தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு கொரோனா பரவுமா?

கொரோனா..

தடுப்பூசி இரண்டையும் பெற்றுக் கொண்டவர்களின் உடம்பில் கொரோனா வைரஸ் பரவும் தன்மை 65 வீதத்தால் குறைவாகும். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு உயிரியல் சார்ந்த ஆய்வு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவாந்தர மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

88 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், அவற்றில் 84 டெல்டா வகை தொடர்புடைய மரபணு பகுப்பாய்வாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறினார்.

கொழும்பு, மஹரகம, மாலபே, வவுனியா, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

மாத இறுதியில் ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா? இறுதி தீர்மானம் எடுக்க அரச உயர்மட்டம் தயாராவதாக தகவல்!!

ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா?

நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிப்பது குறித்து அரச உயர்மட்டம் ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் நிலைமைகளை அவதானித்த பின்னர் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்தால் நோயாளர்களின் எண்ணிக்கை குறையலாமென சுகாதாரத்துறை நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையிலேயே இது தொடர்பில் அரச உயர்மட்டம் ஆராய்வதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி உரையாற்றிய போது, இனிவரும் நாட்களில் இந்த நாட்டை நீண்ட காலத்திற்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின்,

நாட்டிலுள்ள அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென தான் கேட்டுக்கொள்வதாக மக்களிடம் கோரிக்கையும் முன்வைத்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (22.08) குறித்த ஆண் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, தோணிக்கல், சிவன்கோவில் வீதியைவ் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். அவரது உடலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!!

தடுப்பூசி..

60 வயதுக்கு மேற்பட்டோர் முடியுமானவரை விரைவாக, தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்துக்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பார் நாயகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களில் 70 முதல் 80 சதவீதமானோர் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடுபவர்களை வழிமறித்து விசேட சோதனை!!

விசேட சோதனை..

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் நடமாடுபவர்களை வழிமறித்து இராணுவத்தினரும், பொலிசாரும் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் அவர்களை எச்சரித்தும் அனுப்பி வருகின்றனர்.

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சடம்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு சட்ட நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடுவோரை கட்டுப்படுத்த வவுனியா பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பழைய பேரூந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளை அண்டி விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், வீதிகளால் செல்லும் வாகனங்களை வழிமறித்து சோதனை மேற்கொண்டு வருவதுடன் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் பயணிப்போரை எச்சரித்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற 21 பேருக்கு கொரோனா தொற்று!!

யாழில்..

யாழ்.நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம்.எஸ் லேன் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்த விழாவில் பங்கேற்ற சிலருக்கு கோவிட் தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அதில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அவர்களிலேயே 21 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று பரவலையடுத்து ஒன்றுகூடல்களைத் தவிர்க்கும் வகையில் அரசு விடுத்துள்ள அறிவுறுத்தல்களையும் மீறி இடம்பெற்ற குறித்த பூப்புனித நீராட்டு விழாவில் அளவுக்கதிகமானவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் திறந்திருந்த 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன!!

வர்த்தக நிலையங்கள்..

வவுனியாவில் ஊரடங்கு சட்ட நேரத்தில் திறந்திருந்த 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் முழுமையான முடக்கம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் முடக்க காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 6 வர்த்தக நிலையங்கள்,

சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிசாரால் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தனிமைப்படுதப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டது.

ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை : தயாராக இருக்குமாறு மக்களுக்கு இராணுவத் தளபதி அறிவித்தல்!!

கோவிட் தடுப்பூசி..

கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கோவிட் – 19 செயலணியின் பிரதானியான, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு மூன்றாவது ​தடுப்பூசி டோஸ் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால், மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.  இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்று நிலைமையானது தீவிரமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் கடந்த 20ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் தொடர்ச்சியாக கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று : இருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 116 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில இன்று (21.08.2021) இரவு வெளியாகியுள்ளன.

வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனாத் தொற்று 116 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குருமன்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து மரணித்த நிலையில் பரிசோதனையில் கொரோனா கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் சென்ற இளம் பெண் : இ.ருட்டில் ந.டந்த வி.பரீதம்!!

தெலுங்கானா…

ஆட்டோவில் சென்ற பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று, சக ஆட்டோ சாரதியுடன் கூ.ட்டு வ.ன்.கொ.டு.மை நடைபெற்றுள்ள ச.ம்.ப.வ.ம் அ.திர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியில் ஒரு 20 வயதான பெ.ண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், கடந்த புதன் கிழமை இரவு ஆட்டோவில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் ஆட்டோ சாரதி மற்ற ஆட்டோ சாரதிகளுக்கு போன் செ.ய்.து வரக் கோ.ரி.யுள்ளார். பின்பு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நி.று.த்திவிட்டு, ஆட்டோ ரிப்பேர் என்று பெ.ண்ணிடம் கூறியுள்ளனர்.

