள் அரச நிறுவனம் ஒன்றின் ஊழியர் பால் மா மற்றும் எரிவாயு வரிசையில் நிற்பதற்காக தனது நிறுவனத்தில் விடுமுறை கோரி சமர்ப்பித்திருந்த விண்ணப்பம் ஒன்றின் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அந்த ஊழியர் விடுமுறைக்கான காரணம் கேட்கப்பட்டுள்ள பகுதியில் “எரிவாயு மற்றும் பால் மா வரிசையில் நிற்பதற்காக” என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு தினத்தில் யாழில் நடந்த சோகம்!!

யாழில்..

யாழ் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கசூரினா கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில், தில்லையம்பதி பகுதியை 17 வயதான யோகராசா லோகீஸ்வரன் என்ற மாணவனே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். இவர் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஆவார்.

கோண்டாவிலிருந்து, புத்தாண்டு தினமான நேற்றைய தினம் சனிக்கிழமை 20 பேர் காரைநகர் கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதனை கண்ணுற்ற ஏனையவர்கள் அவலக்குரல் எழுப்பியதை அடுத்து அங்கிருந்தவர்கள் ஒருவரை மீட்டனர். மற்றையவர் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவரைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். எனினும் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலையில் நடந்த கோர சம்பவம் : இளம் காதலர்கள் பரிதாபமாக பலி!!

பண்டாரகம..

பண்டாரகமயில் நடந்த கோர விபத்தில் இளம் காதலர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். பண்டாரகம – கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பிரதேசத்தில் இன்று காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

கெஸ்பேவயில் இருந்து பண்டாரகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆணும், கண்டி பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.