திங்கட்கிழமை முதல் சுய பயணக் கட்டுப்பாடு?

கொரோனா..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து, தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக, எதிர்வரும் திங்கட்கிழமை (16.0 முதல் நாட்டு மக்கள் அனைவரும் சுய பயணக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

தாம் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு இனி அரசாங்கத்திடம் கோர போவதில்லை என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாளொன்றில் 3000திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 150திற்கும் அதிகமான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையானது, எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார். இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் (13.08) அரசாங்கம் புதிய பயணக் கட்டுப்பாடுகள் எதையும் அமுல்படுத்தவில்லை என கூறிய அவர்,

அவ்வாறான தீர்மானங்களை எடுக்குமாறு இனி தாம் அரசாங்கத்திடம் கோரப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து, வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

கணவரின் நண்பருக்கு எதிராக வாடகை கொலையாளிகளை ஏவிய பெண் : அம்பலமான உண்மை!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் காவல்துறை அதிகாரியான கணவரின் நண்பருக்கு எதிராக வாடகை கொ.லையாளிகளை ஏவிய வங்கி அதிகாரியான பெண்மணி கை.தாகியுள்ளார்.

கேரள வங்கி கண்ணூர் கிளையில் பணியாற்றி வந்த 52 வயதான என்.வி.சீமா என்பவரே பரியாரம் பகுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சீமா அளித்திருந்த முன் ஜாமீன் மனு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்த நிலையில், குடியிருப்புக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

கட்டுமான ஒப்பந்ததாரராக தொழில் செய்து வரும் 55 வயதான சுரேஷ் பாபு என்பவர் கும்பல் ஒன்றால் தா.க்கப்பட்ட சம்பவத்தில் பொலிஸ் முன்னெடுத்த வி.சாரணையிலேயே தா.க்குதல்தாரிகளை ஏ.வியது பெண் என தெரிய வந்தது.

பொலிஸ் அதிகாரியான கணவரின் நண்பரும், அண்டைவீட்டாரும், உறவினருமான சுரேஷ் பாபுக்கு எதிராக 3 லட்சம் ரூபாய் செலவிட்டு வாடகை கொ.லையாளிகளை சீமா ஏ.வியுள்ளார்.

இந்த நிலையில் சுரேஷ் பாபு கா.யங்களுடன் த.ப்ப, அவரை தா.க்கிய ஐவர் கும்பல் பொலிசாரால் கை.து செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையிலேயே சீமா இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் காலதாமதம் செய்து வருவதாலும், கணவரை தவறான பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் கூறி வாடகை கொ.லையாளிகளுக்கு பணம் அளித்துள்ளார்.

ஏப்ரல் 18ம் திகதி சுரேஷ் பாபுவின் குடியிருப்புக்கு அ.த்துமீறி நு.ழைந்த நால்வர் கு.ம்பல், கொ.டூரமாக வா.ளா.ல் தா.க்கிவிட்டு மா.யமாகியுள்ளது. தற்போது இந்த வ.ழக்கில் கைதாகியுள்ள சீமா, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஒரே நாளில் 160 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 160 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது. 30 வயதிற்கு கீழ் 01 மரணமும்,30 முதல் 59 வயது வரையிலான 35 மரணங்களும்,

60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 124 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதற்கமைய நேற்று உயிரிழந்தவர்களில் 73 பெண்களும், 87 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

கொரோனா தொற்றின் ஆபத்து : பிரபல நடிகை விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!!

நயனதாரா விக்கிரமாராச்சி..

கோவிட் தொற்று மிகவும் ஆபத்தானது எனவும், ஆகையினால் இது குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பிரபல நடிகை நயனதாரா விக்கிரமாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தனக்கு எந்த நோயும் இல்லை என்பதால் முதல் சில நாட்கள் அதிகம் கவலைப்படவில்லை, எனினும், பின்னர் கடுமையான சிக்கல்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5ம் திகதி பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டதாக குறிப்பிட்ட அவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் கூறியுள்ளார். முதல் மூன்று நாட்கள் இயல்பாக இருந்த தனக்கு அடுத்தடுத்த நாட்களில் நோய் தொற்றின் தீவிரத்தை உணரமுடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவாசிக்க சிரமப்பட்டதாகவும், பேசுவதற்கும் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதும் பத்து வார்த்தைகள் பேசினால் சுவாசிக்க சிமரமம் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், கோவிட் தொற்று ஆபத்தானது எனவும், ஆகையினால் இது குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையில் பிரபல நடிகை நயனதாரா விக்கிரமாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது : சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை!!

மக்களுக்கு எச்சரிக்கை..

