வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் இருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரே சிகிச்சை பலனின்றி நேற்று (15.08) மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா, இராசேந்திரங்குளம் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

யாழில் ஏற்பட்ட கோர விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக பலி!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் இன்று (15.08) காலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக பெண்ணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் விழுந்ததில் டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார். டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் 160 ஐ தாண்டிய கொரோனா மரணங்கள் : இலங்கை முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு!!

கொரோனா..

நாட்டில் நேற்று மேலும் 161 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,096 ஆக உயர்வடைந்துள்ளது. அதன்படி நாட்டின் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை இன்று 6,000 ஐ கடந்துள்ளது.

இதேவேளை கடந்த மூன்று நாட்களாக இலங்கையில் 150க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன் நிலையில் நாளை (16.08) முதல் இரவு 10 மணிமுதல் அதிகாளை மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

வவுனியாவில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று(15.08.2021) வெளியாகின.

அதில் சூடுவெந்தபுலவு பகுதியில் இருவருக்கும், உளுக்குளம் பகுதியில் இருவருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் மூன்று பேருக்கும், தேக்கவத்தை பகுதியில் நான்கு பேருக்கும்,

புளியங்குளம் பகுதியில் இருவருக்கும், நொச்சிமோட்டைப் பகுதியில் ஒருவருக்கும், ஒமந்தை பகுதியில் மூன்று பேருக்கும், டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் இருவருக்கும், கற்குழி பகுதியில் ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

மகாறம்பைக்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், ஆனைவிழுந்தான் பகுதியில் மூன்று பேருக்கும், சிப்பிக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், குடாகச்சகொடி பகுதியில் ஒருவருக்கும், ஒலுமடு பகுதியில் ஒருவருக்கும்,

கூமாங்குளம் பகுதியில் இருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், ஒமந்தை இராணுவ முகாமில் ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் ஒருவருக்கும், பூம்புகார் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் இரண்டு பேருக்கும்,

செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும், வேலன்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் ஒருவருக்கும், ஹொரவப்பொத்தானை பகுதியில் ஒருவருக்கும், செக்கட்டிப்புலவு பகுதியில் இருவருக்கும் என 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் நாளை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு..

நாடு முழுவதும் நாளை(16.08) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தீர்மானம் தாக்கம் செலுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் கோவிட் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில்,பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கோவிட் தொற்றின் தீவிரம் : உலகளாவிய புள்ளிவிவரங்களை விட இறப்பு வீதம் உயர்வு!

கோவிட் தொற்றின் தீவிரம்..

உலகலாவிய ரீதியில் கோவிட் தொற்றின் நாளாந்த வழக்கு – இறப்பு சதவீதம் அல்லது நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது நாளாந்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.4 சதவிகிதம் குறைவாக உள்ளது.

எனினும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 5 சதவிகிதம் உயர்வாக உள்ளதாகவும், இது நாட்டில் கொரோனா வைரஸ் சூழ்நிலையின் தீவிரத்தை குறிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில், இலங்கையின் தினசரி உயிரிழப்பு விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் 06 ம் திகதி அறிக்கையின்படி, இது 3.5 சதவீதமாக இருந்தது. தரவு முறையே 3.3, 3.7, 3.9, மற்றும் 4.2 என சதவிகிதம் அதிகரிப்பதை குறிக்கிறது.

இதற்கிடையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 1,130 கோவிட் -19 உயிரிழப்புகளை இலங்கை பதிவு செய்துள்ளது. இது இலங்கையின் நோய் தொற்றுநோய் நிலைமையின் ஒரு முக்கியமான கட்டமாக கருதப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலம் ஆபத்தானவை : மக்களை தயார் நிலையில் இருக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள்!!

கொரோனா..

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் கொவிட்-19 இன் பிற வைரஸ் வகைகள் தோன்றக்கூடிய ஆபத்துகள் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஆகவே இதுபோன்ற சூழ்நிலைக்கு மக்கள் தயாராக இருப்பது முக்கியம். இலங்கையின் கொரோனா வைரஸ் நிலைமை மிக முக்கியமானதாகவுள்ளதுடன்,

அடுத்த இரண்டு வாரங்களில் நிலைமையை கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாக இருக்கும். எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாம் சாவின் விளிம்பில் உள்ளோம் : இலங்கை மக்களுக்கு பெண் தாதி ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல்!!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் அச்சறுத்தலின் ஆபத்தை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி புஷ்பா ரம்யா டி சொய்ஸத சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

நேற்று அவர் வெளியிட்ட பதிவில், கொவிட் காரணமாக இன்று (நேற்று) எங்களை விட்டு பிரிந்தவர்களின் எண்ணிக்கை 160. கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.

