இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வாரம் நாட்டின் பல பாகங்களிலும் மாலை 6 மணிக்குப் பின்னர் ஒரு மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டதாக அமைச்சின் பேச்சாளரான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
மின் உற்பத்தி பற்றாக்குறை மற்றும் அதிக தேவையின் நிமித்தம் இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். நாளாந்த மின்சாரத் தேவையில் 60% நீர் மின்நிலையங்களிலிருந்தும், ஏனைய மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களிலிருந்தும் பெறப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் வழமை போன்று மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளமையால் இன்று முதல் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இது வரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியும் மற்றும் இரண்டாவது தடுப்பூசி பெறாதவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தோணிக்கல் கிராம அலுவலகர் காரியாலயத்தில் வைத்தியர் பிரசன்னா தலைமையில் இன்று (12.10.2021) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்பட்டதுடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் வழிநடத்தல்கள் ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.
வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (10.12) மாலை 5.05 இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற உத்தரதேவி புகையிரதமானது வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பயணித்த போது புகையிரத தண்டவாளத்தில் ஒருவர் தலையை வைத்து படுத்திருந்த நிலையில் அவர் மீது புகையிரதம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா ரவி (வயது 56) ஆவார். இவரது சடலத்திற்கு அருகில் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டு அது பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சடலமும் வவுனியா புகையிரத நிலையம் கொண்டு வரப்பட்டு புகையிரத திணைக்கள அதிகாரிகளால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பலம் தொடர்பல் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வேனில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்வில் மணமகளை அலங்கரிப்பதற்காக வானில் சிலர் பயணித்ததில் பெண் ஒருவரும் வானின் சாரதியும் உயிரிழந்துள்ளனர். சாரதி நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண் மாத்தறை டிக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து கடற்படைக்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தின் போது பஸ் தடம் புரண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது.
மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145 வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்பொழுது நாட்டில் நிலவும் கொரோனா கடும் தொற்று காரணமாக வைத்தியசாலை சமூகத்தினரினதும் நோயாளர்களினதும் நலன் கருதி நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் தெரிவித்தார்.
தங்களது உறவினர்களோ அல்லது நண்பர்களோ தங்கியுள்ள விடுதியிலிருந்து வழங்கப்படுகின்ற நோயாளர் பார்வையிடும் அட்டையினைக் (Patient Visitors Card) கொண்டு ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே உள் நுழைய முடியும் என்பதுடன்,
நோயாளர்களை காலை 6.00 மணி – 7.00 மணி வரையும் மதியம்:-12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரையும் மாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையும் மாத்திரம் பார்வையிட அனுமதிக்க முடியும் அத்துடன்,
ஏனைய நேரங்களில் நோயாளர்களை பார்வையிட வருவதையோ, நோயாளர் பார்வையிடும் அட்டை இன்றி வருகை தருவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நாட்டு மக்களையும் வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்களையும் பாதுகாத்து அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்கவேண்டிய பொறுப்புடன் வைத்தியசாலை சமூகம் செயற்பட்டு வருகின்றது.
இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இது. தயவுசெய்து உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் தொடர்ந்தும் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சங்கத்தின் தலைவர் கனீஸியஸ் தலமையில் இடம்பெற்றது
தொடர்ந்து செயலாளரின் கூட்ட அறிக்கையுடன் ஆரம்பித்த கூட்டமானது தலைவரின் உரையின் பின் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
புதிய நிர்வாகத்தில் தலைவராக நடராசா ஜனகதீபன், செயலாளராக பரமேஸ்வரன் கார்த்தீபன், பொருளாளராக சசிகரன், உப தலைவராக பாலநாதன் சதீஸன் , உபசெயலாளராக பாஸ்கரன் கதீஷன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன்,
அருள்மதி, மற்றும் கனிஸீயஸ் ஆகியோர் ஆலோசகர்களாகவும், சஜீபன் மற்றும் வேந்தன் ஆகியோர் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து புதிய தலைவரின் உரையுடன் எதிர்காலத்தில் சங்கத்தின் செயற்பாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டு புதிய செயலாளரின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரினால் நகரில் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலின் முன்பாக இன்று (10.12.2021) காலை 10.30 மணியளில் பேரணி ஆரம்பமாகி மணிக்கூட்டு கோபுரம் வழியாக பழைய பேரூந்து நிலையத்தினை சென்றடைந்து பழைய பேரூந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றிருந்தது.
பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்கள் கறுப்பு நிற ஆடையணித்து ஓர் கையில் தீப்பந்தம் எந்தியதுடன் மறு கையில் காணாமல் போன அவர்களது உறவுகளின் புகைப்படங்களையும் ஏந்தி பேரணியில் சென்றதுடன்,
மனித உரிமை மீறப்பட்ட நாடடில் மனித உரிமை பற்றி பேசலாமா?, நீதியில்லா நாட்டில் நீதிமன்றம் எதற்கு, தமிழ் இனத்தின் உரிமை மறுக்கப்பட்ட நாடு ஸ்ரீலங்கா, வேண்டாம் வேண்டாம் இழப்பீடு வேண்டாம், விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிளை விடுதலை செய் என்ற கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இப் போராட்டத்தில் 50க்கு மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் முன்னான் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவிலுள்ள பேரூந்துகளில் அலுவலக உத்தியோகத்தர் போல் சீரான முறையில் ஆடையணித்து வருகின்ற ஓர் சில இளைஞர்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் பாடசாலை மாணவர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகளவில் தனியார் மற்றும் அரச பேரூந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இச் சமயங்களில் அலுவலக உத்தியோகத்தர் போல் சீரான முறையில் ஆடையணித்து வருகின்ற ஓர் சில இளைஞர்கள் பேரூந்தில் பெண்களுக்கு அருகேயுள்ள ஆசனத்தில் இருந்து பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொள்வதாகவும்,
சன நேரிசல் காணப்படுகின்ற சமயங்களில் பெண்களுடன் வேணுமென்றே உரசுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுடன் பாலியல் ரீதியான செயற்பாட்டில் ஈடுபடும் இவ்வாறான ஓர் சில இளைஞர்களினால் பல பெண்கள் வேலையினை இடைவிட்டுள்ளனர்.
எனவே பொலிஸார் அதிகாரிகள் சிவில் உடையில் சென்று இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பெண்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வவுனியா பஜார் வீதியில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நகரிலிருந்து பஜார் வீதியுடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஊராட்சி மனோ நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 37). ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் சொந்தமாக டீ கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் (11) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா பிளாட் போட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.
தொழில் சம்பந்தமாக ஏற்கனவே அதிகளவில் கடன் வாங்கியிருக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலை நேற்றிரவு கனகதுர்கா தனது தம்பிக்கு நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
காலையில் தனது அக்கா அனுப்பிய தகவலை பார்த்த தம்பி அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் படுக்கையில் உயிரிழந்த நிலையிலும், ராஜாவும், கனகதுர்காவும் தூக்கில் தொக்கிய நிலையில் இறந்துகிடந்துள்ளார்.
இதனையடுத்து அங்க வந்த கள்ளபெரம்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உ.டற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜா கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மகனை கொலை செய்துவிட்டு தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
வதுவார்பட்டியைச் சேர்ந்த அனந்தாயி என்ற அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் க.ர்ப்பம் தரித்துள்ளார்.
