விஷப்பாம்பை ஏவி மனைவியை கொ.ன்.ற கணவன் : நாட்டையே உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

கேரளாவில்..

கேரளாவில் மனைவியை கண்ணாடிவிரியன் பாம்பை வைத்து கொ.லை செ.ய்.த வழக்கில் கணவன் கு.ற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). கடந்தாண்டு பிப்ரவரியில் கணவர் வீட்டில் உத்ராவை பா.ம்பு க.டித்தது.

இதற்கு சி.கிச்சை பெற்ற பின்னர் தாய் வீட்டில் இருந்த கட்டிலில் படுத்து ஓய்வு கொண்டிருந்த போது 2020 மே 6ல் மீண்டும் உத்ராவை கொ.டி.ய வி.ஷப்பாம்பு க.டித்ததில் இ.றந்தார். அறையில் இருந்த பா.ம்பை உ.றவினர்கள் அ.டி.த்.து கொ.ன்.ற.ன.ர்.

முதலில் சாதாரண பா.ம்பு க.டி என்று கருதப்பட்ட இச்சம்பவம் பின்னர் கொ.லை வ.ழக்காக மாறியது. உத்ரா சற்று ம.னநிலை பாதிக்கப்பட்டவர். சூரஜ் பெற்றோரிடம் இதை சொல்லி மூன்றை ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, கார், 10 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.

நகை பணத்தை செலவு செய்த சூரஜ் மேலும் பணம் கேட்டு உத்ராவை கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.னா.ர். உத்ராவை கொ.ன்.று.வி.ட்.டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ்,

பாம்பை வாடகைக்கு வாங்கி க.டிக்க வைத்தார். முதல் முயற்சி தோல்வி அடைந்து. இரண்டாவது முயற்சியில் உத்ரா இ.றந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சூரஜ் கை.து செ.ய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அ.திர்வலையையும், ப.ரபரப்பையும் ஏற்படுத்தியது. அவர் மீதான வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி சூரஜ் கு.ற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது, அவருக்கான த.ண்டனை விபரம் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. சூரஜ் கு.ற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது மனநிறைவை தருவதாக உத்ராவின் பெற்றோர் கூறியுள்ள நிலையில் அவருக்கு அதிகபட்ச த.ண்டனை வழங்கவேண்டும் என கோரியுள்ளனர்.

இலங்கையிலிருந்து திரும்பிச் சென்ற அமெரிக்க சுற்றுலாப் பயணி : விசாரணைக்கு உத்தரவு!!

அமெரிக்க சுற்றுலாப் பயணி..

இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமங்களுக்கு உள்ளாகி, மீண்டும் திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த இந்த அமெரிக்க சுற்றுலாப் பயணிக்கு போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமை மற்றும் தனது முகவர் நிறுவனத்துடன் தொடர்புகொள்ள முடியாத காரணம் ஆகியவற்றால், 5 மணி நேரத்திற்கு பின்னர் திரும்பிச் சென்றுள்ளார்.

குறித்த அமெரிக்க சுற்றுலாப் பயணி இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்தி, அறிக்கையை வழங்குமாறு,

பிரசன்ன ரணதுங்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். இது சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து பேரிடி!!

ஹோட்டல் உணவு வகை..

இலங்கையில் ஹோட்டல் உணவு வகைகளின் விலைகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, கோதுமை மா, பால் மா உள்ளிட்ட பொருட்களின்,

விலை அதிகரிப்பு காரணமாக ஹோட்டல் உணவு வகைகளின் விலைகளும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒன்றியத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உணவுப் பொதி (lunch packet), ப்ரைட் றைஸ் (fried rice), கொத்து (kottu), பால் தேனீர் உள்ளிட்டனவற்றின் விலைகள் நாளை முதல் 10 ரூபாவினால் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் திருமணத்தன்றே புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!

புதுமணத் தம்பதி..