நாளை நாங்கள் நேசித்தவர்களில் இந்த எண்ணிக்கை விடவும் அதிகமானோர் எங்களை விட்டு பிரியவுள்ளனர். இந்த நாட்களில் தினமும் எனது தனிப்பட்ட கைடக்க தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகளில்,

“புஷ்பா எங்கள் குடும்பத்திற்கே கொவிட். என்ன செய்வது?” என்பதே நான் கேட்கும் ஒரே விடயமாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாங்கள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றோம்.

வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளது. பிணவறைகள் நிரம்பியுள்ளது. எங்கள் மூத்த தலைமுறையினர் வேகமாக மரணிக்கின்றனர்.

இதய நோய், சக்கரை நோய், பக்கவாதம், சுவாச மற்றும் நுரையீரல் நோய்களில் உள்ளவர்கள் மிகவும் அவதானமிக்க நிலைமையில் உள்ளனர்.

உடல் பருமன் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கும் அதிக ஆபத்து உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். இது தீர்மானிமிக்க சந்தர்ப்பம். நீங்கள் மாறினால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும்.

* உங்கள் நோய்களுக்கு சரியான சிகிச்சை பெறுங்கள்.

* தரமான உணவை உண்ணுங்கள்.

* தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.

* சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழுங்கள்.

* நன்றாக தூங்கி ஓய்வெடுங்கள்.

* மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள்.

* தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* மது, புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை தவிர்க்கவும்.

* அனைத்து நல்ல ஆரோக்கியப் பழக்கங்களையும் பின்பற்றுங்கள்

நாட்டை உருவாக்கும் முன் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இது நாம் கழிக்கும் நம் வாழ்வின் கடைசி காலப்பகுதியாக இருக்கலாம்” என அவர் பதிவிட்டுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் தடை!!

17ஆம் திகதியில் இருந்து..

எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் வீடுகளிலும் மண்டபங்களிலும் திருமண வைபங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறித்துள்ளார்.

அத்துடன், இன்று நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேநேரம், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோரை விடவும் அதிகமானோருக்கு ஒன்றுகூட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறும் அரசாங்கம் கோருவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நண்பர் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு குளத்தில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

மொனராகல..

நண்பர் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு குளத்தில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கி 3 இளைஞர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மொனராகல புத்தல- கட்டுகஹல்ல நேற்று (14.08.2021) பகல் இடம்பெற்றுள்ளதுடன் இன்று (15) காலை மூவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்த மூவரும் மொனராகலை- மஹாநாம தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் நண்பர் வீட்டுக்குச் செல்வதாகத் தெரிவித்து, 2 மோட்டார் சைக்கிள்களில் வீட்டிலிருந்து சென்றுள்ளதுடன், மாலையாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் புத்தல பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து. கட்டுகஹல்ல குளத்துக்கருகில் மோட்டார் சைக்கில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸார், குளத்தில் பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போதே, மூன்று இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு இன்று பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் வயோதிப பெண்ணை காணியிலிருந்து வெளியேறுமாறு கொலை அச்சுறுத்தல்!!

சோபாலபுளியங்குளம்..

வவுனியா சோபாலபுளியங்குளம் ஏழாம் கட்டை கிராமத்தில் வசித்து வரும் க.லட்சுமி என்ற வயோதிகப் பெண்னை அவரது காணியிலிருந்து வெளியேறுமாறு 15 பேரடங்கிய கும்பல் ஒன்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

சோபாலபுளியங்குளம் கிராமத்தில் வசித்துவரும் வயோதிப தாயாரின் காணியின் எல்லைக் கற்களை தோண்டியெடுத்து விசியெறிந்து உடனடியாக காணியிலிருந்து வெளியேறுமாறு கொலையச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

கடந்த காலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் அச்சுறுத்தல் தொடர்பாக பொலிசார், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கவலை வெளியிட்டனர்.

சோபாலபுளியங்குளம் கிராமத்தில் 95 தமிழ் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் குறித்த கும்பலால் தொடர்ச்சியாக சோபாலபுளியங்குளம் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதுடன் விவசாய நடவடிக்கைகளுக்கு தடை போடும் செயற்பாட்டையும் குறித்த கும்பல் மேற்கொண்டு வருவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழில் காலையில் ஏற்பட்ட கோர விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக பலி!!

