கொழும்பில் வாடகைக்கு தங்கியிருந்த இளம் பெண் கொலை : பொலிஸார் தீவிர விசாரணை!!

கொழும்பில் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலென்னவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பெண்ணொருவர் நேற்று (27) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் காரில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

குறித்த வர்த்தகரின் சடலம் நேற்றுமுன்தினம் (26) மஹவ, தியதம்பையில் உள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதேவேளை, அவர் இறப்பதற்கு சற்று முன்பு தங்க ஆபரணங்களை அடகு வைத்து பெறப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2.5 மில்லியன் ரூபாவை பொலிஸார் அவருடைய காரில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பெருந்தொகை பணம் எந்த நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் அது கொலையுடன் தொடர்புடையதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த வர்த்தகரின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல், தொரட்டியாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் குறித்த தொழிலதிபர், முடி வெட்டப் போவதாகக் கூறி ஜீப்பில் வீட்டை விட்டுச் சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது கையடக்க தொலைபேசியும் இயங்காமல் போயுள்ளது. இதனால் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், கட்டம்புவ பகுதியில் கால்நடைகளை பார்க்கச் சென்ற ஒருவர், ஜீப்பில் ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய, பொலிஸாரின் விசாரணையில், காணாமல் போன தொழிலதிபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை : வெளியான அறிவிப்பு!!

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ.சந்திரபாலா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தரம் வாய்ந்த நடைமுறைகளுக்கு அமைய போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

 

இரண்டு மாதங்கள் கழித்து பாடசாலைக்கு சென்ற மாணவனை தாக்கி காயப்படுத்திய ஆசிரியர்!!

நுவரெலியா, கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை (26) மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்த மாணவன் புறப்பாட நடவடிக்கைகளுக்காக இரண்டு மாத காலங்களாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்துள்ள நிலையில் கடந்த 23 ஆம் திகதி மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

அதே பாடசாலையில் கடமையாற்றும் பாட ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவனிடம் பாடக் குறிப்புப் புத்தகத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.

இதன்போது இந்த மாணவன் தான் இரண்டு மாத காலங்களாக புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அதன் பாடக் குறிப்புப் புத்தகத்தை ஆசிரியரிடம் காண்பித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஆசிரியர், புத்தகத்தை தூக்கி எறிந்து மாணவனை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் அளித்துள்ளார்.

இந்நிலையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் நேற்று வியாழக்கிழமை (26) மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் : காதலன் எதிர்த்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

உலகம் முழுவதுமே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த நிலையில்,

ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது குறித்த வாக்குவாதம் அதிகரித்த நிலையில், ஆத்திரத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர செய்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சவுபாக்யா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மகள் சைதன்யா (22). இவர் துமகூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

அழகு கலை நிபுணராகவும் இருந்து வந்த சைதன்யா, அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சைதன்யாவுக்கும், ராமேனஹள்ளியை சேர்ந்த விஜய் (25) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் சைதன்யாவின் தாய் சவுபாக்யாவுக்கு தெரிய வந்தது. அவர் சைதன்யாவை கண்டித்து வந்தார். ஆனால் சைதன்யா தனது தாய்க்கு தெரியாமல் விஜயுடன் தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்தார்.

இதற்கிடையில் சைதன்யா, செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ மற்றும் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டு வந்தார். இது காதலன் விஜய்க்கு பிடிக்கவில்லை. அவர் சைதன்யாவை கண்டித்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சைதன்யாவை புகைப்பட கலைஞர் ஒருவர் சந்தித்துள்ளார். அப்போது தனது கேமராவில் சைதன்யாவை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொடுத்தார்.

அந்த புகைப்படத்தை சைதன்யா வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த விஜய், சைதன்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறு முற்றியதில் சைதன்யாவின் வீட்டுக்கு வந்த விஜய், அவரது தாயாரிடம் இது குறித்து கூறினார்.

இதனால் தாய் சைதன்யாவை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கோபம் அடைந்த சைதன்யா தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார். இதனால் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இதற்கிடையே விஜயிடம் செல்போனில் பேசிய சைதன்யா, தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் சைதன்யா வீட்டுக்கு பதறியடித்தப்படி ஓடி ச் சென்றார். அவர் சைதன்யா இருந்த அறை கதவை திறக்குமாறு தட்டினார். ஆனால் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு மின்விசிறியில் சைதன்யா தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தார். இதைப் பார்த்து விஜய், சைதன்யாவின் தாய் சவுபாக்யா ஆகியோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இது குறித்து துமகூரு புறநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சைதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், ‘ரீல்ஸ்’ வீடியோ விவகாரத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் சைதன்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!!

போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணாவிடம் கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தீவிர விசாரணை நடத்தினர்.

முன்னதாக அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும், போதைப்பொருள் சம்மந்தமாக தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீடு மற்றும் கார்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தனக்கு இரைப்பை பிரச்சனைகள் இருப்பதாக கிருஷ்ணா தெரிவித்ததை அடுத்து, அவர் பயன்படுத்தும் மருந்துகளையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துக் கொண்டனர்.