அதற்குள் மற்ற ஆட்டோ டிரைவர்களும் வந்த கு.றி.த்த பெ.ண்.ணை சு.ற்றி வ.ளைத்து, ஆட்டோவில் வைத்து கூ.ட்.டு வ.ன்.கொ.டு.மை செ.ய்.து.வி.ட்.டு எ.ஸ்கேப் ஆ.கியுள்ளனர்.

பின்பு கு.றித்த பெ.ண் காவல்நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த கொ.டு.மை.யி.னை.க் கூ.றி பு.கா.ர் அ.ளித்துள்ளார். அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் மூலம் பொ.லி.சார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். கு.றி.த்த பெ.ண்.ணை ம.ரு.த்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணமான 11 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூ.க்கில் பி.ணமாக தொ.ங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் ராஜலட்சுமி (23).

இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்த பாலு என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப த.கராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே நேற்று காலை கணவன்-மனைவி இடையே மீண்டும் குடும்ப த.கராறு ஏற்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் ராஜலட்சுமி வீட்டில் தூ.க்குப்போட்ட நிலையில் பி.ணமாக தொ.ங்கிக் கொண்டிருந்தார்.இதை பார்த்து அ.திர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி பெரியசாமிக்கும், பொலிசாருக்கும் போனில் தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டு ப.தறிய பெரியசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பாலி கிராமத்துக்கு விரைந்து சென்று, ராஜலட்சுமியின் உ.டலை பார்த்து அ.திர்ச்சியடைந்த நிலையில் க.தறி அ.ழுதனர்.

இதற்கிடையே அங்கு வந்த பொலிசார் ம.ர்மமான முறையில் வீட்டில் பி.ணமாக தொ.ங்கிய ராஜலட்சுமியின் உ.டலை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பெரியசாமி, தனது மகளின் சா.வில் ச.ந்தேகம் இருப்பதாக பொலிசில் பு.கா.ர் கொடுத்தார். அதன்பேரில் பொலிசார் ச.ந்தேக ம.ரணம் என வழக்குப்பதிந்து, ராஜலட்சுமியின் சாவுக்கான காரணம் குறித்து வி.சாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியாவில் கிணற்றில் விழுந்து மரணமடைந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் : சடலம் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு!!

மகாறம்பைக்குளம் பகுதியில்..

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து மரணமடைந்த கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததையடுத்து,

அவரது சடலம் மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலைக்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (21.08.2021) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று இரவு (20.08) கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளதுடன், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தாயார் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து,

வவுனியா மாவட்ட மேலதிக நீதிபதி சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார். இதனையடுத்து சடலம் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 200 ஐ நெருங்கிய கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,183ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொவிட் உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,099 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,884 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழில் இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்!!

யாழில்..

கைதடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த, வீதிகளுக்கு தார் செப்பனிடும் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நாவற்குழிக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் வைத்து இன்று மாலையளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்து குறித்த இடத்திற்கு வந்த யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம் : பிக் பாஸ் பிரபலம் கண்ணீர்!!

நடிகை நல்லெண்ணெய் சித்ரா..

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சித்ராவின் திடீர் மரணம்
நம்பவே முடியவில்லை, சில நாள் முன்பு தான் அவரிடம் பேசினேன் என சுரேஷ் சக்ரவர்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வந்த நடிகை நல்லெண்ணெய் சித்ரா இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

அவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி தெருவில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்த நிலையில் வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்குககள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.

56 வயதாகும் சித்ரா கடந்த மே 21ம் தேதி அவர் பிறந்தநாளை கொண்டாடினார். “21-ம் நூற்றாண்டு, வருஷமும் 21, நாளும் மே 21” என அவருக்கு சிலர் வாழ்த்து கூறினார்களாம். தற்போது ஆகஸ்ட் 21ம் தேதி அவர் மரணமடைந்து உள்ளார்.

சித்ராவின் மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி சித்ராவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

“RIP சித்ரா அம்மா. அதிகம் அதிர்ச்சி ஆனேன். நம்பவே முடியவில்லை. சில தினங்களுக்கு முன்பு தானே உங்களிடம் பேசினனே” என உருக்கமாக அவர் பதிவிட்டு உள்ளார். பிரபல நடிகை ரேகாவும் கமெண்டில் “So sad” என பதிவிட்டு உள்ளார்.

நாட்டை நீண்ட காலம் மூடி வைக்க நேரலாம் : தயாராக இருக்குமாறு ஜனாதிபதி மக்களுக்கு அறிவுறுத்தல்!!

ஜனாதிபதி மக்களுக்கு அறிவுறுத்தல்..

இனிவரும் நாட்களில் இந்த நாட்டை நீண்ட காலத்திற்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் நாட்டிலுள்ள அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென,

தான் கேட்டுக்கொள்வதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று (20.08.2021) இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பிற்பலளவில் அறிவித்திருந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் ஜனாதிபதி மக்களுக்காக உரையாற்றினார். இதன்போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.