இரத்தினபுரியில் அகழந்தெடுக்கப்பட்ட 510 கிலோ கிராம் எடை கொண்ட நீல மாணிக்கக் கல்லுக்கு இங்கிலாந்தின் பிரபல மாணிக்கக்கல் ஏலவிற்பனை நிறுவனம் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை விலையாக நிர்ணயம் செய்துள்ளது.
இந்த விலையானது இலங்கை ரூபாயின் பெறுமதியில் 5 ஆயிரம் கோடி ரூபாய். எனினும் குறித்த மாணிக்கக் கல்லின் உரிமையாளர் மற்றும் மாணிக்கல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபையின் பிரதிநிதிகள் இதற்கு இணங்கவில்லை என ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ரத்வத்தே இதனை கூறியுள்ளார்.
இந்த மாணிக்ககல்லுக்கு இலங்கை பிரதிநிதிகள் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை விலையாக நிர்ணயித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரியில் கிடைத்த 510 கிலோ கிராம் எடை கொண்ட இந்த கல், நீல மாணிக்கக் கற்களை கொண்ட கொத்து என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள் மீதான கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வருவதாக ரஸ்யாவின் நிபுணர் ஒருவர் கணித்துள்ளார். இது குறித்து ரஷிய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் (Vladislav Semsukov) தகவல் வழங்கியுள்ளார்.
மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது என்றும் தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும் என்றும் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக சென்றடையும் என்று ரஷிய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் தெரிவித்துள்ளார். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்தாண்டு அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். 2020ம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் இலங்கையில் கோவிட் தொற்று பரவியதை தொடர்ந்து, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இரண்டாம் நிலை வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து வாகன இறக்குமதிக்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, 2022ஆம் ஆண்டிலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுரங்கப்பாதைக்குக் கீழ் உள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டிற்குப் பின்புறத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (09.12.2021) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஏ.எம்.சந்திரலதா வயது 48 என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டார்கள் தங்களது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியைச் சட்டவிரோதமாகப் பொருத்தியுள்ளனர்.
குறித்த பெண் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்குச் செல்லும் போது மின்சாரத்தைத் துண்டித்துவிட்டுச் செல்வதாகவும், இன்றையதினம் அதனைத் துண்டிக்காது மறந்து சென்றதனால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, கோவிட் வைரஸ் பரவல் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாட்டை முடக்காமல் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார். நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்குவதைக் கட்டாயமாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கோவிட் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
ஹட்டன் – ரொசல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாய், தந்தை மற்றும் அவர்களின் பிள்ளை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் ரொசல்ல ரயில்வே நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காலி கராப்பிட்டிய வைத்திசாலையில் பெண் ஒருவருக்கு அபூர்வ சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரத்கம, மொரொய்துடுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணின் இடது கை தோள்பட்டை வழியாக ஊடுருவிய மீன் பிடிக்க பயன்படுத்தும் ஐந்து அடி இரும்பு கொக்கி வெற்றிகரமாக அகற்றப்பட்டுடுள்ளது.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின் துறைசார் நிபுணர்களான ரசிக பத்திரன மற்றும் பாலித படடுவ ஆகியோரால் அகற்றப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டவர் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. இந்த பெண்ணின் கணவர் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் இரும்பு கொக்கியால் பெண்ணை குத்தியுள்ளார்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் குத்திய கொக்கியுடன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது மயக்க நிலையில் வைத்தியர்கள் இருவரால் ஒன்றரை மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் 5 அடி நீளமான இரும்பு கொக்கி அகற்றப்பட்டு பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
தற்போது அந்த பெண் மிகவும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவர் இந்த செயலை செய்துள்ளார்.
எனினும் அதிஷ்டவசமாக அந் பெண்ணின் கை நரம்பு அல்லது எலும்பிற்கு சேதம் ஏற்படாத வகையில் 5 அடி கொக்கி இறங்கியுள்ளது. இதனால் உயிருக்கு ஆபத்தின்றி அந்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வீதிகளில் ஆங்காங்கே வெற்றிலையை சாப்பிட்டு எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பொறுப்புகள், சுற்றாடல் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ச, பொலிஸ் சுற்றாடல் பிரிவுக்கு இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.