2024ல் ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் வாயுகோளாறு, அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படுவது உட்பட தனது உடல்நிலை பிரச்சினைகளுக்கான மருத்துவ சான்றிதழ்களையும் கிருஷ்ணா போலீசாரிடம் கொடுத்தார்.

போதை பொருளை உபயோகப்படுத்தும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றத்தில் நண்பர்களுடன் அவர் செய்த சாட்டிங்கில் ரகசிய குறியீடு வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதை கண்டுபிடித்தனர்.

2020 முதல் கிருஷ்ணாவின் செல்ஃபோனில் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் கிருஷ்ணாவிடம் 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

நேற்று பிற்பகலில் அவரும் அவரது நண்பர் கெவினையும் போலீஸார் கைது செய்தனர். இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,

ஜூலை 10ம் தேதிவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

600 அடி பள்ளத்தாக்கு எரிமலையில் விழுந்து இறந்த பிரபலத்தின் உடல் 4 நாட்களுக்குப் பின்னர் மீட்பு!!

எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜூலியானா உயிரிழந்த நிலையில், அவரது உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஜூலியானா மரின்ஸ் (26). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை சுமார் 3½ லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜூலியானா இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றார். தொடர்ந்து அங்குள்ள 3,500 மீட்டர் உயரம் கொண்ட எரிமலை சிகரமான ரின்ஜானிக்கு கடந்த 22ம் தேதி சாகச குழுவினர் மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்தார். இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர்.

டிரோன் மூலமாக அவர் இருக்கும் இடத்தை கண்காணித்தனர். அப்போது மண்ணில் சிக்கி அவர் உயிருக்கு போராடி வந்தது தெரிந்தது. தொடர்ந்து கயிறு கட்டி கீழே இறங்கி மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால் அவர் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து மீட்பு பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஜூலியானா உடலை 4 நாட்களுக்கு பிறகு மீட்டு மேலே கொண்டு வரப்பட்டது.

செல்ஃபி மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!

கர்நாடக மாநிலத்தில் சூடசந்திரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நந்தினி . இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு நந்தினி தனது தோழிகளுடன் சுற்றிப்பார்க்க சென்றிருந்தார். 13 வது மாடிக்கு சென்ற அவர்கள் செல்பி எடுத்து உற்சாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

நந்தினி தனது செல்போனில் செல்பி புகைப்படம் எடுப்பதற்காக தடுப்பு சுவர் இல்லாத மாடியில் விளிம்பின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். திடீரென கால் தடுமாறியதால் கீழே விழுந்தார்.

13-வது மாடியிலிருந்து கீழே விழுந்த நந்தினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். ரத்த வெள்ளத்தில் கிடந்த நந்தினியை கண்ட தோழிகள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரது பெற்றோருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் நந்தினி செல்பி எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது தடுமாறியதால் கீழே விழுந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

 

தனது சிறுநீரால் தினமும் கண்களை கழுவும் பெண் : இணையவாசிகள் அதிர்ச்சி!!

இந்தியாவின் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கண்களை சிறுநீரால் கழுவும் காணொளி வெளியிட்டிருந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் விசனங்களை வெளியுட்டுள்ளனர்.

புனேவைச் சேர்ந்தவர் நூபுர் பிட்டி என்பவரே தனது இன்ஸ்டாவில் , தான் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘Urine Eye Wash — Nature’s Own Medicine’ என்ற தலைப்பில் காணொளியையும் வெளியிட்டுள்ளார்.

அதாவது, தினந்தோறும் காலை நேரத்தில் எனது சிறுநீரில் கண்களை கழுவுவதால் கண்ணில் ஏற்படும் வறட்சி, எரிச்சல் மற்றும் சிவத்தல் உள்ளிட்ட பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது

என்றும் இது இயற்கை மற்றும் மாற்று சிகிச்சைமுறை மீதான தனது நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கண் பராமரிப்புக்கு சிறுநீர் பாதுகாப்பானது அல்ல. இது போன்ற செயல் கண் எரிச்சல், தொற்று மற்றும் பார்வை இழப்பு உள்ளிட்ட தீங்குகளை ஏற்படுத்தும் என்றும், இந்த மாதிரி முட்டாள் தனமாக செயப்ல்படாதீர்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கியத் தகவல்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(27) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 995,802 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 35,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 281,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 32,210 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் (22 karat gold 8 grams) விலையானது 257,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 30,740 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams)245,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 266,000 ரூபாவாகும்.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 246,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களுக்கு ஏற்படப்போகும் கொடிய ஆபத்து : உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள பாபா வங்காவின் கணிப்பு!!

