திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பிரியங்கா தேவி (வயது 16) என்பவருடன் காதல் வயப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை காதல் விவகாரத்தில் பிரியங்கா தேவிக்கும் ரமணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த ரமணன் உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று புடவையால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதலன் இறந்தது குறித்து இன்று காலை தகவல் அறிந்த பிரியங்கா தேவி வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ரமணனின் உடலையும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பிரியங்கா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து ரயில் முன் பாய்ந்து காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான சுராஜ் மஹாதேவா என்ற 26 இலங்கை இளைஞன் கடந்த வாரம் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் நல்ல மனிதாபிமானமுள்ளவரான சுராஜின் மரணம் அவர் வாழ்ந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த வாரம் அதிகாலை 3 மணியளவில் சுராஜ் தனது நண்பரின் கடைக்கு சென்றிருந்த போது திடீரென மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். எனினும் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் நடந்து வந்தாரா வாகனத்தில் வந்தாரா என்பது இன்னமும் தெரியவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுராஜ் 2018ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என தெரியவந்துள்ளது. அவர் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் கலாச்சார பாரம்பரியத்தில் ஆர்வமாக இருந்தவராகும்.
சுராஜ் துடிப்பானவர், நம்பிக்கையானவர், திறமையானவர் என அவருடன் பழகியவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞனின் மரணத்திற்கான காரணம் இன்னமும் மர்மமாகவே உள்ளதென பொலிஸார் தெரிவித்துளள்னர்.
பதுளையில் காணாமல் போனதாக கூறப்பட்டு தேடப்பட்டு வந்த களன் தோட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பாமையை அடுத்து தேடப்பட்டு வந்த நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றபோது எடுத்து சென்ற புத்தகங்கள் மற்றும் உடமைகள் கஹட்டருப்ப பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி பதுளை, தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த நிலையில் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அடுத்து உள்ள நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். 34 வயது மதிக்கத்தக்க இவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோமதி(28) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு மருத்துவர்கள் கடந்த 13-ஆம் திகதி பிரசவத்திற்கான நாளை குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், அன்றைய தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்படாத காரணத்தினால், அவர்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை. இதையடுத்து, கடந்த 18-ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மேல் பிரசவ வலி ஏற்பட லோகநாதன் தனது அக்கா கீதா உதவியுடன் யூடியூப் சேனலை பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். இதில் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.
அத்துடன் கோமதிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை உடனடியாக அருகில் இருக்கும் ஆரம்பசுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் லோகநாதனை கைது செய்து, தலைமறைவாக உள்ள அவருடைய அக்காவை தேடி வருகின்றனர்.
முல்லைத்தீவு – உடையார்கட்டு வடக்கு – மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த நேற்று சென்ற நிலையில் அவரின் வாகனத்தை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ். ஜெயகாந்தன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறுமியின் மாமா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதேவேளை, சிறுமியின் பூதவுடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததுள்ளது. சிறுமிக்குச் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் போதே உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டம் பகுதியில் கடந்த புதன் கிழமை 12 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
15 ஆம் திகதி மகள் தன்னுடன் வீட்டிலிருந்ததாகவும் அயல் வீட்டார் திருகோணமலை சென்றுவிட்டதால், அங்கு எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அணைக்க காலை 6.30 மணியளவில் சென்றதாகவும்,
பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் எல்லா இடமும் தேடிவிட்டு, மதியம் 2 மணிக்குப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
யோகராசா நிதர்சனா என்ற 13 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயிருந்தார். இதையடுத்து, கிராம மக்கள், பொலிஸார், இராணுவத்தினர் தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். ஆடைகள் கலைந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத காணி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்குப்படுத்தப்பட்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சிறுமி 2 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். அதன் காரணமாகச் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டபோது ஏற்பட்ட அதிக இரத்தப் பெருக்கு காரணமாகச் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த நிதர்சனா, திருகோணமலையில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் மூங்கிலாற்று பிரதேசத்துக்கு வந்திருந்துள்ளார். 6 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில், யோகராசா நிதர்ஷனா கடைசிப் பிள்ளையாவார்.
விடுமுறைக் காலத்தில் சிறுமி வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில், அக்காவின் கணவரால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, கர்ப்பமாக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு வயல் பிரதேசத்தில் தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கை கலப்பில் தாய் மாமன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தில் உள்ள வயல் காணி தொடர்பாக சகோதரர் ஒருவருக்கும் அவரது சகோதரிக்கும் இடையில்,
காணி தகராறு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இன்று(21.12) சகோதரியின் மகனுக்கும் தாய் மாமனுக்கும் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கான காரணம் என்று ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் தாயாரான சேகு இஸ்மாயில் உம்மு சல்மா என்பவர் தெரிவிக்கையில், நானும் எனது கொலை செய்யப்பட்ட மகனும் வயலுக்கு உரம் எற்றிவதற்கு வந்த போது வயலுக்குள் எனது மகளின் மகன் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எனது மகன் ஏன் எனது காணிக்குள் வந்தாய் என்று எனது பேரனிடம் கேட்ட போது அவருக்கு அடித்து வெட்டிவிட்டு என்னிடம் உனது மகனை வெட்டியுள்ளேன் கொண்டு போ என்று சொல்லிவிட்டு எனது பேரன் போனார் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாகக் முள்ளிவட்டவான் விவசாய அமைப்பு தலைவர் ஐ.எல்.எம். முஸ்தபா கருத்து தெரிவிக்கையில், நானும் என்னுடன் மற்றுமொரு விவசாயியும் முச்சக்கரவண்டியில் வரும் போது உசனார் பௌசான் என்பவர் எனது மாமாவை வெட்டி விட்டேன், அவரை உங்கள் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்தார்.
