வவுனியா புகையிரத நிலையத்தில் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் மரநடுகை!!

வவுனியா புகையிரத நிலையத்தில்..

சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தேசிய பேரிடர் துயர் குறைப்பு நாள் அக்டோபர் மாதம் கடைசி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

இயற்கையாகவும் மனிதனின் கவனக்குறைவினாலும் , தீவிரவாத செயல்களாலும் ஏற்படும் இழப்புகள் இன்னல்கள் போன்ற பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

அந்த வகையில் வவுனியா மத்திய புகையிரத நிலையத்தில் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் தினத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

பிரதான புகையிரத நிலைய அதிபர் இ.சந்திரகுமார் மற்றும் புகையிரத நிலைய அதிபர் ச.வைகுந்தன் ஆகியோர் இணைந்து புகையிரத நிலைய வளாகத்தில் பயன்தரும் மரங்களை நாட்டி வைத்திருந்தனர்.

பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொ.ன்.ற கணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

கேரளாவில்..

கேரளாவில் மனைவி உத்ராவை பா.ம்பை வைத்து கொ.லை செ.ய்.த வழக்கில் கணவன் சூரஜுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் த.ண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ்.

இவர் மனைவி உத்ரா (25). இவர் கடந்தாண்டு மே 6ஆம் திகதி வீட்டு கட்டிலில் படுத்திருந்த போது வி.ஷப் பா.ம்பு க.டித்ததில் உ.யிரிழந்தார். முதலில் சாதாரண பா.ம்பு க.டி என்று கருதப்பட்ட இச்சம்பவம் பின்னர் கொ.லை வழ.க்காக மாறியது.

அதன்படி சூரஜ் தான் மனைவியை பாம்பை ஏவி கொ.லை செ.ய்தது தெரியவந்தது. உத்ராவை கொ.ன்.று.வி.ட்.டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பா.ம்.பை வாடகைக்கு வாங்கி க.டிக்க வைத்தார். இதை தொடர்ந்து சூரஜ் கை.து செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அ.திர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவர் மீதான வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் சூரஜ் கு.ற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கான த.ண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சூரஜுக்கு இரட்டை ஆயுள் த.ண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இதோடு ரூ 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் அ.திரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனிடையில் சூரஜுக்கு இந்த த.ண்டனை பத்தாது எனவும், ம.ரண த.ண்டனை கோரி மேல்முறையீடு செய்வோம் எனவும் உத்ராவின் பெற்றோர் ஆக்ரோஷமாக கூறியுள்ளனர்.

நள்ளிரவில் கோழிக் கறி சாப்பிட்ட தாய் மற்றும் மகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

தூத்துக்குடி..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்தனர். தங்கப்ப நகரைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி கற்பகம் மற்றும் மகள் தர்ஷினி ஆகியோர் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்கு லேசான வயிற்றெரிச்சல் ஏற்படவே அருகில் உள்ள கடையில் இருந்து 10 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானத்தினை வாங்கி குடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா – மன்னார் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா வேப்பங்குளம் மன்னார் பிரதான வீதியில் ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருந்த கூலர் வாகனம் சமுர்த்தி வங்கிக்கு முன்னால் சென்றபோது திடீரென்று பிரேக் பிடித்தால் பின்னர் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் ச.ர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் செயல்!!

சந்நிதி முருகன் ஆலயத்தில்..

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் மற்றும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தையும் இன்று மாலை சந்திக்கவுள்ள அவர் பின்னர் காங்கேசன்துறையில் தங்கியிருந்து நாளை வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வது சம்பந்தமாக கிளிநொச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பயணமாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாளைய கூட்டத்துக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயங்களுக்குள் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி பாதணியை அகற்றாமல் சென்றமை பெரும் ச.ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

1700 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட கொட்டகை முன்பாக இன்று (13.10) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார், 1700 ஆவது நாளாக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்களது பிள்ளைகளுக்கு எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. ஜனாதிபதி மரணச் சான்றிதழ் வழங்குவதாக கூறியுள்ளார்.

எந்தவொரு தாயும் மரணச் சான்றிதழ் வாங்குவதற்கு தயாராக இல்லை. அதை ஜனாதிபதி சொன்ன நாளில் இருந்து தாய்மார் தேம்பி தேம்பி அழுகிறார்கள். ஜனாதிபதி அமெரிக்கா சென்று தனது பேரப்பிள்ளையை தூக்கி மகிழ்கின்றார்.

நாங்கள் அம்மா அம்மா என கதறும் போது எமது பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு போராடிக் கொண்டிருக்கின்றோம். அவருக்கு இருக்கிற பாசம் தானே எங்களுக்கும் எங்கள் பிள்ளைகள் மேல் இருக்கும்.

அம்மா என்று சத்தம் கேட்கும் போது எமது வயிறு கொதிக்கிறது. கண்கண்ட சாட்சியங்கள் இருக்கிறது. கோட்டபாய துரோகி. எவ்வாறு நாம் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

திருமணம் நடைபெறவிருந்த தம்பியை கொலை செய்த அண்ணன்!!

ஸ்டீவன் ராஜ்..

