வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் நீதிபதி இளஞ்செழியன்!!

அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது.

தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன், மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் தெரிவு!!

நலிஷா பானு..

உலக சுற்றுலா அழகியாக இலங்கை பெண் நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில்,

இலங்கை பெண் வெற்றிப்பெற்று கிரீடத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளார். குறித்த போட்டி நிகழ்வுகள் பிலிப்பைன்ஸில் நடைபெற்றுள்ளன.

உலக சுற்றுலா அழகி போட்டியில் இதற்கு முன்னர் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருந்த நிலையில், கிரீடத்தை சுவீகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

காதலால் ஏற்பட்ட குழப்பம் : கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!!

காதலால் ஏற்பட்ட குழப்பம்..

புத்தளத்தில் சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயதுடைய சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ, டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலத்தின் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாய் கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் சிறுமியின் கல்வி நடவடிக்காக கையடக்க தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்து கொடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த சிறுமி கருவலகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனுடன் காதல் தொடர்பு வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனுடன் கடந்த இரு நாட்களாக குறுந்தகவல்கள் பரிமாற்றிக் கொண்டுள்ளார். அதன் பின்னர் ஏதோ ஒரு விடயம் தொடர்பில் மனரீதியான பாதிப்புக்குள்ளாகியிருந்ததாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பணிப் பகிஸ்கரிப்பு!!

பணிப் பகிஸ்கரிப்பு..

வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் மற்றும் குறை நிரப்பு மருத்துவர் சங்கம் என்பவற்றைச் சேர்ந்த வடமாகாண தாதியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,

மருத்து கலவையாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து இன்று (30.12) பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலையிலும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றது.

அனைத்து தாதியருக்கும் ரூபா 5000 ரூபா இடர் கொடுப்பனவு வழங்குதல், கர்ப்பிணி தாதிய உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்கல், கொவிட் பரிசோதனை பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு போதிய வழங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை முன் வைத்து இப் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5 மாத கர்ப்பமாக இருந்த காதல் மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

கொலை..

மதுரையில் கணவரே தனது கர்ப்பிணி மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தூர் கிராமத்தில் வசிக்கும் கணபதி ராஜா என்ற நபருக்கு நாகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நாகலட்சுமி கடந்த திங்கள் அன்று வீட்டின் மாடியில் துணி காயவைத்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

ஆனால் நாகலட்சுமியின் மரணத்தில் அவரது அண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கணபதி ராஜா அவரது மனைவியிடம் திருமணத்தின் போது 10 பவுன் நகை கேட்டு உள்ளார்.

ஆனால் நாகலட்சுமியின் குடும்பத்தினரால் அந்த நகையை தர இயலாத நிலையில் கடைசியில் கணபதி ராஜா அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

ஆனால் அதன் பிறகு மீண்டும் தனது மனைவியை நகை கேட்டு டார்ச்சர் செய்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. இதனை அடுத்து கணபதி ராஜா மனைவி நகை தராததால் ஆத்திரத்தில்,

அவரை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்து உள்ளார் என்பது தெரிய வந்து உள்ளது. மேலும் நாகலட்சுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணமேடையில் தாலி கட்டப்போகும் கடைசி நேரத்தில் வேறு பெண்ணிற்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

இந்தியாவில்..

மணமேடையில்தாலி கட்டும் நேரம் மணமகன் வேறு பெண்ணிற்கு தாலி கட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிகை சோனியா அகர்வாலின் திருமணத்திற்கு சென்று அங்கு மாப்பிள்ளைக்கு தாலி எடுத்துக்கொடுக்கும் போது, தானோ அந்த தாலியை பெண்ணிற்கு கட்டி விடுவார்.

இந்த காட்சி எல்லோருக்கும் தெரியும். படத்தின் இந்த காட்சியை யாராலும் மறக்க முடியாது. இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மணமகன், மணமேடையில் மணமகளுக்கு தாலி கட்டதயாரானார்.

விருந்தினர்கள் எல்லோரும் அமர்ந்து திருமணத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தீடீரென மாப்பிள்ளை மணப்பெண் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிற்கு தாலி கட்டி விட்டார்.