விபத்து..

யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக பெண்ணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் விழுந்ததில் டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார். டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பொது வைத்திய சாலைக்கு 50 மில்லியனுக்கும் மேற்பட்ட உபகரணங்கள் சுகாதார அமைச்சினால் வழங்கிவைப்பு!!

தற்போதைய கடும் கொரொனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் பல உயிர்காக்கும் உபகரணங்கள் உட்பட அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு தேவையான உபகரணங்களும் மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நேரில் சென்று விடுத்திருந்த வேண்டுகோளிற்கிணங்க மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீவிர கொரொனா நோயாளிகளுக்கு தேவையான உயர் ஓட்ட நாசி ஒட்சிசன் கருவிகள் (HFNO), நோயாளர் கண்காணிப்பு கருவி (Monitors) மற்றும் செயற்கை சுவாச கருவிகள் (Ventilators) உட்பட பல கருவிகளும் உபகரணங்களும்,

கிடைக்கப்பட்டுள்ளமை தற்போதைய கடும் கொரொனா தொற்று நோயாளிகளுக்கான சேவைகளை வழங்க அத்தியாவசியமானதென மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரை தொடர்புகொண்ட போது, மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்கள் தொடர்ந்தும் தமது ஒத்துழைப்பை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள், சுற்றுநிருபங்களுக்கமைய கொரொனா நோயாளிகள் மற்றும்.

கொரொனா அல்லாத மற்றைய நோயாளிகளுக்கான சேவை வழங்கல் சீரான முறையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டுள்ள போதும், சுகாதார ஊழியர்களது வேலைப்பழு பலமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அர்ப்பணிப்பான சுகாதார ஊழியர்களின் பங்களிப்புடன், மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை தமது நாளாந்த கடமையாக கருதி செயற்படுவதே மேற்படி உபகரணங்களின் பெறுமதிக்கும் மேலான செயல் என குறிப்பிட்டார்.

வவுனியா வடக்கு குடியேற்ற கிரமமான போகஸ்வெவ பகுதியில் சமுதாய அடிப்படை வங்கி திறந்து வைப்பு!!

சமுதாய அடிப்படை வங்கி..

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிங்கள குடியேற்ற கிராமமான போகஸ்வெவ கிராமத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் நடமாடும் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த அலுவலகத்தினை சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண்நிதி, சுயதொழில் மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் தந்தையும் முன்னாள் மாகாண அமைச்சருமான எச்.பி.சேமசிங்க திறந்து வைத்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் மக்களின் கிராமங்கள் சிலவற்றில் கடந்த காலங்களில் பெரும்பான்மையின குடியேற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

அதில் ஒரு கிராமமான கலாபோகஸ்வெவ கிராமத்திற்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதிக்கு அண்மையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவும் மக்கள் குறைகேள் நிகழ்வுக்காக வருகை தந்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இப் பகுதி சமுர்த்தி பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் நடமாடும் அலுவலகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வவுனியா பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் அசங்க காஞ்சன குமார, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபை உறுப்பினர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பௌத்த குருமார் என பலரும் கலந்து கொண்டனர்.

தன்னை கடித்த விஷப்பாம்பை தேடிப் பிடித்து விவசாயி செய்த பயங்கரம் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தன்னைக் கடித்த விஷப்பாம்மை தேடிப் பிடித்து விவசாயி ஒருவர் க.டித்து கொ.ன்.ற சம்பவம் அப்பகுதி பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிஷா மாநிலம், கேம்பரிபட்டியா கிராமத்தை சேர்ந்தவர் கிஷோர்பத்ரா. 45 வயது மதிக்கத்தக்க இவர் விவசாயத்தை கவனித்து வருகிறார். இந்நிலையில், இவர் சம்பவ தினத்தன்று இரவு விவசாய வேலைகளை முடித்துவிட்டு, இரவு வீடு திரும்பிய போது, அவர் காலில் ஏதோ பூச்சி கடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

அதன் பின் அதை நன்றாக உற்று கவனித்த போது, அது பாம்பு கடி என்பது தெரியவர, உடனே அவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று, டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு, தன்னைக் கடித்த பாம்பை தேடியுள்ளார்.

