வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் மூவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூவரே சிகிச்சை பலனின்றி நேற்று (16.08) மரணமடைந்துள்ளனர்.

வவுனியா சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 93 வயதுடைய ஆண் ஒருவரும், வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியைச் சேர்ந்த 90 வயது பெண் ஒருவரும் என மூவர் இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை கடந்த இரு தினங்களில் வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக 5 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவியை கொலை செய்து ரகசியமாக எரித்த கணவன் : தடயத்தை மறைக்க உதவிய தோழி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் ச.ந்தேகமடைந்து அவரை கொ.லை செ.ய்.து எ.ரித்த க.ணவனை பொலிஸார் கைது செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மாவட்டம் விருதுநகர் அருகே குல்லூர்சந்தையை சேர்ந்த‌ கட்டிட தொழிலாளி நாகமுத்து (33). இவரது மனைவி நிர்மலா (30). இவர்களுக்கு இரண்டு பெண் கு.ழந்தைகள் உள்ளனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி சேர்ந்து வாழலாம் என்று கூறி நாகமுத்து நிர்மலா தேவியையும் கு.ழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார்.

ஆனால் நிர்மலாவைக் கா.ணவில்லை என்று அவரது சகோதரர் மூர்த்தி, நேற்று இரவு விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக நாகமுத்துவிடம் பொலிஸார் வி.சாரணை நடத்தினர்.

வி.சாரணையில் ம.னைவியின் ந.டத்தையில் ச.ந்தேகமடைந்து அவரை அ.டி.த்.து கொ.லை செ.ய்.து, வீட்டின் பின்புறம் உள்ள தகரசெட்டில் வை.த்து எ.ரி.த்.து விட்டதாக நாகமுத்து தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாகவும், இதனால் ஆ.த்.திரமடைந்து கொ.லை செ.ய்.ய முடிவு செய்துள்ளார். இதற்காக கு.ழந்தைகளை தனது தந்தை வீட்டில் விட்டுவிட்டு இரவு வீட்டில் வைத்து கொ.லை செ.ய்.த.தா.க பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும், நாகமுத்துவுக்கு அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததும், நிர்மலா இ.றந்த பிறகு அவரை எ.ரிப்பதற்கு முனீஸ்வரி உதவியதும் பொலிஸ் வி.சாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை விருதுநகர் எஸ்.பி.மனோகர் மற்றும் விருதுநகர் டி.எஸ்.பி.அருணாச்சலம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு வி.சாரணை நடத்தினர்.

தொடர்ந்து, நாகமுத்து மற்றும் முனீஸ்வரியை கைது செய்த சூலக்கரை பொலிஸார், மேலும் தீவிர வி.சாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு கணவரின் வீட்டார் முன்பு நடந்த கொடூரம்!!

தெலுங்கானா..

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் குடும்ப த.கராறு காரணமாக காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தீ.க்.கு.ளி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் முனிப்பல்லே என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை பகல் இக் கொ.டூ.ர ச.ம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான சத்தியவாணி என்பவரே தீ.க்.கு.ளி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டவர்.

முனிப்பல்லே கிராமத்தை சேர்ந்த ஹரிபிரசாத் ரெட்டி என்பவருக்கும் சத்தியவாணிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பெங்களூருவில் ஒரு தனியார் நிறூவனத்தில் பணியாற்றி வந்த சத்தியவாணிக்கும் ஹரிபிரசாதுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி, பின்னர் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 12ம் திகதி கணவர் ஹரிபிரசாதை சந்திக்கும் நோக்கில் பெங்களூருவில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் முனிப்பல்லே கிராமத்துக்கு சென்றுள்ளார் சத்தியவாணி.

கணவர் அங்கே இல்லை என்பதை கணவரின் உறவினர்கள் கூற, ஹரிபிரசாத் வரும் வரையில் அவர் அங்கே காத்திருந்துள்ளார்.
இதனிடையே ஹரிபிரசாத் வீட்டுக்கு திரும்ப, மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தினர் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆ.த்திரமடைந்த சத்தியவாணி தம்முடன் எடுத்துச் சென்ற பெ.ட்.ரோ.லை தன்மீது ஊ.ற்றிக் கொண்டு தீ.க்.கு.ளி.த்.து.ள்.ளா.ர் என கூறப்படுகிறது.