இதை கண்டதும் விருந்தினர்கள் எல்லாரும் பதறிப்போய் எழுந்து நிற்கின்றனர். இப்படியாக ஓடும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது பலர் இந்த வீடியோவை பகிர்ந்த புதுப்பேட்டை திரைப்பட காட்சியுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

இந்த வீடியோவை பகிரும் சிலர் இந்த வீடியோ ஒரு சீரியல் சூட்டிங் வீடியோ என்று குறிப்பிட்டுள்ளனர். சிலர் இது உண்மையாக நடந்த திருமணம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

உண்மையில் இந்த சம்பவம் நடந்ததா இல்லை சினிமா சூட்டிங்கா, எங்கு நடந்தது? இது யார் திருமணம் என எந்த விபரமும் தெரியவில்லை. ஆனால் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

தன் மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன் : என்ன காரணம் தெரியுமா?

பெங்களூரு..

பெங்களூருவில் தன் மனைவி காதலித்த நபருடன் கணவரே மனைவியை அவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் ஜாமுய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் குமார், இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் முதல் மனைவி எதிர்பாராத விதமான மரணமடைந்துவிட்டார்.

இதனால் இவர் இரண்டாவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஷிவானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்ததும் ஷிவானியும் விகாஷ் குமாரும் பெங்களுருவிற்கு குடியேறியுள்ளனர்.

விகாஷ்குமார் பெங்களருவில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் திருமணத்திற்கு முன்பே ஷிவானிக்கு அவரது சொந்த ஊரிலிருந்த சச்சின் என்பவருக்கும் காதல் இருந்துள்ளது.

இந்த காதலை மறைத்து ஷிவானியின் குடும்பத்தார் அவரை விகாஷ் குமாருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். இந்நிலையில் திருமணத்திற்கு பின்பும் ஷிவானி- சச்சினின் காதல் கள்ளக்காதலாக தொடர்ந்துள்ளது.

சச்சினும் ஷிவானிக்காக பெங்களுருவில் ஒரு வேலையை தேடிக்கொண்டு பெங்களுருவிற்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் ஷிவானியும் சச்சினும் அவ்வப்போது விகாஷ் குமாருக்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் விகாஷ் குமாருக்கு தெரியவந்ததும் அவர் தன் மனைவியை கண்டித்து இதுஎல்லாம் தவறு அவருடன் பழகுவதை நிறுத்திக்கொள்ள சொல்லிகேட்டுள்ளார். ஆனால் ஷிவானி அதை கேட்காமல் சச்சினிடம் தொடர்ந்து பழக்கத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஷிவானியின் இந்த போக்கு விகாஷிற்கு பிடிக்காததால் அவர் ஷிவானியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருக்கு சச்சினையே பிடித்திருப்பதாக சொல்லிவிட்டதால், விகாஷே தனது மனைவியை அவரது கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைக்க சம்மதித்துவிட்டார்.

இந்நிலையில் விகாஷே அவரது தலைமையில் பெங்களுருவில் வைத்து இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இலங்கை முழுவதும் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய வசதி

இலங்கை முழுவதும் செயற்கைக்கோள்

இலங்கை முழுவதும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் இணைய வசதியை வழங்குவதற்கு ஸ்டார்-லிங்க் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொலைதூர கிராம பகுதிகள் உட்பட நாடு முழுவதும் எவ்வித சிக்கலுமின்றி இணைய வசதியை வழங்க முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து கடலுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள 7 நீர்மூழ்கி கேபிள்களின் வலையமைப்பின் மூலம் இலங்கைக்கு இணைய வசதிகள் வழங்கப்படுகின்றது.

அவ்வாறு நாட்டிற்கு கிடைக்கும் இணைய வசதிகள் பைபர் தொழில்நுட்பம் மற்றும் 3G அல்லது 4G கையடக்க தொழில்நுட்பம் மூலம் இணைய பயனர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

எனினும், இந்த முறையில் இணைய சேவை வழங்கும் போது புவியியல் தடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால், முறையான இணைய வசதிகள் கிடைக்காமையினால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

10 ஆண்டு திருமண வாழ்க்கை : 2 குழந்தைகள் பெற்ற பின்னர் ஆணாக மாறிய இளம்பெண் : அதிரவைக்கும் காரணம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ஆணாக மாறியுள்ள நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வரும் 36 மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக மாறியுள்ளார்.

மேலும் தனக்கு பிறந்த குழந்தைகளிடம் தன்னை அப்பா என்று அழைக்க தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குழந்தைகளும் அப்பா என்று அவரை அழைத்து வருகிறார்கள்.

இவர் ஆணாக மாறிய பின்னர் தன் பெயரை கவின் என்று மாற்றிக் கொண்டார். இவருக்கு 27 வயதில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து 2 குழந்தைகளுக்கு தாயாகி 10 வருட திருமண வாழ்க்கையை முடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது உடலில் சில மாறுதல்கள் நடந்துள்ள நிலையில் தனது 36 வயதில் ஆணாக மாறியுள்ளார். இவர் தனது கணவரிடம் இதைப்பற்றி எடுத்து கூறியுள்ளார். அவரும் அதை ஏற்றுக் கொண்டு நண்பன் போல் பழகி வருகிறார்.