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனவே சுகாதார வழிக்காட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய நிலைமை என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். அதனை எதிர்கொள்ள மக்களை கூடிய வகையில் சுகாதார பாதுப்பு வழிமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும்.

இலங்கைக்கு அடுத்து வரும் 6 வாரங்கள் என்பது சவால் மிக்கதாகும். முகக்கவசம் அணியாத நாடுகளும் உள்ளன. அவ்வாறான நாடுகளின் சனத்தொகையில் சுமார் 60 வீதமானோர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இலங்கையை பொறுத்த வரையில் 51 வீதமானோருக்கு முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்க முடியும்.

இந்த காலக்கட்டம் தான் மிக நெருக்கடியானது. ஏற்பட கூடிய மரணங்களை தவிர்க்க அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தி செயற்படுகின்றது. தொற்றாளர்களில் 80 வீதமானோருக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் காணப்படுவதில்லை. இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.

மேல் மாகாணத்தில் 60 வைத்திய நிபுணர்கள் மற்றும் 200 வைத்தியர்கள் கொண்ட சிறப்பு குழு அறிகுறியற்ற தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளித்து வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவிலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஆத்ம சாந்தி விசேட வழிபாடு!!

ஆலயங்களில்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 14 ம் திகதி இலங்கை வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட,

பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதுமாக 61 பேரினது 15 ஆண்டு நினைவு நாள் இன்று (14.08.2021) உணர்வுபூர்வமாக மக்களது கண்ணீருடன் நடைபெற்றது.

வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட சிறுவர் இல்ல வளாகத்தில் அனுஸ்டிக்கப்படுவதோடு நாட்டில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை.

இருப்பினும் இம்முறை குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஸ்டிக்க பொலிசார் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் தடைவிதித்துள்ளனர். இந்நிலையில் வவுனியாலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் ஆத்ம சாந்தி விசேட வழிபாடு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

மகள் கண்முன் இறந்த தாய் : கணவனை பிடித்தவாறு விடைபெற்ற மனைவி : வைரலாகும் வைத்தியரின் பதிவு!!

வைரலாகும் வைத்தியரின் பதிவு..

அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தமது மருத்துவமனையில் நிலைவும் கோவிட் நிலைமை மற்றும் நோயாளர்கள், உயிரிழப்பவர்கள் தொடர்பிலான பதிவொன்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த பதிவில் குறித்த மருத்துவர், அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனை தொடங்கப்பட்ட நாளிலிருந்து நான் கோவிட் வார்டில் பணியாற்றி வருகிறேன்.

நாம் 12 மருத்துவர்கள் கோவிட் வார்டுகளில் வேலை செய்கிறோம். இப்போது அவை நிரம்பிவிட்டன. தினமும் 100 கொவிட் நோயாளர்கள் கதிரைகள் மற்றும் தரையில் சிகிச்சை பெறுகின்றனர். வேலை தொடர்பான மன அழுத்தம் பற்றி நான் கேள்விப்பட்டு படித்திருந்தாலும் அது உண்மையில் என்னவென்று இப்போது உணர்கிறேன்.

இதுவரை வந்த கோவிட் நோயாளர் எண்ணிக்கை, அவர்கள் சிரமப்படும் விதம், ஒட்சிசன் கொடுக்கப்பட வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை, சிரமப்படும் நோயாளிகளின் வயது இவை அனைத்தும் ஒரே வாரத்தில் மாறின.

அது ஒரு பெரிய வித்தியாசம். வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் எண்ணிக்கை 3 மடங்கிலும் அதிகம். எழுபது, எண்பதுகளின் பெற்றோர்கள் முன்பு கொஞ்சம் கடினமாக இருந்தனர், இப்போது அது முப்பது மற்றும் நாற்பது வயதுடையவர்களுக்கு கடினமாக உள்ளது.

இன்னும் இன்னும் ஒட்சிசன் விநியோக இயந்திரங்கள் உச்சபட்ச நிலையில் இயங்கினாலும் கூட மக்கள் இறப்பதற்காக காத்திருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாற்பது வயதுள்ள ஒரு தாய் தனது மகளுக்கு முன்பாக மூச்சுத்திணறலால் இறந்தார், CPAP இயந்திரம் பொருத்தப்பட்டு பேச முடியாத ஒரு மனைவி தன் கணவனைப் பிடித்தவாறு விடைபெற்றார்.

