கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கோவிட் தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் வைத்தியசாலையில் மேலும் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை 27 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் 850 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது என குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் இயக்குனர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கர்ப்பிணி தாய்மாருக்கு தடுப்பூசி செலுத்தும் விசேட வாரம் இன்று ஆரம்பமாகின்றது. தடுப்பூசி செலுத்த எதிர்பார்த்திருக்கும் தாய்மார் இவ்வாரம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், இதுவரை 27 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் 850 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவர் த.ற்கொலை செ.ய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
38 வயதான இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு தானே எ.ரியூற்றிக்கொண்டு த.ற்கொலை செ.ய்துகொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோணேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்துள்ளார்.
இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரியுள்ளார். எனினும், அவருக்கு தற்காலிகமாக தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், அவர் மன அழுத்ததில் இருந்ததாகவும், கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு தானே எ.ரியூற்றிக்கொண்டு த.ற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் காரணமாக தன்னுடைய 12 வயது மகளை இழந்த தாயொருவர் பொது மக்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். கோவிட் வைரஸானது மேலும் பரவுவதை அனுமதிக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் அவர் மன்றாடியுள்ளார்.
நாவலவில் பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி பயின்ற 12 வயது சிறுமியொருவர் கோவிட்டால் பீடிக்கப்பட்டு கொழும்பில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சுகயீனம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் ராஜகிரியவில் வசிக்கும் குறித்த சிறுமியின் தாய், தங்கள் குழந்தைகள் வைரஸால் பாதிக்கப்பட அனுமதிக்க வேண்டாம் என மக்களிடம் கோரியுள்ளார்.
அத்துடன், கோவிட் என் குழந்தையை பலிகொண்டுவிட்டது. என் குழந்தைக்கு நடந்ததை போன்று வேறு யாருக்கும் நடந்துவிடக்கூடாது. கோவிட் தொற்றானது மேலும் பரவ அனுமதிக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 20ம் திகதி இரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் 10 நாட்கள் நாட்டை முடக்குமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி விசேட வைத்தியர் டொக்டர் நிஹால் அபேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை போதுமானது அல்லவெனவும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றமை அத்தியாவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், 30ம் திகதிக்கு பின்னர் நாடு தொடர்ந்தும் முடக்கப்படுமா? என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், இதுவரை அவ்வாறான தீர்மானம் எதனையும் எட்டவில்லை என தெரிவித்துள்ளார்.
‘உங்களை அறிவதற்கான சிறந்த வழி மற்றவர்களுக்கான சேவையில் உங்களைத் தொலைப்பதே’ என்று மகாத்மா காந்தி மிகச் சிறப்பாக கூறியிருக்கின்றார். கொரோனா பெருந்தொற்றின் பிடியில் நாடும் மொத்த உலகமும் மிக மோசமாக பீடிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் நாங்கள் ஒரு பொறுப்புள்ள குடிமக்களாக ஒன்றுகூடி இலங்கையில் பல தசாப்தங்களாக காணப்படுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதலும் மிக முக்கியமானதாகும். மேலும் நாட்டில் காணப்படும் அரசியல் கட்டமைப்பு காரணமாக மேற்படி பிரச்சனைகளில் காணப்படும் தாக்கத்தையும் களைவது எங்கள் கடமையாகும். இவ்வாறு பல தசாப்தங்களாக சாதாரண மனிதர்கள் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சனைகளைக் களைவதில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுவதுடன் மேற்படி காணப்படுகின்ற பிரச்சனைகளை மிகக் கடினமாக ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அதன்மூலம் நாட்டின் எதிர்கால சந்ததியினர் பயன்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என நாங்கள் நம்புகின்றோம்.
