கனடாவில்(Canada) சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வகையிலான காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.
இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த காணொளியே தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த காணொளி கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது.
குறித்த காணொளியில், “வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும்.
ஆனால் சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும். இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது.
வெளிநாடுகள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.
இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும். இது கனடாவின் யதார்த்தம்.
நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும்” என குறிப்பிட்டுள்ளார். கனடாவின் பல நகரங்களிலும் இதே நிலைமை இருப்பதாக பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி, முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு அருகில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (30.06.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேனும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இரு வாகனங்களும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும், மோட்டார் சைக்கிள் முற்றிவும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று (30.06.2025) காலை 8 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீட்டிலுள்ள சுவாமி அறையிலுள் விளக்கு ஏற்றுவதற்காக விளக்கினுள் தேங்காய் எண்ணெய் என நினைத்து வீட்டில் பிரிதொரு காணில் சேமித்து வைத்திருந்த பெற்றோலை ஊற்றியமையினால் வீட்டில் சுவாமி அறையில் தீப்பற்ற ஆரம்பித்தமையுடன் தீப்பரவல் வீடு முழுவதும் பரவத் தொடங்கியது.
உடனடியாக விரைந்த மாநகர தீயணைப்பு பிரிவினர் பொதுமக்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் சில பொருட்களும் தீயில் கருகி நாசமாகியிருந்தன.
சம்பவ இடத்திற்கு மாநகரசபை முதல்வர், துணை முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம்(26) அதிகாலையில் குறித்த நபர் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலிற்காக சென்றுள்ளார்.
வழமையாக காலை 9 :00 மணியளவில் கரை திரும்பும் குறித்த கடற்றொழிலாளி அன்று கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.
இதனை அவதானித்த கடற்றொழிலாளர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேசகத்தில் கட்டுமரத்தை கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் சுழியோடிகள் உதவியுடன் காணாமல்போன மணல்காடு கடற்றொழிலாளியை பல படகுகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்ட்டனர்.
இரண்டு நாளும் சடலம் கண்டுபிடிக்கப்படாத. நிலையில் இன்று காலை சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் 9 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக தொடர்ந்து தகாத உறவுக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 30 வயதுடையவராகும். அவர் ரயில் ஓட்டுநராக பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் சிறுமியின் தாயின் திருமண உறவுக்கு அப்பாற்பட்ட காதலன் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வீட்டில் வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தபோதும், வீட்டில் இல்லாதபோதும் சந்தேக நபர் தன்னைத் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் முதலில் தன்னை துஷ்பிரயோகம் செய்த திகதிகள் குறித்து தனக்கு தெளிவான நினைவில் இல்லை எனவும் 2023 ஆம் ஆண்டு முதல் தன்னை துஷ்பிரயோகம் செய்து வருவதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் – கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (27.06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் கல்லில் மோதி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, நபர் ஒருவர் கழிவறையில் இருந்து நேரடி ஒளிபரப்பில் ஆஜரான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காசோலை மோசடி தொடர்பான வழக்கு ஒன்றை குஜராத் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, முறைப்பாடு அளித்தவரான சமத் பேட்டரியை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதி நிர்சார் எஸ் தேசாய் அமர்வு முன்பு கடந்த ஜூன் 20ஆம் திகதி நேரடி ஒளிபரப்பு மூலம் சமத் பேட்டரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஆனால், அவர் கழிப்பறை இருக்கையில் அமர்ந்து தனது ஹெட்செட்டை அணிந்து கொண்டு ஆஜராகியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவில், அந்த நபர் தனது கையடக்க தொலைபேசியை தரையில் வைத்துக்கொண்டு தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்வதையும், எதிர்தரப்பில் நீதிமன்ற அறையில் சட்டத்தரணி தனது வாதங்களை முன்வைத்து வாதிடுவதையும் காண முடிகிறது.
இது தொடர்பான வீடியொ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக ஒருவர் செயல்படுவதற்கு பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
மாவனல்லைப் பிரதேசத்தில் மற்றுமொரு பேருந்து – லொறி விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, கொழும்பு – கண்டி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது கொழும்பில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து வண்டியொன்றும், மாவனல்லையில் இருந்து கேகாலை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் பயணித்த திப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இன்று அதிகாலை மாவனல்லை பிரதேசத்தில் இரண்டு லொறிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரம் – கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் கல்லில் மோதி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாவனெல்ல பகுதியில் இன்று (28.06.2025) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிக்கி லொறியில் பயணித்த பதினொரு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பிலா விசாரணைகளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கிலிகந்தராவ பகுதியிலுள்ள வீடொன்றில் 8 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (27.06.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மின்சாரம் தாக்கியதையடுத்து, குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமி தண்ணீரை சூடாக்கும் மின்சார கருவியை ( water heater ) பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதன்படி கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் குறித்த அணைவரும் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்நாட்டு அதிகாரிகளின் கூற்றின்படி 18 பேரில் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து மயங்கிய நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை வீதி, பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19ஆம் திகதி ஊர்காவற்துறையில் உள்ள தனது வீட்டினை பார்ப்பதற்கு மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
இதன்போது ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு முன்பாக இடது பக்கமாக ஒருவர் துவிச்சக்கர வண்டியில் வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பிரேக்கினை அழுத்தியவேளை பின்னாலிருந்த குறித்த பெண் திடீரென கீழே விழுந்து மயங்கியுள்ளார்.
பின்னர் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தி நடிகையும் மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலமுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
42 வயது ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக அவரது கணவர் மும்பையில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
ஆனால், அங்கே அவரைப் பரிசோதித்து பார்த்த வைத்தியர்கள், ஷெஃபாலி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ,நடிகை ஷெஃபாலி மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாவனல்லைப் பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்து காரணமாக ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, உதுவன்கந்த, பல்பாத பிரதேசத்தில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிரெதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு லொறிகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு குழந்தைகள் உட்பட 07 பேர் காயமுற்ற நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.