குடும்பத் தகராறு காரணமாக தன் உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்றைய தினம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திக்கிரியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டீவன் ராஜ் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தக் கொலையுடன் தொடர்புடைய மூத்த சகோதரன் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்கு இம்மாதம் 21ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் குழுவினால் இலங்கையில் நடந்த பாரிய மோசடி!!

இலங்கையில் ஒன்லைனில் பொருட்களை வாங்க மற்றவர்களின் வங்கி அட்டைகளின் எண்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கை ஒன்றை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அரச வங்கி அட்டை பிரிவின் பிரதான முகாமையாளர்களின் முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் குருநாகல் தம்பொக்க பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரை குற்ற விசாரணை திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஒரு இன்ஸ்டாகிராம் குழுவின் உதவியுடன் மூன்று நாட்களில் 29 பேரின் வங்கிக் கணக்குகளில் 114 முறை பொருட்கள் கொள்வனவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களில் 841000 ரூபாய் மோசடி செய்துள்ள இந்த நபர் நாடு முழுவதும் உள்ள மக்களின் வங்கி கணக்கிற்குள் மோசடியான முறையில் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகளுக்கமைய இன்ஸ்ட்ராகிராம் ஊடாக இயங்கும் குழுவொன்றினால் வங்கி கணக்குகளில் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குழுவில் உள்ள அனைவரும் யாருடைய அடையாளமும் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்காக வேலை செய்துள்ளனர். குழுவின் உறுப்பினர் ஒருவர் வங்கி அட்டை எண்களின் மோசடி பயன்பாடு குறித்து முழு குழுவினருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்களின் வங்கி அட்டையின் இலக்கம் மற்றும் இறுதி 3 இலக்கங்களை திருடி இந்த மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இளைஞன் மோசடியான முறையில் கொள்வனவு செய்துள்ள கணினி, கையடக்க தொலைபேசி, பாதணி உட்பட பொருட்கள் சந்தேக நபரின் அறையில் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் நோயாளிக்கு காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை மீது நடவடிக்கை!!

பிரபல தனியார் வைத்தியசாலை..

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு காலாவதியான மருந்து வழங்கப்பட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சோதனை நடவடிக்கை ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு சுகவீனம் ஏற்ப்பட்ட நிலையில் நேற்று (12.10) வவுனியா, குடியிருப்பு, குளவீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சையினை பெற்றுக் கொண்டதுடன், மருந்தினையும் பெற்றுச் சென்றிருந்தார்.

அந்த மருந்தினை நோயாளி இரவு பயன்படுத்திய நிலையில் அவருக்கு சுகயீனம் ஏற்பட்டதுடன், உடலில் சில மாற்றங்களையும் அவதானித்துள்ளார். இதனையடுத்து குறித்த மருந்துகளை சோதித்து பார்த்த போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவை காலாவதியாகியுள்ளாகியமை தெரியவந்துள்ளது.

பின்னர் இன்று (13.10) காலை குறித்த வைத்தியசாலைக்கு சென்ற அவர் அங்கு கடமையில் இருந்தவர்களிடம் விடயத்தினை தெரியப்படுத்தியதுடன், தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது அங்கிருந்த பணியாளர் காலாவதியான மருந்தை மூன்று மாதத்திற்கு பயன்படுத்தலாம் என நோயாளிக்கு தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து, குறித்த தனியார் வைத்தியசாலைக்கு வருகை தந்த பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் சோதனை நடத்தியதுடன்,

காலாவதியான சில மருந்துகளையும் மீட்டிருந்தனர். இது தொடர்பில் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்ட தனியார் வைத்தியசாலையினர் இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்திருந்தனர்.

 

இப்படியும் ஓர் மர்மமான ஏரி : இங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை.. சினிமாவை மிஞ்சும் திகில் கதை!!

மர்ம ஏரி..

மியான்மரில் உள்ள ஏரி ஒன்றில் மர்மமான திகில் சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் எல்லைக்கு அருகில் இந்த மர்மமான ஏரி அமைந்துள்ளது.

இது நவாங் யாங் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த ஏரியை பற்றி நாம் யாரும் கேள்விபட்டிருக்க மாட்டோம். அங்கு வசிக்கும் மக்கள் எந்த ஏரிக்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை என்று கூறுகின்றனர்.

இரண்டாம் உலக போரின் போது இந்த ஏரிக்கு அருகில் அமெரிக்க விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறங்கியுள்ளது. ஆனால் அதன் பிறகு விமானம் மற்றும் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாயமாய் மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதே போல் இன்னொரு சம்பமும் நடந்துள்ளது. இரண்டாம் உலக போர் முடிந்த பிறகு ஜப்பானிய வீரர்கள் நாடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த ஏரிக்கு அருகே வந்தபோது வழி தவறி மறைந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

ஆனால் இந்த ஏரியை சுற்றி வசிக்கும் கிராம மக்கள் வேறொரு கதையை கூறுகின்றனர். பல வருடங்களுக்கு முன்பு ஓரி கிராமவாசி ஒரு பெரிய மீனை ஏரியில் இருந்து பிடித்துயுள்ளார்.

