வவுனியா தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!!

பால் அலுவலகத்தின் சேவைகள்..

கோவிட் பரவலைக் கருத்தில் கொண்டு வவுனியா தலைமை தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் தபால் நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே புதன், வெள்ளி ஆகிய தினங்களில் வவுனியா தலைமை தபால் அலுவலகத்திற்குப் பொதுமக்கள் வருகை தருவதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

வவுனியாவில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொ.ற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இ.னங்காணப்பட்ட கொரோனா தொ.ற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சி.கிச்சைக்காக அ.னுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் மற்றும் அ.ன்டிஜன் ப.ரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.

அதில் ஈரப்பெரியகுளம் இ.ரா.ணு.வ மு.கா.மி.ல் பதின்மூன்று பேருக்கும், கற்பகபுரம் பகுதியில் பத்து பேருக்கும், கோயில்புதுக்குளம் பகுதியில் இருவருக்கும், உக்குளாங்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், வவுனியாவில் பணிபுரியும் புத்தளத்தை சேர்ந்த ஒருவருக்கும்,

மதவாச்சி பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், நவகமுக பகுதியில் ஒருவருக்கும், குடியிருப்பு பகுதியில் மூன்று பேருக்கும், தட்டான்குளம் பகுதியில் இருவருக்கும், செக்கட்டிப்புலவு பகுதியில் இரண்டு பேருக்கும், வவுனியா பொலிசார் ஒருவருக்கும்,

தோணிக்கல் பகுதியில் மூன்று பேருக்கும், கள்ளிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகா நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கும், மதியாமடு பகுதியில் மூன்று பேருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஆறு பேருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஐந்து பேருக்கும்,

குருக்கள்புதுக்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், நேரியகுளம் பகுதியில் இரண்டு பேருக்கும், பெரியஉளுக்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வேப்பங்குளம் பகுதியில் எட்டு பேருக்கும், கிடாச்சூரி பகுதியில் ஒருவருக்கும்,

புதியசாளம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் இரண்டு பேருக்கும், கப்பாச்சி பகுதியில் ஒருவருக்கும், ஓமேக்காவில் பணிபுரியும் ஒருவருக்கும், ஈச்சங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மதீனாநகர் பகுதியில் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் மூன்று பேருக்கும்,

சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஒமந்தை பகுதியில் ஒருவருக்கும், மில்வீதியில் ஒருவருக்கும், மடுகந்த பகுதியில் இரண்டு பேருக்கும், அம்பலாங்கொட பகுதியில் இரண்டு பேருக்கும், போகஸ்வேவ பகுதியில் இரண்டு பேருக்கும், மகாகச்சகொடி பகுதியில் இருவருக்கும்,

குட்செட் வீதி பகுதியில் மூன்று பேருக்கும், செல்வாநகர் பகுதியில் ஒருவருக்கும், மணிபுரம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வவுனியா வைத்தியசாலை விடுதியில் மூன்று பேருக்கும் என 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 42 பேர் நோ.ய்க்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தாமாக முன்வந்து வவுனியா வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பவற்றில் அ.ன்டிஜன் மற்றும் பிசீஆர் ப.ரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில் தொ.ற்று உ.றுதி செ.ய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொ.ற்றாளர்களை கொ.ரோனா சி.கிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொ.டர்புடையவர்களை சு.ய த.னிமைப்படுத்துவதற்கும் சு.காதாரப் பி.ரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டை முடக்குவது தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியானது!!

ஜனாதிபதியின் அறிவிப்பு..

கோவிட் பெருந்தொற்று பரவுகை நிலைமை காரணமாக நாடு ஒருபோதும் முடக்கப்படாது என அறிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முடக்கப்படாது என்ற போதிலும் கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை முடக்கினால் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவர் என தெரிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு துரித கதியில் தடுப்பூசி ஏற்றுகையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் : அச்சத்தில் மக்கள்!!

கொரோனா..

நாட்டில் இன்றைய தினம் மேலும் 892 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக இன்று 2,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

அதற்கமைய, இன்று இதுவரையில் மொத்தமாக 3, 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314,340 ஆக அதிகரித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 6,434 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரே நாளில் பதிவாகிய அதிகளவு கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்று மேலும் 171 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,434 ஆக உயர்வடைந்துள்ளது. 30 வயதிற்கு கீழ் 02 மரணமும், 30 முதல் 59 வயது வரையிலான 35 மரணங்களும்,

60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 134 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதற்கமைய நேற்று உயிரிழந்தவர்களில் 69 பெண்களும், 102 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலிமருந்து : பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரியில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்து கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பால முருகன்(28). இவரது மனைவி பிரியா(26). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் பிரியா சேத்தூர் கிராமத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தினத்தன்று பிரியா, குழந்தைகள் குடிக்க பாலை காய்ச்சியுள்ளார். அப்போது பாலில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்து கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்ததாக கூறப்படுகிறது.

