மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த 11 வயது சிறுவனை பா.லியல் து.ஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விகாரையின் பிரதம பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிக்கு இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேறொரு மாவட்டத்தை சேர்ந்த 11 வயதுடைய குறித்த சி.றுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில் நீண்டகாலமாக குறித்த பிரதம பிக்கு அந்த சி.றுவனை பா.லியல் து.ஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட சிறுவன் பொலிஸாரிடம் சென்று மு.றைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சி.றுவனை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்த பெண்ணொருவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
குறித்த பெண் மூச்சு விடுவதில் சிரமத்துடன் தன்னுடைய மோசமான உடல் நிலை தொடர்பில் அண்மையில் சமூக வலைத்தளம் ஊடாக காணொளியொன்றை வெளியிட்டிருந்தார்.
இதில் கோவிட் தொற்று காரணமாக தான் மூச்சு விடுவதற்கு பெரும் சிரமப்படுவதாகவும், தான் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் .
இந்த நிலையில் தற்போது குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களின் கடும் முயற்சியால் உயிர் தப்பியுள்ள நிலையில், இதற்கு தனது நன்றிகளை உரியவர்களுக்கு தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரபல நடிகரொருவரின் பெயரில் இடம்பெற்ற மோசடியொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சென்னையை சேர்ந்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தென்னிந்தியாவின் பிரபல நடிகரான ஆர்யா தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக ஜேர்மனியில் வசித்து வரும் இலங்கை பெண்ணொருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஒன்லைனில் அளித்த குறித்த முறைப்பாட்டில் நடிகர் ஆர்யா தன்னிடம் பல இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பணம் அனுப்பப்பட்டமைக்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த 10ஆம் திகதி ஆர்யா பொலிஸார் முன்பு ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நடிகர் ஆர்யாவின் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்த தொலைபேசி எண்ணிலிருந்து முறைப்பாட்டை பதிவு செய்த பெண்ணுக்கு எந்த அழைப்பும், குறுந்தகவலும் செல்லவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இணைய குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சென்னை – புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரின் மைத்துனரான முகமது ஹுசைனி ஆகியோர் வசமாக சிக்கியுள்ளனர்.
குறித்த நடிகரின் பெயரை பயன்படுத்தி சந்தேகநபர்கள் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இணையதளத்தில் தன்னை ஆர்யாவாக அறிமுகப்படுத்திக் கொண்டு அர்மான் தான் அந்த ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியுள்ளதுடன், அவருக்கு ஹுசைனி துணையாக இருந்துள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 2 கைத்தொலைபேசிகள், மடிக்கணினி என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வவுனியாவில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதுடன், 3585 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் கொரோனா சமகால நிலைமை தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கொரோனா தொற்றுநோய் தொடர்பாக இன்றையதினம் ஆராயப்பட்டது. அந்தவகையில் 28 தரப்பினருக்கு ஊரடங்கு காலப்பகுதியில் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்வதற்குச் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5500 பேர் இதுவரை கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களிற்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நிதி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் படி அதனைப் பெறுவதற்கு 17270 தகுதி பெற்றுள்ளனர்.
அதற்காக 16 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் குடும்பங்களிற்கு அந்த நிதியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இருதினங்களில் அந்த கொடுப்பனவை வழங்கி முடிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். அந்தநிதியினை எமது உத்தியோகத்தர்கள் மூலம் நேரடியாகவே வீடுகளிற்குச் சென்று வழங்குவார்கள்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3585 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 49 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் 30 வயதிற்குட்பட்ட மேற்பட்ட 96 ஆயிரம் பேரில் 82 சதவீதமானவர்களிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அவர்களிற்கான இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான திட்டம் அடுத்த கிழமையிலிருந்து ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எமது மாவட்டத்திற்குத் தேவையான தடுப்பூசிகளின் விபரங்கள் சுகாதார அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அது கிடைக்கப்பெற்றதும் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் திட்டம் மாவட்டத்திலே ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலில் சுகாதாரப்பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர், பிரதேச செயலாளர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் கொவிட் செயலணி உள்ளிட்ட,
பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டதன் பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட தனிநபர்களுக்கான டிஜிட்டல் அட்டை வழங்கும் செயற்பாடுகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பிறகு ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவித்தலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
செப்டெம்பர் முதல் வாரத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் டிஜிட்டல் தடுப்பூசி அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 161,650 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை (நேற்றிரவு) 5,949,431 இலங்கையர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.
மாத்தறையில் பா.டசாலை மா.ணவன் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ள.தா.க பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ரொட்டும்ப, பல்லேகந்த பிரதேசத்தில் 16 வ.யதுடைய பா.டசாலை மா.ணவன் ஒருவரே இவ்வாறு த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.
கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியை பெற்றோர் மீள பெற்றமையினால் இவ்வாறு குறித்த மா.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்ள.தா.க ஆரம்பக்கட்ட வி.சாரணைகளில் தெரியந்துள்ளது.
மா.ணவன் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியை த.வறாக பயன்படுத்தியமையினால் பெற்றோர் அதனை மீளப் பெற்றுள்ளனர்.
எனினும் தன்னிடம் இருந்து கையடக்க தொலைபேசியை பெற்றோர் மீள எடுத்துக் கொண்டமையினால் ம.னவிரக்தியில் மா.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். ச.ம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகள் முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (24.08.2021) இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவர் திடீரென உடல் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.
இருப்பினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞனுக்கு மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வவுனியா, புளியங்குளம் வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட 55 வயதுடைய நபரொருவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வவுனியா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட போது அவர் மரணமடைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 66 வயது நபர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்நிலையில் மரணித்த மூவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 பேருக்கு இராணுவத்துடன் இணைந்து வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்கப்பட வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு குறித்து இன்று (24.08) கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்க தீர்மானித்து கடந்த மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.
இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட 83 ஆயிரத்து 151 பேருக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம். அதாவது 84.85 வீதமானவர்களுக்கு வழங்கியுள்ளோம். இவ்வாறு தடுப்பூசி வழங்குவதன் மூலம் நோயாளர்களின் இறப்பு வீதம் மற்றும் தொற்று பரம்பலை கட்டுப்படுத்த முடியும். அதனால் மக்கள் முன்வந்து தடுப்பூசி பெற்று கொள்ள வேண்டும்.
முக்கியமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இறப்பு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம். வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 27 ஆயிரம் பேர் உள்ளனர்.
அதில் 5 ஆயிரத்து 800 பேருக்கு இன்னும் தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக இராணுவத்துடன் இணைந்து வீடு வீடாக சென்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வாரம் முழுவதும் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கி அவர்களை இறப்பு மற்றும் நோய் தொற்றில் இருந்து காப்பதே எமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
அம்பத்தூர் புதூரைச் சேர்ந்தவர் அஜய்சத்யா. இவர் டோனி அண்ட் காய் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு வேலைபார்த்த கவிதாவை காதல் வலையில் வீழ்த்திய அஜய், அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.
இந்த நிலையில் அஜய்யின் ஆசை வார்த்தையில் மயங்கிய கவிதா, தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி அஜய்யை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
திருமணத்துக்கு பின்னர் அஜய்யின் நடவடிக்கை மாறத் தொடங்கி, அங்குவரும் பெண்களுடன் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதால் கணவன்- மனைவிக்கிடையே த.கராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற கவிதாவை அவரது வீட்டில் உள்ளோர் ஏற்காததால், தனியாக வீடு எடுத்து வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், அழகு நிலையத்துக்கு வேலைக்கு வந்த, ஒரு குழந்தைக்குத் தாயான சிந்து என்பவருடன் காதல் கொண்ட அஜய், அவருடன் ஒரே வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து தனது கணவனின் செயலை அவரது நண்பர்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக, தனது கணவனும், குழந்தையுடன் சிந்துவும் இருக்கும் படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக பதிவிட்டுள்ளார் கவிதா.
இதையடுத்து கவிதாவை தொடர்பு கொண்ட அஜய்யின் இரண்டாவது காதலி சிந்து மி.ரட்டியதாக கூறப்படுகின்றது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
கணவன் அஜய்யின் தூண்டுதலின் பேரில் சிந்து, கூ,லிப்படையைச் சேர்ந்த பெண் ஒருவரை வைத்து ஆ.பாசமாகவும் அருவெறுக்கதக்க வகையிலும் திட்டியதோடு கொ.லை மி.ர.ட்.டல் விடுத்ததாக ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில் காவல் நிலையங்களில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜய் மற்றும் சிந்து மீது நடவடிக்கை எடுக்க வ.லி.யுறுத்தி, ஆவடியில் உள்ள துணை ஆணையர் அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி கவிதா தீ.க்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் விரைந்துவந்து அவரைக் கா.ப்பாற்றினர்.
கவிதாவிடம் குறையை கேட்டறிந்த காவல்துணை ஆணையர் மகேஷ், அவரது புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதை அடுத்து, அஜய் மீதும் சிந்து மீதும் காவல்துறையினர் வ.ழ.க்குபதிவு செய்து இருவரையும் தேடிவருகின்றனர்.
