வவுனியா தோணிக்கல் பகுதியில் அன்டிஜன் பரிசோதனை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 31 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா தோணிக்கல் பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 31 பேருக்கு இன்று (26.08) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கொரோனாதொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் (25.08) 177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப் பிரிவினரால் பரவலாக எழுமாறான அன்டிஜன் பிரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், தோணிக்கல் பகுதியில் எழுமாறாக 93 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் கர்ப்பிணிப் பெண் உள்ளடங்களாக உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 24 பேருக்குமாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம் வவுனியாவில் 177 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் இதுவே வவுனியாவில் ஒரே நாளில் இனங்காணப்பட்ட அதிகபட்ச தொற்றாளர் எண்ணிக்கையாகும்.

இரண்டரை கோடி ரூபா பணத்தை மக்களுக்கு பகிர்ந்துக்கொடுத்த இலங்கையர்!!

இரண்டரை கோடி ரூபா..

வர்த்தகர் ஒருவர் ஏழை மக்களுக்கு தனது சொந்த பணத்தை உதவித் தொகையாக அன்பளிப்பு செய்ய முன்வந்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையால் அன்றாடம் உழைத்து உண்ணும் மக்கள் மற்றும்,

குறைந்த வருமானம் கொண்டவர்கள் என பலர் அதிக சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். இ்ந்த நிலையிலேயே குறித்த வர்த்தகர் தனது சொந்த பணத்தை மக்களுக்கு தானமாக வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்ற வர்த்தகரே தனது சொந்த நிதியில் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.

ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் அவர் வழங்குகிறார். அவரிடம் பண உதவி பெற மக்கள் கூட்டம் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வவுனியாவில் 06 மாதக் குழந்தை கொரோனா தொற்றால் பலி!!

கொரோனா..

வவுனியாவில் 6 மாதக் குழந்தை ஒன்று கொரோனா தொற்றிற்கு பலியாகியுள்ளது. குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்துள்ளது.

இதேவேளை வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி நேற்றையதினம் (25.08.2021) இரவு மரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றால் இளம் தம்பதியினர் பரிதாபமாக பலி : ஆதரவின்றி தவிக்கும் 5 வயது மகள்!!

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த தம்பதியினர் கிரிபத்கொட பகுதியினை சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய கணவர் கடந்த 22 ஆம் திகதியும், 27 வயதுடைய மனைவி இன்று காலையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த தம்பதியினருக்கு 5 வயது மகளொன்றும் உள்ள நிலையில், குழந்தை தாய், தந்தையை கொடிய கோவிட் தொற்றால் இழந்துள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் கோவிட் சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று : காணிக்கிளையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!!

கொரோனா..

வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக்கிளையின் செயற்பாடுகள் அனைத்தும் இன்றிலிருந்து எதிர்வரும்10 ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளது.

குறித்த கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தினமும் 150 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றும் 177 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட சுகாதார அமைச்சர்!!

ஊரடங்கு..

கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதன்படி தற்போதைய ஊரடங்கானது இம்மாதம் 30ஆம் திகதிக்கு மேல் நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், கோவிட் தொற்று பரவலை நாட்டை மூடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பதை உலகின் அனைத்து நாடுகளும் இப்போது ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா என்பது குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார். மேலும், நாளைய தினம் கூடும் ஜனாதிபதி தலைமையிலான குழு இது தொடர்பில் தீர்மானம் எட்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணம்!!

கொரோனா ..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (25.08.2021) குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

வவுனியா தோணிக்கல், சேக்கிழார் வீதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். அவரது உடலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு (25.08.2021)வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து வீடு திரும்பிய சிறுமி திடீரென உயிரிழப்பு!!

15 வயது சிறுமி..