இலங்கை ஒரு தேசமாக பன்மைத்துவம் கொண்ட ஒரு நாடாக அடையாளப்படுத்தப்பட முடியாதுள்ளது. பன்மைத்துவம் என்பது பல்வேறு தரப்பட்ட பின்புலங்கள் மற்றும் கலாசாரங்களைக் கொண்ட பல்வேறு மனிதர்களுடன் நாங்கள் எவ்வாறு அன்றாட தொடர்பாடல்களை மேற்கொண்டு சேர்ந்து வாழ்கின்றோம் என்பதாகும். பன்மைத்துவத்தில் ஈடுபடுவது என்பது எங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கிடையே எவ்வாறு வேறுபட்டவர்கள் என்பதை உணர முயற்சித்தல் ஆகும். இந்த சமூகவியல் கருத்தை அடிப்படையாகக் கொண்டு We Are One Sri Lanka ஆனது அவுஸ்திரேலிய சொலிசிட்டர் மற்றும் பரிஸ்டர் மற்றும் இலங்கை சட்டத்தரணி ஆகிய கலாநிதி செனரத் பண்டார சி சேனநாயக்க அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. இவர் ஒரு வங்கியியல் நிபுணரும் கிரிக்கெட் மீது மோகங் கொண்டவரும் ஆவார். இலங்கையில் காணப்படுகின்ற பல்வேறு சமூகங்களும் ஒரு தேசத்தவர்களாக சமாதானத்துடன் இன மத பாலியல் நாட்ட அரசியல் கருத்து உட்பட எந்தவொரு வேறுபாடும் இன்றி ஒன்றாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் We Are One Sri Lanka என்ற நிறுவனத்தை இவர் ஸ்தாபித்துள்ளார்.
மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்படும் நோக்கங்கள்
சமூகங்கள் இடையே சமூகங்களிடையேயான பலத்தை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் மற்றும் தேசிய மட்டங்களில் அடிப்படைத் தத்துவங்களான ஜனநாயகம் மற்றும் நீதியை மேம்படுத்துவதே We Are One Sri Lankaவின் நோக்கமாகும். இது பிரதானமாக நான்கு தலைப்புக்களில் விபரிக்கப்படலாம்.
ஒரு மொழி
ஆங்கிலத்தை இலங்கையில் பாவிக்கப்படுகின்ற பிரதான மொழியாக படிப்படியாக பிரபல்யப்படுத்துவதுடன் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை இணைப்பு மொழிகளாகப் பயன்படுத்துதல். அண்மையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் போன்ற சங்கங்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொண்டு இக் கொள்கையானது விவாதத்திற்கு உட்படுத்தக்கூடியது. எனினும் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஏன் இந்த நடத்தை மாற்றம் அவசியமானது என்பதை உணருதல் முக்கியமானதாகும். இதனைச் செயற்படுத்துவதில் மிகப் பிரதானமான பிரச்சனையாக ஆசியர்களுக்கான பயிற்சிகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் குறிப்பிடக்கூடியதாக இருந்தபோதிலும் இதன்மூலம் கிடைக்கின்ற நன்மைகள் அதிகமானதாகும். முன்னேற நினைக்கும் எந்தவொரு நாட்டுக்கோ அல்லது தனி நபருக்கோ ஆங்கில மொழிப் புலமை விருத்தி என்பது முக்கியமானதாக காணப்படுவதுடன் சமயோசிதமாக சிந்திக்கக்கூடிய ஆற்றல்களை வளர்த்தல் எங்கள் எதிர்கால சந்ததி முன்னேற உதவும்.
