நாட்டிலுள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள ஆரம்பிப்பது குறித்து இன்று புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும்,
மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும். தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் பால் மா விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய கட்டுப்பாட்டை விலை நீக்கப்பட்டதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை பாரிய அளவு அதிகரிக்கவுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 350 ரூபாயிலும் 400 கிராம் பக்கட் பால்மாவின் விலை 140 ரூபாயில் அதிகரிக்க வேண்டும் எனவும் பால் மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் வாழ்க்கை செலவு குழுவில் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கட் விலையை 200 ரூபாயில் அதிகரிக்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் முடிவிற்கமைய பால்மா விலை தீர்மானிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோயிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்ற, வவுனியா – தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவனை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த சிறுவனின் தந்தை வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முறைப்பாட்டில் மேலும்,
வவுனியா – தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் சிவானுஜன் 17 வயதுடைய சிறுவன் நேற்று காலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
எனினும் நேற்று இரவு வரையில் வீடு திரும்பவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் யானை தந்த கஜமுத்துக்கள் நான்குடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் சோதனையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வீதியில் பயணித்த சந்தேகத்திடமானவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் யானை தந்த கஜமுத்துக்கள் நான்கு மீட்கப்பட்டன.
இதனையடுத்து, குறித்த யானை தந்த கஜமுத்துக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 வயதுடைய லியனகமக- மகாவ, 50 வயதுடைய கோயிலகெதர -மகாவ, 50 வயது நிக்கரவெட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களும், அவர்களிடம் மீட்கப்பட்ட யானை தந்த கஜமுத்துக்களும் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதக விசாரணையின் பின் நீதிமன்றில் ஒப்படைக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் ஆலயத்தில் ஒன்று கூடியமையால் த.னிமைப்படுத்தப்பட்ட இருவர் உட்பட மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இ.னங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வை.த்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் த.னிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் ப.ரிசோதனையின் முடிவுகள் சில இன்று (08.10) வெளியாகின.
அதில் வவுனியா, தோணிக்கல் சிவன் கோவிலில் சுகாதார வி.திமுறைகளை மீ.றி ஒ.ன்றுகூடியமை தொடர்பில் த.னிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் உட்பட மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை த.னிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, நாட்டின் மு.டக்கநிலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் மீண்டும் தொ.ற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரப் பள்ளிவாசலில் சுகாதாரப் பிரிவினரால் சோதனை நடப்பட்டதுடன், தொழுகைக்காக ஒன்று கூடியவர்கள் திருப்பி அனுப்பபட்டனர்.
வவுனியா நகரப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் செல்வதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இன்று (08.10) சுகாதாரப் பிரிவினர் விசேட சோதனை நடத்தினர்.
இதன்போது தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு வருகை தந்தவர்களின் விபரங்கள் சுகாதாரப் பிரிவினரால் பெறப்பட்டதுடன், கடும் எச்சரிக்கையுடன் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அத்துடன், பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் சுகாதார அறிவுறுத்தல் குறித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மக்களுடன் தொழுகை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு பள்ளிவாசலின் பிரதான வாயில்கள் மூடப்பட்டது.
மேலும், சுகாதார நடைமுறைளை மீறி மக்களை ஒன்று கூட்டியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியாவில் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்தவர்களின் பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (07.10) இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் நேற்று (07.10) செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 63) ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
நாடு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மூலம் முடக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் கோவிட் தொற்றுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்று வழங்கும் நோக்கில் வவுனியா மாவட்ட செயலக தொழில் நிலையத்தில் ஒழுங்கமைப்பில் மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத்திணைக்களத்தினால் சூம் தொழிநுட்பம் மூலம் தொழிற்சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத்திணைக்களம் நாடளாவிய ரீதியில் கடந்த 04.10.2021 தொடக்கம் 10.10.2021 வரை தொழில் வழிகாட்டல் வாரமொன்றை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு அங்கமாக நாளை 08.10.2021 அன்று நாளை காலை 9.00 மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக தொழிற் சந்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
தனியார் துறைகளில் தொழிலொன்றை பெற்றுக்கொள்ள விரும்பும் இளைஞர் யுவதிகள் இணைந்து பயன்பெறுமாறு வவுனியா மாவட்ட செயலக தொழில் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தொடர்புகளுக்கு 0242228025 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துவதுடன் சூம் இற்கான Meeting ID: 867 9055 4302 , Passcode: 926287 ஆகியனவும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்தையும், நிரந்தர சம்பளத்தையும் பெற குறித்த விடயத்தை அரசியல் ரீதியாக அமைச்சரவையுடன் அணுக வேண்டும் என ஊடகவியலாளர் கி.வசந்தரூபன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கோவிட் தாக்கமும் பொருளாதார நிலையும் தொடர்பில் இலத்திரனியல் செயலி மூலம் இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின் போது ‘முன்பள்ளி ஆசிரியர்கள் வேதனங்கள் இல்லாது நிரந்தர நியமனம் அற்ற நிலையில் உள்ளனர்.