அன்றிரவு குழந்தைகள் மற்றும் பிரியா அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு காரைக்கால் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பிரியா மட்டும் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் முழுவதும் கவனக்குறைப்பாட்டால் நிகழ்ந்ததா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலா? என்ற கண்ணோட்டத்தில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதியின் முக்கிய செய்தி!!

இராணுவத் தளபதி..

நாட்டில் கோவிட் தொற்றானது தீவிரமடைந்து வரும் நிலையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நாட்டு மக்களுக்கு முக்கிய செய்தியொன்றை விடுத்துள்ளார். அதன்படி, எதிர்வரும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்குமாறு இராணுவத் தளபதி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொது மக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்.

பணியிடங்களிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, அத்தியாவசிய ஊழியர்களை வரவழைக்க மட்டுமே பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

முழு இலங்கையும் சிவப்பு வலயமாக அடையாளம் : மாதத்திற்கு 5000 மரணங்கள் பதிவாகலாமென எச்சரிக்கை!!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கமைய தற்போது இலங்கை எச்சரிக்கை மட்டம் 4இல் உள்ள நிலையில், எச்சரிக்கை மட்டம் 4 என்பது முழு நாட்டையும் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்துவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது பிரதேச முடக்கங்களுக்கும் அப்பால் 90 வீதத்துக்கும் அதிகமான கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியது அத்தியாவசியமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைவாக தற்போது நாம் எச்சரிக்கை மட்டம் 4இல் உள்ளோம். 4ஆவது எச்சரிக்கை மட்டம் என்பது முடக்கத்தை அண்மித்த நிலைமையாகும்.

அதாவது சன நடமாட்டம் 90 வீதத்திற்கேனும் கட்டுப்படத்தப்பட வேண்டும். திருமண நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதோடு மதுபானசாலைகள், களியாட்ட விடுதிகள் உள்ளிட்டவையும் மூடப்பட வேண்டும்.

இந்த 4ஆவது எச்சரிக்கை மட்டத்தில் நாடு முழுவதும் சிவப்பு வலயமாக காணப்படும். இவ்வாறான நிலையில் அத்தியாவசிய சேவைக்கு மாத்திமே நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். தொற்றுள்ள வலயமே சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்படுகிறது.

அதற்கமைய தற்போது இலங்கையில் சமூகப் பரவல் காணப்படுகிறது என்று கருத முடியும். ஆரம்பத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை மாத்திரம் முடக்கும் வகையிலான பிரதேச முடக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆரம்பத்திலேயே பிரதேச முடக்கங்கள் முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்தால் தற்போது முழு நாட்டையும் முடக்க வேண்டியேற்பட்டிருக்காது.

ஆனால் தற்போதைய நிலையில் பிரதேச முடக்கங்களும் பிரயோசனமற்றவை. கோவிட் தொற்று முகாமைத்துவம் தொடர்பில் நாட்டில் முதலாவது அலை ஏற்பட்ட போதே நாம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழிகாட்டி கோவையை சமர்ப்பித்திருக்கிறோம்.

தடுப்பூசி வழங்கல் தொடர்பிலும் தெளிவான வழிகாட்டியை சுகாதார அமைச்சுக்கு வழங்கியிருக்கின்றோம். இந்த வழிகாட்டி ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நாட்டில் தற்போது காணப்படும் நிலைமை தொடருமாயின் மாதத்திற்கு 5000 மரணங்கள் வரை பதிவாகக்கூடும். இந்த அபாயத்திலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு 90 வீதத்திற்கும் அதிக சமூக இடைவெளியைப் பேண வேண்டும். நடமாட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

அண்மையில் பெயரளவில் மாத்திமே விதிக்கப்பட்டிருந்த நடமாட்ட கட்டுப்பாடுகளே நாட்டில் இவ்வாறானதொரு அபாய நிலைமை ஏற்படக் காரணமாகும்.

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 75 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 25 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கடந்த மே மாதம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கமைய ஆபத்தான குழுவினரை இனங்கண்டு தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தால் மரணங்களின் எண்ணிக்கையை குறைத்திருக்க முடியும்.

ஆனால் சுகாதார அமைச்சு தடுப்பூசி வழங்கும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகிய 90 சதவீதமான மரணங்கள் தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை.

சுகாதாரத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விட இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு தொற்று நோயியல் பிரிவினரால் அதிகளவு தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமையே தற்போதைய நெருக்ககடிகளுக்கான காணமாகும்.