வீதிகளில் ஆங்காங்கே எச்சில் துப்புவதால், கடும் அசுத்தம் ஏற்படுவதுடன் கொரோனா போன்ற வைரஸ் தொற்று நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதனால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவதன் அவசியம் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவியல் தண்டனை சட்டத்திற்கு அமைய இந்த குற்றத்தை செய்யும் நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என ரொஷான் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மயிலங்குளம் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி கிராம சேவையாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (08.12.2021) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மயிலங்குளம் சந்திக்கு அண்மித்த பகுதியில் உள் ஒழுங்கையிலிருந்து எதுவித சமிக்ஞைகளுமின்றி பிரதான வீதிக்கு கிரவல் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டையிழந்து,
கிராம சேவகர் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஹைதராபாத் அம்பர்பெட் கோல் நாகா திருமலை நகரை சேர்ந்தவர் தையல் தொழிலாளி ஸ்ரீநிவாஸ். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மனைவி விஜயலட்சுமிக்கு கணவர் ஸ்ரீநிவாஸ் தான் ஜாக்கெட்டுகள் தைத்துக் கொடுத்து வந்துள்ளார். அதன்படி விஜயலட்சுமிக்கு அவரது கணவர் ஜாக்கெட் ஒன்று தைத்து கொடுத்துள்ளார்.
அது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வேறு ஜாக்கெட் தைத்து தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ம.றுப்பு தெரிவித்த கணவர் ஸ்ரீநிவாஸ் உனக்கு பிடித்தது போல் வேண்டுமானால் நீயே தைத்துக்கொள் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஸ்ரீநிவாஸ் கோபத்தில் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமி விரக்தியில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு திரும்பிய ஸ்ரீநிவாஸ் படுக்கை அறையின் கதவு மூடப்பட்டிருந்ததால்,
கதவை உடைத்து பார்த்தபோது மனைவி விஜயலட்சுமி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வ.ழ.க்.குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஜயலட்சுமி, ஜாக்கெட் தைத்து கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் செவிலியராக பணி புரிந்து வந்த 31வயதான இளம்பெண் மேக்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி காதலித்து பணத்தை பறித்துள்ளதாக பளுகல் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போழுது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் புகாரை பெற்று கொண்டு நர்ஸிடம் நடந்த விவரங்கள் எல்லாம் கேட்டறிந்துள்ளார். அப்போதுதான், இளம்பெண் தனியாக வசித்து வருவதை அறிந்து கொண்ட உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் தான் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து தந்து செவிலியரை குடியமர்த்தியுள்ளார்.
இதனையடுத்து பிறகு ஆறுதல் சொல்வது போல அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்றவர், நாளடைவில் நர்ஸை பலாத்காரமும் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நர்ஸ் கர்ப்பமாகிய இதை சுந்தரலிங்கத்திடம் சொல்லி உள்ளார்.
ஆனால் சுந்தரலிங்கமோ அவரை அபார்ஷன் செய்துவிடும்படி சொல்லவும் அதற்கு நர்ஸ் மறு.க்கவும் கட்டாயப்படுத்தி குலசேகரம் அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அபார்ஷன் செய்ய வைத்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு ந.டந்த கொடுமை பற்றி அந்த செவிலியர் பலமுறை போலீசில் புகார் தந்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஒருமுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் தந்ததுடன், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.
மேலும் அந்த செவிலியர் ஜோஸ்பினுக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினரும் இறங்கி போராட்டங்களும் நடத்தினர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது ஒருகட்டத்தில் பொறுமை இழந்த செவிலியர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதற்கு பிறகு மாதர் சங்கத்தினர்தான் விரைந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது.
அதில் அந்த செவிலியர் தாக்கல் செய்துள்ள மனுவில் எனக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து ஆகி உள்ளது. 9 வயதில் ஒரு மகள் உள்ளதாகவும் அவர் தங்கி படிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி,எனது உடமைகளை பறித்து அஜிஸ் என்பவர் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நான் புகார் அளிப்பதற்காக பளுகல் காவல் நிலையத்துக்கு சென்றேன். அப்போது அங்கு சப் இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரலிங்கம் பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி வீட்டுக்கு வந்து என்னை பலாத்காரம் செய்தார்.
இதில் நான் கர்ப்பம் அடைந்தேன். வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கருவை கலைத்தார். இந்த பிரச்சனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கையும் இல்லை.
