லண்டனிலிருந்து சென்ற விமானத்தில் நடுவானில் குழந்தை பிரசவித்த பெண்!!

நடுவானில்..

லண்டனிலிருந்து இந்தியா நோக்கி பறந்த விமானமொன்றில் நடுவானில் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. லண்டனில் இருந்து கடந்த செவ்வாய்க்கிமை கொச்சிக்கு ஏர் இந்தியா விமானமொன்று கருங்கடலை கடந்து வந்து கொண்டிருந்தபோது,

விமானத்தில் பயணித்த, கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த, விமானத்தில் பயணித்த மருத்துவக்குழுவினர் விமான ஊழியர்களின் உதவியுடன், உடனடியாக கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சையளித்து பிரசவம் பார்த்துள்ளனர்.

குறித்த தாய் ஆண் குழந்தையொன்றினை பெற்றெடுத்ததும் தாய்க்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் தாயையும், குழந்தையையும் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன்,அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளதாகவும்,விரைவில் அவர்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் ஏர் இந்தியா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை முழுமையாக திறக்கும் திகதி அறிவிப்பு!!

பயணத் தடை..

இலங்கையில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயண தடையை நீக்கி இயல்பு நிலையை ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி நாட்டை முழுமையாக திறப்பதாக உறுதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இராஜங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 21ம் திகதிக்கு பின்னர், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மாகாணங்களுக்குள் பஸ் சேவை வழமை போன்று தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் இரவு வேலை முடிந்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று மதியமளவில் இறந்தநிலையில் பிரமந்தனாறு பிரதான கால்வாயில் இனங்கானப்பட்டதையடுத்து தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபர் 51 வயதுடைய இராமலிங்கம் புஸ்பராஜ் எனும் 6 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு அ.திர்ச்சித் தகவல்!!

எரிவாயு, கோதுமை மா மற்றும் சிமெந்து..

நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் எரிவாயு, கோதுமை மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் புதிய விலைகள் குறித்த முடிவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது.

இறக்குமதியாளர்கள் இந்தப்பொருட்களுக்கான விலைகளை அதிகளில் அதிகரிக்கச் சொன்னதை அடுத்தே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) எரிவாயு நிறுவனங்கள் 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரை சுமார் ரூ .1000 க்கும்,

சிமெந்து நிறுவனங்கள் ஒரு பைக்கற் சிமெந்தின் விலையை ரூ .180 க்கும், கோதுமை மாவு நிறுவனங்கள் கிலோ ரூ .20 க்கும் அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா – ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (10.10.2021) காலை இடம்பெற்ற இவ்விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது, நெடுங்கேணியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீதியின் மறுபக்கமாக திருப்பியுள்ளது.

இதன்போது வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான ஓமந்தை மருதோடையை சேர்ந்த 30 வயதுடைய கமல்ராஜ் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழில் ஆறு வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம் : சோகத்தில் பிரதேசவாசிகள்!!

யாழில்..

சங்கானை – தேவாலய வீதியை சேர்ந்த சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சங்கானை ஸ்தான அ.மி.த.க பாடசாலையில் கல்வி பயிலும் நிரோஜன் ஸ்டீபன் (வயது 06) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன் : கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு!!

என்மீதும் தற்போதைய அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதனை ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் நிறுவப்பட்டு 72ம் ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு பணிகள் செய்யப்படாத காரணத்தினால் என்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதனை ஏற்றுக்கொள்கிறேன்.

அனைத்து பின்னடைவுகளுக்கும் கோவிட் பெருந்தொற்றுடனான போராட்டமே காரணமாகும். இண்டு ஆண்டுகள் கோவிட் பெருந்தொற்றுடன் போராட நேரிட்டது.

புதிய சக்தியுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்த நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் நான் உறுதிமொழி வழங்குகின்றேன். நாட்டை முடக்கியமை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

எனினும், இந்தக் காரணிகளை கூறி நாம் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்ய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும். புதிய அரசியல் அமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும்.