ஒரே தேசிய இனம்
இலங்கைக் குடிமக்கள் யாவரும் இங்கையர்கள் என்று அடையாளங்காணப்படுகின்றனர். அரசியல் பரப்புரைகளால் தூண்டப்படும் கலகங்கள் பிரிவினவாதத்தால் ஏற்படும் மறை எண்ணங்கள் நாட்டில் குடிமக்களின் மனங்களில் ஆழப்பதிந்திருப்பதால் எங்கள் மனங்கள் பின்நோக்கிய சிந்தனையிலேயே காணப்படுகின்றது. இதன்மூலம் சிறுபான்மை சமூகத்தினரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இது எமது சமூகங்களிடையே மோதல் போக்குகளை அதிகரிப்பதிலும் பங்காற்றுகின்றது. ஆகவே சமூகங்களை ஒன்றிணைப்பதிலும் சமூகங்களிடையே பச்சாபதாபம் காணப்படுவதை உறுதிப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. உறுதியான மாற்றங்களை நாங்கள் காண விரும்பினால் அதற்கான செயற்றிட்டங்கள் செயற்படுத்தப்பட்டு தொடர்ச்சியான விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும். பன்மைத்துவம் என்பது பாராட்டப்பட வேண்டியது தான் எனினும் அந்த பன்மைத்துவம் என்பது இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையேயான மோதல்களைத் துண்டும் கருவியாக இருத்தல் ஆகாது.
ஒரே சட்டம்
இலங்கையர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் இருத்தல் வேண்டும். சமூக அந்தஸ்து இன மத கலாசார தலையீடுகள் தாண்டிய அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் இருக்கும் பட்சத்திலேயே வெளிப்படைத்தன்மையான குறைகளற்ற ஒரு நீதி முறைமையை எமது நாட்டில் காணமுடியும். இலங்கையைப் பொறுத்தவரையில் நீதியைப் பெறுவதற்கான பாதை என்பது தடைகள் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இது அநியாயம் இழைக்கப்படுகின்ற சமூகங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமைவது இல்லை. எங்கள் செயற்றிட்டம் மூலமும் அறிவுரைகள் மூலமும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் இதனை அடைவதற்கு நாங்கள் உத்தேசித்துள்ளோம்.
ஒரே நாடு
இலங்கையின் இறையாண்மையைப் போற்றுதலையும் பாதுகாத்தலையும் இலக்காகக் கொண்டு நாங்கள் செயற்படுவோமாயின் அது நாட்டின் அரசியல் கட்டமைப்பில் முன்னேற்றத்திற்கு உதவுவதுடன் எங்கள் நாட்டிற்கும் நன்மை பயப்பவதாக அமையும். எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் இலங்கையர்கள் இது எங்கள் நாடு ஆகும்.
இந்த நான்கு தலைப்புகளுக்கு தொடர்ச்சியாக எங்கள் நிறுவனம் அடைவதற்காக 10 நோக்கங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
முக்கிய பத்து நோக்கங்கள்
01.புள்ளிவிபர மற்றும் விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கையை ஆட்சி செய்தல்.
02.இலங்கையில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் தொழிலதிபர்களை ஊக்குவித்தல் மற்றும் இலஞ்ச ஊழலை ஒழித்தல்.
03.சகல அரசியல்வாதிகளுக்கும் ஆகக் குறைந்த கல்வித் தகைமை மற்றும் ஓய்வூதிய வயதெல்லை என்பவற்றை வரையறை செய்தல்.
04.மாறுபட்ட பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளம் உள்ளடங்கலாக சகலருக்கும் சம உரிமைகள் வழங்கப்படுதல்.
05.மாட்டுக்கொலை விலங்குகளை வதைத்தல் மற்றும் கட்டாக்காலி நாய்கள் என்பவற்றை இல்லாதொழித்தல்.
06.கஞ்சா பாவனையை சட்டவிரோதமாக்குவதனைத் தவிர்ப்பதன் மூலம் நமது பிள்ளைகள் செயற்கை போதைப்பொருளுக்கு அடிமையாகுவதிலிருந்து பாதுகாத்தல்.
07.ஆறுகள் மழைக்காடுகள் கடற்கரைகள் மற்றும் அதிகம் விரும்பப்படும் வனவிலங்குகள் ஆகியவற்றுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படுவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
08.தேசிய கொள்ளைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குழந்தைப் பாலியல் வன்கொடுமையை ஒழிக்க செயற்படுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை விபச்சார விடுத தொழிலகங்களை விதிக்கு உட்படத்துவதன் மூலம் செயற்படுத்துதல்.
