வெளிநாட்டில் பணிபுரிந்த இலங்கை பெண்ணுக்கு சுமார் 54 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க உத்தரவு!!

தரங்க தில்ருக்ஷி

துபாயில் பணிபுரிந்த, இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துக்காக துபாய் நீதிமன்றத்தால் 1 மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

45 அகவையை கொண்ட தரங்க தில்ருக்ஷி என்ற பெண் விபத்தின் காரணமாக சக்கர நாற்காலியின் உதவியில் நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனையடுத்து, தமது காயங்களுக்கு இழப்பீடு கோரி, ஒரு வருட கால நீதிப் போராட்டத்திற்குப் பிறகு, அவருக்கு சுமார் 54 மில்லியன் இலங்கை ரூபாய் இழப்பீட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக Guld news தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே 24ஆம் திகதி, பர் துபாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜீப்ரா கிராசிங்கில் இடம்பெற்ற விபத்தில் தில்ருக்ஷி காயமடைந்தார்.

சாலையை கடக்கும்போது, தில்ருக்ஷி காயமடைந்தார். இதனையடுத்து குறித்த ஓட்டுனருக்கு எதிராக போக்குவரத்து நீதிமன்றம் 5,000 திர்ஹம் அபராதம் விதித்தது. எனினும் இந்த தணடனையை எதிர்த்து, தில்ருக்ஷிக்கு சட்டக் குழு ஒன்று உதவியது.

இதன்படி விபத்து காயங்கள் காரணமாக, திருக்ஷிக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவ வசதி தேவை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட வாதத்தின் அடிப்படையில் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட தில்ருக்ஷிக்கு 54 மில்லியன் ரூபாவை, நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த நட்டஈட்டை காப்புறுதி நிறுவனம் ஒன்று வழங்கவுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இலங்கையின் இசை இளவரசி!!

பாடகி யொஹானி..

மெனிக்கே மஹே ஹிதே.. இரவில் ஒன்றே ஒன்று என்ற பாடலின் மூலம் இலங்கையைச் சேர்ந்த இளம் பாடகி யொஹானி இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றார். உலகளாவிய ரீதியில் இவரது இந்தப் பாடல் 50மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

முதலில் சகோதர மொழியில் வெளியான இந்த பாடல் பின்னர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது அடிக்கடி முனு முனுக்கும் பாடலாக இது மாறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள இந்தப் பாடலை மில்லியன் கணக்கானவர்கள் பார்வையிட்டுள்ள நிலையில் அவர்களுள் ஒருவராக வந்திருக்கின்றார் இந்தியாவின் சூப்பர் ஸ்டார், இந்திய சினிமாவின் கிங் மற்றும் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகின்ற அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சன் இந்த பாடலை பற்றிக் குறிப்பிடும்போது இந்த பாட்டின் இசையில் நான் மயங்கிப்போனேன் என்ற விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் மற்றும் முகப்புத்தக தளத்தில் பதிவுகளையும் இட்டுள்ளார்.

அது மாத்திரம் இல்லாது இன்று இந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் பாடல் போட்டி நிகழ்ச்சிகளிலும் இந்த பாடல் பாடப்பட்டு வருகின்றது.

உலகளவில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்ற இந்த பாடலைப் பாடிய யொஹானி இன்று உலகளவில் பேசப்படும் இலங்கையின் இசை பொக்கிஷம்.

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!!

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில்..

கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டெம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சர் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலைமையில் சில வகுப்புகளை மாத்திரம் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு அழைப்பதா அல்லது சுழற்சி முறையில் கட்டம் கட்டமாக வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளை தொடர்வதா என்பது தொடர்பிலும் கல்வியமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை கல்வியமைச்சு பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

-தமிழ்வின்-

வவுனியாவில் வீதிகளில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை : நான்கு பேருக்கு கொரோனா தொற்று!!

அன்டிஜன் பரிசோதனை..

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களுக்கு வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (23.08) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர் வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி செயற்படுபவர்கள் மீது பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியா நகப் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, குருமன்காடு சந்தி, பசார் வீதி மற்றும் ஹொரவப்பொத்தானை வீதி என்பவற்றில் துவிச்சக்கர வண்டி, மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 38 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் ஆச்சிபுரம், மடுகந்தை, தரணிக்குளம், மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிசாராலும் எச்சரிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்!!

வாழை மரம்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியிலுள்ள அதிசய வாழைமரமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாழைமரமானது வாழைப்பூ இன்றி வித்தியாசமான முறையில் வாழை வந்துள்ளாக கூறப்படுகிறது.

வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இந்த வாழை மரம் காணப்படுவதாக தெரியவருகிறது.