எவ்வாறிருப்பினும் தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மாத்திரமே தனியொரு தீர்வாக அமையும் என்று கருதுவது தவறாகும். தடுப்பூசி ஏற்றிக் கொள்வதோடு சுகாதார விதிமுறைகளையும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

நான் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன் : பெண் ஒருவரின் உருக்கமான பதிவு!!

கொரோனா..

கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு பெண் கூறிய உணர்வுப்பூர்வமான கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அதில் “தன் வாழ்க்கை இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்கிறேன் என்றும் தன்னால் இனி மூச்சு விட முடியாது” என்றும் உருக்கமாக கூறியுள்ளார். அதில் அவர் தொடர்ந்தும் கூறியுள்ளதாவது,

“நான் கோவிட் தொற்றின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன். என் உடலில் ஒக்ஸிஜன் குறைந்துவிட்டது. நான் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறேன்.

வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. நான் இன்னும் கஷ்டப்படுகிறேன். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. நான் மூச்சுத் திணறி ஜன்னல் வழியாக வீட்டில் உள்ளவர்களைப் பார்க்கிறேன்.

என்னால் இனி வீட்டுக்கு போக முடியாது. எனினும், நான் இப்போது போக வேண்டும் என நினைக்கிறேன். நான் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.” என அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து தவறி விழும் இருவர் : பதறவைக்கும் காட்சிகள்!!

ஆப்கானிஸ்தான்..

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து இருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான டுவிட்டர் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அது கபூல் விமான நிலையத்திலிருந்து விமானமொன்று உயர எழும்போது, அதிலிருந்து இருவர் தவறுதலாக வீழ்வதை வெளிக்காட்டியுள்ளது.

தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, காபூலில் அமைந்துள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

விமான நிலையத்தின் வளாகத்தில் மக்கள் திரண்டதால், அமெரிக்கப் படைகள் வான் நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று : ஒரே நாளில் பதிவான அதிக தொற்றாளர்கள்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (17.08.2021) வெளியாகின.

அதில் கோயில்புதுக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், வவுனியாவில் பணிபுரியும் மல்லாவியைச் சேர்ந்த ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், மகாகச்சகொடி பகுதியில் எட்டு பேருக்கும், நீர்ப்பாசன திணைக்களத்தைச் சேர்ந்த ஒருவருக்கும்,

சின்னப்புதுக்குளம் பகுதியில் ஆறு பேருக்கும், நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் மூன்று பேருக்கும், குருக்கள்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செக்கட்டிப்புலவு பகுதியில் ஆறு பேருக்கும்,

வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மணிபுரம் பகுதியில் ஒருவருக்கும், கப்பாச்சி பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் ஒருவருக்கும், மணியர்குளம் பகுதியில் ஒருவருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

குடாகச்சகொடி பகுதியில் ஒருவருக்கும், கல்மடு பகுதியில் நான்கு பேருக்கும், தோணிக்கல் பகுதியில் நான்கு பேருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பூங்கா வீதி நகரசபை விடுதியில் ஒருவருக்கும், வவுனியாவில் பணிபுரியும் தெல்லிப்பளையைச் சேர்ந்த ஒருவருக்கும்,

தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் ஆறு பேருக்கும், தேக்கவத்தை பகுதியில் ஒருவருக்கும், புதுவிளாங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

உளுக்குளம் பகுதியில் இருவருக்கும், மகாமயிலங்குளம் பகுதியில் இருவருக்கும், அம்பலாங்கொட பகுதியில் மூன்று பேருக்கும், அலகல்ல பகுதியில் இருவருக்கும், அவுசலப்பிட்டிய பகுதியில் இரண்டு பேருக்கும், கெப்பற்றிக்கொலாவ பகுதியில் ஒருவருக்கும், டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் இருவருக்கும்,

மதவுவைத்தகுளம் பகுதியில் ஒருவருக்கும், மூன்றுமுறிப்பு பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், ஓமந்தைப் பகுதியில் ஒருவருக்கும், கந்தசாமி கோவில் வீதியில் ஒருவருக்கும், சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் ஒருவருக்கும்,

கல்மடு பகுதியில் ஒருவருக்கும், புதியகோவில்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், பூவரசன்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், கைதராமணி ஆடைத் தொழிற்சாலையில் இருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் ஒருவருக்கும்,

நேரியகுளம் பகுதியில் மூன்று பேருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

வவுனியாவில் கணவன் இறந்து சில நாட்களில் மனைவியும் கொரோனா தொற்றால் பலி!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மூவரும் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளனர்.