வன்னியைப் பொறுத்தவரை அரசாங்க கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 2500 ரூபாய் தருவதாக கூறியிருந்தார்கள். அது கூட எல்லோருக்கும் கிடைக்கவில்லை. 30 – 35 வருடமாக முன்பள்ளி ஆசிரியர்களாக பணியாறிறியவர்கள் இருக்கிறார்கள். கோவிட்டால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான நிரந்தர சம்பளம் தொடர்பாக என்ன செய்ய முடியும் என முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பான விடயத்தில் வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் முன்பள்ளி ஆசிரியர்களில் பலர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிரந்தரமாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்பட்டு சம்பளக் கொடுப்பனவுகள் நடைபெறுகின்றன.
வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தக் கொடுப்பனவு கிடைக்கவில்லை.
இவர்களில் பலர் தனியார் முன்பள்ளிகளின் கீழ் பணியாற்றுகிறார்கள். ஆகவே இவ்வாறானவர்களுக்கான அரசாங்க கொடுப்பனவு அதாவது சம்பளங்கள் கிடைக்கவில்லை. மாகாணத்தால் உதவித் தொகை ஒன்று மட்டுமே வழங்கப்படுகின்றது.
இதனை அரசியல் ரீதியாக அணுக வேண்டும். அமைச்சரவை அனுமதியோடு தான் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் அல்லது அவர்களை அரச சேவையில் உள்வாங்குதல் தொடர்பில் முடிவு எட்டப்பட முடியும்.
அதன் ஊடாக தான் மாதாந்தம் நிரந்த வருமானத்தை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் பெறுவது போன்று பெற முடியும். அவ்வாறு இல்லையெனில் தாங்கள் செயற்படும் முன்பள்ளி நிறுவனத்தின் கீழ் தான் இதனைக் கேட்க முடியும்.
நிரந்தர அரச சேவைக்குளம் உள்ளீர்க்கப்படாவிட்டால் உதவிகளையே செய்ய முடியும். ஆகவே நிரந்த நியமனத்தைப் பெற்று நிரந்தர சம்பளத்தைப் பெற யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அரசியல் ரீதியாக இதணை அணுக ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
டெல்லியில், ஏர் இந்தியா விமானம் ஒன்று தரைவழியே கொண்டுசெல்லும்போது பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
குருகிராம்-டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஐஜிஐ விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பயன்படுத்தப்படாத பழைய ஏர் இந்தியா விமானம் ஒன்றை பெரிய வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இறக்கை இல்லாத அந்த விமானத்தின் உடல் பாகத்தை, நீளமான ட்ரைலர் டிரக்கில் வைத்து தரைவழியே கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அப்போது டெல்லி-குருகிராம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு நடைபாதை மேம்பாலத்தை கடக்கும்போது உரசி சிக்கிக்கொண்டது.
விமானத்தின் மூக்கு மற்றும் அதன் நடுப்பகுதியின் பாதி பகுதி அதை கடந்து சென்றது, ஆனால் விமானம் பாலத்தின் கீழ் சிக்கியது. இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலானது.
அந்த வீடியோ வைரலானபோது, அது எப்படி அங்கு வந்தது என்று பலரும் குழப்பமடைந்தனர். அதேசமயம், அந்த விமானம் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விற்கப்பட்டது என்பதை ஏர் இந்தியா தெளிவுபடுத்தியது.
“எந்த சூழ்நிலையிலும், விமானத்துடன் எந்த தொடர்பும் இல்லை” என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் அந்த விமானம் பதிவுநீக்கம் செய்யப்பட்டு அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
#WATCH An @airindiain plane ✈️ (not in service) got stuck under foot over bridge. Can anyone confirm the date and location?
