இன்று (13.08.2021) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இன்று (13.08) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், துறைமுகம், ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழமை போன்று இடம்பெறும் என அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்கு பின்னர், கொவிட் தடுப்பூசி பெற்றமைக்கான அட்டை இல்லாது, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது தொடர்பில் சோதனைகள் முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி குறிப்பிடுகின்றார்.
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக இடைநிறுத்தப்படுகின்றது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.
அதில் வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், காத்தார்சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பறநாட்டாங்கல் பகுதியில் ஒருவருக்கும்,
வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் ஐந்து பேருக்கும், நொச்சிமோட்டை பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஒலுமடு பகுதியில் ஒருவருக்கும், கல்மடு பகுதியில் ஒருவருக்கும், ஆரா நிறுவனத்தில் பணியாற்றும் இருவருக்கும்,
பெரியஉளுக்குளம் பகுதியில் இருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கோயில்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிநகர் பகுதியில் நான்கு பேருக்கும்,
தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கொக்கலிய பகுதியில் இருவருக்கும், ஆனைவிழுந்தான் பகுதியில் இருவருக்கும், கீரிசுட்டான் பகுதியில் ஒருவருக்கும், குளவிசுட்டான் பகுதியில் ஒருவருக்கும்,
குருந்துவப் பிட்டிய பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஐந்து பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், குடியிருப்பு பகுதியில் ஒருவருக்கும் என 45 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த நிலையில் கொடியேற்றத்தினை நேரில் காண்பதற்காக பல அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களை ஆலய சூழலுக்குள் அனுமதிக்க பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று அச்சம் காரணமாக ஆலயத்திற்கு அடியவர்களை வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே அப்பகுதிக்கு வந்த சிலர், பொலிஸார் ஆலய சூழலுக்குள் அனுமதிக்க மறுத்ததால் கொடியேற்றம் முடியும் வரையில் வீதிகளில் அமர்ந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டை முடக்குவது தொடர்பில் சற்றுமுன் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கோவிட் – 19 பரவல் செயலணி உட்பட மேலும் சில தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனனர்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எனினும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மூவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரம்பலை தடுக்கும் வகையில் குறித்த தொற்றாளர்கள் கடமையாற்றிய போது அவர்களுடன் இணைந்து பணியாற்றியோர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என எழுமாறாக 36 பேருக்கு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கபபட்டது.
இதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்போதைய இறப்பு மற்றும் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 18,000 பேர் கொவிட் நோயால் இறக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலக சிறப்பு மருத்துவர்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நேற்று (12 ஆம் திகதி) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையிலிருந்து இலங்கை மக்களை பாதுகாக்க பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல், மாகாண பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக மாவட்டப் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு விதித்தல்,
அனைத்து பொது நிகழ்வுகளையும் மூன்று வாரங்களுக்குத் தடை செய்தல், பொதுக் கூட்டங்களைத் தடுப்பது, சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாத்தல், பயனுள்ள தகவல் தொடர்புத் திட்டங்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட பரிந்துரைக்கிறது.
இந்த அறிக்கை உலக சுகாதார நிறுவனம் மற்றும் 30 இலங்கை மருத்துவ நிபுணர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. நிபுணர்கள் வைத்தியர் பாலித அபேகோன், நிஹால் அபேசிங்க, ராஜீவ் டி சில்வா, லக்குமாரா பெர்னாண்டோ, பத்மா குணரத்ன மற்றும் ஆனந்த விஜேவிக்ரமா ஆகியோர் அடங்குவர்.
பேராசிரியர்கள் அசித டி சில்வா, ராஜீவ் டி சில்வா, சரோஜ் ஜெயசிங்க, இந்திகா கருணாதிலக, நீலிகா மாளவிகே, காமினி மெண்டிஸ், மாலிக் பீரிஸ் மற்றும் மஞ்சு வீரசிங்க ஆகியோரும் இந்த அறிக்கையைத் தயாரிப்பதில் இணைந்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 72 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் இன்று (12.08.2021) மரணமடைந்துள்ளார்.
குறித்த முதியவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
இலங்கையை விட்டு வெளியேறிய நண்பர்கள் நீண்ட காலத்திற்கு பின் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (60). அதே பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன்(50).
இவர்கள் இருவரும், பலாங்கொடை பகுதியிலுள்ள சி சிஓஎம் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்பட்ட போர் உள்ளிட்ட உள்நாட்டு பிரச்சினைகளினால், இவர்களது பெற்றோர் இவர்களை அழைத்துக்கொண்டு தமிழகத்திற்கு வந்து விட்டனர்.
மகேஸ்வரன் குடும்பத்தினர் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியிலும், கணேசன் குடும்பத்தினர், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியிலும் குடியேறியுள்ளனர்.
இதையடுத்து, கணேசன், சேலம் வணிகவரித் துறையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். மகேஸ்வரன் அரியலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் பிட்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இருவரும், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய பிறகு, ஏறக்குறைய சுமார் 30 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.
ஆனால் அவ்வப்போது இருவரும் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில், வாழப்பாடி சேர்ந்த கணேசன் குடும்பத்தினர், செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள குன்னம் ஆயக்குடி கிராமத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, வேப்பூர் பகுதியில் வசித்து வரும் இலங்கையில் தன்னுடன் பள்ளியில் படித்த தனது சினேகிதன் மகேஸ்வரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பின் மகேஸ்வரன், தனது இருசக்கர வாகனத்தில் ஆயக்குடி கிராமத்திற்கு வந்து சேர, இருவரும் எளிதாக அடையாளம் கண்டு கொண்டு, கட்டியணைத்து, கண்ணீர் மல்க நட்பை பரிமாறிக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மகேஸ்வரனுக்கு அசைவ உணவை விருந்தளித்த அவர், தனது நண்பனை தனது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்து நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் காதல் கணவனை க.ழுத்தை அ.றுத்து கொ.லை செ.ய்த மனைவி, இரண்டாவது காதலன் உதவியுடன் அவரது ச.டலத்தை எ.ரித்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு விமலா ராணி என்ற மனைவியும், 14 வயதில் மகனும் உள்ளனர்.