வவுனியா – சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா – புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 93 வயதுடைய ஆண் ஒருவரும், வவுனியா – பிரமனாலங்குளம் பகுதியைச் சேர்ந்த 90 வயது பெண் ஒருவரும் என மூவரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் குறித்த பெண்களில் ஒருவர் சுந்தரபுரம் பகுதியில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த முதியவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

சவப்பெட்டிகளுடன் காத்திருக்கும் உறவினர்கள் : வைரலாகியுள்ள புகைப்படம்!!

கொழும்பு..

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே வோட் பிரதேச வீதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன், தேசிய வைத்தியசாலைக்கு அருகே மக்கள் உடல்களை பொறுப்பேற்க காத்திருப்பதாக அந்த புகைப்படத்தை பதிவிட்ட நபர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்த அந்த நபர் தனது பேஸ்புக் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இது நேற்று மாலை 4 மணியளவில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது நான் எடுத்த புகைப்படம். இது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறைக்கு முன்பாக எடுத்த படம்.

மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகள் முச்சக்கர வண்டிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வகையான சவப்பெட்டிகள் அரசாங்கத்தால் கொடுக்கப்படவில்லை. எனது அலுவலகம் ஒரு மூலையில் உள்ளது.

நான் சில சமயங்களில் அலுவலகத்தின் பால்கனியில் இருந்து தேசிய வைத்தியசாலையின் பிணவறையைப் பார்க்கிறேன். ஏழை மக்கள் பிணவறை முன் தினமும் அழுகிறார்கள். சிலர் தரையில் அமர்ந்து அக்கம்பக்கத்தில் மரங்களைக் கட்டி பிடித்து அழுகிறார்கள்.

கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கொண்டுசெல்வதற்கு தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இந்த வைத்தியசாசாலையில் அம்புலன்ஸ் மட்டுமே வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன,

எதிர்காலத்தில் இது போன்ற ஒரு சிறிய சவப்பெட்டியில் கூட இறுதி பயணத்தை மேற்கொள்ள உங்களுக்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை நீங்கள் பொலிதீன் பையில் போர்த்தியபடி அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 60 வயது நபரின் மனிதாபிமானம்!!

மனிதாபிமானம்..

கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவரின் மனிதாபிமான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாணந்துறை பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களை இலவசமாக தங்கள் ஜீப் வண்டியில்,

வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து சென்று ஒருவர் உதவி வருகிறார். 60 வயதுடைய வர்த்தகரான சஹஸ்ரவிஜித்த என்ற நபர் கடந்த 4 நான்கு நாட்களாக இந்த மனிதாபிமான செயலை செய்து வந்துள்ளார்.

தனது உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட நபர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

காலை இரவு பாராமல் கிடைக்கும் அனைத்து அழைப்புகளுக்கும் 24 மணித்தியாலங்களும் சேவை வழங்கும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். அவரது மனைவியான குமாரி விஜிதா அவருக்கு செய்யும் உதவி மிகப்பெரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் பரவலின் போது அச்சத்தில் வீடுகளில் முடங்கியிருக்கும் மத்தியில் தனது உயிரை பயணம் வைத்து இந்த நபர் செய்யும் சேவையை பலரும் பாராட்டியுள்ளனர்.

இலங்கையில் ஒரு மாத கால பொதுமுடக்கம் குறித்து வெளியாகவுள்ள அறிவிப்பு?

பொதுமுடக்கம்..

கோவிட் மற்றும் டெல்டா வரைஸ் பரவலின் தீவிரம் காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள அரசு அடுத்தகட்ட நகர்வாக நாட்டை முடக்குவதற்கு ஆலோசித்து வருவதாக பத்திரிகையொன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதியில் இந்த முடக்கம் அமுலுக்கு வரலாமெனவும், இடைவேளை சகிதமான இந்த முடக்கம் சுமார் ஒரு மாத காலம் வரை நீடிக்குமெனவும் சுகாதாரதுறையின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொது முடக்கம் கடுமையாக கடைபிடிக்கப்படும் அதேசமயம் அத்தியாவசிய சேவைகளை மட்டும் இயக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், பொது முடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

வவுனியா ஒமந்தையில் மயங்கி வீழ்ந்து ஒருவர் மரணம் : பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு!!

ஒமந்தையில்..

வவுனியா ஒமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜேசிபி வாகனத்தின் உதவியாளராக கடமையாற்றிய குறித்த நபர் ஒமந்தை பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் காலை 10 மணியளவில் திடீரென மயங்கி கீழே வீழ்ந்த நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியடன் ஒமந்தை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் முன்னரே மரணமடைந்துள்ளார் என வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

சின்னப்புதுக்குளம் பகுதியினை சேர்ந்த 54வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார். உயிரிழந்த நபரின் சடலம் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்காக ஒமந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.