ஏற்கனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய இவ்வாறு அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்படும். நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்படாது.

இதற்காக அர்ப்பணிப்புடன் அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து கடமையாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் ஊழல் மோசடிகளில் இன்றி முன்னோக்கி நகர அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

கோவிட் பெருந்தொற்று காரணமாக பொருளாதாரம் பின்னடைவை சந்தித்த போதிலும், இந்தக் காலப் பகுதியில் நாட்டில் பாரியளவு சேவைகள் ஆற்றப்பட்டுள்ளது.

உலகின் இராணுவங்கள் போரில் மட்டுமன்றி தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் பயங்கரவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்க இடமளிக்கப்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் தீயில் கருகிய ஐவரின் உடல் அடக்கம்!!

நுவரெலியா..

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள் இன்றிரவு இடம்பெற்றுள்ளன.

தோட்ட மைதானத்தில் சடலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,தோட்ட மக்கள் அணிதிரண்டு கண்ணீர் மழ்க இறுதி கிரியைகளில் பங்கேற்று சடலங்களை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்துள்ளனர்.

தோட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதுடன்,தோட்ட மக்கள் தமது தொழில் நடவடிக்கைகளையும் கைவிட்டிருந்தனர்.

இராகலையில் ஏற்பட்ட தீவிபத்துச் சம்பவத்தில் உடல் கருகிப் பலியோனோரின் சடலங்கள் தொடர்பில் நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் திறந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன்,

உடற் கூற்று மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட வேண்டும் என இன்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் போது, உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட முடியாததால் இந்த திறந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெற்றன. இதன்போதே, நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடொன்று (07) இரவு பத்து மணியளவில் தீப்பிடித்துள்ளது. இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில்,

வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா பாணியில் மன்னாரில் நடந்த பயங்கரம் : மயிரிழையில் உயிர் தப்பிய ஐவர்!!

மன்னாரில்..

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காட்டு பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து இன்றைய தினம் சனிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடையச் சென்றவர்கள் மீது மன்னார் பொலிஸ் நிலைய நுழைவாயிலில் வைத்து டிப்பர் வாகனத்தினால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த டிப்பர் வாகனம் மோதியதில் மன்னார் பொலிஸ் நிலைய நுழை வாயிலில் நின்ற 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து திட்டம் இட்டு இடம் பெற்றுள்ளதாகவும் இவ்விபத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவே இடம் பெற்றுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மன்னார் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் சரணடையச் சென்ற இளைஞர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னதாக இடம் பெற்ற முரண்பாடு சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொண்டு சரணடைய சென்ற ஐந்து இளைஞர்களே பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை எற்படுத்திய டிப்பர் உடன் சாரதி தப்பி சென்ற நிலையில் டிப்பர் மற்றும் சாரதியை தேடும் பணி மன்னார் பொலிஸாரால் இடம் பெற்று வருகின்றது.

இவ்விபத்து நன்கு திட்டமிடப்பட்ட விபத்து எனவும் விபத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் பண பலத்தை பயன்படுத்தி விபத்துக்கான காரணத்தை திசை திருப்பபடுவதற்கான வாய்புக்கள் அதிகம் இருப்பதால் பொலிஸார் உரிய விதத்தில் விசாரணை மேற்கொண்டு நீதியை பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சினிமா பாணியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவே முறைப்பாடு செய்து சரணடைய சென்றவர்கள் மீது விபத்தை ஏற்படுத்திய சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா நகர பள்ளிவாசல் மறு அறிவித்தல் வரை சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டது!!

நகர பள்ளிவாசல்..