The competition starts now👇 pic.twitter.com/pukB0VmsW3
இந்தியாவில் நண்பன் வீட்டில் இரவில் தங்கியிருந்து பணத்துக்காக அவரையும், மனைவி, கு.ழ.ந்.தை.களையும் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த இரண்டு கொ.டூ.ர.ன்.களின் செ.ய.ல் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் பிரேம் கிஷோர். இவர் மனைவி லலிதா தேவி. தம்பதிக்கு நைதிக் என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் க.ழு.த்.து அ.று.க்.க.ப்.ப.ட்டு மூவரும் ச.ட.ல.மாக வீட்டில் கிடந்தனர், மூவரின் முகங்களும் பாலித்தீன் கவரால் மூ.ட.ப்பட்டிருந்தது.
ச.ம்பவ இடத்திற்கு வந்த பொ.லி.சா.ர் ச.ட.ல.ங்களை கைப்பற்றிவிட்டு வி.சா.ரணையை தொடங்கினர். பிரேமுக்கு தெரியாத யாரோ நபர்கள் தான் கொ.ள்.ளை.ய.டிக்கும் நோக்கில் இச்செயலை செய்திருக்க வேண்டும் என பொலிசார் முதலில் நினைத்தனர்.
ஆனால் வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செ.ய்த போது பொ.லி.சா.ர் அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்தனர். ஏனேனில் ச.ம்.பவம் நடந்த அன்று நள்ளிரவு இரண்டு ஆண்கள் பிரேம் வீட்டில் இருந்து வெளியில் சென்றது தெரியவந்தது.
இருவரின் புகைப்படங்களை பிரேம் வீட்டில் பொ.லி.சார் ஏற்கனவே பார்த்ததே அ.தி.ர்.ச்சிக்கு காரணம். இதையடுத்து கவுரவ் மற்றும் சவுகான் ஆகிய இருவரையும் பொ.லி.சார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நினைத்து பார்க்க முடியாத தி.டு.க்.கி.டு.ம் தகவல்கள் வெளியானது.
கவுரவும், சவுகானும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரேமுடன் ஒரே இடத்தில் வேலை செ.ய்.துள்ளனர். பின்னர் பிரேம் சுயமாக தொழில் தொடங்கி நல்ல நிலைக்கு வந்து பணக்காரர் ஆகியிருக்கிறார்.
இதை சமீபத்தில் தெரிந்து கொண்ட இருவரும் பிரேமுடன் நட்பை மீண்டும் புதுப்பித்தனர். ச.ம்.பவத்தன்று இரவு பிரேம் வீட்டுக்கு வந்த கவுரவ், சவுகான் தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய இரயில் புறப்பட்டு விட்டது. அதனால் இன்று ஒருநாள் எங்களுக்கு வீட்டில் தங்க இடம் கொடு என்றனர்.
அவரும், நண்பர்கள் தானே என நம்பி என தங்க இடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து நள்ளிரவில் நன்றாக தூங்கி கொண்டிருந்த பிரேம், லலிதா, நைனிக் ஆகிய மூவரையும் அவர்கள் கொ.லை செ.ய்.து.வி.ட்டு வீட்டிலிருந்த பணத்துடன் த.ப்.பியது தெரியவந்தது.
இது போல அதிகம் தொடர்பில்லாத நபர்களை வீட்டில் நம்பி தங்க வைக்கக்கூடாது என பொ.லி.சார் பொ.து.ம.க்களுக்கு எ.ச்.ச.ரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் பழகி 16 வய சிறுமியிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் 32 சவரன் தங்க நகை மோ.ச.டி செ.ய்த இ.ளைஞரைகைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவரிடம் 1 லட்சரூபாய் பணம், 32 சவரன் தங்க நகையை கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாக அவரின் பெற்றோர் வெங்கல் காவல் நிலையத்தில்அளித்த புகார் அளித்தனர்.
அதன்பேரில் மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த ரேவந்த் என்பவரை கைது செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் பழகி 16 வயசிறுமியிடம் ஏமாற்றி நூதனமாக ஒரு லட்ச ரூபாய் பணம் 32 சவரன் தங்க நகையை மோசடி செய்துள்ள ச.ம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞரிடம் போ.லீசார் நடத்தி வரும் உரிய வி.சாரணைக்கு பின்னரே சிறுமியிடம் எப்படி நகை மற்றும் பணத்தை ஏமாற்றினார் என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான 4 லட்சத்து 85 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் அவரது தனிப்பட்ட உடமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிலாபம் வென்னப்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று வென்னப்புவை – வைக்காலை பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோர்வே ட்ரிம்சோ பிரதேசத்தில் வசித்து வரும் 46 வயதான வேலாயுதம் நகுலேந்திரன் என்பவரின் பணமும், உடமைகளுமே கொள்ளையிடப்பட்டுள்ளன.