ஆனால் சமூகம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டனர். இதுதொடர்பாக கவின் கூறியதாவது, பெண்ணாக பிறந்த ஒருவர் ஆணாக மாறுவதையும், ஆணாக பிறந்தவர் பெண்ணாக மாறுவதையும், இந்த சமூகம் ஏற்க மறுக்கிறது.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன தவறு இருக்கிறது. உடலில் ஏற்படும் இதுபோன்ற மாற்றங்களுக்கு அவர்கள் என்ன செய்ய முடியும். ஆனால் இந்த சமூகம் உடல்ரீதியாக ஏற்படும் மாற்றங்களை கூட ஏற்றுக் கொள்ளாமல் எங்களை போன்றவர்களை ஒதுக்கி வைக்கிறது.

நாங்கள் என்ன வேறு கிரகவாசிகளா? உங்களில் ஒருவர் தானே? இருந்தாலும் நிச்சயம் இந்த சமூகம் ஒரு நாள் எங்களை ஏற்றுக்கொள்ளும் என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

புகையிரதம் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி த ற்கொ லை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

புகையிரதம் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி

சேலம் அருகே ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி த ற்கொ லை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை நாமமலை காலனியை சேர்ந்த தறித்தொழிலாளி சதீஷ்குமாரை குண்டுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் சத்யா என்ப்வருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் சத்யா குடும்பம் நடத்த சிரமப்பட்டார். இதனால் அவர் சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் அம்மாபேட்டை மண்டலத்தில் கொசு ஒழிப்பு சுகாதார பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் சத்யாவுக்கும், மருந்து தெளிக்கும் பணியாளரான சாணிகுட்டை தெருவை சேர்ந்த விஷ்ணு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி சதீஷ்குமாருக்கு தெரியவந்ததும் மனைவியை அவர் கண்டித்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலன் விஷ்ணுவுடன் சத்யா வீட்டைவிட்டு வெளியேறி கோவைக்கு சென்று தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மனைவியை காணவில்லை என்று சதீஷ்குமார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் சத்யாவின் தாய் கோவைக்கு சென்று மகளை சேலம் அழைத்து வந்தார். ஆனால் மனைவியுடன் வாழ மாட்டேன் என்று சதீஷ்குமார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக சதீஷ்குமார் மகனை பார்ப்பதற்காக மாமனார் வீட்டுக்கு சென்று வந்தார்.

அப்போது கணவன், மனைவி இருவரும் சமாதானம் அடைந்து சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். இதனால் விஷ்ணுவிடம் தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சத்யா கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து விஷ்ணுவுக்கு வருகிற தை மாதத்துக்குள் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவருடைய குடும்பத்தினர் தீ விர மாக ஏற்பாடு செய்து வந்தனர்.

ஆனால் விஷ்ணு, சத்யாவுடனே வாழ விரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் சத்யாவிடம் தெரிவித்தார். கணவருடன் வாழ்வதா? அல்லது கள்ளக்காதலனுடன் வாழ்வதா? என பெரும் மனக்குழப்பத்தில் சத்யா இருந்துள்ளார். இதன் காரணமாக கள்ளக்காதல் ஜோடியினர் த ற்கொ லை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 2.20 மணிக்கு பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் அருகே விஷ்ணு, சத்யா ஆகியோர் வந்தனர். அப்போது யஸ்வந்த்பூரில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16573) முன்பு அவர்கள் திடீரென்று பாய்ந்து த ற்கொ லை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபண்ணா, வெங்கடாசலம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு வந்த விஷ்ணு மற்றும் சத்யாவின் உறவினர்கள், அவர்களின் உ டல்க ளை பார்த்து கதறி அழுதனர்.

அதைத்தொடர்ந்து விஷ்ணு, சத்யாவின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் ஜோடி ரெயில் முன்பு பாய்ந்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 8 மாதத்தில் தூ க்கில் தொ ங்கிய இளம்பெண் : விசாரணையில் தி டுக்கிடும் தகவல்!!