வவுனியா நகர பள்ளிவாசல் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக சுகாதாரப் பிரிவினரால் இன்று (09.10) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

வவுனியா நகர பள்ளி வாசலில் வெள்ளிக் கிழமை தொழுகைக்காக பலர் ஒன்று கூடியுள்ளதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று (08.10) சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது பள்ளிவாசலில் ஒன்றுகூடியிருந்தவர்களின் விபரங்கள் பெறப்பட்டு, அவர்கள் எச்சரிக்கையின் பின் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதுடன்,

பள்ளிவாசல்களின் வாயில்கள் மூடப்பட்டதுடன், பள்ளி நிர்வாகத்தினருக்கும் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக சுகாதார விதிமுறை மீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று (09.10) குறித்த பள்ளிவாசலுக்கு சென்ற சுகாதாரப் பிரிவினரால் ‘வெள்ளிக்கிழமை மக்கள் நடமாட்டம் பள்ளிவாசல் எல்லைக்குள் கூடுதலாக காணப்பட்டமையால்,

கோவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக மறு அறிவித்தல் வரை இப் பள்ளிவாசல் மூடப்படுகிறது’ எனத் தெரிவித்து பிரதான வாயிலில் பதாதை ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தினத்தில் ஒன்று கூடியவர்களுக்கு பிசீஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதாரப் பிரிவினர் சோதனை : 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

சுகாதாரப் பிரிவினர் சோதனை..

வவுனியாவில் வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்ததுடன், 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்களும், பொலிசாரும் அங்கு சமூக இடைவெளி, சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என சோதனை செய்ததுடன்,

சுகாதார நடைமுறைகள் மற்றும் இருக்கைகள் தொடர்பில் வங்கி உத்தியோகத்தர்களுக்கு சுகாதாரப் பிரிவினாரால் அறிவுறுத்தல்களும் இதன்போது வழங்கப்பட்டது.

தொடர்ந்து பசார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி என்பவற்றில் அமைந்துள்ள நகைக் கடைகள், உணவகங்கள், புடவைக் கடவைகள், பன்சிக் கடைகள், பலசரக்கு கடைகள், வெற்றிலை விற்பனை நிலையங்கள், பேக்கரி, நகை அடைவு பிடிக்கும் கடைகள்,

தோல் உற்பத்திப் பொருள் விற்பனையகங்கள் என்பன சுகாதாரப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டதுடன், சமூக இடைவெளி பேணாமை மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை சீராக பின்பற்றாமை தொடர்பில் பல வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.

மேலும், முகக்கவசம் அணியாது நகை வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர், பலசரக்கு பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர், தோல் உற்பத்தி பொருள் விற்பனை செய்த ஒருவர் என ஐந்து பேருக்கும்,

உணவகத்தில் மக்களை இருக்கைகளில் அமர்த்தி உணவு விற்பனையில் ஈடுபட்ட வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் என 6 பேருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்ததுடன், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : ஒருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துனள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை (09.10) வெளியாகின.

அதில் வவுனியா மாவட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேலும் 32 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இவர் கொரோனா தொடர்பான எந்தவித தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர் எனவும் மரணித்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் காணாமல் போன மாணவன் கண்டுபிடிப்பு!!

கண்டுபிடிப்பு..

வவுனியாவில் காணாமல் போனதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட 17 வயது மாணவன் புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (08.10) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மணிவண்ணன் சிவானுஜன் என்ற 17 வயது மாணவன் நேற்று (07.10) காலை வீட்டில் இருந்து சென்ற நிலையில் காணவில்லை என மாணவனின் தந்தையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பேரூந்து நிலையத்தில் நிற்பதாக மாணவனின் நண்பனுக்கு முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மூலம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாணவனின் பெற்றோருக்கு குறித்த தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த முகச்சக்கர வண்டி சாரதி மாணவன் வீட்டில் இருந்து முரண்பட்டுக் கொண்டு வந்துள்ளதாக அறிந்த நிலையில், மாணவனை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அங்கு சென்ற மாணவனின் பெற்றோர், புதுக்குடியிருப்பு பொலிசாரினால் மேற்கொள்ள விசாரணைகளையடுத்து மாணவனை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காதல் திருமணம் செய்த தம்பதி : கணவரின் சுயரூபம் தெரிந்ததால் அரங்கேறிய விபரீதம்!!