5 மாதங்கள் ஆன நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்வது தெரியவந்துள்ளது. திங்கட்கிழமை இரவு அனந்தாயி பரோட்டா சாப்பிட்டார் என்று கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் வயிற்று வலியால் துடித்த அவர், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் என்றும் கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அனந்தாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையின் இறுதி அறிக்கை வந்த பிறகே, அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அக்கம்பக்கத்தினர் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் – சந்தனமேரி தம்பதியின் மூத்த மகள் ஷெரினா கேத்தரின் கல்லூரி 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அவர் யாரையோ காதலிப்பதாக அக்கம்பக்கத்தினர் அவதூறாகப் பேசியதாகவும் அதனை நம்பி பெற்றோரும் அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஷெரினா கேத்தரின், கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பாம்பு கடித்து இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் சொல்லுங்க என்றும் இல்லையென்றால் ஒன்றுக்கு இரண்டாகப் பேசுவார்கள் ” என்றும் அந்தக் கடிதத்தில் மாணவி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மண்டபம் ரயில்வே காலனியைச் சேர்ந்த காளியம்மாள் ரயில்வேயில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். கணவர் இறந்துவிட்ட நிலையில், மூத்த மகள் திருமணம் செய்துகொண்டு மதுரையிலும் இளைய மகள் மணிமேகலை தாயுடனும் வசித்து வந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை உட்பக்கமாக தாழிடப்பட்ட வீட்டுக்குள் காளியம்மாளும் மணிமேகலையும் எரிந்து கருகிய நிலையில் சடலங்களாகக் கிடந்துள்ளனர்.
மணிமேகலைக்கு 33 வயதாகியும் திருமணத்துக்கு வரன் அமையாத விரக்தியில் காளியம்மாள் இருந்ததார் என்று கூறப்படுகிறது. எனவே மன உளைச்சலில் தற்கொலை செய்து.கொண்டனரா அல்லது கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது.
மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியின் தலையை துண்டித்த அவரது சகோதரன் தலையுடன் சிறுவனும் அவனது தாயும் செல்பி எடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் சூப்பிரண்டு நிமித் கோயல் அவர்களிடமிருந்து செல்போனை கைப்பற்றி அதிலிருந்த செல்பியை நீக்கிவிட்டு பின்னர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் சகோதரனையும் தாயையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விசாரணையின் போது அந்த சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றால் ஈர்க்கப்பட்டு இப்படி ஒரு கொலையை செய்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு நிமித் கோயல் கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட அந்த இளம்பெண் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு ஓடிவந்து தனது காதலனை திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர், கணவருடன் இணைந்து லட்கான் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லையென்றாலும் கூட தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தாயும் அந்தச் சிறுவனும் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காகவே அவர்கள் இருவரும் சமரசம் ஆவதுபோல் நடித்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதை உண்மை என்று நினைத்த அந்தபெண் அவர்கள் இருவருக்காகவும் சமையலறையில் டீ போட்டுக் கொண்டு இருந்தபோது,
பின்புறமாக சென்ற சிறுவன் தன்னுடைய சகோதரியை அரிவாளால் வெட்டி தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளான். அதன் பிறகு தாயும் மகனுமாக சேர்ந்து துண்டிக்கப்பட்ட சகோதரி தலையுடன் செல்பி எடுத்துள்ளனர்.
மேலும் அந்த சிறுவன் சகோதரியின் கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட இளம்பெண் கர்ப்பமாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அக்காவின் தலையை வெட்டி அதனுடன் செல்பி எடுத்துக்கொண்ட தம்பியின் வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மருதவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா. இவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சத்யாவிற்கு திருமணம் நடந்து 13 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்யாவிற்கு விவாகரத்து ஆன நிலையில் தனது தந்தையான கணேசன் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
சத்யா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேரளத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சத்யா கடந்த இரண்டு தினங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் எப்பொழுதும்போல் பள்ளிக்கு சென்று இருக்கிறார்.
அப்போது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சத்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சத்யா விஷமருந்தி இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
இருந்தபோதிலும் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் சத்யாவின் தந்தை தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பேரளம் காவல் நிலையத்தில், அவரது தந்தை கணேசன் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் அவரது தந்தை புகாரில் கூறும்பொழுது இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என தனது மகள் கூறி வந்ததாகவும், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவுடன் அவர் உயிரிழந்திருப்பது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் காவல்துறையில் கொடுத்த புகாரில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சத்யாவிற்கு ஏதேனும் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சத்யா பள்ளியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்களை பள்ளி நிர்வாகம் பரப்பி வருவதாக கூறி சத்யாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து பூந்தோட்டம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நீங்கள் கொடுத்த புகாருக்கு வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் சத்யாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.