தனது மனைவி இரட்டைக்குழந்தையைப் பிரசவிக்க தயாராகிக் கொண்டிருந்த போது அவரது 27 வயது கணவன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இவை அனைத்தும் ஒரே நாளில் நடக்கும் போது நான் உணரும் கனம், கடினத் தன்மை, பிரச்சினை, அதிக வேலை. இந்தச் சுமை என் தலையில் உணரப்பட்டது.

அனைத்திலும் கடினமான பகுதி மக்கள் இறக்கும் போது, அவர்கள் கடினமாக மூச்சுவிடும் போது “எம்மை நாம் காப்பாற்ற ஏதாவது செய்யப் போகிறோமா?”என்பதே. முன்பு ஓரிரு நாட்களில் இறப்புகள் தற்போது ஒரு வாரத்தில் ஒரு நாளில் 4, 5ஆக மாறியுள்ளன.

இந்த வீதத்தில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஒட்சிசன் சிலிண்டர் இல்லாததால் மக்கள் கதிரைகளிலும், தரையிலும் முற்றத்திலும் இறந்து விடுவார்கள்.

முடிந்தவரை கவனமாக இருங்கள். மக்கள் ஈக்களைப் போல் இறக்கிறார்கள். கடந்த மாதம் 12 மருத்துவர்களில் ஒருவரும் 30 தாதிகளில் 10 பேரும் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கோவிட் தொற்றாளர்கள்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

தற்போதைய நிலவரத்தின்படி எமது வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் எல்லாமே கோவிட் நோயாளிகளால் நிரம்பியிருக்கின்றன என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுக்குரிய மிகக் குறைந்த வளங்களுடன் எமது சேவைகளை நாம் முன் கொண்டு செல்கின்றோம். வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மிகுந்த நெருக்கடியை இதனால் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கு கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதால் வைத்தியசாலை மிகவும் இக்கட்டான கட்டத்தில் உள்ளது.

எமது கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தில் 420 பேரைப் பராமரிக்கின்ற வசதிகளே இருந்தும் நேற்று 430 பேருக்கு மேல் அதிகமாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வைத்தியசாலைக்குத் தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நாங்கள் இதுவரை ஒட்சிசன் சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள அனுராதபுரத்துக்கு மட்டுமே சென்றிருந்தபோதும் அங்கும் தட்டுப்பாடு உருவாக நேற்று முதல் கொழும்புக்கும் செல்லுகின்ற நிலை உருவாகியுள்ளது.

வைத்தியசாலைக்கு விபத்துப் பிரிவுக்குத் தினமும் 60 தொடக்கம் 80 பேர் வரையில் அனுமதிக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கும் எமது சேவையை வழங்குவதால் கோவிட் நோயாளர்களைக் கவனிப்பதிலும் நமக்கு சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியதாக உள்ளது.

எனவே, இவற்றைக் குறைக்க வேண்டும். இவற்றைக் குறைப்பதற்கான ஒரே வழி தேவையற்ற நடமாட்டங்களை குறைக்க வேண்டும் . அத்துடன் ஆடம்பரமான கொண்டாட்டங்கள், தேவையற்ற விழாக்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. நாம் மீண்டும் கூறுவது என்னவென்றால் மக்களாகிய நீங்கள் தேவையற்று வெளியில் நடமாடாமல் சமூகப் பொறுப்புடன் சமூக இடைவெளியை பயன்படுத்தி சுகாதார நடவடிக்கைகள் இறுக்கமாகப் பேணுவதுதான் வைத்தியசாலைக்கும் சமூகத்துக்கும் நீங்கள் செய்யும் ஒரேயொரு நன்மையாக இருக்கும் என்றார்.

வவுனியாவில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பபடாத நிலையில் பல தொற்றாளர்கள் : மாவட்ட சுகாதார திணைக்களத்தின் உயர்மட்ட அழுத்தம் காரணமா?

வவுனியாவில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படாத நிலையில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உயர் அதிகாரிகளின் செல்வாக்கால் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களில் சிலர் சுகாதார திணைக்களத்துடன் தொடர்புடைய விடுதிகளில் தங்கியுள்ளவர்கள், அரச உத்தியோகத்தர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பிரபல ஹோட்டல் உரிமையாளர் எனப் பலர் உள்ளனர்.

குறித்த நபர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்த போதும், சிலர் தாம் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள மாவட்டமட்ட உயர் அதிகாரியும் அதற்கு உடந்தையாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இவ்வாறு 12 பேர் வரையில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படாது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, அறிகுறிகள் அற்ற கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு சுற்று நிருபம் வெளியாகிய போதும்,

அச் சுற்று நிருபத்திற்கு அமைவாக வவுனியா சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் வாகன மற்றும் ஆளணி வசதிகள் இல்லாமையால் வவுனியாவில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

இந்நிலையில் குறித்த தொற்றாளர்களை உயர்மட்ட அழுத்தம் காரணமாக கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பவில்லை என தெரியவருகிறது.