இந்தியா…

இந்தியாவில் கணவர் மற்றும் குடும்பத்தாரின் பண வெ.றியால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் துணிச்சலுடன் செய்த செயலால் தவறு செய்தவர்கள் பொலிசில் சி.க்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாலஹாஸ்தியை சேர்ந்தவர் தேஜஸ்வனி. இவருக்கும் விக்ரம் ராவ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களில் தேஜஸ்வனி தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு சென்றபின்னர் தான் கணவர் மற்றும் குடும்பத்தாரின் சுயரூபம் தேஜஸ்வனிக்கு தெரிந்தது.

அதன்படி ரூ 2 கோடி வரதட்சணை கேட்டு அவர்கள் தேஜஸ்வனியை கொ.டு.மை.ப்.படுத்தி வந்தனர். இதனால் அ.தி.ர்ச்சியிலும், வே.த.னையிலும் இருந்த தேஜஸ்வனி இனியும் அவர்களுடன் இருந்தால் நல்லது இல்லை என நினைத்து லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.

பின்னர் கணவர் மற்றும் குடும்பத்தாரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இதையடுத்து கணவர் வீட்டுக்கு வந்து நியாயம் கேட்க தேஜஸ்வனி முயன்ற போது வரதட்சணை பணம் கொண்டு வந்தால் தான் இங்கு வந்து வாழமுடியும் என கூறி விக்ரம் மற்றும் அவர் பெற்றோர் தேஜஸ்வனியை வீட்டை விட்டு அடித்து துரத்தியுள்ளனர்.

ஆனால் இதை கண்டு கலங்காத பெண் மருத்துவர் துணிச்சலுடன் கணவர் வீட்டு வாசலில் உட்கார்ந்து போ.ரா.ட்டம் நடத்தினார். இது ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில அரசியல் தலைவர்களும் தேஜஸ்வனியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் தேஜஸ்வனியை சமாதானம் செய்ததோடு அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலைக்கு சென்ற கணவர் : திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் நான்கு வயது பெண் குழந்தையை ம.ர்மமான மு.றையில் கொ.லை செ.ய்துள்ள சம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரில் பேகூர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சன்னவீர சாமி. இவரது மனைவி சந்திரகலா(35). இவர்களுக்கு நான்கு வயதில் பெண் கு.ழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் அவர் வேலை நிமித்தம் காரணமாக அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் சசிகலா மற்றும் 4 வயது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.

இதையடுத்து சன்னவீர சாமி வீட்டிற்கு வந்த போது தனது மனைவி சந்திரகலா மற்றும் அவரது நான்கு வயது குழ.ந்தை ரதன்யா ஆகியோர் ர.த்.த வெ.ள்ளத்தில் கி.டப்பதை க.ண்டு அ.திர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ச.டலங்களை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூரு காவல்துறை க.ண்காணிப்பாளரான முருகன் கு.ற்றவாளிகளை பி.டிக்க 4 த.னிப்படைகள் அ.மைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ந.கை தி.ருட வந்த ம.ர்ம நபர்கள் இருவரையும் கொ.லை செ.ய்தார்களா? அல்லது த.னிப்பட்ட வி.ரோதமா என பல்வேறு கோணங்களில் தீ.விர வி.சாரணை ந.டைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை கை.ப்.பற்றி காவல் துறையினர் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!!

பயணத் தடை..

தற்போது இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக நாட்டில் தொடர்ந்து அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடந்த முதலாம் திகதி தளர்த்தப்பட்டது.

இருப்பினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் காணப்பட்டது. இந்த நிலையில் மாகாணங்களுக்கு பயணத் தடையானது 15ஆம் திகதி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கோவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது இந்த பயணத்தடையை மேலும் நீடிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-