புத்தளத்தில் அனுமதியின்றி திருமண நிகழ்வு நடத்திய நபர்கள் தனிமைப்படுத்த சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தின் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் திருமணம் செய்த தம்பதியும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. மதுரங்குளிய – கொத்தன்தீவு பிரதேச வீட்டில் திருமண நிகழ்வு ஒன்று நடத்தப்படுவதாக கடந்த 8ஆம் திகதி பிற்பகல் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விசாரணை நடவடிக்கைகளுக்காக சுகாதார பரிசோதகர்கள் அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்களுக்கு கடுமையாக எச்சரித்த சுகாதார பரிசோதகர்கள் அவர்களை அந்த வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

விரைவில் மீண்டும் எரிபொருளின் விலை உயரும் சாத்தியம்!!

எரிபொருளின் விலை..

விரைவில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்தை சந்தித்து வருவதால்,

எரிபொருட்களின் விலைகளை கட்டாயம் அதிகரிக்க வேண்டு் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கூறியுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாகவும் இந்த நஷ்டத்தை ஈடு செய்ய விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் இதற்காக அமைச்சரின் அனுமதியை கோரியுள்ளதாகவும் விஜேயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தினால் நாட்டில் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் எரிபொருள் விலையேற்றம் அதிகரிக்கப்படுமாயின் பொது மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்று எதிர்கட்சியினர் கடுமையாக சாடியுள்ளனர்.

உலக சாதனையொன்றை நிலைநாட்டும் முயற்சியில் மாத்தளையை சேர்ந்த நபர்!!

முஹமது மஷ்சுன் முசாதிக்..

உலக சாதனையொன்றை நிலைநாட்டும் முயற்சியில் மாத்தளை – கோன்காவில பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான முஹமது மஷ்சுன் முசாதிக் என்ற நபர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆறு அடி ஆழமான குழியொன்றுக்குள் இறங்கி, அதற்கு மேல் தீயிட்டு ஆறு மணித்தியாலங்கள் தன்னால் ஆபத்து இன்றி குழிக்கு உள்ளே இருக்க முடியும் என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

உலகில் எவரும் இவ்வாறான ஓர் முயற்சியை செய்தது இல்லை எனவும், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இதனை தான் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் ஏற்கனவே நண்பர்களுடன் இணைந்து பல தடவைகள் இவ்வாறு பரீட்சார்த்த அடிப்படையில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் கமராக்களைக் கொண்டு நண்பர்களின் உதவியுடன் 2 மணித்தியாலங்களுக்கு மேல் ஆறு அடி ஆழமான குழியில் இறங்கி அதன் மேல் தீயிடச் சொல்லி குழியில் இருந்ததாகத் தெரிவிக்கின்றார். இது குறித்த காணொளி ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என அவர் குறிப்பிடுகின்றார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் குழியொன்றில் இறங்கி மண்ணால் மூடி 21 நிமிடங்கள் குழியில் இருந்ததாகவும் இதுவே உலக சாதனையாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார். எனினும், தமது உலக சாதனை முயற்சியானது மேலே தீயிட்டு குழிக்குள் இருப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையும் அதிகரிப்பு!!

பாணின் விலை..

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என மலையகத்தில் உள்ள வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் இன்று முதல் பாண், பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபா முதல் 10 ரூபா வரையில் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிவாயுவின் விலைகள் திடீரென குறைப்பு!!

எரிவாயு..

இலங்கையில் நேற்றையதினம் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று சிறியளவில் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

நேற்று அதிகரித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,675 ஆக மாற்றமடைந்துள்ளது. 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 30 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 14 ரூபாவாலும் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை இரண்டு மடங்காக உயர்வு!!

சமையல் எரிவாயு..

சமையல் எரிவாயுவின் விலை பெரிய தொகையினால் உயர்த்தப்பட்டுள்ளது. லிற்றோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1257 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 2750 ரூபாவாகும். இதுவரையில் 1493 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயுவின் விலை 503 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 1101 ரூபாவாகும். 2.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 520 ரூபாவாகும்.