திருமணமான 8 மாதத்தில் இளம்பெண்

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜர் – ராஜலட்சுமி தம்பதி இவரது மகள் சினேகா பட்டதாரி ஆவார். இவர் புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த அறிவழகன் – சகாயராணி தம்பதியின் மகன் விஜயகுமார் (30) தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

விஜயகுமார் மற்றும் சினேகா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்தின் போது பெண் வீட்டார் 18 பவுன் நகையும், ஒரு லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இந்நிலையில் விஜயகுமார் மற்றும் சினேகா தம்பதியினர் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் இருவரும் வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக விஜயகுமார் தனது மனைவி சினேகாவிடம் வரதட்சணை நகை குறைவாக உள்ளதாகவும், புதியதாக தொழில் தொடங்குவதற்காக நகையும் பணமும் கேட்டு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் விஜயகுமாரின் தாயும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து வேறு ஒரு திருமணத்தை தனது மகனுக்கு செய்து வைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று கணவர் விஜயகுமார் மனைவி சினேகாவிடம் வீடியோ கால் மூலம் பேசி மீண்டும் நகை கேட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சினேகா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

தகவலறிந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 மாத கைக் குழந்தையுடன் காதலனுடன் மாயமான இளம் பெண் : நடந்த விபரீதம்!!

4 மாத கைக் குழந்தையுடன்


கரூர் அருகே கணவன் மற்றும் 6 வயது மகனை விட்டுவிட்டு காதலுடன் 4 வயது மற்றும் 4 மாத கை குழந்தையுடன் மாயமான இளம் பெண் போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு காதலுடன் சிக்கினார்.

கரூர் மாவட்டம் வரவணையை அடுத்த பாப்பனம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (30 ). பொக்லின் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், வெள்ளைபட்டியை சேர்ந்த பிரித்தா (26) என்பவருடன் 7 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 6 வயது மகனும், 4 வயது மகளும், 4 மாத கைக் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பவருக்கும், பிரித்தாவுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார் கோவிந்தராஜ். அப்போது வீட்டில் 6 வயது மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். 4 வயது மகளும், 4 மாத கை குழந்தையும், மனைவி ப்ரித்தாவையும் காணவில்லை.

இது தொடர்பாக உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளார். அவர்கள் கிடைக்காததால் அருகில் உள்ள சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் மனைவி, 2 மகள்களை காணவில்லை என்றும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுடன் சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிந்தாமணிபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணையும், குழந்தைகளையும் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் திருப்பூர் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு போலீசார் முகாமிட்டு தேடினர்.

ஆனால், அங்கு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சென்னை மதுரவாயல் பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுத்த குறுஞ்செய்தி வந்ததன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸ் குழுவினர் அவர்களை தேடி கண்டுபிடித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு திரண்டிருந்த கோவிந்தராஜ் மற்றும் உறவினர்கள், அவர்களை தங்களிடம் பேச அனுமதிக்க வேண்டும் என கேட்டதுடன், மணிகண்டனையும் சேர்த்து அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் உதவி ஆய்வாளர் சித்ரா தேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரித்தா குழந்தைகளுடன் கணவருடன் செல்ல சம்மந்தம் தெரிவித்தார். அவரை அழைத்துச் சென்ற காதலன் மணிகண்டன் மீது க டத் தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரித்தா குழந்தைகளுடன் குளித்தலையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நாளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பிறகு அவரின் விருப்பத்திற்கு ஏற்ப கணவருடன் அனுப்பி வைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும், முறையற்ற உறவால் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிய சம்பவத்தில் திருமணமான பெண் பிரித்தா மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என மணிகண்டனின் தரப்பில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

உயிலில் கையெழுத்து போட மறுத்த மனைவி : கணவனால் அரங்கேறிய கொ டூரம்!!

உயிலில் கையெழுத்து போட

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை தாலுகாவை சேர்ந்த அய்யனேரி கிராமத்தில் டைலர் கடை நடத்தி வந்தவர் மங்களா (வயது37). மங்களாவின் கணவர் தமிழ்மணி கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மங்களா மீது சந்தேகம் கொண்ட அவரது கணவர் தமிழ்மணி சந்தேகப்பட்டு டைலர் கடையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மங்களாவை க த்தியா ல் சதக், சதக் என்று கொ டூரமா ன முறையில் கொ லை செய்து விட்டு தப்பியோடினார்.

அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உ யிருக் கு போ ராடிக்கொ ண்டிருந்த மங்களா இவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் மங்களா ப ரிதாபமாக உ யிரி ழந்தார்.

இதையடுத்து வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவது, கொ லை செய்யப்பட்ட மங்களா அவரது கணவர் தமிழ்மணி ஆகியோர் ஆறு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் இவர்களுக்கு சரவணன் என்ற 14 வயதில் ஒரு மகனும், பிரவீன் என்ற 13 மகனும் உள்ளனர்.