அதே நேரத்தில் வேலைக்கு சென்ற இடத்தில் அஜய்யின் ஆசை வார்த்தையை நம்பி காதலில் விழுந்ததோடு, அவரைத் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஆதரவை இழந்து கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வீதியில் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கவிதா என்று சு.ட்.டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.
இந்தியாவில் முகரம் நாளில் உ.யிரிழந்தால் சொர்கத்துக்கு செல்லலாம் என தாய் கூறியதையடுத்து 15 வயது மாணவி த.ற்கொலை செ.ய்து கொண்டது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசத்தின் இண்டோரை சேர்ந்தவர் ரபியா (15). பள்ளி மா.ணவியான இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் முகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தனது தாயாரிடம் சென்று இன்று முகரம் அன்று உ.யிரிழந்தால் நாம் சொர்கத்துக்கு செல்லலாமா என கேட்டுள்ளார்.
மகளும் விளையாட்டாக கேட்கிறார் என நினைத்த தாய் ஆமாம், சொர்கத்துக்கு செல்லலாம் என கூறினார். சிறிது நேரத்தில் தனது அறைக்குள் சென்ற ரபியா தூ.க்.கு.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இதை பார்த்த குடும்பத்தார் அ.திர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ரபியாவின் ச.டலத்தை கை.ப்பற்றிவிட்டு இது குறித்து வி.சாரித்தனர். அப்போது சில அ.திர்ச்சி தகவல்கள் வெளியானது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ரபியா தனது பள்ளி நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது சுற்றுலா சென்ற இடத்தில் அவரின் தோழி விபத்தில் உ.யிரிழந்துள்ளார். அப்போதில் இருந்து ரபியா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.
அன்றிலிருந்து அடிக்கடி குடும்பத்தாரிடம், வாழ்வு மற்றும் சா.வு என்றால் என்ன? எப்போது வேண்டுமானாலும் நமக்கு ம.ரணம் ஏற்படலாம் என கூறிவந்தார்.
ரபியா மனநிலையில் பிரச்சினை ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் த.ற்.கொ.லை செ.ய்திருக்கிறார் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர்
தமிழகத்தில் திருமணம் ஆன 2 மாதத்தில் புதுமணத் தம்பதி அடுத்தடுத்து உ.யிரை மா.ய்த்து கொண்ட சம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆர்.புதுக்கோட்டையச் சேர்ந்தவர் சேதுபதி (27).
இவருக்கும் திண்டுக்கல் எம்.வி.எம். நகரைச் சேர்ந்த மோனிஷா (22) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் சேதுபதி மட்டும் அரியலூருக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் அரியலூரிலேயே சேதுபதி த.ற்கொலை செ.ய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வந்து அ.டக்கம் செய்யப்பட்டது.
திருமணம் முடிந்து 2 மாதங்களிலேயே கணவர் இ.றந்து விட்டதால் சோ.கத்தில் இருந்த மோனிஷா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோனிஷாவின் உறவினர்கள் சேதுபதி வீட்டுக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்து வருவதற்காக சென்றனர்.
அங்கு இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வா.க்குவாதம் ஏற்பட்டது. இதனால் சீர் வரிசை பொருட்களை எடுக்க வந்தவர்களை சேதுபதி குடும்பத்தினர் சி.றை வைத்தனர். பின்னர் செல்போன் மூலம் தங்கள் உறவினர்களுக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்து வந்தனர். கணவர் இ.றந்த சோகத்தில் இருந்த மோனிஷா அடுத்தடுத்து இரு குடும்பத்தினருக்கு இடையே பி.ரச்சனை ஏற்பட்டதால் மேலும் கவலையடைந்தார்.
இதனால் தனது வீட்டிலேயே தூ.க்.கு.ப் போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இதையடுத்து பொலிசார் மோனிஷாவின் உ.ட.லை கை.ப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து வி.சாரித்து வருகின்றனர்.
வவுனியாவில் மரணமடைந்த இருவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவர் திடீரென உடல் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்.
இருப்பினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞனுக்கு மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வவுனியா, புளியங்குளம் வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட 55 வயதுடைய நபரொருவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வவுனியா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட போது அவர் மரணமடைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியாவில் கொரோனா காரணமாக இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதராப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 190 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7750 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 397,670 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பரவலாக சர்ச்சை நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில் அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களிகளின் சம்பளத்தை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவையின் இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆகஸ்ட் மாத சம்பளத்தை கோவிட் – 19 நிதியத்திற்கு நன்கொடையாக அளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எனினும் இது அரசு துறையில் பணியாற்றுவோரின் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கோவிட் தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் வைத்தியசாலையில் மேலும் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை 27 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் 850 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.