என்னை பலாத்காரம் செய்த எஸ்.ஐ. மற்றும் அவருக்கு துணை நின்று எனது கருவை சட்ட விரோதமாக கலைத்ததுடன், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனுவின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, பாதி.க்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தியதை தொடர்ந்து வ.ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஸ்.ஐ. சுந்தரலிங்கம், பளுகல் காவல் நிலையத்தில் ஏட்டாக இருந்த கணேஷ்குமார், தச்சன்விளாகத்தை சேர்ந்த விஜின், அபிஷேக் , மூவோட்டுக்கோணம் உமேஷ் 45, தனியார் கிளினிக் டாக்டர் கார்மல் ராணி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தேவராஜ்,
அனில்குமார் ஆகிய 8 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 323, 354 (ஏ),376, 313 ஆகிய பிரிவுகளின் கீழ் ழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்வளவு குற்றச்சாட்டுக்கும் காரணமான உதவி ஆய்வாளராக இருந்த சுந்தரலிங்கம், தற்போது பதவி உயர்வு பெற்று ஆய்வாளராக தேனி மாவட்டத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.
உத்தர பிரதேசத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவி அனைவரையும், கொன்று.விடும் என்ற பயத்தில் மருத்துவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சுஷில்குமார். இவரது மனைவி சந்திரபிரபா. இவர்களுக்கு ஷிகார் சிங், குஷி சிங் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
கொரோனா தொற்றால் கடந்த சில நாட்களாக மன உளைச்சரில் இருந்த சுஷில்குமார், நேற்று முன் தினம் தேனீரில் விஷம் கலந்து கொடுத்து மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்துவிட்டு, போலீசில் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, சுஷில்குமாரை கைது செய்தனர். கொரோனா பயத்தால் மனைவி மற்றும் மகள்களை மருத்துவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் ஈரற்பெரியகுளம், செட்டிகுளம் மற்றும் மூன்றாவது சம்பவமாக நகரில் நேற்றையதினமும் (06.12.2021) எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த பெண் காஸ் சிலிண்டர் அண்மைக்காலமாக வெடிப்பதால் அவதானமாகவும் முன் எச்சரிக்கையுடனும் இருந்தமையால் உடனடியாக சிலிண்டரை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். குறித்த வெடிப்பின் போது எரிவாயு அடுப்பு உடைந்து சேதமாகியிருந்தது.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு தலமையிலான பொலிஸ் குழுவினரினால் இன்றையதினம் வீட்டாரிடம் விசாரணைகள் முன்னெடுத்திருந்ததுடன் வெடிப்பு சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் இன்று (07.12) தோற்றகடிக்கப்கட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு கடந்த மாதம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அதனை மீள திருத்தி இன்றைய தினம் (07.12) சபை தவிசாளர் எஸ்.தணிகாசலம் அவர்களால் சபையில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து பாதீடு தொடர்பான வாதங்கள் இடம்பெற்றதுடன், பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்எப், சிறிலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சைக் குழு உள்ளடங்கிய 17 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி ஒரு உறுப்பினருமாக 9 பேர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன்படி 9 மேலதிக வாக்குகளால் வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டது.
சமையல் எரிவாயு விபத்து காரணமாக தீக்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மாத்தளை உடுபிஹில்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்க முயற்சித்த போது உடலில் தீப்பிடித்துள்ளது. கடும் தீக்காயங்களுக்கு உள்ளான பெண், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரண்டு வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் உடல் நிலை பாதிப்புடனேயே இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக மருத்துவப் பரிசோதனைக்காக பெண்ணை நேற்று மீண்டும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பரிசோதனையில் அவரது உடலில் சக்கரையின் வீதம் குறைந்து உடல் நிலைப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் மரணமடைந்துள்ளதாக மருத்துவர் அறிவித்துள்ளனர்.
மாத்தளை உடுபிஹில்ல பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான எச்.எம்.சந்திரா குமார என்ற பெண்ணே தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த மரண சம்பவம் குறித்து சமையல் எரிவாயு நிறுவனம் மற்றும் நுகர்வோர் அதிகார சபை ஆகியவற்றுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
திருகோணமலை – கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி பிரதேசத்தில் இருந்து கப்பல் துறை தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.