அ.திர்ச்சியடைந்த ஹரிபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் என அனைவரும் சத்தியவாணியை கா.ப்பாற்ற முயன்றும் பலனில்லாமல் போயுள்ளது.

சத்தியவாணி சம்பவயிடத்திலேயே உ.டல் க.ருகி ம.ரணமடைந்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்கு பதிந்து வி.சாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

19 வயது பெண்ணை திருமணம் செய்த 35 வயது மாப்பிள்ளையின் வெறிச் செயல் : கதறும் குடும்பம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 19 வயது பெண்ணை திருமணம் செய்த 35 வயது மாப்பிள்ளை அவரை து.டி.து.டி.க்க கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்த வாட்டாத்திக்கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி பிரபாகரன்- காந்தி.

இந்த தம்பதியின் இரண்டாவது மகளான 19 வயது மதிக்கத்தக்க ஜோதி என்பவருக்கும், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க மணிகண்ட பிரபு என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

மணிகண்ட பிரபு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் கத்தாரில் வேலை செய்து வந்ததால், திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

அதன் பின் ஜோதியை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போதே, ஏன் இவ்வளவு அவசரமாக தனக்கு ஜோதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற சந்தேகம் மணிகண்ட பிரபுவிற்கு வந்துள்ளது.

இதனால், திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே, மனைவி மீது மணிகண்ட பிரபு சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார். இதைத் தொடர்ந்து, திருமணத்துக்கு பின்னர் மனைவி ஜோதியுடன் மணிகண்ட பிரபு பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜோதியின் உறவினரான, பேராவூரணி அடுத்த ஊமத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு, கணவன் மனைவி இருவரும் ஆடி விருந்துக்கு சென்றுள்ளனர்.

வீட்டில் அனைவருக்கும் கிடா விருந்து தயாரான நிலையில் புதுமண தம்பதியர் இருவரும் காலை 10 மணி அளவில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுவருவதாக கூறி சென்றுள்ளனர்.

ஆனால், மணிகண்டன் சிவன் கோவிலுக்குச் செல்லாமல் ஏரிக்கரை வழியாக பேராவூரணி நோக்கி ஜோதியை அழைத்து சென்றுள்ளான். ஜோதி கோயிலுக்கு செல்லாமல் எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்ட போது அங்கிருந்த கருவேலமரக்கட்டையை எடுத்து ஜோதியின் த.லை.யி.ல் ச.ரமாரியாக தா.க்.கி.யு.ள்.ளா.ர்.

இதன் காரணமாக ஜோதி சம்பவ இடத்திலே த.லை.சி.த.றி ப.ரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.தா.ர். கோவிலுக்கு சென்ற அவர்கள் வெகு நேரமாகியும் திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் தே.டிய போது, ஜோதி இ.ற.ந்.து கி.டப்பது தெரியவர, அ.திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த பொலிசார், உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வி.சாரணை மேற்கொண்டனர். அப்போது முதற்கட்ட வி.சாரணையில், திருமணம் நடந்து மூன்று மாதமான நிலையில் ஜோதியின் கணவர் மணிகண்டன் சைக்கோ போல் நடந்து கொண்டு,

தங்கள் மகள் கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி வ.ந்ததுமட்டுமின்றி, கூடுதல் நகை பணம் கேட்டு தொ.ந்தரவு செய்ததாக ஜோதியின் பெற்றோர் பொலிசாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, த.லை.ம.றை.வா.க உள்ள மணிகண்ட பிரபுவை தே.டி வ.ருகின்றனர்.

167 பேர் கொரோனா தொற்றால் மரணம் : அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை!!

கொரோனா..