இந்த வாழை மரத்தில் வாழைக்காய் வந்துள்ளமை வித்தியாசமான முறையில் காணப்பட்டுகிறதாகவும் இதனை பார்வையிட்டுச் செல்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு (22.08.20210 வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் மகாறம்பைக்குளம், தவசிகுளம், புதிய சாளம்பைக்குளம், மறவன்குளம் ஆகிய பகுதிகளிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முதல் தடவையாக 4000 ஐ தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்!!

கொரோனா..

இலங்கையில் முதல் தடவையாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியுள்ளது. நாட்டில் இன்றைய தினம் 4,282 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டில் இதுவரை 390,000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 18,769 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 183 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,366 ஆக அதிகரித்துள்ளது.

மொபைலில் செய்த தவறு : மனைவியிடம் கதறிய கணவர் : இறுதியில் நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இ.ழந்த வாலிபர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பச்சையப்பனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆஷா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு நித்திய ஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் பச்சையப்பன் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் பச்சையப்பன் தனது மனைவி மற்றும் மகளுடன் பேசாமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஆஷா எதற்காக வேலைக்கு செல்லவில்லை என்று அவரிடம் கேட்டுள்ளார்.

அப்போது தான் ஆன்லைனில் ரம்மி விளையாடியதாகவும், அதில் பணத்தை இ.ழந்து விட்டதாகவும் பச்சையப்பன் தனது ம.னை.வியிடம் கூறி க.த.றி அ.ழு.துள்ளார்.

மேலும் தனது செல்போனையும் பச்சையப்பன் தூ.க்.கி எறிந்ததால் அது சுக்குநூறாக உடைந்து விட்டது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பச்சையப்பன் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ச.ம்.பவ இடத்திற்கு சென்று பச்சையப்பனின் ச.ட.லத்தை கைப்பற்றி அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.த காவல்துறையினர் தீ.வி.ர வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த கணவன் சடலத்தை பார்த்து கதறி அழுத மனைவி : பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவர் நெஞ்சு வலியால் உ.யிரிழந்துவிட்டார் என மனைவி நாடகமாடிய நிலையில் அவர் கொ.லை செ.ய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த தம்பதி ரஞ்சித் குமார் சிங் – சத்யா (28). இவர்கள் தனது இரண்டு வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 18-ம் திகதி இரவு ரஞ்சித்குமார் சிங் நெ.ஞ்சுவலியால் இ.றந்துவிட்டதாக மனைவி சத்யா கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர்களது வீட்டிற்கு வந்து ச.டலத்தை பார்த்த ரஞ்சித்குமார் சிங்கின் தந்தை, இ.றப்பில் ச.ந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தார்.

அப்போது ச.டலத்தை பார்த்து சத்யா க.தறி அ.ழுதபடி இருந்தார். இதனையடுத்து ச.டலத்தை கை.ப்பற்றிய பொலிசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போதுதான் ரஞ்சித்குமார் சிங் க.ழு.த்.து நெ.ரி.க்.க.ப்.ப.ட்.டு கொ.லை செ.ய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மனைவி சத்யாவிடம் பொலிசார் தீ.விர வி.சாரணை மேற்கொண்டனர்.

வி.சாரணையில், ரஞ்சித்குமார் சிங் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், ஆ.த்திரமடைந்த சத்யா, பல முறை கண்டித்திருப்பதும், சம்பவத்தன்று இரவு ம.து.போ.தை.யி.ல் வீட்டுக்கு வந்த அவரை க.ம்பியால் க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.லை செ.ய்ததும் க.ண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், நெ.ஞ்சுவலியால் தன் க.ணவர் இ.றந்துவிட்டதாக கூறி அனைவரிடமும் நாடகமாடியதையும் பொலிசார் கண்டறிந்தனர். இதனையடுத்து சத்யாவை கைது செய்த பொலிசார் தொடர்ந்து வி,சாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் நடந்த அதிரடி மாற்றம்!!

கொவிட்..

இலங்கையில் தற்போது தீவிரம் அடைந்து வரும் கொவிட் தொற்றிலிருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் இன்று குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த தொற்றாளர்களில் 18,769 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 342,159 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றால் 386000இற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 342,159 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 7183 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 183 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,366 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 76 பெண்களும், 107 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 30 வயதுக்கும் குறைந்த இருவரும், 30 முதல் 59 வயது வரையிலான 45 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 136 பேரும் மரணித்துள்ளனர்.

வவுனியாவில் இன்று 3 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மேலும் ஒரு ஆண் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு (22.08) குறித்த ஆண் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, பட்டானிச்சூர், மூன்றாம் ஒழுங்கையைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். அவரது உடலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை இன்று பிற்பகல் தோணிக்கல் சிவன்கோவலடிப் பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண் ஒருவரும் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்திருந்தார்.

மேலும் வவுனியா மதவுவைத்தகுளம் கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிப்பிகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று மரணமடைந்தார்.