ஆகவே, சாதாரண பொது மக்களுக்கு ஒரு சட்டமும், வசதி படைத்த மற்றும் செல்வாக்கானவர்களுக்கு ஒரு சட்டமுமா என பொது மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது,

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறும், எந்த மேல் மட்டம் அழுத்தம் கொடுப்பது என தமக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, அனைவரையும் சிகிச்சை நிலையத்திற்கு ஏற்றும் நடவடிக்கை நடைபெறுகிறது. அவை கட்டம் கட்டமாக நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.

இன்று முதல் நாட்டில் கடுமையாகும் சட்டம் : வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு எச்சரிக்கை!!

இன்று முதல்..

முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி,

பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம். அத்தகைய குற்றத்தை செய்யும் ஒருவரை பிடிஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் முகக்கவசம் அணியாததாலும், சரியான முறையில் முகக்கவசங்களை அணியாததாலும் கடந்த அக்டோபரில் இருந்து 53,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் கொரோனா தொற்றால் இருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (13.08) இரவு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரும், அம்பலாங்கொடவல பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

அவர்களது உடல்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று : மக்களே அவதானம்!!

கொரோனா..

வவுனியாவில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று(14.08.2021) வெளியாகின.

அதில் சமயபுரம் பகுதியில் இருவருக்கும், மூன்றுமுறிப்பு இராணுவ முகாமில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் ஒருவருக்கும், தேக்கவத்தைப் பகுதியில் இருவருக்கும், வீரபுரம் பகுதியில் ஒருவருக்கும்,

சின்னசிப்பிக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், ஒமந்தைப் பகுதியில் பதின்னான்கு பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் இருவருக்கும், அரசடிக்குளம் பகுதியில் இருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் மூன்று பேருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும்,

பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், புகையிரத திணைக்கள விடுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் பன்னிரண்டு பேருக்கும், தோணிக்கல் பகுதியில் நான்கு பேருக்கும், கூமாங்குளம் பகுதியில் இருவருக்கும்,

சண்முகபுரம் பகுதியில் ஒருவருக்கும், செக்கட்டிப்புலவு பகுதியில் ஒருவருக்கும், சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் ஒருவருக்கும், போகஸ்வேவ பகுதியில் ஒருவருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் ஒருவருக்கும், சோயாலேன் பகுதியில் ஒருவருக்கும்,

வெளிக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், கோவில்புதுக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தந்திரிமலை பகுதியில் ஒருவருக்கும், அம்பலாங்கொட பகுதியில் ஒருவருக்கும்,

தரணிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும், தம்பனைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாசிலாம்பலாங்கொட பகுதியில் ஒருவருக்கும என 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருமணமான 13 நாளில் உ.யிரிழந்த மனைவி : மயானத்திற்கு சென்று தினமும் அழுத கணவன் : 17 நாட்களுக்கு பின் நடந்த அ.திர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தி.ருமணமான 13 நாளில் ம.னைவி உ.யி.ரி.ழ.ந்.த நிலையில் அவர் ச.ட.ல.ம் எ.ரி.க்.க.ப்.ப.ட்.ட அதே இடத்துக்கு சென்று கணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பலோட் கிராமத்தை சேர்ந்தவர் மனீஷ் நேதம். காவல்துறையில் பணிபுரிந்து வந்த மனீஷுக்கும் லதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

புதுமணத்தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்கள் திருமண வாழ்வை தொடங்கிய நிலையில் திருமணமான 13 நாளில் லதா வீட்டில் உள்ள டைல்ஸ் த.ரையில் வ.ழுக்கி வி.ழுந்ததில் த.லை.யி.ல் ப.ல.த்.த கா.ய.ம் ஏ.ற்பட்டு உ.யி.ரிழ.ந்.தா.ர்.

இ.தையடுத்து லதாவின் உ.ட.லு.க்.கு மனீஷ் இ.றுதிச்.ச.டங்கு செய்த நிலையில் அங்குள்ள சு.டுகாட்டில் த.கனம் செ.ய்யப்பட்டது. ம.னைவியின் இ.ழப்பை தா.ங்க மு.டியாத மனீஷ் தினமும் அந்த சு.டுகாட்டுக்கு சென்று மனைவியை நினைத்து அ.ழு.த.ப.டி இ.ருந்தார்.