அதன் பின் பாம்பு அவர் கண்ணில் பட, உடனே அந்த பாம்பை கையில் பிடித்து, பழிவாங்கும் நோக்கில், அதை தூக்கிய போது, மீண்டும் அந்த பாம்பு அவரை கடிக்க முயன்றதால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கிஷோர்பத்ரா பாம்பை கண்மூடித்தனமாக கடித்துள்ளார்.

அவரின் பற்களுக்கு இடையில் சிக்கிய பாம்பு, பரிதாபமாக உயிரிழந்தது.இது குறித்து கிஷோர்பத்ரா கூறுகையில், தன்னை தீண்டியது கிரைட் வகையை சேர்ந்த விஷப்பாம்பு என்பது எனக்கு தெரியவந்தது.

உடனே ஆத்திரத்தில் அதை தேடிப்பிடித்து, கடித்து கொன்றேன் என்று கூறியுள்ளார். பாம்பு கடித்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் தனது கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

திருநங்கையை திருமணம் செய்து கொண்ட ஆண் : சில மாதங்களில் மனைவிக்கு கா.த்திருந்த அ.திர்ச்சி!!

இ.ந்தியாவில்..

இ.ந்.தி.யா.வி.ல் தி.ரு.ந.ங்.கை.யை கா.த.லி.த்.து தி.ரு.ம.ண.ம் செ.ய்.த ந.ப.ர் கோ.ப.த்.தி.ல் அ.வ.ரை கொ.லை செ.ய்.து.ள்.ள ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டு.த்.தி.யு.ள்.ள.து.

உ.த்.த.ர.பி.ர.தே.ச.த்.தை சே.ர்.ந்.த.வ.ர் ஜோ.தி கி.ன்.ன.ர். தி.ரு.ந.ங்.கை.யா.ன இ.வ.ர் சி.ல ஆ.ண்.டு.க.ளு.க்.கு மு.ன்.ன.ர் ச.தா.ப் எ.ன்.ற ந.ப.ரை கா.த.லி.த்.து தி.ரு.ம.ண.ம் செ.ய்.தா.ர். இ.தை.ய.டு.த்.து த.ம்.ப.தி.க.ள் சே.ர்.ந்.து ஒ.ரு கு.ழ.ந்.தை.யை த.த்.தெ.டு.த்.து வ.ள.ர்.த்.து வ.ந்.த.ன.ர்.

இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் சதாப் வேறு ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவருடன் வேறு வீட்டில் வாழ தொடங்கினார். இது முதலில் ஜோதிக்கு தெரியாத நிலையில் பின்னர் கணவரின் சுயரூபத்தை அறிந்து அ.தி.ர்ச்சியடைந்தார்.

ஏ.னெனில் த.ன்னை உ.ண்மையாக நே.சிப்பதாக கூ.றிய சதாப் இ.ப்படி செ.ய்துவிட்டாரே எ.ன நொ.ந்து போ.னார். இ.தற்கு பி.ன்னர் ஜோதி – சதாப் இ.டையே இ.டைவெளி அ.திகரித்து அ.டி.க்.க.டி ச.ண்.டை வ.ந்தது.

இ.ந்த நி.லையில் ப.ணம் கொ.டுக்கல் வா.ங்கல் தொ.டர்பாக சி.ல கா.லமாக இ.ருவருக்கும் இ.டையே ம.னக்கசப்பு இ.ருந்தது. இ.து தொ.டர்பாக ஜோதி த.ன.து க.ணவர் சதாப் மீ.து பொ.லிசில் பு.கா.ர் அ.ளித்திருந்தார்.

இது குறித்து பொலிசார் வி.சாரித்து வந்த நிலையில் நேற்று காலையில் ஜோதி வீட்டுக்கு சதாப் வந்தார். அப்போது வீட்டில் வேலையாட்கள் இருந்த நிலையில் இருவரும் தனியறைக்கு சென்றனர்.

அங்கு பத்து நிமிடம் கழித்து திடீரென து.ப்.பா.க்.கி சு.டு.ம் ச.த்.த.ம் கே.ட்டது. பின்னர் அறையில் இருந்து வெளியில் வந்த சதாப் கை.யி.ல் து.ப்.பா.க்.கி.யு.ட.ன் கி.ளம்பி செ.ன்றார். உள்ளே சென்று வேலையாட்கள் பார்த்த போது இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ஜோதி இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர்.

இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் வந்து ஜோதியின் ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்.றி.னா.ர்.க.ள். மேலும், சதாப் மீது கொ.லை வ.ழக்கு பதிவு செய்து அவரை வ.லை.வீ.சி தே.டி வ.ருகின்றனர்.