நாட்டில் நேற்று மேலும் 167 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,263 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இன்று (16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

குறித்த உத்தரவு இன்று முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தீர்மானம் தாக்கம் செலுத்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (16.08.2021) வெளியாகின.

அதில், செல்வாநகர் பகுதியில் இருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் மூன்று பேருக்கும், கூமாங்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

பண்டாரிக்குளம் பகுதியில் இருவருக்கும், எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், வேப்பங்குளம் பகுதியில் இருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டக்காடு பகுதியில் ஐந்து பேருக்கும்,

நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், சேமமடு பகுதியில் ஒருவருக்கும், வெளிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கற்பகபுரம் பகுதியில் இருவருக்கும், பதவியா பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் நான்கு பேருக்கும்,

மகாமைலங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் ஐந்து பேருக்கும், மகாகச்சகொடி பகுதியில் இருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும், வீரபுரம் பகுதியில் மூன்று பேருக்கும், பெரியகுளம் பகுதியில் ஒருவருக்கும்,

உளுக்குளம் பகுதியில் இருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், கந்தசாமி நகர் பகுதியில் இரண்டு பேருக்கும், பூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், செக்கட்டிப்புலவு பகுதியில் ஒருவருக்கும்,

இராசேந்திரங்குளம் பகுதியில் ஒருவருக்கும்ஈ ஒலுமடு பகுதியில் ஒருவருக்கும் என 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேகமாக பரவும் டெல்டா வைரஸ் : வீட்டிற்குள் முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை!!

டெல்டா வைரஸ்..

இலங்கையில் டெல்டா மாறுபாடு மிகவும் வேமாக பரவுவதனால் வீட்டிற்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்குமாறு ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வீட்டின் கழிப்பறை, குளியலறை பயன்படுத்தும் போது ஒருவர் பயன்படுத்தி 15 நிமிடங்களின் பின்னர் மற்றுமொருவர் பயன்படுத்தினால் வைரஸ் தொற்ற வாய்ப்புகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றுமொருவரிடம் தொற்றுவதற்கு 15 நொடி என்ற மிக சிறிய காலப்பகுதியே தேவைப்படுகின்றது. முகக் கவசத்தை 15 நொடிகள் நீக்குவதனாலும் ஒருவர் தொற்றாளராக முடியும் என அவர் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவில் இதுவரையில் மீண்டும் டெல்டா தொற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. உங்களுக்கு சிறு பிள்ளைகள் இருந்தால் வீட்டில் இருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டாம்.

வீட்டில் மிகவும் அவதானமாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியாட்கள் வீட்டிற்குள் வருவதற்கு இடமளிக்க வேண்டாம். சிறுவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

மறைக்க ஒன்றுமில்லை : எதற்கும் தயாராக இருங்கள்: மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

கொரோனா..

டெல்டா வைரஸின் புதிய திரிபுகள் உருவாகி வருகின்றன. இதனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், இலங்கையின் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. இதில் மறைக்க ஒன்றுமில்லை. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை.

அதிக நோயாளிகள் அறிவிக்கப்படும் காலம் வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கொழும்பின் பிரபல பாடசாலை மாணவன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பு!!

கொரோனா..

கொழும்பின் பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்த 18 வயது மாணவரொருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொழும்பு – 5 பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவர் உயர் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளதாக தெரியவருகிறது.

அவருக்கு கடந்த 10ஆம் திகதி கோவிட் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 14ஆம் திகதி கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு நோய் தொற்றானது தீவிரமடைந்ததை அடுத்து குறித்த மாணவருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்தியாவை விட இலங்கையில் 15 மடங்கு அதிக கொரோனா மரணங்கள் : ஹெப்கின் பல்கலைக்கழகம் தகவல்!!

கொரோனா..

இந்தியாவை விட இலங்கையில் கோவிட் மரணங்கள் பதிவாகும் வீதம் 15 மடங்கு அதிகமாகும் என ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அபாயமான நிலையில் இரவில் மாத்திரம் ஊரடங்கினை நடைமுறைப்படுத்தியிருப்பது பிரயோசனமற்ற தீர்மானமாகும் என கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு மில்லியன் சனத்தொகையில் ஒரு வாரத்திற்கு அதிகளவானோர் கோவிட் தொற்றால் உயிரிழக்கும் பட்டியலில் உலகளாவிய ரீதியில் இலங்கை நான்காவது இடத்திலுள்ளது.

தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் வேகம் அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்திலுள்ளது. இலங்கையில் நாளாந்தம் ஒரு மில்லியன் பேரில் 5.72 சதவீதமானோர் கோவிட் தொற்றால் உயிரிழப்பதாக ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 1.95 வீதமாகவும், இங்கிலாந்தில் 1.33 வீதமாகவும், பிரான்ஸில் 0.76 வீதமாகவும், இந்தியாவில் 0.3 வீதமாகவும் காணப்படுகிறது. அதற்கமைய இந்தியாவை விட இலங்கையின் மரண வீதம் 15 மடங்கு அதிகமாகும்.

இவ்வாறான நிலையில் உடனடியாக ஊரடங்கினை நடைமுறைப்படுத்தினால் எதிர்வரும் 20 நாட்களில் பதிவாகக் கூடிய 1,200 மரணங்களை தவிர்க்க முடியும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்பது உலக நாடுகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

இந்தியாவை விட இலங்கையில் கோவிட் மரணங்கள் பதிவாகும் வீதம் 15 மடங்கு அதிகமாகும் என்று ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான அபாயமான நிலையில் இரவில் மாத்திரம் ஊரடங்கினை நடைமுறைப்படுத்தியிருப்பது பிரயோசனமற்ற தீர்மானமாகும். எனவே மருத்துத்துறையினரின் ஆலோசனைக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுக்கும் பிரபல ஹோட்டல் உரிமையாளர்!!

சுகாதாரப் பிரிவினரின் செயற்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்வதற்கு கொரோனா தொற்றாளரான வவுனியாவில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று (15.08) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த தொற்றாளர் சுகாதாரத்துறையின் உயர்மட்டத்தில் உள்ள சில அதிகாரிகளின் உதவியுடன் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் வவுனியாவில் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவு காரணமாக 12 பேரை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இதனையடுத்து நேற்றைய தினம் (15.08) சுகாதாரப் பிரிவினர் குறித்த ஹோட்டலுக்கு சென்று அதன் உரிமையாளரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த போது தன்னால் அங்கு வரமுடியாது எனத் தெரிவித்து, சுகாதாரப் பிரிவினரின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளார். இதனால் சுகாதாரப் பிரிவினர் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர்.

அத்துடன் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு வேறு நோய்கள் இருப்பதால் அவரை கொரோனா சிகிச்சை நிலையத்தில் வைத்தே சிகிச்சையளிக்க முடியும் எனவும், வைத்தியசாலையில் இல்லாது தனித்து இருப்பதால் நோய் தாக்கம் அதிகரிக்கலாம் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சமூகப் பொறுப்பு வாய்ந்த ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரப் பிரிவினரின் இயலாமை குறித்தும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் வவுனியாவில் கொரோனா பரம்பலை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டு மாவட்டமே அபாயத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என கவலை வெளியிட்டுள்ள பொதுமக்கள்,

அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை மதித்து கொரோனா தடுப்பு செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்கள் தொடர்பில் நாட்டின் கொவிட் செயலணியின் பொறுப்பதிகாரியான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒட்சிசன் இயந்திரம் வழங்கி வைப்பு!!

ஒட்சிசன் இயந்திரம்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒட்சிசன் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரும், வடமாகாண பிரதம செயலாளருமான சமன் பந்துலசேன, முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக,

ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஞானதிலக தேரரின் ஏற்பாட்டில் பிரான்சில் உள்ள சர்வதேச பௌத்த சமய அமைப்பைச் சேர்ந்த வர உபகார சந்திரதேரர் அவர்களினால் வைத்தியசாலை பணிப்பாளர் க.ராகுலனிடம் குறித்த ஒட்சிசன் இயந்திரம் இன்று (16.08) கையளிக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒட்சிசனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசனைப் பெற்றுக் கொடுப்பதற்காக சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான உயர்ஓட்ட நாசி ஒட்சிசன் கருவி ஒன்றே வழங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் நோயாளருக்கு தேவையான ஒட்சிசனை வழங்க முடியும்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாலால் டிசில்வா, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு, வைத்திய அதிகாரி மதுரகன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான தாயை பொறுப்பேற்க மறுத்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மினுவாங்கொடையில்..