மருந்து வாங்க சென்ற தம்பதிக்கு குடும்பத்தினர் கண்முன்னே நடந்த கொடூரம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மருந்து வாங்க சென்ற தம்பதி சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (45).

இவரது மனைவி நிர்மலா (34). டேனியல் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று உடல்நலம் சரியானதும் சொந்த ஊருக்கு வந்து செல்லலாம் என்று நினைத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஊருக்கு வந்துள்ளார்.

மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தினத்தன்று டேனியல், அவரது மனைவி, மகள்கள், உறவினர்கள் என அனைவரும் காரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்குள்ள மருந்தகத்தில் மருந்து வாங்க டேனியல் மற்றும் அவரது மனைவி நிர்மலா இருவரும் சென்றுள்ளனர். மருந்தை வாங்கிவிட்டு தம்பதிகள் சாலை கடக்கும் பொழுது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய இருவரும் குழந்தைகள் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வாகனத்தை இயக்கி வந்தவர் தப்பித்த நிலையில் வாகனம் பறிமுதல் செய்து பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 8 மாதத்தில் 28 வயதான இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் த.ற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார்.

இவருக்கும், சுஜிதா (28) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மனைவியை அழைத்துக்கொண்டு செல்வகுமார் சென்னை சென்றார்.

அங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக செல்வகுமாருக்கு சரிவர வேலை இல்லை. திருமணம் ஆகி ஒரு மாதம் முடிந்த நிலையில் சுஜிதாவை அழைத்துக்கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார் செல்வகுமார்.

பின்னர் மாமனார் வீட்டில் சுஜிதாவை விட்டுவிட்டு செல்வகுமார் மீண்டும் சென்னை சென்றுள்ளார். அதன்பிறகு செல்போனில் மட்டும் மனைவியுடன் செல்வகுமார் பேசி வந்துள்ளார்.

கடந்த 7 மாதங்களாக அவர் மனைவியை பார்க்க வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் செல்வகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்ததாக தெரிகிறது. அது சமீபத்தில் தான் சுஜிதாவுக்கு தெரியவந்தது.

இதனை அறிந்த சுஜிதா அதிர்ச்சியடைந்ததோடு மனம் உடைந்தார். மேலும் கடந்த 7 மாதங்களாக கணவர் தன்னை பார்க்க வரவில்லையே என்ற கவலையிலும் இருந்துள்ளார்.

இதற்கிடையே வீட்டில் தனியாக இருந்த சுஜிதா, தன்னுடைய அறையில் நேற்று காலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுஜிதாவின் தாய் விஜயபானு அளித்த புகாரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியா ஓமந்தை அரச வீட்டுதிட்டத்தில் இடம்பெற்று வந்த கிராமிய வழிபாட்டு முறையை மீண்டும் ஏற்படுத்தக் கோரிக்கை!!

ஓமந்தை அரச வீட்டுதிட்டத்தில்..

வவுனியா, ஓமந்தை அரச வீட்டுத் திட்டத்தில் கடந்த 6 வருடங்களாக பக்தி பூர்வமாக இடம்பெற்று வந்த கிராமிய வழிபாட்டு முறையை மீண்டும் ஏற்படுத்தி தருமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனிடம் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு வந்த 85 குடும்பஙகள் கையெப்பமிட்ட மகஜர் ஒன்றும் கையளிக்பகப்பட்டுள்ளது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பக்தி பூர்வமாக இடம்பெற்று வந்த வழிபாட்டு முறையை மீண்டும் ஏற்படுத்தக் கோருக்கின்றோம். அதனடிப்படையில், கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத் திட்டத்தில் உள்ள ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தில் பின்பற்றிவந்த வழிபாட்டு முறையை இல்லாது ஒழித்தமை,

பக்தி பூர்வமாகவும் முறைப்படியும் ஆரம்பத்தில் இருந்து பூசகராக கடமையாற்றி வந்த சு.வரதகுமார் அவர்களை வெளியேற்றியமை, இவ்வாறான பாரிய மாற்றத்தை பொதுக்க கூட்டம் ஒன்றை கூட்டாமலும்,

பெரும்பாலன வழிபடுபவர்களின் அபிப்பிராயங்களை கேட்காமலும், நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலரின் தன்னிச்சையான முடிவுடன் மேற்கொள்ளப்பட்டமை முறைகேடானது.