இந் நிலையில், சமீபத்தில், தங்கவேலுவின் செல்போனுக்கு அவரது சகோதரர் சக்திவேல் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது போனை எடுத்த விமலா ராணி தனது கணவரின் செல்போனை , தற்போது தனது மகன் ஆன்லைன் வகுப்பிற்கு பயன்படுத்தி கொண்டு இருப்பதாக கூறி போனை வைத்துள்ளார்.
அதன் பின் மீண்டும் கடந்த 1-ஆம் திகதி செல்போனை தொடர்பு கொண்ட போது, அந்த போனை எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை போனை தொடர்பு கொண்ட போது, போன் ஸ்விட் ஆப்பில் இருந்ததால், ச.ந்தேகமடைந்த சக்திவேல், உடனடியாக சகோதரரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டுள்ளார். இதையடுத்து, தங்கவேலின் தந்தை, சோமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகன் தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை கா.ணவில்லை என பு.கா.ர் அளித்துள்ளார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் இது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 10-ஆம் திகதி இரவு கா.ணாமல் போன தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார்.
கணவன் குறித்து கேட்ட போது, அவர் கொ.லை செய்யப்பட்டிருக்கும் விஷயம் தெரியவந்தது. பொலிசாரிடம் விமலா ராணி கொடுத்துள்ள வாக்குமூலத்தில், 10 வருடங்களுக்கு முன்பு தங்கவேலு, விமலராணியை காதலித்து திருமணம் செய்துள்ளர்.
சேலத்தில் வசித்த போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜா என்பவருடன் விமலா ராணிக்கு இரண்டாவது காதல் மலர்ந்துள்ளது. இது குறித்து தங்கவேலுவுக்கு தெரியவர, உடனே அவர் வேலையை வேறு ஊருக்கு மாற்றிக் கொண்டு சோமங்கலம் வந்துள்ளார்.
அதன் பின்னர் 7 வருடங்களாக ராஜாவுடன் செல்போனில் விமலா ராணி தன்னுடைய காதலை தொடர்ந்துள்ளார். இந்த தகவல் அறிந்து கணவன் கண்டித்தும் விமலா ராணி தனது காதலை கைவிடாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 28-ஆம் திகதி தங்கவேலுடன் இந்த விவகாரம் தொடர்பாக பி.ரச்சனை ஏற்பட்டதால், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அ.ரிவாளை எடுத்து அவரை கொ.லை செ.ய்துவிட்டதாகவும்,
அதன் பின் அன்று இரவு 10 மணி வரை கணவரின் ச.டலத்தை வீட்டின் பெட்ரூமில் மறைத்து வைத்து அதன்பின் சேலத்தில் இருந்து ராஜாவை வரவழைத்து கணவரின் சடலத்தை அருகில் உள்ள ஏ.ரியில் வீ.சி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
விமலாராணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த ஏரிக்கு சென்று பொலிசார் தே.டிய போது, அவர் ச.டலம் கி.டைக்கவில்லை. இதனால் பொலிசார் மீண்டும் விமலாராணியிடம் வி.சாரணையை நடத்தியுள்ளனர்.
அதில் அவர் கொ.லை செ.ய்து க.ணவனை எ.ரித்துள்ளது தெரியவந்தது. கொ.லை செ.ய்த பின் ச.டலம் யாருடையது என்பது தெரியக் கூடாது என்பதற்காக, சா.க்குமூட்டையில் கட்டி சடலத்தின் மீது ராஜா தீ வை.த்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 156 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன்,
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட்மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் கொரோனா தோற்றால் 124 பேர் பலியாகியிருந்தனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.
சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று பரவல் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டி அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 7 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகள் இருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒக்ஸிஜன் மட்டம் குறைவடைந்தமையினால் குறித்த இருவரும் வெளி நோயாளர் பிரிவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை வரையில் இலங்கையில் ஒக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 615 ஆகும். எதிர்வரும் நாட்களில் ஒக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை,
1000 வரை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒக்ஸிஜனுக்கான தேவை பாரியளவில் அதிகரிக்க கூடும் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட கோவிட் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை.
5 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக இன்று (12.08.2021) மாலை தொடக்கம் அமுலாகும் வகையில் மறுஅறிவித்தல் வரை நகரசபை விளையாட்டு மைதானம் தற்காலிகமாக மூடப்படுவதுடன் நடைப்பயிற்சிக்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.
அத்துடன் மேலும் வவுனியா நகரசபையின் உடல் வலுவூட்டல் நிலையமும் இன்று மாலை தொடக்கம் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒர் வாரத்தினுள் 300க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 5 மரணங்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரிலுள்ள சலூன் மற்றும் பெண்கள் அழகு நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அழகு நிலையங்களில் முகச்சவரம் மற்றும் முகப்பராமரிப்பு ,
அழகுபடுத்தல் போன்ற செயற்பாடுகளின் போது முகக்கவசம் அணியாமையினால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து வவுனியா சுகாதார பிரிவினரினால் திடீர் விஜயம் முன்னெடுக்கப்பட்டது.
புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள இரண்டு சலூன் மற்றும் மூன்று பெண்கள் அழகு நிலையம் என்பனவற்றிக்கு சென்ற சுகாதார பிரிவினர் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் குறித்த நேரத்தில் நின்ற வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனையினை முன்னெடுத்திருந்தனர்.