மினுவாங்கொடையில் கோவிட் தொற்றுக்குள்ளான தாயொருவரை வைத்தியசாலை சிகிச்சைக்கு பின்னர் பொறுப்பேற்க மகள் மறுத்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கம்பஹா மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்று காரணமாக தன்னை மினுவாங்கொட மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், தான் தற்போது குணமடைந்து வருவதால் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மகள் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“தங்க மகளே என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றும் குறித்த தாய் கண்ணீர் மல்க கதறும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தலவத்துகொடவில் வசிக்கும் 55 வயதான தம்மிகா ஜெயவீரா எனும் தாயே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்,தனது மகளின் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தினாலும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது : அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!!

கொரோனா..

இலங்கையில் கொவிட் வைரஸின் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருகின்றமையால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் நிலைமை மிகவும் மேசமாகியுள்ளளது. அதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாகும். நோயாளிகள் அதிகமாக பதிவாகக்கூடிய காலப்பகுதியாக தான் எதிர்வரும் வாரங்கள் இருக்கும். இதனால் அத்தியாவசிய விடங்களை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.

அவ்வாறு வெளியே சென்றால் கொவிட் தொற்றக் கூடும் என்பதனை மனதில் வைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும். உலகம் முழுவதும் வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு தற்போது இலங்கையில் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

பாரிய அளவிலான மக்கள் நாள் ஒன்றுக்கு உயிரிழக்கின்றனர். இந்ந வைரஸ் மிகவும் கொடூரமானது. அது மிகவும் வேகமாக உடலில் தொற்ற கூடும். நுரையீரலை பாதிக்க கூடும். உடல் உறுப்புகளை பாதிக்க கூடும்” என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ ஆலோசனை கிடைத்தால் நாட்டில் முடக்கம் : வெளியாகியுள்ள தகவல்!!

முடக்க நிலை..

நாட்டில் முடக்க நிலையை அமுல்படுத்த உத்தியோகபூர்வ ஆலோசனை கிடைக்குமாயின் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் முடக்க நிலையை அமுல்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் உத்தியோகபூர்வமான ஆலோசனை கிடைக்குமாயின், அதனை நடைமுறைப்படுத்த தாம் பின்நிற்கப் போவதில்லை.

எவ்வாறாயினும், கூலித்தொழிலை நம்பி இருக்கும் மக்கள் வாழ்வதற்கான முறைமை ஒன்று இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறானதொரு தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில், அனைத்து விடயங்கள் குறித்து சிந்தித்தே, நாடு என்ற அடிப்படையில் தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தேசிய கபடி அணியின் முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி யுவதிகள் தெரிவு!!

இலங்கையின் தேசிய கபடி அணியில் முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி யுவதிகள் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் நாடளாவிய ரீதியில் 25 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் 18 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த 18 பேரில் கிளிநொச்சி யுவதிகள் மூவரும் அடங்குகின்றனர்.

கிளிநொச்சி சிவநகர் பாடசாலையின் பழைய மாணவிகளான இவர்கள் உருத்திரபுரம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

ஆரம்ப கட்ட பயிற்சியை ஆசிரியர் இராமநாதன் பரஞ்சோதி அவர்களிடம் பெற்ற இவர்கள் கடந்த காலங்களில் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்குப்பற்றியுள்ளனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய மட்ட கபடி போட்டிக்கான இலங்கை அணியின் முதற்கட்ட தெரிவில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்டுள்ள 18 பேரிலிருந்து இறுதியாக 12 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த தெரிவிலும் இவர்கள் தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.