09.சகல மதகுருமார்களையும் அரசியல் கடமைப் பொறுப்பிலிருந்து விடுவித்தல்.
10.தொழில் வல்லுநர்களுக்கும் தனித்திறன் வாய்ந்த வேலையாட்களுக்கும் அவுஸ்திரேலியா கனடா அமெரிக்கா ஜப்பான் தென்னொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 53 பேருக்கு இராணுவத்தால் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை தடுப்பூசிகள் ஏற்றாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவத்தினரால் நடமாடும் சேவை ஊடாக வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 53 பேருக்கு அஸ்ரா செனக்கா கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் கொரோனாவுக்கு 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று வயது வித்தியாசம் பாராமல் உயிர்களைப் பலியெடுத்து வருகிறது.
இந்நிலையில் கொழும்பு நாவல பிரதேசத்தை சேர்ந்த 12 வயதேயான சிறுமி ஒருவரும் நேற்று கோவிட் தொற்றினால் பலியாகியுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் பொது முடக்க நேரத்தில் திறந்திருந்த 3 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் முழுமையான முடக்கம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் மீன் கடை ஒன்றும், மன்னார் வீதியில் பலசரக்கு கடை ஒன்றும், பேக்கரி ஒன்றும் முடக்க காலப்பகுதியில் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில்,
சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிசாரால் எதிர்வரும் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டது.
கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (24.08.2021) உயிரிழந்துள்ளார். மங்கள சமரவீரவிற்கு கோவிட் – 19 தொற்று ஏற்பட்ட நிலையில்,
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கோவிட் – 19 தொடர்பான நிமோனியா ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு,
சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே தனது 65ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச வைத்திய அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் கடந்த இரு மாதங்களில் 200 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில்,
அதனை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்காக களப்பணியாற்றி வந்த செட்டிகுளம் பிரதேச வைத்திய அதிகாரி தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார். இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக களப்பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார துறையை சேர்ந்த பலரும் தொற்றுக்கு இலக்காகி வரும் நிலையில் நிலமையை உணர்ந்து மக்கள் பொறுப்புணர்வுடனும், விழிப்புடனும் செயற்பட வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண்ணை வ.ரதட்சனை கொ.டுமையால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்த சம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் சசி ஜாதவ். கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி சசியை தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று மூன்று லட்சம் வாங்கி வரும் படி அவரது கணவர் கூறியுள்ளார்.
ஆனால் சசி வரதட்சனை கொடுக்கும் அளவிற்கு எங்கள் வீட்டில் வசதி இல்லை என்று கூறி மறுத்துள்ளார். இதனால் ஆ.த்திரம் அடைந்த அவரது கணவர் சசியை கா.ட்டுமிராண்டித்தனமாக தா.க்.கி.யு.ள்.ளா.ர்.
அது மட்டும் இல்லாமல் வரதட்சணை கொடுக்காததால் சசியின் கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் மூவரும் ஒன்று சேர்ந்து அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.
ஆசிட் குடித்ததில் அந்த பெண்ணிற்கு உடல்நிலை மோசமானதால் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து 50 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ.யிரிழந்தார். என் ம.ரணத்திற்கு காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள் என்று இ.றப்பதற்கு முன்பு சசி வாக்குமூலம் கொடுத்துள்ளது பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடியில் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண்மணி கண்விழித்து பார்த்த பொழுது கறுப்பான உருவம் தென்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் லட்சுமி(32). இவர் நள்ளிரவில் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று ஏதோ ஒரு சத்தம் கேட்டதால் கண் விழித்து பார்த்துள்ளார்.
அப்போது பீரோவுக்கு அருகே கருப்பு உருவம் இருப்பது போல் தெரிந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமி உடனே படுக்கையை விட்டு எழுந்து விளக்கை போட்டுள்ளார்.