இதனால் அவர் முழு கிராமத்தையும் விருந்துக்கு அழைத்துள்ளார். ஆனால் ஒரு வயதான பாட்டி மற்றும் பேத்தி மட்டும் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

இதனால் கோபமடைந்த அவர் அந்த இரண்டு பேரையும் கிராமத்தை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். அடுத்த நாளே கிராமம் முழுவதும் ஏரியில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆய்வாளர்கள் ஏரியின் உண்மையான மர்மத்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மரண அறிவித்தல் : ராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை!!

கரம்பொன், ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும் குருமன்காடு வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணம் கரம்பன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராகவும் உப அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்ற ராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை அவர்கள் நேற்று முன்தினம் (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும் ஜெரால்ட் ஜோசப் பயஸ், ரெஜினோல்ட் மைக்கல், இயூஜின் மசினால்ட் வெனீசியஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரதினா பெலிஷியா, இந்திராணி, சசிகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் லவலோஜிதா, கீர்த்திகா, பிரெவின், நிரஞ்சன், பிரித்திவி, மோனிஷா, கனிஸ்ரன், டிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் பிரஜனின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று 12.10.2021 செவ்வாய்க்கிழமை அன்று கொவிட் நடைமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டது.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.

வவுனியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : இருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று மதியம் (12.10) வெளியாகின.

அதில் வவுனியா மாவட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேலும் 25 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக குருமன்காடு பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய பெண் ஒருவரும் என இருவர் மரணமடைந்துள்ளனர்.

மரணித்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் விபத்து : சாராதி படுகாயம்!!

விபத்து..

திருகோணமலையிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்திலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான குறித்த வாகனமானது, வீதியின் அருகிலுள்ள பாலம் ஒன்றினை உடைத்துக்கொண்டு திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் தடம்புரண்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த யுவதி!!

விபத்து..

கொழும்பு – ஹொரனை பிரதான வீதியில் பொரலஸ்கமுவ பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார். இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலை விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த செனுமி பெரேரா என்ற 20 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

கட்டடம் ஒன்றிற்காக பொருட்களை எடுத்து செல்லும் போது இவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை களுபோவில தெற்கு வைத்தியசாலையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் பொலிசார் திடீர் சோதனை : 10 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

திடீர் சோதனை..

சுகாதார நடைமுறைகள் குறித்து வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் பொலிசார் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், 10 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப் பிரிவினரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக பொலிசார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியா புகையிரத நிலைய வீதி, குருமன்காடு ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த பொலிசார் முக்கவசம் அணியாது வர்த்த நிலையங்களில் பணிபுரிந்தோர், முககவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

இதன்படி 10 வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுமாறும் பொலிசாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விஷப்பாம்பை ஏவி மனைவியை கொ.ன்.ற கணவன் : நாட்டையே உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

கேரளாவில்..

கேரளாவில் மனைவியை கண்ணாடிவிரியன் பாம்பை வைத்து கொ.லை செ.ய்.த வழக்கில் கணவன் கு.ற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). கடந்தாண்டு பிப்ரவரியில் கணவர் வீட்டில் உத்ராவை பா.ம்பு க.டித்தது.

இதற்கு சி.கிச்சை பெற்ற பின்னர் தாய் வீட்டில் இருந்த கட்டிலில் படுத்து ஓய்வு கொண்டிருந்த போது 2020 மே 6ல் மீண்டும் உத்ராவை கொ.டி.ய வி.ஷப்பாம்பு க.டித்ததில் இ.றந்தார். அறையில் இருந்த பா.ம்பை உ.றவினர்கள் அ.டி.த்.து கொ.ன்.ற.ன.ர்.

முதலில் சாதாரண பா.ம்பு க.டி என்று கருதப்பட்ட இச்சம்பவம் பின்னர் கொ.லை வ.ழக்காக மாறியது. உத்ரா சற்று ம.னநிலை பாதிக்கப்பட்டவர். சூரஜ் பெற்றோரிடம் இதை சொல்லி மூன்றை ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, கார், 10 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.

நகை பணத்தை செலவு செய்த சூரஜ் மேலும் பணம் கேட்டு உத்ராவை கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.னா.ர். உத்ராவை கொ.ன்.று.வி.ட்.டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ்,

பாம்பை வாடகைக்கு வாங்கி க.டிக்க வைத்தார். முதல் முயற்சி தோல்வி அடைந்து. இரண்டாவது முயற்சியில் உத்ரா இ.றந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சூரஜ் கை.து செ.ய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அ.திர்வலையையும், ப.ரபரப்பையும் ஏற்படுத்தியது. அவர் மீதான வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி சூரஜ் கு.ற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது, அவருக்கான த.ண்டனை விபரம் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. சூரஜ் கு.ற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது மனநிறைவை தருவதாக உத்ராவின் பெற்றோர் கூறியுள்ள நிலையில் அவருக்கு அதிகபட்ச த.ண்டனை வழங்கவேண்டும் என கோரியுள்ளனர்.