அவருடன் நானும் என்னுடன் வந்தவர்களும் வந்து பார்த்த போது “அவர் மரணித்து விட்டார், நீங்கள் அம்புளன்ஸ்சுக்கு அறிவியுங்கள்” என்று பௌசான் சொல்லிவிட்டுச் சென்றார் என்று தெரிவித்தார்.
மீறாவோடை மாஜ்சோலை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அலியார் ஹமீட் (வயது – 38) என்பவர் மரணமடைந்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவன சம்மேளனங்கள் ஆகியன இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளன.
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்துகளின் பயணங்களை மேற்கொள்வதற்கு பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்று இந்த அமைப்புக்கள் கோரியுள்ளன.
அந்தவகையில் ஆக்குறைந்த கட்டணத்தை 25 ரூபாவாக உயர்த்தவேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் ஏனைய கட்டணங்களை எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப 20 வீதத்தினால் அதிகரிக்கவேண்டும் என்று அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
முச்சக்கரவண்டிகளுக்காக பயணிகளிடமிருந்து அறவிடப்படும் பயணக் கட்டணத்தை 30 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழில்துறை சங்கம் தெரிவிக்கின்றது.
இலங்கையில் நேற்றிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே, முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்காக அறவிடப்படும் கட்டணத்தை 30 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 50 ரூபாவாக காணப்பட்ட முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம், 80 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் அறவிடப்படும் 45 ரூபா கட்டணத்தை அதிகரிக்கவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் ரொஹண பெரேரா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, பேருந்துக்கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவன சம்மேளனங்கள் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (21) நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் இன்று (21.12) நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றச் சபையின் அனுமதியின்றி சுகாதார அமைச்சின் தன்னிச்சையான முடிவின் கீழ் மருத்துவப் பணிகளுக்கு புதிதாக மருத்துவர்களை பிழையான விதத்தில் நியமித்தமைக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)குறித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையிலும் அதற்கு ஆதரவு வழங்கப்பட்டதுடன், அவசர சிகிச்சைபிரிவு, மற்றும் ஏனைய அத்தியவசிய மருத்துவ சேவைகள் அனைத்தும் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடுமையான சுகவீனத்திற்காக சிகிச்சைக்காக வருகை தந்தவர்களிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் ஏனைய நோயாளர்கள் சிகிச்சையினை பெற்றுக்கொள்ளாமல் திரும்பி சென்றிருந்தனர்.
வவுனியா கொக்குவெளி பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் மாயமாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிராம மக்களின் தொடர்சியான முயற்சியால் கிணற்று நீர் வெளியில் இறைக்கப்பட்டு நேற்று (20) இரவு 11.30 மணியளவில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மாமடு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – மந்திகை பகுதியில் பட்டமொன்றின் கயிற்றில் சிக்கிய இளைஞன், ஆகாயத்தை நோக்கி பறந்த சம்பவம் அடங்கிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
ஆகாயத்தின் உயரத்திற்கே பறந்த இளைஞன், நீண்ட நேரத்திற்கு பின்னர் கீழ் நோக்கி வந்துள்ளார். அதையடுத்து, கயிற்றை கைவிட்ட இளைஞன், கீழே வீழ்ந்துள்ளார்.
இவ்வாறு ஆகாயத்தை நோக்கி பறந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவிளானோரால் பகிரப்பட்டு வருகின்றது.
நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது.
(20 ரூபாவால்) ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக அதிகரித்துள்ளது. (23 ரூபாவால்) ஒடோ டீசல் ஒரு லீற்றரின் விலை 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக (10 ரூபாவால்) அதிகரித்துள்ளதுடன்,
சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக (15 ரூபாவால்) அதிகரித்துள்ளது. இதேவேளை மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக (10 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி முல்லைத்தீவு மூங்கிலாறு கிராம மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மூங்கிலாறு கிராமத்தில் இன்றைய தினம் (20.12.2021) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 15 ஆம் திகதி காணாமல் போயுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யபட்டமைக்கு அமைவாக நான்கு நாட்கள் தேடுதலின் பின்னர் கைவிடப்பட்ட காணி ஒன்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் சிறுவர், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த கோரியும் கொலைசெய்ய பட்ட சிறுமியின் கிராமமான மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள் ,சிறுவர்கள் , இளைஞர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கறுப்பு கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து மூங்கிலாறு சந்தியிலிருந்து பேரணியாக உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாக சென்று தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (20.12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டு ஒன்றில் வசிக்கும் குடும்பஸ்தர் வீட்டு வாயிலில் தூக்கில் தொங்குவதை கண்ட அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 34 வயதுடைய பெரியசாமி நாகராஜன் என்பவராவார். பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.பி.எஸ். இறுதிப் பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவி 13 தங்கப் பதக்கங்களைப் பெற்றுப் பெரும் சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பட்டமளிப்பு விழாவின் போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை இவர் தனதாக்கிக் கொண்டுள்ளார். அத்தோடு குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல் நிலையாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று 7/3 ஜச் சேர்ந்த ஓய்வுநிலை அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியான தர்ஷிகா இந்தப் பெரும் சாதனையைப் புரிந்து பெற்றோருக்கும் சொந்த மண்ணுக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.