அவர் திடீர் சுகவீனமுற்றநிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

இதேவேளை இன்று மட்டும் வவுனியாவில் 3 பேர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்ததுடன் வவுனியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி : மற்றுமொருவர் காயம்!!

கிளிநொச்சி..

கிளிநொச்சி, ஏ 9 வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வான் ஒன்றும், எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்து நேர்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வானின் சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாகவே சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை வானின் சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

ஆப்கானிஸ்தானில்..

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை அடுத்து, அங்கு 20 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது தலிபான் பயங்கரவாதிகள். இந்த நிலையில், தலிபான்களில் ஆட்சியை விரும்பாத ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அண்மைய நாட்களில் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிடைக்கும் விமானங்களில் ஏறி நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என மக்கள் பறிதவித்த காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதேவேளை, விமானங்களில் சக்கரங்கள் மற்றும் இறக்கைகளில் தொங்கி இருந்தவர்கள், நடுவானில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவங்களும் அரங்கேறியிருந்தன.

இந்நிலையில் நம்மால் செல்ல முடியவில்லை என்றாலும், நம் பிள்ளைகளாவது வெளிநாட்டிற்கு சென்று நிம்மதியாக உயிர் வாழட்டும் என்று, குழந்தைகளை விமானநிலையத்தில் இருக்கும் இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

அப்படி ஒப்படைக்கப்படும் குழந்தைகள், பாதுகாப்பாக வேறொரு நாட்டில் இருக்கும் குழந்தைகள் தத்தெடுக்கும் நிறுவனத்திடம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்படி காபூல் விமான நிலையத்தில் தனது தாயிடம் இருந்து பிரிந்து சென்ற 2 மாத ஆப்கானிய குழந்தையை துருக்கி இராணுவ வீரர்கள் பாசத்துடன் கவனித்து வந்துள்ளனர். இந்த குழந்தை முதலில் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பான புகைப்படம் மட்டும் வெளியாகியிருந்தது.

இதையடுத்து தற்போது, அந்த குழந்தையின் பெயர் Farista Rahmani என்வும் பிறந்து 2 மாதமே ஆன நிலையில், விமானநிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது, குழந்தை காணாமல் போனதாகவும்,தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து துருக்கி இராணுவம் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு, உணவளித்து வந்துள்ளனர். அதன் பின் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவந்ததால், அது குழந்தையின் தந்தையிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தாய் Hadiya Rahmani எனவும் தந்தை Ali Musa Rahmani எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த குழந்தையை தன் குழந்தை போல், துருக்கி பெண் இராணுவ வீராங்கனை பாசமாக அணைத்து முத்தமிட்டுக் கொண்ட அந்த ஒற்றை புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

இதே போல் ,விமான நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை தாண்டி தங்கள் குழந்தைகளை மறு பக்கம் நின்றிருந்த இராணுவ வீரர்களிடம் கொடுக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

அப்படி கொடுக்கப்பட்ட ஒரு குழந்தையை அமெரிக்க வீரர் ஒருவர் வாங்கி தன் சக வீரரிடம் கொடுக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வைரலானது. இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

அந்த பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாலேயே அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என அந்த அதிகாரி கூறியுள்ளார். விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கபட்டபின், மீண்டும் அந்த குழந்தை அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

புகைப்பிடிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

எச்சரிக்கை..

புகைப்பிடிப்பவர்களுக்கு கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் புகைப்பிடிக்காதவர்களிலும் 14 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வீட்டிலோ அல்லது வெளியிடம் ஒன்றிலோ புகைப்பிடிப்பவர்களுடன் இருந்தால் கோவிட் தொற்று தாக்கும் சாத்தியம் அதிகமாகும்.

கோவிட் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் என்பது போன்றே அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களினால் மரணம் நேரக்கூடிய சாத்தியமும் அதிகமாகும்.

தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் பழக்கமுடையவர் என்றால் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் என டொக்டர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டை திக்குமுக்காட வைக்கும் கொரோனா மரணங்கள் : இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

கொரோனா..

ஆசிய வலயத்தில் அதிக கொரோனா மரணங்கள் பதிவான வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பதிவாகிய கொரோனா மரணங்களின் அடிப்படையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக கொரோனா நிலைமை குறித்து அறிக்கையிட்டு வரும் worldometers இணையத்தளத்தை சுட்டிக்காட்டு இந்த தகவல் வௌியாகியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில் 1209 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதாவது ஒவ்வொரு ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 56 பேர் உயிரிழக்கின்றனர்.

ஆசிய வலயத்தில் உள்ள 48 நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜோர்ஜியா முதலிடத்தில் உள்ளது. மேலும் உலக நாடுகள் பட்டியலில் அதிக கொரோனா மரணங்கள் இடம்பெறும் 9வது நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.