இவர் எதிர்பாராத நேரத்தில் ஒரு ஆண் உருவம் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவர் உடனே கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு அவரை மடக்கி பிடித்து கம்பியில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பெயர் சுடலை என்பதும் நீண்ட நாட்களாக தேடப்பட்டிருந்த திருடன் என்பது தெரியவந்தது. பொதுமக்கள் உடனே நடந்த சம்பவம் குறித்து பொலிஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுடலையை விசாரித்த பொழுது அவர் செய்த தவறை ஒப்பு கொண்டுள்ளார். அன்றிரவு மட்டும் சுடலை 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று ஒருநாள் இரவு மட்டும் 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 சவரன் தங்க நகைகளை திருடி பாக்கெட்டில் மறைத்து வைத்த்திருந்தார். அதனை பொதுமக்கள் மற்றும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவில் பெற்றோர் வீட்டுக்கு அடுத்தநாள் காலையில் வருவதாக கூறிய இளம்பெண் இரவில் கணவன் வீட்டில் தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுதீஷ் கவுதம். இவர் மனைவி மீனா கவுதம். தம்பதிக்கு பாரதி என்ற மகள் உள்ளார். பாரதிக்கும் சுலப் கன்சல் என்ற இளைஞனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு முன்னர் தனக்கு சொந்தமாக எண்ணெய் ஆலைகள் இருப்பதாக கன்சல் கூறினார். ஆனால் அவருக்கு சொந்தமாக ஒரு ஆலை கூட இல்லை என்பதை திருமணத்துக்கு பின்னர் அறிந்து பாரதி அ.திர்ச்சியடைந்தார்.
மேலும் தொடர்ந்து பாரதியை வரதட்சணை கேட்டு கன்சல் மற்றும் அவர் தாய் கொ.டு.மைப்படுத்தி வந்ததால் அவரின் திருமண கனவும் கலைந்து போனது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வருவதாக நேற்று முன் தினம் இரவு போன் செய்து அவர்களிடம் கன்சல் கூறினார்.
இதற்காக தனது புடவைகள், மற்ற பொருட்களை சூட்கேசில் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று காலையில் சுதீஷ் கவுதமுக்கு போன் செய்த அவர் மாப்பிள்ளை கன்சல், உங்கள் மகள் பு.டவையில் தூ.க்குபோட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக கூறினார்.
இதை கேட்ட அவருக்கு தூக்கி வாரி போட்ட நிலையில் கன்சல் சொன்ன மருத்துவமனைக்கு சென்று மகளின் ச.டலத்தை பார்த்து சுதீஷ் – மீனா க.த.றி அ.ழுதனர்.
அங்கு வந்த பொலிசாரிடம் அவர்கள் கூறுகையில், எங்கள் மகளை அவரின் கணவர் மற்றும் மாமியார் சேர்ந்து கொ.லை செ.ய்.துவிட்டு த.ற்.கொ.லை எ.ன பொய் சொல்கின்றனர்.
இ.றப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட பாரதி எங்களிடம் பேசினாள் என கதறியபடி கூறினர். இதை தொடர்ந்து வரதட்சணை கொ.டுமையால் பாரதி இறந்ததாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 103 பெண்களும் 91 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கோவிட் தொற்று உறுதியான மேலும் 3,223 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 393,223 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,222 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி, கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 344,381 ஆக அதிகரித்துள்ளது.
வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் என சென்ற நபர் வைத்தியசாலையில் தனது பெயர் விபரங்களை பதிந்து கொண்டு இருந்த போதே வி.ழுந்து ம.ரணமடைந்துள்ளார். இன்று (23.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு மருந்து எடுப்பதற்காக நபர் ஒருவர் சென்றுள்ளார்.
அவரது உடல் நிலையை அவதானித்த தனியார் மருத்து மனையைச் சேர்ந்தவர்கள் குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவ் நபர் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவதற்காக தனது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டிருந்த போதே கீழே வி.ழுந்து ம.ரணமடைந்துள்ளார்.
ம.ரணமடைந்தவர் வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நபராவார்.