புத்தளம் பகுதியில் 15 வயது சிறுமியொருவர் திடீரென உயிரிழந்த நிலையில் சிறுமிக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தளம், மணல்குன்று பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுக்கு இலக்கான குறித்த சிறுமி, கோவிட் சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பிய பின்னரே நேற்றுமுன் தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த சிறுமியின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அச்சிறுமிக்கு கோவிட் தொற்று இருப்பது இரண்டாவது முறையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,சிறுமியின் சடலம் புத்தளத்திலிருந்து குருநாகலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த 5 மாத சிசு கொரோனாவால் மரணம்!!

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த ஐந்து மாத சிசு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.

கம்பளை வைத்தியசாலையின் சுகாதார பிரிவு இதனை அறிவித்துள்ளது. கம்பளையைச் சேர்ந்த குறித்த பெண், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதன்போது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்துள்ளது. இதன் காரணமாக சத்திரசிகிச்சை மூலம் சிசு அகற்றப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

துரோகியான நண்பன் : மனைவிக்கு கணவனால் நடந்த கொடூரம் : கொரோனாவால் ஒரு இப்படியும் விபரீதம்!!

தமிழகத்தில்..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவருக்கு உதவி செய்ய வந்த நண்பருடன் வீட்டை விட்டுச்சென்ற மனைவியை சமாதனப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் ஓசூரில் அரங்கேறி உள்ளது.

கிருஷ்ணாகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஜோதீஷ் இவரது மனைவி வந்தனா. மெக்கானிக்காக வேலைபார்த்து வந்த ஜோதீஷ் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த போது அவருக்கு தேவையன மருந்து பொருட்களை வாங்கிகொடுப்பதற்காக அவரது நண்பர் சுகில் என்பவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு ஜோதீஷின் மனைவி வந்தனாவிடம் செல்போன் நம்பரையும் கொடுத்துச்சென்றுள்ளார்.

இந்தனிலையில் சுகிலுடன் செல்போனில் பேச ஆரம்பித்ததோடு இரவெல்லாம் வாட்ஸ் அப் சாட்டிங் செய்யும் அளவுக்கு பழக்கம் நெருக்கமானதாக கூறப்படுகின்றது.

கொரோனாவில் இருந்து கணவர் கோதீஷ் குணமான நிலையில், இரவில் மனைவி செல்போனில் பேசுவதை கண்டு சந்தேகமடைந்து அ.டித்து உ.தைத்ததாக கூறப்படுகின்றது.

இதனால் தனது கணவர் ஜோதீஷிடம் கோபித்துக் கொண்டு பெங்களூரில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றவர் அங்கிருந்து தனது காதலர் சுகிலுடன் வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

ஓசூரில் தனி வீடு எடுத்து சுகிலுடன் வசித்து வந்த வந்தனாவை பெற்றோர் உதவியுடன் சமாதனப்படுத்திய ஜோதீஷ் தனது வீட்டு அழைத்து வந்துள்ளார்.

அவர் மீண்டும் சுகிலுடன் செல்போன் பேச்சை தொடர்ந்ததால் ஆத்திரம் அடைந்த ஜோதீஷ், மனைவி வந்தனாவை க.ழுத்தை இ.றுக்கி கொ.லை செ.ய்.து அவரது சடலத்தை வீட்டுக்குள் வைத்துப்பூட்டிவிட்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் உதவிக்கு வந்த நண்பனின் தகாத செயலுக்கு மயங்கி தடம்மாறிய பெண்ணால் ஒரு குடும்பமே நிர்மூலமான சோகம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீதியில் இறந்து கிடந்த இளைஞன் : இரட்டைக் குழந்தைகள் இரவு முழுவதும் சடலத்துடன் இருந்த சோகம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த இளைஞர், அந்த ரிசார்ட்டிற்கு வெளியே சாலையருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் 3 வயதேயான இரட்டையர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சடலத்தின் அருகே அழுத நிலையில் காணப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் நாளிதழ்களை விநியோகிக்கும் சிலரே அதிகாலையில் இந்த துயர சம்பவத்தை முதலில் கண்டறிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மரணமடைந்தவர் 29 வயதான ஜிதின் எனவும்,

இரட்டையர்களான தமது பிள்ளைகளுடன் 6 நாட்களுக்கு முன்னர் குறித்த ரிசார்ட்டில் தங்குவதற்காக சென்றுள்ளார். இவரது மனைவி கிறிஸ்டினா ரஷ்ய நாட்டவர் என தெரிய வந்துள்ளது.