இது குறித்து அவர் வென்னப்புவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை அழைத்துச் சென்ற பேருந்தில் வைக்கப்பட்டிருந்த தனது பயணப் பொதியில் இருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணம் மற்றும் உடமைகள் காணாமல் போயுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் ,வென்னப்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிப்டோகரன்சி மயினிங் நிறுவனங்கள் இலங்கையில் முதலிடுவதற்கு அனுமதிக்கும் முதலீட்டு சபையின் அனுமதியை அமைச்சரவை அங்கிகரித்துள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“டிஜிட்டல்மயமான வர்த்தக சூழலை ஏற்படுத்துவதற்கு வசதியளிப்பதற்காக டிஜிட்டல் வங்கி முறைமை, ப்ளொக்செயின் தொழிநுட்பம் (Blockchain technology), க்ரிப்ரோகரன்சி மயினிங் (Cryptocurrency Mining) மற்றும் தேவையான இதர சேவைகளை வழங்குதல் போன்ற துறைகள் உள்ளிட்ட கூட்டிணைந்த தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
தெற்காசியவில் அதிகமான நாடுகள் குறித்த துறைகளை மதிப்பிடல் மற்றும் அபிவிருத்தி செய்வதை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், குறித்த நாடுகளுடன் போட்டித்தன்மையில் செயற்படுவதற்கு இயலுமான வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் துரித கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அதற்கமைய, குறித்த துறைகளில் செயற்படும் கம்பனிகளின் முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்குத் தேவையான கட்டளைச் சட்டங்கள், சட்ட ஒழுங்குகள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பாக,
அமைச்சரவைக்கு அவசியமான விடயங்களை அறிக்கைப்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் துறைகளில் நிபுணத்துவமான தொழில்வாண்மையாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 1978 ஆம் ஆண்டும் 04 ஆம் இலக்க முதலீட்டுச் சபைச் சட்டம் மற்றும் அதற்கு ஏற்புடைய திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கமைய, க்ரிப்ரோகரன்சி மயினிங் (Cryptocurrency Mining) கம்பனிகளுக்கு இலங்கையில் முதலிடுவதற்கு அனுமதி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் இலங்கை மத்திய வங்கி 11 ஆயிரத்து 58 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரியவருகிறது இதன்படி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் பதவியேற்ற நாள் முதல் இதுவரை,
15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக இலங்கையின் மத்திய மற்றும் தென் மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும், 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கை மத்திய வங்கி, ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 805 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது.
அரசின், நிதிசெயற்பாடுகள் தொடர்பில் அல்லது பணம் அச்சிடுதல் தொடர்பில் பொருளாதார நிபுணர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அல்லது எதிர்கட்சியினரின் கவனம் இதுவரை திரும்பவில்லை என்று ரஜித் கீர்த்தி தென்னகோன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அநாவசிய செலவுகள் அதிகரித்துள்ளன. மறுபுறம் நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றன. வகைதொகையின்றி பணம் அச்சிடப்படுகின்றது. விவசாய உற்பத்திகள் இன்மை, போதியளவு உரமின்மையால் பட்டினி நிலைமை உருவாகின்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி செல்கின்றது என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கும் ரஜித் கீர்த்தி தென்னகோன், எல்லா நகரங்களிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்களின் படி இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணை முறியல்களின் முகப்பு பெறுமதி 2020 ஜனவரி முதலாம் திகதி 74074 பில்லியன்களாகும். அது நேற்று 1,442.79 பில்லியன்களாக உயர்ந்துள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் இதுவரை இலங்கை மத்திய வங்கி 1368.05 பில்லியன்களை அச்சிட்டுள்ளது. இந்த செயற்பாடுகளால் இலங்கையின் பொருளாதாரம் நூலறுந்த பட்டம் போல ஆகியிருக்கிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அரச வங்கிக்கு அருகேயுள்ள மதுபானசாலையில் இளைஞர் குழு அட்டகாசம் மேற்கொண்டதில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களின் முச்சக்கரவண்டியினையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.
குறித்த மதுபானசாலைக்கு முன்பாக நின்ற நால்வர் அடங்கிய இளைஞர் குழுவினர் வீதியில் செல்பவர்களை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த சமயத்தில் அங்கிருந்த இளைஞர் குழு தப்பித்துச் சென்றுள்ளனர்.
எனினும் அவர்கள் வருகை தந்த முச்சகரவண்டியினை அவ்விடத்திலேயே விட்டு தம்பித்து சென்ற நிலையில் முச்சக்கரவண்டியினை பொலிஸார் கையகப்படுத்தி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
இந்நிலையில் இச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.