விவாகரத்து கோரி அவ்வப்போது மங்களா அவரது கணவருக்கும் த கராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சந்தேகம் காரணமாக அடிக்கடி மங்களாவுடன் கணவர் தமிழ் மணிக்கு ச ண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று கடைக்கு சென்ற தமிழ்மணி மனைவி மங்களாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் க த்தியா ல் கொ டூரமா ன முறையில் கொ லை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த தமிழ் மணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிய மனைவியை சந்தேகத்தின் பெயரில் கொ டூரமான முறையில் கொ லை செய்த கணவன் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

பேருந்து கட்டண அதிகரிப்பு..

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கான கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி,

ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 3 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

ஆகக்குறைந்த பேருந்து கட்டணமாக இருந்த 14 ரூபா பேருந்து கட்டணம், 17 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. இந்த பேருந்து கட்டண திருத்தமானது, எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா இளைஞனின் வினோத போராட்டம் : இலங்கையின் மொத்த கடனையும் அடைக்க தயாராம்!!

வினோத போராட்டம்..

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29.12) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் ‘இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்.

இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம்’ என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிசார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து சென்றிருந்தார்.

மனதிலிருக்கும் விஜே சித்ராவின் உருவத்தை நெஞ்சில் குத்திய ரசிகர்… மிரண்டு போன ரசிகர்கள்

சென்னை: மனசுக்குப் பிடித்தவர்கள் மறைந்தாலும் தன்னுடைய அன்பு மறையாது என்பதை விஜே சித்ராவின் ரசிகர் ஒருவர் நிரூபித்துள்ளார்.

பலரும் வியந்து போகும் அளவில் அவர் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மறைத்தாலும் மறையாத பாசம் வாழ்ந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் என்று ஒரு பாடல் உண்டு. அந்த பாடலுக்கு தகுதியானவர்களின் விஜே சித்ராவும் ஒருவர். அவர் இந்த மண்ணுலகை விட்டு சென்று விட்டாலும் அவருடைய ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறார் என்பதை பல நேரங்களில் அவருடைய ரசிகர்கள் நிரூபித்து வருகின்றனர். அவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் ஒரு விஜேவாகவும் பலருக்கும் பரிச்சயமானவர். தன்னுடைய பேச்சால் எப்போதும அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் குணத்துக்கு சொந்தக்காரர் தான் விஜே சித்ரா.

முல்லையாக வாசனை தான் ஒரு மனநல மருத்துவராக இருப்பதால் அடுத்தவர்களின் முகத்தை பார்த்து அவர்களுக்கு தேவையான ஆறுதல் கூறி விடும் ஒரு கேரக்டராக இருந்ததால் தான் இவருக்கு நடிப்பை தாண்டி ரசிகர்கள் அதிகமாக இருந்து வந்துள்ளனர். சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முல்லை கேரக்டரில் பல ரசிகர்களின் மனதில் தனக்கென்று பெரிய இடத்தை பிடித்துவிட்டார். முல்லை என்று சொன்னால் இப்ப வரைக்கும் பலருடைய மனதில் நினைவுக்கு வருவது வீட்டில் சித்ராவின் முகம் தானாம்.

ரசிகர்களை கவர்ந்த அந்த கேரக்டர் தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி ஒரு சில வாரங்களுக்குள் அவருடைய திடீர் மரணம் ரசிகர்களை வெகுவாக பாதித்து விட்டது. அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்று இப்ப வரைக்கும் சரியாக வெளியே தெரியவில்லை என்றாலும் அவருடைய இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடைய ரசிகர்கள் உறவினர்களை போல துடித்து வருகின்றார்கள். தற்போது விஜே சித்ராவின் ரசிகர் ஒருவர் செய்த செயல் சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெஞ்சில் பூத்த பூ முகம் விஜே சித்ரா தான் ஒரு பிரபலமாக இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களிடம் அவர் எப்போதும் பாசமாகவும் ஜாலியாகவும் தான் பழகி வந்துள்ளார். ரசிகர்களுடன் நேரடியாக இவர் பழகி வந்ததால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வந்ததால் ரசிகர்களிடம் இவர் அதிகமாக நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இதனால் அவருடைய இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத இவருடைய தீவிரமான ரசிகர் ஒருவர் அவருடைய உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்ததும் பல ரசிகர்கள் விஜே சித்ராவை நினைத்து ஃபீல் பண்ணி வருகிறார்கள்.