ஆலயம் ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து இன்று வரை வழிபட்டு வரும் ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தை இடிக்க முயலும் முடிவு மனவருத்தைத்தையும், மனப்பயத்தையும் தருகின்றது.

பாரிய பொருட் செலவில் அமைக்கப்பட்ட கோயிற் கிணற்றை இடித்து மூடிவிட முயல்கின்றமை, நாம் வசிக்கும் குடியிருப்பில் பாம்பினால் ஏற்பட்டு வந்த அச்சத்தைக் போக்க அனைத்து மக்களாலும், விரும்ப உருவாக்கபடபட்ட நாகதம்பிரான் பூசை முறையை நீக்கியமையும்,

அதற்கான வழிபடுநிலையமான புற்றை நீக்க முயற்சி செயது வருகின்றமை ஆகிய செயற்பாடுகளை வழிபடும் நாம் எதிர்கின்றோம் என தெரிவித்து 85 பேரின் கையொப்பங்களுடன் குறித்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha), இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேராவுடன்(Tissara Perera) கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இராணுவத்தின் 72ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அநுராதபுரம், சாலியபுர கஜபா ரெஜிமெண்ட் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார்.

அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தையும் திறந்து வைத்ததன் பின்னா் ஜனாதிபதி, இலங்கை அணி வீரர் வீரர் திசர பெரேராவுடன் கிரிக்கெட் விளையாடியமை அனைவரதும் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில், முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜந்த மெண்டிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

டிசம்பரில் இலங்கைக்கு ஏற்படவுள்ள பேராபத்து : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கோவிட் தொற்று..

கோவிட் தொற்று முடிவுக்கு வந்து விட்டது என நினைத்து மக்கள் அசமந்தமாக செயற்பட்டால் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்,

வைத்தியர் கமல் பெரேரா(Kamal Perera) தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதமளவில் கோவிட் ஐந்தாம் அலை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கோவிட் தொற்றை மறந்து செயற்படுவதாகவும், அவர் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

புதிய கற்கை நெறிகள்..

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் இம்மாதம் 15ஆம் திகதி NVQ 3,4 மட்ட 6 மாத கால புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பொருத்தமான மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

A/C மெக்கானிக், பிளம்பிங், வயரிங், மோட்டார் சைக்கிள் திருத்துதல் ஆகிய கற்கைநெறிகளே இம் மாதம் 15ம் திகதிமுதல் ஆரம்பிக்கபபடவுள்ளன.

ஆண்டு 9 இல் சித்தியடைந்த மாணவர்கள் இக் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபாய் ஊக்குவிப்புது தொகையாக வழங்கப்படும்,

மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.

லண்டனிலிருந்து சென்ற விமானத்தில் நடுவானில் குழந்தை பிரசவித்த பெண்!!

நடுவானில்..

லண்டனிலிருந்து இந்தியா நோக்கி பறந்த விமானமொன்றில் நடுவானில் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர் இந்தியா விமானமொன்று கருங்கடலை கடந்து வந்து கொண்டிருந்தபோது,

விமானத்தில் பயணித்த, கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த, விமானத்தில் பயணித்த மருத்துவக்குழுவினர் விமான ஊழியர்களின் உதவியுடன், உடனடியாக கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சையளித்து பிரசவம் பார்த்துள்ளனர்.

குறித்த தாய் ஆண் குழந்தையொன்றினை பெற்றெடுத்ததும் தாய்க்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் தாயையும், குழந்தையையும் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன்,அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளதாகவும்,விரைவில் அவர்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் ஏர் இந்தியா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.