கோவா மாநிலத்தில் தொழில் செய்து வந்த ஜிதின், கொரோனா பரவல் காரணமாக கேரளா திரும்பியுள்ளார். மனைவி கிறிஸ்டினா வேலை தொடர்பாக பெங்களூருவில் தங்கியிருப்பதாலும்,

தங்களது குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாலும் பிள்ளைகள் இருவருடன் ஜிதின் ரிசார்ட்டில் தங்க சென்றுள்ளார். முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பு காரணமாக,

ஜிதின் மரணமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் உடற்கூராய்வுக்கு பின்னரே, உண்மை காரணம் வெளிவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கே.டி ராகவனின் ஆபாச வீடியோ விவகாரம் : வீடியோவை வெளியிட்ட இளம்பெண் மற்றும் மதன் ரவிச்சந்திரனுக்கு நேர்ந்த கதி!!

தமிழ்நாடு..

தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் குறித்து வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் வழக்கறிஞராகவும் உள்ளார். இவர் வீடியோ அழைப்பில் பெண்களின் உடையை கழட்டுமாறு கூறி அருவருப்பான செயலில் ஈடுபடும் ஆபாச வீடியோ நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்த ராகவன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். இந்த வீடியோவை பத்திரிக்கையாளர் மற்றும் பாஜகவை சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் மற்றும் அதே கட்சியை சேர்ந்த இளம்பெண்ணான வெண்பா ஆகிய இருவரும் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பாவை பாஜகவில் இருந்து நீக்குவதாக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் அறிக்கையில், பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை அந்தித்து கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதே வேளையில் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்களை தெரிவித்த இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கறிகளுடன் சென்ற வாகனம் விபத்து!!

விபத்து..

நிலாவெளியில் இருந்து புல்மோட்டையை நோக்கி மரக்கறிகளுடன் சென்ற கெப் வாகனம் ஒன்று நிலாவெளி 04ம் கட்டையில் சில்லு கழன்று விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் இன்று(25.08.2021) இடம்பெற்றுள்ளது. நிலாவெளி பொலிஸ் பிரிவூக்குபட்ட பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெப் வாகனத்தில் சாரதி காயங்களுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

11 வயது சிறுவனுக்கு விகாரையின் பிரதம பிக்குவால் நீண்ட காலமாக நேர்ந்து வந்துள்ள கொடுமை!!

புன்னைக்குடா விகாரையில்..

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த 11 வயது சிறுவனை பா.லியல் து.ஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விகாரையின் பிரதம பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேறொரு மாவட்டத்தை சேர்ந்த 11 வயதுடைய குறித்த சி.றுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் நீண்டகாலமாக குறித்த பிரதம பிக்கு அந்த சி.றுவனை பா.லியல் து.ஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட சிறுவன் பொலிஸாரிடம் சென்று மு.றைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சி.றுவனை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மரணத்தின் விளிம்புவரை சென்ற திரும்பிய பெண்ணின் அனுபவம்!!

கொரோனா..

கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்த பெண்ணொருவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

குறித்த பெண் மூச்சு விடுவதில் சிரமத்துடன் தன்னுடைய மோசமான உடல் நிலை தொடர்பில் அண்மையில் சமூக வலைத்தளம் ஊடாக காணொளியொன்றை வெளியிட்டிருந்தார்.

இதில் கோவிட் தொற்று காரணமாக தான் மூச்சு விடுவதற்கு பெரும் சிரமப்படுவதாகவும், தான் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் .

இந்த நிலையில் தற்போது குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களின் கடும் முயற்சியால் உயிர் தப்பியுள்ள நிலையில், இதற்கு தனது நன்றிகளை உரியவர்களுக்கு தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.