2088ஆம் ஆண்டில், பூமியில் ஒரு அறியப்படாத வைரஸ் பரவும் எனவும் அந்த வைரஸ் காரணமாக மனிதர்கள் விரைவாக வயதானவர்களான தோற்றத்திற்கு மாறி விடுவார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில், துல்லியமாக உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன்னமே கணித்துள்ளார், அவை நிறைவேறியும் இருக்கின்றன.

இந்நிலையில், தற்போது அவர் கணித்திருந்த ஒரு வைரஸ் நோய்த்தாக்கம் பற்றிய கணிப்பு சமூக ஊடகங்களில் மிக பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

அடுத்த 6 தசாப்தங்களுக்குப் பிறகு ஏற்படக் கூடிய இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவர்கள் என பாபா வங்காவின் கணிப்பு தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இந்த வைரஸ் பற்றிய பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகலாம், ஆனால் இன்றைய மாறிவரும் காலநிலை,

உயிரியல் போர் மற்றும் ஆய்வகங்களில் வைரஸ்கள் உருவாக்கப்படும் சூழலில் இது மிகவும் கவலைக்குரிய விடயமாக மாறக்கூடும் என பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

பாபா வங்காவின் முழுப் பெயர் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா என்பதாகும், அவர் 1911இல் பிறந்துள்ளார்.

அவர் மேற்குலகின் பால்கன் நோஸ்ட்ராடாமஸ் என்றும் கருதப்படுகிறார். பாபா வங்கா குழந்தை பருவத்தில் ஒரு விபத்தில் தனது பார்வையை இழந்ததாகவும், அதன் பிறகு எதிர்காலத்தைப் பார்க்கும் திறனைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பாபா வங்காவின் பல கணிப்புகள் பெருமளவில் உண்மையாகியுள்ளதாகவும் அவரின் கணிப்புகளில் 9/11 தாக்குதல், குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து, பராக் ஒபாமா ஜனாதிபதியானமை மற்றும் இந்திரா காந்தியின் படுகொலை ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் : எரிந்த நிலையில் சடலம் மீட்பு!!

குருநாகல் பிரதேசத்தில் முடி வெட்ட சென்ற ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிந்தவர் குருநாகல், தொரட்டியாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மதியம் தொழிலதிபர் முடி வெட்டப் போவதாகக் கூறி ஜீப்பில் வீட்டை விட்டுச் சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது கையடக்க தொலைபேசியும் இயங்காமல் போயுள்ளது. இதனால் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் கட்டம்புவ பகுதியில் கால்நடைகளை பார்க்கச் சென்ற ஒருவர், ஜீப்பில் ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய, மேலும் விசாரணையில், வாகனமும் அந்த நபர் காணாமல் போன தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கு இந்த விடயம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தில் உயிரிழந்து கிடந்தவர் தனது கணவர் என மனைவியால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மர்மான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தந்தையை பார்க்க சென்ற இளைஞனுக்கு நடந்த துயரம் : சோகத்தில் தவிக்கும் குடும்பம்!!

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் தண்ணீர் தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இணுவில் மேற்கைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞருக்கு வலிப்பு வருவதாகவும் நேற்று முன்தினம் (25) பிற்பகல் தந்தையாரின் மரக்காலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் தெல்லிப்பளையில் உள்ள அவர்களின் பிறிதொரு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன். மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பகிடிவதையால் பல்கலை மாணவன் உயிரிழப்பு : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது

செய்யப்பட்ட 11 மாணவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11 மாணவர்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேரூந்து விபத்து!!

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதியின் நேர்மையான செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

42,100 ரூபாய் பணத்தோடு தவறவிட்ட பணப்பையை பாதுகாப்பாக வைத்திருந்து இரண்டு மாதங்களின் பின்னர் பாதுகாப்பாக பணத்தொகையுடன் பயணியிடம் ஹட்டன்- கொழும்பு தனியார் பஸ் சாரதி கையளித்துள்ளார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஹட்டன் வந்த பயணியொருவர் பொதியொன்றை தவற விட்டு சென்றுள்ளார்.

தேடி வருவார் என பாதுகாப்பாக பொதியை வைத்திருந்த பஸ் சாரதி பொதியை, பிரித்து பார்த்தபோது அதில் ஒருத்தொகை பணமும் மருத்துவ சிகிச்சைக்கான அட்டை உள்ளிட்ட ஆவணங்கள்

இருப்பதை கண்டு உடனடியாக ஹட்டன் பஸ் தரிப்பிட நிலைய அதிகாரிகளிடம் உரியவரை தேடி ஒப்படைக்குமாறு பொதியை கையளித்துள்ளார்.

அதன் பின்னர் அதிகாரிகள் பொதியின் உரிமையாளரை தேடி வரவழைத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் முன்னிலையில் 42100 ரூபாய் பணத்தையும் ஆவணங்களையும் நேற்று (26) கையளித்துள்ளனர்.

ஹட்டன்- கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸின் உரிமையாளரும் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை பலரும் பாராட்டியுள்ளனர்.