இ.ந்.த நி.லை.யி.ல் ம.னை.வி உ.யி.ரி.ழ.ந்.து 17 நா.ட்.க.ள் ஆ.ன நி.லை.யி.ல் வ.ழ.க்.க.ம் போ.ல சு.டு.கா.ட்.டுக்.கு செ.ன்.று க.த.றி அ.ழு.தா.ர். பி.ன்.ன.ர் அ.ரு.கி.ல் இ.ரு.ந்.த ம.ர.த்.தி.ல் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர் ம.னீ.ஷ்.

அதில், என்னால் லதாவை மறக்க முடியவில்லை, அவள் நினைவாகவே இருக்கிறது. கஷ்டப்பட்டு கனவு வீட்டை கட்டி லதாவை மணந்தேன், இப்போது லதா இல்லாமல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் மனீஷுக்கு க.ண்ணீர் ம.ல்க இறுதி ஊர்வலம் நடத்தி லதா தகனம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவர் உ.ட.லை.யு.ம் த.கனம் செய்தனர்.

விபத்தில் உயிரிழந்த கணவனுக்காக கோவில் கட்டி பூஜை செய்யும் காதல் மனைவி : இந்த காலத்தில் இப்படி ஒரு மனைவியா?

இந்தியாவில்..

இந்தியாவில் விபத்தில் உயிரிழந்த கணவருக்காக, அவரின் மனைவி கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகின்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கணவன் உயிருடன் இருக்கும் பொழுதே மதிக்காத பெண்கள் மத்தியில் இப்படி ஒரு மனைவியா என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அங்கி ரெட்டி-பத்மாவதி தம்பதி. விவசாய தொழில் செய்து வந்த அங்கி எதிர்பாராதவிதமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனால் எப்பொழுதும் கணவனின் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்த பத்மாவின் கனவில் தனக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று கணவர் சொன்னதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பத்மாவதி மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து சேமிப்பு பணத்தை வைத்து கோவில் கட்டியுள்ளனர். தினமும் பத்மாவதி கணவரின் சிலைக்கு பூஜை, பூ போன்றவை செலுத்தி கணவனே கண்கண்ட தெய்வமாய் வணங்கி வருகிறார்.

கணவரின் பிறந்தநாள் மற்றும் பெளர்ணமி நாட்களில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் பத்மாவதி. இவ்வுலகத்தில் காதலிக்காக ஏன் நடிகைக்காக கூட கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் கணவருக்காக மனைவி கோவில் கட்டியது இதுதான் முதல் முறை என்று பலரால் பாராட்டப்பட்டு வருகின்றது.

நாட்டில் இன்றும் 150 ஐ தாண்டிய கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 155 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,775 ஆக அதிகரித்துள்ளது. 30 வயதிற்கு கீழ் 03 மரணமும்,30 முதல் 59 வயது வரையிலான 41 மரணங்களும்,

60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 111 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதற்கமைய நேற்று உயிரிழந்தவர்களில்70 பெண்களும் 85 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

கணவனின் முகத்தை கடைசியாக கூட பார்க்கவிடாமல் வி.ரட்டிய மாமியார் : மருமகள் எடுத்த வி.பரீத மு.டிவு!!

இந்தியாவில்..

இந்தியாவில் கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் தூ.க்.கு மா.ட்.டி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் மாவட்டத்தில் உள்ள ஏட்டா மாவட்டத்தை சேர்ந்தவரான அரவிந்த் சிங்(24) இந்திய ரா.ணுவத்தில் பணி புரிந்து வந்தார்.

இவருக்கு ஆர்த்தி(24) என்ற பெண்ணுடன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் திருமணம் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பிறகு புகுந்த வீட்டில் ஏற்பட்ட ச.ண்டையால் தனது தாய் வீட்டிற்கு ஆர்த்தி சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 8-ஆம் திகதி காஷ்மீரில் உள்ள கணவர் அரவிந்த் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார் என்ற செய்தி ஆர்த்திக்கு தொலைபேசி மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் மிகவும் மனமுடைந்த ஆர்த்தி கணவனின் முகத்தை கடைசியாக பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரது மாமியார் கணவரின் முகத்தை பார்க்கவிடாமல் தடுத்து ஊர் மக்களின் முன்னரே தகாத வார்த்தைகளால் தி.ட்டி அ.சிங்கப்படுத்தியுள்ளார்.

இதனால் மிகவும் மன உ.ளைச்சலுக்கு ஆளான ஆர்த்தி அவரது வீட்டிற்கு சென்று படுக்கை அறையில் உள்ள மி.ன்விசிறியில் தூ.க்.கு மா.ட்.டி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

கணவன் இ.றந்த துக்கம் தாங்காமல் மனைவியும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.